ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
சிங்களப் பேரினவாத சிறிலங்கா அரசாங்கத்துக்கான படை உதவிகளை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டின் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 607 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் உள்ள ஜெய்ன் மெத்தப் பள்ளிவாசல் முன்பாக அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் நான்கு சிறார்கள், பெண்ணொருவர் உட்பட 23 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 649 views
-
-
தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவுகள் தாங்கி, தாயக உறவுகளுக்காய், செப்டெம்பர் மாதம் 26ம் திகதி மாலை 4 மணிக்கு ஆரம்பமான தமிழ் இளையோரின் உண்ணா நோன்பு 30மணித்தியாலங்கள் கழித்து சனி இரவு 10 மணிக்கு வெற்றியாகவும், மிகவும் உணர்ச்சிகரமாகவும் முடிவுற்றது. வெள்ளிக்கிழமை மாலை தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தி, அவரது நினைவுகள் தாங்கிய ஒளித்தடம் ஓளிபரப்பப்பட்டது. அதனைத்தொடர்ந்து உண்ணா நோன்பிருந்த இளையவர்கள், மற்றும் பெரியவர்கள் தங்களது உணர்வுகளைப் பரிமாறிக்கொண்டனர். பல இளையவர்கள் பேசும் பொழுது தாங்கள் இந்த 30 மணித்தியாலங்கள் செய்வது ஒரு பெரியவிடயமல்ல. திலீபன் அண்ணாவின் தியாகத்தினோடு ஒப்பிடும் போது இதெல்லாம் ஒரு பொருட்டல்ல …
-
- 11 replies
- 2.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் 7 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் காயம் அடைந்துள்ளனர். இன்று இலங்கை நேரம் மாலை 6.20 அளவில் இந்தக் கைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலைநேர பிரார்த்தனையில் ஈடுபட்ட முஸ்லீம்களே இந்த கைக்குண்டுத் தாக்குதலின் இலக்கு எனக் கூறப்படுகிறது. காயம் அடைந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடியில் தற்போது பதட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிஙறது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 1 reply
- 688 views
-
-
நல்லூர் வீதியில் பொதுமகன் சுட்டுக்கொலை யாழ்ப்பாணம் நல்லூரில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வுக்கு எதிராக புலிகள் முறியடிப்புத் தாக்குதல் [திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2008, 07:38 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னேரிக்குளத்துக்கும் பண்டிவெட்டிக்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இம் முறியடிப்புத் தாக்குதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி தொடர்ந்து இடம்பெற்று வருவதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. வன்னியின் மேற்குப்பகுதி களத்தில் வன்னேரிக்கும் பண்டிவெட்டிக்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் முன்நகர்வுத் தாக்குதலை ம…
-
- 0 replies
- 1.7k views
-
-
பொலநறுவை, மெதிரிகிய (Medirigiriya) பகுதியில் சிங்கள பொதுமக்களிற்கும், சிறீலங்கா ஊர்காவல் படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் சென்ற 16 அகவையுடைய சிறுவன் ஒருவர் ஊர்காவல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்த
-
- 0 replies
- 1k views
-
-
யாழ் மாவட்டம் வலிகாமம் தென்மேற்குப் பிரதேசத்தில் மறு அறிவித்தல்வரை இராணுவத்தினர் ஊடரங்குச்சட்டம் பிறப்பித்திருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று முற்பகல் கந்தரோடைப் பகுதியில் இராணுவத்தினருக்கும், பிறிதொரு குழுவினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும், இரு தரப்பிற்குமிடையில் பரஸ்பரம் துப்பாக்கி மோதல்கள் இடம்பெற்றதாகவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து மாசியப்பிட்டி, கந்தரோடை, சுண்ணாகம், உடுவில், மானிப்பாய், சண்டிலிப்பாய, சங்கானை உள்ளிட்ட பகுதிகளில் பகல் 1 மணிமுதல் மறு அறிவித்தல்வரை ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தொடர்பாக இராணுவத்தினர் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்து வருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தப…
-
- 2 replies
- 1.8k views
-
-
புறக்கோட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்தினையடுத்து 7 தமிழ் இளைஞர்கள் கைது [திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2008, 06:34 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறக்கோட்டையில் உள்ள மல்வத்தை வீதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தினையடுத்து கோட்டை, புறக்கோட்டை ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தேடுதலில் ஏழு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் மலையகத்தைச் சேர்ந்த இளைஞர்களே கைது செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். படையினரும் காவல்துறையினரும் இணைந்து நடத்திய தேடுதலில் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். வாகனங்களும் வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டன. வாகனம் மற்றும் அரச தனியார் பேருந்து தரிப…
-
- 0 replies
- 635 views
-
-
பதவியைத் தக்க வைத்துக் கொள்கிற சுயநல நோக்குடன் இலங்கைத் தமிழர் நலனைக் காற்றில் பறக்க விட்டுள்ள முதலமைச்சர் கருணாநிதி இனியாவது தனது தவறை உணர்ந்து இலங்கையிலுள்ள இந்திய இராணுவப் பொறியியலாளர்களை திருப்பியழைக்க மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள பாரதிய ஜனதாக்கட்சியின் பொதுக்குழு இலங்கைத் தமிழருக்கு எதிராக இந்தியா செயற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த சனியன்று (செப்27) சேலத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது அதில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கெதிராக இந்திய அரசின் செயற்பாடு அமைந்துள்ளது. இப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தான் ஒரே வழி. இராணுவத் தீர்வு சாத்தியம…
-
- 0 replies
- 1.1k views
-
-
புறக்கோட்டை மல்வத்த வீதிக்கும் மெயின் வீதிக்கும் இடைப்பட்ட இடத்தில் சற்றும் முன்னர் குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது. இவ் வெடிச்சம்பவத்தில் 06 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிஸ் அத்தியட்சகர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். எவருக்கும் உயிராபத்தோ காயங்களோ ஏற்பட வில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக வாசலுக்கருகில் உள்ள மணிக்கூண்டுக் கோபுரத்தினருகினிலேயே இவ் வெடிச்சம்மபவம் இடம் பெற்றுள்ளது. வான் ஒன்றிற்கு அருகிலேயே இவ் வெடிச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
-
- 3 replies
- 2.2k views
-
-
வன்னியில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் மோதல்கள் ஒரு தீர்க்கமான கட்டத்தை நெருங்கிவரும் நிலையில், எதிர்பார்த்தளவுக்கு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மக்கள் வவுனியாவுக்கு வரவில்லை என்று ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர், பாராளுமன்ற உறுப்பினர் பேசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களை தங்கவைத்துப் பராமரிக்கக்கூடிய வசதிகள் வவுனியாவில் செய்யப்பட்டுள்ளபோதிலும், மிகக் குறைந்தளவு தொகையினரே இதுவரையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வவுனியாவுக்கு வந்திருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்கு, ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகக்…
-
- 5 replies
- 2.4k views
-
-
இலங்கைப் பெண் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் 9 மாத ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் பாலியல் தொழிலை நடாத்தி வந்த குற்றத்திற்காக, 34 வயதான யஸ்மின் டி சில்வா என்ற இலங்கைப் பெண்ணுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த பெண்ணுக்கு 15,000 ஸ்ரேலிங் பவுண்ட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் பாலியில் தொழிலை நடத்தி வந்த குறித்த பெண் நாளொன்றுக்கு சுமார் 500 ஸ்ரேலிங் பவுண்களை வருமானமாக ஈட்டி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. நான்கு மாத காலத்திற்குள் அபாராதப் பணத்தை செலுத்தாவிடின் சிறைத் தண்டனை 12 மாத காலத்திற்கு நீட்டிக்கப்படும் என பிரித்தானிய நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தள்ளது. பிரித்தா…
-
- 14 replies
- 3.5k views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு இன்றியமையாதது என்பதே த.தே.கூட்டமைபின் நிலைப்பாடு இருந்த போதிலும் எரியும் நெருப்பில் எண்ணெய் வாhப்பது போல அதன் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இரட்டை வேடம் போடுகின்ற இந்தியாவை நம்பிப் பயன் இல்லை என த.தே.கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. வினோநோகராதலிங்கம் தெரிவித்தார். சர்வதேசத்தின் பக்கச்சார்ப்ற்ற தன்மை இலங்கை பிரச்சினை தொடர்பில் கடைப்பிடிக்கபட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். யுத்தத்தால் இடம் பெயர்ந்துள்ள அப்பாவிப் பொதுமக்களின் நிலைமைகள் மற்றும் தேசிய, சர்வதேச நடவடிக்ககைள் எவ்வாறு அமைந்துள்ளன எனக் கேட்டதற்குப் பதிலளிக்கையிலேயே வினோ நோகராதலிங்கம எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தர் மேலும் அவர் : தினமும் அகதிக…
-
- 1 reply
- 1.4k views
-
-
வெகுவிரைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தேசியக்கொடியுடன் கிளிநொச்சிக்கு செல்வார் அந்த காலம் வெகுதொலைவில் இல்லை என அவரின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 30 வருடங்களாக இந்த நாட்டின் தலைவர் எவரும் இலங்கையின் தேசியக்கொடியுடன் கிளிநொச்சிக்குச் செல்லவில்லை. தற்போது இலங்கையில் யாருடைய அழுத்தத்திற்கும் உட்படாத ஒருவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விளங்குவதாக பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். www.tamilwin.com
-
- 10 replies
- 2.7k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பூரணமாக வீழ்த்துவதென்பது மகிந்த அரசாங்கத்தின் பகல் கனவு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். யுத்தம் தொடர்பான நீண்ட அனுவம் கொண்ட விடுதலைப் புலிகள் தங்களது யுத்த அணுகுமுறைகளை மாற்றியமைத்து போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என ஆங்கில ஊடகமொன்றுக்கு இவர் செவ்வியளித்துள்ளார். உலகின் முன்னணி இராணுவங்களின் ஒன்றான இந்தியப் படையினருக்கு விடுதலைப் புலிகள் பெரும் சவாலாக திகழந்தார்கள் என்பதனை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் ரீதியான அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு பயங்கரவாத முலாம் பூசப்படுவது வேதனைக்குரியதென அவர் குறிப்பிட்டுள்ளார்…
-
- 0 replies
- 2.3k views
-
-
இலங்கையிலுள்ள சிறுபான்மை இனத்தவர்கள் மட்டுமிஞ்சிய கோரிக்கைகளை முன்வைக்க முடியாது என இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்பொழுது வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகள் ஒரு வருடத்துக்குள் முடிவுக் கொண்டுவரப்பட்டுவிடும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். தமிழர்களுக்கு எனத் தனிநாடு கோருபவர்களால் மோதல்கள் வழிநடத்தப்படுவதாகக் குறிப்பிட்ட இராணுவத் தளபதி, எனினும் இலங்கையிலுள்ள சிங்களவர்கள் தமிழர்களுக்குத் தனிநாடு உருவாவதை அனுமதிக்கமாட்டார்கள் என கனடாவின் நஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் கூறினார். “இந்த நாடு சிங்களவர்களைச் சார்ந்தது என நாம் உறுதியாக நம்புகின்றோம். ஆனால், சிறுபான்மைச் சமூகங்களும் இங்கு இருப்…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கை அரசாங்கம் பெற்றோலிய குண்டு (petroleum bomb) பாவித்து உள்ளது
-
- 31 replies
- 5.5k views
-
-
கிளிநொச்சி பகுதியினை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஐந்து பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 589 views
-
-
மீண்டும் இலங்கை கடற்படை வெறித்தனம் - துப்பாக்கிச் சூட்டில் மீனவர் பலி ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் வெறித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் மதுரையைச் ேசர்ந்த மீனவர் உயிரிழந்தார். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும் தாக்கி காயப்படுத்துவதும் படகுகளை சேதப்படுத்துவதும் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இதற்கு விடிவே கிடையாதா என்ற ஏக்கத்திலும் சோகத்திலும் ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் இலங்கை கடற்படை தனது வெறியாட்டத்தை நடத்தியுள்ளது. இன்று அதிகாலை ராமேஸ்வரம் பகுதியைச் ேசர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண…
-
- 8 replies
- 1.5k views
-
-
வவுனியா பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைக் குண்டுதாரி முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். வவுனியா பஸ்தரிப்பு நிலையத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் எனக் கருதப்படும் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு 9 பேர் கடும் காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 3 பெண் காவற்துறைச் சிப்பாய்கள் உள்ளிட்ட 4 காவற்துறையினரும் 3 இராணுவச் சிப்பாய்களும் காயம் அடைந்ததாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் வாகனமொன்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 1 reply
- 1.6k views
-
-
வன்னிக்களமுனை அதிர்ந்து கொண்டிருக்கிறது. படையினரின் பாரிய முன்னகர்வு முயற்சிகளுக்கெதிராக விடுதலைப் புலிகளும் கடும் பதில் தாக்குதலை நடத்தி வருவதால் அங்கு என்றுமில்லாதளவுக்கு உக்கிரச் சமர் நடைபெற்று வருகிறது. எந்த முனையில் திரும்பினாலும் எதிர்த் தாக்குதல் மிகக் கடுமையாயிருப்பதால் முன்நகர்வுக்கான முனைகளை மாற்ற வேண்டிய நிலையில் படையினர் உள்ளனர். இது, அடுத்து வரும் நாட்களில் எந்த முனைகளிலும் படையினர் மிகப்பெரும் எதிர்ப்புக்களைச் சந்திக்கப் போவதைக் காட்டுகிறது. வவுனியா - மன்னார் வீதியிலிருந்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் முன் பாரிய படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் புலிகள் கடும் எதிர்ப்பைக் காட்டியிருந்த போதும் பின்னர் அந்தக் கடும் எதிர்ப்பைத் தளர்த்த…
-
- 0 replies
- 3.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திகிலிவட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து அமைத்திருந்த மினி முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனையோர் தப்பியோடி விட்டனர். ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னிக்களமுனையில் சிறப்புடன் செயற்பட்டுவரும் போராளிகளுக்கு பரிசுகளையும் பாராட்டுசான்றுகளையும் வழங்கி தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் மதிப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட படை தொடக்க கல்லூரியிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. எமது பிரதேசத்துக்குள் தாக்குதல் நடத்த முன்நகர்ந்த இலங்கை படைகளுக்கு எதிராக திட்டமிட்டபடி முறியடிப்புத்தாக்குதல் நடத்தி- எதிரிக்கு அழிவுகளைக்கொடுத்து- எதிரியின் உடலங்களையும் ஆயுத தளவாடங்களையும் கைப்பற்றிய வெற்றித்தாக்குதல்களில் முதன்மையாக ஈடுபட்ட போராளிகளுக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பாராட்டி சமர் ஆய்வு மையத்தின் மூலம் சான்றிதழ்களை வழங்கியுள்ளார். …
-
- 0 replies
- 1.9k views
-
-
மட்டக்களப்பு திகிலிவெட்டைப் பிரதேசத்தில் அமைந்திருந்த துணை இராணுவ குழுவான ரி.எம்.வி.பி காரியாலயம்மீது இன்று அதிகாலை 1.45அளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு வந்த குழுவொன்று மேற்படி அலுவலகம்மீது மேற்கொண்ட திடீர் தாக்குதல் காரணமாக அலுவலகத்தில் இருந்த துணை இராணுவக்குழு ரி.எம்.வி.பி உறுப்பினரான கதிரொளி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், மேற்படி அலுவலகத்தில் இருந்த மேலும் நான்கு துணை இராணுவ குழுவான ரி.எம்.வி.பி உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர். மேற்படி தாக்குதலை நடாத்தியோர் அப்பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில நாட்களாக TMVP துணை இராணுவ குழுவின் கருணா, பிள்ளையான் அணிகளிடையேயான மோதல்கள் கிழக்கில…
-
- 2 replies
- 1.3k views
-