ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
யாழ்ப்பாணப் பாடசாலைகளில் படையினர் தேடுதல் நடத்தியுள்ளனர். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் ஆகிய பிரதேசங்களில் நூற்றுக்கணக்கான படையினர் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பாடசாலைகளில் தேடுதல்களில் ஈடுபட்டுள்ளனர். ஆயுதங்கள் இருப்பதாகவே படையினர் இந்த தேடுதலை நடத்தியதாகவும் எனினும் ஆயுதங்கள் எதுவும் மீட்கப்படவில்லை எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாசியப்பிட்டிப் பகுதியில் மூன்று படையினர் தாக்கப்பட்டதை அடுத்து படையினர் யாழ்ப்பாணத்தில் உள்ள சைவ ஆலயங்களில் கடந்த வாரம் தேடுதல்களை நடத்தினர். அரசாங்க பணியகங்கள், கூட்டுறவுக் கட்டிடங்களிலும் இந்தத் தேடுதல்கள் நடத்தப்பட்டன . இந்த நிலையில் தற்போது யாழ் பாடசாலைகளில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 650 views
-
-
வன்னிப் பகுதியில் அதிகரித்திருக்கும் மோதல்களால் கிளிநொச்சி நகரப் பகுதியிலிருந்து அனைத்துப் பொதுமக்களும் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் தலைமையாகக் கொண்ட மனித நேய அமைப்புக்களின் ஒன்றியம் வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி நோக்கிய அரசாங்கப் படைகளின் வான் தாக்குதல்கள் மற்றும் எறிகணைத் தாக்குதல்களால் பல்வேறு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்பொழுது முல்லைத்தீவை நோக்கி இடம்பெயர்ந்திருப்பதாக மனிதநேய அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. “பெரும்பாலும் கிளிநொச்சியில் தங்கியிருந்த அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர்” என அந்த ஒன்றியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு…
-
- 3 replies
- 2.2k views
-
-
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாட்டை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை மூலம் விளக்கியுள்ளார். இதுக் குறித்து இன்று அவர் வெள்யிட்டுள்ள அறிக்கை. இலங்கையில் மற்ற குடிமக்களைப் போல தமிழர்களும் சம உரிமையுள்ள குடிமக்கள். சட்டத்தின் முன் சமத்துவம் வேண்டியும், கல்வி, வேலைவாய்ப்பில் சமத்துவம் பெறவும் இலங்கைத் தமிழர்கள் நடத்தும் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறோம். சுய நிர்ணய உரிமை வேண்டி அவர்கள் நடத்தும் தார்மீக போராட்டத்தை அங்கீகரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு சுயாட்சி உரிமையுள்ள தமிழ்த் தாயகம் உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு இருக்கும் வேட்கையை புரிந்து ஏற்றுக் கொள்கிறோம். திசைமாறிப் போன ஆயுதப் போராட்டத்த…
-
- 2 replies
- 1.8k views
-
-
வன்னிப் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் மனிதநேயப் பிரச்சினைகளைக் கையாள்வதில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் உதவிசெய்ய வேண்டுமென கிளிநொச்சி வைத்திய சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசாங்கப் படையினரின் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களாலும், அதிர்வுகளாலும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் ஜன்னல் கண்ணாடிகள் நொருங்கியிருப்பதாகவும், அவசர சிகிச்சைப் பிரிவு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். “வன்னிப் பிராந்தியத்தில் பெரும்பாலானவர்கள் வயல் நிலங்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் தாழ் நிலங்களில் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளனர். ஏற்கனவே, பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பித்திருப்பதால், இடம்பெயர்ந்து தற்காலிக…
-
- 0 replies
- 786 views
-
-
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது மீண்டுமொருமுறை இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாக்கு நீரிணையில் வைத்து சுமார் 60 மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. 15 வர்த்தக மீன்பிடி வள்ளங்களில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், தமிழக மீனவர்கள் இரும்புக் கம்பிகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களினால் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மீன்பிடி நடவடிக்கைகளுக்காக …
-
- 0 replies
- 760 views
-
-
ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவை விமர்சிப்பது தேசத்துரோகம் எனில் தொடர்ந்தும் அதை செய்வேன்: வைகோ [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 10:34 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கையில் இடம்பெற்று வரும் போரை இந்திய அரசுதான் பின்நின்று நடத்துகிறது என்று குற்றம் சுமத்துகிறேன். இப்படிப் பேசுவது, தேசத்துரோகம் என்றால் இந்த தேச துரோகத்தை வைகோ தொடர்ந்து செய்வான் என்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் பகத் சிங் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எழுதிய "கனவாகிப்போன கச்சதீவு" நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் …
-
- 3 replies
- 1.8k views
-
-
http://img379.imageshack.us/my.php?image=ammanamvh4.jpg லப்டினன் கோணல் கருணா அம்மணம் யாரிந்த தமிழ் அண்ணை?? மஹிந்த? கோத்தபய்யா?? நன்றி வீரகேசரி
-
- 2 replies
- 1.8k views
-
-
கொழும்பு புறநகர் பகுதியொன்றில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொரலஸ்கமுவ பிரிவென சந்திக்கு அருகாமையில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பான தகவல்களை எதிர்பாருங்கள்......... தமிழ்வின்.கொம்
-
- 2 replies
- 2.8k views
-
-
மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டிருந்த சடலம் குறிஞ்சாமுனையைச் சோந்த 43 வயதுடைய கதிர்காமக்கோடி மேகநாதன் என்பவருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளது. ஸ்தலத்திற்குச் சென்று விசாரணை நடத்திய மட்டக்களப்பு நீதவான் ராமக்கமலன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை; மட்டகளப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தவிட்டுள்ளார். பிந்திக்கிடைத்த தகவலின் படி இவர் ரீ.எம்.வீ.பீயின் புலனாய்வுப் பிரிவைச் சேர்தவர் என கூறப்படுகிறது. குறிஞ்சாமுனைப்பிரதேசம் முன்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடிப் பிரதேசத்தின் ப…
-
- 0 replies
- 962 views
-
-
இலங்கை அரசாங்கம் சர்வதேச யுத்த சட்டங்களுக்கு புறம்பான வகையில் இராணுவ முன்நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்துள்ளது. சிவிலியன் இலக்குகள் மற்றும் சிவில் காரியாலங்களை இலக்கு வைத்து விமானப்படையினரால் மேற்கொள்ளப்படும் வான் தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் தாயகப் பிரதேசத்தில் அமைந்துள்ள சிவில் காரியாலங்கள் மீது அரச படையினர் தாக்குதல் மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தலைமையகம் மற்றும் அரசியல் பணிமனை ஆகியவற்றின் மீது விமானப்படையினர் அண்மையில் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். வன்;னியில் இடம்பெயர்ந்து அல்லலுறும் சிவிலியன் நலன்புரி ச…
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்தியாவின் அக்கறையின்மையால்தான் தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க சிறிலங்கா முடிவு: தினமணி குற்றச்சாட்டு [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 12:09 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] இந்தியாவின் அக்கறையின்மையால்தான் இலங்கைத் தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க சிறிலங்கா அரசும் படையினரும் முடிவு செய்துள்ளனர் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தினமணி நாளேடு குற்றம்சாட்டியுள்ளது. இன்று புதன்கிழமை வெளிவந்த தினமணி நாளேட்டின் ஆசிரியர் தலையங்கம்: "பாவப்பட்ட ஜென்மங்கள்" என்கிற வார்த்தைப் பிரயோகத்துக்கு மிகவும் பொருத்தமானவர்கள் யார் என்று கேட்டால், இலங்கையில் வாழும் யாழ்ப்பாணத் தமிழர்கள்தான். காஸ்மீரப் பண்டிட்டுகளாவது அகதிகளாக அவர்களது உறைவிடத்திலிருந்து விரட்டப்பட்டு விட்டனர். ஆனால் இலங்…
-
- 2 replies
- 1.8k views
-
-
இப்போது வன்னியில் நடை பெறும் போரை நிறுத்தி நாட்டில் சமாதானச் சூழல் உருவாகுவதற்கு உடன் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த பிரிட்டிஷ், நோர்வே தூதுவர்களிடம் மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டது. பிரிட்டிஷ் தூதுவர் பீற்றர் ஹைஸ், நோர்வே தூதுவர் ரோர் ஹட்டறிம், அகதிகளுக்கான ஐ.நா.தூதரக வெளிக்கள அதிகாரி ஈடா சுகத் ஆகியோர் கொண்ட ராஜதந்திரிகள் குழு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளது. கடந்த ஒரு வருடத்துக்கு பின்னர், யாழ்ப் பாணத்துக்கு வருகை தந்துள்ள ராஜதந் திரிகள் குழு இதுவாகும். இக்குழு நேற்றுப் பலரையும் சந்தித்து குடாநாட்டு நிலை மையைக் கேட்டறிந்தது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இ.த.விக்ன ராஜா, யாழ்.அரச அதிபர் க…
-
- 0 replies
- 859 views
-
-
http://vimbamkal.blogspot.com/2008/10/bbc-...n-north-of.html
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவிலுள்ள தமிழர்ளை உள்ளடக்கிய 'ஒபாமாவுக்கான தமிழர்கள்' என்ற அரசில் செயற்பாட்டுக் குழுவானது ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பராக் ஒபாமாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்கிறது. அமெரிக்காவுக்கு தமிழ்நாடு மற்றும் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் அமெரிக்காவில் பிறந்த தமிழர்களை உள்ளடக்கியதே இந்தக் குழுவாகும் அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக ஒபாமாவே தேர்ந்தெடுக்கப்படுவாரென இந்தத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாகவும் அவர் கவனம் செலுத்துவாரென அவர்கள் கருதுவதாக இணையத்தளமொன்றில் நேற்று புதன் கிழமை குறிப்பிடப்பட்டுள்ளது. ஓபாமா ஜனாதிபதியானால் இலங்கை விடயம் த…
-
- 2 replies
- 1.8k views
-
-
உயிரிழந்த இராணுவ உயர் அதிகாரியான மேஜர் ஜென்ரல் ஜானக பெரேராவுக்கு அரசாங்கம் உரிய மரியாதையை வழங்கவில்லையென ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. உயிரிழந்த ஜானக பெரேரா மற்றும் அவருடைய மனைவியின் பூதவுடல்கள் மக்கள் அஞ்சலிக்காக அநுராதபுரம் எடுத்துச்செல்லப்படுகின்றன. உலங்குவானூர்தி மூலம் அநுராதபுரத்துக்கு எடுத்துச்செல்வதற்காக இரண்டு பூதவுடல்களும் இரத்மலானை விமானநிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும், பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லையெனக் கூறி இரண்டு பூதவுடல்களையும் விமானநிலையத்துக்குள் அனுமதிக்காமல் வீதியோரத்தில் வைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது. நண்பகல் வரை இருவரின் பூதவுடல்களை விமானநிலையத்துக்குள் கூட அனுமத…
-
- 6 replies
- 3.7k views
-
-
ஜானக பெரேரா மரணத்துக்கு கோத்தபாயதான் பொறுப்பு: ஐ.தே.க. குற்றச்சாட்டு [வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2008, 08:16 மு.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்காவின் முன்னாள் தரைப்படைத் தளபதி ஜானக பெரேராவின் மரணத்துக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சதான் பொறுப்பு என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியதாவது: ஜானக பெரேராவின் பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது ஜானகவுக்கு எதுவித உயிராபத்து அச்சுறுத்தலும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவில் குறிப்…
-
- 0 replies
- 608 views
-
-
சந்திரிகாவுக்கு சிறிலங்கா தலைமை நீதிமன்று தண்டத்தொகை விதித்தது [வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2008, 08:11 மு.ப ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் பதவிக்காலத்தில் பத்தரமுல்ல பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை சிறிலங்கா தலைமை நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளதுடன் தண்டத்தொகை செலுத்தவும் சந்திரிகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. பத்தரமுல்லவில் 225 ஏக்கர் நிலத்தை ரொணி பீரிஸ் என்பவருக்கு ஒதுக்கீடு செய்ய சந்திரிகாவின் பதவிக்காலத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சந்திரிகாவின் அதிகார முறைகேட்டின் மூலம் இந்த நில ஒதுக்கீடு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறி ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரிகளான சுகதபால மெண்டிஸ், ராஜா சேனநாயக்க ஆகிய இருவரும…
-
- 0 replies
- 617 views
-
-
கொழும்புக்குள் நோயாளர்களாக நுழையும் தற்கொலைதாரிகள்: அமைச்சரவை சகாக்களிடம் மகிந்த தகவல் [வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2008, 08:04 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா தலைநகர் கொழும்புக்குள் நோயாளர்களாக புலிகளின் தற்கொலைதாரிகள் நுழைவதாக தனது அமைச்சரவை சகாக்களிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற காபினட் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் கூறியதாவது: புலிகளின் தற்கொலைதாரிகள் முதலில் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். பின்னர் தங்களை கொழும்பு தேசிய மருத்துவமனைகளுக்கு மாற்றுமாறு அவர்கள் கோருகின்றனர். பின்னர் மருத்துவர்களின் சான்றிதழ்களுடன் அவர்கள் கொழும்பு மருத்துவமனையில் சேர்ந்து கொள்கின்றனர். …
-
- 0 replies
- 759 views
-
-
விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்காக நடத்தப்படும் போர் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் பிரதிநிதி கள் அல்லர் என்ற சரியான கண்ணோட்டத்தில் அதனைப் பார்க்க வேண்டும். இலங்கை மீதும், இங்கு வாழும் தமிழ் மக்கள் மீதும் "கரிசனையுள்ள' சகலரும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, இந்தியாவின் கவலை தெரிவிப்புக்கு நேற்றுப் பதிலடி கொடுத்தார். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நேற்று முன்தினம் இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பாலிதகனேகொடவை அழைத்து இலங்கையில் இடம்பெற்றுவரும் மோதல்களினால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக இந்தியாவின் அதிருப்தியை வெளியிட்டிருந்தார். எனவே, இவ்விடயம் குறித்து நேற்று நா…
-
- 2 replies
- 1.4k views
-
-
மெல்பேர்ண், கன்பராவுக்கு சிறிலங்காவின் வெளிவிகார அமைச்சர் ரோகித போகல்லகமா வருகை செய்யவுள்ளார். சிறிலங்கா அரசு தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையையும், வன்னியில் இருந்து ஐ.நா அமைப்புக்களை வெளியேற்றியமையும் , நியாயப்படுத்தவும் அவுஸ்திரெலியாவுக்கு வருகிறார் . நேற்று சிறிலங்கா அரசின் பிரச்சாரத்தினால் ஜானக பேரேராவின் மறைவிற்கு அவுஸ்திரெலியா வெளிவிகார அமைச்சர் ஸ்ரிபன் ஸ்மித் கண்டனம் தெரிவித்தது தெரிந்ததே. http://www.tamilsydney.com/content/view/1452/37/ http://www.tamilsydney.com/content/view/1449/37/
-
- 0 replies
- 695 views
-
-
சண்டிலிப்பாய் சீரணி நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் தேர்முட்டிக்குள் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டவர்களில் மூவர் மானிப்பாய் பொலிஸாரால் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1ஆம் திகதி சண்டிலிப்பாய் சீரணி நாகம்மாள் ஆலயத்தின் தேர்முட்டியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி ஆயுதங்களை இராணுவத்தினர் மீட்டிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள், ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள் உட்பட 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய மானிப்பாய் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டனர். இவர்களில் மூவர் காயங்கள் காரணமாக நீதிமன்ற உத்தரவுக்கமைய யாழ் போதனா வைத்த…
-
- 2 replies
- 2.2k views
-
-
நோர்வே மற்றும் பிரிட்டன் ஆகிய நாட்டுத் தூதுவர்கள் இன்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். நோர்வே தூதுவர், பிரித்தானிய தூதுவர் ஆகியோருடன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினது இலங்கைக்கான வெளிக்கள பிரதிநிதி ஈடா சுவத் பயணஞ் செய்துள்ளார். விமானமூலம் பலாலியைச் சென்றடைந்தவர்கள் பல தரப்பினருடனும் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர். மேலும் இவர்கள் யாழ்ப்பாண மேல்நீதிமன்றத்திற்கு சென்று, மேல்நீதிமன்ற நீதிபதியை சந்திந்துள்ளனர். உயர்பாதுகாப்பு வலயங்களில் சிவிலியன்களைக் குடியமர்த்துதல் மற்றும் சட்டம் ஒழுங்கு என்பனவற்றை பேணுதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. tamilwin.com
-
- 0 replies
- 1.8k views
-
-
வடபகுதியில் நடைபெற்றுவரும் மோதல்களில் விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டாலும் இலங்கையில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்றுவரும் மோதல்கள் முடிவுக்கு வராது என இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சி மீது அரசாங்கப் படைகள் தாக்குதல்களை நடத்தியிருப்பதானது கடந்த 13 வருடங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவு எனவும் 1995ஆம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் பின்னடைவுகளைச் சந்தித்து வருவதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விடுதலைப் புலிகளின் முக்கிய ஆயுதமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல் அவர்களுக்குப் பலமாக இருப்பதாகவும் அந்தப் பலம் இன்னமும் அழிக்கப்படாததால் முன்னேறிச் செல்லும் இராணுவத்தி…
-
- 4 replies
- 3k views
-
-
http://vimbamkal.blogspot.com/2008/10/blog-post.html
-
- 1 reply
- 3.7k views
- 1 follower
-
-
தமிழக முதல்வருக்கு நோர்வே தமிழ்ச் சங்கம் நன்றி [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 08:26 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] சிங்கள அரசால் இனப்படுகொலைக்குள்ளாகி ஆதரிக்க யாருமற்று இருந்த ஈழத் தமிழருக்கு ஆறுதலளிக்கும் வகையில் நிலைப்பாடு மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நோர்வே தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. நோர்வே தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: பெறுநர்: முதல்வர் தலைமைச் செயலகம் சென்னை பெரும் மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கட்க்கு! ஐயா!! ஆதரிக்க யாருமற்று நாளாந்தம் சிறிலங்கா பேரினவாத சிங்கள அரசினால் இனப்படுகொலை செய்யப்படும் எம் தமிழ் மக்களின் துயர் தாங்காது தாய் தமிழகத்தின் தலைமகனாகிய …
-
- 0 replies
- 642 views
-