ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
கொழும்பு நீதிமன்றத்திற்கு முன்பாக ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு வெள்ளி, 26 டிசம்பர் 2008, 10:39 மணி தமிழீழம் [செய்தியாளர் தாயகன்] கொழும்பு, மவுன்ரிலவினியா நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் படுகாயமடைந்துள்ளார். முச்சக்கர ஊர்தியில் சென்ற இனம் தெரியாத ஆயுததாரி குறிப்பிட்ட நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்தத் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை. pathivu
-
- 0 replies
- 864 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஓப்பந்தம் குறித்து நேற்று வியாழக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 619 views
-
-
படையினரின் எறிகணை வீச்சில் பொதுமருத்துவமனை சேதம் திகதி: 26.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] கிளிநொச்சி பொது மருத்துவமனை மீது நேற்று இரவு 7.40 மணியளவில் சிறிலங்காப் படையினர் எறிகணைத்தாக்குல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலின்போது இரண்டு கட்டங்கள் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவேளை அக்கட்டத்தில் எவரும் இல்லாததால் எவருக்கும் காமோ உயிரிழப்போ ஏற்படவில்லை எனத்தெரிவிக்கப்படுகின்றது. இப்பகுதிநோக்கி இரவு எறிகணைத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அதில் ஒரு எறிகணை மருத்துவமனை கட்டடத்தின் மீது வீழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சங்கதி
-
- 1 reply
- 572 views
-
-
அமெரிக்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் ஹிலாரி கிளின்டன் அம்மையார், இந்தியா,பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய இந்திய உபகண்டப் பிரதேசத்தின் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான தமது பிரதிநிதியாகத் தமது கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளின்டனின் பெயரைப் பிரேரித்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20 ஆம் திகதி பராக் ஒபாமா பதவியேற்கும் சமயத்தில் புதிய வெளிவிவகார அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் பொறுப்பேற்பார். அவர், சர்வதேச ரீதியான இராஜதந்திரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இராஜதந்திரிகள் அடங்கிய செயலணி ஒன்றை உருவாக்கி வருகின்றார் என்று கூறப்படுகின்றது. இந்திய உபகண்டப் பிரதேசம் பெரும் பதற்றத…
-
- 1 reply
- 1.3k views
-
-
வன்னிப் பெருநில பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வரும் மக்கள் மீது சிறிலங்கா படையினர் கடுமையான சோதனை கெடுபிடிகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 380 views
-
-
சிறிலங்கா படையினருக்கு ஆலோசனை வழங்க ஏழு நாடுகளின் இராணுவ அதிகாரிகள் வன்னிக்குப் பயணம் மேற்கொண்டது கவலை அளிப்பதாக வன்னி தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 548 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் கித்துள் பகுதியில் உள்ள பொத்தானைவடிச்சல் எனுமிடத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 485 views
-
-
பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இடம்பெயர்ந்து தங்கலாம் என்று சிறிலங்கா அரசாங்கமே பிரகடனப்படுத்திய விசுவமடு மற்றும் ஒட்டுசுட்டான் "பாதுகாப்புப் பிரதேசங்கள்" மீது கடுமையான தாக்குதலை சிறிலங்கா படைகள் நடத்தின. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 423 views
-
-
சிறிலங்காவின் இனப் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாட்டின் பொன்னேரி பகுதியில் முழு கடையடைப்புப் போராட்டம் இன்று நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 474 views
-
-
சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சர்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அந்நாட்டு புலனாய்வுத்துறை அமைச்சர்களின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 447 views
-
-
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் உள்ள மகா ஓயா பகுதியில் சிறிலங்கா ஊர்காவல் படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று நடத்திய தாக்குதலில் ஊர்காவல் படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 593 views
-
-
வன்னியில் மக்கள் படும் அவலத்தைக்கண்டும் வெளிநாடுகள் மௌனம் சாதிப்பது கவலையளிக்கின்றது என வடக்கு கிழக்கு ஆயர்கள் விடுத்துள்ள நத்தார் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் ஆயர் இராஜப்பு யோசப் விடுத்துள்ள செய்தியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்துலக சமூகத்திடம் மன்றாட்டமாகக்கேட்ட எதுவும் கிடைக்கவில்லை. வன்னியில் தொடர்கின்ற போரினால் மக்கள் 10 தொடக்கம் 15 தடவைகளுக்கு மேல் இடம்பெயர்ந்துள்ளனர். தற்போது இடம்பெயர்ந்து மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர் தொடரும் குண்டுவீச்சுக்கும், எறிகணைத்தாக்குதல்களுக்குமி
-
- 0 replies
- 744 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளை என்றும் ஆதரிப்போம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதை இன்று காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: தந்தை பெரியாரின் சிலையை திறந்துவைப்பதில் பெருமைப்படுகிறேன். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காகவும் சாதிக் கொடுமை ஒழியவும் தீண்டாமையை அகற்றவும் பெரியார் பாடுபட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேநாள் தாயகத்தை இழுத்து மூட சதி நடந்தது. அது முடியவில்லை. துயரங்கள் நீடிப்பது இல்லை.. லட்சியம் தோற்பது இல்லை. இலங்கை தமிழர் நலனுக்காக விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம். புலிகளுக்காக அன்றும் குரல் கொடுத்தோம். …
-
- 2 replies
- 2.4k views
-
-
ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களிடம் எத்தகைய உதவிகளையும் கோரக்கூடாது என்று வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி அரசாங்க அதிபர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளார். கடந்தவாரம் இந்தக் கடிதத்தினை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ன மூன்று மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். இந்தக் கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதியீன் ஆலோசகரும், எம். பியுமான பசில் ராஜபக்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் ஐ.நா. அமைப்புக்களிடமோ, சர்வதேச தொண்டு நிறுவனங்களிடமோ, எ…
-
- 0 replies
- 632 views
-
-
கிளாலி படைமுகாமில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ஒருவர் பலியானார். இருவர் காயமடைந்தனர். இவ்வெடிப்புச் சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கிளாலி படை முகாமைச் சேர்ந்த எச்.பி.யு. வீரசிங்க (வயது 28) என்பவரே சம்பவத்தில் மரணமானவர் ஆவார்.இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். சாவகச்சேரி பதில் நீதவான் செ. கணபதிப்பிள்ளை சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவத்தில் காயமடைந்த இரண்டு படையினரும் பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tamilwin.com
-
- 0 replies
- 779 views
-
-
கிழக்கில் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் இன்னமும் குறையவில்லை என மட்டக்களப்பு, திருகோணமலை பேராயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.அதிகரித்து
-
- 0 replies
- 473 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட மக்களின் நான்காவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நினைவு கூரப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 354 views
-
-
டிசம்பர் மாதம் நடுப் பகுதியைக் கடந்து விட்டாலே உலகின் பெரும்பாலான மக்கள் குதூகலத்துடனேயே காணப்படுவார்கள். நமது நாட்டைப் பொறுத்தவரை கிறிஸ்தவர்கள் ஒப்பீட்டளவில் மிகச் சிறிய தொகையினராக இருந்த போதும் இங்கும் கிறிஸ்மஸ் பண்டிகை, புதுவருடப் பிறப்பு ஆகியவை நடைபெறும் காலங்களில் இன, மத பேதமின்றி மூவின மக்களும் மகிழ்ச்சியுடன்தான் இருப்பார்கள். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்த போதும் தலைநகர் கொழும்பு உட்பட முக்கிய நகரங்கள் யாவும் விசேடமாக அலங்காரம் செய்யப்படுவதும் பல இடங்களிலும் உடைகள் உட்பட பொருட்கள் மலிவு விலையில் விற்கப்படுவதும் பாடசாலைச் சிறார்கள் உட்பட பலர் விடுமுறையில் வீடுகளில் தங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்க சில காரணங்களாகும். நாட்டில் 25 வருடங்களாக உள்நாட்டு யுத்தம் நடைபெற…
-
- 0 replies
- 572 views
-
-
சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் - கடலுக்கு அடியில் - ஏற்பட்ட பெரும் பூகம்பம், தெற்காசிய நாடுகளை உலுப்பி, ஊழிக் கூத்தாய்ப் போட்டுப் புரட்டி எடுத்து, துவம்சம் செய்த கொடூரத்தின் நான்காம் ஆண்டு நிறைவு - நினைவு - நாள் இன்றாகும். பதினொரு நாடுகளில் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேரின் உயிர்களைக் காவு கொண்ட பேரனர்த்தம் இது. இலங்கையில் சுமார் 35 ஆயிரத்து 300 பேரின் வாழ்வை ஒரு கணத்தில் முடித்து, சுமார் 5 லட்சத்து 16 ஆயிரம் பேரை வீடு, வாசல்கள், உடைமைகள், சொத்து களை இழக்க வைத்து, நிர்க்கதிக்கு உள்ளாக்கிய இயற்கையின் கோரத் தாண்டவம் இது. இந்தக் கொடூரத்தின் குரூர விளைவுகளில் இருந்தும், நினைவுகளினின்றும் வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் கிழக்குப் புற கடலோர மக்கள் இன்னும் மீளவேயில்லை. …
-
- 0 replies
- 516 views
-
-
யாழ் பகுதியில் மோட்டார் அணி சுற்றிவளைப்பு 10 இளைஞர்களின் அடையாள அட்டை பறிமுதல் வெள்ளி, 26 டிசம்பர் 2008, 09:43 மணி தமிழீழம் [செய்தியாளர் சிறிதரன் ] யாழ் பொறிகண்டி பகுதியில் சிறிலங்கா படையின் மோட்டார் அணியினர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளனர். 10 இளைஞர்களின் அடையாள அட்டை பறிக் கொண்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று மாலை 4.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த படையின் இவ்வாறு சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொண்டதாகவும், சென்ற இளைஞர்களை வழிமறித்து சோதனை மேற்கொண்டதுடன் 10 இளைஞர்களின் அடையாள அட்டைகளையும் பறித்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை தென்மராட்சி பகுதியிலும் சுற்றிவளைப்பு தேடுதல்கள் மேற்கொண்டு வ…
-
- 0 replies
- 573 views
-
-
சிறிலங்கா மத்தியதர வருமான நாடுகளின் பட்டியலில்- உலக வங்கி வெள்ளி, 26 டிசம்பர் 2008, 09:58 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] சிறிலங்கா மத்தியதர வருமானம் ஈட்டும் நாடுகளின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி அறிக்கை தெரிவித்தள்ளது. உலக வங்கியினால் ஆசிய நாடுகளின் இறுதியாண்டுக்கான வருமான மட்டங்கள் தொடர்பான கணிப்பீட்டு அறிக்கை வெளியிட்ட போது இது தெரியவந்துள்ளது. கடந்த சில தசாப்தங்களாக சார்க் பிராந்திய நாடுகளில் பொருளாதார அபிவிருத்தி பாதிப்படையும் நாடுகளில் சிறிலங்காவும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இதேவேளை உலகின் அதிக வறியவர்கள் வாழும் பிரதேசங்களில் ஒன்றாகக் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியா, மாலைதீவு மற்றும…
-
- 0 replies
- 581 views
-
-
மடு தேவாலயம் எதிர்வரும் மாதம் திறக்கப்பட உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 512 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்பதால் சிறிலங்கா செல்லும் சுற்றுலாப் பயணிகள் அவதானமாக இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 567 views
-
-
கிழக்கு மாகாணத்தில் படுகொலைகளும், கடத்தல்களும் தொடர்வாதாக மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களுக்கான பேராயர் வண. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தனது நத்தார் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 451 views
-
-
'நான் என் நாட்டுக்காய் எதை, எந்த வழியில், எப்படிச் செய்ய முடியும்?
-
- 1 reply
- 2.7k views
-