ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள சேமமடுப்பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட ஊடுருவல் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 653 views
-
-
இந்திய-அமெரிக்க அணுஉற்பத்தி உடன்படிக்கையானது, இந்தியாவில் பெரும் பிரச்சினையைத் தோற்றுவித்துள்ள அதேநேரம், அது இலங்கையின் இனப்பிரச்சினையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களையும் நாம் இலகுவாக எடுத்துக்கொள்ளமுடியாது. விரைவில் பதவி விலகவிருக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் நிக்கலஸ் பேர்ண்ஸ், இந்த இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தமானது இலங்கையின் இனப்பிரச்சினையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றித் தெளிவான ஒரு குறிப்புக் கொடுத்துள்ளார். தமது இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிநிதிகளுடன் இந்தியாவிற்கு 2008 இன் ஆரம்பத்தில் நிக்கலஸ் பேர்ண்ஸ் சென்றிருந்தபோது, ஜனாதிபதி புஷ்ஷின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் ஒரு தீர்மானம் எடுக்கப்படவேண்டும் என இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 869 views
-
-
கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட அரசாங்கப் பணியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் நேற்றுத் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அமையத் தொழிலாளர்கள் எதிர்வரும் திங்கட்கிழமையுடன் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 10ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட அமையத் தொழிலாளர்களிடம் மூன்று நாட்களுக்குள் விளக்கக் கடிதத்தைக் கோருமாறும் அல்லது அவர்களை திங்கட்கிழமை முதல் வேலையிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கம், அரசாங்கத் திணைக்களங்களின் தலைவர்களுக்குப் பணிப்புரை வழங்கியிருப்பதாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி த…
-
- 6 replies
- 1.4k views
-
-
வவுனியா பாவற்குளம், பூவரசங்குளம் ஆகிய பகுதிகளில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் உட்பட இருவர் காணமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளத
-
- 0 replies
- 680 views
-
-
சாத்தான் வேதம் ஓதுகின்றது 12.07.2008 / நிருபர் எல்லாளன் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யப்போவதாகவும் தான் இருந்திருந்தால் மாகாணசபை தேர்தலில் கூடுதலான வாக்குகளை பெற்றிருப்பாராம் என்றும் கருணா என்ற சாத்தான் வேதம் ஓதுகின்றது. நீயார். நீ இன்னும் உனது மமதையிலிருந்து மாறவில்லைபோல் தெரிகின்றது. விடுதலைப்புலிகளுடன் இருந்த கருணா வேறு இப்போ கொள்ளைக்காரனாக கொலைகாரனாக கடத்தல்காரனாக இருக்கும் கருணாவேறு என்பதை கிழக்கு மாகாண மக்கள் மறந்துவிடவில்லை. கிழக்கு மாகாண மக்களின் கோடிக்கணக்கான பணத்தை உன் மனைவி பிள்ளைகளின் சுகபோக வாழ்விற்காக பெட்டியில் அடைத்து வாகனத்தில் ஏற்றியபோது அதைக்கண்டு ஏனைய போராளிகளிடம் கூறியதற்காக அந்த வீரனை சயனைட் கொடுத்து துடிக்கத் துடிக்க கொண்டா…
-
- 3 replies
- 1.5k views
-
-
நாகப்பட்டனம்: இலங்கை கடற்படையின் வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் நாகை மாவட்ட மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார். தமிழக மீனவர்களை குருவி சுடுவதை போல கொன்று குவிக்கும் அக்கிரமச் செயலில் இலங்கை கடற்படை பல வருடங்களாக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தத் தாக்குதல்களை அவ்வப்போது மாநில அரசுகள் கண்டிப்பதும், மத்திய அரசு வாய் மூடி மெளனமாக இருப்பதும், இலங்கை கடற்படை தனது வெறிச்செயலை தொடருவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. சமீபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பெரும் அதிர்ச்சி அளித்தது இலங்கை கடற்படை. பின்னர் அவர்களில் நான்கு பேரைத் தவிர மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். …
-
- 1 reply
- 1k views
-
-
Venue: Richardson Evans Playing Fields Roehampton Vale London SW15 3PQ Date: Saturday 12 July 2008 at 3 PM For further detail http://www.ponguthamil.co.uk/ Let us, one and all surge forward with our clarion call to let the whole world know of our thirst -our aspiration for our lost Motherland for our lost Tamil Nation for our self determination and for our future generation to break the shackles from a racist regime to our long delayed freedom Let us no longer be the silent witnesses to the violations directed against our brethren. Show your solidarity to counter the propaganda of disinformation…
-
- 27 replies
- 3.9k views
-
-
கல்முனை காவல்துறை பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய விஜயதிலக்க நேற்று தற்கொலை செய்துக்கொண்டமை தொடர்பில், முரண்பாடான செய்திகள் வெளியாகியுள்ளன. அண்மையில் கல்முனையில் மூன்று சிங்களவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து காவல்துறை பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதன் காரணமாகவே தற்கொலை செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அறுகம்பேக்கு சென்ற போது அவரின் பாதுகாப்புக்காக சென்ற உலங்கு வானூர்தி தாக்கப்பட்டமை தொடர்பில், தற்கொலை செய்துக்கொண்ட காவல்துறை பொறுப்பதிகாரி சில குறிப்புகளை எழுதியிருந்தார் என்றும் இதன் அடிப்படையிலேயே அவரின் மரணம் நிகழ்ந்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. எனவே இந்த குறிப்புகள் தொடர்பாக விசாரணைகள…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் நேற்று திருமாலாவிலுள்ள வெங்கடேஷவரர் ஆலயத்திற்கு விஜயம் வீரகேசரி இணையம் 7/12/2008 10:20:16 AM - இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ வியஜத்தை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திருமாலாவிலுள்ள வெங்கடேஷவரர் ஆலயத்திற்கு பிரதிநிதிகளுடன் விஜயம் செய்த்தாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 0 replies
- 748 views
-
-
சார்க் மாநாட்டின் பாதுகாப்பு கடமைகளுக்காக இந்திய படையினரின் விஜயம் இலங்கை படையினரை அவமதிக்கும் செயல் என ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளதாக “லங்கா டிசெண்ட்டிற்கு” தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தொழிக்க முடியும் என நிரூபித்துக் கொண்டிருக்கும் இலங்கைப் படையினரை தரம் குறைத்து மதிப்பிட இந்திய படையினருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படக் கூடாதென அவர் தெரிவித்துள்ளார். சார்க் மாநாட்டிற்காக செலவிடப்படவுள்ள 2080 லட்சம் ரூபாவில் இந்திய பாதுகாப்புப் படையினருக்கு குறிப்பிடத்தக்களவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள இந்திய பிரதமரின் பாதுகாப்பிற்காக 1500 இந்திய பாதுகாப்பு ப…
-
- 2 replies
- 947 views
-
-
கொழும்பில் தமிழ் இளைஞன் காணமல் போயுள்ளார். 12.07.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு கதிரானவத்தையில் தங்கியிருந்த தமிழ்இளைஞன் ஒருவன் காணமல்போயுள்ளார். புஸ்பராசா அருள்பிரசாத் (வயது 21) என்ற இளைஞனே காணமல்போயுள்ளார். இவர் கடந்த 05 ஆம் திகதி முதல் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.sankathi.com/
-
- 0 replies
- 610 views
-
-
பேரினவாதத்;துக்கு பேரிடி கொடுத்துள்ள பொங்கு தமிழ் பேரெழுச்சி -ப.தெய்வீகன்- உலகெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுகள் தமிம் மக்களின் ஒற்றுமையின் பலத்தை சர்வதேசத்துக்கு இன்னொரு தடவை இடித்துரைத்திருக்கின்றன. எவ்வளவுதான் தடை வரினும் தமது கொள்கைகள் மாறாது என்றும் எழுச்சி வீழாது என்றும் தமது உறுதியை தமிழினம் பன்னாட்டு சமூகத்துக்கு ஓங்கி ஒலித்திருக்கிறது. புலிகள் களத்திலே எதிரிக்கு பதிலடி கொடுப்பது போலவே புலம்பெயர்ந்துள்ள மக்களும் தமக்கு வழங்கப்பட்ட அழுத்தங்களுக்கெல்லாம் பதிலடியாக பொங்கு தமிழ் நிகழ்வில் திரண்டு தமது ஒற்றுமையை பறைசாற்றியிருக்கிறார்கள். புலம்பெயர்ந்து வாழும் மக்கள் விடுதலைப் புலிகளை மதிப்பது போலவே தாம் வாழும் நாடுகளின் சட்டவரை…
-
- 3 replies
- 1.1k views
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவின் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினியை விடுதலை செய்யக்கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று சென்னை உயர் நீதிமன்றில் நேற்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தம்மை விடுதலை செய்யக் கோரி கடந்த ஏப்பிரல் மாதம் நளினி சென்னை உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கமாக ஆயுள்தண்டைகை; கைதிகள் 14 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்படுவாhகள். ஆனால், தான் ஏற்கனவே 17 ஆண்டுகள் சிறைத்தண்டனையைக் கழித்துவிட்டேன். தன்னை நன்நடத்தை அடிப்பiயில் விடுதலை செய்ய வேண்டும் என தனது மனுவில் அவர் கோரியிருந்தார். நளினியை விடுதலை செய்யக் கூடாது என்று கோரியும் இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரியும் ஜனநாயகக…
-
- 0 replies
- 958 views
-
-
சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கம் அளித்து வரும் இராணுவ உதவி மற்றும் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்படுதல் ஆகியவை குறித்து பழ. நெடுமாறன் தலைமையில் அனைத்து கட்சிகள், அனைத்து தமிழர் அமைப்புக்களின் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 601 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பி.கே.கே. அமைப்பு மூலம் ஆயுதங்கள் - துருக்கிய இராணுவத் தளபதி புதன்இ 09 ஜுலை 2008 ஜசெய்தியாளர் மயூரன்ஸ பி.கே.கே கொன்கிறா-ஜெல் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களையும்இ பயிற்சிகளையும் அளித்துவருவதாக துருக்கிய இராணுவத்தளபதி ஜெனரல். ஜஷார் பஜூஹானின் தெரிவித்துள்ளார். பி.கே.கே அமைப்பு துருக்கி ஈரான் மற்றும் ஈராக் பிரதேசங்களுக்கிடையில் தமக்கு தனியான ஒரு நாடு வேண்டும் எனக்கோரி போராடிவரும் அமைப்பாகும். எனினும் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் என்ற பட்டியலில் இந்த அமைப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகில் 80 வீதமான போதைப்பொருட்களை ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு பி.கே.கே அமைப்பே வழங்கிவ…
-
- 29 replies
- 4.5k views
-
-
துணை இராணுவக் குழுக்ககளின் தலைவர்களான கருணா – டக்ளஸ் விரைவில் சந்திப்பு வெள்ளி, 11 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] துணை இராணுவக் குழுக்ககளின் தலைவர்களான தலைவர் கருணா, டக்ளஸ் தேவானந்த ஆகிய இவரும் விரைவில் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளனர். பெரும்பாலும் எதிர்வரும் வாரம் இந்தப்பேச்சுக்கள் நடத்தப்படலாம் என துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியின் தலைவரும் ஆயுததாரியுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக ஈ.பி.டி.பி. மற்றும் ரி.எம்.வி.பி கட்சி அங்கத்துவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும் தமது கட்சி உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பினை அளிக்குமுகமாகவே இந்தப்பேச்சுக்களை கருணாவுடன் நடத்த தாம் தயாராகி வ…
-
- 2 replies
- 1.2k views
-
-
வடமராட்ச்சி பகுதியில் பாரியதேடுதல் நடவடிக்கை சனி, 12 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] யாழ்குடாநாட்டில் வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை வடமராட்ச்சி உடுப்பிட்டி மற்றும் வல்வெட்டித்துறை ஆகியபகுதிகளில் பெருமளவில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டு பவள் கவச வாகனங்கள் சகிதம் பெருமளவு படையினர் இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் சிறிய அளவில் தாக்குதல்கள் அதிகர்த்து காணப்பட்டதையடுத்து இத்தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது. இதேமாதிரியான தேடுதல் நடவடிக்கை கரவெட்டி மற்றும் தென்மராட்சி ஆகிய பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகிறது. http://www.pathivu.com/
-
- 0 replies
- 795 views
-
-
பம்பலப்பிட்டி கடற்பரப்பில் கடல்நீர் மரம்போல் மேலெழுந்ததால் பரபரப்பு வீரகேசரி நாளேடு 7/12/2008 12:23:29 AM - பம்பலப்பிட்டி கடற்பரப்பில் ஏற்பட்ட ஒருவிதமான திடீர் மாற்றத்தினால் கடல் நீர் மேலெழுந்து, சில நிமிடங்கள் வரை மரம்போல் காட்சியளித்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துக்குள்ளானதுடன் பிரதேசத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மக்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கிய இந்த அரிதான அதிசயமான சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. நீர் மேலெழுந்த அருங்காட்சியை பம்பலப்பிட்டி கடற்கரையோரத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அப்பகுதியிலுள்ள உயரமான கட்டிடங்களில் இருந்தவர்கள் நேற்று பிற்பகல் வேளையில் கண்டுகளித்துள்ளனர். சுமார் 5 நிமிடங்கள் வரை நீர் மேல…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலம்பெயர் தமிழ் மக்கள், தாயக விடுதலையை பலப்படுத்துவதற்காக பெரும் எழுச்சிகொண்டு நிகழ்த்தி வருகின்ற பொங்கு தமிழ் நிகழ்வுகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 755 views
-
-
சார்க் மாநாட்டு பாதுகாப்புக்கு என இந்தியப் படை சிறிலங்காவுக்கு அழைக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா, இது குறித்து வெளிவந்த செய்திகளில் எதுவித உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1k views
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினரின் டாங்கி ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 855 views
-
-
வன்னி மற்றும் திருகோணமலையில் இடம்பெற்ற தாக்குதல்களிலும் மிதிவெடிகளிலும் சிக்கி இரு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 17 படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 642 views
-
-
சமாதான பேச்சுக்கு புலிகள் தயாரென பா.நடேசன் தெவித்துள்ளதாக சிபி இணையத்தளம் செய்தி சிபி இணையத்தளம் 7ஃ11ஃ2008 3:32:17 Pஆ - யுத்த நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்தி சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார் என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். விடுதலை புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியிலிருந்து ஒளிபரப்பாகும் "ரைம்ஸ் நெளவ்" தொலைக்காட்சிக்கு தொலைபேசிவாயிலாக வழங்கிய நேர்காணலின் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளமான சிபி செய்தி வெளியிட்டுள்ளது.இந்த நேர்காணலின் போது அவர் மேலும் தெர்வித்துள்ளதாவது விடுதலை புலிகள் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிரானவர்கள் அல்ல என தெரிவித்துள்ளார். இந்தியாவின் மத்திய அரசும் அதன் தீர்மானிக்கும் சக…
-
- 1 reply
- 1.1k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மல்லாவியில் மக்கள் குடியிருப்பை நோக்கி சிறிலங்காப் படையினர் எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 655 views
-
-
பஸ்ஸில் பணம் கொடுக்காமல் ஓசி பயணம் செய்த இளைஞனிடம் பணத்தை நடத்துநர் கேட்டபோது ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் வேப்பொத்துவ என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் சமன் கொடித்துவக்கு (29 வயது) என்ற இளம் பஸ் நடத்துநரே கொலை செய்யப்பட்டவராவார். மாத்தறையில் இருந்து வலஸ்முல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்ஸில் ஏறிய இந்த நபர் ரிக்கெட் பெறாது இடைவழியில் இறங்க முயன்றார். அதன்போது நடத்துநர் அவரிடம் ஏன் ரிக்கற் எடுக்கவில்லை என்று பணத்தைக் கேட்டபோது வாய்த்தர்க்கம் ஏற்பட்டு ஏனைய பயணிகளால் விலக்குப் பிடித்து சமாதானப்படுத்தப்பட்டனர். நடத்துநர் மாலை வேலை முடிந்து வீடு செல்லும்போது வேப்பொத்துவ என்ற இடத்தில் அவரை மறித்த சந்தேக …
-
- 0 replies
- 1.2k views
-