ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான வெல்லம்பிட்டியவில் இன்று வியாழக்கிழமை இரவு 7:45 நிமிடமளவில் குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 747 views
-
-
பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு பிரச்சாரத்தையும் மக்களிடையே பாரட்டுக்கள் கிடைக்கும் செய்திகளையும் வெளியிட வேண்டாம் என உயர் மட்டத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீதியரசரையும் அவரது நீதிமன்ற நடவடிக்கைகளையும் பாராட்டி, அவர் தற்காலத்தின் மீட்பர் என புகழ்ந்து லங்காதீபவில் இன்று வெளியிடப்படவிருந்த கட்டுரையை வெளியிடாது நிர்வாக அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். இந்தக் கட்டுரையில் ஜனாதிபதி தொடர்பில் சிறிய விமர்சனமும் நீதியரசரின் செயற்பாடுகளைப் பாராட்டி எழுதப்பட்டுள்ளதாக அரசாங்கத்திற்கு தகவல்கள் கிடைத்ததாகவும் இதனையடுத்து அழுத்தங்களை ஏற்படுத்தி அந்தக் கட்டுரை வெளியிடப்படுவது இன்று தடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளை உடைத்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கையின் வடபகுதில் நிலைவும் போர்ச் சூழ்நிலை குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அண்மையில் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கை ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்துள்ளதென அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐ.நா செயலாளரின் ஒரு சில கருத்துக்கள் ஏதோ ஓர் தரப்பை மாத்திரம் சார்பாக வைத்து கூறப்பட்ட கருத்துக்களாக காணப்படுகின்றதென இலங்கை சமாதான செயலகத்தின் பணிப்பாளர்நாயகம் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். அண்மைக்கால மோதல்களில் சிவிலியன்கள் பெருமளவில் பாதிக்கப்படவில்லை எனக் கூறிய அவர் ஐக்கிய நாடுகளின் செயலாளருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடபகுதி சிவிலியன்கள் நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆலையடிவேம்பு,பனங்காடு பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு வீடொன்றினுள் நுழைந்த இனியபாரதியின் குழுவைச்சேர்ந்த ஆயுதபாணிகள் சுமார் இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பனங்காடு சாகம வீதியிலுள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் நுழைந்த ஆயுதபாணிகளே தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். முகத்தை கறுப்புத் துணியால் மூடிக் கட்டியவாறு ஆயுதங்களுடன் வீட்டினுள் நுழைந்த இந்தக் கோஷ்டி வீட்டுத் தொலைபேசி இணைப்பைத் துண்டித்ததுடன்,அங்கிருந்த கையடக்கத் தொலைபேசிகளையும் பறித்தெடுத்தது. இதன் பின் வீட்டிலிருந்தவர்களை துப்பாக்கிமுனையில்அறையொன்ற
-
- 0 replies
- 659 views
-
-
கொழும்பு நகரை அண்மித்த வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் புகையிரத தண்டவாளத்திற்கருகில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று இரவு 7.15 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புகையிரத தண்டவாளத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக காவற்தறையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விபரங்களுக்கு காத்திருங்கள் மேலதிக விபரங்களுக்கு காத்திருங்கள் http://www.tamilskynews.com/
-
- 2 replies
- 2k views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணப்பணி செய்து வந்த அனைத்துலக தொண்டு நிறுவனங்களை வன்னிப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு சிங்கள அரசு கட்டளை விடுத்துள்ளதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 535 views
-
-
வன்னி மக்களின் அவலநிலையினை வெளிப்படுத்துவதற்காக நெதர்லாந்து நாட்டில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நேற்று நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 503 views
-
-
மொனராகலை கொட்டியாகல பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியொன்றிலிருந்து 7 சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவல்களை அடுத்து பொலிஸார் இந்த சடலங்களை கண்டு பிடித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு சடலங்கள் முதலில் மீட்கப்பட்டதாகவும், பின்னர் ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. இந்த சடலங்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார் இந்த சடலங்கள் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களுடையதாக இருக்கலாம் என மனித உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். http://www.tamilskynews.com/index.php?opti...…
-
- 2 replies
- 1.2k views
-
-
கொட்டாவைக்கும் ருக்மலைக்குமிடையில் பிரதான வீதியிலி எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் காணப்பட்ட இடத்திலிருந்து 300 மீற்றர் தூரத்தில் இரத்தக்கறை படிந்த செருப்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட சடலத்துக்குரியவருக்கு முப்பது வயதிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. வேறெங்கோ வைத்துக் கொலை செய்து விட்டு சடலத்தை இப்பகுதியல் கொண்டு வந்து போட்டிருக்கலாம் எனப் பொலிஸாரால் நம்பப்படுகிறது. மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 0 replies
- 938 views
-
-
இலங்கையின் வடபகுதியில் அதிகரித்திருக்கும் மோதல்கள் மற்றும் அவற்றால் மனிதநேயப் பணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் தடைகளால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமூன் கலை தெரிவித்துள்ளார். மோதல்கள் இடம்பெறும் வன்னிப் பகுதியிலிலிருந்து ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள் உட்பட அரசசார்பற்ற நிறுவனங்கள் அனைத்தையும் வெளியேறுமாறு அரசாங்கம் பணித்துள்ள நிலையிலேயே பான்கீமூன் கவலை வெளியிட்டுள்ளார். “இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை உரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தவேண்டும். மனிதநேயப் பணியாளர்கள் தமது பணிகளைச் சுதந்திரமாகப் பாதுகாப்புடன் முன்னெடுப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்” என பான்கீமூன் விடுத்துள்…
-
- 13 replies
- 1.8k views
-
-
டி சேரம் வீதிக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. - டயலொக் குறுநகல் செய்தி
-
- 7 replies
- 2.3k views
-
-
வவுனியா விமானப்படை முகாமில் உள்ள ராடர் மையத்தை அழிக்கும் நோக்கில் நேற்று முன்தினம் செயற்பட்ட விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதல் அணியினர் வன்னி படைத்தலைமையகத்திற்கு அருகில் உள்ள சமனலகுளம் தமிழ் கிராமத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தனர் என பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல் வெளியாகியுள்ளது. வன்னி பாதுகாப்பு தலைமையகத்திற்கு கிழக்கில் காட்டு பகுதியை எல்லையாகக் கொண்ட சமனலகுளத்தில் உள்ள வீடு ஒன்றில் அங்கிருந்தவர்களை வெளியேற்றி விட்டு இவர்கள் தற்காலிகமாக தங்கியிருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. செய்மதி தொலைபேசியூடாக வன்னியில் உள்ள புலித்தலைவர்களுடன் இந்த கரும்புலிகள் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. கரும்புலிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் செய்ம…
-
- 0 replies
- 2k views
-
-
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஆளில்லாத விமானம் அநுராதபுர விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் ஜானக நாயணக்கார தெரிவித்துள்ளார். விமானம் சிறிது சேதமடைந்திருப்பதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கெனவே இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான மிகப்பெறுமதிவாய்ந்த இவ்வாறான ஆளில்லா விமானம் ஒன்றை அநுராதபுரம் விமானப்படைமுகாமை விடுதலைப்புலிகள் தாக்கியபோது தாக்கியழித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 0 replies
- 900 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
''சிறிலங்காவில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான தாக்குதலுக்கு மத்திய அரசு எந்தவித ராணுவ உதவியும் அளிக்கக்கூடாது'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறிலங்காவுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று மத்திய அரசு கூறி வந்தது. ஆனால், வவுனியா தாக்குதலில் இந்திய ரேடார் கருவிகள் சேதம் அடைந்ததுடன் 2 இந்தியப் பொறியாளர்களும் காயமடைந்துள்ளனர். சிறிலங்க ராணுவத்துக்கு ஆதரவாக மத்திய அரசு ஆட்களை அனுப்பி வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு சிறிலங்காவுக்கு எந்தவித ராணுவ உதவியையும் அளிக்கக்கூடாது. அளிக்கமாட்டோம் என்ற உறுதியை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத…
-
- 0 replies
- 727 views
-
-
சிறிலங்கா படையினருக்காக ராடர்களை இயக்கும் இந்தியாவின் "பாரத்" தொழில்நுட்பவியல் நிறுவனம் [வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2008, 09:11 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] இந்தியாவில் உள்ள "பாரத்" தொழில்நுட்பவியல் நிறுவனமே சிறிலங்கா படைத்தரப்புக்கான ராடர் கருவிகளை இயக்கும் பொறியியல் தொழில்நுட்பவியலாளர்களை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய மற்றும் சிறிலங்கா அரசாங்கங்கள் இணங்கிக்கொண்டதற்கு அமைவாக குறித்த இந்த நிறுவனம் பொறியியல் தொழில்நுட்பவியலாளர்களை வழங்கி வருகின்றது என்று கொழும்பில் உள்ள இந்திய துதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்துடன் செயற்பட்டு வரும் "பாரத்" தொழில்நுட்ப நிறுவனம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறிலங்கா படை…
-
- 6 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வவுணதீவு பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரும் பொதுமக்களை அச்சுறுத்தி கொள்ளையடித்து வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 631 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான் பிரதேசத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 680 views
-
-
வவுனியா விமானப்படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஆட்டிலறி தாக்குதல்களைமேற்கொண்டுள்ளன
-
- 19 replies
- 5.4k views
-
-
வான் பாதுகாப்பு அவதானிப்புக்கள் கட்டுநாயக்க ராடர் நிலையத்துக்கு மாற்றம் [வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2008, 09:32 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] வவுனியாவில் உள்ள பிரதான கட்டளையிடும் சிறிலங்கா படை முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்லறி எறிகணை மற்றும் வானூர்தி தாக்குதல்களிலான மரபு வழி தாக்குதலை அடுத்து சிறிலங்கா தலைநகர் கொழும்பின் வான் மார்க்கமான எல்லை பாதுகாப்பு அவதானிப்புக்கள் கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தில் உள்ள ராடர் கருவிகள் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக படைத்தரப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த படை முகாமில் பொருத்தப்பட்டிருந்த இந்தியாவின் இந்திரா ராடர் கருவிகள், சிறிலங்கா படைத்தரப்பின் ஆகாய எல்லைக்குள் புலிகளின் வானூர்திகள் உள்நுழ…
-
- 4 replies
- 1.8k views
-
-
இலங்கை அரசாங்கம் தமிழீழக் கோரிக்கையை ஏற்று, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பாராளுமன்றத்தில் கூறினார். தமிழர்களைக் கொல்வதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் யுத்தத்துக்கு இந்தியா ஆயுத உதவிகள் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொண்டு இலங்கை அரசாங்கம் தமிழர்களைக் கொன்றொழித்துவருவதாகத் தெரிவித்தார். இதற்காக ‘சொவ்ட் லோன்’ திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு இந்தியா நிதியுதவி வழங்குகிறது என்றார் அவர். மன்னார் பகுதியில் இந்தியாவுக்குச் சொந்தமான நிறுவனம் எண்ணெய் அகழ்வை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி தொடர்பாக இன்று புதன்கிழமை இடம்பெற்ற…
-
- 2 replies
- 1.3k views
-
-
புலிகளின் வானூர்தி தாக்குதலில் காயமடைந்த இந்திய தொழில்நுட்ப நிபுணர்களுக்கு கொழும்பில் தொடர்ந்து சிகிச்சை [வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2008, 08:56 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய கூட்டு நடவடிக்கைகளுக்கான தலைமையகத்தின் மீது நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மும்முனைத் தாக்குதலில் காயமடைந்து கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட இரண்டு இந்திய தொழில்நுட்பவியலாளர்களும் தொடர்ந்தும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா வான்படையின் ராடர் பிரிவில் பணிபுரிந்த இந்த இந்த இருவரும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்து உடனடியாகவே கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டனர். …
-
- 3 replies
- 1.1k views
-
-
கரும்புலிப் போர் வடிவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. வீரத்தினதும் - உயிர் ஈகத்தினதும் - மனவுறுதியினதும் அதியுயர் வடிவமாக கரும்புலிப் போர் முறை உள்ளது. தன்னோடு எதிரி இலக்கையும் சேர்த்தழிக்கும் ஓர்மம் நிறைந்த போர்முறையாக அது அமைந்துள்ளது. அதனால்த் தான் உயிராயுதம் என்ற பொருள் பொதிந்த பெயர் சூட்டலுடன் கரும்புலிப் போர் வடிவம் இனங்காணப்பட்டுள்ளது. கடலிலும் - தரையிலும் இந்தப் போர்முறையை புலிகள் இயக்கம் பல்வேறு உத்திகள் வாயிலாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. தமிழரது வீரமரபின் மகுடமாக கரும்புலிகள் திகழ்கின்றனர். கரும்புலிப் போர்முறையின் தேவை என்ன? கரும்புலிகள் எவ்வாறு உருவாகின்றனர்? கரும்புலிப் போர்முறையை சர்வதேசம் எவ்வாறு நோக்…
-
- 1 reply
- 1.9k views
-
-
சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் யுத்த பிரதேசங்களிலிருந்து வெளியேற வேண்டும் என்ற அரசாங்கத்தின் உத்தரவு வன்னி மக்களை மேலும் அவல நிலைக்கு உட்படுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களை வெளியேறுமாறு விடுக்கப்பட்ட உத்தரவின் மூலம் குறித்த பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் இரு சாராரினதும் நெருக்கடிகளுக்கு ஆளாக நேரிடும் என சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னி சிவிலியன்களை தடுத்து வைக்கக் கூடிய ஓர் நிலை தோன்றும் என மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. மிகவும் இன்றியமையாத உணவு உள்ளிட்ட உதவிகளை பெற்றுக் கொள்ள முடியாது இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் காலங்களில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கக் கூ…
-
- 0 replies
- 791 views
-
-
முழங்காவிலை நோக்கிச் செல்லும் வழி நெடுகிலும் மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் ஊர்திகள் எதிராக வந்து கொண்டிருந்தன. மக்கள் செல்லும் திசைக்கு எதிராக களமுனைப் போராளிகள் சென்று கொண்டிருந்தனர். எதிரிகள் துரத்தியடிக்கும் எறிகணைகளுக்கு அஞ்சி மக்கள் அவை எட்டாத தூரத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். நேற்று முழங்காவில் இன்று ஜெயபுரம் நாளை வன்னேரி பின்னர் அக்கராயன் அதையடுத்து கோணாவில் கிளிநொச்சியென்று அவர்கள் ஊரோடிக் கொண்டிருந்தனர். இந்த ஓட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்று நினைத்த தமிழர்கள் போராளிகளாகிக் களமுனையில் நிற்கின்றார்கள். முழங்காவிலில் புதிதாக அமைக்கப்பட்ட முன்னணிக் காப்பரண் கோட்டில் 2ஆம் லெப்.மாலதி படையணிப் போராளிகள் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கா…
-
- 0 replies
- 1.2k views
-