ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக சட்டமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் [சனிக்கிழமை, 08 நவம்பர் 2008, 11:14 மு.ப ஈழம்] [க.நித்தியா] இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு இராணுவ ரீதியான எத்தகைய உதவியையும் வழங்கக் கூடாது ஆகிய இரு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக சட்டமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: | இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு இராணுவ ரீதியான எத்தகைய உதவியையும் வழங்கக் கூடாது ஆகிய இரு கோரிக்கைகளையும் வலியுறுத்தும் வகையில் எதிர்வரும் புதன்கிழமை (12.11.08) தமிழக சட்ட…
-
- 0 replies
- 669 views
-
-
ஈழத்தமிழர் வரலாற்றை மாற்றியமைக்கின்ற முறையில் தமிழகம் திரண்டெழுகின்றது. தலைவர்கள் தடம் புரண்டாலும் தமிழ் மக்கள் கிளர்ந்தெழுகின்ற நிகழ்ச்சி டெல்லி அரரைசயும், இலங்கை அரசையும் சிந்திக்க வைப்பது உறுதியென த.தே.கூட்டமைப்பின் முன்னாள் பா.உ ஈழவேந்தன் தெரிவித்தார். அவரது அறிக்கையில் : 'பற்றி எரிகின்ற ஈழத்தமிழா பிரச்சினையில் ரஜினியின் துணிச்சல் கருணாநிதிக்கு இல்லை' என்று ஜூனியர் விகடனுக்கு வழங்கிய நேர்காணலில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் இரத்த மழையில் மரணப் படுக்கையில் வாழ்வுக்காக சாவைத் தாங்கும் ஈழத்தமிழரின் பிரச்சினையில் நடிகர் ரஜினி காட்டிய துணிச்சல் கலைஞர் கருணாநிதியிடம் துளியும் இல்லை. ராமதாஸ் கையாளுகின்ற கடும் சொற்களை நாம் கையாள விரும்பவில்ல…
-
- 0 replies
- 1k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் இந்திய மத்திய அரசாங்கத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 611 views
-
-
சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தரைவழியாகப் பயணிக்காது உலங்கு வானூர்தியிலேயே நாடாளுமன்றத்திற்குச் சென்று வருகின்றார். அச்சம் காரணமாகவே அவர் தரைவழியாகப் பயணிக்காது, உலங்கு வானூர்தியில் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றதில் ஆரம்பித்துள்ள பாதீட்டை மீதான விவாதத்தில் கலந்துகொள்ளவே நிதியமைச்சர் என்ற அடிப்படையில் அவர் நாடாளுமன்றத்திற்கு சென்று வருகின்றார். இதேவேளை, கிழக்கின் உதயம் போன்று வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தை தமது அரசு ஆரம்பித்துள்ளதாகவும், கிளிநொச்சி, முல்லைத்தீவு என்பனவும் தமது படைகளால் விரைவில் கைப்பற்றப்படும் என்றும், சிறீலங்கா அரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். http://www.tamilskynews.com/
-
- 4 replies
- 2k views
-
-
மகிந்தவின் யுத்தத்தில் தப்பியோடிய ராணுவத்தினரின் எண்ணிக்கை 25000 - ராவய மகிந்த யுத்தத்தை ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை தப்பியோடியுள்ள ராணுவத்தினரின் எண்ணிக்கை 25000 இலும் அதிகம் என்று சிங்கள வார இதழான ராவய தெரிவித்திருக்கிறது. இந்த தை மாதம் வரையிலும் தப்பியோடியவர்களின் எண்ணிக்கை 15000 என்று படை வட்டாரங்களை ஆதாரங்காட்டி இச்செய்தி வெளிடப்பட்டிருக்கிறது. போர் நடக்கும் பிரதேசங்களில் இருந்து தலைமறைவாகும் தமது சகாக்களைக் கண்டுபிடிக்க அங்கிருந்து வெளியேறும் பேரூந்துகள், மற்றும் இதர போக்குவரத்து வாகனங்கள் என்று ராணுவத்தின் காவல்ப்பிரிவு கடுமையான சோதனைகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முகச்சாயலிலும், உடல்கட்டமைப்பிலும் ராணுவ வீரனைப் போல இருக்கும் ஆண்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் தவறான கருத்துகளையும் அவர்கள் மீது வீண் பழிகளையும் சுமத்தி வரும் இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது மௌனியாக இருப்பதைக் கண்டித்து இன்று கொழும்பிலும் அதன் அண்மித்த பிரதேசங்களிலும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் முஸ்லிம்களின் சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. தமது ஆட்சேபனையை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் கொழும்பு மருதானை ஜும் ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக ஜும் ஆ தொழுகையின் பின்னர் பாரிய ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு சுலோகங்களை எழுப்பினர். கொழும்பில் இன்று…
-
- 2 replies
- 1.7k views
-
-
கிளிநொச்சி பௌத்தர்களின் வரலாற்றுப் பொக்கிஷம். அங்குள்ள குளங்கள் எல்லாம் சிங்கள மன்னர்களால் கட்டப்பட்டவை. கிளிநொச்சி பௌத்தர்களின் பூர்வீக இடமென உரிமை கோரினார் தொல்லியல் சக்கரவர்த்தியும் ஹெல உறுமய எம்.பி.யுமான எல்லாவல மேதானந்த தேரர். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; பரதர் என்ற இனம் ஆட்சி புரிந்ததாலேயே இந்தியா பாரதம் என்றழைக்கப்படுகின்றது. எனவே, சிங்களவர்கள் ஆளும் நாட்டை சிங்கள நாடு என்று சொல்லாமல் வேறு எப்படிக் கூறுவது? இலங்கைக்கு சிங்களவர்களுக்கு முன் தமிழர்கள் வந்ததாகக் கூறப்படும் கதை விகாரமானது. அதற்கு அடி முடி இல்லை. இலங்கை சிங்களவர்களின் நாடு. …
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழர்களை கொல்ல அரசு தினமும் ரூ. 46 கோடி செலவு! - நாடாளுமன்றில் சுரேஷ் எம்.பி. காட்டம் [08 நவம்பர் 2008, சனிக்கிழமை 7:25 மு.ப இலங்கை] இலங்கை அரசு தமிழர்களைக் கொலை செய்வதற்காக ஒரு நாளைக்கு 45 கோடி ரூபா 60 லட்சம் ரூபாவைச் செலவு செய்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தது. "தமிழினத்தைப் பூண்டோடு அழித்தொழித்து கிளிநொச்சியைக் கைப்பற்றித் தனது சிங்கக் கொடியை ஏற்றுவது தான் மஹிந்த ராஜபக்ஷவின் திட்டம். அங்கு இதற்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ தயங்கமாட்டார்" என்றும் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று நாடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டத்தின் …
-
- 0 replies
- 576 views
-
-
வன்னிக்கு மருந்து ஏற்றிச்சென்ற லொறிகள் ஓமந்தையில் மறிப்பு [08 நவம்பர் 2008, சனிக்கிழமை 6:20 மு.ப இலங்கை] வன்னியில் உள்ள மக்களுக்கான மருந்துப்பொருட்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்ளை ஏற்றிச்சென்ற லொறிகளை ஓமந்தை சோதனைச்சாவடியிலுள்ள இராணுவத்தினர் கடந்த இரு தினங்களாகத் தடுத்துவைத்துள்ளனர் என்று முல்லைத்தீவுப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த லொறிகளில் முல்லைத்தீவு வைத்தியசாலைக்குத் தேவையான இவ்வருட காலாண்டுக்குரிய பொருட்களே உள்ளன என்றும், ஒரு லொறியினுள் மலேரியா, அஸ்மா மற்றும் நீரிழிவு நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் முதல் இராணுவத்தினர் இவ்வாறு மருத்துவப்…
-
- 0 replies
- 650 views
-
-
சர்வதேசக் கண்காணிப்பாளர்களை அடுத்து வெளியேறும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் [08 நவம்பர் 2008, சனிக்கிழமை 7:20 மு.ப இலங்கை] மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வரும் நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு உயர்ந்த இடம் கிடைத்திருப்பது உண்மை. சட்ட விரோதப் படுகொலைகள், படைத்தரப்பின் அட்டகாசங்கள், அட்டூழியங்கள், ஆட்களைக் கடத்தல், பின்னர் காணாமற் போகச் செய்தல், கடத்திக் கப்பம் பெறல், பணயம் வைத்தல், அச்சுறுத்திக் காரியம் செய்வித்தல், ஊடகங்களுக்கு எதிரான கொடூர அடக்குமுறை என்று மனித உரிமை மீறல்கள் கொடிகட்டிப் பறக்கும் தேசமாக இலங்கை விளங்குகின்றது. தன்னை சட்ட ரீதியான - இறைமையுள்ள - அரசு என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் இலங்கை ஆட்சித் தரப்பினாலும், அதன் முகவர்களான படைத்த…
-
- 0 replies
- 762 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய உண்ணாநிலை போராட்ட மேடையில் பரபரப்புக்குப் பஞ்சமே இருக்கவில்லை. அந்த மேடையில் அனைவரையும் அதிக அளவில் புருவம் உயர வைத்தவர் நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ்தான். இலங்கைத் தமிழர்களுக்காக தான் சேகரித்த ரூபாய் பத்து லட்சத்துடன், தன் பங்கிற்கு இரண்டு லட்சத்தையும் சேர்த்து, பன்னிரண்டு லட்ச ரூபாய் நிதி வழங்கி அனைவரையும் ஒருகணம் ஆச்சரியப்பட வைத்தார். அவர் ஒட்டுமொத்தமாக வழங்கிய தொகை சூப்பர் ஸ்டார் ரஜினி வழங்கிய தொகையான பத்து லட்சத்தைவிட அதிகம். அதுமட்டுமல்ல, ``விஜய், அஜித் போன்றவர்கள் நினைத்தால் தங்கள் ரசிகர்கள் மூலம் ஒரு கோடி ரூபாய் வரை இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்ட முடியும்'' என்று அந்த மேடையிலேயே லாரன்…
-
- 11 replies
- 3.8k views
-
-
நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் இலங்கை நிலைவரத்துக்கு உடனடி அரசியல் தீர்வாக ராஜீவ் - ஜே.ஆர். இடையில் செய்துகொள்ளப்பட்ட இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதிகாரப்பகிர்வு பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு சிறிலங்காவுக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 846 views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பு பஞ்சிகாவத்தையில் சிங்களவர்களுக்கு சொந்தமான நான்கு கடைகள் முஸ்லிம்களினால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வாகனம் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை 336.67 பில்லியன் ரூபா. (4 வது இணைப்பு) ஜனாதிபதியின் தமிழ் உரையினை இங்கு கேட்கலாம் ) நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் அடிப்படையில் 2009 ஆண்டில் அரசாங்கத்தின் முழு வருமானம்,855 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 779 பில்லியன் ரூபா வரி அறவீடுகள் மூலம் பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் முழு செலவு ஆயிரத்து 191.67 பில்லியன் ரூபாவாகும், இதனடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகை 336.67 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. துண்டு விழும் தொகையை ஈடு செய்ய 123.02 பில்லியன் ரூபா வெளிநாடுகளில் இருந்தும் 183.13 பில்லியன் …
-
- 8 replies
- 1.5k views
-
-
வரவு-செலவு திட்ட வாக்கெடுப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் பிரச்சாரம் [வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2008, 07:13 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிக்குமாறு மூத்த அமைச்சர்களும் எதிராக வாக்களிக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய ஐந்து கட்சிகள் எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆராய்வதற்கு இந்த கட்சிகளின் செயற்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்ற…
-
- 0 replies
- 575 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் யுத்தம் தொடர்பில் அமெரிக்க இராணுவக் கமாண்டர் கருத்து வெளியிட்டுள்ளார்.இலங்கை பாதுகாப்பு படையினரால் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் முழுமையாக வெற்றியடைவதற்கு மேலும் அதிக பலம் தேவைப்படுவதாக அமெரிக்க இராணுவக் கமாண்டர் திமொத்தி கேட்டிங் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவ
-
- 2 replies
- 1.9k views
-
-
மகா ஒயா பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது புலிகள் தாக்குதல்: 4 பேர் பலி: 3 பேர் காயம் [வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2008, 05:44 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற பகுதியான மகா ஒயா பிரதேசத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த மூவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: மகா ஒயா பிரதேசத்தில் உள்ள தம்பட்டி எனும் இடத்தில் வீதி சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது இன்று வெள்ளிக்கிழமை பி…
-
- 0 replies
- 955 views
-
-
சென்னை பாமக நிறுவனர் ராமதாசை, திமுக மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு சந்தித்துப் பேசினார். இரு கட்சிகள் இடையே மீண்டும் சமரசம் செய்து வைக்கும் முயற்சியாக இந்த சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. விழுப்புரம் அருகே தைலாபுரத்தில் உள்ள ராமதாசின் வீட்டில் நேற்றிரவு இந்த சந்திப்பு நடந்ததாக, பாமக வட்டாரங்கள் தெரிவித்தன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த சந்திப்பின் போது, இலங்கைத் தமிழர் நலன் விஷயத்தில் இரு கட்சிகளும் இணைந்து போராட வேண்டும் என்று யோசனை முன் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பழைய கருத்து வேறுபாடுகளை மறந்து விட்டு திமுக கூட்டணியில் பாமக மீண்டும் இணைய வேண்டும் என்று ராமதாஸை டி.ஆர். பாலு கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணாந…
-
- 3 replies
- 1.8k views
-
-
வணக்கம், இலங்கை அரசுக்கு எதிரான பரப்புரையின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் வர்த்தக வரிச்சலுகையை நிறுத்தக்கோருவதே இந்தக் கடிதத்தின் நோக்கமாகும். உலகெங்கும் வாழும் தமிழர்கள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உங்கள் வேண்டுகோளை எழுதி அனுப்பலாம். இதனைச் செய்வது மிகவும் எளிதானது. நீங்கள் செய்யவேண்டியது இதுதான். எங்களுடைய குறிக்கோள் குறைந்த பட்சம் 1000 கடிதங்களையாவது அனுப்பிவைப்பது என்பது. அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசு வரிச்சலுகையைப் பெறத்தகுதியற்றது என்ற செய்தியை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிப்பதே எங்கள் நோக்கம். எங்கள் செய்திக்கு ஐரோப்பிய ஒன்றியம் செவிசாய்க்க வேண்டுமென…
-
- 0 replies
- 1.5k views
-
-
அட... என பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது சமீபத்தில் ரஜினி பற்றி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்து வரும் பேட்டிகள். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்றும், நடிகர் ரஜினிக்கு இருக்கும் மன உறுதியும் தைரியமும் கூட கருணாநிதிக்குக் கிடையாது எனவும் சமீபத்தில் கூறியிருந்தார் ராமதாஸ். மேலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்பார்ப்புகள் குறித்தும் எந்த எதிர்மறைக் கருத்தும் ராமதாஸ் தெரிவிக்கவில்லை. ரஜினியின் நேர் எதிரியாகக் கருதப்பட்டு வந்த ராமதாஸ் மற்றும் அவரது மகனும் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ஆகியோர் திடீரென ரஜினியைப் பாராட்டத் துவங்கியிருப்பது ஏன்... …
-
- 0 replies
- 1.7k views
-
-
கடந்த 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருமலை உப்புவெளி பிரதேசத்தில் 16 வயதுக்குக் குறைந்த யுவதி ஒருவரை திருமணம் செய்வதாக ஏமாற்றி உடலுறவு கொண்டு, அவரைக் குழந்தை ஒன்றிற்குத் தாயாக்கிய எதிரி ஒருவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் 12 வருட கடுங்காவல் சிறைத்தண்டனையும் ஐயாயிரம் ரூபா தண்டமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். திருமணம் செய்வதாக ஆசை காட்டி, தன்னுடன் பல தடவைகள் உடலுறவு கொண்டு, 3 மாதக் கர்ப்பிணியாகிய பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டு எதிரி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்ததை அறிந்த திருகோணமலை உப்புவெளியைச் சேர்ந்த 16 வய’து இளம் பெண் மனமுடைந்து, மண்ணெண்ணெய் அருந்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். மண்ணெண்ணெய் அருந்திய இவரை உறவினர்கள்…
-
- 1 reply
- 1.3k views
-
-
"நாம் என்னதான் விட்டுக்கொடுப்புகளை செய்தாலும் அரசின் போர் முனைப்பு ஒருபோதும் அடங்காது' இந்த அவசரகாலச் சட்டமானது பொதுமக்கள் பாதுகாப்பு பிரகடனம் என்று கூறப்பட்டாலும் இது பொதுமக்களை பாதுகாக்கின்ற சட்டமல்ல. மாறாக, அரசையும் அரச அடிவருடிகளையும் பாதுகாக்கின்ற சட்டமாகவும் குறிப்பாக இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளான தமிழ் மக்களின் குரல்களை நசுக்கின்ற, உரிமைப் போராட்டங்களை அழிக்கின்ற பயங்கரமான சட்டமாகவேயுள்ளது. இந்த அவசரகாலச் சட்டப் பிரேரணையை இச்சபையிலே சமர்ப்பித்து பிரதமர் பேசும்போது உண்மைக்கு மாறான கருத்துகளை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து சபையில் உரையாற்றிய அரசசார்பு உறுப்பினர்களும் உரையாற்றும்போது ஒத்த கருத்துக்களையே வரிபிசகாது கூறுகிறார்கள். இவற்றில் இருந்து நாம் ஒ…
-
- 0 replies
- 1.3k views
-
-
எமக்கு விடிவு கிடைக்கும் வரை எழுச்சிப் போராட்டங்களை தொடருங்கள்: இந்திய தமிழர்களிடம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வேண்டுகோள் [வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2008, 01:32 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரமானதும் நீதியானதுமான வாழ்வு கிடைக்கும் வரையில் உங்கள் எழுச்சிப் போராட்டங்கள் தொடரவேண்டும் என்று இந்தியா வாழ் தமிழ் உறவுகளிடம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஆயுதமுனையில் பயணக் கைதிகளாக அகப்பட்டுள்ள சிக்கித் தவிக்கும் கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் சார்பில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் இந்திய உறவ…
-
- 0 replies
- 655 views
-
-
ஈழத்தில் தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும், தமிழ்ப் பெண்களின் மரணத்திற்கும் மன்மோகன் சிங் அரசும், தமிழக அரசும் தான் முழுப் பொறுப்பு என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். இலங்கைக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடவும் தயங்க மாட்டோம் என்று பேசிய வைகோவும், தனி ஈழம் போல தனித் தமிழ்நாடும் விரைவில் உருவாகும் என்று பேசிய கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பனும் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு காவல் நீடிப்பு தேவையில்லை, விசாரணை முடிந்துவிட்டது என தமிழக அரசு கூறிவிட்டதையடுத்து நீதிமன்றம் நேற்று இவர்களை விடுவித்தது. நீதிமன்ற வாசலில் நிருபர்களிடம் வைகோ பேசுகையில், நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. ஈழத் தமிழர்களை பாது…
-
- 0 replies
- 789 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் மக்கள் குயிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் 12 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். 4 வீடுகள் அழிந்துள்ளன. 11 வீடுகள் சேதமாகியுள்ளன. தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்கள் சிதறி ஓடியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 880 views
-