ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட ஆலோசகரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் குடியுரிமையை ரத்து செய்ய ராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதிப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற சந்திரிக்கா அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலயிருந்தார். எனினும், கடந்த 12ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு முதலாவது மாநாட்டில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்ட போது ஆற்றிய உரை அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கம் தொடர்பாக சந்திரிக்கா வெளியிட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அவரது கட்சி உறுப்புரிமையை நீக்க…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்காவின் தலைநகரில் 100-க்கும் அதிகமான தமிழர்கள் கைது [ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 05:10 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை முதல் முற்பகல் வரை பாரிய தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு 100-க்கும் அதிகமான தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளவத்தையில் தரைப்பகுதியில் பசல்ஸ் லேன் முதல் விகாரை லேன் வரை காலி வீதியில் சுமார் 10 ஒழுங்கைகளைச் சுற்றிவளைத்த படையினரும் காவல்துறையினருமே இந்த நீண்ட நேரத் தேடுதல்களை மேற்கொண்டனர். அதிகாலை 5:00 மணியளவில் ஒவ்வொரு ஒழுங்கையிலும் உள்ள வீடுகள் மற்றும் தொடர்மாடிக் குடியிருப்புக்குச் சென்ற படையினர் தேடுதல்கள் மற்றும் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்த வேளையில் ம…
-
- 0 replies
- 844 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் கையில் ஒரு லட்சம் சிங்கள இளைஞர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது என்று சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தகத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 618 views
-
-
சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டின் செலவுகளுக்காக அந்நாட்டு அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதியில் பெருமளவிலான நிதி பாதுகாப்புக்கு செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 762 views
-
-
தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை வரும்-சிபிஐ நாகை: இலங்கை கடற்படையின் தாக்குதல்களை இந்திய கடற்படை தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்படும் என இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். நாகை மாவட்டம் பழையாறில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மீனவர்கள் வாழ்வுரிமை விழிப்புணர்வு பிரசார இயக்க தொடக்க விழா நடந்தது. இதில் பங்கேற்ற பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கடந்த 40 ஆண்டுகளாக துன்புறுத்தியும் சுட்டுக் கொன்றும் வருகிறது. மீனவர்களின் சொத்துக்களை பறிக்கும் செயல் நடக்கிறது. மீனவர்களின் உயிரையும் உரிமையையும் காப்பாற்ற வேண்டியது இந்திய கப்பல் படையின் பொறுப்பு.…
-
- 11 replies
- 1.7k views
-
-
மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாகக் கூறிவரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற்றால், அமெரிக்காவுக்கு உள்ளே மாத்திரமன்றி ஏனைய நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளிலும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விபரம்.. http://www.swissmurasam.info/content/view/7092/1/
-
- 1 reply
- 1.5k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் களுவன்கேணியில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவர் சிறிலங்காப் படையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 733 views
-
-
தனது விரலால் தனது கண்ணையே குத்திக் கொள்கின்றதா இந்தியா? -தாயகத்திலிருந்து மு.திரு- சிங்கள ஆட்சியாளர் தமது பிரதான பாரம்பரிய எதிரியாக கருதுவது இந்தியாவையே. இந்த வகையில் சிங்கள அரசியல்வாதிகள் ஈழத்தமிழரை இந்திய விரிவாக்கத்திற்கான கருவியாகக்கண்டு அச்சமடைகிறார்கள். ஆதலால் ஈழத்தமிழரை தோற்கடிப்பதிலிருந்தே இந்தியாவிற்கு எதிரான தமது போரை சிங்கள ஆட்சியாளர் ஆரம்பித்துள்ளார்கள். இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசு ஈழத்தமிழரை ஒடுக்குவதற்கு சிறிலங்கா அரசுக்கு உதவுவதன் மூலம் அது தனக்கு எதிராகத் தானே போர் புரியும் நிலைக்குப் போய்விட்டது எனலாம். இதனை சற்று விரிவாக நோக்குவோம். ஈழத்தமிழரை தமிழகத்தின் நீட்டமாகவே சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள பௌத்த மகா …
-
- 0 replies
- 1.1k views
-
-
மியன்மாரைப் போல இலங்கையையும் சீனா தன்பக்கம் இழுக்கும் என புதுடில்லி பீதி! அதனால்தான் அதன் உயர்மட்டக்குழு கொழும்பு வருகையாம் இலங்கை தனது பூகோள, அரசியல் வாய்ப்புகளைப் பரவலாக்க வேண்டும் என்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கையைப் பயன்படுத்தி மியன்மாரில் செய்ததை சீனா இலங்கையிலும் செய்கின்றதா என்ற கேள்வி புதுடில்லியில் காணப்படுவதாக இந்திய முன்னாள் புலனாய்வு அதிகாரி பி.ராமன் தெரிவித்துள்ளார். மலேசியா, ஈரான், சவூதி அரேபியாவை இலங்கைக்குள் கொண்டு வரும் மஹிந்த ராஜபக்ஷவின் நடவடிக்கையால் இலங்கை மீதான இந்தியாவின் செல்வாக்கு மென்மேலும் குறையலாம் எனத் தெரிவித்துள்ள அவர், இது தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவை விரும்புவதாக இலங்கை …
-
- 2 replies
- 1.3k views
-
-
வவுனியா மாவட்டம் இறம்பைக்குளத்தில் நேற்றிரவு குடும்பப்பெண் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 681 views
-
-
ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி அமைத்துள்ள தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் பிள்ளையானும் இணைந்து புதிய அரசியல் முன்னணி ஒன்றை அமைக்கவுள்ளனர் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 792 views
-
-
இந்தியாவின் சிறப்பு படையினர் 1500 பேர் கொழும்பை வந்தடைந்தனர். சனி, 28 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] சார்க் மாநாட்டிற்கான பாதுகாப்பிற்கு இந்தியாவின் சிறப்பு படையினர் 3000 பேர் வரவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. அதன்படி முதல்கட்டமாக கொழும்பிற்கு இந்தியாவின் 1500 பேர் அடங்கிய சிறப்பு பாதுகாப்பு படையினர் கொழும்பு சென்றுள்ளதாக தெரியவருகிறது. இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிறீலங்காவிற்கு ஒகஸ்ட் மாதமளவில் செல்லவிருக்கும் நிலையில் அவரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறான ஒரு நடவடிக்கையினை இந்தியா மேற்கொண்டுள்ளது. இவர்கள் சிறீலங்கா படையினருடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப…
-
- 2 replies
- 2.2k views
-
-
மன்னார் - முல்லைத்தீவு மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள பெரிய மடுப் பிரதேசத்தை இராணுவம் இன்று கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 7 சதுர கிலோமீற்றர் பரப்பளவுப் பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் கூறுகிறது. பெரியமடுப் பகுதி முன்னரும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு பின்னர் ஓயாத அலைகள் 3 இன் போது விடுவிக்கப்பட்ட பகுதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. போர்நிறுத்த கால எல்லைக் கோட்டில் இருந்து மன்னார், வவுனியா கள முனையில் இராணுவம் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டு பல முனைகளில் விடத்தல் தீவை நோக்கி நெருங்கி வருகின்ற போதும் மணலாறு மற்றும் யாழ்ப்பாண கள முனைகளில் அதற்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Heavy fighting in Vavuniyaa fr…
-
- 25 replies
- 6k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்கில் உள்ள துணுக்காய் ஒட்டன்குளப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சில் பொதுமக்களின் ஆறு வீடுகள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 620 views
-
-
ஜனநாயகச் சங்க தலைவராக ரணில் மீண்டும் நியமனம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ஜனநாயகச் சங்கத்தின் உப தலைவராகவும், ஆசிய பசுபிக் ஜனநாயகச் சங்கத்தின் தலைவராகவும் இரண்டாவது தடவையும் நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம்25,26ஆகிய திகதிகளில் பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் இடம்பெற்ற சர்வதேச ஜனநாயகச் சங்கத்தின் 25ஆவது பொதுக்கூட்டத்திலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பிரதான எதிர்க்கட்சி மேற்கொண்டு வரும் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு இச்சங்கங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று சர்வதேச ஜனநாயக சங்கத்தின் தலைவர் ஜோன்.டபிள்யூ.ஹவார்ட் இக்கூட்டத்தின் போது உறுதியளித்துள்ளார். இதேவேளை, சிம்பாப்வ…
-
- 0 replies
- 666 views
-
-
வெடிகுண்டு மூலப்பொருட்களைப் புலிகள் பெங்களூர், மும்பையிலிருந்து தருவிப்பாம்! தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது வெடிகுண்டுத் தயாரிப்புகளுக்குத் தேவையான மூலப் பொருட்களை "தகவல் தொழில்நுட்ப நகரமான' பெங்களூரிலும், தொழிற்சாலை நகரான மும்பையிலிருந்தும் பெற்றுக் கொள்ளுக்கின்றார்களாம்! வாஷிங்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் செய்தித் தளம் ஒன்று இத்தகவலை வெளியிட்டிருக்கின்றது. வெடிகுண்டுத் தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்கள் அடங்கிய ஒரு தொகுதி சரக்குப் பொதியை தென் தமிழ் நாட்டின் மதுரை நகரில் இந்திய அதிகாரிகள் கைப்பற்றியிருக்கின்றனர். பெங்களூரில் இருந்து அனுப்பப்பட்டிருந்த இந்த சரக்குகள் புலிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கையிலேயே பிடிபட்டிருக்கின்றன. புலிகளின் க…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை தொடர்பான புதுடில்லியின் நிபை;பாட்டில் எந்தவொரு மாற்றத்தையும் வெளிப்படுத்துவதாக இந்திய உயர் மட்டத் தூதுக் குழுவின் கொழும்பு விஜயம் அமைந்திருக்கவில்லையென சுட்டிக் காட்டிட்டியிருப்பதுடன் வழமையான பாணியிலான அறிக்கைகளையே மீண்டும் வெளிப்பட்டிருப்பதாகவும் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் பாதுபாப்பு, நம்பிக்கை உணர்வுகளை ஏற்படுத்த வேண்டிய தேவை குறித்து ஒரு வார்த்தையைத்தானும உயர் அதிகாரிகள் குழு தெரிவித்திருக்க வில்லையென்றும் ஓய்வு பெற்ற இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன் சுட்டிக்காட்டியிருக்கிறார். இலங்கையில் இந்திய அமைதிப் படைநிலை கொண்டிருந்த காலத்தில் புலனாய்வத் துறைக்குத் தலைமைதாங்கியிருந்த ஹரிகரன் இந்திய உயர்மட்டத் தூதுக் குழுவின் கொழும்பு விஜயம் தொட…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதல்களை முறியடித்து அவற்றினை வெற்றித் தாக்குதல்களாக்கிய தளபதிகள், பொறுப்பாளர்கள் மற்றும் போராளிகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையில் ஈ.பி.டி.பி.யின் உறுப்பினர் ஒருவர் நேற்று புதைகுழிக்குள் இருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 589 views
-
-
யாழ். வடமராட்சி பருத்தித்துறை மந்திகையில் சிறிலங்காப் படையினரின் வாகனத் தொடரணியைக் குறிவைத்து நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 658 views
-
-
போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் வெள்ளி, 27 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] தமிழீழ தாய்மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம்செய்து, ஐந்து மாவீரர்கள் வீரச்சாவை அணைத்துக் கொண்டிருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். நேற்று, லெப். பானுஜன் என்றழைக்கப்படும், முல்லைத்தீவு மாவட்டத்தை லோகேந்திரன் தியாகிதாசன், வீரவேங்கை அமராவதி என்றழைக்கப்படும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த தர்மலிங்கம் சுமிதா, வீரவேங்கை குறிஞ்சிமலர் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் சாரதாதேவி, வீரவேங்கை இளநங்கை என்றழைக்கப்படும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த குமாரசாமி கமலேஸ்வரி ஆகிய போராளிகளும், கடந்த 24ஆம்நாளன்று, 2ஆம் லெப். சுடரேந்தி அல்லது தேனரு…
-
- 8 replies
- 1.8k views
- 1 follower
-
-
தமிழர் போராட்ட ஆதரவு நிலையை மாசுபடுத்தும் வகையில் கனடிய, இத்தாலிய அரசுகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியரும், வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளருமான சு.ரவி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 741 views
-
-
உயர்மட்ட அதிகாரிகள் கூறுகின்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தியக் கட்சிகள் தமிழர் பிரச்சினையில் முடிவுகளை எடுக்கின்றன' [27 - June - 2008] * "வேதனைதரும் இந்தப் போக்கில் மாற்றம் ஏற்படவேண்டுமெனில், அது தமிழகத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும்' ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழின உணர்வாளர்கள் இடையே ஒற்றுமை அவசியம் என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருக்கும் அவர், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வழங்கிய நேர்காணல்: ஸ்ரீலங்காவுக்கு இந்திய உயர்மட்டக் குழுவொன்று திடீரென கடந்த வெள்ளிக்கி…
-
- 0 replies
- 838 views
-
-
சிறிலங்கா தலைநகரான கொழும்பில் உள்ள பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி மீது சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சையும், தண்ணீர்ப் பிரயோகத்தையும் மேற்கொண்டதால் கொதித்து எழுந்த பிக்கு மாணவர்கள் தற்போது கொழும்பில் ஆர்ப்பாட்டத்தினை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-