ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் மக்களை அச்சமூட்டும் வகையில் ஐந்து தடவைகள் பறப்பில் ஈடுபட்டு சிறிலங்கா வான் படையினர் குண்டுத்தாக்குதலை நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 522 views
-
-
புலிகளிடம் பணம் பெறுகிறீர்களா? "இலங்கைத் தளபதியின் இந்தப் பேச்சு குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ என்ன கருதுகிறார்?" அண்மையில் இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் செம சூடு. ``இலங்கை ராணுவத் தாக்குதலில் தமிழர்கள் யாரும் இறப்பதில்லை என்பது தமிழ்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களுக்கு நன்றாகத் தெரியும். விடுதலைப் புலிகள் இயக்கம் அழிந்துவிட்டால் அதன் மூலம் நெடுமாறன், வைகோ போன்ற அரசியல் கோமாளிகளுக்கு அந்த இயக்கம் மூலமாக வரும் `வருமானம்' நின்றுபோய்விடும். அதனால்தான் புலிகள் இயக்கத்தை இவர்கள் காப்பாற்ற முயல்கிறார்கள்'' என்று அதில் பொரிந்து தள்ளியிருந்தார் பொன்சேகா. இலங்கைத் தளபதியின் இந்தப் பேச்சு குறித்து …
-
- 0 replies
- 2.9k views
-
-
சிறீலங்கா அரசின் போர் நடவடிக்கையாலும் சமீபத்திய மழையாலும் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இன்றி வன்னிமக்கள் சோமாலியாவில் மக்களின் நிலைக்கு ஒத்த வகையில் வாழ்வதாக வன்னியில் இயங்கி வரும் ஒரு சில சர்வதேச உதவிநிறுவனங்களில் ஒன்றானதும் ஐநாவின் அங்கமானதுமான உலக உணவுத்திட்டத்தின் (WFP) அதிகாரி கிளிநொச்சி தர்மபுரத்தில் இருந்து பிபிசி சிங்கள சேவைக்கு தகவல் வழங்கியுள்ளார். வன்னி மக்களுக்கு உணவு கிடைக்கின்ற போதும் இதர அடிப்படை வசதிகள் சோமாலியாவுக்குரிய நிலையில் மிகக் கீழ்மட்டமாக இருப்பதாக அவர் கூறிருப்பதோடு சிறீலங்கா அரசு செய்தியாளர்களை போர் நடக்கும் பகுதிகளுக்கு அனுப்ப மறுத்து வருவதையும் பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது..! S Lanka's 'Somalia conditions' A UN official i…
-
- 11 replies
- 2.4k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு வெள்ளவத்தையில் நேற்று புதன்கிழமை அதிகாலை படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் 15 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 746 views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நோர்வேயின் அனுசரணையுடன் தீர்வு ஏற்பட வேண்டும். இலங்கையில் ஒரு வருடத்துக்குள் இனப்பிரச்சினை விவகாரத்தில் மாற்றம் ஏற்படும் என்று சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ள முன்னாள் பின்லாந்து ஜனாதிபதியும் சமாதான தூதுவருமான மாரீப் அதிசாரி தெரிவித்துள்ளார். சமாதானத்துக்கான நோபல் பரிசு இவருக்கு நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் நேற்று வழங்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளரிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கொசோவா இனப்பிரச்சினை விவகாரத்தில் சமாதான தூதுவராக செயற்பட்ட மாரீப் அதிசாரி மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் பங்களிப்பு வழங்குமாறு அங்குள்ள பல நண்பர்கள் கோரிக்கை …
-
- 7 replies
- 2.1k views
-
-
உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளே ஈழத் தமிழரின் இன்றைய அவலநிலை பற்றியும், அவர்களது துயர் துடைப்புக்காக தமிழ்நாடு அரசு மேற் கொண்டு வரும் நிதி திரட்டல் பற்றியும், உங்கள் கருத்துக்களை/எதிர்பார்ப்புகளை பதிந்து கொள்ளும் முயற்சியாக இது மேற்கொள்ளப்படுகிறது. முடிந்தவரை கருத்துக் கணிப்பை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். இந்தக் கருத்துக் கணிப்பில் பங்குபற்றும் உங்கள் ஆர்வத்துக்கும், நேரத்துக்கும் நன்றி. http://survey.yarl.net/index.php?sid=92519
-
- 33 replies
- 4.8k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என ‘நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்பு’என்ற பெயரில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்பில் ‘இறுதி எச்சரிக்கை’என்ற தலைப்பில் நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல்கலைக்கழகம் என்பது வெறும் கல்வி கற்கும் இடமல்ல. அது யாழ் சமூகம். அதில் உள்ள சிலர் அழிவடைந்து இறுதிக்கட்டத்தை அடைந்துகொண்டிருக்கும் பயங்கரவாத நாசகார புலிகள் அமைப்பை பாதுகாத்து நாட்டையும் தமிழ் மக்களையும் அழிவடைய செய்து வருகின்றார்கள். இது தொடர்பில் நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்புக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களின் விபரம்…
-
- 5 replies
- 2.3k views
-
-
-
டிசம்பர் 10ந்திகதி சர்வதேச மனிதஉரிமைகள் தினம். உலகிற் பெருகிவரும் போர் சூழலில், அது ஒரு அடையாளப்படுத்தப்பட்ட தினம் என்றளவில் மட்டுமே அதன் அர்த்தப்பாடு முடிந்து போய்விடுகிறது போல் தெரிகிறது. சிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் மனித உரிமை மீறல்கள் பலவும் நீரூபிக்கப்பட்ட நிலையிலும் நீர்ந்துபோய்விட்ட நிலையில், பாவப்பட்ட மக்களுக்கு இத்தகைய அமைப்புக்கள் மீதான நம்பிக்கையும் அற்றுப் போய்விடுகின்றது. மனித உரிமைகள் கடனுக்கும் இல்லை மனித உரிமைகள் கடனுக்கும் இல்லை மனித உரிமங்களின் அத்தியாயங்கள் கிழிசல்களாக தெருவோரங்களில் சிவப்புகளில் நனைந்தும் கறுப்புக்களாய் உறைந்தும் சிவப்புகளில் நனைந்தும் கறுப்புக்களாய் உறைந்தும் அவயவங்கள் து…
-
- 7 replies
- 1.4k views
-
-
-
மனித உரிமை மீறல் கவலை, வன்னி மக்களுக்கு உதவி - அவுஸ்திரேலியா ´ புதன், 10 டிசம்பர் 2008, 17:59 மணி தமிழீழம் [தாயகன்] இலங்கையின் மனித உரிமை மீறல்கள் கவலை அளிப்பதாகவும், வன்னியில் அவலப்படும் மக்களுக்கு உதவிப் பொருள்களை வழங்க இருப்பதாகவும் அவுஸ்திரேலியாஅறிவித்துள்ளத
-
- 2 replies
- 891 views
-
-
சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு சிறீலங்கா மன்னிப்புக் கோரியதாக இந்தியா தெரிவிப்பு புதன், 10 டிசம்பர் 2008, 01:19 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்] சரத்பொன்சேகாவின் கூற்றுக்கு இந்தியாவிடம் இலங்கை மன்னிப்புக் கோரியுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் விஸ்ணு பிரகாஸ் தெரிவிக்கையில்: சிறீலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை 'கோமாளிகள்' என்று தெரிவித்த கருத்துக்கு சிறீலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளது. சரத்பொன்சேகாவின் கருத்துத் தொடர்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் இலங்கை பாதுகாப்பு அமைச்சரிடம் தமது கடுமையான விசனத்தைத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் மன்னிப்பு…
-
- 6 replies
- 1.5k views
-
-
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எதிர்வரும் வருடம் நான்கு வீதமாக குறைவடையலாம். எனவே, நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம் என உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.1k views
-
-
'மனித உரிமை'களுக்கு அடிப்படையானது 'சுயநிர்ணய உரிமை'யே; அதற்காகவே நாம் போராடுகின்றோம்; இது பயங்கரவாதம் அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 533 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளையில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலின் அதிர்ச்சியில் முதியவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 512 views
-
-
ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்துக்கொண்டும், ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று இழிவுபடுத்தி வரும் சிங்கள கொடுங்கோலன் மகிந்த ராஜபக்ச மற்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரின் திமிர் பேச்சை கண்டித்து கொடும்பாவியை புரட்சிகர இளைஞர் முன்னணியினர் எரித்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 460 views
-
-
யாழ் நகர கட்டளைத் தளபதி பிரிகேடியர் மார்க் ஊரெழுப் படைமுகாமிற்கு நேற்று மாலை பலத்த பாதுகாப்பின் மத்தியில் சென்ற இறங்கியபோது இவரை படையினரால் வளக்கப்பட்ட நாய் ஒன்று கடித்துக் குதறியதாம். இதனையடுத்து பாதுகாவலர்களால் குறிப்பிட்ட நாய் சுடப்பட்டதுடன், பிரிகேடியர் மார்க்கும் சிகிச்சைக்காக பலாலி தள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 14 replies
- 3.8k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா படையினர் அடைந்து வரும் வெற்றியை திசை திருப்புவதற்காகவே கரு ஜெயசூரிய ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்ததாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் விரவன்ச குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 680 views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பொது நிர்வாக அமைச்சர் பதவியை வகித்த கரு ஜயசூரிய, அந்தப் பதவியிலிருந்து விலகிவிட்டு மீண்டும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து பிரதித் தலைவர் பதவியையும் பெற்றுக்கொண்டிருப்பதையடுத்து, கரு ஜயசூரியவுடன் வந்து அரசாங்கத்தில் இணைந்துகொண்ட ஏனைய 16 பேரையும் தக்க வைக்கும் முயற்சியில் ஆளும் கட்சி ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 522 views
-
-
சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளரும், அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரருமான கோதாபாய ராஜபக்ச யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான திடீர் பயணத்தினை நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டு அங்கு சென்றிருந்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 725 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவும் இன்று புதன்கிழமை முற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக அரச தலைவர் செயலகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 518 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் காவல்துறையினரின் புதுவிதமான சோதனை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 614 views
-
-
இலங்கையின் கிழக்கு கரையோரப்பகுதி பொத்துவலிலிருந்து வடக்கு நோக்கியும் இலங்கையின் வடக்கிலிருந்து மேற்கு கரையோரமாக நீர் கொழும்பு வரையிலான கடலோர பிரதேசத்திலும், பெரும்பகுதி கடல்பிரதேசத்திலும் எண்ணை வளம் இருப்பதற்கான உறுதியான தரவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும் கடந்த இரண்டு வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளாகும். இதில் செறிவான எண்ணை வளத்தை கொண்டபகுதியானது, மன்னாரும் மன்னாரிலிருந்து வடக்கு நோக்கி இந்தியா வரையிலான பிரதேசத்தில் இருப்பதும், இதன் இந்திய காவேரி பிரதேசத்தில் எண்ணை வளம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதும் தெரிந்த விடயமே. இந்த மன்னார் படுக்கையில் உள்ள எண்ணை வளத்தை பிரித்தெடுப்பதற்கான உரிமையை இலங்கை அரசு இந்திய எண்ணை எரிபொருள் நிறுவனத்திற்கு கொடுத்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிரி லன்கா 200 பில்லியன் காசை போருக்காக இண்டைக்கு இறக்கியுள்ளது. http://www.alertnet.org/thenews/newsdesk/COL45289.htm
-
- 16 replies
- 2.3k views
-
-
இலங்கையில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்துகின்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை இலங்கை அரசுக்கு எடுத்துரைப்பதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் பிணாப் முகர்ஜி விரைவில் கொழும்புக்கு விஜயம் செய்வார் என கடந்த வியாழக்கிழமையன்று புதுடில்லியில் வைத்து முதல்வர் கருணாநிதி அறிவித்தாராயினும், அவரது வருகை இப்போதைக்கு இடம் பெறும் சாத்தியமே இல்லை என விடயமறிந்த வட்டாரங்கள் அடித்துக் கூறுகின்றன. மும்பைத்தாக்குதல் சம்பவங்களை ஒட்டி கட்டவிழும் நிலைமையைக் கையாள்வதற்காக பிரணாப் புதுடில்லியில் தங்கியிருப்பது அவசியம் என்று வலியுறுத்தி, அதனை முன்னிலைப்படுத்தி, அவரது கொழும்பு விஜயம் தள்ளிப் போடப்பட்டுள்ளதாக காட்டுவதற்கும் தீர்மானிக்ககப்பட்டிருப்பதா
-
- 3 replies
- 1.2k views
-