Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். பழைய பூங்கா உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை நிறுத்த நீதிமன்றம் கட்டளை 05 Dec, 2025 | 12:57 PM யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு யாழ்.மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை கட்டளையை பிறப்பித்துள்ளது. குறித்த கட்டளையை உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு அனுப்பி வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில், 12 பரப்பளவு காணியை கையகப்படுத்தி, அதில் உள்ளக விளையாட்டரங்கினை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சுமார் 370 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்க கடந்த 23ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வடக்கு மாகாண ஆளுநர…

  2. தையிட்டியில் பதற்றம் யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்றுப் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களைப் பொலிஸார் அகற்றியுள்ளனர். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும், திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி, அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு கோரியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் ஆர்ப்பாட்டம் பௌர்ணமி தினமான நேற்றும் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நடத்தப்பட்டபோதே ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களைப் பொலிஸார் அகற்றினர். இதையடுத்துப் பொலிஸாரின்…

    • 1 reply
    • 233 views
  3. நெடுந்தீவு கடலில் மிதந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் அழகுசாதன பொருட்கள்! adminDecember 5, 2025 நெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த 03ஆம் திகதி, நெடுந்தீவுக்கு தெற்கு கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கடலில் மிதந்து வந்த 09 பொதிகளை கடற்படையினர் மீட்டு , அவற்றை சோதனையிட்டனர். சுமார் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் (160,000) வெளிநாட்டு சிகரெட்டுகள், 150 அழகுசாதன கிரீம்கள், லோஷன்கள் மற்றும் 10 கைக்கடிகாரங்கள் என்பன காணப்பட்டுள்ளன. கடத்தல்காரர்கள் , கடற்படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது , கடற்படை படகினை கண்ணுற்று , பொதிகள…

  4. இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்! adminDecember 5, 2025 இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்! யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் துணைத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். சூறாவளி, வெள்ளப்பெருக்கு காரணமாக வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக குறித்த சந்திப்பு நடைபெற்றதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தா…

  5. Published By: Vishnu 04 Dec, 2025 | 10:35 PM சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவின் பிரதிநிதிகள் குழு மேற்கொண்டுள்ள அவதானிப்பு சுற்றுப் பயணத்தின் நிமித்தம் பெலவத்த மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இந்த பிரதிநிதிகள் குழுவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசப் பிரிவின் தகவல் மத்தியநிலைய பிரதி பணிப்பாளர் நாயகம் கேங் ஷுவாய், பீஜிங் நகராட்சி குழு கட்சிப் பாடசாலையின் உதவிப் பேராசிரியர் ஜியாங் வென் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தகவல் மத்தியநிலையத்தின் பணிப்பாளர் ஷெங் குபிங் ஆகியோரும் அடங்குகின்றனர். இந்தப் பிரதிநிதிகள் முதலில் மஹரகமவில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கொழும்பு மாவட்ட அலுவலகத்திற்கு விஜயம் செய்து, தற்போது முகம்கொடுத்து வ…

  6. எம்மீது ஒரு பலத்த அடி விழுந்திருக்கிறது ; ஆயினும் நாம் வீழ்ந்துவிடவில்லை - ஹரிணி அமரசூரிய 05 Dec, 2025 | 10:37 AM அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண் சரிவுகளால் பேரழிவு ஏற்பட்ட போதிலும், மக்களின் அசைக்க முடியாத மன வலிமையினாலும் ஒற்றுமையினாலும் இலங்கை வேகமாக மீண்டு வருகின்றது. எம்மீது ஒரு பலத்த அடி விழுந்திருக்கிறது, ஆயினும் நாம் வீழ்ந்துவிடவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு ஐ.சி.டி (ICT) ரத்னதீப ஹோட்டலில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற, வருகை தந்திருந்த NASSCOM நிர்வாகக் குழு மற்றும் SLASSCOM தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் உரையாற்றும் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்கள் வியக்கத்…

  7. நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு! ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ நிதியானது வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து சுமார் 700 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். புள்ளிவிவரங்களை அறிவித்த அவர், இலங்கை வங்கியின் கீழ் இயங்கும் கணக்கின் மூலம் இதுவரை 30,470க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலதிகமாக, இலங்கை மத்திய வங்கியில் பராமரிக்கப்படும் கணக்குகளில் வெளிநாட்டு நாணய வைப்புத்தொகை கிட்டத்தட்ட 61 மில்லியன் ரூபா நிதிக்கு பங்களித்துள்ளது. 33 நாடுகளிலிருந்து பணம் அன…

  8. ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை Dec 4, 2025 - 06:15 PM ‘டித்வா’ (Ditwa) புயலினால் ஏற்பட்ட பாரிய சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 300 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயற்குழுவின் வழிகாட்டலின் கீழ் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட், இந்தத் தீர்மானத்தின் ஊடாக மில்லியன் கணக்கான இலங்கையர்கள் நேசிக்கும் ஒரு விளையாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனமாக இலங்கை கிரிக்கெட் தனது பொறுப்பை பிரதிபலிக்கிறது எனத் தெ…

  9. படக்குறிப்பு,தமக்கு இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை என சாந்தகுமார் கூறுகிறார் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: இந்த கட்டுரையில் உள்ள செய்திகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்) இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக காணாமல் போன பலரது சடலங்கள் இன்றும் மண்ணுக்குள் புதையுண்டு இருக்கும் நிலையில், அவற்றை மீட்க முடியாத சூழலை உறவினர்கள் எதிர்கொண்டுள்ளனர். அப்படி மண்சரிவு ஏற்பட்ட பதுளை பகுதியில் என்ன நிலவரம் என்பதை அறிய பிபிசி தமிழ் களத்திற்கு டிசம்பர் 3ஆம் தேதி சென்றது. அங்கு பிபிசி நேரில் கண்டவை இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பதுளை பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு பதிவான பகுதிகளுக்கு பிபிசி…

  10. Published By: Digital Desk 3 04 Dec, 2025 | 04:46 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், ஜப்பான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட அவசர நிவாரணப் பொருட்களை, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மூலம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு (DMC) உத்தியோகபூர்வமாக ஒப்படைத்துள்ளது. நேற்று (03) நாட்டிற்கு வந்தடைந்த இந்த நிவாரண உதவி, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் Akio ISOMATA மற்றும் JICA இலங்கை தலைமை பிரதிநிதி Kenji KURONUMA ஆகியோரால் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வு) ஆகியோரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. அனர்த…

  11. கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை குறித்து தரப்பினர் விளக்கம்! நல்லூர் பிரதேச சபை – கோப்பாய் பிரதேச சபை எல்லையில் வெள்ள வாய்க்காலுக்குள் மண் அணை போடப்பட்டது தொடர்பிலோ , மதகுக்குள் வெள்ள நீரை விட , தற்காலிக வாய்க்கால் வெட்டப்பட்டமை தொடர்பில்லோ கோப்பாய் பிரதேச சபைக்கு எந்த தகவலும் தெரியாது என கோப்பாய் பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்குள் உள்ள வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட வெள்ளநீர் வாய்க்காலை மண் அணை போட்டு தடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் , ஆராய்வதற்கு சம்பவ இடத்திற்கு இன்றைய தினம் கோப்பாய் தவிசாளர் சென்றிருந்த போது , வெள்ளம் வடிய வாய்க்கால் அமைத்த தரப்பினரும் , அதனை தடுத்த தரப்பினரு…

  12. Published By: Digital Desk 1 04 Dec, 2025 | 02:47 PM சேதமடைந்துள்ள மாவிலாறு அணைக்கட்டை முழுமையாக புனரமைக்க, வடகீழ் பருவ பெயர்ச்சி மழை முடியும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், மகாவலி கங்கை மூலம் வந்து சேர்ந்த வெள்ள நீர் ஏற்படுத்திய தாக்கத்தினால், மாவிலாறு அணைக்கட்டு கடந்த 30ஆம் திகதி உடைப்பெடுத்தது மாவிலாறு அணைக்கட்டுப் பகுதிக்கு செல்லும் வீதி இப்போதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ளம் வடிந்த பின்பே சேதமடைந்த அணைக்கட்டு பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்ய முடியும். அதன் பின்னரே முழுமையான சேதத்தை மதிப்பிடப்பட முடியும். அதேநேரம், சேருநுவர வெள்ளப் பாதுகாப்பு அணையி…

  13. பயிர் சேதங்கள் குறித்து அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் Dec 4, 2025 - 03:35 PM 'டித்வா' புயலின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள விவசாயிகளின் பயிர் சேதங்கள் குறித்து அறிவிப்பதற்கு விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை பல வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய, 1918 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம் விவசாயிகள் பயிர் சேதங்கள் குறித்து மிக இலகுவாக அறிவிக்க முடியும். 'டித்வா' புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு சேதம் ஏற்பட்டது. அதற்கமைய, குறித்த பயிர்களுக்கான நட்டஈட்டை வழங்கும் எதிர்பார்ப்புடன் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தற்போது பயிர் சேதங்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க ஆரம்பித்த…

  14. அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு Dec 4, 2025 - 05:24 PM வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (4) பி.ப. 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்ற…

  15. வரலாறு, சித்திரக்கலை பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை – பிரதமர்! வரலாறு மற்றும் சித்திரக்கலை ஆகிய பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு மற்றும் கலைப் படைப்புகள் குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் விளக்கமளித்த பிரதமர், யாழ்ப்பாண மாவட்டத்தின் எழுவைதீவில் இரண்டு பாடசாலைகள் உள்ளன. 1999ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பாடசாலைகள் பரீட்சை நிலையங்களாகப் பயன்படுத்தப்படவில்லை. இந்தப் பாடசாலைகளின் மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்காகக…

  16. நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு! நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (03) பிற்பகல் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, 350 பேர் காணாமல் போயுள்ளனர். 448,817 குடும்பங்களைச் சேர்ந்த 1,586,329 பேர் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமான இறப்புகள் பதிவாகியுள்ளன. இதே நேரத்தில், நுவரெலியா மாவட்டத்தில் 89 இறப்புகளும், பதுளை மாவட்டத்தில் 83 இறப்புகளும், குருநாகலையில் 53 இறப்புகளும், கேகாலை மற்றும் புத்தளம் மாவட்டங்கள…

  17. வெள்ள வாய்க்காலுக்குள் போடப்பட்ட மண் அணையை அகற்ற பணிப்பு adminDecember 3, 2025 வெள்ளநீரை மறித்து பிரதேசங்கள் இடையில் பிரச்சனையை ஏற்படுத்தும் தூர நோக்கற்ற அரசியல்வாதிகளின் செயற்பாடு அருவருக்கத்தக்கது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் , நல்லூர் பிரதேச சபை பகுதிக்குள் இருந்து கோப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் வெள்ள நீர் வர கூடாது என பருத்தித்துறை வீதியில் , கட்டைப்பிராய் பகுதியில் உள்ள கோப்பாய் பிரதேச சபை எல்லையில் வெள்ள வாய்க்காலுக்குள் மண் அணை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்தொழில் அமைச்சர் , அங்கிருந்து உரிய தரப்பினர்களுடன் தொலைபேசியில் தொடர்பு …

  18. பேரிடரால் வடக்கில் சேதமடைந்த வீதிகள் – துரித கெதியில் சீரமைப்பு பணிகள்! adminDecember 4, 2025 பேரிடரால் வடக்கில் சேதமடைந்த வீதிகள் – துரித கெதியில் சீரமைப்பு பணிகள் பேரிடர் காரணமாகப் வடமாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளதாக வட மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் பொறியியலாளர் அபிராமி வித்யாபரன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட வீதிகளைப் பார்வையிட்ட வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாகத் மீட்டெடுக்கும் வகையில் சேதமடைந்த வீதிகளைத் தற்காலிகமாகவேனும் உடனடியாகச் சீரமை…

  19. அண்மைய பேரழிவையடுத்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப புதியதொரு திட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அந்தவகையில் சர்வதேச நாணய நிதியமுடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறும் புதியதொரு ஒப்பந்தத்துக்குச் செல்லுமாறும் கூறியுள்ளார். Tamilmirror Online || ஐ.எம்.எஃப்புடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுங்கள்: சஜித்

  20. 03 Dec, 2025 | 03:44 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் கடந்த வாரம் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் மலையகத்தின் பெரும்பாலான பகுதிகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் ஏனைய மாவட்டங்களை விட அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. நேற்று மாலை வரை கண்டியில் 88 உயிரிழப்புக்களும், பதுளையில் 83, நுவரெலியாவில் 75 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன் அது மாத்திரமின்றி கண்டியில் 150 பேரும், நுவரெலியாவில் 63 பேரும், பதுளையில் 48 பேரும் காணாமல் போயுள்ளனர். இந்த மாவட்டங்களில் மண்சரிவு ஏற்பட்ட சில பகுதிகளில் மீட்பு பணிகளை முன்னெடுப்பதில் கூட கடும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக மீட்பு பண…

  21. முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு கோட்டை நீதவானால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஒன்று தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசாங்க வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 9 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிடியாணை | Virakesari.lk

  22. 03 Dec, 2025 | 01:20 PM வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும், முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்ககூடாது. உண்மை வெளிவந்தால்தான் நிவாரணப்பணிகளும் சரியானமுறையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன. இலங்கை…

      • Downvote
      • Haha
      • Like
      • Thanks
    • 43 replies
    • 2.3k views
  23. 03 Dec, 2025 | 03:14 PM மன்னார் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை (03) முதல் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாடு இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த ஆடு, மாடுகளை இறைச்சியாக்கி மன்னார் மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மிருக வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாகவும் இன்று புதன் கிழமை முதல் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெள…

  24. 03 Dec, 2025 | 03:43 PM இலங்கையில் டித்வா புயலால் ஏற்பட்ட மாபெரும் அழிவைத் தொடர்ந்து, இலங்கை அரசின் அவசர உதவி கோரிக்கைக்கு இணங்க பாகிஸ்தான் அரசு மனிதாபிமான நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் முகம்மது ஷஹ்பாஸ் ஷரீப்பின் சிறப்பு உத்தரவின் பேரில், இன்று அதிகாலை பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்பு தேடல் மற்றும் மீட்பு குழு இலங்கைக்காக அனுப்பப்பட்டது. பாகிஸ்தான் விமானப்படையின் C-130 விமானம் மூலமாக, 47 பேர் கொண்ட சிறப்பு அணி மற்றும் 6.5 தொன் அவசியமான மீட்பு உபகரணங்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில், கூட்டாட்சி அமைச்சர் டாக்டர் தரிக் பசல் சௌத்ரி, பாகிஸ்தான் தேசிய பே…

  25. 03 Dec, 2025 | 05:00 PM 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி மணிக்கு இலங்கை வானிலை தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா முக்கிய விழிப்பூட்டும் முன்னறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நாளை 04.12.2025 அன்று வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு , மத்திய மாகாணங்களில் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எதிர்வரும் 05.12.2025 அன்று கிழக்கு மாகாணத்திற்கு குறிப்பாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. அன்றைய தினம்( 05.12.2025) வடக்கு, மத்திய மற்றும் வட …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.