Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மோசமான காலநிலையினால் யாழ்ப்பாணத்தில் பலர் பலி: http://www.globaltamilnews.net/tamil_news....=2831&cat=1 வடக்கில் நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 9 பேர் உயிரிழந்திருப்பதாக ஒரு தகவலும் 11 பேர் உயிரிழந்திருப்பதாக மற்றும் ஒரு தகவலும் தெரிவிக்கிறது மழை வெள்ளம் காரணமாக 85,679 பேர் வடக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்துள்ளதாகவும், இவர்கள் 247 பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் நிலவிய மோசமான காலநிலையினால் 5,952 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், 30,249 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த நிவாரண அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு யாழ்ப்பாணம் மற்றும் மன்ன…

  2. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பிபிஸியின் நவம்பர் 27ஆம் திகதிய சிங்கள மற்றும் தமிழ் ஒலிபரப்புக்களை தணிக்கை செய்துள்ளது. அன்றைய நிகழ்ச்சியின் ஒரு அங்கமான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மாவீரர் தின உரையையும் டிபென்ஸ் வாச் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு குறித்த செய்திகளையும் நேயர்கள் கேட்க முடியாதவாறு தணிக்கை செய்துள்ளது. முன்னாள் வெளிநாட்டமைச்சர் மங்கள் சமரவீரவின் தலைமையிலான டிபென்ஸ் வாச் எதிர்த்தரப்பினருடைய கருத்துக்களையும், மற்றைய செய்திகளையும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர் தொடர்பான தகவல்களையும் வழங்கி வருகின்றது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அதிகாரிகளது இந்நடவடிக்கையானது, மக்களுடைய தகவல் அறிந்து கொ…

  3. கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மாவீரர் தினத்தை எவ்வித தடைகளுமின்றி அனுஷ்டித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 27ம்திகதி 60க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் தமிழீழத்தின் விடுதலைக்காக உயிநீர்த்த மாவீரர்களின் நினைவாக மாலை வேளையில் ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செய்தனர். இதனையடுத்து மாவீரர்களின் நினைவாக கவிதைகள்இ பாடல்களும் இடம்பெற்றதாக தெரிவித்தனர்.கடந்த வருடம் மாவீரர் தினத்தில் கைதிகள் மீது பல்வேறு அசௌகரியங்களை சிறை அதிகாரிகள் ஏற்படுத்தினர் ஆனால் இவ்வருடம் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாது எமது நிகழ்வை பார்வையிட்டதாகவும் அரசியல் கைதிகள் தெரிவித்தனர். நன்றி பதிவு

  4. தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழர் ஆதரவு உணர்வலை மிக வேகமாகப் பரவி வருகிறது எனவும், தமிழக முதலமைச்சாரால் கூட இனி அதைனை தடுத்து நிறுத்த முடியாது எனவும் மஹிந்தவுக்கு, ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் தமிழ் நாடடின் கிராமப் பகுதிகளில் வலுவாகவுள்ள கம்யூனிஸ்ட் கட்சி, யுத்த நிறுத்தம் குறித்து தீவிர அழுத்தத்தைக் கொடுத்து வருவதாகவும் தமிழ் நாடடில் இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ரணில் தெரிவித்துளளளார். மஹிந்த கடந்தவாரம் ரணிலுடன் தொலைபேசியில் உரையாடினார். இதன் போது தமிழ் நாட்டில் காணப்படும் உணர்வலைகள் குறித்து இருவரும் ஆராய்ந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் நாட்டிற்கான சமீபத்திய விஜயதின் போது ரணில் பயணம் செய்த வாகனம் அரசியல் கட்சிகளின் தொண்ர்களால்…

    • 3 replies
    • 1.6k views
  5. இந்தியாவின் தென்மாநிலங்களில் ஒன்றான கர்நாடகத்தின் தலைநகரான பெங்களுரில் "ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை" எனும் தலைப்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பெங்களூர் தமிழ்ச் சங்கம் நடத்திய இப் பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 தொடக்கம் இரவு 9:00 மணிவரை பெங்களூர் தமிழ்ச் சங்க அரங்கில் நடைபெற்றது. பெங்களூர் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் கலந்துக் கொண்டு, சிங்கள அரசின் காட்டுமிராண்டித்தனத்தையும், இனப்படுகொலைக்கு துணைபோகும் இந்திய அரசின் துரோகத்தையும் கண்டித்து கண்டன உரையாற்றினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் …

    • 0 replies
    • 610 views
  6. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டுசுட்டான் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியின் கட்டளைத் தளபதி கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு படையணியான ஆழ ஊடுருவும் படையணி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊடுருவி தாக்குதல்களை மேற்கொண்டு வருவது உண்டு. இந்நிலையில் கடந்த வாரம் ஒட்டுசுட்டான் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு சிறிலங்கா இராணுவத்தின் எட்டுப் பேர் கொண்ட அணி ஊடுருவிய போது விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அதன் கட்டளைத் தளபதி மேஜர் லலித் ஜெயசிங்க கொல்லப்பட்டார். ஜெயசிங்க தலைமையிலான அணியினர் பல தடவைகள் விட…

    • 5 replies
    • 2.1k views
  7. தமிழர்களின் மீது விமானம் மூலம் குண்டுகள் வீசி படுகொலைகள் செய்து வருகிற சிங்கள இனவெறி இலங்கை அரசை கண்டித்தும். இலங்கை அரசுக்கு ராணுவபயிற்சி,கருவிகள், பொருளாதாரஉதவிகள் என தொடர்ந்து உதவி செய்து தமிழர்களை கொன்றொழிக்க துணை போகும் இந்திய அரசைக் கண்டித்தும். இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பதை விளக்கியும் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில்தமிழகமெங்கும் நடைபெற்று வருகிற பிரச்சாரப்பயணம் 30-11-2008 ஞயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு திருப்பூர் வந்தடைந்தது. படங்கள், செய்தி உள்ளே http://www.tamilseythi.com/tamilnaadu/tami...2008-11-30.html

  8. சில பிரதேசங்களில் பரவலாக இவ் அதிர்வு உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கொக்குவில், நல்லூர், பருத்தித்துறை மற்றும் அதை அண்டிய பகுதிகளிலுள்ள வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சில செக்கன் நேரத்துக்குள் அதிர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியிலுள்ள மக்கள் அச்சத்துடனும் பீதியுடனும் காணப்படுகின்றனர். மேலதிக செய்திகள் விரைவில்..... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

    • 7 replies
    • 2.9k views
  9. கிழக்கு மாகாணத்தில் 33,000 இளம் விதவைகள் வாழ்ந்துவருவது தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சு நடத்திய கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக ‘ராவய’ பத்திரகை செய்தி வெளியிட்டுள்ளது. ‘கிழக்கின் உதயம்’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழேயே இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக தேசநிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே கூறியிருப்பதாக ராவயவில் குறிப்பிடப்பட்டுள்ளது .கிழக்கிலுள்ள 33,000 ஆயிரம் விதவைகளும் 30 வயதுக்குக் குறைந்தவர்கள் எனவும், இவர்களில் 95 வீதமானவர்களுக்குக் குழந்தைகள் இருப்பதாகவும் அமைச்சின் கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இளம் விதவைத் தாய்மாரில் 25 வீதமானவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், எஞ்சியவர்களுக்கு 1-4 குழந்தைகள் இருப்பதாகவும் அதி…

  10. வடக்கில் யுத்தத்தின்போது கைப்பற்றப்பட்ட இடங்களைத் தக்கவைத்துக் கொள்ள 50 ஆயிரம் பேர் கொண்ட விஷேட படையொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பொறுப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இராணுவத்திற்குப் புதிதாக 22,000 பேரும், கடற்படைக்கு 7,000 பேரும், விமானப்படைக்கு 5,000பேரும், பொலிஸ் படைக்கு 15,000 பேரும் உடனடியாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்கள் பயிற்சிபெற்று சேவையில் இணையும் வரை இப்போது பொறுப்பில் இருப்பவர்கள் கடமையாற்றுவர். இக்காலப் பகுதியில் தெற்கில் பாதுகாப்புக் கடமைகளை கையாள்வதற்கென 40,000 ஊர்காவற் படை வீரர்களின் சேவை மேலதிகமாகப் பெறப்படவுள்ளது. புதிய நியமனங்களுக்கான அனுமதி மற்றும் செலவீனம் தொடர்பான அங்…

    • 3 replies
    • 1.6k views
  11. நெருக்கடி மிகுந்த காலகட்டத்திற்குள் கிழக்கு வன்னி - வன்னியன். ஞாயிறு, 30 நவம்பர் 2008, 08:18 மணி தமிழீழம் [] யாவரும் எதிர் பார்த்துக் காத்திருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவீவர் நாள் கொள்கைப்பிரகடண உரை பலரது எதிர்பார்ப்புக்கும் மாறாக வித்தியாசமான கோணத்தில் அமைந்திருப்பதனையும் வன்னிப் போர் நெருக்கடி தொடர்பாக அவர்கள் பெரிய அளவிலான நெருக்கடிகளை சந்தித்திருக்கின்ற இந்த வேளையிலும் அவரது நிதானமான போக்கினை இவ்வுரை பறை சாற்றி நிற்கிறது. வன்னிப் போர் தொடர்பாக அவர் தனது உரையில் எதனையும் பெரிய அளவில் அலட்டிக் கொள்ள விரும்பவில்லை. நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணத்தில் ஏற்பட்ட பல சரிவுகள், திருப்பங்கள், பெரு…

  12. மாவீரர் தினத்தன்று கிளிநொச்சியில் சிங்கக் கொடியை ஏற்றுகின்ற அரசாங்கத்தின் கனவு கலைந்து போய்விட்டது. நவம்பர் 27 ஆம் திகதி கிளிநொச்சியில் சிங்கக்கொடியை ஏற்றுவதென்றும் அந்தச் செய்தியை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வானொலி, தொலைக்காட்சிகள் ஊடாக அறிவிப்பதென்றும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. நவம்பர் 26ஆம் திகதி கிளிநொச்சியைப் பிடித்து பிரபாகரனின் பிறந்தநாளில் அவருக்கு தோல்வியைப் பரிசாகக் கொடுப்பதும் மாவீரர் நாளில் அந்தச் செய்தியை அறிவித்து சிங்கக்கொடியேற்றி புலிகளுக்கு நெருக்கடி கொடுப்பதும் அரசாங்கத்தின் பல மாதத் திட்டமாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் காலைவாரி விட்டது இயற்கை என்று இப்போது பழியை அதன் மீது போட்டுத் தப…

  13. தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவரின் 2008ஆம் ஆண்டிற்கான மாவீரர் தின உரை குறித்து புதிய விளக்கங்களோடு சொல்லாத விடயங்களைச் சிலாகித்துச் சிலர் பேசத் தொடங்குவார்களென்று தொலைக் காட்சி ஊடகமொன்று ""வியாக்கியானம்'' செய் கிறது. பிரபாகரனின் மாவீரர் உரை, மக்களால் எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில், தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு வியாக்கியானங்களோ, பொழிப்புரையோ தேவையில்லை. அண்மைக் காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக விடுக்கும் செய்திகளை அடியொற்றியே ஆழமாகவும் விரிவாகவும் இம் மாவீரர் தின உரை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆயுதப் போராட்டத்தின் நியாயப்பாட்டினை வரலாற்றுப் படிநிலை மாற்றங்களூடாக விளக்கிய பிரபõகரன் சர்வதேச நாடுகள் விதித்த தடைகள் அகற்றப்பட வே…

    • 1 reply
    • 2.1k views
  14. அஸ்தமனத்தை நோக்கி ‘கிழக்கின் உதயம்’! [30 நவம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 11:10 மு.ப இலங்கை ‘விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து கிழக்கு மாகாணத்தை விடுவித்து அங்கு ஜனநாயக ஆட்சியை மலரச்செய்தல்’ - என்ற பெயரில் இலங்கை அரசு முன்னெடுத்த ‘கிழக்கின் உதயம்’ செயற்பாடு அஸ்தமனத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பது துலாம்பரமாகி வருகின்றது. ‘புலிப் பயங்கரவாதத்தைக்’ கிழக்கில் இருந்து விரட்டியடித்து விட்டோம் என்று கொழும்பு அரசு கொண்டாட, ‘ஒரிஜினல்’ பயங்கரவாதத்துக்குள் கிழக்கு மக்கள் இப்போதுதான் விழுந்திருக்கின்றார்கள். புலிகளை விரட்டி, ஜனநாயக ஆட்சி என்ற பெய ரில் ஒட்டுப்படைகளையும், துணைப்படைகளை யும் ஒன்று சேர்த்து, ஆயுதக்குழுவிடம் அதிகாரத்தை ஒப்படைத்தது மஹிந்தரின் அரசு. ‘கிழக்க…

  15. இலங்கையில் செயற்பட்டுவரும் மூன்று சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு பணிக்கப்படவிருப்பதாக அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்தார். நோர்வேயைத் தளமாகக் கொண்டியங்கும் நோர்வேஜியன் மக்கள் அமைப்பு (Norwegian Pepples’s Aid) போஃர்ட் (FORUT) நெதர்லாந்தைத் தளமாகக் கொண்டியங்கும் சோஆ (ZOA) ஆகிய சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களே இவ்வாறு பணிக்கப்படவிருப்பதாகத் தெரியவருகிறது. இந்த நிறுவனங்கள் வழங்கப்பட்ட ஒழுங்குமுறைக்கு அமையச் செயற்படவில்லையெனவும், சரியான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுக்கவில்லையெனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். “இந்த நிறுவனங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவை சரியான முறையில் செயற்பாடுகளை முன்னெடுக்கப்படவில்லையென்ப

  16. மலேசிய இளைஞர்கள் நடத்திய தாக்குதல் சம்பவமொன்றில் காயமடைந்த கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி பழையமாணவனான சிறிசாரங்கன் (2005 A/L கணிதப்பிரிவு) உயிரிழந்துள்ளார். மலேசியாவில் கல்விபயிலும் இந்திய மாணவர்களைக் குறிவைத்து மலேசிய இளைஞர்கள் குழுவொன்று கடந்த 26ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. இந்திய மாணவர்கள் என நினைத்து இலங்கை மாணவர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  17. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இவ்வருட மாவீரர் தின உரையில் வன்னிப் போர் தொடர்பாக பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணத்தில் ஏற்பட்ட பல சரிவுகள், திருப்பங்கள், பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், நாசச் செயல்கள், புயல்களாக எழுந்த நெருக்கடிகள் என்பனவற்றுடன் ஒப்பிடும் போது இன்றைய சவால்கள் எமக்கு பெரியனவல்ல என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் தினத்தன்று கிளிநொச்சியைக் கைப்பற்றி வெற்றிச் செய்தியை தென்னிலங்கைக்கு அரசு அறிவிக்கப் போவதாக சிலர் கூறினர். ஆனால் கிளிநொச்சியை நோக்கி படையினர் மும்முனைகளில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகள் யாவற்றையும் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தி புலிகள் முறியடித்தனர். குஞ்சுப் பரந்தன் நோக்கியும், புது முறிப்பு நோக்…

  18. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பனாகொட இராணுவ முகாமில் இருந்து படையினர் மூவர் தப்பியோடியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 1.1k views
  19. இந்தியாவின் வர்த்தக நகரங்களில் ஒன்றான மும்பாயில் கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலால் சிறிலங்காவின் உல்லாசப் பயணத்துறை பாதிக்கப்படலாம் என அந்நாட்டின் உல்லாச மற்றும் ஹோட்டல் துறைகளின் தலைவர் சிறிலால் மித்தபால தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 717 views
  20. தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சேதமடைந்த நிமலவ விநியோக கப்பல் கடந்த வாரம் ஏற்பட்ட பாதகமான காலநிலை காரணமாக மேலும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 893 views
  21. வடபகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட பாதகமான காலநிலையினால் சிறிலங்கா படைத்தரப்பு கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 720 views
  22. இன்று வன்னியில் இலங்கை விமானப்படையினர் நடத்திய வான் தாக்குதலில் சர்வதேசத்தில் தடைசெய்யப்பட்ட கொத்தணி குண்டுகள் பாவித்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொத்தணி (கிளெஸ்ரர்) ரக ஒரு குண்டில் இருந்து சுமார் 500, 600 வரையான குண்டுகள் வெடித்துச் சிதறும் தன்மை கொண்டது. இக்குண்டுகள் உடனடியான சேதத்தை மட்டுமல்ல அவை வெடிக்காத நிலையிலும் பின்னர் சேதத்தையும் அழிவுகளையும் ஏற்படுத்தக் கூடியது. சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகள் அண்மையில் இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலின் போது பாவித்தது குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/view.php?22OpDcc3n...9E2e2ILL3b37GYe

  23. மக்கள் குருதிக் கொடை திகதி: 29.11.2008 // தமிழீழம் // [வன்னியன்] களமுனைகளில் காயமடைகின்ற போராளிகளுக்காகவும், எறிகணைகள் விமானத் தாக்குதல்களால் காயமடைகின்ற பொது மக்களுக்காகவும் இன்று விசுவமடுவில் பல இளைஞர்கள், யுவதிகள் குருதிக்கொடை வழங்கியுள்ளனர். இன்று காலை தொடக்கம் இக்குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சங்கதி

  24. மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடம் கடற்கரைப் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை பெண்ணொருவரின் உடலம் கரையொதுங்கியுள்ளது. உடலத்தை அடையாளம் காண்பதற்காக சிறிலங்கா காவல்துறையினர் அதனை களுவாஞ்சிக்குடி மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். குறிப்பிட்ட பெண் படுகொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  25. வை.கோ அவர்களின் மாவீரர் நாள் உரை லண்டனில்

    • 2 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.