ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
உள்ளகப் பாதுகாவல் பயிற்சியைப் பெற்ற ஒரு தொகுதியினர் வெளியேறினர் [ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2008, 03:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] லெப். கேணல் சூட் பயிற்சிப் பாசறையில் உள்ளகப் பாதுகாவல் பயிற்சியைப் பெற்ற ஒரு தொகுதியினர் நேற்று சனிக்கிழமை வெளியேறி உள்ளனர். இந்நிகழ்வு ஜேந்தன் தலைமையில் நடைபெற்றது. பொதுச்சுடரினை பொறுப்பாளர்களில் ஒருவரான நளன் ஏற்ற, தமிழீழ தேசியக் கொடியினை பயிற்சி ஆசிரியர் ஆழியன் ஏற்றினார். லெப். கேணல் சூட்டின் திருவுருவப் படத்திற்கான ஈகைச்சுடரினை முல்லைத்தீவு மாவட்ட கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் அன்பழகன் ஏற்ற, மலர்மாலையினை பொறுப்பாளர்களில் ஒருவரான நிலவன், பொறுப்பாளர்களில் ஒருவரான கண்ணப்பன், பொறுப்பாளர்களில் ஒருவரான செ…
-
- 18 replies
- 2.6k views
-
-
கறுப்பு ஜூலை... காய்ந்துபோன ரத்தம்! - ஜூனியர் விகடன் இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. இதற்கிடையே பூமிப்பந்தில் எவ்வளவோ மாற்றங்கள். ஆட்சிகளில் மாற்றம், நாடுகளின் எல்லைகளில் மாற்றம், உணவில், உடையில், பண்பாட்டில் மாற்றம்... ஆனால், மாறாமல் தொடர்கிறது அந்தக் கதறலும், கண்ணீரும். இலங்கை வீதிகளை நிறைத்த அந்த ஓலக் குரல்கள், நம்முடைய காற்றில் கலந்து பேரோசையாய்ப் பெருகுகிறது. இருபத்தைந்து ஆண்டுகள்... கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும் அந்த இனப்படுகொலை நடந்து இருபத்தைந்து ஆண்டுகள்! வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள் நடந்து இருபத்தைந்து ஆண்டுகள்; வாக்காளர் பட்டியலை வைத்துத் தமிழர்களை அடை யாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்…
-
- 6 replies
- 1.5k views
-
-
வணக்கம் யாழ்கள வாசகர்களுக்கு, வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவந்த சமகால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஆக்கங்களை எம் யாழ்கள வாசகர்களுக்காக இங்கு மீள்பிரசுரம் செய்கிறேன். நன்றி வீரகேசரி இணையம்
-
- 0 replies
- 996 views
-
-
தனியார் இணையத் தளமொன்றில் ஊடகவியலாளர் அனிதாப் பிரதாப்பின் நேர்காணல் பிரசுரமானதுடன் வசிட்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பிரபாகரனிற்கு கிடைத்தது போன்றதொரு பிரமிப்பு பலரிடம் காணப்பட்டது. அவருடன் நீண்ட காலமாக இணைந்திருப்பவர்களே அவரின் நுண்ணரசியலையும் போரியல் ஆளுமையையும் புரிய முடியாமல் இருப்பதாக எடுத்துக் கூறும்போது ஒரு தடவை பேட்டி கண்ட நபருக்கு பிரபாகரன் குறித்த பூரண புரிதல் ஏற்பட்டிருப்பது அதிசயம்தான். ஆனாலும் இந்திய, அமெரிக்க தேர்தல்களை கணித்து அடுத்த வருடமே பாரிய நகர்வொன்றை பிரபாகரன் மேற்கொள்வாரென கட் டியம் வேறு கூறுகிறார் அனிதாப் பிரதாப். அவரின் அரசியல் ஞானக் கண்ணிற்கு புலப்படாத விடயமே இந்த சார்க் மாநாட்டை ஒட்டிய விடுதலைப் புலிகளின் ஒரு தலைப்பட்சமான போர் நிற…
-
- 2 replies
- 1.5k views
-
-
மன்னார் களமுனை குழப்பமான ஊகங் களை பல மட்டங்களிலும் ஏற்படுத்தி உள்ள வேளையில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட அடுத்த நகர்வு பிராந்திய வல்லரசாக தன்னை தக்கவைக்க முயலும் இந்தியாவையும், இலங்கை அரசையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி யுள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை இந்திய அரசும் இலங்கை அரசும் தமக்கு சாதகமான விவாதங்களின் போதும், அதற்கு அனுசரணை வழங்க நோர்வே முன்வந்த போதும் இலங்கையின் இறையாண்மை குறித்து அழுத்தமான கருத்துக்களை வெளியிட்டுவந்த அராங்கம் இந்திய படையினரின் தரையிறக்கத்தினால் இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை விடுதலைப்புலிகளின் மீது சுமத்த முற்பட்டிருந்தது. இதேவேளை, தென்ஆசிய பிராந்தியத்தில் இந்திய அரசு மேற் கொண்டு வரும் இராஜதந் திர நகர்வுகளுக்கு ஆதரவாக அண் மைக…
-
- 1 reply
- 1.9k views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இரண்டு இந்திய யுத்தக் கப்பல்கள் இன்று பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஐ.என்.ஸ். ரண்வீர் மற்றும் ஐ.என்.எஸ். மைசூர் ஆகிய இரண்டு யுத்தக் கப்பல்கள் இலங்கைக் கடப்பரப்பிற்கு வெளியே நிலை கொள்ளச் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்பரப்பின் பாதுகாப்பு ஏற்பாடுகளை இலங்கைக் கடற்படை உத்தியோகத்தர்கள் மேற்கொள்வர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவசர நிலைமைகள் ஏற்பட்டால் குறித்த கப்பல்கள் மேலதிகப் பாதுகாப்பினை வழங்கவுள்ளதாகக் குறிப்பிப்படுகிறது. சார்க் மாநாடு முடிவடையும் வரை குறித்த கப்பல்கள் நிலை கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய தென் கரையோரப் பகுதி …
-
- 0 replies
- 558 views
-
-
நேற்று 25 ஆம் திகதி யூலை மாதம் 4 மணிக்கு இலண்டன் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் Trafalgar square எனும் இடத்தில் 50 வரையிலான இளையோர்கள் அகவணக்கத்துடன் தங்கள் 25 மணித்தியால உண்ணாவிரதபு போராட்டத்தை மகளிர் அமைப்புடன் இணைந்து ஆரம்பித்துள்ளனர். அதனை தொடர்ந்து சில இளையோர் மற்றும் மகளிர் அந்த வழியால் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கறுப்பு யூலை பற்றிய துண்டுபிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருக்க மற்றவர்கள் போராட்டத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ள கூடாரத்தைச் சுற்றி கோசப் பதாதைகளைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர். அனைத்து தமிழ் இளையோர்களும் கறுப்பு யூலை என முன் பக்கத்திலும் 25 வருடங்களாக சிறிலங்கா அரசாங்கம் தமிழ் இன ஒழிப்பை நடாத்திக்கொண்டிருக்கின்றது என்று பின் பக்கத்திலும் ஆங்க…
-
- 9 replies
- 1.5k views
-
-
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான நிறுவனத்தில் போலிச் சான்றிதழை பயன்படுத்தி தலைமை விமானியாக பணியாற்றி வந்த ஜேர்மன் வாசியொருவா விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யபட்டு;ளளா. கடந்த பத்து மாதங்களாக விமானியாகப் பணியாற்றி வந்த இவர், ஒரு இணை விமானியே எனவும் பெரிய விமானங்களுக்கான கப்டன் அல்ல என்பதும் உள்ளக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் விமான நிறுவனப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் அவரது சுய விபரச் கோவையிலிருக்கும் அனைத்து தஸ்தோவேஜூக்களும் விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் விமான நிலைய பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்தாகவும் தெரிவித்தார். ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின், ஏ-340 ரக மிகப்பெரிய விமானத்தில்; பயிற்சிக்காக வந்த கனிஷ்ட தர விமானியொருவர், இந்த…
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழக கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிறிலங்காவுடனான தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 566 views
-
-
புலி வேட்டைக்குப் புறப்பட்டவர்கள் புகைந்து போன வரலாறு! -- பழ. நெடுமாறன் "விடுதலைப் புலிகளால் இனிமேல் மரபு வழி இராணுவமாக சண்டையிட முடியாது. இராணுவத்தினர் நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களால் வலிமை குன்றிவிட்டார்கள். இனி அவர்களால் எதிர்த்துப்போராட இயலாது" என்று சிங் கள இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். கடந்த கால வரலாறுகளை மறந்து சிங்கள இராணுவத் தளபதிகள் பலரும் இதைப்போல வாய்ச்சவடால்கள் அடிப் பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் புளுகுகளைத் தமிழர்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை. உலக நாடுகளும் உண்மைகளை அறிந்தே வைத்துள்ளன. எனவே உலக நாடுகளை யும் இவர்களால் ஏமாற்ற முடியாது. அவ் வப்போது இத்தகைய புனை கதைகளை அவர்கள் யாருக்காகக் கூற…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவுக்கு அண்மையாக இந்திய போர்க் கப்பல்கள் [திங்கட்கிழமை, 28 யூலை 2008, 05:39 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா கடற்பரப்புக்கு அண்மையாக இந்திய கடற்படையின் இரு போர் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்திய கடற்படையின் போர் கப்பல்களான ஐஎன்எஸ் ரண்வீர், ஐஎன்எஸ் மைசூர் ஆகியன சிறிலங்கா கடற்பிரதேசத்திற்கு அண்மையாக நங்கூரமிட்டு நிற்கின்றன. கொழும்பில் நடைபெறும் சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகளின் பாதுகாப்பு கருதியே இக்கப்பல்கள் சிறிலங்காவுக்கு அண்மையாக நகர்த்தப்பட்டுள்ளன. இந்திய கப்பல்கள் சிறிலங்கா கடற்பிரதேசத்திற…
-
- 0 replies
- 620 views
-
-
சிறிலங்காவின் வடமத்திய மாகாண சபைக்கு போட்டியிடும் முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா வெற்றியீட்டினால் பதவி விலகுவேன் என்று அமைச்சர் மேர்வின் சவால் விட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 553 views
-
-
தேவன்பிட்டி பகுதியில் சிறீலங்கா படையினரின் எறிகணைவீச்சில் பொதுமகன் பலி திங்கள், 28 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] மன்னார் மாவட்டத்தில் தேவன்பிட்டி பகுதியில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைவீச்சில் ஒருபொதுமகன் கொல்லப்பட்டும் மற்றும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது கொல்லப்பட்டவர் வி.செல்வகுமார் எனவும் இவர் தமது உடைமைகளை நகர்த்திக்கொண்டு செல்லும்போது கொல்லப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் வி.தோமஸ், மற்றும் நந்தரூபன் எனவும் தெரியவருகிறது. தேவன்பிட்டி மன்னார் நகரிற்கு வடகிழக்காக 31 கிலோமீற்றர் தொலைவில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இங்கு மடுமாத திருஉருவச்சிலை கடந்த 12 வாரங்களாக இங்குள்ள தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்தமையும் பின்னர…
-
- 3 replies
- 833 views
-
-
இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளிலுள்ள மக்களை இராணுவத்தினரின் முன்னரங்கப் பகுதிகளுக்கு வருமாறு இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். மன்னார், வவுனியா, மணலாறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் மோதல்களில் இராணுவத்தினர் வெற்றிகரமாக முன்னேறிவரும் நிலையில், விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் மக்கள் வெளியேறுவதற்கு இந்த மோதல்கள் உதவும் எனவும் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் கூறியிருந்தார். இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருக்கும் மக்களை, இராணுவத்தினரின் முன்னரங்கப் பகுதிகளுக்கு வருமாறு கோரிக்கை விடுத்திருக்கும் இராணுவத் தளபதி, தமது கட்டுப்பாட்டின்கீழிலிருந்த
-
- 36 replies
- 4.2k views
-
-
விடுதலைப் புலிகளின் போர் நிறுத்தம் திறமையாக வரையப்பட்ட நகர்வாகும்: "சண்டே ரைம்ஸ்" [ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2008, 05:07 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்தம் மிகவும் திறமையாக வரையப்பட்ட இராஜதந்திரமான நகர்வாகும். இந்த அறிவித்தல் சிறிலங்கா அரசுக்கு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப்பத்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சார்க் மாநாட்டு காலப்பகுதியில் போர் நிறுத்தம் மேற்கொள்வதாக விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமையே முதலில் வெளிவந்திருந்தது. வி…
-
- 5 replies
- 1.3k views
-
-
வீரகேசரி நாளேடு - ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் நளினியை விடுவிக்க மத்திய அரசாங்கம் முன்வந்தால் அதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து நளினியை விடுதலை செய்யக்கோரும் கையெழுத்து இயக்க அமைப்பாளரும் திரைப்பட பாடல் ஆசிரியருமான தாமரை சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை பெற்று கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக நளினி சிறையில் இருந்து வருகிறார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை நடத்தினோம். இந்த கையெழுத்து இயக்கத்தில் எழுத்தாளர்கள் சுஜாதா, தி.க.ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகள் வீழ்ச்சி கண்டு வருகின்றனர். அவர்களை முறியடிப்பதற்கு மேலும்10 ஆயிரம் இராணுவத்தினர் தேவை. எனவே, இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் மீண்டும் வர வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சீட்டுக் கட்டில் இருந்து உதிரும் சீட்டுக்களைப் போன்று விடுதலைப் புலிகள் வீழ்ச்சி கண்டு வருகின்றனர். எனவே அவர்களை மேலும் முறியடிப்பதற்கு இராணுவத்திலிருந்து தப்பியோடிய 10 ஆயிரம் பேர் மீண்டும் திரும்ப வேண்டும். கடந்த நான்கு முதல் ஐந்து வருடங்களுக்குள் தப்பியோடியவர்கள் இராணுவத்திற்கு அவசரமாக தேவைப்படுகின்றனர். அவர்கள் பல்வேறு தனிப்பட்ட காரணங்களால் தப்பியோடியிருக்கலாம். எனினும், அவர்கள் மீ…
-
- 0 replies
- 1.3k views
-
-
விடுதலைப்புலிகளின் மரபுவழி இராணுவமாக போரிடும் திறனை தாம் முற்றாக அழித்துவிட்டதாகவும் அவர்களால் இனிமேல் படையினர் மீது மரபுவழி தாக்குதல்களை மேற்கொள்ளமுடியாது என்றும் கொழும்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் மார் தட்டியிருக்கிறார் இராணுவ தளபதி லெப்ரினென்ட் ஜெனரல் சரத் பொன்சேகா. விபரம் http://www.swissmurasam.info/content/blogcategory/8/31/
-
- 4 replies
- 2.7k views
-
-
இராணுவத்தில் இருந்து தப்பிவந்த 6 பேரை படையினரும் வனபரிபாலன அதிகாரிகளும் கைதுசெய்துள்ளனர். யால பாதுகாக்கப்பட்ட வனப்பிராந்தியத்திற்குள் பிரவேசிக்க முற்பட்டபோதே இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பேரூந்துகள் தாக்குதல்களுக்கு உள்ளானமையை அடுத்து, புத்தல கதிர்காமம் வீதியில் உள்ள இந்த பிரதேசத்திற்குள் பிரவேசிக்க படையினர் தடைவிதித்துள்ளனர் இந்தநிலையில் கைதுசெய்யப்பட்ட, படையில் இருந்து தப்பி வந்த 6 பேரிடமும் இருந்து கைத்துப்பாக்கிகளும் ஏனைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். www.tamilwin.com
-
- 0 replies
- 798 views
-
-
ஏனைய மாகாண சபைகளுக்கும் வருட இறுதியில் தேர்தல் Sunday, 27 July 2008 இவ்வருடம் நவம்பர் மாதத்துக்கு முன்னதாக மிகுதியாகவிருக்கும் ஐந்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களும் நடத்திமுடிக்கப்படும் என அரசாங்க வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணம், தென் மாகாணம், ஊவா, வட மேல் மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் ஆகியவற்றுக்கான தேர்தல்களை நவம்பவர் மாதத்துக்கு முன்னதாக நடத்துவதற்கே அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது. ஊவா மற்றும் வட மேல் மாகாணம் ஆகியவற்றுக்கான தேர்தல்களை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கே அரசாங்கம் முதலில் திட்டமிட்டிருந்தது. இருந்தபோதிலும் தற்போதுள்ள நிலையில் அனைத்து மாகாணங்களுக்குமிடையிலான தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் திட்ட…
-
- 0 replies
- 510 views
-
-
பொலநறுவை ஹிங்குராக்கொட வனப் பகுதியில் மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு ஞாயிறு, 27 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] பொலநறுவை மாவட்டம் ஹிங்குராக்கொட வனப் பகுதியில் பாரிய மனிதப் புதைகுழி ஒன்று இனம் காயப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகரா தெரிவித்துள்ளார். ஹிங்குராக்கொட தியாபெதும வனப் பகுதியிலேயே இப் புதைகுழி இனம் காணப்பட்டுள்ளது. தியாபெதும வனப்பகுதிக்கு வேட்டைக்குச் சென்றிருந்தவர்களால் அங்கு குழி ஒன்றை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அக்குழியை அகழ்ந்த போது மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் காணப்பட்டுள்ளது. இப்பகுதியில் சிறீலங்காவின் மூன்றாவது வான்படைத் தளம் அமைந்திருப்பதோடு இப்பகுதிகளிலேயே சிறீலங்கா துணை இராணுவக் குழுவான…
-
- 0 replies
- 770 views
-
-
சமாதானப் பேச்சு நடத்துவதற்கு, அரசாங்கம் விதித்துள்ள நிபந்த னைகளை விடுதலைப் புலிகள் ஏற்காவிடில் ஏனைய தமிழ் அரசியல் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஒன்றை அரசாங்கம் கொண்டுவரும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா. விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு, தமிழீழ கோட்பாட் டையும் கைவிட்டுவிட்டு சமாதான முயற்சிகளில் ஈடுபட முன்வந்தால் அவர்களு டன் பேச்சு நடத்துவது குறித்து பரிசீலிப்பதற்கு அரசாங்கம் தயார் என்றும் பிரதமர் கூறினார். நேற்றுக் காலையில் தியத்தலாவ இரா ணுவப் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற படை அதிகாரிகளின் அணிவகுப்பு மரி யாதையை ஏற்றபின் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் …
-
- 0 replies
- 861 views
-
-
அரசியல், படைத்துறை இராஜதந்திர பலத்தை வெளிப்படுத்திய புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2008, 07:34 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பானது அரசியல், படைத்துறை இராஜதந்திர பலத்தை வெளிப்படுத்துகின்றது என்று விடுதலைப் புலிகளின் தூயவன் அரச அறிவியல் கல்லூரியின் முதல்வர் அரசண்ணா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடுவில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: சிறிலங்கா வான்படையின் தாக்குதல் விசுவமடுவில் இன்று மாலை இடம்பெற்றது. அதற்கு அடுத்ததாக இக்கலையரங்கு நிகழ்வு நடைபெறுகின்றது …
-
- 0 replies
- 652 views
-
-
கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் இயங்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற ஒட்டுக்குழு அமைப்பைச் சார்ந்தோர் 1000 பேரை சிறீலங்கா இராணுவத்துக்குள்ளும்.. பொலீஸுக்குள்ளும் உள்வாங்கும் வேலைகளை ஆரம்பிக்க மேற்படி அமைப்பு சிறீலங்கா அரசைக் கோரியுள்ளது. ஏற்கனவே சுமார் 1500 ஆயுதப் பயிற்சி பெற்ற கருணா குழு உறுப்பினர்கள் அரச ஆதரவு மற்றும் பொது தொண்டு நிறுவனங்களின் உதவியோடு புனருத்தாரன பயிற்சி அளிக்கப்பட்டு சிறீலங்காவின் மக்கள் பாதுகாப்பு படை (Civil Defence Force ) அங்கம் பெற தயார்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிறீலங்காவின் சிவில் பாதுகாப்பு படையில் அங்கம் பெறுபவர்கள் பின்னர் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு பணிக…
-
- 7 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் வீழச்சி கண்டு வருகின்றனர். அவர்களை முறியடிப்பதற்கு மேலும் 10 ஆயிரம் இராணுவத்தினர் தேவை. எனவே இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் மீண்டும் வர வேண்டும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 11 replies
- 1.4k views
-