ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143677 topics in this forum
-
செப்டம்பர் 13,2008, ராமேஸ்வரம்: அரசின் அனுமதி பெறாமல் மண்டபத்திலிருந்து அகதிகளை இலங்கைக்கு ஏற்றிச்சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்ததால், இரண்டு குழந்தைகள், நான்கு பெண்கள் உட்பட ஏழு பேர் கடலில் மூழ்கி பலியாயினர். சேலம், பழநி, திருவண்ணாமலை, கோவை, மானாமதுரை முகாம்களில் இருந்த ஐந்து பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட 13 அகதிகள் செப்.,11 ம் தேதி காலை மண்டபம் வந்தனர். அரசின் அனுமதி இல்லாமல் இலங்கை செல்வதற்காக மண்டபம் அண்ணாநகரைச் சேர்ந்த ஏஜென்ட் முருகனை சந்தித்தனர். இவர்களிடம் தலா ஆறாயிரம் ரூபாய் கட்டணமாகப் பெற்றுக்கொண்ட முருகன், மண்டபம் தோனித்துறை கடற்கரையிலிருந்து, இரவு 9 மணிக்கு ஒரு நாட்டுப்படகில் 13 பேரையும் இலங்கைக்கு ஏற்றிச்சென்றார். இரவு முழுவதும் வழி தெரியாமல் நடுக்கடலில்…
-
- 8 replies
- 1.7k views
-
-
இலங்கை போர் முனையில் உள்ள இந்தியர்களை உடனடியாகத் திருப்பியழைக்கவேண்டும். ஈழத்தமிழருக்கு எதிரான சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல் தொடர்பில் இந்திய அரசாங்கம் தனது அணுகு முறையினை மாற்றவேண்டும். இதற்கான வலியுறுத்தல்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் மருத்துவர். ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை விவகாரத்தில் இதுவரை மௌனமாக இருந்த தமிழக முதல்வர் இனியாவது மௌனத்தை கலைக்கவேண்டும். ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து ஆராய அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நெல்லையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் நெல்லைக்கு வந்தார். …
-
- 5 replies
- 1.1k views
-
-
பாதுகாப்பு ஏற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடு காரணமாகவே திருகோணமலைக் கடற்படைத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் இடம்பெற்று இரண்டு வாரங்களில் வவுனியாவில் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிஇ 7 நிமிடங்களுக்குள் வவுனியா வான்படைத் தளத்தின் ராடார் அமைந்திருக்கும் பகுதிக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளிக் குழு பிரவேசித்துத் தாக்குதல்களை ஆரம்பித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து எறிகணை வீச்சுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதேநேரத்தில் வானத்தில் தோன்றிய செக் தயாரிப்பான சிலின் இசட்-143 விமானங்கள் குண்டுகளைப் போட்டதாக ஆய்வாளர் சம்பவத்தை விபரித்துள்ளார். இந்தத் த…
-
- 6 replies
- 2k views
-
-
கோயபல்ஸின் தத்துவமும் அரசின் பிரச்சாரங்களும் தாயகன் இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான மோதல்கள் உக்கிரமடைந்துவரும் நிலையில் இருதரப்பு இழப்புகள் தொடர்பிலும் ஒவ்வொரு விதமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இராணுவத்தினரின் இழப்புகள் தொடர்பான விபரங்களை வெளியிடுவதில் புலிகள் மிகவும் நிதானம் காட்டிவரும் அதேவேளை புலிகள் தொடர்பான இழப்புகள் குறித்து எவருமே நம்பமுடியாத தகவல்களை இராணுவத்தினர் வெளியிட்டு வருவதாக பலராலும் சுட்டிக் காட்டப்படுகிறது. புலிகள் தொடர்பில் இராணுவத்தினர் வெளியிட்டுவரும் தகவல்கள் பல முன்னுக்குப் பின் முரண்பட்டதாக காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. விடுதலைப் புலிகளை அழிக்க காலக்கெடுக்கள் விதித்தது முதல் புலிகளின் எண்ணிக்கை, அவர்கள…
-
- 0 replies
- 1k views
-
-
மாற்றமடையத் தொடங்கியுள்ள வன்னிக் கள நிலைவரம் விதுரன் வன்னிப் போர் முனையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதுவரை காலமும் தற்காப்புச் சமரில் மட்டுமே ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் தற்போது முறியடிப்புச் சமரைத் தொடங்கியுள்ள அதேநேரம் தாக்குதல் சமரையும் ஆரம்பித்துள்ளது போல் தெரிகிறது. கிளிநொச்சியில் நாச்சிக்குடா மற்றும் அக்கராயன் பகுதியில் முறியடிப்புச் சமரை நடத்திய அவர்கள் வவுனியாவில் கூட்டுப் படைத் தலைமையகம் மீது தாக்குதல் சமரைத் தொடுத்தனர். மன்னார் - பூநகரி வீதியைக் கைப்பற்றி கிளிநொச்சியையும் விரைவில் கைப்பற்றிவிட முடியுமென்ற படையினரின் நினைப்பில் அடிவிழத் தொடங்கியுள்ளது. வன்னிக்குள் மேலும் முன்னேறுவதா, கைப்பற்றிய பகுதிகளைத் தக்க வைப்பதா அல்லது மீண்டும் ப…
-
- 0 replies
- 1.5k views
-
-
கடந்த 09.09.2008 அதிகாலையில் விடுதலைப்புலிகள் வவுனியா இராணுவ கூட்டுத் தலைமையகத்தின் மீது மேற்கொண்ட இருபடைத்தாக்குதல் (தரைப்படை, விமானப்படை) இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள
-
- 1 reply
- 1.2k views
-
-
அழுத்துக http://puspaviji.net/page92.html
-
- 0 replies
- 3.2k views
-
-
வவுனியாவில் உள்ள சிறிலங்கா படைத்தளம் மீது தாக்குதல் மேற்கொள்ள வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அணியிலிருந்து மூவர், தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோ
-
- 0 replies
- 1.5k views
-
-
படகு கவிழ்ந்ததில் 7 இலங்கை அகதிகள் கடலில் மூழ்கியுள்ளனர். வீரகேசரி இணையம் 9/14/2008 12:53:44 PM - Description 7 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து படகு மூலம் நாடு திரும்பிய வேளை படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியுள்ளனர். சனிக்கிழமை அதிகாலை இவ்ர்கள் இந்தியாவிலிருந்து படகு மூலம் நாடு திரும்பிய சமயம் பாக்கு நீரிணை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடலில் மூழ்கிய இவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
-
- 0 replies
- 572 views
-
-
நீலக்கடலின் நெருப்புக்குழந்தைகள்- பிரமிளா - தமிழரின் கடற்புலிகளும் - சிங்களக்கடற் படையும் பொருதும் சண்டை அரங்காகக் கடல் உள்ளது. காப்புகளோ! மறைவிடங்களோ! அற்ற திறந்த களமாக அது கிடக்கின்றது. வெற்றிபெறு! அல்லது மூழ்கிப்போ! என்பது போலத்தான் கடற்சண்டைகளின் போரியற்பரிமாணம் உள்ளது. வேரலைகளுக்கு ஈடுகொடுத்துச் சண்டையிடக்கூடிய கடற்கலங்கள் சிங்களக்கடற் படையிடமுண்டு ஆனால் சாதாரண படகுகளே கடற்புலிகளின் சண்டைக்கப்பல்களாகச் செயற்படுகின்றன. ஆழ்கடலில், பேரலைகளையும் சமாளித்தல் எதிரியின் கடற்கலங்களுடன் வெற்றிகரமாக மோதும் கடற்புலிகளின் சண்டை வரலாறு துணிகரமானது கடற்புலிகளின் படகுத்தொகுதியில் இடம்பெற்றிருக்கும் கரும்புலிப் படகுகள் எதிரிக்கு கிலி ஏற்படுத்தக்கூடியவை எதிரியி…
-
- 0 replies
- 917 views
-
-
வெளிநாட்டுப் பயணங்களுக்காக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவிற்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியைவிட அதிகளவு செலவு செய்துள்ளதாக ஆங்கில வார இதழொன்று தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக வருடாந்தம் 30 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம குறித்த நிதி ஒதுக்கீட்டை ஏற்கனவே செலவழித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, வெளிவிவகார அமைச்சின் செலவுகளை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி செயலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளிவிவகார அமைச்சரின் பயண செலவுகள், உணவு மற்றும் தங்குமிட வசதிகளுக்காக இதுவரையில் இவ்வளவு தொகை செலவிடப்படவில்லை என அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரி…
-
- 0 replies
- 1.8k views
-
-
சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கோயிலாக்கண்டி வீதியில் கப்புத்து பிரதான இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள பாலம் ஒன்றில் இருந்து நெல்லியடி காவற்துறையினரால் கடந்த வெள்ளிக்கிழமை (செப்12) மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் சாவகச்சேரி கல்வயல் பிரதேசத்தைச் சேர்ந்த 48வயதான பொன்னம்பலம் ஜெயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது மனைவி சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார். கடந்த செப் 8 ஆம் திகதி இரவு வீட்டுக்கு முன்னால் தனது குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது வாகனத்தில் சென்ற அடையாளம் தெரியாத ஆயுதாரிகளினால் இவர் கடத்திச் செல்லப்பட்டதாக அவரது மனைவி யாழ் மனித உரிமை ஆணைக்குழுவின் பணியகத்தில் முறைப்ப…
-
- 0 replies
- 921 views
-
-
கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களைப் படிப்படியாக உருவாக்குவதற்கு ஆளுங்கட்சி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சுற்றாடல் திட்டம் என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்க சுற்றாடல் அமைச்சு முனைவதாக அவர் தெரிவித்துள்ளார். மிகவும் சொற்பளவில் காணப்பட்ட கிழக்கு சிங்கள மக்களின் விகிதாசாரம் தற்போது 30 வீதத்தை எட்டியுள்ளதாகவும்இ இதனை மேலும் அதிகாரிக்க அமைச்சர் சம்பிக்க ரணவக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஜாதிக ஹெல உறுமயவினால் கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்றவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பி…
-
- 0 replies
- 685 views
-
-
வீரகேசரி நாளேடு 9/14/2008 5:36:10 PM - அவசியமான காரணங்கள் எதுவுமின்றி கொழும்பில் தங்கியிருப்போரை வெளியேற்றுமாறு பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அறிவுறுத்தல் வழங்கப்படும் வரை பாதுகாப்பு தரப்பினரால் எவரும் வெளியேற்றப்படமாட்டார்கள். இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்ட பின்னரே அதற்கான நடவடிக்கைகள் மேடுற்கொள்ளப்படும் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். அவசியமான காரணங்கள் எதுவுமின்றி கொழும்பில் தங்கியிருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர்களை வெளியேற்ற வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து கொழும்பின் சில பகுதிகளில் சுற்றிவளைப்புத் தேடுதல்களில…
-
- 0 replies
- 878 views
-
-
வன்னி மக்களின் இன்றைய நிலை.... யார் இருக்கா இவங்களுக்கு...??! புலம்பெயர்ந்த சொந்தங்களே உங்களை விட்டா யார் இருக்கா இவங்களுக்கு..??! எதிரியை விரட்டி அடிக்கும் பணியும் இம்மக்களை பாதுகாக்கும் பணியுமாக இரட்டைப் பணி புலம்பெயர்ந்தவர்களது பொறுப்பில். பொறுப்புணர்ந்து செயற்படுங்கள்..! விரைந்து செயற்படுங்கள்..! படங்கள்: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26925
-
- 6 replies
- 1.9k views
-
-
2006 ஆம் ஆண்டு மாவிலாறு அணைக்கட்டுப் பிரச்சினை ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை 11,000 புலிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், 4,000 பேரே எஞ்சியுள்ளனர் எனவும் சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் நான்கு முனைகளில் வன்னிப்பகுதியில் படையினர் முன்னேறுவதாகவும், பூநகரியைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்திற்கு தரைப்பாதை திறப்பதுதான் முக்கிய நோக்கம் எனவும் கூறியுள்ளார்.. கொல்லப்பட்ட சிங்களப் படையினரின் தொகையைக் கூற மறந்துவிட்டார் போலுள்ளது (இன்னமும் எண்ணி முடியவில்லையோ!) 11,000 Tiger cadres killed, 4,000 remain: Army Chief About 11,000 Tiger guerrillas have been killed since the military launched its campaign to secure the Mavil Aru anicut in July…
-
- 10 replies
- 2.7k views
-
-
நான்காம்கட்ட ஈழப்போரில் சிறப்பு படை நடவடிக்கைகளுக்கான முக்கியத்துவங்கள் அதிகம். அரசின் படை நடவடிக்கைகளை பொறுத்தவரையில் கிழக்கு மீதான படை நடவடிக்கை மற்றும் வன்னியில் தற்போது மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளில் சிறப்பு படையினரின் செயற்பாடுகள் அதிகம். அதற்கேற்ப விடுதலைப்புலிகளின் தாக்குதல் உத்திகளும் வேறுபட்டவை, வான்படையை இந்த போரி அறிமுகப்படுத்திய விடுதலைப்புலிகள் ஆழஊடுருவும் சிறப்பு படை மற்றும் கரும்புலி அணிகளின் இணைந்த தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். வான்புலிகள் படைத்துறை மற்றும் பொருளாதார கேந்திரமையங்களை தொடர்ந்து தாக்கி வருகையில் அவர்களின் நடவடிக்கையுடன், பீரங்கி மற்றும் தரைப்படை சிறப்பு அணிகளை விடுதலைப்புலிகள் இணைத்து வருவது தற்போதைய போரியல் உத்…
-
- 1 reply
- 1.4k views
-
-
திருமலையில் இருவர் சுட்டுக்கொலை வீரகேசரி இணையம் 9/14/2008 11:43:01 AM - Description திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர். திருகோணமலை கப்பல்துறையைச் சேர்ந்த நாதப்பன் மற்றும் ராஜேந்திரன் என்ற இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் சீன துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
- 0 replies
- 654 views
-
-
வவுனியாவில் இயங்கி வரும் வவுனியா கூட்டுப்படை தலைமையகத்தை (ஜோசப் முகாம்) மன்னார் தள்ளாடி பகுதிக்கு இடமாற்றுவது குறித்து பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருவதாக தெரியவருகின்றது. வவுனியா கண்டி வீதியில் அமைந்திருக்கும் கூட்டுப்படை முகாம் மீது கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை புலிகள் மும் முனைத் தாக்குதல்களை நடத்தினர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன் ராடார் உட்பட இராணுவ தளபாடங்கள் சேதமடைந்தன. கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இந்த கூட்டுப்படை தலைமையகம் இயங்கி வருகிறது. பல நூறு ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இந்த முகாமிற்குள்ளே விமானப்படை தளமும் ஓடு பாதையும் உள்ளன. வவுனியாவில் இயங்கி வரும் வவுனியா கூட்டுப்படை தலைமையகத்தை (ஜோசப் முகாம்) மன்னார் தள்ளாடி பகுதிக்கு இடமாற்றுவது க…
-
- 2 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (செப்.13) அதிகாலை 6 மணியளவில் களுவாஞ்சிகுடி அதிரப்படை முகாமில் இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். 29 வயதான ஜெயசிங்க என்ற அதிரடிப்படைச் சிப்பாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது கண்டறியப்படவில்லை. இந்தத் தற்கொலைச் சம்பவம் குறித்து களுவாஞ்சிகுடி காவற்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108
-
- 0 replies
- 982 views
-
-
வன்னியிலிருந்து அரசசார்பற்ற நிறுவனங்கள் வெளியேறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெயர்ந்த மக்கள் நடத்திய தொடர் வீதிமறியல் போராட்டங்களைத் தொடர்ந்து வன்னியிலிருந்து வெளியேறும் முயற்சிகளை அரசசார்பற்ற நிறுவனங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளன. மோதல்கள் உக்கிரமடைந்திருப்பதால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கமுடியாதெனக் கூறி வன்னியில் செயற்பட்டுவரும் அரசசார்பற்ற நிறுவனங்களை வெளியேறுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை ஏற்று ஐ.நா. மனித உரிமை ஸ்தாபனங்கள் உட்பட பல அரசசார்பற்ற நிறுவனங்கள் வன்னியிலிருந்து வெளியேற ஆரம்பித்தன. எனினும், ஐ.நா. ஸ்தாபனங்கள் உள்ளிட்ட அரசசார்பற்ற நிறுவனங்களை வெளியேறவிடாது வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் பொதுமக்கள் வீதி மறியல் போரா…
-
- 0 replies
- 1k views
-
-
வவுனியாவில் நகரின் தென்பகுதியில் வன்னிப் பிராந்திய இராணுவத் தலைமையகம், விமானப்படைத் தளம் ஆகியவற்றை உள்ள டக்கியதாக அமைந்திருந்த ஜோசெவ் படைத்தளத்தின் மீது புலிகள் நடத்திய மூன்று முனைத் தாக்குதல் படைத் தரப்புக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. கடந்த செவ்வாயன்று (09) அதிகாலை வேளையில் புலிகளின் கரும்புலிக் கொமாண்டோக்கள் வன்னிப் படைத்தலைமையகத்தினுள் புகுந்து நடத்திய தாக்குதல், அதற்குத் துணையாக புலிகளின் வான்படை நடத்திய குண்டுவீச்சு, கிட்டு பீரங்கிப் படையணி நடத்திய அகோர ஆட்டிலறித் தாக்குதல் என்பன வவுனியாவையே கிலிகொள்ள வைத்தது. திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிலவு மறைந்துவிட இருள் கவ்விக் கொண்டது. அந்த இருளோடு இருளாக கரும்புலிக் கொமாண்டோ அணியொன்று வவுனியா நகருக்குத் தென…
-
- 1 reply
- 1.8k views
-
-
காரணம் எதுவுமின்றி தலைநகர் கொழும்பில் தங்கியிருக்கும் பெரும் எண்ணிக்கையிலானோரினால் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எவ்வித காரணமுமின்றி கொழும்பு காவற்துறைப் பிரிவில் அதிக எண்ணிக்கையிலானோர் தங்கியிருந்ததாகத் பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 6950 பேர் எவ்வித காரணமும் இன்றி கொழும்பில் உள்ள தற்காலிக விடுதிகள் மற்றும் வீடுகளில் தங்கியிருந்ததாக பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமை வழமைக்கு மாறானது, உண்மையில் இவ்வாறான சூழ்நிலைகளின் காரணமாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடும் என அவர் தெரிவித்துள்…
-
- 11 replies
- 2.1k views
-
-
பிரி"கேடி"யன் உதய நாணயக்காரனின் மிரட்டல்....... ஆதாரம் வீரகேசரி
-
- 3 replies
- 2.4k views
-
-
கிழக்கு மாகாண முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படுகிற பிள்ளையான் தனது மூத்த ஆலோசகர் டொக்ரர் விக்கினேஸ்வரனின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கலாநிதி விக்னேஸ்வரன் முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயலாளராகப் பதவி வகித்தவர். கிழக்கிற்கான மாகாண சபை அமைக்கப்பட்டவுடன் முதல் மூன்று மாதங்களுக்கு அதன் செயலாராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது விக்னேஸ்வரன் கிழக்கு மாகாண முதலமைச்சரின் சார்பில் நிர்வாக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருக்க்pறார். கலாநிதி; விக்னேஸ்வரனுக்கு இந்தியாவுடன் உள்ள நெருங்கிய தொடர்பு காரணமாக அவருடைய பதவிக்காலம் நீடிக்கப்படக் கூடாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா எனப்படு…
-
- 0 replies
- 1.4k views
-