ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
இலங்கை அதிபர் ராஜபக்சேவை உடனடியாக தொலைபேசியில் அழைத்து, தமிழர்களைப் படுகொலை செய்வதை நிறுத்த வேண்டும். அதை விடுத்து பிரதமருக்கு தந்தி அனுப்புவதால் யாருக்கு என்ன பயன் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்த வேண்டும் என அதிமுக பொதுச் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: நான் ஏற்கனவே முதல்வர் கருணாநிதிக்கு ஒரு அறிவுரை தெரிவித்திருந்தேன். தமிழக முதல்வராக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக கருணாநிதி இருப்பதால், ராஜபக்சேவை தொடர்பு கொண்டு, இனப்படுகொலையை நிறுத்த உத்தரவிடுமாறு பிரதமரை கருணாநிதி கேட்டுக் கொள்ள வேண்டும் என நான் கூறியிருந்தேன். ஆனால் பதிலுக்கு கருணாநிதி, புதுமையான யோசனையை தமிழக மக்கள…
-
- 1 reply
- 1k views
-
-
வீரகேசரி இணையம் - தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். வடமத்திய மாகாண சபை தேர்தலில்போட்டியிடும் முகமாக பாரளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.வசந்த சமரசிங்கவின் வெற்றிடத்திற்கே விநாயகமூர்த்தி முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவ் பதவியேற்பு நிகழும் சமயம் எதிர்கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய சுதந்திர முன்னனியின் விமல் வீரவன்ச ஆகியோரே சபையில் இருந்தனர். ஐக்கிய தேசிய கட்சி , ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவ் பதவியேற்பு நிகழ்வினை பகிஷ்கரிப்பு செய்…
-
- 28 replies
- 3.7k views
-
-
இலங்கையின் நன்மதிப்பை சீர்குலைக்க ரொபர்ட் ஏவன்ஸ் சூழ்ச்சி - இலங்கை குற்றம் சாட்டு: ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மத்தியில் இலங்கை அரசாங்கத்திற்கு காணப்படும் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஏவன்ஸ் செயற்பட்டு வருவதாக இலங்கை குற்றம் சாட்டியுள்ளது. ரொபர்ட் ஏவன்ஸ் தலைமையில் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த பாராளுமன்றக் குழுவினர் உண்மைக்குப் புறம்பான தவகல்களை வெளியிட்டிருப்பதாக ஒன்றிய பாராளுமன்றக் குழுவின் இலங்கைப் பிரதிநிதி ரவிந்த ஆசிரியசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் சாதகமான விடயங்கள் மூடிமறைக்கப்பட்டும், பாதகமான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவ
-
- 1 reply
- 1.4k views
-
-
கிளிநொச்சியில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: தாயும் மகளும் பலி; 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் காயம் [வெள்ளிக்கிழமை, 10 ஒக்ரோபர் 2008, 07:43 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பகுதியில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் தாயும் மகளும் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு சிறுவர்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர். பரந்தனில் உள்ள குமரபுரம் மக்கள் குடியிருப்பு மீது இன்று வெள்ளிக்கிழமை காலை 6:25 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நான்கு தடவைகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. இத்தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த தந்த…
-
- 0 replies
- 605 views
-
-
சர்வகட்சி மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது. இதற்கான அழைப்பிதழ்கள் ஜனாதிபதியின் செயலாளர் வீரதுங்கவால் கையெழுத்திடப்பட்டு அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் இந்த அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதா
-
- 0 replies
- 803 views
-
-
தமிழக முதல்வரின் குரல் எமக்கு நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது: நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் [வெள்ளிக்கிழமை, 10 ஒக்ரோபர் 2008, 08:37 மு.ப ஈழம்] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்] ஈழத் தமிழினத்திற்கெதிராக கொடிய இன அழிப்புப் போரினைக் கட்டவிழ்த்துவிட்டுவரும் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக தாங்கள் நெஞ்சுரத்துடன் குரல்கொடுத்துள்ளமை எமது இதயங்களில் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது என்று நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நோர்வே தமிழ் அமைப்பக்களின் ஒன்றியம் நேற்று வியாழக்கிழமை (09.10.08) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஈழத் தமிழினத்திற்கெதிராக கொடிய இன அழிப்புப் போரினைக் கட்டவிழ்த்துவிட்டு வரும் சிங்களப் …
-
- 0 replies
- 675 views
-
-
சிறுபான்மையினர் தொடர்பாக இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து குறித்து, அரசாங்கமும் ஐக்கிய தேசியக் கட்சியும் நழுவல் போக்கை கடைப்பிடிப்பதானது சிறுபான்மையின மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துள்ளதென சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (ஒக்08) நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இராணுவத் தளபதி அண்மையில் சிறுபான்மையினரைப் பற்றி கருத்து வெளியிட்டிருந்தார். பெரும்பான்மை இனத்தவர்களிடையே அண்டி வாழ வந்தவர்கள் தான் சிறுபான்மையினர் என்ற தொனியிலேயே இராணுவத் தளபதியின் கருத்து அமைந்திருந்தது. இர…
-
- 0 replies
- 674 views
-
-
நாட்டின் மொத்த சனத்தொகையில் ஆண்களைவிட பெண்களின் சனத்தொகை அதிகரித்துவிட்டது என்றும், நாட்டின் மொத்த சனத்தொகையில் பெண்களின் சனத்தொகை ஒரு கோடியே இரண்டு லட்சம் எனவும் குடிசன மதிப்பீட்டுப் புள்ளிவிபரத் திணைக்களக் குறிப்பொன்று கூறுகிறது. இதேவேளை 57 லட்சம் மக்கள் வாழும் மேல்மாகாணம் அதிக சனத்தொகை கொண்ட மாகாணமாகவும், 11 இலட்சம் சனத்தொகை கொண்ட வடமாகாணம் குறைந்த சனத்தொகை கொண்ட மாகாணம் எனவும் அச்செய்திக்குறிப்புக் கூறுகிறது. கிழக்கு மாகாணத்தின் சனத்தொகை 15 இலட்சமாகும். இதைவிட கூடிய மக்கள் தொகை வாழ்வது கொழும்பு மாவட்டத்தில் என்றும் குறைந்த சனத்தொகை வாழ்வது மன்னார் மாவட்டத்தில் என்றும் அங்கு 15-19ற்கும் இடைப்பட்டவர்களின் தொகை 2 இலட்சம் என்றும் 75 வயதிற்கு மேற்பட்டவர்க…
-
- 0 replies
- 2.5k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் வடமத்திய மாகாணசபை எதிர்கட்சியின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை கொலை செய்ய வந்தவர் வெள்ளை நிற வான் ஒன்றிலேயே வந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ் பி திஸாநாயக்க, இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த தாக்குதல் இடம்பெற்று நான்கு நாட்களாகியும் அரசாங்கத்தினால் கொலைஞரைக் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். குண்டுதாரி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டவராக இருந்ததாக அரசாங்கம் கூறுவது தொடர்பில் கருத்துரைத்த அவர், எவ்வாறு தனித்து இந்தத் தாக்குதலை நடத்தமுடியும் என எஸ் பி திஸாநாயக்க கேள்வி எழுப்பினார். http://www.tamilskynews.com/index.php?opti...…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் டக்ளஸ் சபையில் கடும் வாய்ச்சண்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையே கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதனால் சபை சிறிது நேரம் அல்லோலகல்லோலப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டநீடிப்பு விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவரது பேச்சில் குறுக்கீடு செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீகாந்தாவின் கருத்துகளுக்கு எதிரான கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தார். ஸ்ரீகாந்தா எம்.பி.டக்ளஸின் கருத்துகளை சாட்டை செய்யாமல் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், ஒருகட்டத்தில் …
-
- 9 replies
- 2.7k views
-
-
சிறிலங்காவின் அடுத்த ஆண்டுக்கான மொத்த செலவீனம் 981 பில்லியன் ரூபா [வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2008, 10:12 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசாங்கத்தின் 2009 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவீனம் 981 பில்லியன் ரூபா என குறைநிரப்பு பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலதிகமாக 850 பில்லியன் ரூபா வெளிநாட்டு கடன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரேரணையின் மதிப்பீட்டில் கணிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்ற சாபநாயகர் வி.ஜே.மு லொக்கு பண்டாரா தலைமையில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 9:30 நிமிடத்துக்கு கூடியது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கேள்வி நேரம் முடிவடைந்ததும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா அடுத்த ஆண்டுக்கான செலவீன மதிப்பீட்டு குறைநிரப்பு பிரேரணையை …
-
- 0 replies
- 448 views
-
-
சிங்களவர்களைக் கொன்றவர்களை அமைச்சர்கள் கட்டியணைத்து வரவேற்பதாக பாலித ரங்க பண்டார விசனம் ஜானக பெரேராவுக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து எதுவும் இல்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவும் உறுதிப்படுத்திய நிலையில், இன்று ஜானக பெரேராவின் படுகொலை தொடர்பில் ஐ.தே.க.புலிகளை குற்றம் சாட்டவில்லையென அரசு கூறுவதையிட்டு கவலையடைவதாக ஐ.தே.க. எம்.பி.பாலித ரங்கபண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; கிழக்கு மாகாணத்தில் அரசின் உத்தரவுக்கமைய புலிகளிடம் சரணடைந்த 601 பொலிஸாரைக்…
-
- 0 replies
- 1.4k views
-
-
கருணாவின் நியமனம் சட்ட விரோதம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால் ரட்ணசிறி, மேர்வின், டளஸ், பசில் - கதி என்ன? ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்படாத கருணாவை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக ஜே.வீ.பீ தாக்கல் செய்துள்ள மனுவின் அடிப்படையில் நியமனம் சட்டவிரோதமானது என நீதிமன்றம் அறிவித்தால், தேசியப்பட்டியலில் பெயர் குறிப்பிடாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர்களான மேர்வின் சில்வா, டளஸ் அழகபெரும மற்றும் பசில் ராஜபக்ஸ, ஆகியோரின் பதவிகளும் பறிபோகும் நிலையேற்படலாம் எனக் கருதப்படுகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
அரச பயங்கரவாதத்தை வலுப்படுத்தவே கருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் - மங்கள: கிழக்கில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் கருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவில்லை. ராஜபக்ஸ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அரச பயங்கரவாதத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையாகவே கருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர குற்றம்சும்த்தியுள்ளார். கருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமை குறித்து மங்கள சமரவீர வெளியிட்டுள்ள அறி;க்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். போர்க் குற்றம், பொதுமக்களை ஆயிரக்கணக்கில் கொலை செய்தமை, சிறுவர்களைப் பலவந்தமாக ஆயுதப்படையில் இணைத்துக்…
-
- 0 replies
- 690 views
-
-
உலகத் தமிழர்களின் நன்றி: தமிழக முதல்வர் மகிழ்ச்சி- ஒரணியில் திரள அழைப்பு [வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2008, 06:59 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] நோர்வே தமிழ்ச் சங்கம், வட அமெரிக்க தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட உலகத் தமிழர்களின் ஆதரவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சென்னையில் இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஓரணியில் திரளக் கூடாதோ? சரித்திரம் படைத்த தமிழர் சாகிறார் என்ற செய்தி செவியினில் எட்டியவுடன் கதவு திறந்தது - மத்தியப் பேரரசு - நம் கதறல் கேட்டு; கண்ணீர் துடைக்க கரமும் நீட்டியது. நாடு கடந்து வாழ்கின்ற நார்வே தமிழ்ச் சங்க நண்பர்களும்; நம்பிக்கை துளிர்த்தி…
-
- 5 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க ஒக். 14 இல் அனைத்து கட்சிக்கூட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு [வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2008, 10:20 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க தமிழ்நாட்டின் அனைத்து கட்சிக்கூட்டத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14.10.08) தமிழ்நாடு அரசு கூட்டியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகத்து அரசியல் இயக்கங்களும் அமைப்புகளும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வலியுறுத்தியதின் காரணமாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மேலும் தொடர்ந்து விரைவுபடுத்திடவும்- நிலையான அமைதி அங்கே உருவாகிடத் தக்க முயற்சிகளை மேற்கொள்ளவும்-…
-
- 1 reply
- 996 views
-
-
எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்திருந்தால் எப்போதோ ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும். ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பில் சடங்குகளை நடத்திக் கொண்டிருக்காமல் முதலமைச்சர் கருனாநிதி நேரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 18ஆம் திகதி நடக்கவுள்ள இளைஞர் அணி மாநாட்டின் அழைப்பிதழை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் கோயம் பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில், ஈழத் தமிழர்கள் தமது நாட்டில் அமைதியாக வாழ வேண்டும். மத்திய அமைச்சர்களாக உள்ளவர்களால் தீர்க்க முடியாத பிரச்சினையை தந்திகள் மூலமாக தீர்க்கமுடிய…
-
- 4 replies
- 2.9k views
-
-
சென்னை(ஏஜென்சி) 9 அக்டோபர் 2008 நாளை நடைபெற உள்ள சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் கூட்டத்தில்இ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை நாடு கடத்தும் கோரிக்கையை எழுப்ப வேண்டுமென்று சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்ததாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்குத் தொடர்பாக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும்இ அந்த இயக்கத்தின் உளவு பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும் தேடப்படுபவர்கள் ஆவர். அவர்கள் இருவரையும் நாடுகடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் நடைபெறவுள்ள இன்டர்போல் கூட்டத்தில் எழுப்ப வேண்டுமென்று சிபிஐக்கு…
-
- 12 replies
- 3.8k views
-
-
சிறிலங்கா படையினரின் எண்ணிக்கையை இரண்டு லட்சமாக அதிகரிப்பதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச படை உயரதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 889 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் 2009 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவீனம் 981 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 670 views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான நியமிக்கப்பட்டமைக்கு தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். இந்த நியமனம் குறித்து தமது கட்சி எதிர்ப்பு தெரிவிக்காத போதிலும் இதில் தமக்கு உடன்பாடில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதத்திலிருந்து ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டமை குறித்து கட்சி என்ற ரீதியில் திருப்தியடைவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 999 அப்பாவிப் பொதுமக்களை கொண்டதன் பின்னர் அங்குலி மாலா பௌத்த பிக்குவாக மாறியதனை அவர் இதன் போது நினைவூட்டினார். http://www.tamilskynews.com/index.php…
-
- 0 replies
- 1.6k views
-
-
சென்னை இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த கருணாநிதி கூறியபடி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்தி அனுப்புவதால் எத்தகைய பயனுமில்லை என்று கூறியுள்ள ஜெயலிதா, இலங்கை அதிபர் ராஜ பக்சவை, மன்மோகனே நேரில் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : இலங்கை கடற்படையினால் இந்திய மீனவர் கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்; உள்நாட்டு சண்டை என்ற பெயரில் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.இந்த விவகாரத்தில் முதலமைச்சர் கருணாநிதி சிறிதும் அக்கறையின்றி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினேன். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் என்னுடைய நிலைப்பாடும், அ…
-
- 0 replies
- 958 views
-
-
கொழும்பின் புறநகர்ப் பகுதியில் குண்டுத்தாக்குதல்: 2 பேர் பலி; பிரதியமைச்சர் சிறிபால கம்லத் உட்பட மூவர் படுகாயம் [வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2008, 07:12 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பொறலஸ்கமுவ சந்தியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் நீர்ப்பாசன விவசாய அபிவிருத்தி பிரதி அமைச்சர் சிறிபால கம்லத் படுகாயமடைந்ததுள்ளார். இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1:15 நிமிடமளவில் இடம்பெற்ற இக்குண்டு வெடிப்பு தற்கொலை தாக்குதல் என்றும் நீர்ப்பாசன விவசாய அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பியுள்ளதாக இரணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரா தெரிவித்தார். அமைச்சர் பயணித்துக்கொண்டிருந்த வாகனத் …
-
- 0 replies
- 949 views
-
-
யாழ்ப்பாணப் பாடசாலைகளில் படையினர் தேடுதல் நடத்தியுள்ளனர். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் ஆகிய பிரதேசங்களில் நூற்றுக்கணக்கான படையினர் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பாடசாலைகளில் தேடுதல்களில் ஈடுபட்டுள்ளனர். ஆயுதங்கள் இருப்பதாகவே படையினர் இந்த தேடுதலை நடத்தியதாகவும் எனினும் ஆயுதங்கள் எதுவும் மீட்கப்படவில்லை எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாசியப்பிட்டிப் பகுதியில் மூன்று படையினர் தாக்கப்பட்டதை அடுத்து படையினர் யாழ்ப்பாணத்தில் உள்ள சைவ ஆலயங்களில் கடந்த வாரம் தேடுதல்களை நடத்தினர். அரசாங்க பணியகங்கள், கூட்டுறவுக் கட்டிடங்களிலும் இந்தத் தேடுதல்கள் நடத்தப்பட்டன . இந்த நிலையில் தற்போது யாழ் பாடசாலைகளில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 649 views
-
-
வன்னிப் பகுதியில் அதிகரித்திருக்கும் மோதல்களால் கிளிநொச்சி நகரப் பகுதியிலிருந்து அனைத்துப் பொதுமக்களும் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் தலைமையாகக் கொண்ட மனித நேய அமைப்புக்களின் ஒன்றியம் வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி நோக்கிய அரசாங்கப் படைகளின் வான் தாக்குதல்கள் மற்றும் எறிகணைத் தாக்குதல்களால் பல்வேறு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்பொழுது முல்லைத்தீவை நோக்கி இடம்பெயர்ந்திருப்பதாக மனிதநேய அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. “பெரும்பாலும் கிளிநொச்சியில் தங்கியிருந்த அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர்” என அந்த ஒன்றியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு…
-
- 3 replies
- 2.2k views
-