ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142838 topics in this forum
-
பல்வேறு ஊடக அடக்குமுறைகள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அமைச்சர் நேற்றைய தினம் (மார்ச் 20) சிரச ஊடக நிறுவனத்திற்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார். தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபன செய்திப் பணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொண்டமை, அதன் பின்னர் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் நான்கு ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் சில ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட பல ஊடக அடக்குமுறைச் சம்பவங்கள் தொடர்பாக அமைச்சர் மேர்வின் சில்வா மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. “இன்று நான் விரல் நீட்டிக் கதைக்கிறேன், ஆனால் நாளையோ எனது கைகள்தான் நீளும்” என்று சிரச ஊடக நிறுவனத்திற்கு பகிரங்கமாக மேர்வின் சில்வா அச்சுறுத்தல் விடுத்துள்ளார். மேலும், …
-
- 0 replies
- 1.4k views
-
-
நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதையிட்டு ஆராய்வதற்காக இன்று கூடிய தமிழ்க் கூட்டமைப்பின் உயர் பீடம் இது தொடர்பில் எவ்விதமான முடிவையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயத்தில் திட்டவட்டமான ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாதளவுக்கு கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கிடையே முரண்பாடுகள் காணப்பட்டதாகவும், அதனால் கூட்டம் நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்மாத முற்பகுதியில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்க் கூட்டமைப்பு பகிஷ்கரித்தபோதிலும், கிழக்கு மாகாண சபைக்கு எதிர்வரும் மே மாதத்தில…
-
- 5 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவியைக் கண்டித்து தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியத் தமிழர்கள் நேற்று வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 961 views
-
-
இலங்கைக்கு கடத்த முற்பட்ட தைக்கப்பட்ட ஆடைகள் பறிமுதல் 3/20/2008 10:32:25 PM வீரகேசரி இணையம் - இலங்கைக்கு கடத்த முயற்சித்த தைக்கப்பட்ட ஆடைகளை இராமேஸ்வரம் கடற்கரையில் வைத்து கடலோரக் காவல் பொலிஸார் பறிமுதல் செய்தனர். இராமேஸ்வரம் கடற்கரையில் ரோந்து சென்ற கடலோர காவல் பொலிஸாரிடம் படகு உரிமையாளர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது ரூபா 20 ஆயிரம் மதிப்புள்ள ரெடிமேட் துணிகள் மற்றும் 15 ஆயிரம் ரூபா ரொக்கப்பணம் என்பவற்றைக் கைப்பற்றினர். மேலும் விசாரøணயில் காஞ்சிபுரம் அகதிகள் முகாமில் வசிக்கும் ரெஜி, இலங்கைக்கு ஜவுளி பொருட்களை கொண்டு செல்ல கொடுத்ததாக படகோட்டி ராஜா என்பவர் கூறினார். இவர்களை விசாரணை செய்துவரும் பொலிஸார் இலங்கை அகதி ர…
-
- 2 replies
- 1.5k views
-
-
மேமாதம் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மஹி;ந்தவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிள்ளiயான் குழு, மற்றும் ஹெல உறுமயவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. சுதந்திர கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான குழு கூட்டதிற்கு முன்னதாக நடைபெற்ற சந்திப்பிலேயே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அதற்கு ஹெல உறுமையவும், பிள்ளையான் குழுவும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எதிர்வரும் 25ம் திகதி செவ்வாயன்று தீர்மானிக்கவுள்ளது. எனினும் சு.க வின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தெரிவு செய்வதாற்கான நடவடிக்…
-
- 1 reply
- 1.4k views
-
-
எண்ணக்கரு & ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 0 replies
- 1.4k views
-
-
கடந்த 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் சிங்களக் கடற்படையை கண்டிக்காத- தடுத்து நிறுத்தாத இந்திய அரசை எதிர்த்து முதல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ஓகஸ்ட் 13-இல் "கண்டன நாள்" கடைபிடிக்க தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 580 views
-
-
தபால் அதிபரைத் தாக்கி நகைகள் கொள்ளை -யாழில் சம்பவம். 21.03.2008 / நிருபர் வானதி வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களால் யாழ்.பிரதம தபாலகத்தைச் சேர்ந்த தபால் அதிபர்களில் ஒருவர் தாக்கப்பட்டார். கொக்குவில், மந்தியப்புலத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் கோபாலகிருஷ்ணன் (வயது 56) என்பவரே தாக்கப்பட்டவராவார். நேற்று இரவு 8.30 மணியளவில் அவரது வீட்டுக் கதவைத் தட்டிய சில இனந்தெரியாத நபர்கள், தபாலதிபர் கதவை திறந்ததும் உள்ளே சென்று அவரை தலையில் பொல்லால் (கொட்டனால்) தாக்கியுள்ளனர். மண்டையில் படுகாயமுற்ற தபாலதிபர் மயக்கமுற்று வீழ்ந்தார். அவர் அணிந்திருந்த நகைகளை பிடுங்கிக் கொண்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். தபாலதிபர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசா…
-
- 0 replies
- 789 views
-
-
இலங்கைத் தமிழர் விருப்பத்தை நிறைவேற்றும் பொறுப்பும் அதிகாரமும் மத்திய அரசிடம்தான் உள்ளது என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழ் தேசியத்தை சிதைக்கும் ஆரியக் கருத்துக்களுக்கு எதிராக இலங்கை மண் போன் நூல்களை படைக்க வேண்டும் என்று அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள் விடுத்த அறைகூவலை ஏற்போம் என்று புலம்பெயர்ந்து வாழும் புரட்சிகர சிந்தனை உள்ள இளைஞர்கள் உறுதி கூறி உள்ளார்கள். தமிழர்களின் பண்பாட்டை அழித்து இந்து மதத்தின் பெயரில் ஆரியர்கள் திணித்துள்ள பொய்களை அம்பலப்படுத்தும் பணிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையுள்ள புலம்பெயர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களுடைய குரலை அடக்குவதற்கு சில மதவெறியர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் தேசியத் தலைவர் அவர்களும், அரசியற்துறைப் பொறுப்பாளரும் தெரிவித்துள்ள கருத்துக்கள் தமக்கு உற்சாகத்தை ஊட்டுவதாக உள்ளன என்று இந்த…
-
- 65 replies
- 7.7k views
-
-
அம்பாறையில் தாக்குதல் அதிரடிப்படை வீரர் பலி அம்பாறை மாவட்டத்தின் இரு வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் போது விசேட அதிரடிப் படை வீரர் ஒருவர் பலியானதுடன் மேலும் ஒரு அதிரடிப்படை வீரர் காயமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் பாதுகாப்புக் கடமை நிமித்தம் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விசேட அதிரடிப்படை அணியொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் அதிரடிப்படை வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தின் ஊடாக விசேட அதிரடிப்படை அணியொன்று படை நகர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் க…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை மேற்குலக நாடுகள் எடுக்க வேண்டியது அவசியம் - மனோ எம்.பி. வலியுறுத்தல் 3/20/2008 8:06:19 PM வீரகேசரி இணையம் - இலங்கை விவகாரத்தில் வெறும் அறிக்கைகளை மட்டும் விடாது உறுதியான தீர்மானமொன்றினை மேற்குலக நாடுகள் எடுக்க வேண்டும். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இத்தகைய நிலை தொடருவதற்கு மேற்குலக நாடுகள் அனுமதிக்கக் கூடாது என்று கனடாவின் தெற்காசிய பிரிவுக்கு பொறுப்பான பணிப்பாளர் ஜிம் நிக்கலிடம் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பிலுள்ள கனேடிய தூதரகத்தில் இன்று முற்பகல் ஜிம் நிக்கிலை மனோ கணேசன் எம்.பி சந்தித்து பேசினார். இச்சந்திப…
-
- 0 replies
- 879 views
-
-
சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த வெளிநாட்டு நாணயத்தாள்கள் மீட்பு 7 கோடி ரூபா பெருமதியானது என பொலிஸார் தகவல் 3/20/2008 10:56:20 PM வீரகேசரி இணையம் - இலங்கையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சட்ட விரோதமாக கடத்தப்படவிருந்த சுமார் 6 கோடியே 98 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணய தாள்களை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மோட்டார் வாகனங்களுக்கு பொறுத்தக்கூடிய மூன்று சிலிண்டர்களுக்குள் மறைத்து வைத்து கடத்தப்படவிருந்த நாணயத்தாள்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்தின்பேரில் இருவர் கைதுசெய்துள்ளதாகவும் விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது: சிலின்டர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேற்…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழக மீனவர்களை சிறிலங்கா அரசாங்கம் சிறிலங்கா கடற்பரப்பில்தான் படுகொலை செய்கிறது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருந்த கருத்தை தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ நிராகரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
சீன அரசு இலங்கைக்கு வழங்கும் உதவிகள் தமிழ் மக்களுக்கு எதிரானவையல்ல. இலங்கையர் அனைவரையும் நாம் எமது நண்பர்களாகக் கருதகின்றோம். இலங்கையர் என்றால் அது சிங்களவா, தமிழர், முஸ்லிம்கள் என நாம் புரிந்து கொண்டிருக்கின்றோம். ஒரு குறிப்பிட்ட இனத்தையும், அரசியல் கட்சியையும் திருப்திப்படுத்தும் விதத்தில் நாம் இலங்கை அரசிற்கு உதவிகள் வழங்கவில்லை. இலங்கைக்கு பாரிய இராணுவச உதவிகளை சீனா வழங்குகின்றது என்பது தவறான தகவலாகும். தயவு செய்து மக்களிடம் இதை எடுத்துக் கூறுங்கள் என்று இலங்கைக்கான சீன தூதுவர் தபோயோ, மே.ம.முன்னணித் தலைவரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் எம்.பியிடம் தெரிவித்தார். நேற்று மாலை சீனத் தூதரகத்தில் மனோ எம்.பியுடன் கலந்துரையாடிய சீனத் தூதுதர் …
-
- 11 replies
- 4.2k views
-
-
-------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 1 reply
- 1.1k views
-
-
பாடசாலைகளின் வளப்பற்றாக்குறையைப் போக்க தேசியத்தலைவர் அதிக ஆர்வம் காட்டுகிறார். 20.03.2008 / நிருபர் எல்லாளன் வளப்பற்றாக் குறைகளுடன் இயங்கும் எமது பகுதிப் பாடசாலைகளின் தேவைகளை இனம்கண்டு அவற்றை நிவர்த்திசெய்யவேண்டும் என்பதில் எமது தேசியத்தலைவர் அவர்கள் உறுதியுடன் செயற்பட்டு வருகிறார் என தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலயத்திற்கான புதிய விளையாட்டு மைதானத்தை திறந்துவைத்து உரையாற்றிய அவர் அங்குமேலும் தெரிவிக்கையில். இந்த மைதானத்தை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திப்பயனடையவேண்டும
-
- 0 replies
- 1.1k views
-
-
கடந்த 17ம் திகதி முதல் இலங்கையின் தேசிய தொலைக் காட்சியின் செயல்பாட்டு மையம் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் தற்காலீகமாக கொண்டு வரப்பட்டிருந்தது. இன்று முதல் தேசிய தொலைக் காட்சி, முழுமையாகவே இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதன் தலைமைத்துவத்தை ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியொருவரான மேஜர் ஜெனரல் சுனில் சில்வா அவர்கள் பொறுப்பேற்கவிருக்கிறார். பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபய ராஜபக்ஸ அவர்களது விருப்பத்தின் பேரில் இவரது பதவி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. - http://www.ajeevan.ch/
-
- 6 replies
- 1.6k views
-
-
இலங்கை தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை மாற்றப்பட வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியச் செயலாளரும் தமிழ்நாட்டிலிருந்து தெரிவு செய்யப்பட்டவருமான டி.ராஜா வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1k views
-
-
ஈகச்சுடர் அன்னை பூபதியின் 20 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நேற்று உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 751 views
-
-
இந்தியாவின் ஒருமைப்பாடும் - ஈழத்தமிழர் தாகமும் சாதாரணமாக உலகம் என்று நாம்கூறிக்கொண்டாலும் இந்த உலக இயக்கம் மேற்கத்தய நாடுகள் என நாம் அழைக்கும் ஒரு சில நாடுகளாலேயே தங்கியிருக்கின்றது அதாவது இவையே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன அல்லது இயக்குகின்றன நாம் இதை ஏற்றுக்கொள்ளலாம் ஏற்காமல் மல்லுக்கட்டி உடைந்து போகலாம் உண்மை இதுதான் அதன்படி இந்த நாடுகள் சில குறிக்கோளைக்கொண்டவை அது இவர்களின் சுயநலம் சார்ந்ததாகும் அதன்படிதான் தீர்மானங்கள் எடுக்கப்படும் நடைமுறைப்படுத்தப்படும் இதில் முகம் பார்க்கப்படமாட்டாது எதிரி நண்பன் துரோகி..........எதுவுமே பார்க்கப்படமாட்டாது இவை தேவைக்கேற்றபடி மாற்றங்காணும்??? இதற்கு இறுதி …
-
- 11 replies
- 2.4k views
-
-
இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைதான் தீர்வு என்று கூறிக்கொண்டே சிறிலங்கா இராணுவத்துக்கு இந்திய அரசாங்கம் போர்ப் பயிற்சி அளிப்பதற்கு தமிழ்நாட்டின் திராவிடர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 884 views
-
-
இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்திற்கு அடித்தளமிடும் சீனா அண்மை நாட்களாக ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளிப்படையாகவே தனது சீன சார்பு நிலையை அறிவித்து வருகின்றது உலக இயங்கியல் விதிகளின் கீழ் மேற்குலகம் என்று சொல்லப்படுகின்ற முதலாளித்துவ பொருளாதார சார்பு நிலை நாடுகள் எதிர் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு எதிரான போக்குடைய நாடுகள் என்ற இரு பெரும் பிரிவுகள் காணப்படுகின்றன. முதலாளித்து சார்பு நிலை நாடுகள் அமெரிக்காவின் கீழ் அதன் கொள்கைகளுக்கு ஆமாம் சாமி போடும் வகையில் அணிவகுத்திருக்க எதிர் முகாம் சீனாவை தலைமையாக கொண்டதாக எழுச்சி பெற்று வருகின்றது. ஆசியாக் கண்டத்தின் பலம் மிக்க நாடாக விளங்கும் சீனா அனைத்து துறைகளிலும் அமெரிக்க சார்பு கூட்டணிக்கு சவால் விடுத்து வருகின்றது சீனாவ…
-
- 1 reply
- 1.8k views
-
-
காரைதீவில் தமிழ் இளைஞன் சுட்டுக்கொலை 20.03.2008 / நிருபர் வானதி அம்பாறை, காரைதீவு பிரதான வீதியில் நேற்று முன்தினம் பிற்பகல் 3.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாத நபர்கள் மேற் கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப் படுகிறது. கல்முனை, கிராமோதய வீதியைச் சேர்ந்த இளையதம்பி கார்த்திகேசு (வயது 29) என்பவரே இவ்வாறு உயரிழந்தவராவார். இவரது சடலம் அம்பாறை வைத்தியசாலையின் பிரேத அறையில் நேற்று வைக்கப்பட்டிருந்தது. http://www.sankathi.com/
-
- 0 replies
- 870 views
-
-
டாக்டர் சவரக்கத்தி'யால்சபையில் சர்ச்சை [20 - March - 2008] `டாக்டர் சவரக்கத்தி" (டாக்டர் தெலி பிய்ய) என்ற வார்த்தையால் செவ்வாய்க்கிழமை சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றம் செவ்வாய்காலை சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் கூடிய போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்திலேயே இந்த சர்ச்சை ஏற்பட்டது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது தொழில் அமைச்சரான மேர்வின் சில்வாவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகரவுக்கும் இடையில் கடும் வாய்த் தர்க்கம் நடைபெற்றது. எனினும் அவர்களுக்கிடையிலான வார்த்தைப் பரிமாற்றங்களை ஊடகங்களில் வெளியிடக் கூடாதெனவும், அவை ஹன்சார்ட் அறிக்கையில் பதியப்படாதென்றும் சபாந…
-
- 0 replies
- 1.2k views
-