Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கில் காணாமல் போனோரது குடும்பங்களுக்கு நட்டஈட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என மாகாண முதலமைச்சர் சிவேநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் கிழக்கில் காணாமல் போனோருக்காக இந்த நிதி வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலான தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளின் அடிப்படையில் நட்டஈட்டுத் தொகை வழங்கப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் இவ்வாற…

  2. இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள படையினர் மீண்டும் போர்க்களம் திரும்பினால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் எனவும், அவர்கள் இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படமாட்டார்கள் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது இந்த சலுகை நாடளாவிய ரீதியில் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள 3,600 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் மீளத் திரும்பினால், அவர்களுக்கு அவர்கள் வகித்துவந்த அதே பதவி வழங்கப்படும் எனவும், அவர்கள் இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படமாட்டார்கள் எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இவ்வாறு தப்பிச் சென்ற இராணுவ வீரர்களில் 2,500 பேர் ஓகஸ்ட் 1 ஆம்…

  3. சிங்கப்பூரில் இலங்கை யுவதி கொலை இந்திய இளைஞன் சந்தேகத்தில் கைது சிங்கப்பூரில் 21 வயது இலங்கை யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 20 வயது இந்திய இளைஞனை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர் இங்குள்ள கேலங் பகுதி ஹோட்டல் ஒன்றில் வியாழக்கிழமை இந்தக் கொலைச்சம்பவம் இடம்பெற்றதாக சிங்கப்பூர் பொலிஸார் தெரிவித்தனர். இவர் நேற்று சனிக்கிழமை நிதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். சிங்கப்பூரில் கேலங் பகுதி விபசாரத் தொழிலுக்கு பெயர் பெற்ற இடமாகும்.இங்கு விபசாரத்தொழில் சுதந்திரமாக நடைபெற்று வருகிறது. சிவப்பு வெளிச்சப்பகுதி என்று கூறப்படும் இங்கு விபசாரத் தொழிலில் இலங்கைப் பெண்கள் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிங…

  4. போக்கு மாற்றம் - சேனாதி - மாவிலாற்றில் தொடங்கி இரு வருடங்களுக்கும் மேலாக நீடித்துச்செல்லும் நாலாம் கட்ட ஈழப்போரின் பிந்திய நிலைவரப்படி, இரு தரப்பும் கைவசம் வைத்துள்ள தேர்வுகளின் அடிப்படையில் போரின் போக்கை ஆராயும்போது, புதிய பரிமாணங்கள் தென்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றுவதற்காக நிறுத்தப்பட்ட படைகளை 'எக்காரணம் கொண்டும் அகற்றமாட்டோம்" என்று சிறிலங்கா தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா பலமுறை சத்திய வாக்குத் தந்திருந்தபோதும், அங்கே அண்மைக்காலத்தில் நடந்த நிகழ்வுகள், வேறுவிதமான யதார்த்தத்தைச் சொல்கின்றன. வன்னிப்போர் அரங்கிலே, கால அட்டவணை மற்றும் படைய வளங்களின் அடிப்படையில் கொழும்பின் கையை மீறிச் சென்று கொண்டிருக்க…

  5. உள்ளிருந்து ஒரு குரல் - புரட்டாதி 2008 மன்னாரின் முள்ளிக்குளத்துக்கும் கீரிசுட்டானுக்குமிடையே சோலைக் காடொன்று உண்டு. காட்டின் ஒரு திசையில் போனால் விளாத்திக்குளம் வரும். அங்கே லெப். சாள்ஸ் அன்ரனி படையணியினர் சில கண்காணிப்பு நிலைகளை அமைத்தார்கள். விளாத்திக்குளத்தின் பின்புறமாக ஒரு திசையில் சோலைக் காட்டினுள் புகுந்த 2 ஆம் லெப். மாலதி படையணியின் ஒரு அணி தமிழ்தென்றலின் வழிகாட்டலில் கண்காணிப்பு நிலைகளுக்கான இடங்களைத் தேர்வு செய்து, இயற்கையான மரக்காப்புகளுடன் நின்றுகொண்டு, தேவையான அகழிகள் சிலவற்றைத் தம் தேவைக்கேற்ப வெட்டியது. காட்டிடையே எழுந்த இந்த முன்னரண் தொகுதிக்கு வலப்புறம் கோயில்மோட்டை இருந்தது. அவர்களும் இவர்களுமாக வேலை செய்து போர் முன்னரங்கை இணைக்க வேண்டும்…

  6. மட்டக்களப்பு மாவட்டம் கோரளைப்பற்று தெற்கு பிரதேசபைக்குட்பட்ட வேடமுனை கிராமம்பகுதியில் விடுதலைப்புலிகள் என்று எண்ணி படையினர் இரு அணிகளுக்கிடையில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப்பணியில் ஈடுட்டிருந்த படையினர் இரு அணிகள் நேருக்கு நேர் சந்தித்தபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்திலேயே இவர்கள் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. tamilwin

  7. விதுரன் வன்னியில் யுத்த நிலைமை மோசமடைகிறது. பூநகரி மற்றும் கிளிநொச்சி நோக்கிய படை நகர்வு மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில் விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதலும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களாக மௌனம் சாதித்து வந்த புலிகள் போர்க்கோலம் பூண்டு விட்டதால் இனி வன்னிக் களமுனை அதிரப்போகிறது. இதுவரை இருந்த நிலைமை இனியில்லையென்ற நிலையில் புலிகளின் பதிலடியை இனி ஒவ்வொரு கணமும் படையினர் எதிர்கொள்ளப் போகின்றனர். வன்னியை முழுமையாகக் கைப்பற்றிவிட வேண்டுமென்பதற்காக அரசும் படைத்தரப்பும் எதனையும் செய்யத் தயாராகிவிட்டன. வன்னியிலுள்ள நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றிவிட்டு வன்னியை முழுமையாகக் கைப்பற்றிவிடுவதற்காக சர்வதேச சமூகத்துடனும் சர்வதேச தொண்டர் அமைப…

  8. மிகவும் வல்லமை படைத்த போராளிகளைக் கொண்ட புலிகள் அமைப்பைத் தோல்வியுறச் செய்வது எளிதான காரியமல்ல என்று வோல் ஸ் ரீட் ஜேர்னல் (WALL STREET JOURNAL) என்னும் நாழிதழ் தனது ஆகஸ்ட் 28ம் திகதிய ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து பிரசுரமாகும் அந்த இதழின் ஆசிரிய தலையங்கத்தில் மேரும் கூறப்பட்டுள்ளதாவது:- இலங்கை இராணுவம் வடக்கு முனையில் தமிழ் புலிப் போராளிகளுக்கு எதிரான முழு அளவிலான தாக்குதலை இரண்டு மாத காலமாக மேற்கொண்டு வருகின்றது. கால் நூற்றாண்டு காலமாக நாட்டைக் கலக்கி வந்த யுத்தத்திற்கு முடிவு காணப்படலாம். அந்தப் பிராந்தியத்தில் பெருமளவு பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாகவும் புலிகளின் தலைநகர் கிளிநொச்சியையும் விரைவில்…

  9. கனடாவிலிருந்து வந்த மதகுருவிடம் நவீனரக தொடர்பாடல் கருவிகள் [07 - September - 2008] [Font Size - A - A - A] *கைதுசெய்யப்பட்டு தீவிர விசாரணை வெளிநாடொன்றிலிருந்து நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை நள்ளிரவு இலங்கை வந்த கிறிஸ்தவ மதகுரு ஒருவரிடமிருந்து மிகவும் சக்தி வாய்ந்ததும் மிக நவீன வசதிகள் கொண்டதுமான தொடர்பாடல் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒலிபெருக்கிக் கருவிக்குள் மறைத்து வைக்கப்பட்டவாறு இவை கொண்டுவரப்பட்டபோதே சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தகவல் ஒன்றின் பேரிலேயே இந்த மதகுரு கொண்டுவந்த பொருட்களை சோதனையிட்டபோது ஒலிபெருக்கிக் கருவிக்குள் சுமார் 12 லட்சம் ரூபா பெ…

  10. தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளும் வயதெல்லை 15 ஆக குறைக்கப்படவுள்ளதென ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஏ.ஜீ. தர்மதாஸ தெரிவித்துள்ளார். 1968ம் ஆண்டு 32ம் இலக்க ஆட்பதிவு சட்டமூலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இந்த நடைமுறை அமுலப்;படுத்தப்படவுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள அடையாள அட்டைகளுக்குப் பதிலாக கைவிரல் அடையாளம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு காரணிகளைக் கொண்ட நவீன அடையாள அட்டைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அடையாள அட்டைக்கான விண்ணப்பப்படிவம் ஒப்படைக்கப்பட்டு பத்து தினங்களுக்குள் அடையாள அட்டைகளை விநியோகிக்க கூடிய வகையில் புதிய நடைமுறைகள் மாற்றியமைக்கப்படவுள்ளன. http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50

  11. வடக்கில் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள மக்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதை தம்மால் தீர்மானிக்க முடியாது என ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புகள் தெரிவித்துள்ளன "எந்தவொரு நபரும் தான் விரும்புகின்ற பாதுகாப்பான இடத்தை நோக்கிச் செல்வதற்கான சுதந்திரத்தைக் கொண்டிருக்கிறார். அவர்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை எம்மால் வழங்க முடியாது" என ஐ.நாவின் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், அப்பகுதியில் வாழும் மக்களின் மனிதாபிமானத் தேவைகளை நிறைவேற்றவே ஐ.நா அதிகாரிகள் அங்கு தங்கியிருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் கட்ட…

    • 1 reply
    • 939 views
  12. இச்சட்டமூலம் முஸ்லிம் பள்ளிவாயில்களில் சத்தமிடும் ஒலிபெருக்கிகளின் குரல்வளையை நசுக்கும் நோக்கிலேயே பொதுநலச் சட்டமாகக் கொண்டுவரப்பட்டது. அந்நேரம் தெரியாத அநீதி இப்போது தெரிகிறதாம். தனக்கு தனக்கு என்றால்.......அடிக்குமாம். ஆதாரம் வீரகேசரி வாரவெளியீடு

  13. தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் வான் தாக்குதல்களின் மூலம் பாதுகாப்புத் தரப்பின் மீது இராணுவ ரீதியான அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாதெனப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அடைந்துவரும் தொடர் தோல்விகளை மூடி மறைப்பதற்காகவும், ஆதரவு வழங்கும் தரப்பினரைத் திருப்திப்படுத்தவுமே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இதுவரையில் 6 தடவைகள் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும், விமானப்படையினர் 6000 தடவைக்கு மேல் அவர்கள் மீது விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதகாவும் கோத்தபாய சுட்டிக் காட்டியுள்ளார். விடுதலைப் புலிகளின் இலகுரக விமானங்களின் மூலம் 30 கிலோ எடையுடைய இரண்டு கு…

    • 8 replies
    • 1.9k views
  14. இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் இந்தியா சென்றிருக்கிறார். சார்க் மகாநாட்டை முன்னிட்டு சிறிலங்கா வந்திருந்த உயர்மட்டக் குழு சம்பந்தரை சந்தித்து, இந்தியாவிற்கு தமிழர் மீது இருக்கும் அக்கறையை வெளிப்படுத்தி அவரை மகிழ்வித்திருந்தது. தற்போது மீண்டும் அவ்வாறானதொரு மகிழ்விப்பிற்காக சம்பந்தரை இந்தியா அழைத்திருக்கலாம். நீண்டகாலம் தனது சொந்தத் தொகுதியான திருகோணமலைக்கு செல்லாதிருந்த சம்பந்தர் சமீபத்தில் பலத்த பாதுகாப்புடன் திருகோணமலைக்குச் சென்று கந்தசாமியை தரிசித்துவிட்டு தற்போது இந்தியாவிலுள்ள சில நாராயணன்களை தரிசிக்கச் சென்றிருக்கிறார். அவர் என்ன செய்தி கொண்டு வரப் போகின்றார் என்ற ஆவல் விடயமறிந்த எ…

  15. வன்னி மக்கள் அரசின் நிவாரணத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. சொந்த மண்ணில் வாழவிடு இல்லாது போனால் அந்த மண்ணிலே சாகவிடு என்று தன்மானத்தைக் காத்துக் கொள்ளவே இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அவர்கள் நிராகரிக்கிறார்கள். இப்படிக் கூறியுள்ளார் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன. வன்னி மக்களை வவுனியாவுக்கு வருமாறு ஜனாதிபதி உட்பட அரச உயர்மட்டத் தலைவர்கள் அழைத்தாலும் அந்த மக்கள் தமது சொந்த மண்ணை விட்டு வெளியேறமாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். வவுனியாவுக்கு வன்னி மக்களை அழைக்கும் அரசின் முயற்சி குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:- யுத்தத்தைத் திணித்திருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் நிவாரணங்களையும் உணவுப…

  16. அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று ஏழாம் வட்டாரத்தில் உள்ள வடிவேல் என்பவரின் வீடு கருணா குழுவினரால் தீ வைக்கப்பட்டுள்ளது. கருணாகுழுவின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான இனியபாரதியின் தலைமையிலான குழுவினரே வீட்டுக்குத் தீவைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 8மணியளவில் இச்சம்பம் இடம் பெற்றுள்ளது. இந்த தீவைப்புக் காரணமாக ஒன்றரை லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இப்பிரதேசத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரும் சில தினங்களுக்கு முன்னர் இக்குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50

  17. அரசசார்பற்ற நிறுவனங்களின் வாகனங்கள் வன்னிக்குள் செல்வது வெள்ளி முதல் தடை செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மற்றும் ஏ9 வீதிகளை நோக்கி படையினர்ஷெல் தாக்குதலை மேற்கொண்டு வருவதானாலேயே இந்தத் தடையை ஏற்படுத்தியதாகப் படையினர் தெரிவித்துள்ளனர். எனினும் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு செல்லும் அரசசார்பற்ற நிறுவனங்களின் வாகனங்கள் ஓமந்தையூடாக பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை நள்ளிரவு கிளிநொச்சி நகரில் படையினர் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் போரூட் அமைப்பினரின் கட்டிடத்திற்கு அருகிலிருந்த பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளது. இந்நிலையில் கிளிநொச்சியில் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பணிகள் படை நடவடிக்கையால் பெரிதும் முடங்கிய…

  18. இலங்கைப் படையினருக்கு எதிரான இறுதிப் போருக்குத் தேவையான ஆயுதங்களை உடனடியாக வழங்குமாறு உக்ரைன் ஆயுத முகவர்களிடம் விடுதலைப்புலிகளின் தலைமை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பதாக சிங்கள வார இதழ் குறிப்பிட்டுள்ளது. மோதல்களில் ஈடுபட்டுள்ள கெரில்லாக்களுக்கு தேவை எனக் கூறி விடுதலைப்புலிகள் நவீன ஆயுதங்களை பெற்றுக் கொள்ளும்; முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. சட்டவிரோத ஆயுத விற்பனையாளர்களின் ஊடாக சீன உற்பத்தி ஆயுதங்களை விடுதலைப்புலிகள் அண்மைக் காலத்தில் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆயுத முகவர்கள் கறுப்பு பணத்தில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதாக கூறப்படுகிறது. ரி 56 ரக துப்ப…

  19. வன்னேரிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 85க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 280க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பை ஆதாரங்காட்டி ‘தமிழ்நெற்’செய்திவெளியிட்ட

  20. வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் சுட்டுக்கொலை [ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2008, 04:27 மு.ப ஈழம்] [க.நித்தியா] வவுனியா மாவட்டத்தில் உள்ள தாலிக்குளம் பகுதியில் நேற்று முன்நாள் சிறிலங்கா படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர

    • 0 replies
    • 971 views
  21. நல்லூர்க் கந்தனின் அடியார்களின் குறை தீர்க்கும் திருப்பணியில் சிறிலங்காவின் புதல்வர்கள். பல கோடி பெறுமதியான ஆடை அணிகலங்களுடன் எழுந்தருளி இருக்கும் நல்லூர்க் கந்தனின் திருக்காட்சி வெகு விமரிசையாக நடைபெற்ற திருவிழாவில் பக்தர்களின் தூக்குக் காவடி. அடியார்களின் தொண்டர்களாக சிறிலங்காவின் மைந்தர்கள் களப் பணியாற்றும் காட்சி.

  22. இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 2505 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவை மேற்கோள்காட்டி ராவய செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட 305 பேருக்கு அண்மையில் இராணுவ நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இராணுவத்திலிருந்து தப்பியோடி மறைந்து வாழ்வோர் உடனடியாக தங்களது படைப்பிரிவுகளுக்குச் சென்று சரணடைவதன் மூலம் தண்டனையிலிருந்து மீள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவப் பொலிஸாரும், சாதாரண பெலிஸாரும் இணைந்து கடந்த 2ம், 3ம் திகதிகளில் நாடு தழுவிய ரீதியில் மேற்கொண்ட தேடுதலில் 80 பேர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. http…

  23. இராணுவத்தால் முழுவதுமாக மீட்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வவுனியா - மன்னார் வீதியில் இன்று மோதல்கள் இடம்பெற்றுள்ளன. மன்னார் வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பல கள முனைகளில் மோதல் நடந்துள்ளதாக இராணுவத்தை மேற்கோள் காட்டி பிபிசி/தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. இம்மோதல்களில் இராணுவத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

  24. வடக்குக் கிழக்கில் உள்ள பிரதான வைத்தியசாலைகளுக்கு சயனைட் விஷத்தை முறிக்கும் மருந்துகளை அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஹோனானிகல இராணுவ முகாமிற்கு வழங்கப்பட்ட உணவில் சயனைட் கலந்திருந்தது என அறியப்பட்ட தகவலை அடுத்து சுகாதார திணைக்களம் இந்த நடவடிககையை எடுத்துள்ளது. படையினருக்கு வழங்கப்படும் உணவை இனிவரும் காலங்களில் நன்கு பரீட்சித்த பின்னர் வழங்க பாதுகாப்பு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். உணவுபொருட்களை கொள்வனவு செய்யும் போது அவற்றை பெற்றுக்கொள்ளும் நபர்கள் குறித்து ஆவதானத்துடன் செயற்படுவது, உணவு பொருள் கொள்வனவு செய்வது முதல் அதனை முகாமுக்கு வழங்கும் வரையான முழுப் பொறுப்பையும் உணவு விநியோகஸ்தருக்கு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.