Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. க.பொ.த சா/த பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து நடைமுறைப்படுத்தியது. வலய கல்வி அலுவலகம் இந்தத் திட்டத்திற்கான புள்ளிகளை வழங்கும்போது திறன், அழகியல், விளையாட்டு மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகள் மற்றும் மாணவரின் குடும்பத்தின் பொருளாதார மற்றும் சமூக நிலை ஆகியவற்றைக் கருத்திற்க் கொள்கிறது. முதல் கட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 3,000 மாணவர்கள் தகுதி பெற்றனர், மேலும் 11 கல்வி வலயங்களில் அதிக தகுதிகளைக் கொண்ட 110 புலமைப்பரிசில் பெற்றவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா உதவித்தொகை ஜனாதிபதி செயலகத்தில் இரண்டு வருடங்களுக்கு வழங்கப…

  2. கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலனறுவை மாவட்டத்திலும் இன்று மாலை 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (03) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்தில் 74.8 மில்லிமீற்றர் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. https://thinakkural.lk/article/252005

  3. ரணில் வீடு எரிப்பு: ரங்கா சந்தேகநபர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சொந்த வீட்டை எரித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்காவை குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகநபராக பெயர் குறிப்பிட்டுள்ளனர். இதற்கமைய, ஜெ. ஸ்ரீரங்காவை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, கடந்த 2011 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/ரணில்-வ…

  4. தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் பின்னடிப்பு – ஜனாதிபதி தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் பின்னடிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டின் நீண்டகாலமாக இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இது மிகவும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள…

  5. மின்னேரிய விமான நிலையம் என அழைக்கப்படும் ஹிங்குராக்கொட விமான நிலையத்தை சர்வதேச சிவில் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த யோசனைகளை வெளியிட்டதுடன் விமான நிலையத்தின் நிர்வாகமும் செயற்பாடுகளும் தற்போது இலங்கை விமானப்படையின் கீழ் உள்ளதாக தெரிவித்தார். ஹிங்குராகொடவை சர்வதேச சிவில் விமான நிலையமாக மாற்றுவதன் மூலம் பொலன்னறுவை, அநுராதபுரம், சீகிரியா மற்றும் தம்புள்ளை ஆகிய இடங்களுக்கான விஜயங்களை இலகுவாக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த வரலாற்று, இயற்கை மற்றும் கலாசா…

  6. Published By: T. SARANYA 03 MAY, 2023 | 09:04 AM (இராஜதுரை ஹஷான்) எரிபொருள், நிலக்கரி ஆகியவற்றின் விலை குறைப்புக்கு அமைய மின்கட்டணத்தை 25 சதவீதத்தால் குறைக்க முடியும். மின்கட்டண அதிகரிப்பால் மாத்திரம் இலாபமடைய முடியாது. மின்சார சபை நிதி முகாமைத்துவத்தில் முதலில் ஒழுக்கத்தையும்,வெளிப்படைத் தன்மையையும் பேண வேண்டும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மின்சார சப…

  7. Published By: DIGITAL DESK 5 03 MAY, 2023 | 02:37 PM முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் மே 18ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் குறித் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பேரினவாத மேலாதிக்கத்தின் தமிழினவழிப்புச் சிந்தனையின் கொடிய கோரப்பற்கள் முள்ளிவாய்க்கால் மண்ணின் பிடியில் அடைக்கலம் அடைந்த ஈழத்த்தமிழினத்தின் இதயத்தில் ஆழப்பதிந்த நாட்கள் கடந்துபோய் 14 ஆண்டுகள் நிறைவடையும் நாள் மே 18. மனிதாபி…

  8. “காவி உடையில் அரசியல் செய்யும் பிக்குமாரை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், இல்லையேல் பதற்ற நிலைமை உருவாகும்” இனப்பிரச்சினை தொடர்பாக தொடர்ந்தும் பேசுவதை விடுத்து, செயலில் காட்டுங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிம்ம நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மேதின உரை தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளார். இனப் பிரச்சனை தொடர்பில் காத்திரமான முயற்சிகளை எடுத்த ஒருவராக ஜனாதிபதி திகழ்ந்தாலும் பதவியேற்ற பின்னர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். இனப்பிரச்சினை தீர்வுபற்றி, தமிழ் கட்சிகளை அழைத்துப் பேச முன்னதாக சிங்கள கட்சிகளை…

  9. யாழில்.ஒருவருக்கு மலேரியா யாழ்ப்பாணத்தில் ஒருவர் மலேரியா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் மலேரியா நோயின் உள்ளூர் தொற்று இறுதியாக 2012 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்டது. அதன்பின்னர் இதுவரை உள்ளுர் பரம்பல் காரணமாக எந்தவொரு நோயாளியும் இனங்காணப்படவில்லை. ஆனாலும் மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்கு சென்று இலங்கைக்கு திரும்பி வந்தவர்களில் பலருக்கு மலேரியா நோய் இனங்காணப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் இ…

  10. பிரித்தானியாவிற்கு செல்கிறார் ஜனாதிபதி! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(புதன்கிழமை) பிரித்தானியாவிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்கு செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சுமார் 70 ஆண்டுக்காலம் ஐக்கிய இராச்சியத்தின் அரியணையில் இருந்த 2ஆம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு செப்டெம்பர் 8ஆம் திகதி காலமானார். அவரது மறைவின் பின்னர் இளவரசர் 3ஆவது சார்ள்ஸ் முடிக்குரிய மன்னராக அறிவிக்கப்பட்டார். இதன் பிரகாரம், 3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவ…

  11. மக நெகும மற்றும் அதனுடன் இணைந்த நான்கு நிறுவனங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று காலை அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நிறுவனங்களை பராமரிப்பதற்கு நிதி பற்றாக்குறை நிலவுதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ‘மக நெகும’ வீதி கட்டுமான உபகரண நிறுவனம், 2004 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது முன்னர் இருந்த வீதி கட்டுமான மேம்பாட்டு நிறுவனத்தின் (RCDC) மறு உருவாக்கமாக இருந்தது. எவ்வாறாயினும், இந்த அரச நிறுவனமும் அதனுடன் இணைந்த நிறுவனங்களும் அவற்றைப் பராமரிப்பதற்கான நிதிப் பற்றாக்குறையால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. அரச நிறுவன சீர்திருத்தங்…

  12. Published By: NANTHINI 29 APR, 2023 | 12:31 PM இலங்கையில் பல குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்படும் குடுஅஞ்சு என்பவரை பிரான்ஸ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குடும்ப வன்முறை குற்றச்சாட்டின் பின்னரே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரான்ஸில் வசித்துவந்த அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸ் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவரை பிரான்சிலிருந்து இலங்கைக்கு அழைத்துவருவது குறித்து இலங்கை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். குடு அஞ்சு கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையான தெகிவளை மவுண்டலவேனியா மாநகரசபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வா படுகொலை உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டுவருகின்றார். …

  13. பெற்றோரால் பராமரிக்க முடியாத 3 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண மட்டத்தில் நிலையங்களை நிறுவி, அதனூடாக குறித்த குழந்தைகளை பராமரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டங்கள் விரைவில் உருவாக்கப்படும் என நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறுவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றமை, கொலை செய்யப்படுகின்றமை மற்றும் கைவிடப்படுகின்றமை ஆகிய சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் இதுவரை 80 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 60 சிறுவர்கள் கைவிடப்பட்ட சம்பவங்கள் பதிவாக…

  14. இலங்கைக்கு குறைந்த வட்டியில் சலுகைக் கடன்களை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரியுள்ளார். தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் அலி சப்ரி, சியோலில் வைத்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவை (Masatsugu Asakawa) சந்தித்தபோது இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இலங்கை தற்போது உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே குறைந்த வட்டியில் சலுகைக்கடன்களை வழங்கமுடியும் என்பதை அமைச்சர் அலி சப்ரி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோன்ற கோரிக்கையை உலக வங்கியும் ஏற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். https://thinakkural.lk/article/251815

  15. தனியார் நிறுவனங்களால் தமது பாரம்பரிய பூர்வீக நிலங்களுக்கு ஏற்பட்ட அழிவு தொடர்பில் ஆதிவாசி சமூகத்தின் தலைவர் உருவரிகே வன்னில அத்தோவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கோனபொல ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ரம்பகன் ஓயா பிரதேசத்தில் உள்ள பழங்குடியின மக்களின் பாரம்பரிய தாயக நிலங்களை பயிர்ச்செய்கைக்காக துப்பரவு செய்வதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க மகாவலி அதிகாரசபையின் தீர்மானத்திற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகாவலி அதிகாரசபையின் தீர்மானத்தை இரத்துச் செய்வதற்கு நீதிமன்றத்தின் தலையீட்டை ஊறுவாரிகே…

  16. டெங்கு பரிசோதனை மற்றும் முழு இரத்த பரிசோதனைகள் ஆகிய இரண்டிற்கும் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 12 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களின் நடத்துநர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. விதிமுறைகளை மீறியதாகவும் குறிப்பிட்ட சோதனைகளுக்கு வர்த்தமானி விலைக்கு மேல் வசூலித்ததாக கண்டறியப்பட்டவர்களுக்கு நீதிமன்றங்களால் அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகேகொட, கல்கிசை, மாளிகாகந்த மற்றும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதிக கட்டணத்தை வசூலித்தவர்களுக்கு 9.4 மில்லியன்.ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அதிகாரசபை அறிவித்துள்ளது. பொதுவாக பயன்பட…

  17. இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி கூறுவதைவிடுத்து நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டியது அவசியம் : சுமந்திரன்! kugenMay 3, 2023 இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவது குறித்து அண்மையகாலங்களில் ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்துக்கூட்டங்களிலும் நாம் பங்கேற்றிருப்பதுடன், அதனை முன்னிறுத்திய ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருக்கின்றோம். எனவே இவ்விவகாரத்தைப் பொறுத்தமட்டில் நாம் ஒருபோதும் தூரவிலகி நிற்கவில்லை என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமாத்திரமன்றி இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்கும் விடயத்தில் …

  18. வசந்த கரன்னாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைத்துகொள்ளப்பட்டது! முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைத்துகொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், அவர் மீதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அவருக்கு விசா வழங்க மறுப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்டோருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது. எனினும், அவர் குறித்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்ததுடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வடமேல் ம…

  19. (எம்.மனோசித்ரா) நல்லாட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளக விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளுக்கும் , அழுத்தங்களுக்கும் இடமளிக்கவில்லை. எனவே தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவரை பதவி நீக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட சர்வதேச சதித்திட்டமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சு.க.வின் மே தினக் கூட்டம் திங்கட்கிழமை (01) கண்டியில் இடம்பெற்ற போது ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் , இனிவரும் எந்தவொரு தேர்தலிலும் சு.க. தனித்தே போட்டியிடும். அதற்குரிய பலத்துடன் கட்சியை மீளக் கட்டியெழுப்புவோம். கடந்த 2018 இல் தேசிய …

    • 1 reply
    • 219 views
  20. (இராஜதுரை ஹஷான்) அரசியல் செய்வதற்கு ஏதும் இல்லாத காரணத்தினால் எதிர்க்கட்சிகள் பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களையும் எதிர்க்கிறார்கள். பொய்யான விமர்சனங்கள் எழுந்த போது மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்தோம். மக்கள் தற்போது உண்மையை விளங்கிக் கொண்டுள்ளார்கள். தேவையாயின் பலமிக்க சக்தியாக ஒன்றிணைந்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் பொரள்ளை கெம்பல் மைதானத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்களாணை உண்டு என்பது மே தின கூட்டத்தில் மீண்டும் உறுதிப்படுத…

  21. அல்லைப்பிட்டி பகுதியில் கோரவிபத்து – இரு பெண்கள் சம்பவ இடத்தில உயிரிழப்பு !! யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்களின் பின்னால் வந்த வாகனம் மோதியதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. https://athavannews.com/2023/1331213

    • 4 replies
    • 552 views
  22. வவுனியா பழைய பஸ் நிலையத்தில் பாலியல் தொழிலாளர்கள் இருவர் கைகலப்பில் ஈடுபட்டமை தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வவுனியா, பழைய பஸ் நிலையத்தில் நடமாடும் இரு பாலியல் தொழிலாளர்கள் விடுமுறையில் செல்லும் இராணுவத்தினரை யார் அழைப்பது என தமக்குள் முரண்பட்டு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாலியல் தொழிலாளி ஒருவர் காயமடைந்த நிலையில், வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, குறித்த பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடுவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்களும் சமூக அமைப்புக்களும் கோரி வருகின்றமை குறிப்பிடத…

  23. செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம்பகுதியில் அமைந்துள்ள பௌத்த சிலை ஒன்றினை சேதப்படுத்திய சந்தேகத்தில் ஒருவரை கொக்கிளாய் பொலிஸார் இன்று (01) கைதுசெய்துள்ளனர். கொக்குளாய் மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள முகத்துவாரம் பகுதியில் பெரும்பான்மை மக்களால் வணங்கப்பட்டு வந்த புத்தர் கோவில் ஒன்றில் இருந்த புத்தர் சிலை ஒன்று உடைக்கப்பட்டுள்ளதாக கொக்குளாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 1.5அடி உயரம் கொண்ட புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு உடப்பு பகுதியினை சேர்ந்த 33 அகவையுடைய ஒருவர் கொக்குளாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். …

    • 4 replies
    • 797 views
  24. வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை கடத்தி வந்து வீடொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 3 பெண்கள் உள்பட 11 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஒன்றும் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் யகத் விஷாந்தவின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை திங்கட்கிழமை (01) முன்னெடுத்தனர். வவுனியா பூவரசம்குளம் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய தில்லைநாதன் சுமணன் என்பவர் வெளிநாடு அனுப்புவதாக கூறி வேலணையைச் சேர்ந்த நபர்களிடம் 10 இலட்சம் ரூபா பணத்தை வாங்கியுள்ளார். எனினும் நீண்ட ந…

  25. இலங்கை உட்பட இறைமையுள்ள எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர்Levan Dzhagaryan தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகள் தங்கள் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் மேற்குலகில் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசுகின்றோம்,அவர்களிற்கு பல பிரச்சினைகள் உள்ளன,அவ்வாறான நிலை காணப்படுகின்ற போதிலும் இலங்கை போன்ற நாடுகளிள் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். நீங்கள் எதனை செய்யவேண்டும் எதனை செய்யக்கூடாது என உங்களிற்கு பாடம் நடத்துவதற்கு - இலங்கைக்கு எவருக்கும் உரிமை இல்லை - இது உங்களின் உள்விவகாரம் என ரஸ்ய தூதுவர் தெரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.