Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "போர் தான் தீர்வு என்றால் நாங்களும் தயார்" - இலங்கை எம்.பி பேட்டி குண்டு மழை பொழியும் போர் மேகம் நிரந்தரமாகச் சூழ்ந்திருக்கிறது இலங்கையில். போரின் விளைவாக சொந்த பந்தங்கள், வீடு வாசல், உடைமைகளை இழந்து தவிக்கிறார்கள், ஈழத் தமிழர்கள். சலிக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள், தமிழீழ விடுதலைப் புலிகள். இலங்கையின் வடபகுதியான கிளிநொச்சியில் முன்னேறி வரும் இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் வசம் இருந்த மல்லாவி என்ற கிராமத்தைக் கைப்பற்றிவிட்டதாக மார்தட்டுகிறது. ஆனால், ராணுவத்தின் முயற்சியை முறியடித்து இலங்கை வீரர்கள் 75 பேரைக் கொன்றுவிட்டதாக அறிவித்துள்ளனர், விடுதலைப் புலிகள். உண்மையில் இலங்கையில் என்ன நடக்கிறது? ஈழப் பிரச்னைக்குத் தீர்வே இல்லையா என்பன உள்ளிட்ட நம் சந்தேகங்களுக்க…

    • 1 reply
    • 2.5k views
  2. தமிழர் வாழ் பிரதேசங்களில் சிறிலங்கா அரச படைகளின் தாக்குதல்களானது நாளுக்கு நாள் அப்பாவி தமிழ் மக்களின் குடிமனைகளையும், அவர்தம் வாழ்வாதாரங்களையும் இலக்கு வைத்து அழித்தொழிக்கும் செயலில் மட்டுமல்லாது அப்பாவி தமிழ் மக்களின் உயிரையும் பறித்தெடுக்கும் நோக்கில் நடத்திக் கொண்டிருக்கிறது. இதேவேளை தமிழர் பிரதேசங்கள் முழுமையான பொருளாதார தடைகளுக்கு உட்பட்டிருக்கும் நிலையில், உணவு, மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. சிறிலங்கா அரச படைகளின் விமானத்தாக்குதல்கள், எறிகணை வீச்சுக்கள், ஆழ ஊடுருவும் படையினரின் கண்ணிவெடித் தாக்குதல்களில் படுகாயமடையும் அப்பாவி பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை செய்யவும் இயலாத நிலை காணப்படுகிறது. அப்பகுதிகளில் கடமையாற்றிய ஐக்கிய நாடுகள் அ…

  3. புலிகளுக்கு நிதி வழங்கும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களைத் திருப்பதிப்படுத்தவே புலிகள் வவுனியாவில் விமானத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற, நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் புலிகளுக்கு நிதி உதவி வழங்குதில் இப்போது தயக்கம் காட்டுகின்றனர். இதன் காரணமாக புலிகளின் வெளிநாட்டு வருவாய் வெகுவாகக் குறைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். புலிகள் தமது நிலப்பரப்புக்களை இழந்துவரும் நிலையிலும் நாளுக்கு நாள் படையினரால் புலிகள்…

  4. புலிகளின் விமானம் வீழ்த்தப்பட்டது உண்மை எங்கே, எப்படி என்று எவரும் கேட்கக் கூடாது! இது அமைச்சர் கெஹலியவின் விளக்கம் வுவனியா இராணுவ முகாமைத் தாக்க வந்த புலிகளின் இரண்டு விமானங்களில் ஒன்று தாக்கியழிக்கப்பட்டமை உண்மை என்றும் அது எப்படித் தாக்கியழிக்கப்பட்டது, எங்கு வைத்துத் தாக்கியழிக்கப்பட்டது என்ற கேள்வியெல்லாம் எவரும் கேட்கக்கூடாது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று நாடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உøயாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: வவுனியா இராணுவ முகாம்மீது புலிகளால் நடத்தப்பட்ட விமானத்தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. புலிகளின் இரண்டு விம…

  5. இந்திய அரசின் நேரடி உதவியினை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் [புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2008, 10:00 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர்களுக்கு எதிராக இந்தியா அரசாங்கம் நேரடியாக உதவி வருவதனை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சிங்கள படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய வான்குண்டுத் தாக்குதலில் பலர் பலியாகியிருப்பதுடன் ஏராளமான சிங்கள படையினர் படுகாயங்களும் அடைந்துள்ளனர். அவ்வாறு படுகாயம் அடைந்தவர்களில் இந்திய பொறியியலாளர்கள் மூவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரிய வருகிறது. …

    • 0 replies
    • 1.2k views
  6. தமிழின அழிப்புக்கு இந்தியா துணை போவது அம்பலமாகியுள்ளது: சுப.வீரபாண்டியன் [புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2008, 07:32 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஆயுதங்கள் வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்திய அரசு அதிகாரிகளையும் அங்கு அனுப்பி பயிற்சி கொடுத்து தமிழின அழிப்புக்கு துணைபோவது வெட்டவெளிச்சமாகி உள்ளது என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வவுனியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை (09.09.08) நடைபெற்றுள்ள வான் புலிகளின் தாக்குதலில் இரண்டு இந்திய அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதனை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதிசெய்து…

  7. சிறிலங்க ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க இந்திய ராணுவ வீரர்களை மறைமுகமாக அனு‌ப்‌பி‌யிரு‌ப்பது இ‌ந்‌திய அர‌சி‌ன் த‌‌மிழன‌ ‌விரோத போ‌க்காகு‌ம் எ‌ன்று தெரிவித்துள்ள தொல். திருமாவளவன், அவர்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்! இந்த அரசின் இப்படிப்பட்ட மறைமுக நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று திருமாவளவன் கூறியுள்ளார். சிறிலங்காவின் வவுனியாவில் உள்ள படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் விமானம் மற்றும் தரை வழித் தாக்குதல்களை நடத்தி இரண்டு ராடார்களை அழித்தனர். இதில், ராடார்களை இயக்கிய இந்திய வீரர்கள் இருவ‌ர் காயமடைந்துள்ளனர். இதனைக் குறிப்பிட்டு இன்று அறிக்கை வெளியிட்டுள்ள திருமாவளவன், சிங்கள படையினருக்கு எதிராக விடுதலைப…

    • 2 replies
    • 1.7k views
  8. வடபகுதி போர் நிலைமைகளை தொடர்பில் சிறீலங்கா இராணுவத் தமையகம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்ப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை சிறீலங்கா பாராளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனவிரத்ன உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடபகுதி போர் நிலைமைகளை தொடர்பில் சிறீலங்கா இராணுவத் தமையகம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுகின்றது. உண்மையான தகவல்கள் மக்ளைச் சென்றடைவதில்லை. வவுனியா இராணுவக் கூட்டுப்படைத் தளத்தில் ராடார் கருவிகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளன. கடந்த 2006ம் ஆண்டு முதல் ஆரம்பமாகிய யுத்தத்தில் சிறீல்ஙகாப் படையினர் தரப்பில் 1851 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 9…

  9. இந்திய அரசாங்கத்தின் இரட்டை வேடத்தினை தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதல் அம்பலப்படுத்தியுள்ளது என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: வவுனியாவில் உள்ள சிங்கள இராணுவத் தலைமையகத்தின் மீது வான் புலிகளும் கரும்புலிகளும் நடத்திய தாக்குதல்களின் விளைவாக இந்தியா வழங்கியிருந்த ராடர் கருவி முற்றிலுமாக அழிக்கப்பட்டதுடன் அதனை இயக்கிய இந்திய இராணுவ அதிகாரிகள் இருவர் காயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி இந்திய அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திவிட்டது. சிங்கள அரசுக்கு ஆயுத உதவி மட்டுமல்ல ஆள் உதவியையும்…

  10. பட்டினிச்சாவை பரிசளி்த்துச்செல்லும் தொண்டு நிறுவனங்கள்: கிளி. பொது அமைப்புக்களின் ஒன்றியம் [புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2008, 07:45 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னியிலிருந்து தொண்டு நிறுவனங்களை வெளியேற்றுதல் பட்டினிச்சாவையும், காப்பகழி வாழ்கையையும், தமிழ் மக்களுக்கு பரிசளிப்பதற்கு சமனானது என்று கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளது. அம்மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: உதவி அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேறுமாறு சிறிலங்கா அரசு வெளியிட்டுள்ள செய்தி அச்சம் தருவதாகவும், பட்டினிச்சாவையும், காப்பகழி வாழ்கையையும், தமிழ் மக்களுக்கு பரிசளிக்கவும், அரசு…

  11. அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு மாணவர் உயிரிழந்துடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள டி.எம்.வி.பியினரின் அலுவலகத்திற்கு முன்னால் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 18வயதான முருகப்பன் கேதீஸ் என்ற மாணவரே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர் 19வயதான அல்லிராஜ் காமராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கேதீஸ் என்பவர் சாதாரண தரப்பரீட்சையை எழுதிவிட்டு, கட்டிடத் தொழிலாளியாக வேலைசெய்து வந்துள்ளார். கமராஜ் என்ற இளைஞர் பரீட்சை ஒன்றுக்காக தயாராகி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆலையடிவேம்பு முருகன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டு விட்டு திரும்பி…

  12. வவுனியா படைத்தளத்தில் இந்திய அதிகாரிகள் பணியாற்றியதனை ஒப்புக்கொண்டது இந்திய தூதரகம் [புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2008, 06:24 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] வவுனியா சிறிலங்கா படைத் தலைமையகம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு படை நடவடிக்கையின் போது இந்திய அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளனர் என்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இந்திய தூதரகத்தின் ஊடகத்துறை பேச்சாளர் தின்கர் அஸ்த்தான தெரிவித்துள்ளதாவது: வவுனியா படைத் தலைமையகம் மீது நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலின் போது இந்திய அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளனர். வவுனியாவில் உள்ள சிறிலங்கா படையினரின் தளத்தில் பொருத்தப்பட்டிருந்த ராடரின் …

  13. வவுனியா நகருக்கு அண்மையாக உள்ள சிறிலங்கா படையினரின் முன்னணி நிலைகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி இன்று குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்று வானூர்திகள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ராடரில் தென்பட்டதாகவும் வவுனியாவுக்கு மேலாக பறந்த வானூர்தி ஒன்று சிறிலங்கா படையினரின் முன்னணி நிலைகள் மீது குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றதாகவும் அதனைத் தொடர்ந்து புலிகள் வவுனியாவை நோக்கி ஆட்லறி எறிகணைத்தாக்குதல் நடத்தியதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. -puthinam- அர்ரா சக்கை!!

    • 96 replies
    • 21.1k views
  14. வவுனியா சிறிலங்கா படைத் தலைமையகம் மீது தமிழீழ விடுதலை புலிகள் இன்று அதிகாலை நடத்திய ஆட்லறி மற்றும் வான் தாக்குதல்களினாலான மரபு வழி தாக்குதலில் இந்தியா வழங்கிய இந்திரா ராடர் அதற்கான கட்டுப்பாட்டு அறை ஆகியவை சேதமடைந்தமை தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய இராணுவ பொறியியல் தொழில்நுட்பவியலாளர் குழு ஓன்று கொழும்புக்கு வரவுள்ளதாக இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சிறிலங்கா வான்படைக்கு புதிய ராடர் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது குறித்தும் சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் இக்குழு பேச்சு நடத்தவுள்ளதாகவும் இந்திய தூதரக வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. வவுனியா படைத் தலைமையகம் அமைந்துள்ள ஜோசப் இராணுவ முகாமின் ராடர் கட்டுப்பாட்டு அற…

  15. வன்னியில் சிறிலங்கா படையினரால் பெருமெடுப்பில் படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு, பல பிரதேசங்களை புலிகளிடம் இருந்து கைப்பற்றி விட்டோம், புலிகளை ஏறக்குறைய அழித்து விட்டோம் என்று சிறிலங்கா அரசு பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்த நிலையில், மல்லாவியில் ஏறக்குறைய ஐநூறு சிறிலங்கா இராணுவத்தினர் புலிகளினால் யுத்தக் கைதிகள் ஆக்கப்பட்டிருப்பதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமது பல இராணுவத்தினர் காணாமல் போயிருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு பகிரங்கமாக ஒப்புக்கொண்ட நிலையில், இக்காணாமல் போன சிறிலங்கா இராணுவத்தினர் புலிகளின் கைகளில் வீழ்ந்து இருப்பதாக தெரியவருகிறது. இதேவேளை வன்னியில் படையெடுப்பை சிறிலங்கா இராணுவத்தினர் தொடங்கிய ஆரம்பப் பகுதியை விடுதலைப் புலிகள் ஊடறுத்து துண்டி…

  16. வவுனியாவில் உள்ள வன்னிப் பாதுகாப்புப் படைகளின் தலைமையகம் மீது நேற்று அதிகாலை மூன்று வழிகளில் விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித்தாக்குதல்களில் அந்தத் தளத்துக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருகின்றது தமது விமானங்கள் மூலம் குண்டு வீசியும், ஆட்லறிகள் மூலம் ஷெல் குண்டுகளை ஏவியும், கரும்புலிப் படை அணி மூலம் ஊடுருவியும் புலிகள் இந்தத் தாக்குதல்களை நேற்று விடியும்வேளை நடத்தியிருக்கிறார்கள். வன்னியில், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம் ஒன்றிலிருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு சற்றுப் பின்னாக புறப்பட்ட புலிகளின் இரண்டு மர்ம விமானங்கள் வன்னிப் படைத்தலையகத்துடன் இருந்த விமானத்தளத்தில் பொருத்தப்பட்டிருந்த ராடர் கட்டமைப்பை இலக்குவைத்து அடுத்தடுத்து நான்கு குண்டுகளை வீசின. புலிக…

  17. இலங்கையில் இருந்து அமைதி காக்கும் படையினர் 1990 ஆம் ஆண்டில் வெளியேறிய பின்னர், 18 வருடங்களின் பின்னர் புலிகளின் தாக்குதலில், அதுவும் விமானத் தாக்குதலில் இந்தியப் படையினர் இருவர் காயமடைந்துள்ளனர் என்று இந்தியாவின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான ஹிந்துஸ்தான் ரைம்ஸ் விமர்சித்துள்ளது. வவுனியாவில் உள்ள இலங்கை விமானப்படை ராடர் தளத்தை இலக்கு வைத்து புலிகள் நேற்று நடத்திய தாக்குதலில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய விமானப் படைத் தொழில்நுட்பவியலாளர்களும் காயமடைந்திருக்கின்றனர். இந்திய விமானப் படையின் சார்ஜண்ட் தர நிலையைச் சேர்ந்த சிந்தாமணி ரவூத் மற்றும் ஏ.கே.தாக்கூர் ஆகியோரே இத்தாக்குதலில் காயமடைந்திருக்கின்றனர். சம்பந்தப்பட்ட இந்திரா II ரக ராடரை இந்தியாவே இலங்கைக…

  18. CNN தொலைக்காட்சியில் சிறுபான்மை இனம் தேசிய இனமாகும் சாத்தியம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பறீட் சக்காரியாவின் (Fareed Zakaria') "GPS" என்ற வாராந்த நிகழ்ச்சியில் கடந்த 7ஆம் நாள் நிகழ்ச்சியின் நிறைவில், உலகில் எந்த சிறுபான்மை இனம் தேசிய இனமாகுவதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேசிய இனமாக ஏற்கனவே இருக்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது தனிநாட்டுக் கோரிக்கையை அங்கீகரிக்குமாறு கோரி இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பாளருக்கு மின்னஞ்சல் அனுப்பி வருகின்றனர். FareedZakariaGPS@cnn.comThis e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தமிழ் மக்கள் தமது வேணவா…

  19. கிட்டு பீரங்கிப் படையணியின் சூட்டாதரவுடனும், வான்புலிகளின் குண்டு வீச்சுத் தாக்குதல் ஒத்துழைப்புடனும் விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியொன்று இன்று அதிகாலை வவுனியாவில் உள்ள வன்னி கூட்டுப்படைத் தளம் மீது அதிரடித் தாக்குதல் ஒன்றை நடாத்தி படைத் தரப்பிற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. பத்துப் படையினரும் ஒரு காவல்துறையினனும் கொல்லப்பட்டதாகவும், 15 படையினரும், 5 வான் படையினரும், எட்டு கால்துறையினரும் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பு எந்தத் தவல்களையும் இதுவரை வெளியிடவில்லை.

  20. SLAF bombs Ki'linochchi town [TamilNet, Wednesday, 10 September 2008, 01:46 GMT] Sri Lanka Air Force (SLAF) Kfir bombers attacked Ki'linochchi town Wednesday around 7:00 a.m., destroying 3 houses close to the Pachchilaippa'l'li Divisional Secretariat, which is located in the heart of the town. Casualty details are not known. The SLAF bombardment on Ki'linohchci comes after Gotabhaya Rajapaksa, the Sri Lankan Defence Secretary and the brother of SL President, publicly threatening the foreign NGOs to leave LTTE controlled region of Vanni, which is overcrowded with displaced people, and after the devastating LTTE attack on Sri Lankan forces Vanni HQ. Meanwhile, the…

    • 0 replies
    • 1.3k views
  21. வன்னியில் மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள நிலையில், நேபாளத்திற்கு 25 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவித் தொகையை சிறீலங்கா அரசாங்கம் வழங்கியுள்ளது. நோபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருகில் பாதிக்கப்பட்ட மக்ளுக்கான உதவித் தொகைக்குரிய காசோலையை காத்மண்டுவிலுள்ள சிறீலங்கா தூதுவர் ரணவீர, அந்த நாட்டின் தலைமை அமைச்சர் புஸ்பா கமல் தாலிடம் கையளித்துள்ளார். பருவப்பெயர்ச்சி காலநிலையால் 60 ஆயிரம் மக்கள் இடப்பெயர்வு அவலத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும், அவர்களுக்கே இந்த உதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் சிறீலங்கா அரசு கூறுகின்றது. வன்னியில் இடம்பெயர்ந்துள்ள இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்குரிய உதவிகளைத் தடை செய்துள்ள சிறீலங்கா அரசாங்கம், அங்குள்ள மனிதநேய …

  22. ஜெனீவா போரியல் விதிகளின் கீழ் பொதுமக்களுக்கும் அவர்களின் வாழிடங்களுக்கும் பாதிப்பை உண்டு பண்ணாத வகையில்.. அல்லது அதைத் தவிர்க்கும் வகையில் இராணுவம் நடந்து கொள்ள வேண்டும் என்பது நியமம். ஆனால் தனது இராணுவத் தேவைகளுக்காக மக்கள் சொந்த இடங்களில் இருந்தே விரட்டி வரும் சிறீலங்கா அரச பயங்கரவாதப்படைகளின் கோரிக்கையை ஏற்று ஐநா சபை உட்பட சர்வதேச தொண்டு அமைப்புக்கள் வன்னியை விட்டு வெளியேற உள்ள இந்த நேரத்தில்.. ஓர் ஆறுதல் தரும் விடயமாக.. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் எக்கட்டத்திலும் தான் வன்னியை விட்டு வெளியேறப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. இதனால் சிறீலங்கா அரசுடன் முரண்படும் நிலைக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சென்றுள்ளது. இருப்பினும் வன்னி மக்கள் மீதான அதன் மனிதாபிம…

    • 6 replies
    • 2.3k views
  23. ஒரு மாதத்தில் 157 படையினர் பலி, 983 பேர் காயம் வவுனியா நிருபர் 9/9/2008 3:08:12 PM - ஆகஸ்ட் முதலாம் திகதிலிருந்து செப்டெம்பர் முதலாம் திகதி வரையிலான ஒரு மாதத்தில் படைத் தரப்பில் 157 பேர் பலியாகியுள்ளனர் எனவும், 983 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். அவசர கால சட்டம் தொடர்பான அறிக்கை பாராளுமன்றில் சமர்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவசர கால சட்டத்திற்கு வாக்களிப்பதிலிருந்து விலகியிருப்பது பயங்கரவாதத்திற்கு துணை போகும் செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

    • 6 replies
    • 1.4k views
  24. கல்விப் பொதுத் தராதர உயர்தர விடைத்தாள் திருத்தும் பணியில் கலந்தாராய்வுகளை மேற்கொள்ளாமல் விரிவுரையாளர்களின் புள்ளியியல் திட்டத்தின் அடிப்படையிலே மட்டும் விடைத்தாள்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் தமிழ் மொழி மூல மாணவர்களுக்குப் பதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இலஙகைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கடும் விசனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த ச.சரவணபவானந்தன் கருத்துத் தெரிவிக்கையி;ல், உயர்தரப்பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியின் போது வழமையாக வினாப்பத்திரங்களைத் தயாரித்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் புள்ளியிடும் முறை வழங்கப்படும். இதன் பின்னர் பொறுப்பான உயர் அதிகாரிகளும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்தாலோசித்து புள்ளியியல் தொடர்பான மாற…

  25. அம்பாறை வக்குமுட்டியாவ பகுதியில் சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித்தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைநதவர்களில் மூவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 746 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.