ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறிலங்காப் படையினருடன் இணைந்தியங்கும் துணைப் படைக் குழுக்கள் தமது பாதுகாப்பிற்காகவே ஆயுதங்களை வைத்திருப்பதாக அமைச்சர்கள் கூறுகின்றனர். அப்படியானால் சிறிலங்கா அரசாங்கம் கிழக்கை இன்னமும் ஆயுதக்குழுக்களிடமிருந்து முழுமையாக மீட்கவில்லையா என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியிருக்கின்கிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 703 views
-
-
மடு தேவாலயப் திருத்தலப் பகுதியை போர் சூன்யப் பிரதேசமாக- சமாதான வலயமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 737 views
-
-
வடக்கு - கிழக்கைப் பிரித்து கிழக்கில் சிறிலங்கா அரசாங்கத்தால் நடத்தப்பட்ட தேர்தலையொட்டிய வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு (பவ்ரல்) குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 740 views
-
-
வடக்கு கிழக்கை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது இளைய சகோதரரான பசில் ராஜபக்ஷவிடம் கையளித்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு ஞாயிற்றுக்கிழமை உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, பசிலிடம் வட கிழக்கு பிராந்தியத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தலைவராகக் கொண்ட வடக்கிற்கான விசேட செயலணிக் குழுவின் உறுப்பினராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருக்கிறார். இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பிராந்தியத் தலைவரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத் த…
-
- 0 replies
- 1k views
-
-
ஜனநாயகத்தை ஏற்படுத்தினால் அதன்மூலம் தனது இருப்பு இல்லாமல்போய்விடுமென்ற அச்சம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருப்பதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதனால்தான் ஜனநாயத்தை ஏற்படுத்தும் நோக்கமின்றி கிழக்கு மாகாணசபையில் ஆயுதக் குழுவினரின் ஆயுதங்களைக் களையாமல் விட்டுவைத்திருப்பதாக இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்தார். ஜனநாயகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் குழுவினர் ஆயுதங்களுடன் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளது. பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதாகக் கூறிக்கொண்டு பிறிதொரு பயங்கரவாத அமைப்பையே அரசா…
-
- 0 replies
- 1k views
-
-
காரைதீவில் வாக்களர் அட்டை பறிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்க தரப்பு அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து மட்டக்களப்பு காரைதீவு கிராமத்தில் உள்ள மக்களிடம் வாக்காளர் அட்டைகளை பறித்து வருவதாக தேர்தல் திணைக்களத்தில் முறையிடப்பட்டுள்ளது. நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக அதன் ஊடக பேச்சாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். காரைதீவு கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று, வாக்களர் அட்டைகள் பறித்து செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதேவேளை அம்பாறையில் ஒரே இலக்க தகடுகள் பொறித்த இரண்டு வாகனங்கள் சுற்றித்தி திரிவதாக ஜே.வீ.பீயும் நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்த…
-
- 0 replies
- 863 views
-
-
கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் ஜே.வீ.பீயினர் தாக்கப்பட்டதாக கூறி ஜே.வீ.பீ இன்று அம்பாறை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. அக்கரைப்பற்று திருகோயில் பிரதேசத்தில் ஜே.வீ.பீயின் உறுப்பினர்கள் மீது நேற்று மாலை 3.30 அளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுதம் தாங்கிய பிள்ளையான் குழுவின் ஆதரவாளர்கள் தமது உறுப்பினர்களை தாக்கியதாக ஜே.வீ.பீயின் ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி தெரிவித்தார். ஜே.வீ.பீ உறுப்பினர்கள் நேற்று திருகோயில் பிரதேசத்தில் வீட்டுக்கு வீடு சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் அந்த சந்தர்ப்பத்தில் அங்கு சென்ற பிள்ளையான் குழுவினர் தமது உறுப்பினர்களை தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். ஜே.வீ.பீயின் பிரசார துண்டு பிரசுர…
-
- 1 reply
- 1.1k views
-
-
கடந்த மாதம் இடம்பெற்ற மோதல்களில் 120 படையினர் பலி! 745 படையினர் காயம் - பிரதமர் கடந்த ஏப்ரல் மாதம் வடக்கு இடம்பெறும் முன்னரங்க நிலைகளில் இடம்பெற்ற மோதல்களில் மட்டும் 120 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டும் 745 படையினர் காயமடைந்தும் உள்ளனர் என சிறீலங்காப் பிரதமர் ரண்டசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இன்று சிறீலங்காப் பாராளுமன்றில் இடம்பெற்ற அவசரகால சட்டம் மேலும் ஒருமாதம் நீடிப்பு விவாத வாக்கெடுப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 5 replies
- 1.5k views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கை அரசு பல்வேறு வழிகளிலும்,உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்து வரும் நிலையில்,விடுதலை புலிகளும் வெளிநாடுகளிடமிருந்து ஆயுதங்களை பெரிமளவில் வாங்கி வருவதாக தெரிவிக்கபடுகிறது. அண்மையில் கூட 3, கப்பல்கள் ஆயுதங்களை விடுதலை புலிகள் வடக்கில் உள்ள தமது முக்கிய கடற்தளங்களில் இறக்கி உள்ளதாக கொழும்பு தகவல்களை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகி இருந்தன. இராணுவத்திற்கும்,புலிகளுக்க
-
- 3 replies
- 2.6k views
-
-
அனுராதபுரம் மஹாவிலாச்சியவில் கிளைமோர் தாக்குதல்! வீரகேசரி இணையம் 5/6/2008 11:11:03 AM - அனுராதபுரம் மஹாவிலாச்சிய வீதியில், நேற்றிரவு கிளைமோர் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தேசிய பாதுகாப்புகான ஊடகமத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை விடுதலை புலிகள், வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த பெளத்த துறவி ஒருவரை இலக்கு வைத்து மேற்கொண்டுள்ளதாகவும்,தாக்கு
-
- 1 reply
- 1.8k views
-
-
மடு தேவாலயத்தை மையமாகக் கொண்டு சுயாதீனமான மதவலயமொன்றை அமைக்க மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் எத்தனிப்பதாக ஜாதிக ஹெல உறுமக குற்றஞ்சாட்டியுள்ளது. திருச்சொரூபம் கொண்டுவரப்பட வேண்டுமாயின் மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற மன்னார் ஆயரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். இராணுவப்படையினர் மடு தேவாலப் பிரதேசத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுள்ளதாகவும், நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட படையினருக்கு அதிகாரம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பினால் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைகள் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் குறிப்…
-
- 2 replies
- 1.4k views
-
-
வட மாகாண ஆளுனராக ஓய்வு பெற்ற இராணுவ படையதிகாரி ஒருவரை நியமிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. முன்னாள் இராணுவத் தளபதி லெப்டிணன் ஜெனரல் லயணல் பலகல்லவை தீர்மானிக்கப்பட்டிருந்தது. வடக்கு மக்களுடன் லயணல் பலகல்லவிற்கு காணப்பட்ட நெருக்கமான உறவின் காரணமாக கோதபாய ராஜபக்ஸவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், வட மாகாண ஆளுநனர் பதவியை ஏற்றுக் கொள்ள லெப்டிணன் ஜெனரல் பலகல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவ்வாறானதொரு நெருங்கிய உறவைப் பேணிய ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனராலான காமினி ஜயசுந்தரவை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தரவும் இந்தப் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். இத…
-
- 3 replies
- 1.6k views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல்களின் விளைவு அண்மைக் காலங்களில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பல்வேறுபட்ட கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை அரசு கட்டுப்படுத்த தவறிவிடுகின்றது என்ற வகையில் அமைந்திருந்த கண்டனங்கள் இப்போது அரசு - அரசபடைகளுமே மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றன என்று மாற்றம் பெருமளவுக்கு உலகம் உண்மையை உணர ஆரம்பித்துவிட்டது. இதன் பிரதிபலிப்பாக இன்று இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பிலிருந்து வெளியேற்றப்படக்கூடிய ஒரு சூழல் தோன்றியிருக்கிறது. இவ்வமைப்பில் உள்ள 37 நாடுகள் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இவ்விடயத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம…
-
- 0 replies
- 956 views
-
-
போராளிக் குழுக்களின் மோதலுக்கு இந்திய அரசே காரணம் உண்மைகளை மறைக்க முயல வேண்டாம் முதல்வருக்கு வேண்டுகோள் - பழ. நெடுமாறன் தமிழக சட்டமன்றத்தில் இலங்கை இனப் பிரச்னை குறித்து பா. ம. க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசும் போது முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார். ‘போராளிகளுடைய முக்கிய குறிக்கோளே போராளிகளுக்குள் போராடுவது என இந்தப் போராளி களுக்குள்ளே நடந்த போராட்டம்தான் இன்றைக்கு நாம் இந்த அவையிலேயே அவர்களுக்காகப் பரிந்துரை பேச வேண்டிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தான் இடைக்காலத்திலே நான் விடுதலைப் போராளிகளுக்குச் சொன்ன அறிவுரை சகோதர யுத்தத்தை நிறுத…
-
- 4 replies
- 1.8k views
-
-
புலிகளைப் பலவீனப் படுத்தினால் அது வரலாற்றுத் தவறாகி விடும்! - இலங்கை தமிழ் எம்.பி செல்வம் அடைக்கலநாதன் பேட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒன்றே முக்கால் மணி அளவில் புலிகளின் வான்படைப்பிரிவின் இரண்டு விமானங்கள் பறந்து சென்று, இலங்கை ராணுவ முகாம் இருந்த மணலாற்றுப்பகுதியில் குண்டு வீச்சு நடத்தி விட்டுத் திரும்பியுள்ளன. இந்தச் சூழலில், புலிகளின் தலைமையகமும் பிரபாகரனின் இருப்பிடமும் கொண்ட வன்னித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் சென்னை வந்திருந்தார். இவர் சிறீ சபாரத்தினத்தின் ‘டெலோ’ இயக்க ராணுவத் தளபதியாக இருந்தவர். சிறீ சபாரத்தினத்தின் மறைவுக்குப் பிறகு இப்போது டெலோ இயக்கத் தலைவர் பொறுப்பை வகிப்பதோடு வன்னித் தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார். அவரைச…
-
- 1 reply
- 1.5k views
-
-
மனித நேய மகுடங்கள்! - சோலை மனிதநேயத்தின் கொடுமுடியாக அன்னை சோனியா காந்தி உயர்ந்து நிற்கிறார். பழிவாங்கும் உணர்வு, கோபம், குரோதம் ஆகியவை இடம் பிடிக்க முடியாத இதயம் படைத்தவர். கையகல அதிகாரம் வந்தாலே குதியோ குதியென்று குதிப்பவர்களைப் பார்க்கிறோம். வேலூர் சிறையில் அடைபட்டிருக்கும் நளினியை சோனியாவின் புதல்வி பிரியங்கா சந்தித்தார். அந்தப் பெண்ணிற்கு ஆறுதல் கூறினார். நளினி ஏன் அந்தச் சிறையில் தவம் செய்கிறார்? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர். குற்றம் சாட்டப்பட்ட 25 பேரும் குற்றவாளிகள் என்றும் தூக்குதான் அவர்களுக்கு தண்டனை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நளினிக்கும் தூக்கு தண்டனைதான். அவர் சிறை செல்லும்போதே தாய்மை எய்திய அன்னை. …
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் - அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை வீரகேசரி இணையம் 5/5/2008 11:47:01 PM - விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட இராணுவ தளபாடங்கள் கிடைப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என அராசங்கம் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாயுதங்களைக் கொண்டு விடுதலைப்புலிகள் அரசாங்கத்திற்கு எதிராகவும், சிவிலியன்களுக்கு எதிராகவும் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக சிறிய ஆயுதங்கள் தொடர்பான ஐ.நா.வின் கூட்டத்தில் ஐ.நாவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளையும் தாக்குதல்களையும் கட்டுப்படுத்த வேண்டுமானல் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்கள…
-
- 6 replies
- 2.3k views
-
-
இலங்கையில் புத்த தர்மம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.7k views
-
-
கொழும்பிலுள்ள தமிழர்கள் எதிர்காலத்தில் வெளியேற்றப்பட மாட்டார்கள்-சட்டமா அதிபர் உறுதியளிப்பு Monday, 05 May 2008 கொழும்பிலுள்ள தமிழர்கள் எதிர்காலத்தில் பலவந்தமாக கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்திருக்கின்றார். காவல்துறை மா அதிகர் மற்றும் அரசாங்கத்தின் சார்பிலேயே சட்டமா அதிபர் இந்த உறுதி மொழியை இன்று உயர் நீதிமன்றத்தில் வழங்கினார். கொழும்பிலுள்ள விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்கள் ஆயுதப் படையினராலும், காவல்துறையினராலும் கைது செய்யப்பட்டு பலவந்தமாக வவுனியாவுக்கு அனுப்பப்பட்டமைக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தாக்கல் செய்திருந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப…
-
- 2 replies
- 1.2k views
-
-
விபரங்கள் பதியப்படாத வாக்காளர் அட்டைகள் மூலம் மோசடிக்கு முயற்சி - அரசின் மீது ஐ.தே.க. குற்றச்சாட்டு வீரகேசரி இணையம் 5/5/2008 10:32:51 PM - விபரங்கள் எதுவும் பதியப்படாத பல இலட்சம் வாக்காளர் அட்டைகள் பாதுகாப்பு அமைச்சின் மூலம் கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி கள்ள வாக்குகளைப்போட்டு கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் வெற்றி பெற அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளோம். இது தொடர்பாக விசாரணை நடத்தி நியாயமான தேர்தலை அவர் நடத்துவார் என நம்புகின்றோம் என்றும் அவர் கூறினார். கொழும்பிலுள்ள எதிர்…
-
- 0 replies
- 519 views
-
-
ஜெயந்தன் படையணியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று மட்டக்களப்பு மாவட்ட சிறப்புத் தளபதி கீர்த்தி விளக்கமளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
நெருக்கடியான சூழலில் குடும்பநல பணியாளர்கள் ஆற்றும் பங்கு பாராட்டுக்குரியது என்று கிளிநொச்சிப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 538 views
-
-
உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து பெண் ஒருவர் மீது பாலியல் பலாத்காரம் மேற்கொண்டதாக ரத்தொட்டை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போதைப் பொருள் பாவனை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒரு பெண் மீது பாலியல் பலாத்காரம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த போதும், அப்போதைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை எனத் தெரியவருகிறது. தற்போது பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி மெகாதி பெரேராவிடம் முறைப்பாடு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரக்கோன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1k views
-
-
தவறுக்கு மேல் தவறு செய்யும் இந்திய அரசை மனவேதனையோடு குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 787 views
-
-
ரணில் பயணித்த ஹெலி அவசர தரையிறக்கம்! வீரகேசரி இணையம் 5/5/2008 6:04:37 PM - கிழக்கில் இருந்து எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் புறப்பட்ட உலங்குவானூர்தி இயந்திர கோளாறு காரணமாக மஹியங்கன பகுதியில் சற்று நேரத்துக்கு முன்னர் தரை இறக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 2 replies
- 1.2k views
-