ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
சிங்களப் படையைச் சேர்ந்த 53 விழுக்காட்டினருக்கு இந்தியா அளித்து வரும் பயிற்சியை 75 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று இந்தியாவின் புதுடில்லிக்கு அண்மையில் சென்றிருந்த சிறிலங்கா இராணுவதளபதி சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 642 views
-
-
இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி தெரிவிப்பு இலங்கை கடற்பகுதியில் வைத்து தமிழக மீனவர்கள் சுடப்படுவதை தம்மால் தடுத்து நிறுத்த முடியாதெனத் தெரிவித்துள்ள இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி வைஷ் அட்மிரல் ராமன் பிரேம் சுதன், இந்தியக் கடற்பகுதியில் விடுதலைப் புலிகளின் எவ்விதமான நடமாட்டங்களும் இல்லையெனவும் கூறினார். பாக்கு நீரிணை, பாக்.வளை குடா மற்றும் மன்னார் வளை குடாவையொட்டியுள்ள சர்வதேச கடல் எல்லைகளை சென்று பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறிய கிழக்கு பிராந்திய தளபதி மேலும் கூறியதாவது, இந்திய கடல்பகுதியில் தமிழக மீனவர்கள் எவர்மீதும் துப்பாக்கிச் சூடுகள் நடந்ததில்லை. ஆனால் தமிழக மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பகுதிக்குள் செல்ல…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்த நேரத்தில் தமிழக அரசு விழித்துக் கொள்ள வேண்டும். உறக்கத்தைக் கலைக்க வேண்டும். இலங்கை பிரச்னையை தீர்க்க இதுதான் சரியான தருணம். கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது. தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஈழத் தமிழர்கள் நலன் காக்கக் கோரியும், இலங்கைக்கு இந்திய அரசு ராணுவ உதவிகளை செய்யக் கூடாது என்று வலியுறுத்தியும தொடர்ந்து வாசிக்க........... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_3854.html
-
- 0 replies
- 1.1k views
-
-
டெய்லி மிரா ஊடகருக்கு கொலை மிரட்டல் இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து வௌிவரும் ஆங்கில ஏடான டெய்லி மிரரின் அம்பாறை பொத்துவில் முகமட'-யக்கவருக்கு அநாமோதைய தொலை பேசி அழைப்பில் கொலை மிரட்டல் விடப்பட்டிருக்கிறது. மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1639#1639
-
- 0 replies
- 922 views
-
-
பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று மாத சிறை தண்டனை பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதன் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று................... தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/03/blog-post_1568.html
-
- 2 replies
- 1.4k views
-
-
கிழக்கைப் போன்று வடக்கிலும் செய்வோம் என்ற தவறான நினைப்புததான் அரசுக்குப் பாரிய அரசியல் இராஜதந்திர, பொருளாதார, படைத் துறை அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரையன், படையினர் நாளை மடுவைப் பிடித்தால் மறுநாள் நாம் மதவாச்சில் நிற்போம் இது ஒரு சுழற்சியாக நடைபெறும் விடயமெனவும் கூறியுள்ளார். வன்னிப் போர் அரங்கின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்திருக்கும் இளந்திரையன் மேலும் கூறியதாவது : '15.03.2007 வடபகுதியை நோக்கி வன்னிப் பெருநிலப்பரப்பிலே இராணுவத்தினர் ஆரம்பித்த படை நடவடிக்கை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மன்னாரின் பல பகுதிக…
-
- 12 replies
- 2.1k views
-
-
Posted on : 2008-03-28 இராணுவ வெற்றி இலக்கு என்ற கானல் நீரை நோக்கிய ஓட்டம் ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை இலங்கையின் முதன்மையான பிணக்காக முனைப்புற்று, தீவிரமடைந்து நிற்கின்றது. தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காத வரை அவர்களது நியாயமான அபிலாஷைகள் நிறைவேறாத வரை இத்தீவில் சமாதானமும், ஒத்திசைவும், நல்லிணக்கமும், பொருளாதார மேம்பாடும், அமைதியான வாழ்வும் சாத்தியமேயில்லை என்பதை சம்பந்தப்பட்ட தரப்புகள் உணரவேண்டும். சிங்களப் பேரினவாத மேலாதிக்கத் திமிருடைய அரசியல்வாதிகளினதும், அவர்களை ஒட்டி நிற்கும் அதிகார வர்க்கத்தினதும் இனவாத அடக்குமுறைக் கொள்கைப் போக்குக் காரணமாகவே தமிழ், சிங்கள மக்கள் இடையே முரண்பாடு முற்றும் அவல நிலைமை ஏற்பட்டிருக்கின்றது; அது கொடூரப் போராக வெடிக…
-
- 0 replies
- 1k views
-
-
இந்திய உதவி கேட்டுத் தூது சிங்களத் தளபதி வருகை மர்மம் சிங்கள இராணுவத்தின் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் டில்லி வந்தபோது அவருக்கு இந்திய அரசு இரத்தின கம்பளம் விரித்து வரவேற்று உள்ளது. உதகையில் உள்ள இந்திய இராணுவ பயிற்சிக் கல்லூரியில் சிங்கள இராணுவத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் 6 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட அப்பாவி தமிழர்கள் பலர் நாள்தோறும் சிங்கள இராணுவத் தினராலும் இராணுவக் கைக்கூலிகளாலும் படுகொலை செய்யப்படுகிறார்கள். நாள்தோறும் தமிழர்கள் வாழும் இடங்களை நோக்கி விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்படுகின்றன. உலக நாடுகளின் கண்டனங்களை கொஞ்சமும் பொருட்ப…
-
- 2 replies
- 2k views
-
-
13வது அரசிலமைப்புத் திருத்தத்தை இரத்து செய்ய வேண்டுமென ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத்தலைவனும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளருமான விம்ல் வீரவன்சா தெரிவித்தார். அத்துடன், சேர்பியாவிலிருந்து கொசோவோ பிரிந்து செல்வததற்கு முன்னர் அதை அண்மித்த காலங்களில் கொசோவோவில் இருந்த நிலைமையே இன்று இலங்கையிலும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும் : 13வது அரசியலமைப்பு திருத்தம் என்பது இந்தியாவினால் அன்றைய ஜே.ஆர். அரசின் மீது பலவந்தமாக திணிக்கபட்டதொன்றாகும். அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால், அதையே இன்று முற்று முழுதாக அமுல்படுத்தப் போவதாக அரசாங்கம் கூறுகிறது. எனவே, 13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல…
-
- 2 replies
- 1.2k views
-
-
இன்னொரு பேச்சை தீர்மானிக்கப் போவது வடபோர் முனையா? வீரகேசரி இணையம் 3/27/2008 3:19:27 PM - இலங்கையின் வட பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினரிற்கும் இடையில் இப்போது கடும் சண்டை இடம்பெற்று வருகிறது. இரு தசாப்தகால யுத்தம் இப்போது வடபோர் முனையில் மையம் கொண்டுள்ளது.இது மீண்டும் கிழக்குக்கு நகருமா? வட போர்முனை இரு தரப்புக்கும் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது. கடந்த 2007 ஆரம்பத்தில் வடப்பகுதியில் வன்னியை மீட்கும் நோக்கோடு அரசப்படைகளால் ஆரம்பிக்கப்பட்ட படைநடவடிக்கைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறன. வன்னியை மீட்கும் குறிக்கொளோடு மேற்கொள்ளப்பட்டு வரும் படை மேற்கொள்ளல்கள் , வட பகுதியின் பல முனைகள் ஊடாக இடம்பெற்றுவருகின்றன. யாழ்பாணத்தில் கிளாலி,முகம…
-
- 2 replies
- 1.9k views
-
-
கடந்த இருதினங்களில் மணலாறில் 15 படையினர் பலி – விடுதலைப்புலிகள் வியாழக்கிழமை விடுதலைப்புலிகளின் கட்டளை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி மணலாற்றுப்பகுதியில் கடந்த இருநாட்களில் இருஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை மதியம் 1.15 மணியளவில் சிலோன் தியேட்டர் பகுதியில் இருமணிநேரம் முறியடிப்பு தாக்குதல் நிகழ்ந்ததாகவும் இதில் 5 படையினர் கொல்லப்பட்டதாகவும் ஒருபடையினரது உடலம் கைப்பற்றப்பட்டதாகவும் தெரியவருகிறது. இதேபோன்று கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும தெரியவருகிறது. இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் ஒரு ரி-56 ரக துப்பாக்கி, 18 மகசீன், 4000 ரவைகள், ந…
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழர்களை அவமானப்படுத்தும் வகையில் சிங்களப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம. நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
திபெத் நெருக்கடி தொடர்பாக ஐ.நா.மனித உரிமைப் பேரவை தீர்வு காண வேண்டும் என மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் வலியுறுத்தியிருக்கும் அதே வேளை, ஐ.நா.வில் இது தொடர்பாக விவாதிப்பதை இலங்கை, அல்ஜீரியாக, கியூபா, பாகிஸ்தான், சிம்பாப்வேயின் ஆதரவுடன் சீனா தடுத்து விட்டது. திபெத்தில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை குறித்து உலகின் கவனம் திரும்பியுள்து. ஆகஸ்டில் ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் இடம் பெறவுள்ளதால் திபெத் கிளர்ச்சி தொடர்பாக சீனா எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்பதை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது. அஞ்ஞாத வாசமிருக்கும் திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா ஜனாபதி புஷ் சீனா ஜனாதிபதி ஹஜிந்தாவோவை கேட்…
-
- 0 replies
- 846 views
-
-
பிரபாகரன் திரைப்பட இயக்குனரது பிசுபிசுத்துப் போன ஸ்டண்ட்! Thursday, 27 March 2008 பிரபாகரன் இயக்குனர் துஸார பீரிஸ் சிறீலங்காவின் தொலைக் காட்சி தொடர்களை தயாரித்தவர் என்றும் ஏனையோர் இயக்கிய தொலைக் காட்சித் தொடர்களுக்கு பணம் கொடுத்து தன் பெயரை வைத்து வெளியிட்டவர் என்றும் பலரது பணத்தை சூறையாடி விட்டு இத்தாலிக்கு ஓடிவர் என்றும் சிறீலங்காவில் உள்ள திரைப்படத் துறையினர் தெரிவிக்கின்றனர் மேலதிக விபரங்களுக்கு........ http://www.ajeevan.ch/content/view/1405/12/
-
- 0 replies
- 2.6k views
-
-
தமிழ்ப் பெண்ணை மணம் முடித்த முஸ்லிம் வாலிபர் கொழும்பில் கைது கொழும்பு குணசிங்கபுரத்தைச் சேர்ந்தவரும் தமிழ்ப் பெண்ணை திருமணம் முடித்தவருமான முஸ்லிம் வாலிபர் ஒருவரை வெள்ளை வானில் வந்த சிவில் உடைக்காரர்களும் அதிரடிப்படை உடை அணிந்த ஒருவரும் கைவிலங்கிட்டு அழைத்துச்சென்றனர் எனவும் அவரைப்பற்றி தகவல் அறியமுடியாமல் இருக்கிறது எனவும், அவரது மனைவி வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்பப் பயிற்சி பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணனிடமும், மனித உரிமைகள் ஆணைக்குழு, கெசல்வத்தை பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடுகள் செய்துள்ளார். இவ்வாறு பிரதியமைச்சரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு: கொழும்பு குணச…
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதத்திற்கு எதிராக இராணுவத்தினருடன் இணைந்து பிள்iளாயன் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதனால் அவர்களின் ஆயுதங்கள் களையப்படுவது நியாயமற்ற செயல் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பிள்ளையான் குழுவிடமிருந்து ஆயுதங்களை களைவது அவர்களை புலிகளுக்கு பலிகொடுக்கும் செயல் எனவும், இது மிகவும் அநீதியான செயல் எனவும் தேசப்பற்றுடைய அமைப்பின் பொதுச் செயலாளர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பு நூலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் (மார்ச் 26) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். பிள்ளையான் குழுவினருக்கு தமிழீழ விடுதலைப் புலிக…
-
- 1 reply
- 1.8k views
-
-
வவுனியாவில் துப்பாக்கிச் சூடு: 3 பொதுமக்கள் பலி! 3 பேர் படுகாயம்: 5 பேர் கைது வவுனியா ஓமந்தைப் பகுதியில் சிறீலங்காப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மூன்று பொதுமக்கள் உயிரிழந்ததோடு, மூன்று பேர் படுகாமடைந்துள்ளனர். அத்துடன் 5 பேரை சிறீலங்காப் படையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் சிறீலங்காப் படையினர் தெரிவிக்கும் போது, இவர்கள் அனைவரும் நீர்கொழும்பைச் சேர்ந்த சிங்களவர்கள். கொல்லப்பட்ட இருவர் சிங்களவர், மற்றவர் தமிழர், கைது செய்யப்பட்ட ஏனையவர்கள் சிங்களவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் வன்னி முரசுமோட்டைப் பகுதியில் இருந்ததாகவும் இவர்கள் அங்கிருந்து வவுனியாவுக்கு திரும்பும்போது மோதல்கள் நடைபெறு…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான மாநாடு எகிப்தில்- அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம பங்கேற்கவுள்ளார் வீரகேசரி இணையம் 3/27/2008 1:53:11 PM - ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான இரண்டாவது மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கலந்துகொள்ளவுள்ளதாக அவ்வமைச்சு அறிவித்துள்ளது. இந்த மாநாடு ஏப்ரல் மாதம் 5 ஆம் 6 ஆம் திகதிகளில் எகிப்தில் நடைபெறவுள்ளது. இதன் முதலாவது மாநாடு 2005 ஆம் ஆண்டு சிங்கபூரில் நடைபெற்றது. ஆசிய மற்றும் மத்திய கிழக்கு வலய நாடுகளுக்கிடையில் கூட்டுறவை மேம்படுத்துவது இந்த மாநாட்டின் பிரதான நோக்கமாகும். இராஜதந்திர மட்டத்தில் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக நிதியைப் பெற்றுக்கொள்வதே இந்த மாநாட்டில் இலங்கை கலந்துகொள்வதற்கான பிரதான நோக்கமாகு…
-
- 0 replies
- 670 views
-
-
தமிழ் மக்கள் மீது இனவாத தீர்வினை திணிப்பதற்கான புதிய அரசியல் கூட்டணி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள பிரித்தானிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லியாம் பொக்ஸ் இன்று எதிர்கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசியுள்ளார். கலாநிதி லியாம் பொக்ஸ் தற்போதைய பிரித்தானிய அரசாங்கத்தின் நிழல் பாதுகாப்பு அமைச்சர் என்று விமர்சிக்கபடுகின்றார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் 1997ம் ஆண்டு ஆளும் தரப்பிற்கும் எதிர்கட்சிக்கும் இடையில் லியாம் பொகஸ் எனப் பெயரிடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவரான லியாம் பொக்ஸ் அந்த உடன்படிகைக்கு புத்துயிர் அளிப்பதற்கான முயற்ச்சிகளில் ஈடுபடுவார் என தெரியவந்துள்ளது. …
-
- 0 replies
- 972 views
-
-
மன்னாரில் விடுதலைப் புலிகளின் பொறிவெடிகளில் சிக்கி நான்கு படையினர் பலி எண்மர் படுகாயம் [ த.இன்பன் ] - [ மார்ச் 27, 2008 - 08:07 AM - GMT ] மன்னார் களமுனையில் நேற்று புதன்கிழமை விடுதலைப் புலிகளின் பொறிவெடிகளில் சிக்கி நான்கு படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் எண்மர் படுகாயமடைந்துள்ளனர். சுலனமருதமடு அடம்பன் மற்றும் கோயில்மோட்டை ஆகிய பகுதிகளில் விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்ட மிதிவெடிகள் மற்றும் பொறிவெடிகளை அகற்றிக் கொண்டிருந்த வேளை ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு படையினர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் எண்மர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் அனுராதபுர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பினால் மேலும் தெரிவிக்கப்பட்ட…
-
- 1 reply
- 946 views
-
-
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் சிங்கள மொழித் திரைப்படமான "பிரபாகரன்" திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட சிறிலங்கா துணைத் தூதரகம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக தெரிகிறது. "பிரபாகரன்" என்ற பெயரில் சிறிலங்காவில் சிங்கள மொழியில் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அப்படத்தை தமிழ்நாட்டில் தமிழில் வெளியிடும் முயற்சிகளை சிங்கள இயக்குநர் மேற்கொண்டிருந்தார். இதற்கு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த இயக்குநர் சீமான்இ திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வன்னியரசுஇ ஆர்வலன் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். சிங்கள இயக்குநர் கடும் காயங்களு…
-
- 1 reply
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பற்றிய சர்ச்சைக்குரிய படம் எடுத்த சிங்கள டைரக்டருக்கு அடி, உதை விழுந்தது. தொடர்ந்து வாசிக்க http://isoorya.blogspot.com/2008/03/blog-post_6122.html
-
- 30 replies
- 4.4k views
-
-
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட தனி அலகு ஒன்றை உருவாக்குதல். இத்தகைய அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றுக்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் கடந்த திங்களன்று இணக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தற்போதைய கூட்டத் தொடருக்குச் சமுகம் தரும் சகல கட்சிகளின் பிரதிநிதிகளுமே இத்தகைய யோசனைக்குப் பூரண ஆதரவை வழங்கியிருக்கின்றனர் என்று கூறப்படுகின்றது. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டங்களைப் பிரதான எதிர்க்கட்சிகளான ஐ.தே.கட்சியும், ஜே.வி.பியும் ஏற்கனவே பகிஷ்கரித்து வருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறும் கட்சிகள் இந்தக் கட்டமைப்புக்கு அழைக்கப்படவேயில்லை. ஆகஇ ஸ்ரீலங்கா முஸ்லிம்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் மனித உரிமை நிலைவரம் மிகமோசம் -பிரிட்டன் 27.03.2008 / நிருபர் வானதி உலக நாடுகளில் 2007ஆம் ஆண்டில் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தனது வருடாந்த அறிக்கையை நேற்றுமுன்தினம் வெளியிட்டிருக்கும் பிரிட்டன், அதில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்ந்தும் மிக மோசமாக உள்ளதாகத் தெரிவித்திருக்கின்றது. எனினும், உலகில் மனித உரிமைகள் நிலைவரம் கவலைக்குரிய கட்டத்தை அடைந்திருப்பதாகத் தெரிவித்து பிரிட்டன் பட்டியலிட்ட இருபத்தியொரு நாடுகளில் இலங்கையின் பெயர் இல்லை. பிரிட்டிஷ் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சு விடுத்துள்ள மிக நீண்ட அந்த அறிக்கையில் இலங்கை தொடர்பாகக் கூறப்பட்டுள்ள சில அம்சங்கள் வருமாறு: இலங்கையின் மனித உரிமை நிலைவரம் மிக மோசமாகவுள்ளது. …
-
- 2 replies
- 1.2k views
-
-
ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் சிங்களத் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எச்சரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 821 views
-