Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா மாவட்டத்தில் உள்ள கனகராயன்குளம் பகுதியில் அனைத்துலக தொண்டு நிறுவனத்தின் போருட் வாகனத்தின் மீது சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 826 views
  2. இராணுவ முகாமொன்றில் பாலியல் இச்சைக்கு இணங்காத பெண் சிப்பாய்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பிரபல சிங்கள ஊடகமொன்று(ராவய‌) தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த பெண் இராணுவச் சிப்பாயின் இடுப்புப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுப் பின்னர் அதனைத் தற்கொலை முயற்சியாக வெளிக்காட்ட மாதுருஓயா முகாம் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மாதுருஓயா இராணுவ முகாமைச் சேர்ந்த வை.கே. சந்தியா குமாரி என்ற பெண் சிப்பாயே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். மிக மோசமாகக் காயமடைந்த சந்தியா குமாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இராணுவ முகாமைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரினாலேயே காயமடைந்த பெண்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த ஊடகம் மேலும் குறிப்பி…

  3. கிளிநொச்சி புதுமுறிப்புப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் மீது சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணைத்தாக்குதலில் இரு குழந்தைகள் உட்பட ஐவர் பலியாகியுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 613 views
  4. இன்று மாலை சிறிலங்கா இரானுவத்தின் செல் அடியால் மன்னாரில் இருந்து இடம் பெயர்ந்து கிளிநொச்சி புமுதுமுறிப்புக் கிராமத்தில் தஞ்சம் அடைந்திருந்த ஐந்து பொது மக்கள் சிறுவர் உடபடப் பலி, மேலும் பலர் காயம். செய்தி மூலம் : தமிழ் நெற்

  5. மிஹிந்தலை மஹாகந்தர வாவிக்கு அருகில் இரு மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக மிஹிந்தலைக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வாவியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இந்த எலும்புக்கூடுகளை அவதானித்து காவற்துறையினருக்கு தகவல் வளங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்கிறது. காவற்துறையினர் எலும்புக் கூட்டை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். http://www.tamilskynews.com/

  6. வன்னியில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்துவரும் மழையால் இடம்பெயர்ந்த சுமார் 3 இலட்சம் மக்கள் நிர்க்கதியாகியிருப்பதாக மன்னார் ஆயர் இல்லத் தகவல்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இடம்பெயர்ந்து மரங்களின் கீழ் தங்கியிருந்தவர்கள் இரண்டு நாட்கள் பெய்த மழையால் தங்குமிடமின்றி அவஸ்த்தைப்படுவதாகவும் மழையால் சுகாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வன்னிக்கு விஜயம் மேற்கொண்டுவிட்டுத் திரும்பியிருக்கும் மன்னார் குருமுதல்வர் விக்டர் சோசை கூறியதாக, ஆயர் இல்லத்தை மேற்கொள்காட்டி அந்த ஊடகம் செய்திவெளியிட்டுள்ளது. அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மூன்று மாவட்டங்களிலுமிருந்து இடம்பெயர்ந்த கிளிநொச்சி நகரை மையம…

  7. அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளை தேடியழிக்கும் பெருமெடுப்பிலான நடவடிக்கையை மேற்கொண்டு வரும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பொறி வெடித்தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 399 views
  8. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள புறக்கோட்டைப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 45 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 592 views
  9. அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் விடுதலைப்புலிகளை தேடியழிக்கும் பெருமெடுப்பிலான நடவடிக்கையை மேற்கொண்டுவரும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட பொறி வெடித்தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 592 views
  10. புறகோட்டையில் குண்டு வெடிப்பு வீரகேசரி இணையம் 8/30/2008 12:02:19 PM - புறகோட்டையில் ஓல்கோட் மாவத்தையில் குண்டு வெடிப்பு , 35 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

  11. பீதிக்குள்ளாக வேண்டிய தேவை எமது மக்களுக்கில்லை. பீதி எதிரிக்கானது. எதிரியின் உளவியல் போருக்கு இரையாகாமல் உறுதியுடன் போராடுவோம் எனத் தமிழீழ அரசியல்துறையினர் விடுத்துள்ள அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளனர். பீதி எமக்கானதல்ல அது எதிரிக்கானது! என்ற தலைப்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவதுஇ வன்னிப் போரில் ஒரு நாசகாரத் திட்டத்தை நிறைவேற்றத் தமிழரின் விடுதலைப்போராட்டத்தைப் பூண்டோடு ஒழிக்கச் சிங்கள அரசு திட்டமிட்டுள்ளது. வன்னிக்குள் அழிவுகளை விதைத்து ? மக்களை அகதிகளாக விரட்டி ? அவர்கள் மத்தியில் பீதியைக் கிளப்பிவிட்டு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் மக்களை உள்வாங்க மகிந்த அரசு விரும்புகின்றது. கடந்த இரண்டு வருடமாக வன்னியின் நடக்கும் போரில் மக்கள…

  12. அனுராதபுரம் மாவட்டம் பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொங்கட்டிய பகுதியில் உள்ள பொலிஸ் காவலரண்மீது இன்று சனிக்கிழமை காலை தமிழீழ விடுதலைப்புலிகள் திடீர் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 6.30மணியளவில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் விடுதலைப்புலிகளினால் காவலரண் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை மறுத்துள்ள படைத்தரப்பினர் இராணுவ சீருடையில் தமது பகுதியை கடக்க முயன்ற விடுதலைப்புலிகளை தாம் தடுத்து நிறுத்த முற்பட்டபோது அவர்கள் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தாம் மேற்கொண்ட தாக்குதலில் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர். தமது தரப்பில் பெ…

  13. மட்டு. சிறையில் ஈ.பி.டி.பியினர் மீது கருணா குழுவினரே குண்டு வீசினர்! அக்கட்சி பகிரங்கக் குற்றச்சாட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஈ.பி.டி.பியினர் மீது கருணா குழு உறுப்பினர்களே குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர் என்று ஈ.பி.டி.பி கட்சி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது. கிழக்கின் விடுவிப்பு, ஜனநாயகம் என்ற பெயரில் இப்படியான அராஜகங்கள் நடந்து வருகின்றன என்றும் அக்கட்சி தெரிவித்திருக்கின்றது. நேற்றைய சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து ஈ.பி.டி.பி. வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  14. வன்னிப் பிரதேசம் மீதான அரச படைகளின் ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் இறுகி வருகின்ற போதிலும் விடுதலைப் புலிகள் இதுவரை போர்க்கோலம் பூணவில்லை என்று புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோகி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவர் ஐரோப்பிய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் வான்புலிகளின் தாக்குதலை ஒருபோதும் அரசபடைகளால் தடுத்து நிறுத்த முடியாது என்றும் கூறியுள்ளார். www.tamilwin.com

  15. http://www.yarl.com/videoclips/video/310/Karunai-manu

  16. புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறச் சொல்லும் பிரசுரங்களை கிளிநொச்சியில் வீசியுள்ளனர் விமானப் படையினர் இலங்கையின் வடபகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரும் துண்டுப் பிரசுரங்களை இலங்கையின் விமானப் படையினர் வானிலிருந்து வீசத்துவங்கியுள்ளனர். இறுதிப்போர் என்று நம்பப்படும் தாக்குதலுக்கு முன்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இரவு நேரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று கிளிநொச்சி நகரப்பகுதியில் தாழப்பறந்து ஆயிரக்கணக்கான இந்த துண்டுப்பிரசுரங்களை வீசியதாக, புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் கிளிநொச்சியிலிருக்கும் பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர். தமிழில் எழுதப்பட…

  17. “எதிரியின் ஓராயிராம் பொய் பரப்புரைகளை புரட்சியாளர்களின் ஒரே ஒரு வெற்றிகரமான தாக்குதல் ஒரு சில நிமிடங்களில் முறியடித்துவிடும்;” இது பொலீவிய புரட்சிக்களத்தில் சேகுவேரா உதிர்த்த வார்த்தைகளாகும். இது இன்றைக்கு எமது தாயக போர்களத்திலும் நிரூபணமாகி இருக்கிறது விடுதலைப் புலிகளின் போரிடும் ஆற்றல் சிதைக்கப்பட்டவிட்டது. அவர்களுடைய கடைசி தளப் பிரதேசமான கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் அடுத்த மாவீரர் தினத்துக்கு முன்னர் பிடித்துவிடுவோம். கிளிநொச்சிக்கு இன்னமும் 15 கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கிறது.முல்லைத்தீவுக்கு இன்னுமும் 25 கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கிறது. வன்னியின் அடர்ந்த காட்டின் நடுவிலுள்ள பங்கர்களுக்குள் தான் அவர்கள் இந்த வருட மாவீரர் தினத்தை நினைவு கூரவேண…

  18. பட்டறிவு தரும் பாடம் 30.08.2008 ""எமது யுத்த நடவடிக்கைகள் நாம் வகுத்த திட்டங்களின்படி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் புலிகளை முற்றாகத் தோற்கடித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு காலவரையறை ஒன்றை விதிக்க முடியாது. அவ்வாறு விதிப்பது மகா முட்டாள்தனம்.'' இப்படித் தெரிவித்திருக்கின்றார் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், நாட்டின் ஜனாதிபதிக்கு அடுத்து பாதுகாப்புத் துறையில் அதிக அதிகாரமும் செல்வாக்கும் கொண்டவரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ. விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து, யுத்தத்துக்கு முடிவு கட்டுவதற்கான காலவரையறைகளை எதிர்க்கட்சியினரும் வேறு தரப்பினரும் இதுவரை காலமும் விதித்து வந்தனர் என்பது போலவும் அது தவறு என்ற மாதி…

  19. பொதுத் தேர்தலுக்கு முன்பாக ஜனாதிபதித் தேர்தல் நடக்கும்! அடுத்த ஆண்டு இறுதியில் நடத்த மஹிந்த ராஜபக்க்ஷ உத்தேசம் திடீர்ப் பொதுத் தேர்தல் ஒன்று குறித்து தென்னிலங்கை அரசியலில் பேச்சுகள் அதிகம் அடிபட்டாலும் பொதுத் தேர்தல் ஒன்றை இப்போதைக்கு நடத்துவதில்லை என்று தீர்மானித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முதலில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்தித் தனது பன்னிரெண்டு ஆண்டு கால அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னரே அடுத்த பொதுத்தேர்தல் குறித்துச் சிந்திப்பது என்ற முடிவில் இருக்கிறார் எனத் தெரியவருகின்றது. இதற்கமைய, அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி தனது அடுத்த பதவிக் காலத்தை உறுதிப்படுத்திய பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அவர் உத்…

  20. வான்புலிகளின் தாக்குதல் எழுப்பும் கேள்விகள்! -ஜெயராஜ் சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்திய கடற்படைத் தலைமையகம் மீது வான்புலிகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடத்தியுள்ள தாக்குதலானது களநிலைமை குறித்த மறு மதிப்பீடு ஒன்றிற்குச் செல்ல வேண்டியதானதொரு நிர்ப்பந்தத்தைச் சிறிலங்காப் படைத்தரப்பிற்கு மட்டுமல்ல வேறு உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளுக்கும் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும் என்றே உறுதியாக நம்பலாம். கடற்படையின் கிழக்குத் தலைமையகம் மீது வான்புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா கடற்படைக்கு ஏற்பட்டுள்ள உயிர் இழப்புக்கள் மற்றும் உடமை இழப்புக்கள் என்பனவற்றின் அளவு, தொகை என்பன இங்கு முக்கியமானதொரு விடயம் அல்ல. சிறிலங்காப் படைத்தரப்பின் அதி முக்கியத்துவம் வாய்ந்த கேந…

    • 5 replies
    • 2.1k views
  21. திருமலை துறைமுகம் மீதான தாக்குதலில் புலிகள் முதன் முறையாக கடலில் தரித்து நின்று தாக்கக்கூடிய சீ- பிளேன் வகை விமானத்தை பாவித்துள்ளதாக படைதரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது. திருமலை துறைமுகத்துக்கு மிகஅண்மையாக இருந்தே விமானங்கள் பறப்பினை மேற்கொண்டதாகவும்,இதனால் ராடர் திரையில் விமானங்கள் 2 நிமிடங்களுக்கு முன்னரே தெரிந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது புலிகளிடம் பல்வேறு விமானங்கள் இருப்பதை அரசாங்கத்துக்கு புலப்படுத்தியிருப்பத்தாகவு

    • 1 reply
    • 2.2k views
  22. திருமலை கடற்படைத்தளத்தில் கடந்த செவ்வாய் இரவு நடந்தது என்ன?: கொழும்பு ஊடகம் [வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2008, 08:57 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] திருகோணமலை கடற்படைத்தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்புக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து தொடக்கத்தில் எதுவும் தெரிவிக்காதபோதும் தற்போது அவை மெல்ல மெல்ல கசியத்தொடங்கியிருக்கின்றன. குறிப்பிட்ட தாக்குதலில் காயமடைந்த பலர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர் என்று கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விடுதலைப் புலிகளின் வானூர்திகள் நடத்திய தாக்குதல் குறித்து அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: …

    • 2 replies
    • 1.8k views
  23. ஐயா சொன்னதில் ஒரு பொய் ஒரு உண்மை! நாங்கள் அப்போது இலங்கையில் மவுண் லவினியா என்னும் இடத்தில் குடியிருந் தோம். அது தலைநகரத்திலிருந்து சிறிதுதூரத் தில் இருந்ததால், அங்கே கொழும்பில் இருந்த வசதிகள் கிடையாது. உதாரணம், குழாய் தண்ணீர் இல்லை, கிணற்று நீர்தான். அவரவர் வீடுகளில் கோழிகளும் ஆடுகளும் வளர்த்தார்கள். பின்னால் வாழைத் தோட்டம் போட்டார்கள். முன்னால், ஈரப்பிலா மரத்தையும் கறிவேப்பிலை மரத்தையும் ஒருவரும் நட வில்லை, அவை தானாகவே வளர்ந்தன. நாங்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டுச் சொந்தக்காரர் ஒரு சிங்களவர், பெயர் பீரிஸ். அவர் எப்போதும் தலையிலே ஆமை ஓட்டினால் செய்த வளைந்த சீப்பு ஒன்றை அணிந்திருப்பார். ஏதோ தலையைச் சீவும்போது பாதியிலேயே அவசர வேலை ஒன்…

  24. வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான தற்காலிக தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் பணி இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை. தற்பொழுது மழை பெய்து வருகின்ற போதிலும், தற்காலிக கூரை விரிப்புக்களை வன்னிக்கு எடுத்துச் செல்ல சிறீலங்கா படையினர் மனிதநேய அமைப்புக்களுக்கு தடை விதித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது. கிளிநொச்சி கோணாவில், முறிப்பு, ஊற்றுப்புலம், ஆகிய இடங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்குமிட வசதிகள் இன்றி மிகவும் அவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். சிறுவர்கள், குழந்தைகள், கற்பிணித் தாய்மார், மூதாளர்கள் என பலரும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியுள…

  25. இலங்கை இரண்டாவதைத் தவிர வேறு வழியில்லை! - குமுதம் விடை கொடு எங்கள் நாடே... கடல் வாசல் தெளிக்கும் வீடே... பனமரக்காடே... பறவைகள் கூடே... மறுமுறை ஒருமுறை பார்ப்போமா?'' துக்கம் மனதைக் கிழிக்கும் இந்தப் பாடலைக் கேட்டாலே இரண்டு நாளைக்குத் தூக்கம் கொள்ளாது. நித்தம் நித்தம் குண்டுச் சத்தம். மொத்தம் மொத்தம் பிணக்குவியல் என்று இலங்கையில் போர் தீவிரம் கண்டுள்ளது. அண்மையில் சென்னை வந்திருந்த இலங்கை, வண்ணி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை சந்தித்துப் பேசினோம். டெலோ அமைப்பின் தலைவரான அவர் இதுவரை மூன்று முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இலங்கையில் உள்ள தற்போதைய நிலவரத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அவர். கடந்த இரண்டு மாதகாலமாக இலங்கையில் போர் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.