ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
கிழக்கு மாகாணத்தில் தற்போது தோன்றியுள்ள பதற்றமான சூழ்நிலைகளைத் தொடர்ந்து அங்கு தமது பணிகளை இடைநிறுத்துவதற்கு அனைத்துலக தொண்டர் அமைப்புக்கள் தீர்மானித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 588 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் முஸ்லிம் மக்களை எனது குழுவினரே கடத்திச் சென்றனர் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் துணை இராணுவக்குழுவின் தலைவர் பிள்ளையான் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த ஐந்த சந்தேகநபர்களையும் விடுவிக்குமாறு கொழும்பு நீதிமன்ற தலைமை நீதிபதி நிஷாந்த ஹப்புவாராய்ச்சி உத்தரவிட்டுள்ளார். ஐந்து சந்தேகநபர்களான மாணிக்கம் தமிழினியன், ரட்ணம் ஜனகன், ஐயர் ராஜ்குமார், சிவராஜ் சிவராம் மற்றும் காளிமுத்து திருக்குமார் ஆகியோர் குறிப்பிட்ட காலத்துக்கு தடுப்புக்காவலில் தடுத்துவைக்கப்பட்டமையால் அவர்களை விடுவிக்குமாறு நேற்று திங்கட்கிழமை கொழும்பு நீதிமன்றம் சட்டமா அதிபருக்குப் பணிப்புரை விடுத்தது. சந்தேகநபர்களை விடுவிக்குமாறு சொலிசிட்ட ஜென்ரல், கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கடிதம்மூலம் அறிவித்துள்ளார். கதிர்காமரின் வீட்டைப் புகைப்…
-
- 0 replies
- 719 views
-
-
'நேற்று காத்தான்குடி, இன்று ஏறாவூர், நாளை ஓட்டமாவடியா? என்ற கேள்வியோடு, பீதியோடு நிம்மதியற்று வாழும் நிலை மட்டக்களப்பு மாவட்டத் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறான அச்ச வாழ்வை ஏற்படுத்தியமைக்கான முழுப்பொறுப்பும் அரசையே சாரும். அதே வேளை, தமிழ்ப்பேசும் சமூகங்களிடையே இவ்வாறான பிரச்சினைகளைத் தூண்டி விடுவதில் சிங்களம் வெற்றி பெற்றுள்ளது'. இவ்வாறு ஆதங்கத்துடன் தெரிவித்தார் மட்டு.மாவட்டத் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்று உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன். மட்டு.மாவட்டமத்தில் தற்போது நிலவும் அமைதியற்ற சூழல் நிலை குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 22ம் திகதி காத்தான்குடியில் ஏற்பட்ட சம்பவத்தைத் தொ…
-
- 0 replies
- 575 views
-
-
நிறைவேற்று அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ள அரச தலைவர் மகந்த ராஜபக்ச, கிழக்கில் இனக்கலவரத்திற்கு தூபமிட்டு மக்களை பலிக்கடாக்களாக்கியுள்ளார் என்று ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 532 views
-
-
பொதுமக்களுக்கு எத்தகைய இழப்புக்கள் வந்தாலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை எக்காரணம் கொண்டும் நிறுத்தப் போவதில்லை என்று தெரிவித்துள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, போருக்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.7k views
-
-
95% தமிழர்கள் ஐக்கிய சிறீலங்காவுக்குள் வாழ விரும்புகின்றனர் என்ற அமெரிக்கத் தூதரின் கூற்றை இலங்கையில் தமிழ் மக்களிடம் ஐநாவின் கண்காணிப்பின் கீழ் நடத்தப்படும் தேர்தல் மூலமான கருத்துக் கணிப்பின் மூலம்.. நிரூபித்துக் காட்ட முடியுமா..??! என்று சவால் விட்டுள்ளார் அமெரிக்காவில் தமிழர்களின் உரிமைக்காக நீதிக்காக குரல் கொடுக்கும்... Bruce Fein அவர்கள்..! Fein: Hold referendum to test support for Tamil Statehood [TamilNet, Monday, 26 May 2008, 18:15 GMT] Bruce Fein, Attorney for a US-based Tamil Activist Group, in responding to a statement by Ambassador Robert Blake to Sunday Observer that from his discussions with Tamils that he knows that "over 95 percent of them…
-
- 3 replies
- 2.3k views
-
-
விடுதலைப்புலிகளின் கட்டளைத் தளபதியான பால்ராஜின் மறைவு விடுதலைப்புலிகளை மட்டுமன்றி முழுத் தமிழினத்தையுமே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள
-
- 2 replies
- 2.1k views
-
-
-
ஜேவியின் புதிய தலைவராக சோமவன்ச அமசிங்க மீண்டும் தெரிவு புதன், 28 மே 2008 [நிருபர் அ.மயூரன்] ஜேவிபியின் புதிய தலைவராக மீண்டும் சோமவன்ச அமரசிங்க ஜேவிபி கட்சி உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று கொழும்பில் உள்ள சுகந்ததாச உள்ளரங்க விளையாட்டரங்கி்ல் இடம்பெற் ஜேவிபியின் 5வது தேசிய மாட்நாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. 5வது தேசிய மாட்நாட்டில் அமைப்பில் தலைவர் உட்பட அனைத்து பதவிகளுக்கும் புதிய பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள் என ஜேவிபின் தலைவர் சோமவன்ச அமரசிங்க அறிவித்திந்தார். இந்த நிலையில் புதிய நியமனங்கள் இன்று இடம்பெற்றுள்ளன. தலைவர்: சோமவன்ச அமரசிங்க பொதுச் செயலாளர்: ரில்வின் சில்வா பரப்புரைச் செயலாளர்: விஜித ஹேரத்தும் பாராளுமன்றக் குழுத்…
-
- 0 replies
- 675 views
-
-
எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்திருக்கும் மாண்டுவண்டி ஊர்வலம் புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்றது ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் 13வது தடவையாக எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, இதனால் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இவ்வாறு மோசமான முறையில் எரிபொருள்களின் விலைகள் அதிகரித்திருப்பது இதுவே முதற்தடவையென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக கூறியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து 2 ½ வருடங்களுக்குள் 13 தடவைகள் எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுவிட்டன. 13 என்பத…
-
- 0 replies
- 871 views
-
-
சொ.அமிர்தலிங்கம் வறுமையானது பல பரிமாணங்களைக் கொண்டது. தங்கள் அடிப்படைத் தேவைகள் தன்னும் பூர்த்தி செய்ய முடியாத வருமானமுடையவர்கள் வறியவர்கள். அத்துடன், அத்தியாவசிய தேவைகளைப் பெற முடியாத தனிப்பட்டவர்களும் வறியவர்கள். எனவே, வறுமையானது நுகர்வுத் தேவையின் ஒரு குறைந்த தொகுதியைப் பெறக்கூடிய குடும்பமொன்றின் திறனை மையமாகக் கொண்டது. நுகர்வுத் தேவையின் குறைந்த தொகுதியைப் பெற முடியாத வருமானமுடைய குடும்பமும் வறுமைக்குரிய குடும்பமாகும். இலங்கையில் வறுமை பற்றிய தகவல்களைச் சேகரிக்க குடிசன மதிப்பீடும் புள்ளிவிபரத்திணைக்களத் தரவுகளுமே பெரும்பாலும் உதவுகின்றன. 1991 இற்கும் 1995 இற்கும் இடையிலான 5 வருட வறுமையானது உயர் வறுமைக்கோட்டின் பிரகாரம் 33 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாக உயர்ந்…
-
- 1 reply
- 1.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியில் நேற்று திங்கட்கிழமை சிறிலங்கா அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 893 views
-
-
பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் ஆனையிறவு தாக்குதல் பற்றி கூறுகிறார்
-
- 0 replies
- 2.3k views
-
-
அயர்லாந்தில் "அயர்லாந்து அமைதி முயற்சி தரும் பாடங்களும், இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வும்" எனும் தலைப்பில் பொதுக்கருத்தரங்கு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 727 views
-
-
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் குண்டுவெடிப்பு27.05.2008 / நிருபர் எல்லாளன் மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் குண்டுவெடிப்புச் சம்வம் இடம்பெற்றுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்கள் விரைவில். http://www.sankathi.com/content/full_leadn...amp;ucat=1&
-
- 1 reply
- 1.9k views
-
-
இரண்டு அதிரடிப்படையினரை சுட்டுக்கொன்ற புலனாய்வு அதிகாரி அம்பாறையில் அமைந்துள்ள சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரின் முகாமில் புலனாய்வு அதிகாரி ஒருவர் அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இரண்டு அதிரடிப்படையினரும் உயிரிழந்தனர். எனவே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட புலனாய்வு அதிகாரி தனக்குத்தானே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். எனினும் ஆபத்தான நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. - சங்கதி
-
- 1 reply
- 1.8k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் காலவரையறையற்ற ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறைகளில் முஸ்லிம் பெண்னொருவர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் காயமடைந்திருந்தார். இதனைத்தொடர்ந்து மேலும் வன்முறைகள் ஏற்படாது தடுப்பதற்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் காலவரையறையற்ற ஊரடங்குச்சட்டத்தை பொலிஸார் பிறப்பித்துள்ளனர். இதேவேளை ஊரடங்குவேளைகளில் வன்முறைகளில் ஈடுபட்டோர் தொடர்பில் இதுவரை 23பேர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவ
-
- 0 replies
- 1.6k views
-
-
எரிபொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவது கடினமாகவுள்ளதால் எதிர்பார்த்ததை விடப் பணவீக்கம் இவ்வருடம் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ள மத்திய வங்கி, மேலும் விலை அதிகரிப்பிற்கான சாத்தியக்கூறுகளையும் கோடிட்டுக் காட்டியுள்ளது.தற்போதைய சூழ்நிலையில் 2008 இற்கான பணவீக்கம் முன்னர் மதிப்பிடப்பட்டதைவிடக் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகமாகக் காணப்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன என மத்திய வங்கியின் மே மாதத்திற்கான நாணயக் கொள்கை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை மேலும் அதிகரித்தால் பணவீக்கம் 14 வீதமாக அதிகரிக்கலாம் என முன்னர் மத்திய வங்கி தெரிவித்திருந்தது.கொழும்பு விலைச்சுட்டெண்ணின் அடிப்படையில் ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்…
-
- 0 replies
- 924 views
-
-
நாம் வசிக்கும் நாட்டிலும் தாயகத்திலும் தமிழீழம் வேண்டும் என கையெழுத்து வேட்டையினை செய்தால் என்ன இன்று சதவீதம் சொல்லும் அமெரிக்க தூதுவர் போல எவரேனும் இனி பேசாதவளவு அது ஆவணமாக இருக்கும் அல்லவா
-
- 13 replies
- 2.7k views
-
-
ஜெம்பட்டா வீதியில் வசித்த குடும்பஸ்தரைக் காணோம்! நான்கு வருடங்களுக்கு முன்பு சுவிஸ் நாட்டிலிருந்து கொழும்புக்கு வருகை தந்து ஜெம்பட்டா வீதியில் வசித்து வந்த 43 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்ப பயிற்சி பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் காணாமல்போனவரின் தந்தையார் முறைப்பாடு செய்துள்ளார். இவ்வாறு பிரதியமைச்சரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு: வரப்பிரகாசம் யஸ்பன் கில்பட் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கடந்த 18ஆம் திகதி நண்பர்களுடன் அவிசாவளைக்குச் சென்ற அவர், 19ஆம் திகதி காலை கொழும்பு போகின்றேன் எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டார் என…
-
- 0 replies
- 1.1k views
-
-
22 மே 2008 அண்று நடந்த ஊடகவியலாள்ர் மானாட்டிலே "ஏதிர்வரும் காலங்களில் சிறிலங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் வகையில் புதிய வியூகங்களை வகுக்க இருக்கின்றோம். இந்தப் புதிய வியூகங்களின் அடிப்படையில் செயற்பட்டு (ஐ நா மனித உரிமைகுழுவில் ) எமக்கான இடத்தைப் பிடிப்போம். விமர்சனங்களைக் கண்டு நாங்கள் அஞ்சப்போவதில்லை." என அனுரா பிரயதர்சன யாப்பா சவால்விட்டுளார். அதாவது இலங்கைக்கு துரோகம் செய்த முசுலீம் நாடுகளை ஓரம் கட்டிவிட்டு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமரிக்காவிற்கு வால் பிடிக்கபோவதாக கங்கணம் கட்டியுள்ளார். இந்த முயர்ச்சியில் வெற்றி பெற வேண்டுமான வால்பிடிப்பு கலையில் பலவருட தேர்ச்சி இலங்கைக்கு உண்டு என்பதை யாரும் மறுக்கமுடியாது. யாப்பா சொன்னது போல் மேற்குல…
-
- 13 replies
- 2.6k views
-
-
Posted on : 2008-05-27 ஏட்டுச் சுரைக்காயாகும் சட்டக் கட்டமைப்புகள் ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது. இது நமக்கு நன்கு தெரிந்ததுதான். இலங்கையில் இப்போது பெரும் சர்ச்சைக்குரியதாகி இருக்கும் மனித உரிமைகள் விவகாரத்திலும் இதுவே உண்மை நிலைமை என்பதைத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இலங்கை அரசுக்கு உணர்த்தியிருக்கின்றது அமெரிக்கா. ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்கள் தொடர்பான அமெரிக்காவின் பிரதி உதவிச் செயலாளர் எரிக்கா பார்க்ஸ் ரகில்ஸ் இலங்கை அரசுக்கு இதனைத் தெளிவுபடுத்தியிருக்கின்றார
-
- 0 replies
- 829 views
-
-
தெஹிவளை தொடரூந்து குண்டு வெடிப்பு: ஆறு குழுக்கள் விசாரணை கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளை தொடரூந்து நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற தொடரூந்துக் குண்டுவெடிப்பு தொடர்பாக ஆறு விஷேட காவல்துறை குழுக்கள் தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் இன்று காலை தெரிவித்தன. குண்டு எவ்வாறு தொடரூந்துக்குள் வைக்கப்பட்டது, இதற்கு காரணமாக இருந்துள்ள பாதுகாப்பு குறைபாடுகள் என்பன உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இக்குழுக்கள் ஆராயவுள்ளன. இதேவேளையில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதிக்கு இன்று செல்லவுள்ள இரசாயணப் பகுப்பாய்வாளர்கள் குண்டு வெடிப்பு தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளவிருக்கின்றார்கள். நேரம் குறித்து வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்றே வ…
-
- 0 replies
- 928 views
-
-
வன்னியில் திறந்தவெளிக்களமுனை ஒன்றுக்குள் படையினர் நுழையப் போகின்றனர். மன்னாரில் நடைபெறும் கடும் சமரானது இவ்வாறானதொரு புதிய களமுனையைக் காணப்போகிறது. கரையோரப் பகுதியை இலக்கு வைத்து நகரும் படையினர் அந்தப் பகுதிக்குள் செல்வதற்குள் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்கப் போகின்றனர். ஆனாலும், இந்தக் களமுனையில் இதுவரையான சாதக நிலைமையை இனியும் பயன்படுத்த முடியுமெனப் படைத்தரப்பு கருதுகிறது. வடக்கே நான்கு முனைகளில் கடும் சமர் நடைபெற்று வருகிறது. வன்னிக்குள் மூன்று களமுனைகளும் யாழ்.குடாவில் ஒரு முனையும் திறக்கப்பட்டுள்ளன. வன்னியில், மன்னார் களமுனையே தற்போதைய நிலையில் தங்களுக்குச் சாதகமாயிருப்பதாக படைத்தரப்பு நம்புகிறது. வவுனியாவிலும் மணலாறிலும், யாழ்.குடாவிலும் சாதகமற்றதொரு களநிலைய…
-
- 0 replies
- 1.2k views
-