Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப்புலிகளின் நவீன ரக ஆயுதங்களை கண்டறியும் புதிய ரக ராடர்களை கொள்வனவு செய்துள்ள சிறிலங்கா அரசு அவற்றை உடனடியாக களமுனைகளுக்கு நகர்த்தியுள்ளதாக இராணுவ வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது, தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 1.4k views
  2. மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆளுனராக நவநீதம்பிள்ளை எதிர்வரும் திங்கட்கிழமை நியமிக்கப்படலாம் - பான் கீ மூன் ஜ வெள்ளிக்கிழமைஇ 25 யூலை 2008இ 07:00.47 யுஆ புஆவு +05:30 ஸ மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளராகத் தென்ஆபிரிக்காவின் நவநீதம்பிள்ளை பெரும்பாலும் எதிர்வரும் திங்கட்கிழமை நியமிக்கப்படக்கூடும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளராகக் கடமையாற்றிய லூயிஸ் ஆர்பரின் அர்ப்பணிப்புப் பாராட்டுக்குரியதென அவர் பொதுச்சபையில் குறிப்பிட்டுள்ளார். உறுப்பு நாடுகள் மற்றும் அரச சர்பற்ற நிறுவனங்களின் ஆலோசனையின்படி இந்த நியமனம் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மனித…

  3. வீரகேசரி நாளேடு - கச்சதீவு சட்டப்படி இந்தியாவுக்கே சொந்தமானது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தடுத்து நிறுத்தப்படாவிட்டால் இந்தியா கச்சதீவை சுவீகரிக்கும் நிலை ஏற்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா எச்சரிக்கை விடுத்தார். தமிழீழ விடுதலைப் புலிகளை அரசாங்கத்தால் ஒரு போதும் தோற்கடிக்க முடியாது என்பதை இந்தியா நன்கு அறிந்து வைத்துள்ளது. சுதந்திர தமிழீழம் உருவாக வேண்டுமானால் அரசாங்கம் தொடர்ந்தும் போரை முன்னெடுக்கலாம் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று விசேட வியாபாரப் பண்ட அறவீட்டு கட்டளைச் சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொட…

    • 0 replies
    • 746 views
  4. ஐந்து லட்சம் மக்கள் பயணம் செய்யும் பிரதான வீதியில் நடத்தப்பட்டிருக்கும் கிளைமோர் தாக்குதலானது அந்த வீதியால் பயணம் செய்யும் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது என்று கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ச.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 558 views
  5. இராணுவப் படையில் ஆட்களை சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சையை நடத்த வந்த அதிகாரியொருவர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டமையினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இராணுவ அதிகாரி முகமாலையிலிருந்து பொல்கஸ்ஓவிட்டவிற்கு வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்துச் செல்ல முற்பட்ட போது பொதுமக்கள் குறித்த அதிகாரியை சுற்றி வளைத்து பிடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேக நபர் தற்போது பிலியந்தலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பண்டாரகமவைச் சேர்ந்த பெண் ஒருவரின் தங்க நகையை பறித்துச செல்ல முற்பட்ட போதே குறித்த இராணுவ உயர் அதிகாரி மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். …

    • 0 replies
    • 598 views
  6. கனேடியத் தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்ற 25ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை நினைவு நாள் 1983ம் ஆண்டு ஜூலை மாதம், சிங்கள வன்முறையிலும், இனத்துவேசத்திலும் தங்கள் உயிர்களைத் தொலைத்த இலங்கைத் தமிழ் மக்களை நினைவு கூரும் 'கறுப்பு ஜூலை நினைவு நாள்", ஜூலை மாதம் 23ம் திகதி புதன்கிழமை, நேற்று, Ben Francklin Place, Nepean City Hall, ஒட்டாவாவில் இடம்பெற்றது. 350 பேர் அளவு கலந்துகொண்ட இந்நிகழ்வு அக வணக்கத்துடன் ஆரம்பமானது. கனேடிய ஊடகவியலாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர். கனேடியத் தேசிய கீதமும் தமிழ்த் தாய் வாழ்த்தும் ஒட்டாவா தமிழ் சிறார்களினால் இசைக்கப்பட்டன. கறுப்பு ஜூலையின் கொடூரத்திலிருந்து தப்பியவர்களுக்கு வாழ வழி செய்த மக்களுக்கும், தஞ்சமளித்து வரவேற்ற நாடுகளுக்கும் நிகழ்வில்…

    • 0 replies
    • 569 views
  7. மல்லாவி துணுக்காய்ப் பகுதிகளிலுள்ள மக்கள் தாங்கள் இடம்பெயர்ந்தமை இதுவே முதற்தடவை எனவும் தங்கள் வீடுகளிலுள்ள பொருட்கள் பெருமளவிலான ஆடுமாடுகள் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு..... படையினரின் எறிகணை வீச்சுக்களிலிருந்து தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஒரே நோக்கத்துடன் இடம்பெயர்ந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் விரைவில் இலங்கைப் படையினரை விரட்டியடித்துத் தங்களைத் திரும்பவும் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல வழிசமைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மல்லாவி துணுக்காய்ப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து மரநிழல்களிலும் வெட்டவெளிகளில் கூடாரங்களிலும் தங்கியுள்ள மக்களே இவ்வாறு தங்கள் மனநிலையை வெளிப்படுத்தியுள்ளனர். தங்களின் விவச…

  8. விடுதலைப்புலிகளின் யுத்தநிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு நிராகரிப்பு [செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 01:08 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] விடுதலைப்புலிகளின் ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு நிராகரித்துள்ளது.வடபோர் முனையில் எதிர்நோக்கிவரும் தொடர்ச்சியான பின்னடைவுகளால் நலிவடைந்துள்ள புலிகளின் தந்திரோபாய நகர்வே இது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளின் போர்நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொள்வதற்குஅரசு தயாரில்லை என்றும் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டால் வந்தால் மாத்திரமே அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்கும் என்றும் கூறியுள்ளார். இதேவேளை, சிறிலங்கா சமாத…

  9. தமிழீழம் அமைவதில் எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால், அது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் போல - அனைத்து மக்களும் சேர்ந்து வாழக்கூடியதாக - அமையவேண்டும் என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 637 views
  10. பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கைக்கு பாகிஸ்தான் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூன் ஷா மஹ்மூத் குரெஷி தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள உபாய கற்கைகளுக்கான சர்வதேச நிறுவகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் பாகிஸ்தான் இலங்கையுடன் தொடர்ந்தும் சிறந்த உறவைப் பேணி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இதே ஸ்தாபனத்தில் நடைபெற்ற மற்றுமொரு கலந்துரையாடலில் இந்திய ராஜ தந்திரியான ஜீ பார்த்த சாரதி உரையாற்றியுள்ளார். இவர் தனது உரையில் இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தின் மூலம் இந்தியா, சிறந்த பாடம் ஒன்…

    • 2 replies
    • 809 views
  11. சண்டே லீடர் ஆங்கில செய்திதாளுக்கு எதிராக பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச, தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்வதற்கான திகதியை கல்கிஸ்ஸை நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் திகதியும், செப்டம்பர் 2 ஆம் திகதி சண்டேலீடரில் வெளியான தகவல், தமது பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதாக தெரிவித்தே கோட்டாபய இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இதற்காக அவர் சண்டே லீடர் செய்திதாளிடம், 1000 மில்லியன் ரூபாய்களை நட்டஈடாக கோரியுள்ளார். 1971 ஆம் 1972 ஆம் ஆண்டுகளில் தாம் இராணுவ லெப்டினன்ட் தரத்தில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லாத ஒருவராக இருந்ததாக கோட்டாபய குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் தமது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், பாவனைக்கு ஒவ்வாத வானூர்திகளை 200…

    • 0 replies
    • 415 views
  12. மடு மாதாவின் திருச்சொரூபம் சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் கொண்டுவரப்பட்டாலும் கூட, மடு மாதா தேவாலயம் அமைந்துள்ள பிரதேசம் சிறிலங்கா அரசினாலும் விடுதலைப் புலிகளாலும் அமைதி வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டால் மாத்திரமே இம்முறை மடு மாதா உற்சவம் நடைபெறும் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 406 views
  13. தமிழீழ விடுதலைப் புலிகளின் நவீனரக ஆயுதங்களை கண்டறியும் புதிய ரக ராடார்களை கொள்வனவு செய்துள்ள சிறிலங்கா அரசு, அவற்றை உடனடியாக களமுனைகளுக்கு நகர்த்தியுள்ளதாக இராணுவ வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது, தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 581 views
  14. வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டை குஞ்சுக்குளம், நவ்வி பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் 13 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5:20 மணியளவில் சிறிலங்காப் படையினர் முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டனர். இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். இதில் நேற்று ஒன்பது சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். நவ்விப்பகுதியில் இன்று இடம்பெற்ற மோதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளின் மிதிவெடி மற்றும் பொறிவெடிகளிலும் படையினர் சிக்கியுள்னர். இதில் ஏற்பட்ட…

    • 1 reply
    • 737 views
  15. படையினரின் நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்து கிளிநொச்சிப் பகுதிகளில் தங்கியுள்ள மக்களுக்கு கிளிநொச்சி அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் உடனடி உதவிகளை வழங்கி வருகின்றது. சமைத்த உணவுகள் வீட்டுப்பாவனைப்பொருட்கள் என்பன தற்பொது கிளிநொச்சிப்பகுதிகளில் தங்கியுள்ள 100 வரையான குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய மக்களுக்கும் பிற அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து அவசர உதவிகளை மேறகொண்டு வருவதாகவும் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் தெரிவித்தள்ளது. கடந்த சில நாட்களாக இடம்பெயர்ந்த மக்களில் கிளிநொச்சி உருத்திரபுரம் புதுமுறிப்புப் பகுதிகளில் தங்கியுள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. http://www.tamilwin.com/view.php?2aIWnVe0d...d436QV3b02ZLu2e

  16. அனைத்தையும் அழித்துவிட்டு அரசியல்தீர்வைக் காண்பதா அல்லது அனைத்தையும் பாதுகாத்துக்கொண்டு அரசியல் தீர்வைக் காண்பதாவென அரசாங்கம் தீர்மானிக்கவேண்டுமென ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்தபோது அரசியல் தலைவர்கள் பாதுகாக்கப்பட்டனர். படையினர் பாதுகாக்கப்பட்டனர். பொதுமக்கள் பாதுகாக்கப்பட்டனர். அரச சொத்துக்கள், இலங்கையின் பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இந்த அரசு போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிய பின்னர் என்ன நடக்கிறது? எ…

  17. சிறீலங்கா அரசாங்கம் கூறுவது போன்று இந்த வருட இறுதிக்குள் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பொட்டம்லைன் என்ற ஆங்கில நாளேட்டுக்கு அவர் கருத்துரைக்கும் போதே அவர் இக்கருத்தினைதத் தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதிக்குள் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்ற சிறீலங்கா அரசாங்கத்தின் கூற்று சாத்தியப்படாது. யுத்தத்தை முடிவுக்குள் கொண்டுவருவது தொடர்பில் சிறீலங்கா இராணுவத் தளபதி சரத்பொன்சேகா மாறுபட்ட கருத்துக்களை கூறிவருகின்றார். எதிர்வரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கிழக்கில் நடைபெறும் பொதுத் தேர்தல்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல்களிலும…

  18. 'தமிழக மீனவாகளை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொல்லவில்லை. மாறாக விடுதலை புலிகள் தான் சுடுகின்றனர். இவ்வாறு கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய மாநாட்டில் இலங்கைத் தொழில் துறை பிரதி அமைச்சன் இராதாகிருஷ்ணன் கூறினார் என்று ராமேஸ்வர மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக தமிழக நாளேடு ஒன்றில் தெரிவிக்கபட்டிருப்வை வருமாறு : இலங்கை , கொழும்பில் விகாரமாதேவிப் பூங்கா, நியுடவுன் ஹோலில் தெற்காசிய மக்கள் மாநாடு கடந்த 20ம் திகதி நடந்தது. இதில் இந்தியாவிலிருந்து 80 பேர் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்த 30 போர் சென்றர். இதில் தமிழக மீனவர்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு தமிழகம் திரும்பிய ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ'; கூறியதாவது : …

  19. கிழக்கு மாகாணத்தை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்டதாக கூறும் அரசாங்கம், வேலுப்பிள்ளையின் தம்பியான பிள்ளையானிடம் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களின் எதிர்காலத்தை கையளித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இதனால் கிழக்கு மாகாணம் தொடர்ந்து வியாகுல நிலைமையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பிரிவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார். கிழக்கு மாகாண பிரதிகாவற்துறை மா அதிபர் மகிந்த பாலசூரிய மாகாணத்தில் உள்ள சகல காவல் நிலையங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்று நிரூபத்தின் மூலம் …

    • 3 replies
    • 1.7k views
  20. மீன் பிடித்துவிட்டு கரைக்கு ஜூலை 22 அன்று திரும்பியிருக்க வேண்டிய ராமேஸ்வரம் தங்கச்சி மடம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 8 பேர் கரைக்குத் திரும்பாததால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நிலவுகிறது. தொடர்ந்து வாசிக்க..

    • 16 replies
    • 2k views
  21. யாதும் ஊரே யாவரும் கேளிர் என உலகப் பொது நீதி பாடித் தமிழ் இனத்தின் பண்பை உலகின் செவிகளில் பறை சாற்றிவர்; சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார். அதையே இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் தனது செயலில் காட்டி உலகை விழி பிதுங்க வைத்துள்ளது. அன்றாடம் தனது பிராந்தியத்தில் உள்ள பொது மக்களின் குடியிருப்புக்கள் மீது கடந்த பல மாதங்களாகக் காலை மாலை இரவு பகல் பாராது இலங்கை அரசு குண்டு மழை எறிகணை வீச்சுக்களால் போர் நடத்தி அழிப்புகளைச் செய்து வருகின்றது. நாலா புறமும் போர்க் கள முனைகளைத் திறந்து எதிரி படைகளின் முழு முற்றுகையைப் பல மாதங்களாக நில வன்பறிப்பும் இன அழிப்பும் செய்து வருகிறது. இத்தகைய நெருக்கடி நிலையிலும் ஆசியப் பிராந்திய அரசுகளின் உச்சி மகாநாட்டை இலங்கையில் அமைதியாக ந…

  22. யேர்மனியில் அன்ரனி சுரேஸ்குமார் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு வியாழன், 24 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் யேர்மனிக் கிளையில் பணியாற்றிய அன்ரனி சுரேஸ்குமார் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார். தமிழீழ தேசத்தை அமைப்பதற்காக தமிழீழத் தேசியத் தலைவரின் கீழ் தமிழீழ விடுதலைக்காய் உழைத்த நாட்டுப்பற்றாளர் அன்ரனி சுரேஸ்குமார் அவர்களை நாம் இழந்துவிட்டோம். சிறுநீரகங்கள் பழுதடைந்த போதும், குருதி மாற்றுச் சுற்றின் மூலம் உயிர்வாழ்ந்துகொண்டிருந்த போதும் தனது உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாது தமிழீழ விடுதலைக்காக இறுதி நேரம் வரையிலும் தன்னை அர்பணித்து பணியாற்றியவர் அன்ரனி சுரேஸ்குமார். …

  23. புலிகளின் குரலின் போராளிக் கலைஞன் கலையரசன் வீரச்சாவு [செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 07:33 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரவழி ஊடகமான புலிகளின் குரல் நிறுவனத்தின் போராளிக் கலைஞனான இரண்டாம் லெப். கலையரசன் நேற்று திங்கட்கிழமை வீரச்சாவடைந்துள்ளார். கடந்த ஆண்டு முதல் புலிகளின் குரல் நிறுவனத்தின் தமிழீழ வானொலியின் அறிவிப்பாளராகவும் - நிகழ்ச்சிப் படைப்பாளராகவும் -குரல் வழங்குனராகவும் - நடிகராகவும் சிறப்பாக செயற்பட்டவர் கலையரசன். இசை ஆர்வம் கொண்டு பாடல் பாடும் வளம் கொண்ட இவர் பாடல்களை எழுதும் ஆற்றலையும் கொண்டவர். இரண்டாம் லெப். கலையரசன் இயற்றி பாடிய பாடல் புலிகளின் குரலில் ஒலிபரப்பாகி வருகின்றது. தமிழீழ வானொலியில் பல…

  24. விடுதலைப் புலிகளை தடை செய்யுமாறு அவுஸ்திரேலியாவிடம் சிறிலங்கா கோரிக்கை [வியாழக்கிழமை, 24 யூலை 2008, 02:17 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] அவுஸ்திரேலியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யவேண்டும் என்று அந்நாட்டு அரசை சிறிலங்கா அரசு கோரியுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியப் பிராந்திய நாடுகளின் பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொண்ட அவுஸ்திரேலிய அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்திடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிராக அவுஸ்திரேலிய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் அங்கமாக விடுதலைப் புலிகளை அந்நாட்டில் தடை செய்யவேண்டும் என்று அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக அவுஸ்திரே…

  25. இந்தியாவில் இருந்த கடல்மார்க்கமாக இலங்கைக்கு மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் யோசனைக்கு அமைச்சரவை இன்று (24) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தின் மதுரையில் இருந்து தலைமன்னார் வரை மின்சார கம்பி இணைப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த திட்டமானது இலங்கையின் இறையாண்மையில் தலையிட வைக்கும் மற்றுமொரு முயற்சி என ஜே.வீ.பீ சார்பு இணையத்தளம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கு இலங்கையின் மின்சக்தி வழங்கலை நெறிப்படுத்தும் வாய்ப்பு இதன் மூலம் வழங்கப்படுகிறது எனவும் இதனை கொண்டு இந்தியா இலங்கையின் மீது அழுத்தங்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன எனவும அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான வரைபை பார்க்க........... …

    • 0 replies
    • 652 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.