ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படுவதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். தமிழ் – சித்திரை புது வருடப் பிறப்பை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்படி, விசேட சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 15 லீற்றர் வரை அதிகரிக்கப்படுகிறது. சாதாரண சேவைகளில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 05 லீற்றரில் இருந்து 8 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 7 லீற்றராகவும், கார்களுக்கான ஒதுக்கீடு 30 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 521 views
- 1 follower
-
-
தம்பாட்டி இறங்குதுறை காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் April 4, 2023 ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (04) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாரந்தனை வடக்கு தம்பாட்டியில் உள்ள இறங்கு துறையில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஊர்காவற்துறை மீனவர்களுக்கு சொந்தமான தம்பாட்டி இறங்குதுறைக்கு அண்மையில் உள்ள பகுதியில் கடற்படையினரால் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்த நிலையில், இதனை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் குறித்த அரச காணியிலிருந்து கடற்படையினர் வெளியேறாத நிலையில், நில அளவை த…
-
- 0 replies
- 586 views
-
-
இலங்கை இந்திய போக்குவரத்து விரிவுபடுத்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன - யாழ். அரச அதிபர் Published By: Digital Desk 5 04 Apr, 2023 | 09:53 AM (எம்.நியூட்டன்) இலங்கை இந்திய போக்குவரத்து விரிவுபடுத்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டள்ளது எனவே சுற்றுலாத்துறையில் மேம்படுத்தும் நோக்குடன் சுற்றுலாத்துறை சார்ந்த நிறுவனங்களை சட்டரீதியாக பதிவு செய்து ஒழுங்குபடுத்தலை மேற்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகமும் இணைந்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணைய…
-
- 0 replies
- 406 views
-
-
அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று(04) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு விடுமுறை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/247792
-
- 1 reply
- 247 views
- 1 follower
-
-
ராடர் தளமொன்றை இலங்கையில் நிர்மாணிக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியப் பெருங்கடலில் அமையப்பெற்றுள்ள இந்திய மற்றும் அமெரிக்காவின் இராணுவத்தளங்களை உளவு பார்ப்பதற்காக இந்த ராடர் தளத்தை சீனா இலங்கையில் அமைக்கவுள்ளது. இலங்கை உளவு துறை தரப்புக்களால் இந்த திட்டம் தொடர்பிலான தகவல் வெளிக்கொணரப்பட்டுள்ளதாக பிரித்தானிய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. சீனா இலங்கைக்கு வழங்கிய கடன்களின் மூலோபாய ஆதாய நடவடிக்கையாக இந்த திட்டம் அமைந்துள்ளதென நிபுணர்களை கோடிட்டு குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ராடர் தளமானது மாத்தறை பகுதியில் தெவுந்தர முனைக்கு அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்தி…
-
- 12 replies
- 1.2k views
- 2 followers
-
-
முல்லைத்தீவில் தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்ட வகையில் அபகரிப்பு !! முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட எல்லைக் கிராமமான கருநாட்டுக் கேணியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்து. குறித்த பகுதியில் பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள தமிழர்களுக்குரிய காணிகளே அபகரிக்கப்பட்டு 180 சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் இந்த சிங்கள குடியேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் குறித்த காணிகளை பார்வையிடுவதற்கு, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு ம…
-
- 4 replies
- 407 views
-
-
புத்தாண்டு சுபநேரப் பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு தமிழ், சிங்கள புத்தாண்டு சுபநேரப் பத்திரம் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி மேளதாளத்துடன் கொண்டுவரப்பட்ட சுபநேரப் பத்திரத்தை, புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார். வளர்பிறை தரிசனம், பழைய ஆண்டிற்கான நீராடல், புத்தாண்டுப் பிறப்பு, புண்ணியகாலம், உணவு சமைத்தல், சுப காரியங்களை ஆரம்பித்தல் கைவிசேடம் பெறுதல், உணவு உண்ணுதல், தலைக்கு மருத்துநீர் வைத்தல், தொழிலுக்காக புறப்படுதல், மரம் நடுதல் போன்ற சுப நேரங்கள் இ…
-
- 0 replies
- 184 views
-
-
எதிர்வரும் விடுமுறை காலத்தில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது. நீண்ட வார இறுதி மற்றும் எதிர்வரும் புத்தாண்டு காலங்களில் கோழி இறைச்சியின் தேவையை அதிகரிக்கும். என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார் . “எனவே, கோரிக்கையை எங்களால் பூர்த்தி செய்ய முடியுமா என்பதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. உள்ளூர் சந்தையில் கோழி இறைச்சியின் சில்லறை விலையானது தேவைக்கு ஏற்ப விநியோகத்தைப் பொறுத்து இருக்கும். “சந்தைக்கு தேவையான உறை கோழி போதுமான அளவு விநியோகத்தில் உள்ளது, இது ஏற்கனவே பல்பொருள் அங்காடிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. “சந்தைக்கு கோழி இறைச்சி வழங்குவதில் சிக்கல் உள்ளது. கோழி உற்பத்…
-
- 3 replies
- 782 views
- 1 follower
-
-
03 APR, 2023 | 07:26 PM தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களைப் பாதுகாப்பதற்கு தாம் எந்த எல்லைக்குப் போகவும் தயாராக உள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராங்களில் ஒன்றான முல்லைத்தீவு - கருநாட்டுக்கேணியில் தமிழர்களின் காணிகளை அபகரித்து சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளும் முயற்சிஒன்று 03.04.2023இன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதித் தமிழ் மக்களும், ரவிகரனும் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்…
-
- 0 replies
- 631 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 03 APR, 2023 | 03:26 PM லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நாளை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராமுடைய ஒரு எரிவாயு சிலிண்டர் 1,000 ரூபா வரை குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது. வரலாற்றில் லிட்ரோ எரிவாயுவின் அதிகூடிய விலைத் திருத்தம் இதுவென அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிவாயு விலை வீழ்ச்சி மற்றும் ரூபாயின் மதிப்பு வலுவடைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணிகள் விலை குறைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/152046
-
- 2 replies
- 488 views
- 1 follower
-
-
14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை Published By: VISHNU 03 APR, 2023 | 03:12 PM 14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று (03) விடுவிக்கப்பட்டனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்த யாழ் வேலணையை சேர்ந்த இ. திருவருள், யாழ் கரவட்டியை சேர்ந்த ம. சுலக்சன், முள்ளியவளையை சேர்ந்த க. தர்சன் ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், குறித்து மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில…
-
- 13 replies
- 957 views
- 1 follower
-
-
யாழ். பல்கலையில் போதிய வரவின்மையால் பரீட்சைக்கு அனுமதியில்லை : ஆராய கூடுகிறது விஞ்ஞான பீடச் சபை Published By: T. SARANYA 03 APR, 2023 | 09:55 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் சிலரை, வரவு ஒழுங்கின்மை காரணமாக பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்காமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டை அடுத்து குறைந்த வரவு வீதமுள்ள மாணவர்களையும் பரீட்சைக்கு அனுமதிப்பது தொடர்பில் ஆராய்வதற்கென விசேட பீடச் சபைக் கூட்டத்தை இன்று பி.ப. 4 மணிக்கு கூட்டுவதற்கு விஞ்ஞான பீடாதிபதி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அனைத்துப் பல்கலைக…
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
யாழ். பருத்தித்துறையில் கடற்தொழிலாளர்கள் போராட்டம் Published By: Digital Desk 5 03 Apr, 2023 | 10:26 AM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் திங்கட்கிழமை கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சுருக்கு வலை உட்பட்ட சட்டவிரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மீனவர்களை வாழ விடு அல்லது சாகவிடு, மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் சுருக்கு வலையை உடனடியாக நிறுத்து, தடை செய்யப்பட்ட அனைத்து தொழிலையும் உடனடியாக நிறுத்து என போராட்டங்களில் ஈடுபட்ட கடற்றொழிலா…
-
- 0 replies
- 345 views
-
-
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை ஆராய்வதற்காக சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழு! பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை ஆராய்வதற்காக சிரேஷ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதில் ஏதேனும் சிக்கல் இருப்பதாக சம்பந்தப்பட்ட குழு சிபாரிசு செய்தால் அது உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன தெரிவித்தார். இதேவேளை, சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளுக்கு அமைய இந்த சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட…
-
- 0 replies
- 278 views
-
-
"13" அமுலானால் சமஷ்டி ஆட்சி மலரும்! - சரத் வீரசேகர “தமிழ் மக்கள் சமஷ்டியைக் கேட்கவில்லை. பிரிவினையை விரும்பும் தமிழ் அரசியல்வாதிகளும் புலம்பெயர் தமிழர்களுமே சமஷ்டியைக் கேட்கின்றனர்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார். “அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். 13 ஐ நடைமுறைப்படுத்தினால் ஒற்றையாட்சியின் கீழ் இருக்கின்ற நாடு சமஷ்டி ஆட்சிக்கு உட்படும்” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “தமிழ் நாட்டின் ஆதரவைப் பெறுவதற்காகத்தான் இந்திய அரசு 13 ஆவது திருத்தச் சட்டத்தை வடக்குக்குக் கொடுப்பதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது” – என்றும் அவர் குறிப்பிட்டார். …
-
- 2 replies
- 428 views
-
-
கடும் வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு சுகாதார நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு சுகாதாரத் துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், அதிக உடற்பயிற்சி செய்பவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். அதிக வெப்பமான காலநிலையின் எதிர்மறையான உடல் விளைவுகளைக் குறைக்க எடுக்கக்கூடிய முக்கிய நடவடிக்கை, அதிக தண்ணீர் குடிப்பதாகும், மேலும் அதிக உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 2 முதல் 4 கிளாஸ் தண்ணீர் குடிப்பது பொருத்தமானது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. முடிந்தவரை வீட்டிற்குள் அல்…
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
கண்ணிவெடி அகற்றும் இலங்கையின் இறுதி மூலோபாய ஒழுங்கமைப்பை வெளிப்படுத்திள்ளது. அதன்படி, 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனைக்கு அமைய கண்ணிவெடிகளை அகற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி, இலங்கையில் கண்ணிவெடி அகற்றுவதற்கான இறுதி மூலோபாய ஒழுங்கமைப்புத் திட்டத்தை, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா தலைமையில் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று முன்தினம் (31) நடைபெற்றது. இந்த வேலைத்திட்டத்திற்கு கலந்து கொண்ட தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் …
-
- 2 replies
- 612 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 02 APR, 2023 | 04:33 PM மகாவலி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுமார் 10 லட்சம் காணிகளில் எந்த தமிழருக்கும் ஒரு துண்டு காணியேனும் வழங்கப்படவில்லை என யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார். யாழ். நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில் நேற்று முன்தினம் (31) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்து சமயம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்த கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் காணப்படுகின்ற தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன மிக …
-
- 1 reply
- 396 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 02 APR, 2023 | 03:50 PM (எம்.நியூட்டன்) யாழ். இருபாலையில் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லத்தை கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம் இணைந்து முற்றுகையிட்டதில் 13 சிறுவர்கள் இன்று (2) முற்பகல் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்படவுள்ளனர். யாழ்ப்பாணம், இருபாலை பகுதியில் கிறிஸ்தவ சபையொன்றினால் அனுமதியின்றி சிறுவர் இல்லம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே முற்றுகையிடப்பட்டு, 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அந்த சிறுவர்கள் இல்லத்த…
-
- 5 replies
- 941 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 02 APR, 2023 | 12:45 PM 800 சாரதிகள் மற்றும் 275 நடத்துநர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதற்கான ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என இ.போ.ச தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையில் 1,035 சாரதி வெற்றிடங்கள் மற்றும் 450 நடத்துநர் வெற்றிடங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். புதிய ஆட்சேர்ப்பு மூலம் இந்த வெற்றிடங்களின் எண்ணிக்கை குறையும் என இ.போ.ச தலைவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/151946
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
Published By: VISHNU 02 APR, 2023 | 03:57 PM கணினி குற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் சீனப் பிரஜைகள் 38 பேர் நேற்று சனிக்கிழமை (1 ) கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர். நிதி மோசடி தொடர்பான கணினி குற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் குறித்த சீனப் பிரஜைகள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சீன தூதரகத்தின் உதவியுடன் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 33 ஆண்கள், 5 பெண்களும் அடங்குவர். சந்தேக நபர்கள் வசமிருந்த 40 மடிக்கணினிகள், 120 கையடக்கத் தொலைபேசிகள், பல கணினி உபகரணங்கள் மற்றும் பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள…
-
- 3 replies
- 706 views
- 1 follower
-
-
மாகாண சபை தேர்தல் திகதியுடன் டெல்லி செல்கிறார் ஜனாதிபதி ரணில் Published By: Digital Desk 5 02 Apr, 2023 | 09:49 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளார். இவ்வார இறுதியில் இந்த விஜயம் இடம்பெற உள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சி ஊடக பிரிவின் அதிகாரி, எதிர்வரும் 5 ஆம் திகதி புதன்கிழமை அல்லது 6ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதியின் இந்திய விஜயம் இடம்பெறலாம் என குறிப்பிட்டார். எவ்வாறாயினும் டெல்லிக்கு விஜயம் செய்வதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிதழை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அண்மைய இலங்…
-
- 0 replies
- 180 views
-
-
சிறிய மாற்றங்களுடன் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் – நீதி அமைச்சர் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இம்மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் எவ்வித அடிப்படை மாற்றங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பயங்கரவாத தடுப்புச் சட்டங்களை ஆய்வு செய்த பின்னரே …
-
- 0 replies
- 139 views
-
-
ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 117 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சாதாரண சேவை, ஒருநாள் சேவை ஊடாக கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதிக் கட்டுப்பாட்டு ஊடக பேச்சாளர் ஹன்சிக்கா குமாரசிங்கவிடம் வினவிய போது, தெரிவித்தார். இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களுக்கு அந்த நாடுகளின் தூதரக காரியாலயங்கள் ஊடாக கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், கடவுச்சீட்டு ஒன்று காணாமல் போனால் விரைவாக அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்குமாறு அவர் கோரியுள்ளார். கடவுச்சீட்டு ஒன்று வழங்கப்பட்ட திகதி…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களுக்கு NVQ (National Vocational Qualifications) சான்றிதழ் இன்று முதல் கட்டாயமாக்கப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 28 நாள் வதிவிடப் பயிற்சியும் இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டார். 28 நாள் வதிவிடப் பயிற்சியின் பின்னர் வீட்டுப் பணிகளுக்காக வௌிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு NVQ மூன்றாம் நிலை சான்றிதழ் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். நிபுணத்துவத்துடனான ஊழியர்களை பணிக்கு அனுப்புவதே இதன் நோக்கமாகும் என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் ய…
-
- 0 replies
- 622 views
- 1 follower
-