Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. * சம்பிக்க ரணவக்க கேள்வி; வந்தேறுகுடிகளே என்கிறார் தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளென்றால் அவர்களுக்கு எவ்வாறு தமிழகத்துடன் தொப்புள் கொடி உறவிருக்க முடியுமென ஹெல உறுமய கட்சியின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற வட, கிழக்கின் தற்போதைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ஜே.வி.பி.யினரின் கிளர்ச்சியின்போது அவர்கள் விமானத் தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்களை நடத்தவில்லை. ஆனாலும், அவர்களின் கிளர்ச்சியை அடக்குவதற்காக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எத்தனையோ நாடுகள் தமது நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சிகள், புரட்சிகளை…

    • 3 replies
    • 1.2k views
  2. இராணுவப் படையில் ஆட்களை சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சையை நடத்த வந்த அதிகாரியொருவர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டமையினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இராணுவ அதிகாரி முகமாலையிலிருந்து பொல்கஸ்ஓவிட்டவிற்கு வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்துச் செல்ல முற்பட்ட போது பொதுமக்கள் குறித்த அதிகாரியை சுற்றி வளைத்து பிடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேக நபர் தற்போது பிலியந்தலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பண்டாரகமவைச் சேர்ந்த பெண் ஒருவரின் தங்க நகையை பறித்துச செல்ல முற்பட்ட போதே குறித்த இராணுவ உயர் அதிகாரி மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். …

    • 0 replies
    • 598 views
  3. கனேடியத் தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்ற 25ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை நினைவு நாள் 1983ம் ஆண்டு ஜூலை மாதம், சிங்கள வன்முறையிலும், இனத்துவேசத்திலும் தங்கள் உயிர்களைத் தொலைத்த இலங்கைத் தமிழ் மக்களை நினைவு கூரும் 'கறுப்பு ஜூலை நினைவு நாள்", ஜூலை மாதம் 23ம் திகதி புதன்கிழமை, நேற்று, Ben Francklin Place, Nepean City Hall, ஒட்டாவாவில் இடம்பெற்றது. 350 பேர் அளவு கலந்துகொண்ட இந்நிகழ்வு அக வணக்கத்துடன் ஆரம்பமானது. கனேடிய ஊடகவியலாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர். கனேடியத் தேசிய கீதமும் தமிழ்த் தாய் வாழ்த்தும் ஒட்டாவா தமிழ் சிறார்களினால் இசைக்கப்பட்டன. கறுப்பு ஜூலையின் கொடூரத்திலிருந்து தப்பியவர்களுக்கு வாழ வழி செய்த மக்களுக்கும், தஞ்சமளித்து வரவேற்ற நாடுகளுக்கும் நிகழ்வில்…

    • 0 replies
    • 569 views
  4. வவுனிக்குளம் பகுதியை சிறீலங்காப் படையினர் ஆக்கிரமித்துள்ளனர். கடந்த புதன்கிழமை இப்பகுதியில் சிறீலங்காப் படையினர் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இப்பகுதியில் மோதல்கள் எதுவும் இன்றி விடுதலைப் புலிகள் பின்வாங்கியதை அடுத்தே படையில் இப்பகுதியில் வந்தடைந்து்ளளனர். தற்போது சிறீலங்காப் படையினர் மல்லாவியின் தென்பகுதியில் நிற்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மடுப் பிரதேசம், விடத்தல் தீவு, நட்டாங்கண்டல், வவுனிக்குளம் ஆகிய பிரதேசங்களிலிருந்து விடுதலைப் புலிகள் சிறு சிறு தாக்குதல்களை நடத்திக்கொண்டு பின்வாங்கியுள்ளனர். இதேநேரம் சிறீலங்காப் படையினர் அங்கும் இங்குமாக சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து அகலக்கால் பதித்துள்ளனர். இவர்களுக்கான பின்தள உத…

  5. கிளிநொச்சியை படையினர் கைப்பற்றுவதை விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனினால் தடுக்க முடியாது எனவும் தமது அதிகார பிரதேசத்தை பாதுகாத்து கொள்ளும் நோக்கிலேயே சார்க் மாநாட்டை முன்னிட்டு, போர் நிறுத்தம் ஒன்றை விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர் எனவும் கருணா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் மிகவும் தளர்வடைந்துள்ளனர் எனவும் முன்னர் கிளிநொச்சியை தற்கவைப்பதற்காக தான் கிழக்கில் இருந்து 2 ஆயிரம் பேரை வன்னிக்கு அழைத்துச் சென்றதாகவும் அதன் மூலம் பிரபாகரனை காப்பற்றியதாகவும் கருணா கூறியதாக சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் தற்பொழுது அவர்களுக்கு உதவகூடிய படையை கொண்டு வரமுடியாத நிலையில் விடுதலைப்புலிகள் இருக்கின்றனர். பதுங்குகுழிக்குள் இருந்து கட்டளைகளை மாத்திரம…

    • 11 replies
    • 2.5k views
  6. தமிழீழம் அமைவதில் எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால், அது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் போல - அனைத்து மக்களும் சேர்ந்து வாழக்கூடியதாக - அமையவேண்டும் என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 637 views
  7. சண்டே லீடர் ஆங்கில செய்திதாளுக்கு எதிராக பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச, தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்வதற்கான திகதியை கல்கிஸ்ஸை நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் திகதியும், செப்டம்பர் 2 ஆம் திகதி சண்டேலீடரில் வெளியான தகவல், தமது பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதாக தெரிவித்தே கோட்டாபய இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இதற்காக அவர் சண்டே லீடர் செய்திதாளிடம், 1000 மில்லியன் ரூபாய்களை நட்டஈடாக கோரியுள்ளார். 1971 ஆம் 1972 ஆம் ஆண்டுகளில் தாம் இராணுவ லெப்டினன்ட் தரத்தில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லாத ஒருவராக இருந்ததாக கோட்டாபய குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் தமது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், பாவனைக்கு ஒவ்வாத வானூர்திகளை 200…

    • 0 replies
    • 415 views
  8. தமிழீழ விடுதலைப் புலிகளின் நவீனரக ஆயுதங்களை கண்டறியும் புதிய ரக ராடார்களை கொள்வனவு செய்துள்ள சிறிலங்கா அரசு, அவற்றை உடனடியாக களமுனைகளுக்கு நகர்த்தியுள்ளதாக இராணுவ வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது, தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 581 views
  9. மடு மாதாவின் திருச்சொரூபம் சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் கொண்டுவரப்பட்டாலும் கூட, மடு மாதா தேவாலயம் அமைந்துள்ள பிரதேசம் சிறிலங்கா அரசினாலும் விடுதலைப் புலிகளாலும் அமைதி வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டால் மாத்திரமே இம்முறை மடு மாதா உற்சவம் நடைபெறும் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 406 views
  10. வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டை குஞ்சுக்குளம், நவ்வி பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் 13 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5:20 மணியளவில் சிறிலங்காப் படையினர் முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டனர். இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். இதில் நேற்று ஒன்பது சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். நவ்விப்பகுதியில் இன்று இடம்பெற்ற மோதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளின் மிதிவெடி மற்றும் பொறிவெடிகளிலும் படையினர் சிக்கியுள்னர். இதில் ஏற்பட்ட…

    • 1 reply
    • 737 views
  11. பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கைக்கு பாகிஸ்தான் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூன் ஷா மஹ்மூத் குரெஷி தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள உபாய கற்கைகளுக்கான சர்வதேச நிறுவகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் பாகிஸ்தான் இலங்கையுடன் தொடர்ந்தும் சிறந்த உறவைப் பேணி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இதே ஸ்தாபனத்தில் நடைபெற்ற மற்றுமொரு கலந்துரையாடலில் இந்திய ராஜ தந்திரியான ஜீ பார்த்த சாரதி உரையாற்றியுள்ளார். இவர் தனது உரையில் இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தின் மூலம் இந்தியா, சிறந்த பாடம் ஒன்…

    • 2 replies
    • 809 views
  12. படையினரின் நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்து கிளிநொச்சிப் பகுதிகளில் தங்கியுள்ள மக்களுக்கு கிளிநொச்சி அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் உடனடி உதவிகளை வழங்கி வருகின்றது. சமைத்த உணவுகள் வீட்டுப்பாவனைப்பொருட்கள் என்பன தற்பொது கிளிநொச்சிப்பகுதிகளில் தங்கியுள்ள 100 வரையான குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய மக்களுக்கும் பிற அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து அவசர உதவிகளை மேறகொண்டு வருவதாகவும் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் தெரிவித்தள்ளது. கடந்த சில நாட்களாக இடம்பெயர்ந்த மக்களில் கிளிநொச்சி உருத்திரபுரம் புதுமுறிப்புப் பகுதிகளில் தங்கியுள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. http://www.tamilwin.com/view.php?2aIWnVe0d...d436QV3b02ZLu2e

  13. அனைத்தையும் அழித்துவிட்டு அரசியல்தீர்வைக் காண்பதா அல்லது அனைத்தையும் பாதுகாத்துக்கொண்டு அரசியல் தீர்வைக் காண்பதாவென அரசாங்கம் தீர்மானிக்கவேண்டுமென ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்தபோது அரசியல் தலைவர்கள் பாதுகாக்கப்பட்டனர். படையினர் பாதுகாக்கப்பட்டனர். பொதுமக்கள் பாதுகாக்கப்பட்டனர். அரச சொத்துக்கள், இலங்கையின் பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இந்த அரசு போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிய பின்னர் என்ன நடக்கிறது? எ…

  14. சார்க் மாநாடு நடைபெறும்போதும் சண்டையை நிறுத்தமாட்டோம்: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா [வெள்ளிக்கிழமை, 25 யூலை 2008, 01:19 பி.ப ஈழம்] [க.நித்தியா] சிறிலங்காவில் சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில், வடபோர் முனையில் நடைபெறும் சண்டை எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் தலைநகர் கொழும்பின் பாதுகாப்புக்கு பெருந்தொகையான படையினர் தேவைப்படுகிறார்கள். அதனை வெளிநாட்டு பாதுகாப்புப் பிரிவினர் பார்த்துக்கொள்வார்கள். இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்காக கொழும்பு வரவுள்ள இந்திய பாதுகாப்பு பிரிவினர் அவரது பாதுகாப்பை உறுதி செய்துகொ…

    • 16 replies
    • 1.5k views
  15. விடுதலைப்புலிகளின் நவீன ரக ஆயுதங்களை கண்டறியும் புதிய ரக ராடர்களை கொள்வனவு செய்துள்ள சிறிலங்கா அரசு அவற்றை உடனடியாக களமுனைகளுக்கு நகர்த்தியுள்ளதாக இராணுவ வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது, தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 1.4k views
  16. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரும் பூநகரி பிரதேச பிரதி திட்டமிடல் பணிப்பாளருமான சாந்தலிங்கம் விமலகுமார் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 8 replies
    • 1.5k views
  17. நான் ஒரு நாடோடி என்னுடைய நான்காவது இடைத்தங்கல் முகாமில் நிற்கிறேன். என் தரிப்பிடங்களில் மிகவும் வித்தியசமனது இது, என் போன்ற பலர் கூடிவழும் தேசமிது. வாசலில் வைத்தே பிச்சைப் பாத்திரம் தரப்பட்டது, அதனல் தானோ என்னவோ, கோழைகளின் கோட்டையில் குட்டிக் குடிசை நானும் போட்டு கொள்ள வசதியாய் போனது. வெள்ளையன் தானொதுங்க போட்ட கூடாரத்தில் ஒட்டகம் பொல நானும் ஒதுங்கிக் கொண்டேன். என் போல ஒதுங்கிய ஒட்டகங்கள் இருபத்தைந்து வருடதுக்கு முதல் நடந்ததுக்காக நாளை ஒன்றுகூடி ஓலமிட போகுது, ஒடிவந்து ஒளிச்சிருந்த பாவத்த கழுவ பொகினமாம், வாழ்க வாழ்க... இருபத்தஞ்சு வருசமா தொடருதைய்யா சோககதை!!!, என்ன காப்பாத்த வந்தவனுக்கு கைவிலங்கு போடுறியே, எனக்கு நீ பிச்சை போடுர படியால், நான் நீ என்ன சொன்னாலும் ச…

    • 3 replies
    • 1.7k views
  18. 'தமிழக மீனவாகளை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொல்லவில்லை. மாறாக விடுதலை புலிகள் தான் சுடுகின்றனர். இவ்வாறு கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய மாநாட்டில் இலங்கைத் தொழில் துறை பிரதி அமைச்சன் இராதாகிருஷ்ணன் கூறினார் என்று ராமேஸ்வர மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக தமிழக நாளேடு ஒன்றில் தெரிவிக்கபட்டிருப்வை வருமாறு : இலங்கை , கொழும்பில் விகாரமாதேவிப் பூங்கா, நியுடவுன் ஹோலில் தெற்காசிய மக்கள் மாநாடு கடந்த 20ம் திகதி நடந்தது. இதில் இந்தியாவிலிருந்து 80 பேர் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்த 30 போர் சென்றர். இதில் தமிழக மீனவர்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு தமிழகம் திரும்பிய ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ'; கூறியதாவது : …

  19. 'புலிகளின் ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்த அறிவிப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. புலிகளின் வரலாற்றில் இது போன்ற பல யுத்த நிறுத்தங்கள் பல முன்னரும் அறிவிக்கபட்டன. பின்னர் அவை மீறபட்டன. இராணுவ ரீதியிலான தாயாரிப்புகளை மேற்கொள்வதற்குச் சாதகமாக இத்தகைய நடவடிக்கைகளை புலிகள் மேற்கொள்வது யாவரும் நன்கறிந்த விடயமே.' ஐரோப்பிய நாடளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று முன்தினம் அமைச்சனின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர். இதன் போது அவ. இதைத் தெரிவித்துள்ளா.. மேலும் : தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு கௌரவமானதும் நிலையானதுமான அரசியில் தீர்வு கிட்ட வேண்டும். அதிகாரப் பரவலாக்களின் மூலமே அது சாத்தியப்படும். எமது கட்சி ஆரம்பம் தொட்டு முனவைத்து வந்த நடைமுறை…

    • 9 replies
    • 1.5k views
  20. இந்தியாவில் இருந்த கடல்மார்க்கமாக இலங்கைக்கு மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் யோசனைக்கு அமைச்சரவை இன்று (24) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தின் மதுரையில் இருந்து தலைமன்னார் வரை மின்சார கம்பி இணைப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த திட்டமானது இலங்கையின் இறையாண்மையில் தலையிட வைக்கும் மற்றுமொரு முயற்சி என ஜே.வீ.பீ சார்பு இணையத்தளம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கு இலங்கையின் மின்சக்தி வழங்கலை நெறிப்படுத்தும் வாய்ப்பு இதன் மூலம் வழங்கப்படுகிறது எனவும் இதனை கொண்டு இந்தியா இலங்கையின் மீது அழுத்தங்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன எனவும அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான வரைபை பார்க்க........... …

    • 0 replies
    • 652 views
  21. மன்னார், வவுனியா மாவட்டங்களிலிருந்து 1 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்வு [வெள்ளிக்கிழமை, 25 யூலை 2008, 05:59 மு.ப ஈழம்] [க.நித்தியா] வன்னியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொடர்புபட்ட சிறிலங்கா அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்திலிருந்து மேற்படி இரு மாவட்டங்களுக்கும் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மன்னாரில், மன்னார்-பூநகரி வீதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டத்துக்கு சென்றுள்ளனர். துணுக்காய் மற்றும் மல்லாவிப் பகுதியிலிருந்து ஏற்கனவே பெரும…

    • 0 replies
    • 512 views
  22. The day a Tamil learned about hate Canadian Tamils mark 25 years since Colombo riots forced their flight Stewart Bell, National Post Published: Wednesday, July 23, 2008 http://www.nationalpost.com/todays_paper/s....html?id=672763 Stewart Bell இடம் இருந்து எமது போராட்டத்தின் முக்கிய நிகழ்வு ஒன்று பற்றி மிகவும் வரவேற்கத்தக்க ஒரு பார்வை.

    • 4 replies
    • 1.3k views
  23. நீங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவரா? சட்ட விரோத நடவடிக்கைகளில் எப்போதும் ஈடுபடாதவரா? உங்கள் வேலை உண்டு நீங்கள் உண்டு என்று வாழ்பவரா? நீங்கள் எப்படியானவராக இருந்தாலும் வெள்ளை வான் அனர்த்தம் உங்களுக்கும் ஏற்படலாம்! நீங்கள் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது உங்கள் கதவுகள் தட்டப்படலாம். வீதியில் உங்கள் பாதையை வெள்ளைவான் ஒன்று மறிக்கலாம். அதை எதிர் கொள்ள நீங்கள் தயாரா? 1) திகிலடையாதீர்கள் நீங்கள் கொஞ்சமும் எதிர்பாராத கணத்தில் இது இடம்பெறும் போது திகைப்படைந்து செயலிளந்து நிற்காதீர்கள். உங்களுக்கு கிடைக்கும் சுதந்திரமான இறுதி கணங்களை பயத்தை நீக்கி புத்திசாதுரியத்துடன் பயன்படுத்துங்கள். உங்களை கடத்த வந்தவர்கள் நன்கு திட்டம…

    • 9 replies
    • 1.7k views
  24. யேர்மனியில் அன்ரனி சுரேஸ்குமார் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு வியாழன், 24 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் யேர்மனிக் கிளையில் பணியாற்றிய அன்ரனி சுரேஸ்குமார் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார். தமிழீழ தேசத்தை அமைப்பதற்காக தமிழீழத் தேசியத் தலைவரின் கீழ் தமிழீழ விடுதலைக்காய் உழைத்த நாட்டுப்பற்றாளர் அன்ரனி சுரேஸ்குமார் அவர்களை நாம் இழந்துவிட்டோம். சிறுநீரகங்கள் பழுதடைந்த போதும், குருதி மாற்றுச் சுற்றின் மூலம் உயிர்வாழ்ந்துகொண்டிருந்த போதும் தனது உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாது தமிழீழ விடுதலைக்காக இறுதி நேரம் வரையிலும் தன்னை அர்பணித்து பணியாற்றியவர் அன்ரனி சுரேஸ்குமார். …

  25. இலங்கை வங்கியிடமும் அரசாங்கம் 5700 கோடி ரூபா கடன் பெற்றுள்ளது - சபையில் ரவி கருணாநாயக்க எம்.பி. தகவல் வீரகேசரி நாளேடு 7ஃ24ஃ2008 11:35:11 Pஆ - பொருட்களின் விலைகளை குறைக்காவிடின் ஆட்சி அதிகாரத்தை எம்மிடம் ஒப்படைக்கவும் கடன் பெறுவதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. அரசாங்கம் இலங்கை வங்கியிடமும் 5700 கோடு ரூபாவை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது என்று ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட எம்.பி. ரவி கருணாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விசேட வர்த்தக பண்ட அறவீட்டுச் சட்டம் மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவதுஇ பொருட்களின் விலைகளை குறைக்க முடி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.