ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
இலங்கையில் தனி ஈழம் கோரி 30 ஆண்டுகளாகப் போராடிவரும் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என ஒதுக்கிவிட முடியாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார். இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர்க் குழு சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அலுவலகத்தை தா.பாண்டியன் திறந்துவைத்து பேசியதாவது: மக்களின் ஆதரவின்றி ஓர் இயக்கம் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராட்டம் நடத்த முடியாது. ஆகவே, விடுதலைப் புலிகளைத் தீவிரவாதிகள் என ஒதுக்கிவிட முடியாது. கடந்த 20 ஆண்டுகளில் சிங்களர்கள் ஒரு கோடி பேர் அதிகரித்துள்ளனர். ஆனால், தமிழர்கள் 35 லட்சம் பேர்தான் உள்ளனர். அதற்குக் காரணம் பலர் போரில் இறந்து விட்டனர். மேலும் பலர் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சியில் விமானத்தாக்குதல் வீரகேசரி இணையம் 1/12/2009 3:39:21 PM - இலங்கை விமானப் படையினரின் எம்ஐ.24 போர் உலங்குவானூர்திகள் மற்றும் ஜெட் விமானங்கள் பயன்படுத்தி விடுதலை புலிகளின் ஒன்று கூடும் இடங்களை இலக்கு வைத்து இன்று காலை 8.15 மணியளவிலும் 9 மணியளவிலும் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வன்னி முன்னரங்கிலுள்ள மூன்றாவது செயலணி படையினருக்கும் 57வது பிரிவு படையினருக்கும் உதவியாகவும் இவ் வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
- 0 replies
- 1.7k views
-
-
வீதி விபத்தில் மனோ கணேஷன் காயம் வீரகேசரி இணையம் 1/12/2009 10:51:38 AM - ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேஷன் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளார். அவிசாவளை வீதியில் இவர் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகியமையால் மனோகணேஷன் மற்றும் மூவர் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
-
- 4 replies
- 2.1k views
-
-
துணைக்குழுக்களின் தலைவர் கருணாவு்ககு அமைச்சு பதவி- மகிந்த சிபார்சு. திங்கள், 12 ஜனவரி 2009, 15:23 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஒட்டுக்குழுவின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கில் கடத்தல்களையும், படுகொலைகளையும் அரங்கேற்றிவரும் அதேவேளையில் மஹிந்தா அரசாங்கத்திற்கு வாள்பிடிப்பதினால் அமைச்சுப்பதவி வழங்கப்படவுள்ளது இந்த வாரத்திற்குள் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்வார் எனவும் கூறப்படுகிறது. pathivu
-
- 1 reply
- 1.9k views
-
-
இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்யும் நோக்குடன் சிறிலங்கா படையினர் நடத்தி வரும் தாக்குதலை இந்திய அரசு தடுத்து நிறுத்தாவிட்டால், அங்குள்ள ஒட்டுமொத்தத் தமிழினமும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அழிந்துவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 466 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 390 views
-
-
அமெரிக்கப் பிரஜையான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளிலீடுபட்டு வருகிறார். அவரது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு அமைச்சினைப் பயன்படுத்தி அரசாங்கத்தின் கொலைப் பட்டியலிலுள்ளவர்களின் தகவல்களைத் திரட்டி வருகிறாரென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்தார். நேற்று (11.01.2009) இடம்பெற்ற பத்திரிகையாளர் மகாநாடொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், பாராளுமன்ற உறுப்பினர்களான பரராஐசிங்கம், ரவிராஜ், ஜானக பெரேரா உட்பட பலரின் படுகொலைகள், மிஹின்எயார் மற்றும் யுத்த விமானக் கொள்வனவு உட்பட இந்த அ…
-
- 0 replies
- 2.1k views
-
-
யாழ்ப்பாணம் குடாநாட்டு கடற்கரையோரங்களில் இளைஞர்களின் சடலங்கள் ஒதுங்கும் சம்பவங்கள் அதிகரித்துவருவதால் மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நெடுந்தீவின் கடற் கரையில் ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் ஊர்காவற்றுறை பொலிஸாரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சடலத்தில் பச்சை நிறத்திலான ரீசேட்டும் கறுப்பு நிற அரைக்காற்சட்டையும் காணப்படுவதாகவும் முகம் அடையாளம் காணமுடியாதவாறு சிதைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கேசன்துறை கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை ஒதுங்கிய நான்கு இளைஞர்களின் சடலங்கள் அன்று மாலை பொலிஸாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. நிர்வாண கோலத்தில்…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே தேவை :பரிசுத்த தந்தை வேண்டுகோள் வீரகேசரி இணையம் 1/12/2009 12:25:53 PM - விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். இருதரப்புப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே அவசியம் என கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் பரிசுத்தத் தந்தை 16ஆவது ஆசீர்வாதப்பர் இலங்கை அரசத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
- 0 replies
- 612 views
-
-
16 வயது மாணவனை காணவில்லை யாழ். இல் தாயார் முறைப்பாடு திகதி: 12.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] 16 வயதான தமது மகனைக் கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி முதல் காணவில்லை என அவரின் தாயார் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிட்டுள்ளார். வலிகாமம் பிரதேசத்தில் ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணிய மகாவித்தியாலயத்தை சேர்ந்த மரியநாயகம் நிசாந்தன் என்ற மாணவரையே காணவில்லையென முறையிடப்பட்டுள்ளது. நிசாந்தன் இன்றுவரை வீடு திரும்பாததினால் வலிகாமம் பிரதேச மாணவர்களின் பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். sankathi
-
- 0 replies
- 705 views
-
-
பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணம் விஜயம் வீரகேசரி இணையம் 1/12/2009 12:14:48 PM - இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் குட்டிங் யாழ்ப்பாணத்திற்கு இன்று சென்றுள்ளார்.யாழ்பாணத்தில் நிலவும் மனிதாபிமான நிலை,பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணம் சென்றுள்ளதாகப் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட யாழ். கட்டளைத் தளபதி , யாழ். பேராயர் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள சர்வதேச அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரை இவ்விஜயத்தின் போது மார் குட்டிங் சந்திக்கவுள்ளார்.அத்துடன் அகதி முகாம்களுக்கும் , நல்லூர் கந்தசுவாமி…
-
- 0 replies
- 712 views
-
-
இடம்பெயரும் மக்கள் மீது எறிகணைத் தாக்குதல் காணொளி இணைக்கப்பட்டுள்ளது http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> எந்த தடை வந்தாலும் உடைத்து இலக்கை அடைவோம் ..
-
- 19 replies
- 2.4k views
- 1 follower
-
-
2008ம் ஆண்டு என்பது உலகளாவிய மட்டத்திலும் தாயகத்திலும் பல எதிர்பார்க்கப்படாத நிகழ்வுகளைக் கொண்ட ஆண்டாக கடந்திருக்கிறது. 2009ம் ஆண்டில் புலத்து தமிழர்கள் எத்தகைய எதிர்பார்ப்பினைக் கொண்டிருக்கிறார்கள்? - என்பதை அறியும் முயற்சி இது. கருத்துக் கணிப்பில் பங்குபற்றும் உங்கள் ஆர்வத்திற்கும் நேரத்திற்கும் நன்றி. புலத்து தமிழர்களும் 2009ம் ஆண்டுக்கான எதிர்பார்ப்புகளும்
-
- 2 replies
- 1.5k views
-
-
வீரகேசரி நாளேடு - சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையின் பின்னணியில் சர்வதேச சதி என்றோ அல்லது புலிகளை குற்றம் சுமத்துவதிலோ அர்த்தமில்லை. இவ்வாறு கூறி அரசாங்கம் தப்பிச்செல்ல முடியாது. லசந்தவின் படுகொலையானது ஜனநாயகத்துக்கும் ஊடக சுதந்திரத்துக்கும் விழுந்த பாரிய அடியாகும். இந்த படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய முழுப்பொறுப்பும் அரசாங்கத்தினுடையது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். லசந்த விக்கிரமதுங்கவின் பூதவுடலுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்தி…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கைத் தமிழர்கள் மீதான இனப்படுகொலையை இந்திய அரசாங்கம் கண்டு கொள்ளாமல் உள்ளது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 561 views
-
-
சேடம் இழுக்கும் ஊடக சுதந்திரம் [12 ஜனவரி 2009, திங்கட்கிழமை 10:40 மு.ப இலங்கை] இலங்கையில் ஊடக சுதந்திரம் உயிர் பிரியும் நோயாளி போல மூச்சிழந்து அல்லாடிக் கிடக்கின்றது. 2009 ஆம் ஆண்டு பிறப்புடன் இலங்கையின் ஊடக சுதந்திரத்துக்கு சேடம் இழுக்கத் தொடங்கிவிட்டது. முதலில் மகாராஜா குழுமத்தைச் சேர்ந்த எம்.ரி.வி., எம்.பி.ஸி. போன்றவற்றின் அலுவலகத்துக்குப் பெற்றோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது. அது குறித்துப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டும் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்படாத நிலையில் அதன் கலையகம் மீது அராஜகக் கும்பல் ஒன்றினால் வெறியாட்டம் நடத்தப்பட்டது. அது நடந்து இரண்டு நாட்களுக்குள் இலங்கையில் பிரசித்தி பெற்ற பத்திரிகை ஆசிரியர் ஒருவர் பட்டப்பகலில் - நட்ட…
-
- 0 replies
- 706 views
-
-
உதட்டில் சந்தோஷம்... உள்ளத்தில் நெருப்பு! - ப.திருமாவேலன், படம்: பொன்.காசிராஜன் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமாக இடம்பெயர்ந்து அலைந்து திரிவது அப்பாவி ஈழத் தமிழன் மட்டுமல்ல, அவர்களின் அவலங்களை உலகுக்குச் சொல்ல வேண்டிய இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும்தான்! அவர்களுள் முக்கியமானவர் பத்மினி சிதம்பரநாதன். யாழ்ப்பாணம் எம்.பி. யாழ் பல்கலைக்கழக மாணவியாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சந்தித்து, அவர்களது அவலங்களை வெளிக் கொண்டுவந்த இவர்தான் பொங்கு தமிழ் நிகழ்வுகளின் ஆரம்பப் புள்ளி. ராஜபக்ஷே பதவிக்கு வந்ததும் முதலில் தடை செய்தது பொங்கு தமிழ் நிகழ்ச்சியைத்தான். அனல் ஆவேசமாக 'அங்கு' போராடும் பத்மினி, புனல் புன்னகையுடன் இங்கு என்னை எதிர்கொண்டார். ''ராணுவ…
-
- 9 replies
- 2.6k views
-
-
யாழ். போதனா மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களில் ஐந்து உடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 407 views
-
-
படு கொலை செய்யப்பட்ட லஸசந்த விக்ரதுங்கவின் கொலைக்கு கோதபயாவின் கொலைக் குழுவே காரணம் என ஸ்ரீ.சு.க. மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியுள்ளார். நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் : கோதபயாவினால் உருவாக்கப்பட்ட ' சிங்க மார்பியா' 'பிசாசுப் படையணி' 'கே-09' என்னும் வௌ;வேறு பெயர்களினால் இயங்கும் ஆயுதக் குழுவே இக் கொலைக்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்தார். 'சன்டே லீடர்' ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்காவின் கொலை தொடர்பான விசாரணையை வழமை போல் கைவிட மஹிந்த முயற்சி செய்து வருகிறார். கொலையாளிகளைக் கண்டுபிடிக்கதாற்கான எந்த நடவடிக்கைகளையும் மஹிந்த எடுக்கவில்லை. லஸந்த கொல்லப்பட்ட செய்திக்கு பத்திரிகைகள் அதிக ம…
-
- 0 replies
- 1k views
-
-
நேற்று மலேசியா கோலாலம்பூர் மெர்தேக்கா சதுக்கத்தில்,பாலஸ்த்தீன மக்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் ஆதரவாகவும்,இஸ்ரேல், இலங்கை இராணுவத்தை கண்டித்தும், அவர்களுடைய மூர்க்கத்தனமான போரை எதிர்த்தும், உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த, மெழுவர்த்தி ஏந்தி சுமார் 200 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ஒன்று கூடினர்! எனினும் அவர்களை தடுத்து நிறுத்தி கலைக்க முற்பட்டதுடன் தலமை வகித்த 21 பேர்களை மலேசிய காவற்துறையினர் கைதும் செய்துள்ளனர்! http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=266
-
- 1 reply
- 974 views
-
-
பறவைகள் சரணாலயம்' என பொருள்தரும் கிளிநொச்சியை புலிகளிடம் இருந்து கைப்பற்றியபின் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறது சிங்கள ராணுவம். `விரைவில் பிரபாகரனையும் பிடித்து விடுவோம்' என்று கொக்கரித்துள்ளார், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே. ஆனால், ``ஈழத்தமிழர்களின் தலைவராக இருக்கும் பிரபாகரனை சிங்கள ராணுவத்தால் ஒருநாளும் பிடிக்கமுடியாது'' என்கிறார், யாழ்ப்பாணத் தமிழ் எம்.பி.யான பத்மினி சிதம்பர நாதன். சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்த அவர் நமக்களித்த பிரத்யேக பேட்டி. ஈழத்தில் தற்போதைய போர் நிலவரம் என்ன? ``இலங்கை நாடு சிங்களவர்களுக்கு மட்டும்தான் என்ற அடிப்படையில் ஓர் இனத்தையே (தமிழ் இனத்தையே) சிங்கள அரசு அழித்துவருகிறது. கிளிநொச்சி பகுதியிலுள்ள அனை…
-
- 0 replies
- 1.4k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பின் தென்பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அப்பாவி பொதுமக்கள் உட்பட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 807 views
-
-
US Secretary of State Hillary Clinton made her comments to Michael Tomasky of Britain �s �The Guardian� newspaper in an interview which covered Iraq the legacy of the Cold War and ceding executive powers. When asked do you think that the terrorists hate us for our freedoms or do you think they have specific geopolitical objectives?she replied: Well I believe that terrorism is a tool that has been utilized throughout history to achieve certain objectives. Some have been ideological others territorial. There are personality-driven terroristic objectives.� The bottom line is you can't lump all terrorists together. And I think we've got to do a much better …
-
- 3 replies
- 2k views
-
-
முல்லைத்தீவுக்கான இறுதிப் போர்? [11 - January - 2009] விதுரன் முல்லைத்தீவுக்கான இறுதிப் போருக்கு படையினர் தயாராகின்றனர். கிளிநொச்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து யாழ்.குடாநாட்டில் விடுதலைப் புலிகள் வசமிருந்த பகுதிகளும் படையினர் வசமாகிவிட்டதால் தற்போது படையினரின் கவனம் முல்லைத் தீவை நோக்கி திரும்பியுள்ளது. ஈழப் போரின் இறுதிப்போராக இது இருக்கு மெனப்படையினர் கருதுவதால் இந்தப் பிரதேசத்தையும் கைப்பற்றிவிட அவர்கள் தங்கள் முழுப்பலத்தையும் இங்கு பிரயோகிக்க முயல்வர். இதற்கான சகல ஏற்பாடுகளையும் அவர்கள் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். அடுத்து வரும் நாட்களில் இந்தப் போர் முழு அளவில் தொடங்கக் கூடும். கிழக்கில் திருகோணமலையின் மாவிலா றில் படையினர் ஆரம்பித்த பார…
-
- 17 replies
- 3.6k views
-
-
இராணுவ வெற்றிக்கு கருணாவின் பிரிவு காரணமல்ல: இராணுவத் தளபதி இராணுவத்தினர் அண்மையில் பெற்ற வெற்றிக்கு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்தமையே காரணமென ஒருவர் கூறுவாராயின் அது வெட்கப்பட வேண்டியது என இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும், கருணாகும் இடையில் அப்பொழுது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவே இருவரும் பிரிந்தார்கள் எனவும், கிழக்கை மீட்கும் பணிகளை இராணுவம் ஆரம்பிக்கும்போது கருணா 200 போராளிகளுடன் மாத்திரமே இருந்ததாகவும் இராணுவத் தளபதி கூறியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கை மீட்பதற்கு சாதாரண மக்கள் இர…
-
- 32 replies
- 4.8k views
-