ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
இலங்கைக்கு விஜயம் செய்த பிரித்தானியாவின் ஆசிய ஆபிரிக்க பிராந்தியத்திற்கான பிரதி வெளியுறவு அமைச்சர் மிலொக் பிறவுண் வெளியிட்ட கருத்துக்களை ஜனாதிபதி செயலகம் தவறாக பயன்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளதாக பிரித்தானிய தூதரகம் குறிப்பிட்டுள்ளது. ஊடக சுதந்திரம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிக முனைப்பு காட்ட வேண்டுமென மிலொக் பிறவுண் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார் என தூதரகம் அறிவித்துள்ளது. எனினும், மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பணிகள் காத்திரமானதெனவும், உலக நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் எனவும் மிலொக் பிறவுண் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளமை தொடர்பில் பிரித்தானிய தூதர…
-
- 0 replies
- 1k views
-
-
தென்னிலங்கையில் இடம் பெறும் தாக்குதல்கள் நிறுத்தப்படுவது விடுதலைப்புலிகளுக்கு அனுகூலமாக அமையுமெனவும் புலிகள் மீதான தடையை பிரிட்டன் நீக்குவதற்கும் வாய்ப்பாக அமையுமென்ற கருத்தை வருகை தந்துள்ள பிரிட்டன் வெளியுறவு உதவியமைச்சர் மல்லே பிரவுண் பிரபு தெரிவித்துள்ளார். கொழும்பில் த.தே.கூட்டமைப்பு பா.உ தலைவர் சம்ந்தனுடனான சந்திப்பின் போதே மல்லோ பிறவுன் பிரபு இக்கருத்தை தெரிவித்தார் என தெரியவருகிறது. மல்லோ பிரவுண் பிரபுவை நேற்று முன்தினம் கொழும்பில் பிரிட்டிஷ் தூதரகத்தில் சம்பந்தன் சந்தித்து உரையாடினார். 40 நிமிடங்கள் வரை நீடித்த சந்திப்பின் போது சம்பந்தன் பிரிட்டிஷ் அமைச்சரிடம் கூறியதாவது : 'இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்கு அர்த்தமுள்ள அரசியல் தீர்வு ஒ…
-
- 8 replies
- 2k views
-
-
சார்க்: இந்திய படைகளின் கட்டுப்பாட்டில் கொழும்பு! வியாழக்கிழமை, ஜூலை 17, 2008 டெல்லி: கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் பிரதமர் மன்மோகன் சிங்குக்குப் பாதுகாப்பு அளிக்க போர்க் கப்பல்கள் பயன்படுத்தப்படவுள்ளன. தமிழக கடலோரப் பகுதிகளிலும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு முப்படைகளும் கொழும்பில் பாதுகாப்பு தரும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. தெற்காசிய கூட்டமைப்பான சார்க் அமைப்பின் மாநாடு கொழும்பில் வருகிற 27ம் தேதி தொடங்கி ஒரு வாரத்திற்கு நடைபெறுகிறது. இதில் ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பு செல்கிறார். சார்க் அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் அனைவரும் வருவதால் கொ…
-
- 7 replies
- 1.5k views
-
-
பாதுகாப்புச் செயலாளரும் மஹிந்தவின் சகோதரனுமான கோதபாயவை பாரளுமன்றிற்கு உள்வாங்க முயற்சிகள் நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேசியப் பட்டியல் மூலமாக கோதபயாவை பாரளுமன்றில் நியமிக்கவுள்ளதாக தெரியவருகின்றது. இதற்கிடையில் ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க பாரளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதன் காரணமாக ஏற்பட்டுள்ள அவ் வெற்றிடத்திற்கு மஹிந்தவின் சகோதரன் கோத்தபயாவை நியமிக்கும்படி ஹெல உறுமைய அமைச்சர் சம்பிக்கவும் தே.வி.மு.யின் விமல் வீரவன்சவும் நிதிபதியான தயாசிறி உட்பட்ட குழுவொன்று மஹிந்தவை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளதாக அறியவருகின்றது. யுத்தம் தீர்மானமானதோரு வெற்றியை நோக்கி செல்வதாலும், யுத்தத்தை வெற்றியின் இலக்கை நோக்கி வழிநடத்திக…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் எல்லைமீறிச் சென்றிருப்பதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கைகள் குறித்துக் கவனம் செலுத்தியிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், கொழும்பிலுள்ள விடுதிகளில் தங்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை இலங்கையில் நியமிக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் முன்வைத்த யோசனைகளுக்கு எதிராக சில …
-
- 2 replies
- 882 views
-
-
இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அனுசரணைப் பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாக ஐஸ்லாந்து குடியரசின் ஜனாதிபதி ஒலாஃவூ ரங்னர் கிரிம்ஸன் தெரிவித்துள்ளார். தற்பொழுது ஐஸ்லாந்து சென்றிருக்கும் சுவீடனுக்கான இலங்கைத் தூதுவர் ரஞ்சித் ஜெயசூரியவை, ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தபோதே ஐஸ்லாந்து குடியரசின் ஜனாதிபதி ஒலாஃவூ ரங்னர் கிரிம்ஸன் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்டிருக்கும் ஜஸ்லாந்து ஜனாதிபதி, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் பட்சத்தில் அனுசரணையாளர்களாகப் பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார…
-
- 1 reply
- 730 views
-
-
மட்டக்களப்பில் பாரிய மனித புதைகுழி: 16 பேரின் எலும்புத் துண்டங்கள் மீட்பு [புதன்கிழமை, 16 யூலை 2008, 03:06 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாலமீன்மடுப் பகுதியில் பாரிய மனிதப்புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்புக்கு வடக்காக ஆறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாலமீன்மடுப் பகுதியில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ள தற்காலிக வீடமைப்புதிட்டத்தில் கிணறு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்கள் இந்த புதைகுழியை கண்டுபிடித்துள்ளனர். இன்று புதன்கிழமை முற்பகல் 9:30 மணி முதல் தோண்டப்பட்ட இடத்திலிருந்து இதுவரை 16 உடலங்களுக்குரிய 32 மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் - இவற்றில் துப்பாக்கி சூட…
-
- 1 reply
- 768 views
-
-
ஜப்பானிய புலமையாளர் சுசுமு ஒஹொனொ காலமானார் வியாழன், 17 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] தமிழ் மொழில் இருந்து தான் ஜப்பான் மொழி உருப்பெற்றது என தனது ஆராச்சி மூலம் கருத்து தெரிவித்த ஜப்பானிய புலமையாளர் சுசுமு ஒஹொனொ கடந்த திங்கட்கிழமை தனது 89 வது வயதில் காலமானார். இவர் கடந்த 30 வருடகாலமாக தமிழுக்கும் ஜப்பான் மொழிக்கும் இடையேயான ஒற்றுமைகள் தொடர்பில் ஆராய்து நூல் ஒன்றை வெளியிட்டுள்ளர். இவ் நூலில் சுமார் இருமில்லியன் பிரதிகள் விற்பனையாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இவர் 1919 ஆம் ஒகஸ்ட் மாதம் 23 ம் திகதி பிறந்தவர் என்பதுவும் தமிழ்புலமையாளர்களுடன் நெருங்கியதொடர்பு உடையவர் என்பது மட்டுமல்லாமல் தனது மாணவர்களை தமிழ்கற்பதற்கு ஊக்கிவிப்பவர் என்பதுவும் குறிப்பிடத்த…
-
- 0 replies
- 645 views
-
-
சார்க் உச்சி மாநாட்டு பாதுகாப்பு: தயார் நிலையில் இந்திய கரையோரத் தளங்கள்! Thursday, 17 July 2008 கொழும்பில் இடம்பெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சிமாநாட்டின் போது கொழும்புக்கு மூன்று போர்க் கப்பல்களை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பிற்காக அனுப்புவதற்கு புதுடில்லி திட்டமிடுகின்ற அதேவேளையில், இந்தியாவின் கரையோரப் பகுதி தளங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் இராமநாதபுரத்திலுள்ள படைத்தளங்கள் போன்றவை உச்சிமாநாட்டின்போது ஏதாவது அசம்பாவிதம் இடம்பெற்றால் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கும் இந்தியப் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர வட்டாரங்களை…
-
- 0 replies
- 483 views
-
-
இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அனுசரணைப் பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாக ஐஸ்லாந்து குடியரசின் ஜனாதிபதி ஒலாஃவூ ரங்னர் கிரிம்ஸன் தெரிவித்துள்ளார். தற்பொழுது ஐஸ்லாந்து சென்றிருக்கும் சுவீடனுக்கான இலங்கைத் தூதுவர் ரஞ்சித் ஜெயசூரியவை, ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தபோதே ஐஸ்லாந்து குடியரசின் ஜனாதிபதி ஒலாஃவூ ரங்னர் கிரிம்ஸன் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்டிருக்கும் ஜஸ்லாந்து ஜனாதிபதி, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் பட்சத்தில் அனுசரணையாளர்களாகப் பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ள…
-
- 0 replies
- 773 views
-
-
அவுஸ்திரேலியாவில் வர்த்தக கல்லூரி அதிபரான தமிழர் ஒருவர் அவுஸ்திரேலியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மெல்போன் நகரில் தனியார் வர்த்தக கல்லூரி ஒன்றை நடாத்தி வரும் துளசிதரன் சந்திரராஜா (வயது 34) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் புலிகளுக்கு ஆயுதங்கள் சேகரித்தார்கள் என்ற வழக்கு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ. இதனால் வழங்கப்பட்ட தகவலை ஆதாரமாக வைத்தே சந்திரராஜா அவுஸ்திரேலியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. http://www.tamilseythi.com/srilanka/tamil-...2008-07-17.html
-
- 0 replies
- 1k views
-
-
கொழும்பில் நடைபெறவிருக்கும் 15வது சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்புக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க இந்தியா விரும்பவில்லையெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைக் கருத்தில்கொண்டு இந்திய மத்திய அரசாங்கம் மூன்று போர்க் கப்பல்களையும், இரண்டு முன்னணி ஏவுகணை எதிர்ப்புக் கலங்களையும் இலங்கைக்கு அனுப்பத் தீர்மானித்திருப்பதாக 'த டைம்ஸ் ஒவ் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதால் மன்மோகன் சிங்கின் பாதுகாப்புத் தொடர்பான விடயங்களை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராணயன் நேரடியாகக் கையாண்டுவருவதாகவும், கொழும்பு செல்லும் இந்தியப் பிரதமரின் பாதுக…
-
- 0 replies
- 687 views
-
-
50 பேர் கொண்ட பாகிஸ்தான் குழு கொழும்பு வந்துள்ளதாக தகவல். 17.07.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பில் நடைபெறவுள்ள தெற்காசிய மக்கள் பேரவையின் (South Asian People’s Assembly) 2008ஆம் ஆண்டிற்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 50 பேர் கொண்ட பாகிஸ்தான் குழுவினர் கொழும்பை சென்ற டைந்துள்ளனர். சார்க் மாநாட்டுக்கு ஒரு வாரம் முன்பாக நடைபெறவுள்ள இந்த மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மூன்று நாட்களுக்கு இடம்பெறும். இதில் கலந்துகொள்வதற்காகவே பாகிஸ்தான் பிரதிநிதிகள் நேற்று கொழும்பை சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. www.sankathi.com
-
- 2 replies
- 1.2k views
-
-
வெள்ளை வான் கடத்தல்களில் கருணாவுடன் மீண்டும் கூட்டுச்சேர்ந்த சுமன் [வியாழக்கிழமை, 17 யூலை 2008, 01:42 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்கா தலைநகர் கொழும்பு மற்றும் தமிழர் பகுதிகளில் வெள்ளை வான் கடத்தல் மற்றும் படுகொலைகளை மேற்கொண்டு வரும் குழுவுடன் வெளிநாட்டிலிருந்து சிறிலங்கா திரும்பிய துணைப்படையைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினரான சுமன் என்பவரும் இணைந்துள்ளதாக சிறிலங்காவின் புலனாய்வு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காப் படைத்தரப்புடன் இணைந்து செயற்படும் துணைப்படையான கருணா குழுவில் சுமன் முன்னர் செயற்பட்டு வந்தார். இருப்பினும் நிதி மோசடி மற்றும் பெண்கள் தொடர்பு போன்ற பிரச்சினைகளால் பிள்ளையானால் எச்சரிக்கப்பட்டு அவரது குழுவிலிருந்து சுமன் நீக்கப்பட்டா…
-
- 0 replies
- 835 views
-
-
வவுனியா பூந்தோட்டம் அகதி முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் முகாம் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும்இ 5 பேர் தீக் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் தங்கியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 9.30 அளவில் இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின்சார ஒழுக்கின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக வவுனியா பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். சுமார் 20 நிமிடங்களில் முழு அகதி முகாமும் எரிந்து சாம்பராகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார்இ இராணுவத்தினர் மற்றும் வான்படையினர் இணைந்து தீயனைப்பு பணிகளை மேற்கொண்டதாகவும்இ எனினும் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை எனவ…
-
- 0 replies
- 729 views
-
-
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கருணா போட்டி? [புதன்கிழமை, 16 யூலை 2008, 03:53 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்காவின் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கருணா போட்டியிடவுள்ளார் என்று அவரது கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். லண்டனில் தனது சிறைவாசத்தை நிறைவுசெய்து கொண்டு சிறிலங்காவுக்கு திரும்பிய கருணா, கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானை சந்தித்துப் பேசினார். கொழும்பில் நடைபெற்ற ஐந்து மணி நேர சந்திப்பில் அவரது கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இதனை அடுத்து, மட்டக்களப்புக்கு சென்ற கருணா அங்கு தனது பழைய கட்சி உறுப்பினர்களை சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் கொழும்பில் கருத்து தெரிவித்த அவர், தனது உறுப்பினர்களை சிறிலங்கா இராணுவத்திலும், காவல…
-
- 9 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா அரசின் செயற்பாடுகளில் தமிழ்மக்களுக்கு நம்பிக்கையில்லை. - சம்பந்தன். 17.07.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்காவில் தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அரசியல் தீர்வினைக்காணும் விதத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமையவில்லை. அரசின் தற்போதைய நடவடிக்கைகள் தமிழ்மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாக வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் மல்லோ பிரவுணிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய ராஜாங்க அமைச்சரை கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் நேற்று மாலை சந்தித்து சுமார். 40 நிமிடங்கள் சம்பந்தன் எம்.பி.பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது சம்பந்தன் எம்.பி தெரிவிக்கையில். பல்லிலன பல்கல…
-
- 0 replies
- 609 views
-
-
வவுனியா பாலமோட்டைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணு வத்தினருக்கும் இடையில் நேற்று முன் தினம் இடம்பெற்ற கடுஞ்சமரில் இராணு வத்தினர் 10 பேர் உயிரிழக்க 19 பேர் வரை படுகாயமடைந்தனர் என்று புலிகள் தரப் பில் அறிவிக்கப்பட்டது. பாலமோட்டை நோக்கி நேற்று முன்தி னம் மதியம் 12.30 மணியளவில் கடும் பிற் களச் சூட்டாதரவுடன் இராணுவத்தினர் முன்னேற முயன்றனர் என்றும் அதற்குத் தாங்கள் மேற்கொண்ட 5 மணிநேர முறியடிப்புச் சமரில் இராணுவத்தினர் பலத்த இழப்புகளுடன் பழைய நிலைகளுக்குத் திரும்பிச் சென்றனர் என்றும் புலிகள் தரப்பில் மேலும் கூறப்பட்டது http://puspaviji.blogspot.com/
-
- 0 replies
- 599 views
-
-
சார்க்' மாநாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொழும்பு கொம்பனித் தெருவில் அமைந்துள்ள 200 வீடுகளை இடித்துத்தள்ளி அம்மக்களை அங்கிருந்து வெளியேற்றும் அரசின் திட்டத்திற்கு ஐக் கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்புத் தெரி வித்துள்ளது. ""வெளிநாட்டுத் தலைவர்கள் இங்கு வந்து இரண்டு நாள்கள் ஆடிவிட்டுப் போவதற்காக 60 வருடங்களாக வசித்துவரும் கொம்பனித்தெரு மக்களை விரட்டியடிக்கும் அரசின் நடவடிக்கையை ஒருபோதும் நாம் ஏற்கமாட்டோம்'' என்று அக்கட்சியினர் தெரிவித்திருக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐ.தே.கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்கவே மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு: இலங்கையில் "சார்க்' …
-
- 0 replies
- 628 views
-
-
இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச் சினைக்கு இராணுவத் தீர்வு காண்பதை மட்டுமே ஒரே இலக்காகக் கொண்டு இலங்கை அரசு செயற்படுகின்றது. ஈழத் தமிழர்களை அடக்கி, ஒடுக்கி அடிமைப்ப டுத்துவதைத் தவிர மஹிந்த அரசிடம் வேறு எந்த மாற்றுத் திட்டமும் கிடையாது. * இலங்கை இனப்பிரச்சினைக்கு சமாதான முறையில் தீர்வு காண்பது குறித் தும், நியாயமான தீர்வு ஒன்றைத் தமிழர்க ளுக்கு வழங்கப் போகின்றமை பற்றியும் அரசுத் தரப்பில் வெளியிடப்படுகின்ற அறிவிப்புகள் எல்லாம் சர்வதேசத்தையும் ஏமாற்றும் வெறும் பம்மாத்து நடவடிக்கை களே. இவற்றுக்கு சர்வதேசம் எடுபட்டு இலகுவில் விலைபோய் விடக்கூடாது. தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா. சம்பந்தன், இலங்கைக்கு விஜயம் செய்திருக…
-
- 0 replies
- 546 views
-
-
Posted on : 2008-07-17 சூடான் வழியில் இலங்கை இனப்பேரழிவும், மனித குலத்துக்கு எதிரான கொடூரங் களும் பாரதூரமாக இடம்பெறும் சூடான் நாடு தொடர்பாக சர்வதேச நீதி ஆயத்தின் முன்னால் இப்போது எடுக்கப்பட் டிருக்கின்ற நடவடிக்கை, இன ரீதியாக மோசமான கொடூரச் செயற்பாடுகளைத் தமது ஆட்சி அதிகாரம் மூலம் முன்னெடுக் கும் பல உலக நாடுகளின் தலைவர்களைத் திடுக்குற வைத்திருக்கின்றது. சூடானின் டார்பூர் பிரதேசத்தில் கடந்த ஐந்து ஆண்டு களாக நீடித்துவரும் மோதல்களைப் பயன்படுத்தி இனவழிப்புப் படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான நாசங்கள் போன்றவற்றை இழைத்தமைக்காக சூடான் ஜனா திபதி ஒமர் அல் பஷீரைக் கைது செய்வதற்கான உத்தரவு ஒன்றை விடுக்குமாறு, சர்வதேச நீதிமன்ற ஆயத்திடம், அந்த ஆயத்தின் பி…
-
- 0 replies
- 697 views
-
-
"இந்தியா கொதித்தெழ வேண்டாமா?" - கச்சதீவு பற்றி பிட்டுப்பிட்டு வைக்கிறார் புலமைப்பித்தன் காலத்தின் கன்னத்தில் நிற்கும் கண்ணீர்த் துளி'' என்று தாஜ்மகாலை வர்ணித்தார் கவிஞர் தாகூர். அதுபோல கச்சத்தீவை ``காலக்கடலில் மிதக்கும் ஒரு ரத்தத் துளி'' என்றுதான் வர்ணிக்க வேண்டும். சும்மா இருந்த கச்சத் தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்க்கப் போய், இன்று தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்த்த கதையாக, தமிழக மீனவர்களின் எலும்பைப் பிடித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது இலங்கைக் கடற்படை. கடற்படைக்குப் பலியாகும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. 1983 ஆகஸ்ட் 13-ம்தேதி தொடங்கிய இந்த அனர்த்தம், இன்று வரை நீடிக்கிறது. இலங்கைக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இ…
-
- 2 replies
- 1.4k views
-
-
கொழும்பில் இடம் பெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க(சார்க்) உச்சி மாநாட்டின் போது இலங்கைக்கு மூன்று போர்க்கப்பல்களை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பிற்ககாக அனுப்புவதற்கு புதுடில்லி திட்டமிடுகிறது. இந்தியப் பிரதமருக்கும் அவருடன் வருகை தரும் தூதுக் குழுவினருக்கும் போதிய பாதுகப்பை வழங்குவதற்காக ஏவுகணைகளை அழிக்கும் வல்லமை வாய்ந்த இரு கப்பல்கள் உட்பட மூன்று யுத்தக் கப்பல்களை இலங்கைக் கடற்பரப்பில் நிறுத்துவதற்கு இந்தியா திட்டமிடுவதாக 'ரைம்ஸ் ஒப் இந்தியா' பத்திரிகை நேற்று புதன் கிழமை தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து அதிக மட்டத்திலான அச்சுறுத்தல் இருக்கலாமெனக்கருதி தவறுகள் எதுவும் இடம்பெறாமல் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான பாது…
-
- 1 reply
- 978 views
-
-
இலங்கைக் கடற்படையின் ரத்த வேட்டை - செங்கடலாகச் சிவக்கும் வங்க்கடல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு. நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறைக்கு அப்பால் கோடியக்கரைக்குத் தென்கிழக்கே கடல்பகுதியை இருட்டு ஒரு போர்வை போல போர்த்தியிருந்தது. தமிழக மீனவர்களின் இன்றைய நிலைமையைச் சொல்வது போல இருந்த அந்தக் கும்மிருட்டில், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர், ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த மீனவர்கள் வாசகன், நாராயணசாமி, முரளி ஆகியோர். நட்டநடுநிசி. இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு ஒன்று சத்தமில்லாமல் இவர்களது மீன்பிடிப் படகை அணுகியது. இந்தியக் கடல் பகுதியில், அதுவும் சேதுக்கால்வாய் தோண்டப்பட்டு வரும் பகுதியில் இலங்கை ரோந்துப் படகா? என்று இவர்கள் திகைத்து திக்குமுக்காடிய வேளையில், ரோந்துப் படகி…
-
- 1 reply
- 870 views
-
-
இலங்கை தூதரகம் முன் சிபிஐ ஆர்பாட்டம் சேலம்: தமிழ மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையை கண்டித்து அந்நாட்டுத் தூதரகம் முன்பு வரும் 30 ம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் மாநில மாநாடு மற்றும் அகில இந்திய சாலை போக்குவரத்து சம்மேளன மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் துவக்க விழா நேற்று சேலத்தில் நடைபெற்றது. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியாதவது: தமிழக மீனவர்களை மட்டும் இன்றி இலங்கை வாழ் தமிழர்கள் மீது நடக்கும் தாக்குதலும் நிறுத்தப்பட வேண்டும். இந்திய குடி மகன் மீது தாக்குதல் நடத்துவது இ…
-
- 0 replies
- 747 views
-