ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர். கொளத்தூர் மணிஇ இயக்குநர் சீமான்இ மற்றும் தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ. மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் சென்னையில் சீமான் காரை எரித்து காங்கிரசு ரவுடிகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்தும் கருத்துரிமை - பேச்சுரிமைக்கு எதிரான தமிழர் விரோத சிங்கள கைக்கூலி காங்கிரசை சவப்பாடையில் ஏற்றி மாபெரும் ஆர்ப்பாட்டம் 22-12-2008 அன்று புதுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் தலைமை தாங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் புதுவை மாநில அமைப்புச் செயலர் சு. பாவாணன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் வாழ்த்திப் பே…
-
- 1 reply
- 1.8k views
-
-
யாழ். வடபோர்முனையான கிளாலியில் கடந்த 16ம் திகதி செவ்வாய்க்கிழமை சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்ட போது படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயங்களுடன் புலிகளிடம் சரணடைந்துள்ளார். சரணடைந்த படைத்தரப்பைச் சேர்ந்தவர் 53வது கொமாண்டோ டிவிசனில் பணியாற்றியவர் ஆவார். இவர் தான் சரணடைந்தது குறித்து கூறியுள்ளார். இது தொடர்பான செய்தியை இன்னும் சில மணித்துளியில் சங்கதியில் நீங்கள் பார்க்கலாம். கிளாலி மோதலின் போது 60 படையினர் வரை கொல்லப்பட்டனர்., இதில் 8 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 33 replies
- 8.6k views
-
-
ஜக்கிய நாடுகள் சபையின் சிறார் மைய லண்டன் கிளையின் முன்பு ஜக்கிய இராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 582 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் தனது நிலைகளில் இருந்து சிறிலங்கா படை பின்நகர்ந்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் பாதுகாப்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 1.9k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தமே கிடையாது என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 865 views
-
-
-
தமிழர்களுக்கு நீதி செய்யும் தாராளம் சிங்களத்திடம் கிஞ்சித்தும் கிடையாது [22 டிசம்பர் 2008, திங்கட்கிழமை 10:25 மு.ப இலங்கை] நீதியும், நியாயமும், கௌரவத்துடன் கூடிய வாழ்வுரிமையும் கேட்டு அஹிம்சை வழியில் - காந்தீய நெறியில் - சமாதான முறையில் - அமைதி மார்க்கத்தில் - போராடிய ஈழத் தமிழர்கள், அதை ஒட்டி அதிகாரத்தில் இருந்த பௌத்த - சிங்களத் தலைமைகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்தார்கள்; உடன்பாடுகளுக்கு இணங்கினார்கள். தமிழினத்தின் அரசியல் தன்னாட்சிக்கான கோரிக்கையின் தீவிரத்தையும், தமிழ்த்தேசிய உண ர்வெழுச்சியின் வீரியத்தையும் கண்டு திகைத்த பௌத்த - சிங்கள அரசுத் தலைமைகள், தமிழர்களின் கிளர்ச்சியை முளையிலேயே அடக்குவதற்காக - வேகம் பெறும் தமிழர்களின் வெகுசனப் போராட்டத்துக்க…
-
- 6 replies
- 1.5k views
-
-
தமிழ்நாடு கோயமுத்தூரிலுள்ள ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் அலுவலகம் மீது இனந் தெரியாதவர்கள் நடத்திய தாக்குதலினால் யன்னல் கண்ணாடிகள் உடைந்து நொருங்கியுள்ளன. கோயமுத்தூர் எல்.ஐ.சி.ரோட்டில் ஏ.ரி.ரி.கொலணியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் அலுவலகமே வெள்ளிக்கிழமை இரவு தாக்குதலுக்குள்ளாகியது. மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களே இந்த அலுவலகம் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் அலுவலகத்தின் யன்னல்கண்ணாடிகள் உடைந்து நொருங்கியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக ரேஸ்கோட் பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்றபோது அவர்கள் முறைப்பாட்டை ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 1 reply
- 1.2k views
-
-
மலையக அமைச்சர்களை விமர்சித்தபடி அரசை ஆதரிக்கும் அரசியல் என்னிடம் கிடையாது - மனோ கணேசன் வீரகேசரி நாளேடு 12/22/2008 8:26:03 PM - மலையக அமைச்சர்கள் ஆறுமுகன் தொண்டமானையும், பெரியசாமி சந்திரசேகரøனயும் கடுமையாக விமர்சனம் செய்தபடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை ஆதரிக்கும் இரட்டை வேட அரசியல் என்னிடம் கிடையாது. நாங்கள் மலையக அமைச்சர்களை எதிர்ப்பதை விட தமிழ் மக்களை வரலாறு காணாத கொடுமைகளுக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த அரசாங்கத்தை எதிர்த்து அதை அகற்றுவதில்தான் அதிக அக்கறை காட்டுகின்றோம். இது எங்களது பகிரங்க நிலைப்பாடு. இவ்விடயத்தில் என்னிடம் எந்தவித ஒளிவு மறைவும் கிடையாது என்று ஜனநாயக மக்கள் முன்ணனி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் அமைப்புகளின் தலைவர் மனோகணேசன் எம்.…
-
- 2 replies
- 848 views
-
-
தமிழக கட்சிகள் இணைந்து குரல் கொடுத்திருந்தால் ஈழப்பிரச்சினை தீர்வு முயற்சி வலுவடைந்திருக்கும்: கனிமொழி [ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2008, 08:06.49 AM GMT +05:30 ] இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு தமிழகக் கட்சிகள் அனைத்தும் இணைந்து குரல் கொடுத்திருந்தால் மேலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் வலிமையாக இருந்திருக்கும் என்று கவிஞரும் இந்திய மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி கூறியுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இவ்வாரம் கொழும்புக்கு விஜயம் செய்வார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த செவ்வியில் மேலும் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை இலங்கைப் பிரச்சின…
-
- 3 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா அரசாங்கம் தற்போது களமுனையில் சிறுவர்களை இராணுவத்தினருடன் தாக்குதலில் ஈடுபடுத்துகின்றனர். கடந்த வாரம் சிறுவர் சிப்பாய் ஒருவர் களத்தில் கொல்லப்பட்டிருந்தார். இவரது உடலத்தை விடுதலைப் புலிகள் கைப்பற்றி சிறிலங்கா இராணுவத்திடம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக ஒப்படைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முருகண்டியில் இடம்பெற்ற மோதலின் போது மேலும் ஒரு சிறுவர் படையைச் சேர்ந்த சிப்பாய் ஒருவரின் சடலம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் போது விடுதலைப் புலிகளால் 15 உடலங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. இவற்றில் பெரும்பாலானவை இளவயதினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 4 replies
- 4.8k views
- 1 follower
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் மற்றும் நீவில் பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வரும் உக்கிர மோதல்களில் 200-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 53 பேர் காணாமல் போய் உள்ளனர் என கொழும்பில் இருந்து வெளிவரும் பாதுகாப்பு இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2.2k views
-
-
வவுனியா வைத்தியசாலை தமிழ் டாக்டர்களுக்கு சிங்களப்புலி என்ற பெயரில் மிரட்டல் கடிதங்கள் [ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2008, 02:37.05 AM GMT +05:30 ] [ வீரகேசரி ] வவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தமிழ் வைத்தியர்களுக்கு சிங்களப் புலி என்ற பெயர் குறிப்பிட்டு கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் வவுனியா பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்கள். சிங்கள வைத்தியர் கொல்லப்பட்டால் நீயும் கொலை செய்யப்படுவாய் - சிங்களப்புலி என்ற வாசகங்கள் கையெழுத்தில் பொறிக்கப்பட்டு இந்த வைத்தியர்களின் வீட்டு முகவரிகளுக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாரிடம் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைக்…
-
- 3 replies
- 3.5k views
-
-
பிபிசி செய்திச் சேவைக்கு மின்னஞ்சல் வழி செவ்வி வழங்கியுள்ள.. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள்.. கிளிநொச்சியை தக்க வைக்க சண்டை செய்கிறோம்.. ஆனால் அது முடியாது போய் கிளிநொச்சி நகர் அரச படைகளின் கைகளில் வீழ்ந்தாலும் நாம் தொடர்ந்து சண்டை செய்வோம். எமது மக்களைக் காக்கவே நாம் ஆயுதம் எடுத்தோம். அப்பணி முடியும் வரை நாம் ஆயுதங்களைக் கைவிடமாட்டோம். கிளிநொச்சி இன்றேல் நாம் இன்னொரு நகரை உருவாக்கிக் கொள்வோம். விடுதலை என்பது ஒரு நகரை மையப்படுத்தியதல்ல. எதிர்காலத்தில் எமது தேசத்தை முழுமையாக விடுவிப்போம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அதற்காகப் போராடுவோம் என்று கூறியுள்ளார்..! அரசாங்கம் கேட்பது போல நாம் ஆயுதங்களை எமது மக்களின் பாதுகாப்ப…
-
- 6 replies
- 3.4k views
- 1 follower
-
-
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்து ஆராய்வதற்கு உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 603 views
-
-
சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் அலோக் பிரசாத்தை சிறிலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம கொழும்பில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 490 views
-
-
வன்னிப் பெரு நிலப்பரப்பில் வாழும் அப்பாவி பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 307 views
-
-
வன்னிப் பெரு நிலப்பரப்பில் வாழும் அப்பாவி பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 441 views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி யாழ்.தென்மராட்சியிலும் வடமராட்சியிலும் நேற்றுப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. நேற்றுக்காலை 9.45 மணியளவில் கைதடிச் சந்தியில் இருந்து மக்கள் சாவகச்சேரி சந்தைவரை பேரணியாகச் சென்றனர். இந்த ஆர்ப்பாட்டம் பிற்பகல் ஒருமணிக்கு முடிவுற்றது. இந்தப் பேரணியில் சுமார் 5 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்டனர். ஈழப்போரை நிறுத்த வேண்டும் என்றும் சிலர் கோஷமிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை வடமராட்சி பருத்தித்துறை சிவன்கோவிலடிப்பகுதியிலிருந
-
- 0 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சியை நோக்கி ஐந்து முனைகளில் சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இரண்டு முனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. மூன்று முனைகளில் முறியடிப்பு தாக்குதல்கள் தொடர்கின்றன. இதில் இதுவரை 100 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 411 views
-
-
கிளிநொச்சியை நோக்கி ஐந்து முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இரண்டு முனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. மூன்று முனைகளில் முறியடிப்பு தொடர்கின்றன. இதில் 100 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 572 views
-
-
வன்னியில் தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசின் கிளஸ்டர் குண்டு வீச்சைக் கண்டித்து நெதர்லாந்தில் உள்ள தமிழ் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 397 views
-
-
-
- 0 replies
- 2.5k views
-
-
விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கான முடிவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் அறிவிக்கக்கூடும் என்று இந்திய இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பெரும்பாலும் எதிர்வரும் நத்தார் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுக்கும் செய்தியில்,விடுதலைப் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்குமாறு அவர் கோருவார் அல்லது தடையை எதிர்கொள்ளுமாறு எச்சரிக்கை விடுப்பார் என அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி மேற்படி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அந்த இணையத்தள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- விடுதலைப் புலிகள் மீது தடைகளை விதிக்க வேண்டுமா விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தற்போதைய சட்டங்கள் போதுமானவையா என்பது குறித்து அரசுக்குள் கடும் விவாதமொன்று இடம…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் பாரிய நெருக்கடி ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவின் உச்ச நீதிமன்றினால் வெளியிடப்பட்ட தீர்ப்புக்கு அமைய நேற்று முதல் இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனம் 100ரூபாய்க்கு எரிபொருள்களை விற்பனை செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சிறீலங்காவின் அமைச்சரவை இன்னும் நீதிமன்றின் தீர்ப்பு செல்லுபடி அற்றது என்று கூறி வருவதுடன், எரிபொருள் விலையைக்குறைக்க முடியாது எனவும் கூறிவருகின்றது. இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிலையங்களில் ஒரு லீற்றர் பெற்றோல் 122 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், லங்கா இந்தியன் ஒயில் நிறுவன எரிபொருள் நிரப்பு நிலையங்…
-
- 0 replies
- 1.2k views
-