ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
இலங்கைத் தமிழர்கள் தாக்கப்படுவதை நிரந்தரமாக நிறுத்திட வேண்டும் என்ற அனைத்துக்கட்சி கோரிக்கைகளை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்றக் கோரி வரும் 25ஆம் தேதி ராமேஸ்வரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்ற பொதுச்செயலாளர் மீணாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார். தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு அங்கமான ஆசிரியப் பெருமக்களின் சார்பாக அனைத்துக்கட்சியின் அதே கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு மத்திய அரசை வற்புறுத்தி வரும் 25ஆம் தேதி காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை ராமேஸ்வரம் கடற்கரையில் என் தலைமையில் 5 ஆயிரம் ஆசிரியப் பெருமக்கள் எழுச்சியோடு கலந்து கொள்ளும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.…
-
- 0 replies
- 637 views
-
-
ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர்: வைகோ அறிவிப்பு [புதன்கிழமை, 15 ஒக்ரோபர் 2008, 11:22 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] தமிழ்நாடு அரசாங்கம் கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்துக்கு அமைய தமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று புதன்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் ஈழத்தமிழர்களைக் கொன்று ஒழிக்கத் திட்டமிட்டு, சிங்கள இனவாத அரசு தொடர்ந்து இனப்படுகொலை நடத்துவதைத் தெரிந்துகொண்டே இந்திய அரசு ஆயுத உதவி செய்து வந்து உள்ளது. எனவே, இது அண்டை நாட்டுக்கு நல்லெண்ண அடிப்படையில் செய்யப்பட்ட…
-
- 14 replies
- 1.9k views
-
-
இலங்கைத் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவின் ராணுவ உதவிகளை நிறுத்தக் கோரியும் நடிகர் நடிகைகள் சார்பில் வரும் நவம்பர் 1-ம் தேதி தனி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளதாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். ராமேஸ்வரம் செல்ல நடிகர் நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,நவம்பர் 1-ம் திகதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளுவதாக அறிவித்துள்ளனர்.ராமேஸ்வரத்த
-
- 0 replies
- 925 views
-
-
மாவிலாறு தொடங்கி கிழக்கு மாகாணத்தை மீட்கும் வரை போரைத் தொடர்ந்து நடத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வடக்கை மீட்கும் வரை யுத்தத்தை நிறுத்த மாட்டார் என ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷ ஒருபோதும் நாட்டை காட்டிகொடுக்க மாட்டார் என்பது தமது கடுமையான நம்பிக்கை எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 1987ல் இந்தியா மேற்கொண்ட தலையீட்டுக்கு அபராதமாக ராஜீவ் காந்தியின் மரணம் ஏற்பட்டது மீண்டும் தலையிட்டால் அத்தகைய இழப்பைச் சந்திக்க நேரிடும்: இந்தியா என்பது தனியான நாடு, அதேபோல் இலங்கையும் ஒரு தனியான ஒரு நாடு எனவும் இலங்கையின் பிரச்சினையில் தல…
-
- 0 replies
- 870 views
-
-
-
முகமாலையில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 15 படையினர் பலி 40 பேர் காயம் [வியாழக்கிழமை, 16 ஒக்ரோபர் 2008, 06:25 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வடபோர்முனையான யாழ். முகமாலையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். முகமாலை முன்னரங்கப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 6:30 நிமிடத்துக்கு சிறிலங்கா படையினர் செறிவான எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் டாங்கி சூட்டாதரவுடகளுடன் பெருமெடுப்பில் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் இன்று முற்பகல் 11:30 நிமிடம் வரை தாக்குதல் நடத்தி படையினரி…
-
- 0 replies
- 998 views
-
-
அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் நான்கு விவசாயிகள் சுட்டுப்படுகொலை [வியாழக்கிழமை, 16 ஒக்ரோபர் 2008, 06:08 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் வேளாண்மைக்கு சென்றுகொண்டிருந்த விவசாயிகளான 2 முஸ்லிம்களும் 2 தமிழர்களும் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். திருக்கோவில் பகுதியில் உள்ள வட்டமடுப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 6:30 நிமிடமளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வட்டமடுப் பகுதியில் வேளாண்மை செய்வதற்கு இரண்டு முஸ்லிம்களும் இரண்டு தமிழர்களும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமில் பதிவுசெய்துவிட்டு அப்பகுதிக்குச் சென்றனர். அவர்கள் அங்கு சென்றுகொண்டிருந்த ப…
-
- 0 replies
- 614 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக இலங்கை அரசாங்கம் முன்வைத்த குற்றச்சாட்டை ஐரோப்பிய ஒன்றியனத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ரொபேர்ட் இவான்ஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லோர்ட் மலொக் பிரவுணைச் சந்தித்து தன்மீது இலங்கை அரசாங்கம் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பாகவும், அண்மையில் பிரித்தானிய தமிழ் அமைப்பொன்று ஏற்பாடு செய்திருந்த கருந்தரங்கில் கலந்துகொண்டமை பற்றி முன்வைக்கப்பட்ட தவறான கருத்துக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருப்பதாக அவர் கூறியுள்ளார். எனினும், இந்தக் கருத்தரங்கில் மலொக் பிரவுணும் கலந்துகொண்டிருந்தார். ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர் இவான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இ…
-
- 0 replies
- 1.3k views
-
-
நெஸ்பிரே,அங்கர் ,கொட்மலே,மெலிபன் ஆகிய பால் உற்பத்தியில் மெலமைன் பதார்த்தம் கலக்கப்பட இல்லை-நுகர்வோர் விவகார அமைச்சு வீரகேசரி இணையம் 10/16/2008 2:19:48 PM - நெஸ்பிரே,அங்கர்,கொட்மலே மற்றும் மெலிபன் ஆகிய பால் உற்பத்தி பொருட்களில் மெலமைன் பதார்த்தம் கலக்கப்பட இல்லை என உறுதி செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல்ல குணவர்தன தெரிவித்துள்ளார்.
-
- 0 replies
- 771 views
-
-
கனடாவில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நான்கு நாடுகள் பங்குபற்றும் 20 ஓவர்கள் அடங்கிய துடுப்பாட்டப் போட்டியில் சிறிலங்கா அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று திங்கட்கிழமை மூன்றாவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 15 replies
- 2.5k views
-
-
கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்துக்குச் சென்ற கருணாகுழு உறுப்பினர்கள் ஆலய நிர்வாகத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. தற்பொழுது கல்முனை - பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய தீமிதிப்பு வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. வருடந்தோறும் சுமார் 2லட்சம் மக்கள் இங்கு கலந்து கொள்வது வழக்கம். நேற்றுமாலை இவ்வாலயத்துக்கு தனது சகாக்களுடன் சென்ற கருணாகுழு உறுப்பினரான கீதன் என்பவர் ஆலய நிர்வாகிகளை ஆயுத முனையில் மிரட்டியுள்ளார். அதாவது ஆலய உண்டியலில் சேர்ந்த பணம் முழுவதையும் மக்களால் செலுத்தப்பட்டுவருகின்ற காணிக்கைகளையும் தம்மிடம் ஒப்படைக்கும்படியும். இல்லாவிட்டால் அனைவரையும் சுட்டுக் கொ…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 1 லட்சம் மாணவர்கள் ஆர்பாட்டம். இலங்கை அரசு நிகழ்த்தி வரும் தமிழின படுகொலையை கண்டித்து, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்று வகுப்புகளை புறக்கணித்து அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, திருச்சி உட்பட மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்பாவி தமிழர்களை படுகொலை செய்யும் இலங்கை ராணுவத்தின் கொடூர செயல் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை எற்படுத்தியுள்ளது. சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்தி ராஜபக்சேவை கண்டித்து முழுக்கங்களை ஊழுப்பினர். மத்தி…
-
- 11 replies
- 1.8k views
-
-
சென்ற நக்கீரன் இதழில் வெளிவந்த பால் தாக்கரேவின் சிறப்பு பேட்டி.....
-
- 5 replies
- 2.8k views
-
-
கொழும்புக்கும் புதுடில்லிக்கும் தமிழகம் வைத்துள்ள ‘செக் - மேட்’! [16 ஒக்டோபர் 2008, வியாழக்கிழமை 10:20 மு.ப இலங்கை] தமிழகத்தில் நேற்றுமுன்தினம் தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் எடுத்த அதிரடி முடிவு இரு தரப்புகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என்பது நிச்சயம். ஒன்று - இந்திய மத்திய அரசு. மற்றையது - எதிர்பார்க்கப்பட்டபடி கொழும்பு அரசு. வன்னியின் மீது தான் தொடுத்துள்ள பெரும் போருக்கும் - இராணுவ நடவடிக்கைக்கும் - இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான தனது செயற்பாடுகளுக்கும் - புதுடில்லியின் முழு ஆதரவு உள்ளது என்று கொழும்பு அரசுத் தலைமை இனிமேல் - முன்னைய மாதிரி அவ்வப்போது - ‘கயிறு திரிக்க’ முடியாது. அத்தகைய கயிறு திரித்தலுக்கு முழ…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐ.நா.வின் இரண்டாவது உணவுப்பொருள் வாகனத் தொடரணி இன்று வன்னி செல்கிறது வீரகேசரி நாளேடு 10/16/2008 8:46:16 AM - ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பொருட்கள் அடங்கிய 50 லொறிகள் இன்று காலை வன்னியிலுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்லவுள்ளதாக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தெரிவித்தது. அரசாங்கம் தெரிவித்துள்ள புதிய விநியோகப் பாதையின் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா.வின் குழுவொன்று நேற்று ஆராய்ந்ததாக ஐ.நா.வின் இலங்கைக்கான பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்தார். உணவுப் பொருட்கள் அடங்கிய ஐ.நா.வின் முதலாவது வாகனத் தொடரணி கடந்த 2ஆம் திகதி வன்னிக்கு அனுப்பப்பட்டது. இந்த வாகனத் தொடரணி ஓமந்தை புளியங்குளம் மாங்குளத்தினூடாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளுக்கு …
-
- 5 replies
- 961 views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக வரும் 21ம் தேதி சென்னையில் பிரமாண்ட மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் மீது ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கைக்கு ஆயுத உதவியை நிறுத்த வேண்டும். இதை 2 வாரங்களில் செய்யாவிட்டால் தமிழக எம்.பிக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை மேலும் வலியுறுத்தும் வகையில் மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடத்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது தமிழ் இன ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
வீரகேசரி நாளேடு - தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கமைவாக இங்கு முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்குத் தாம் தயாராகவில்லை என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலேனும் இலங்கையின் உள்விவகாரத்தில் தலையீடு செய்யும் என தாம் கருதவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு, நாரஹென்பிட்டியிலுள்ள தகவல் திணைக்கள வளாகத்தில் அமைந்துள்ள தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன பதிலளிக்கையில் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: தமிழ்நாட்டில்…
-
- 1 reply
- 975 views
-
-
இந்தியாவிக்கு, தமிழ்நாட்டினால் விதிக்கப்பட்டிருக்கும் இறுதி காலக்கேடு. இலங்கையில் இரண்டுவார காலத்துக்குள் போர் நிறுத்தத்தை கொண்டு வரா விட்டால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க தமிழகத்தில் இன்று கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு பி பி சி தமிழோசையிடம் பேசிய தமிழக முதல்வர் மு. கருணாநிதி, இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும், இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும், போன்ற தீர்மானங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார். இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை முன்வைத்த…
-
- 2 replies
- 1.7k views
-
-
India respects Sovereign Nations- ruling congress informs TN (By Walter Jayawardhana) Rejecting the request of Tamil Nadu Chief Minister Muthuvel Karunanidhi to impose a ceasefire on the neighboring island nation of Sri Lanka New Delhi's ruling Congress Party said India cannot impose her power beyond her borders on other sovereign nations. On the previous day, in a political step that virtually means another lease of political life for the main suspects of the assassination of Rajiv Gandhi-namely Velupillai Prabhakaran, the leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and his intelligence chief Pottu Amman, the Chief Minister of Tamil Nadu Muthuvel…
-
- 2 replies
- 2.2k views
-
-
தமிழக கட்சிகளின் அழுத்தத்தினால் எமக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை: சிறிலங்கா அமைச்சர் [வியாழக்கிழமை, 16 ஒக்ரோபர் 2008, 12:10 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] இந்திய மத்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள அழுத்தம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று அந்நாட்டு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர், தமிழக அரசியல் கட்சிகள் நடத்திய அனைத்து கட்சிகளின் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சிறிலங்கா படைத்தரப்பின் போர் நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று கூறினார். விடுதலைப் புலிகள் போரில் தோல்வியடைந்து வரு…
-
- 3 replies
- 1.1k views
-
-
கன்பராவில் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு கிடைத்த மரியாதை-காணொளி
-
- 11 replies
- 3.7k views
-
-
பிரித்தானியா பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறிலங்கா பற்றிய விவாதம் (ஆங்கிலத்தில்) Debate in British Parliament on Sri Lanka 12.59 pm Joan Ryan (Enfield, North) (Lab): I am pleased to welcome my hon. Friend the Minister to his new responsibilities; I wish him well in his post. There is increasing recognition of the urgency of the humanitarian situation in Sri Lanka, so I am grateful for the opportunity to raise the subject at this crucial time. Concern about the situation is shared by hon. Members on both sides of the House, as the attendance at today’s debate shows. It is also deeply felt among the large number of Sri Lankans who have settled in the UK. In Londo…
-
- 0 replies
- 994 views
-
-
பிரித்தானியா பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறிலங்கா பற்றிய விவாதம் (ஆங்கிலத்தில்) Debate in British Parliament on Sri Lanka 12.59 pm Joan Ryan (Enfield, North) (Lab): I am pleased to welcome my hon. Friend the Minister to his new responsibilities; I wish him well in his post. There is increasing recognition of the urgency of the humanitarian situation in Sri Lanka, so I am grateful for the opportunity to raise the subject at this crucial time. Concern about the situation is shared by hon. Members on both sides of the House, as the attendance at today’s debate shows. It is also deeply felt among the large number of Sri Lankans who have settled in the UK. In Londo…
-
- 0 replies
- 632 views
-
-
திங்கள்(13.10.2008) மாலை 4 மணியளவில் கோவை மாவட்டத்தில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் அனைவரும் ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களை போன்று வேடமிட்டு சிறப்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். - கிழக்கு தமிழ் செய்தி நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து
-
- 1 reply
- 938 views
-
-
'இலங்கையில் தற்போது நடக்கும் யுத்தம் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு எதிரானதே. எனவே, அந்தப் போர் நிறுத்தப்படுவது விடுதலைப்புலிகளைக் காப்பாற்றுவதற்கான ஒரு முயற்சியே' சென்னையில் நேற்று முன்தினம இடம் பெற்ற அமைத்துக் கட்சி மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே ஜெயா இப்படித் தெரிவித்திருக்கின்றார். மேலும் : இந்திய மத்திய அரசும் இலங்கை இனப்பிரச்சிiயில் தலையிடாதுவிடில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்று அனைத்துக் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வெறும் நாடகமே. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தான் விட்ட தவறுகளை மறைக்கத்தான் முதல்வர் கருணாநிதி இப்படி ஒரு கூட்டத்தைக் கூட்டினார். தற்போது இலங்க…
-
- 3 replies
- 1.8k views
-