Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சித்தவர் தங்கியிருந்த வீடு முற்றுகை அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவை கொலை செய்ய முயற்சித்த தற்கொலைதாரி தங்கியிருந்ததாகக் கூறப்படும் வெள்ளவத்தைப் பிரதேசத்தின் வீடு ஒன்று இன்று காவல்துறையினரால் சோதனையிடப்பட்டது. இதன்போது, அந்த வீட்டின் உரிமையாளரான சிங்கள குடும்பத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த வீட்டில் கொழும்பு அப்பலோ வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக எனக்கூறி, இரண்டு பேர் வாடகைக்கு வந்து தங்கியிருந்தனர். அவர்கள் சென்ற பின்னர் மற்றும் ஒரு தாயும் மகளும் இந்த வீட்டை வாடகைக்கு அமர்த்தியிருந்தனர். இவர்களில் தா…

  2. வீரகேசரி நாளேடு - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக ஜே.வி.பி. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கருணா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமை தனது அடிப்படை உரிமையினை மீறும் செயலாகும் என தெரிவித்து ஜே.வி.பி. யைச் சேர்ந்த ஜெயசிங்க ஆராச்சிகே என்பவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான பூர்வாங்க விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது மனுவினை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றம் அறிவித்தது. பதவி விலகிய ஜே.வி.பி. யின் பாராளுமன்ற உறுப்பின…

  3. கனடாவில் நேற்று சனிக்கிழமை தொடங்கியுள்ள துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்றும் சிறிலங்கா குழுவினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 11 replies
    • 1.7k views
  4. ராமேஸ்வரத்தில் நின்று கொண்டு குரல் கொடுத்தால் பக்கத்திலிருக்கிற இலங்கைக்கு கேட்கும். தனி மனிதன் குரல் கொடுத்தால் இது சாத்தியமில்லை. ஆனால், ஒட்டு மொத்த திரையுலகமே திரண்டு நின்று குரல் கொடுத்தால்? இலங்கையில் நடைபெற்று வரும் இனப் படுகொலைக்கு பலமுறை கண்டனம் தெரிவித்திருக்கிறது தமிழ் திரையுலகம். கருப்பு பேட்ஜ் அணிந்து கண்ணீர் வடித்திருக்கிறது. காது மடல்களே கிழிந்து போகிற அளவுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறது. எதற்கும் அசைந்து கொடுக்காத இலங்கை அரசின் மீது, தனது கோபத்தை காட்ட, இதோ... ராமேஸ்வரத்திற்கே செல்ல தீர்மானித்திருக்கிறது திரையுலகம். ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு கொடுத்து வரும் ராணுவ உதவிகளை மத்திய அரசு நிறுத்த வேண்டும். உணவு, உடை மற்றும் மருத்துவ…

  5. கொழும்பு: விடுதலைப் புலிகளை அழிக்கும் இலங்கை போருக்கு இந்தியா அதிகபட்ச ஆதரவை அளித்து வருவதாக இலங்கை அதிபரின் சகோதரரும், மூத்த ஆலோசகருமான பாசில் ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் குதிக்கத் தயாராகி வரும் தமிழ் மக்களுக்கு பாசில் ராஜபக்ஷேவின் இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இலங்கையின் பிரபல நாளிதழுக்கு பாசில் ராஜபக்ஷே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் கவலையை இலங்கை அரசு பரிசீலிக்கும் என்று அதிபர் மஹிந்தா ராஜபக்சே உறுதி அளித்துள்ளார். அவரை சமீபத்தில் சந்தித்த இலங்கைக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத்திடம் உறுதி அளிக்கப்பட்டது. புலிகளை அழிக்…

  6. அத்தியாவசிய மருந்துப் பொருட்களை அனுப்ப சிறிலங்கா படைத்தரப்பு தொடர்ந்தும் அனுமதி மறுப்பு [திங்கட்கிழமை, 13 ஒக்ரோபர் 2008, 11:02 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உடனடியாக அத்தியாவசிய மருந்து பொருட்களை அனுப்புவதற்கு சிறிலங்கா படைத்தரப்பு தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகின்றது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக குறைந்தளவிலான மருந்துப் பொருட்கள் அனுப்பிவைகப்பட்ட போதும் அவை போதுமானவை அல்ல என்று கொழும்பில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனிடையே, மருந்துப் பொருட்களை அனுப்பி வைப்பது தொடர்பில் சிறிலங்கா சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளுடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநித…

    • 0 replies
    • 564 views
  7. தமிழகம் முழுவதும் பெரியார் திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்திய அரசே சிங்கள அரசுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளாய்! இத் தொகையை சிங்கள அரசு ஆயுதம் வாங்குவதற்குத்தான் பயன்படுத்தும் என்று தெரிந்தே, நிதி கொடுத்தாய்! ஆனால், பொருளாதார முற்றுகையில் சிக்கித் தவிர்க்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு வழங்கத் திரட்டப்பட்ட உணவு,உடை,மருந்துகளை செஞ்சிலுவைச் சங்கத்தின் வழியாக அனுப்பத் தடை போட்டாய்! சிங்களப் படைக்குப் போர்க்கப்பல்,நவீனப்படைக்கரு

    • 2 replies
    • 1.4k views
  8. திருகோணமலை உவர்மலையில் உள்ள தமிழ்ர்களை சிவிலியன்களை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருக

  9. சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதியாகும் மன்சி பிஸ்கட் எட்னா சொக்லட்டில் விசப் பொருட்கள். சிவிஸ் அரசின் சுகாதரத் துறையால் சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மன்ச்சி பவ் என்னும் பிஸ்கட்டைப் பரிசோதித்த போது அதில் மெலமையின் என்னும் நச்சுப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்படுள்ளது.இந்த நச்சுப்பொருள் உள்ள பாலை உண்டதால் அண்மையில் சீனாவில் பல குழந்தைகள் இறந்துள்ளார்கள்.ஆகவே புலத் தமிழர்கள் சிறிலங்காவில் இருந்து வரும் பிஸ்கட்டுக்கள் சொக்கிளட்டுக்களை தவிர்க்கவும். Swiss find melamine in Thai, Sri Lankan biscuits Last updated: Monday, October 13, 2008 6:45 AM EDT GENEVA - Swiss authorities say they have found high concentrations of melamine in biscuit…

  10. புலிகளை எதிர்த்துப் போரிட போதுமான நிதி உள்ளது: சிறிலங்கா [திங்கட்கிழமை, 13 ஒக்ரோபர் 2008, 07:47 பி.ப ஈழம்] [செ.விசுவநாதன்] புலிகளை எதிர்த்துப் போரிட போதுமான நிதி உள்ளது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ரோகித போகல்லாகம அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஸ்மித்தை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் ஊடகவியாளர்களிடம் அவர் கூறியதாவது: விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் நிற்கின்றோம். எமது நிதிவளம் போதுமான இருக்கின்றது. போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி ஆயுதக்குவிப்பில் புலிகள் ஈடுபட்டதால் அந்த ஒப்பந்தத்தைக் கைவிட்டு வலிந்த தாக்குதல் நடவடிக்கையை மகிந்த அரசு மேற்கொள்ள வ…

    • 0 replies
    • 888 views
  11. சிறிலங்கா அரசைக் கண்டித்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகத்தினர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19.10.08) இராமேஸ்வரத்தில் கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 591 views
  12. அதிகாரப் பகிர்வுத் திட்டமானது இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலானது இல்லையென ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மனித சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அதிகாரப் பகிர்வு அவசியமானதாக இருக்கின்றபோதும், அது சரியாகக் கணிக்கப்பட்டு சமநிலையில் பேணப்படவேண்டும் என அமைச்சர் கூறினார். 13வது திருத்தச்சட்டமூலம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக மஹா சங்கத்தினருக்கு விளக்கமளிக்கும் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “அவ்வாறான திட்டமொன்றைத் தயாரிக்கும்போது உள்நாட்டு பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார விடயங்களைக் கவனத்தில்கொள்ளவேண்டியது அவசியமானது” என்றார் அமைச்சர். அரசியலம…

  13. இலங்கையில் அடுத்து வரும் தினங்களில் இடிமின்னல் காரணமாக ஆபத்துகள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. நாட்டில் நிலவும் பருவப் பெயர்ச்சி மழை காரணமாக மாலை மற்றும் இரவு வேளைகளில் பெய்துவரும் இடியுடன் கூடிய மழையில் இந்த ஆபத்து ஏற்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். மாலையிலும், இரவு வேளைகளிலும் பெய்யும் சிறியளவிலான மழையுடன் கூடிய காலநிலையிலும் இந்த ஆபத்து ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். இதேவேளை அதிகம மழை வீழ்ச்சி காரணமாக வெள்ளம் ஏற்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=5…

  14. போராட்ட வடிவங்கள் மாறுபடலாம் - முரண்படலாம் ஆனால் - சிறுபான்மைச் சமூகங்களின் போராட்டங்கள் நியாயமானது - ஹக்கீம் - விசேட செவ்வி: சாதாரண ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில் குறிப்பாக தற்போதுள்ள வெஸ்ற் மினிஸ்ரர் முறைமையின் கீழ் தனிநபர்கள் வெற்றி பெற்றுக் கொண்டு போகலாம். அவர்கள் பட்டங்கள் பதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம். எனினும் அங்கே சமூகங்கள் தோற்றுப் போகின்றன. ஆனால் இவை தற்காலிகமானவையே. இந்தத் தனிநபர்கள் எப்பொழுதும் வெற்றி பெற முடியாது, அவ்வாறே சமூகங்களும் அந்த சமூகங்களின் பின்னாலுள்ள இயக்கங்களும் தொடர்ச்சியாக தோல்வி கண்ட வரலாறும் இல்லை. அவ்வாறு தோல்வி காண்பதற்கு இயங்கியல் அனுமதிப்பதும் இல்லை என மனம் திறக்கிறார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவ…

  15. அரசியல் தீர்வுதிட்டம் - நம்பிக்கை இருக்குமானால் உடனடியாக யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வு யோசனை ஒன்றை முன்வைக்குமாறு ஜனாதிபதிக்கு மங்கள சவால்: [Full text of the media statement] Media release If President believes in a political solution, a proposal must be tabled now This country has been told many a times by President Rajapaksa that he is for a political solution and every time there after, the war escalated. This time, perhaps not for the last time, the President has told the All Party Conference (APC) held on the morning of 11th October that he believes military offensives are no solutions to the ethnic conflict and peace has to be achieved th…

  16. இலங்கை ராணுவத்துக்கு, மத்திய அரசு ராணுவ உதவி அளிப்பதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் இன்று சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் தீவிர தாக்குதல் நடத்துவதைக் கண்டித்தும், இலங்கை அரசுக்கு ராணுவ உதவி அளிப்பதை கண்டித்தும் பா.ம.க. ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இலங்கை அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. பின்னர், அவர்களை காவல்துறையினர் கைது செ…

  17. சுமாத்திராப் பகுதியில் ஏற்படக்கூடிய கடல் அதிர்வின் காரணமாக இலங்கையில் மீண்டுமொரு சுனாமித் தாக்கம் ஏற்படக்கூடுமென இலங்கையின் சிரேஷ்ட விஞ்ஞானி ஒருவர் எதிர்வுகூறியுள்ளார். எதிர்வரும் சில தினங்களில் கடல் அதிர்வு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தேசநிர்மாண ஆய்வு நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான எச்.ஜீ.எஸ்.ஆரியரட்ண தெரிவித்தார். சுமாத்திரா கடற்பரப்பில் காணப்படும் மீன்கள் இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் பரந்தளவில் காணப்படுவதாகவும், மீன்களின் இடப்பெயர்வானது கடற்பரப்பில் ஏற்படக்கூடிய மாற்றத்தைப் பிரதிபலிக்குமெனவும் அவர் கூறியுள்ளார். “பூமியதிர்வு ஏற்படும் பட்சத்தில் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் ஒரு முயற்சியாக இது அமையும்” என ஆரியரட்ண குறிப்பிட்டுள்ளார். …

  18. மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கித் தாக்குதல்... தொடரும் உயிர் இழப்பு... மீனவர்களின் ஸ்டிரைக்... கலெக்டரின் சமாதானக் கூட்டம் என்று ராமேஸ்வரம் தீவு மறுபடியும் தகிக்க ஆரம்பித்துவிட்டது. கடந்த மாதம் 28-ம் தேதி மதுரை தத்தனேரி பாக்கியநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர் முருகன் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக ராமேஸ்வரம் கரைக்கு வந்தபோது, ஒட்டுமொத்த மீனவ சமுதாய மக்களும் அதிர்ந்துவிட்டனர். காரணம், கடந்த ஜூலை மாதத்தில்தான் தமிழக மீனவர்களுக்காக கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளுமே பெரிய அளவில் குரல் கொடுத்து, தனித்தனியாக ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தி, பிரதமரின் கவனத்தை ஈர்த்தன. ஆகஸ்ட் மாதத்தில…

    • 3 replies
    • 1.5k views
  19. முல்லைத்தீவு மாவட்டம் மணலாறில் தண்ணிமுறிப்புக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.. இத்தாக்குதலின்போது 19 படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதல் பற்றி விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:- கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் ஆட்டிலறித் தாக்குதல் பல்குழல் பீரங்கித் தாக்குதல் மற்றும் ரொக்கட் லோஞ்சர் தாக்குதல் சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக தழிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய அகோர எதிர்த்தாக்குதலினால் படையினரின் முன்னேற்ற முயற்சி கைவிடப்பட்ட நிலையில் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.இம்ம

  20. இலங்கை விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிப்பதற்கு இந்தியா தயாராக இருந்தால் அது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புலிகளுடன் பேசும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னையில் தற்போதுள்ள சிவாஜிலிங்கம் எம்.பி. இந்தோ ஆசிய செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள தொலைபேசி பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். "விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுகளுக்கு வருவதற்குத் தயார் என்ற உத்தரவாதத்தை இந்தியா பெற விரும்பினால் இது தொடர்பாக வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன் பேச்சுகளை மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவுள்ளது. இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே பாலமாக செயற்படத் தயாராகவுள்ளோம். விடுதலைப…

  21. ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினை தமிழக அரசியலில் சூடுபிடித்திருக்கும் தற்போதைய சூழலில், அங்குள்ள பல கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஈழத் தமிழர்கள் இலங்கையில் எதிர்கொள்ளும் அவல நிலை குறித்தும் கள நிலைமைகள் பற்றியும் அவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றனர் என சென்னைச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காகக் கூட்டியுள்ள சர்வகட்சி மாநாடு நாளை சென்னையில் நடைபெற இருக்கையில் அங்கு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் காத்திரமான முடிவு ஒன்று எடுக்கப்படுவதற்கான தூண்டுதல் செயற்பாடாக அந்த மாநாட்டில் பங்குபற்றும் கட்சிகளின் தலைவர்களை, தமிழ்த…

  22. இராணுவத்தின் கொடுந்தாக்குதலைச் சந்தித்துவரும் இலங்கைத் தமிழர்களின் இன்னலைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் மேலும் அக்கறை காட்ட வேண்டும், இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளான தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் போன்றவற்றை உடனடியாக அனுப்பி உதவ வேண்டும், இதற்குத் தடங்கல்கள் வருமானால் மத்திய அரசிலிருந்து திமுக விலக வேண்டும் என்று தமிழ்நாட்டின் 10 பெரிய நகரங்களில் நடத்திய கருத்துக் கணிப்பிலிருந்து தெரிகிறது. சென்னை, கோயமுத்தூர், ஈரோடு, சேலம், மதுரை, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் இம் மாதம் 6 முதல் 11 வரையில் 1,031 பேர்களிடம் கருத்து கேட்டபோது இந்தத் தகவல்கள் கிடைத்தன. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக் குழுமம் சார்பில், சமூகத்தின் அனைத…

  23. திருமலையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கும் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் [திங்கட்கிழமை, 13 ஒக்ரோபர் 2008, 09:45 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் கிழக்கு கட்டைப்பறிச்சான் தெற்கு, கட்டைப்பறிச்சான் வடக்கு கிராம சேவகர் பிரிவுகளில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். 159 குடும்பங்களைச் சேர்ந்த 461 பேருக்கு அடிப்படை வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கத்திடம் பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற போர் நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்கள் திருகோணமலை, மட்டக்களப்பு நலன்புரி நிலை…

    • 0 replies
    • 412 views
  24. களுவாஞ்சிக்குடியில் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொலை [திங்கட்கிழமை, 13 ஒக்ரோபர் 2008, 09:44 மு.ப ஈழம்] [சுவிஸ் நிருபர்] மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் பிள்ளையான் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த இருவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ளுவாஞ்சிக்குடி எருவில் பகுதியில் உள்ள மதுபானச்சாலை ஒன்றின் மேல் மாடியில் நேற்று முன்நாள் சனிக்கிழமை மாலை 6:15 நிமிடமளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த இருவர் அங்கிருந்த போது உந்துருளியில் வந்த இருவர் மேல்மாடிக்குச் சென்று இருவர் மீதும் ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டனர். இதில், அந்த இகுழுவின் களுவாஞ்சிக்குடி…

    • 0 replies
    • 695 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.