ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143677 topics in this forum
-
அக்கராயன்குளத்தில் முன்னேறும் படையினருக்கு ஆதரவாக MI௨4 ரக உலங்கு வானூர்திகள் மூலம் இன்று மாலை 6:15 அளவில் வான் படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதாக, சிறீலங்காவின் வான்படைப் பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்தார். அக்கராயன்குளத்தில் சிறீலங்கா படையினரது 57வது படைப்பிரிவே இன்று காலை முதல் முன்னேற்ற முயறச்சியை மேற்கொண்டுள்ளது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamilseythi.com/tamileelam/akka...2008-09-15.html
-
- 0 replies
- 1.8k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பெரும் அவதிப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பெரும் சிரமம் எற்பட்டுள்ளதாகவும், இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகள் வழங்கி வந்த அரச சார்பற்ற நிறுவனங்களை வன்னிப் பகுதிகளிள் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து அங்கு பெரும் நெருக்கடிகள் எற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.tamilseythi.com/tamileelam/kili...2008-09-15.html
-
- 0 replies
- 1.1k views
-
-
அம்பாறையில் அதிரடிப்படையினரின் முகாம் மீது மோட்டார் தாக்குதல்: ஒருவர் பலி; ஐவர் காயம் [திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2008, 08:05 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மோட்டார் எறிகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஐவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் கூறியுள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள உடும்பன்குளம் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:10 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் மோட்டார் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் சி…
-
- 1 reply
- 699 views
-
-
சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகளின் பின்னர் யாழ். மறை மாவட்ட ஆயர் கலாநிதி தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை முதன்முறையாக மடு தேவாலயத்திற்கு சென்றுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 753 views
-
-
-
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் சிறீலங்கா விமானப்படைக்கு தொடர்ந்து இந்தியா தொழில்நுட்ப வசதியை வழங்க வேண்டும்.அது இந்தியாவுக்குரிய கடப்பாடாகும். அதனை உரிய காலத்திற்கு முன்னர் கைவிட முடியாது. இலங்கை அரசு தரப்பில் இவ்வாறு வலியுறுத்தப்படுகிறது. இலங்கை விமானப்படையினரின் செயற்பாடுகளுக்கு உதவி வழங்குவது தொடர்பாக இந்தியாவுக்கும் எமது நாட்டுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியிருந்தது. அந்த ஒப்பந்தம் இன்னும் காலாவதியாகவில்லை.அந்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும்வரை, நடைமுறையில் உள்ளவரை, இந்தியாவின் தொழில்நுட்ப உதவிகள் தொடரவேண்டும். இது குறித்து இந்தியாவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுஇ
-
- 8 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை வேகமாக சென்று சுட்டுவீழ்த்துவதற்கு மிக்-29 ரக அதிவேக அதிரடி வானூர்திகளை இந்த வருடத்திற்குள் சிறிலங்கா அரசு கொள்வனவு செய்யவுள்ளதாக அறியவருகிறது. இது தொடர்பில் தெரியவருவதாவது: விடுதலைப் புலிகளின் வானூர்திகள் பறப்பில் ஈடுபடும்போது அவற்றை சுட்டுவீழ்த்தக்கூடிய வகையில் சிறிலங்கா வான் படையிடம் தற்போது எஃப்-7 ரக வானூர்திகள் உள்ளன. ஆனால்இ சடுதியாக வன்னியிலிருந்து வரும் புலிகளின் வானூர்திகளை இந்த எஃப்-7 ரக வானூர்திகள் கலைத்துச்சென்று தாக்க முயற்சித்தாலும்இ கட்டுநாயக்கா வான்படைத்தளத்திலிருந்து இவை செல்லும் முன்னர் புலிகளின் வானூர்திகள் குறித்த இலக்கை தாக்கிவிடும் அபாயமே தற்போது நிலவுகின்றது. ஆகவேஇ புலிகளின் வானூர்திகள் இல…
-
- 9 replies
- 1.8k views
-
-
சிறிகாந்தா அவர்கள் என்ன சொல்கிறார்? ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 1 reply
- 2.2k views
-
-
தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாம்பு தீண்டியதில் விஷம் ஏறிய நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பயாகல பிரதேசத்தில் வைத்து அமைச்சரை பாம்பு தீண்டியுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன வருமானத்திற்கு அதிகமான 450 மில்லியன் ரூபா சொத்து சேர்த்தமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கடந்த 13 ஆம் திகதி மூன்று மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. http://www.tamilsk…
-
- 0 replies
- 1k views
-
-
சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பாரஊர்திகளை பெற்றுக்கொண்டுள்ள விடுதலைப்புலிகள் கிளிநொச்சியில் 20 கிலோ மீட்டர் நீளமான யுத்த அகழிகளை வெட்டியிருப்பதாக வவுனியாவுக்குச் சென்றுள்ள நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் என சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது. இந்த வாகனங்களைப் பயன்டுத்தி விடுதலைப்புலிகள் புதிய பாதுகாப்பு வேலிகளை அமைத்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். வன்னியில் இருந்து கடந்த13 ஆம் திகதி இறுதியாக அரசசார்பற்ற நிறுவனங்கள் வவுனியாவுக்குச் சென்றுள்ளனர். வன்னியில் உள்ள ஏனைய நிறுவனங்கள் வவுனியாவுக்கு வருவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனைகளைப் பெறும் நோக்கில் இது குறித்து அந்த நிறுவனங்கள் தமது தலைமை பணியகத்திற்கு அறிவித்துள்ளதாக…
-
- 6 replies
- 2.2k views
-
-
இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் - SEDOT தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்ற சிறிலங்காப் படைகளின் எறிகணை வீச்சினால் இடம்பெயர்ந்து மரங்களின் கீழ் பல்வேறு இன்னல்களுக்கும் மத்தியில் அன்றாட வாழ்வைக்களித்து வருகின்றனர். இவர்களின் இன்னலைப் போக்க புலம்பெயர் வாழ் மக்கள் அவசரமாக உங்கள் கரங்களை நீட்டி பசியோடு இருக்கும் பாலகரையும் உறவுகளையும் காப்பாற்றுங்கள் இதேவேளை இந்த வேண்டு கோளிற்கு இணங்க சமூகப்பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் (SEDOT) தற்போது இடம்பெயர்ந்து வன்னியில் நிற்கதியாக நிற்கும் எம் உறவுகளுக்கு புலம்பெயர் விடுத்த அவசரக் கரம்கொடுங்கள் என்ற திட்டத்திற்கு அமைவாக பேர்ன் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் ஆலயம் அறோ முர…
-
- 1 reply
- 959 views
-
-
பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிங்கள சேவையான சந்தேஷய விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவுடன் நெருக்கமான ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. சிங்களப் புலிகள் சந்தேஸயவை கைப்பற்றியுள்ளனர். 4 தசாப்தங்களுக்கு முன்னர் சிங்கள நேயர்களுக்கான செய்திகள் மற்றும் ஏனைய தகவல்களை வழங்குவதற்காக பிரித்தானியாவில் இருந்து பி.பி.சி சிங்கள சேவை ஆரம்பிக்கப்பட்டது. இதில் தற்போதைய தலைவராக உள்ள பிரியத் லியனகே புலிகளுக்கு பிரசாரத்தை வழங்க ஊடக சுதந்திரத்தை பயன்படுத்தி வருகிறார் என அந்த இணையத்தளம் குற்றம்சுமத்தியுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அலைவரிசைகளில் ஒலிபரப்பாகும் சந்தேஸயவில் விடுதலைப்புலிகளின் தலைவர்களின் குரல்கள் …
-
- 0 replies
- 926 views
-
-
9/15/2008 2:53:14 PM கிளிநொச்சி மாவட்டம் முறிகண்டி பிரதேசத்தில் இன்று அதிகாலை முதல் கடும் மோதல்கள் இடம் பெற்று வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. முறிகண்டி நகரில் இருந்து மேற்குத் திசையில் சுமார் 4 கிலோ மீற்றர் தொலைவில் இந்த எறிகணை தாக்'குதல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது, இராணுவத்தின் கடும் எறிகணை தாக்குதல்களையடுத்து, அந்தப் பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டதாகவும் அந்தப் பகுதியில் தொடர்ந்து கடும் சண்டைகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எறிகணை தாக்குதல்கள் காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்துக்கள் இன்று நடைபெறவில்லை என்றும் கிளிநொச்சியில் இருந்து இன்று வவுனியாவுக்கு வரவேண்டிய கிளிநொச்…
-
- 1 reply
- 1.2k views
-
-
வன்னியில் நிலம் விழுங்கியபடி முன்னேறும் சிங்களப்படையின் நகர்வால் ஊக்கம் பெற்றுள்ள மகிந்தஅரசு போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. போரில் சிங்களப்படைகள் வெற்றிநடை போடுகின்றன என்று மகிந்தஅரசு பிரகடனங்களை விடுவித்து வருகின்றது. மேலெழுந்தவாரியாகப் போரை ஆய்வு செய்வோரும் - புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்று விரும்புவோரும் மகிந்த அரசின் வெற்றிப் பிர கடனங்களை நம்புகின்றனர். கண்ணால் காண்பதும் பொய் - காதால் கேட்பதும் பொய் - தீரவிசாரிப்பதே மெய் என்ற அனுபவ வாக்கியம் போர் நடைமுறைக்கும் பொருந்தும். போரில் பல்வேறு விதமான போக்குகள் காட்டி எதிரியை ஆழஉள்ளிழுத்து - அழிக்கும் வல்லமையுடனேயே புலிகள் இயக்கம் உள்ளது. வன்னிநில அமைப்பும் - புலிகளின் படைவலுவும் இணைந்து இந்தப் போர்க்களப்புரட்ச…
-
- 0 replies
- 2.2k views
-
-
கொழும்பிலிருந்து மக்களை வெளியேறக் கோரும் அரசு வன்னியிலிருப்பவர்களை அழைப்பது வேடிக்கை - மனோ எம்.பி. வீரகேசரி நாளேடு 9/14/2008 8:43:03 PM - கொழும்பில் காரணமின்றி தங்கியிருக்கும் மக்கள் வெளியேற வேண்டும் எனத் தெரிவிக்கும் அரசாங்கம் வன்னியிலிருந்து மக்கள் வெளியேறி அரசாங்க பகுதிகளுக்கு வரவேண்டுமென கோருவது வேடிக்கை. அரசாங்கத்தின் இந்த இரட்டை வேடத்தினை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் தெரிவித்தார். இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். அதற்காக மக்களை பலிக்கடாக்களாக்குவதை மக்கள் பிரதிநிதிகளினால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். கிள…
-
- 5 replies
- 1.5k views
-
-
கொழும்பு மாநகரசபையில் பாரிய நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தக்காரர்களுக்கு கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாநகரசபையுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள நிறுவனங்களுக்கு சுமார் 500 மில்லியன் ரூபாவிற்கான கொடுப்பனவுகள் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வீதி திருத்தும் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடிய பிரதான பொருட்கள் கைவசம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சார்க் மாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக கொழும்பு மாநாகரசபைக்கு கிடைக்கப் பெற வேண்டிய பாரியளவு நிதி அரசாங்க நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே கொழும்பு மாநகரசபை பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கி …
-
- 1 reply
- 849 views
-
-
கடந்த 60ஆண்டுகாலமாக தமிழினம் ஒவ்வொருவகையாக இன அழிப்புக்கு உட்பட்டு, உலகத்தின் சிறந்த இனமாகவும், அறிவுள்ள இனமாகவும் திகழவேண்டிய எம் தமிழினம் இன்று கொடுமையான இன அழிப்புக்குள் அகப்பட்டு இன்று அழிந்தவண்ணம் உள்ளது. இந்நிலை தொடருமானால் வரலாற்றில் தமிழினம் ஒன்று இருந்ததாக இருக்குமேஒழிய வாழ்ந்ததாக இருக்காது. அன்பார்ந்த உலகத்தமிழினமே இன்று சிங்கள் இனவெறி இராணுவம் பல நாட்டு வல்லரசுகளின் உதவியுடன் எமது தாய். தந்தை பிறந்த இடத்தை எல்லாம் கூறுபோட்டு, துடைத்தழித்தவண்ணம் , தாய்நிலத்தை அழிப்பதற்காய் முன்னேறி வருகின்றான். இன்று கிளிநொச்சியில் உள்ள மக்கள் எல்லாம் இடம்பெயர தொடங்கியுள்ளார்கள், திருமுறிகண்டிவரை இராணுவம் ஆக்கிரமித்து வந்துவிட்டான் எனவே ! தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் ஏதா…
-
- 2 replies
- 910 views
-
-
தமிழ்நாட்டில் பிரிவினைவாத கிளர்ச்சிய வெடிக்கக் கூடிய அபாயம் நிலவுவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வை.கோ எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழர்களுக்கு எதிராக இலங்கை அராசங்கம் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்திய மத்திய அரசு உடந்தையாக இருக்கின்றமை கண்டனத்திற்குரியதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் தமிழர் மனதில் பிரிவினைவாதம் விதைக்கப்படும் எனவும்இ இந்த நிலைமை இந்தியாவின் இறமைக்கே குந்தகத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மதுரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது வை.கோ இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தமிழர்களுக்கு எதிரான கட்டவிழ்த்துவிடப்படும் யுத்தத்திற்கு இந்திய மத்திய அர…
-
- 0 replies
- 1.1k views
-
-
வைகோவின் அதிர்வுகள் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> தொடரும்.....
-
- 1 reply
- 1.6k views
-
-
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டர் அமைப்புகள் வன்னியில் இருந்து வெளியேறாமல் தொடர்ந்தும் அங்கு இருந்தால், அந்நிறுவனங்கள் மற்றும் அதன் பணியாளர்களுக்குரிய பாதுகாப்பிற்கான பொறுப்பை இலங்கை அரசு ஏற்காது. அந்த நிறுவனங்களின் பணியாளர்களது பாதுகாப்புக்கு இனி எந்த உத்தரவாதமும் கிடையாது. இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆங்கில வார இதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் வன்னியில் அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டு வந்தன. அங்கு யுத்தம் தொடங்கியுள்ளதால் அப்பணிகளை அரச சார்பற்ற நிறுவனங்களால் முன்னெடுக்க முடியவில்லை. இந்த யுத்த நேரத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொட…
-
- 0 replies
- 630 views
-
-
கேகாலை றுவன்வெலவில் சிங்களவர் தமிழர் முறுகல்! ` கேகாலை மாவட்டம் றுவன்வெல நகரத்தில் உள்ள செஸ்ரர் போர்ட் தோட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு தமிழர் ஒருவருக்கும் சிங்களவர் ஒருவருக்கும் ஏற்பட்ட தகராறு அந்தப் பகுதியில் பெரும் களேபரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்படி தகராறில் குறித்த சிங்கள நபர் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தையடுத்து நேற்றுக்காலை 10 மணியளவில் அந்தப் பகுதிக்கு வந்த பெருமளவிலான சிங்களவர் குழு ஒன்று அங்கு வாழும் தமிழர்களின் குடிமனைகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்தனர். இதனால், தமிழர் ஒருவர் படுகாயமடைந்து றுவென்வெல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு தாறுமாறாக கற்கள் வீசப்பட்டதால் தமிழர்கள் சில…
-
- 0 replies
- 763 views
-
-
இலங்கைத் தமிழ் மக்களுக்கான தமிழகத் தலைவர்களின் பணி 15.09.2008 வவுனியாவில் படைத் தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த செவ்வாயன்று நடத்திய அதிரடிப் பாய்ச்சல் தாக்குதல் நடவடிக்கையின்போது, அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த இந்திய விமானப்படையின் இரு சார்ஜண்டுகள் காயமடைந்த விவகாரம், எதிர்பார்த்தபடியே தமிழக அரசியலில் ஒரு பெரும் சூட்டைக் கிளப்பியே இருக்கின்றது. இந்தியா, இலங்கைக்கு வழங்கிய "இந்திரா' ரக "ராடர்' களைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே இப்படிக் காயமடைந்தவர்கள் என்று இந்தியத் தூதரகம் சமாளிக்க முற்பட்டாலும் கூட புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் இந்தியப் படைகளின் நேரடிப் பங்களிப்புப் பிரசன்னத்தை இச்சம்பவம் அம்பலப்படுத்தியிருக்கின்றத
-
- 0 replies
- 604 views
-
-
வன்னியிலிருந்து வெளியேறுவதற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனங்கள் 3 வாரகாலம் அனுமதி கோரியிருந்ததாகவும், அவர்களுக்கான காலஅவகாசம் இம்மாதம் 29ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். வன்னியில் செயற்படும் அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களை உடனடியாக வெளியேறுமாறு கடந்த திங்கட்கிழமை அரசாங்கம் அறிவித்தது எனக் குறிப்பிட்ட அமைச்சர், எனினும், தமது அலுவலகங்களை மூடிவிட்டு, உடமைகளுடன் வெளியேறுவதற்கு மூன்று வாரங்கள் அவகாசம் வழங்கப்படவேண்டுமென ஐ.நா. ஸ்தாபனங்கள் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் கூறினார். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள் வெளியேற ஐ.நா.ஸ்தாபனங்கள் இணங்கியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். “ஐக்கி…
-
- 0 replies
- 663 views
-
-
வன்னியி;ல தங்கியிருக்கும் எஞ்சிய தொண்டர் நிறுவனங்களையும் அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்து வருகின்றது. நிவாரணப்பணிகளை அரசு கவனித்துக் கொள்ளும் எனவும் ஒரு தொண்டர் அமைப்புக்கேனும் அரசு பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர முடியாது எனவும் கடுமையாக அரசு அறிவித்துள்ளது. வன்னியிலிருந்து அனைத்து தொண்டர் அமைப்புக்களும் வெளியேறி விட வேண்டுமென அரசு அறிவித்ததையடுத்து அங்குள் ளமக்கள் பெரும் அச்சம் கொண்ட நிலையில் வன்னியிலிருந்து ஐநா அமைப்புகள் வெளியேறக் கூடாது என்று வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆரம்பித்த முற்றுகைப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வன்னியின் தற்போதைய நிலைமை குறித்து இலங்கையிலுள்ள ஐ.நா அதிகாரிகள் ஐ.நா தலைமையகத்திற்கு அறிவித்து அங்கிருந…
-
- 0 replies
- 663 views
-
-
இது இங்கே இணைக்க படுவதுக்கு இந்த ஒரு பிரச்சாரத்தை அதிகமாக முன்னெடுத்த யாழ்கள வல்லுனர்களையே கேள்விக்கு உட்படுத்துவதாலாகும்... இதுக்கான அவர்களின் எதிர் பிரச்சாரமாக என்னதை திட்டமிட்டு வந்தார்கள் என்பதை மக்கள் அறியவேண்டும்... இதை ஏற்படுத்தி கொடுத்தவர்களும் அனுசரனை வளங்கியவர்களுமே இதன் பாதிப்புகளையும் ஏற்க வேண்டும்... கடந்த முறை விநாயகர் கோயில் உற்சவத்தின் போது " அடியார்களே நான் பசியாய் இருக்கிறேன்" எனும் உருக்கமான சுலோகம் அடங்கிய துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது... அதில் உடைக்கும் தேங்காய்களுக்கான பண்ணவிரையத்தையும், அதன்பின் பரீஸ் வீதிகளை சுத்த படுத்தும் வேலைக்கான பணம் கொடுப்பனவு விரையத்தையும் சேர்த்து வன்னி மக்களின் அவலத்தை காக்க உதவுங்கள் எனும் வேண்டுகோள் முன்…
-
- 74 replies
- 7.8k views
-