ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
ஏ.எச்.ஏ. ஹுஸைன் - கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் உத்தரவின் பேரில் “எல்மிஸ் வல்கம” வீதி என சிங்களப் பெயராக மாற்றுவதற்காக அகற்றப்பட்ட புன்னைக்குடா வீதி எனும் பெயர்ப்பலகை அதே “புன்னைக்குடா வீதி” என்ற பழைய நாமத்தோடு அமைச்சர் நஸீர் அஹமட்டினால் மீள நடப்பட்டது. இந்நிகழ்வு கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் ஏறாவூர் நகர புன்னைக்குடா வீதி சந்தியில் திங்கள்கிழமை 10.04.2023 இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய அமைச்சர் நஸீர் அஹமட், ஆளுநர்கள் இங்கு மட்டுமல்ல இலங்கையில் எப்பாகத்திலுமே தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி அத்துமீறல் செய்து இனவாதத்தை ஏற்படுத்தக் கூடாது. கிழக்கு மாகாண ஆளுநர் தன்னிச்சையாகத் தீர்மானம் எடுத்து இனமுரண்பாடுகளை உருவாக்கும…
-
- 7 replies
- 734 views
- 1 follower
-
-
14 APR, 2023 | 12:23 PM மிரிஹான பத்தேகன பிரதேசத்தில் இருவரை தாக்கி ஐந்து இலட்சம் ரூபாவை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் நுகேகொட பிரிவு போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மற்றுமொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கொள்ளையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவரான நுகேகொடை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கைதுசெய்யப்பட வேண்டிய பொலிஸ் சார்ஜன்ட் தலைமறைவாக உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.v…
-
- 2 replies
- 368 views
- 1 follower
-
-
14 APR, 2023 | 10:08 AM யாழ். பருத்தித்துறை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அப்பெண்ணுக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் போது , எழுமாற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனை அடுத்து அப்பெண்ணை விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று குறைவடைந்தமையை அடுத்து , வைத்தியசாலைகளில் இருந்த தனிமைப்படுத்தல் விடுதிகள் அகற்றப்பட்டுள்ளமையால் , குறித்த பெண்ணை சாதாரண விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 14 APR, 2023 | 03:27 PM வடக்கில் உள்ள தீவுகளை இலக்கு வைத்து உருவாக்கப்படவுள்ள தீவக அதிகார சபையை தடுத்து நிறுத்தாவிட்டால் பல மோசமான பின் விளைவுகளை வடபகுதி மக்கள் எதிர்நோக்க வேண்டி வரும் என தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் எச்சரிக்கை விடுத்தார். யாழ். ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடபகுதி தீவுகளை கையகப்படுத்தும் நோக்கில் இலங்கையில் உள்ள தீவுகளை ஒரு அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதாக தெரிவித்து ஓர் அதிகார சபையை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது. …
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
இந்த புத்தாண்டில் அனைவருக்கும் ஆறுதல் தருகின்ற சூழல் உருவாக்கியுள்ளது – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி! இந்த புத்தாண்டில் அனைவருக்கும் ஆறுதல் தருகின்ற சூழல் உருவாக்கியுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைவதைத் தொடர்ந்து உதயமாகும் தமிழ், சிங்களப் புத்தாண்டு இந்நாட்டின் தமிழ், சிங்கள மக்களுக்கு மிகவும் சிறப்பும், மகிழ்வும் நிறைந்ததாகும். சௌபாக்கியத்தையும் சுபீட்சத்தையும் வேண்டியே அனைவரும் சம்பிரதாயங்களை …
-
- 2 replies
- 455 views
-
-
சகலரும் சமனென்ற மகிழ்காலம் நிலவட்டும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ்! பிறக்கும் சித்திரை புத்தாண்டின் வரவில் சகல இன மத சமூக மக்களும் சமனென்ற மகிழ் காலம் நீடித்து நிலவட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வெளியிடப்பட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இன மத பேதங்கள் இன்றி, தமிழ் – சிங்கள மக்களை பண்பாட்டு விழுமியங்களால் ஒன்று பட வைத்திருப்பது சித்திரை புத்தாண்டு. அது போலவே சகல மக்களின் இன மத உணர்வுகளும் சமனென மதிக்கப்படும் சமத்துவ தேசத்தையே நாம் விரும்புகிறோம். மனித நேயமே எமது ம…
-
- 0 replies
- 535 views
-
-
Published By: RAJEEBAN 13 APR, 2023 | 12:32 PM ஓமானில் இலங்கை பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக ஏலத்தில் விடப்பட்ட சம்பவம் குறித்து ஐநா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அடிமைத்தனத்தின் தற்போதைய வடிவங்கள் தொடர்பிலான ஐநாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் பெப்ரவரி ஏழாம் திகதி அவர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசாங்கம் 60 நாட்களிற்குள் பதிலளிக்கவேண்டும் என்ற போதிலும் இதுவர…
-
- 5 replies
- 801 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 13 APR, 2023 | 03:25 PM சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் ஏப்ரல் 15,16 ம் திகதிகளில் முற்றவெளி மைதானத்தில் யாழ்ப்பாண பாரம்பரிய உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், மாலை நேரங்களில் இந்த உணவு திருவிழா இடம்பெறவுள்ளது. ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை உணவு திருவிழா இடம்பெறவுள்ளது உணவு திருவிழாவில் யாழ்ப்பாணத்தில் உள்ள பாரம்பரிய உணவு வகைகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தவு…
-
- 1 reply
- 268 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 13 APR, 2023 | 05:50 PM மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் வலைக்குள் சிக்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு - சந்திவெளி ஆற்றில் நேற்றிரவு (12) மீன்பிடிக்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்திவெளி, வட்டையார் வீதியைச் 43 வயதுடைய கந்தையா பவானந்தன் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். மீன்பிடிக்க சென்ற நபரை காணவில்லை என்று இன்று (13) காலை அவரது பிள்ளைகள் தோணியொன்றில் சென்று தேடியபோது, தோணியிலிருந்து வலை வீசும் போது தவறி விழுந்து வலைக்குள் சிக்குண்டு அதிலிருந்து மீளமுடியாமல் நீரில் மூழ்கி மரணமடைந்திருப்பதை கண்டுள்ளனர். பிள்ளைகள் இருவரும் தந்தையின் சடலத்தை கரைக்க…
-
- 2 replies
- 704 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 13 APR, 2023 | 05:53 PM மன்னார்- இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவினருடன் இணைந்து மன்னார் சிலாவத்துறை பகுதியில் இன்று வியாழக்கிழமை (13) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு இலட்சத்து 11 ஆயிரம் போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி 16 மில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்டு வந்து குறித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கடத்தல் பொருட்கள் ய…
-
- 0 replies
- 580 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 13 APR, 2023 | 10:04 AM இலங்கையில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான பல்வேறு அச்சுறுத்தல்களும் அடக்குமுறைகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது, குறிப்பாக தமிழ் ஊடகங்கள் பல்வேறு தரப்பினராலும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. கடந்தகாலங்களில் ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு இதுவரையும் நீதி கிடைக்காமல் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். இந்த நிலையில், சட்டரீதியாக அணுக வேண்டிய விடயங்களுக்கு ஊடகங்களுக்குள்ளே அத்துமீறி நுழைந்து ஊடகவியலாளர்களை அச்சு…
-
- 0 replies
- 336 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 13 APR, 2023 | 10:03 AM யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் குமுதினி படகினை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சென்று பார்வையிட்டுள்ளார். நெடுந்தீவுக்கான பயணிகள் போக்கு வரத்துச் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மாவிலித்துறையில் தரித்திருந்ததுடன் திருத்தப்பணிகளுக்காக வல்வெட்டித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு நீண்ட காலமாக திருத்த பணிகள் முன்னெடுக்கப்ட்டு வருகினிறன. அதாவது வீதிஅபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினி படகு மற்றும் வட தாரகை படகு என்பன நெடுந்தீவுக்கான பயணிகள் போக்கு வரத்து சேவை…
-
- 0 replies
- 566 views
- 1 follower
-
-
இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகள் ஒரு இலட்சத்து முப்பத்தாறாயிரத்து இருநூற்று அறுபத்தைந்து பேர் இருப்பதாக தெரியவந்துள்ளது. குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் தரவு அறிக்கைகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள், இந்த சதவீதம் 15.5 சதவீதமாக உள்ளது. (15.5%) ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகள் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவாகியுள்ளதுடன், இருநூற்றி இருபத்தி இரண்டு குழந்தைகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாநகர சபைக்குள் மட்டும் இந்த வயதுக்குட்பட்ட எடைக்குறைந்த குழந்தைகள் ஆயிரத்து நானூற்று அறுபது பேர் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வயது தொடர்பான எடை இழப்பு குறைந்த எடை என்றும், குட்டை மற்றும் மெலிந்த குழந்த…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை இன்று (13) அறிவிக்கவுள்ளன. அமெரிக்காவின் வொஷிங்டனில் அது தொடர்பான கூட்டறிக்கையை சம்பந்தப்பட்ட நாடுகள் வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானிய நிதியமைச்சகத்தை மேற்கோள்காட்டி சர்வதேச நாணய நிதியம் இதனைத் தெரிவித்துள்ளது. ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்திருந்தன. அதன்படி அந்தந்த நாடுகளின் நிதியமைச்சர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர். அமெரிக்காவின் வொஷிங்டனில் நடைபெறும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த வசந்த …
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
புத்தாண்டு காலத்தில், பற் சுகாதாரம் தொடர்பில் பொதுமக்கள் மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. சிறார்களும், முதியவர்களும், இந்தக் காலப்பகுதில் இனிப்புப் பண்டங்களை அதிகளவில் உட்கொள்வதால், உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என பற் சிகிச்சை நிபுணர் அசேல விஜேசுந்தர அறிவுறுத்தியுள்ளார். இல்லையெனில் பற் சிதைவு ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். இலங்கையில் அதிகளவில், பற் சிதைவு பிரச்சினை உள்ளது. குறிப்பாக சிறு பிள்ளைகளிடையே, பற்சிதைவு நிலையானது வேகமாக இடம்பெறுகின்றது. புத்தாண்டு காலத்தில், மக்கள் இனிப்புப் பண்டங்களை அதிகளவில் உட்கொள்கின்றனர். இனிப்புப் பண்டங்கள், அதிக நேரம் வாயில் இருந்தால் அதன் ஊடாக பற்றீரியாக்கள…
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
அழிக்கப்பட்ட தமிழர் தாயகத்தின் அத்திபாரங்கள் பிடுங்கப்படுகின்றனவா ? - ஸ்ரீநேசன் Published By: VISHNU 12 APR, 2023 | 05:16 PM பௌத்த பிக்குகளின் கோரிக்கையில் படையினரின் பலப்பிரயோகத்துடன் தமிழர் தாயக நிலங்களிலுள்ள கலாசாரப்பதிவுகள், படிமங்கள் அழிக்கப்பட்டு அகற்றப்பட்டு அவ்விடங்களில் புத்தர் சிலைகள், விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனை பௌத்த பிக்குகளின் கோரிக்கையில், தமிழர் தேச அத்திவாரங்களைப் பிடுங்குவது போல் கலாசார அழிப்புகளை திட்டமிட்டு மேற்கொள்கின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார் மட்டக்களப்…
-
- 0 replies
- 291 views
-
-
Published By: DIGITAL DESK 5 13 APR, 2023 | 10:49 AM இரண்டு வர்த்தகர்களைத் தாக்கி அவர்களிடமிருந்து தங்கத்தை கொள்ளையட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று, மோதரை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு உட்பட 3 பிரிவுகளைச் சேர்ந்த 8 அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இரண்டு வர்த்தகர்களையும் தாக்கி சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான இரண்டு கிலோ தங்கம் கொள்ளையிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. …
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையில், தற்போதுள்ள வன அடர்த்தியுடன் ஒப்பிடுகையில் நாட்டில் வனவிலங்குகளின் எண்ணிக்கை தாங்க முடியாத வகையில் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. வன விலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விலங்குகள் உரிமை அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலின் போதே அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தின் அளவும் அதிகரித்து வருவதாக அறிக்கை கூறுகிறது. பயிர்களை …
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
Published By: VISHNU 12 APR, 2023 | 12:38 PM (எம்.மனோசித்ரா) வறுமையிலுள்ள மக்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தரப்பினர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது. அதற்கமைய இவ்வாறான தரப்பினருக்கான நலன்புரி உதவித்தொகை செலுத்தும் முறைக்கான விதிமுறைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதன் பின்னர் ஜூன் முதலாம் திகதி முதல் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. சர்வதேச …
-
- 0 replies
- 518 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 11 APR, 2023 | 01:04 PM இன்புளுவன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரித்துள்ளது. இந்த நோய் சுவாச மண்டலத்தைத் தாக்குகிறது, எனவே கர்ப்பிணித் தாய்மார்கள், இளம் குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகம் பாதிப்பதாகவும் சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்ட ஆரோக்கியமான நபர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு இயற்கையாகவே குணமடைவார் என்று பணியகம் தெரிவித்துள்ளது. அதிக காய்ச்சல், தசை மற்றும் மூட்டு வலி, மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் மற்று…
-
- 1 reply
- 442 views
- 1 follower
-
-
Published By: VISHNU 12 APR, 2023 | 03:25 PM கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரித்தாஸ் குடியிருப்பு பகுதியில் தனது ஐந்து மாத கர்ப்பிணியான காதலித்து திருமணம் செய்த மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்டு அவரது கணவன் காயப்படுத்தியுள்ளார். இச் சம்பவம் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக அக்கராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போது காயமடைந்த கர்ப்பிணி உடனடியாக அக்கராயன்குளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சம்பவத்தில் 33…
-
- 0 replies
- 335 views
- 1 follower
-
-
எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு! எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை இன்று(செவ்வாய்கிழமை) காலை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது. எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் இந்த அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தொகுதிகள் நிர்ணயம் செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட தேசிய எல்லை நிர்ணயக் ஆணைக்குழு நவம்பர் 2022 இல் நியமிக்கப்பட்டது. ஆர்.வி. திஸாநாயக்க, டபிள்யூ.எம்.எம்.ஆர். அதிகாரி, கே.தவலிங்கம் மற்றும் ஐ.ஏ. ஹமீட் உள்ளடங்கலாக தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்ற…
-
- 1 reply
- 399 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக, இலங்கை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையின் பொருளாதாரத்திற்கு 200 வருட காலமாக பாரிய பங்களிப்பை வழங்கும் சமூகமாக இந்திய வம்சாவளி தமிழர்கள் விளங்குகிறார்கள். இலங்கையின் மத்திய மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். கோப்பி செய்கையை முன்னெடுக்கும் நோக்கில் 1823ம் ஆண்டு காலப் பகுதியில் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்கள், இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் எல்லையில் காணப்படும் லூல்கந்துர தோட்டத்தில் 1867ம்…
-
- 1 reply
- 603 views
- 1 follower
-
-
Published By: VISHNU 11 APR, 2023 | 05:09 PM கிராமத்திற்கு செல்லும் பாதையை மறித்து அனுராதபுரம் - வவுனியா புகையிரதப் பாதை அமைக்கும் நடவடிக்கைக்கு விஜயபாகு கம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திருத்த வேலைகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். இன்று (11) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஈரப்பெரியகுளம், விஜயபாகு கம கிராமத்தில் 50 வரையிலான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குறித்த கிராம மக்கள் கடந்த 32 வருடங்களாக பயன்படுத்தி வந்த வீதியை மறித்து புகையிரதப் பாதை நிர்மாணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த கிராம மக்களை அப் பாதையில் இருந்து சுமா…
-
- 5 replies
- 1.2k views
- 1 follower
-
-
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை வழிநடத்த மிகவும் பொருத்தமானவராக இருப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பசில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இந்நாட்டின் வறிய மக்களை முன்னேற்றுவதற்கும், உலகின் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை மாற்றுவதற்கும் செயற்பட்டு வந்தவர். அத்துடன், நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சர்வதேச சமூகத்துடன் சிறப்பான விதத்தில் செயற்பட்டு யுத்ததத்துக்கு தேவையான ஆதரவைப் பெற்றவர் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார். நாட்டிலுள்ள ஏழை மக்களின் கஷ்டங்களை புரிந்துக்கொண்டு, அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு…
-
- 3 replies
- 965 views
- 1 follower
-