Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவு செய்வதற்கான இறுதி போட்டி! ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் பணியாற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுள், சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவுசெய்வதற்கான இறுதி போட்டி நானுஓயா – ரதல்ல, தேயிலை மலையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. ஹொரண, தலவாக்கலை மற்றும் கெலனிவெலி பெருந்தோட்ட நிறுவனங்களில் கீழ் உள்ள 60 தோட்டங்களில் ஆரம்பக்கட்ட போட்டிகள் நடைபெற்று, அவற்றில் வெற்றிபெற்றவர்களில் இருந்து 42 பெண் தொழிலாளர்கள் இறுதிப் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். 20 நிமிடங்கள் வழங்கப்பட்டு, இக்காலப்பகுதிக்குள் கூடுதல் கொழுந்து பறிப்பவர் வெற்றியாளராக தெரிவுசெய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் தலவாக்கல…

  2. இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்புக்கு உலக வங்கி ஆதரவளிக்கும் இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கைகளுக்கான சட்டங்களை உருவாக்குவதில் உலக வங்கி தொழில்நுட்ப ஆதரவை வழங்கும். அத்துடன், சர்வதேச ஊடகப் பயன்பாடு மற்றும் நலன்புரி விடயங்கள் தொடர்பான நலன்கள் தொடர்பில் மேலும் வழிகாட்டுதல் மற்றும் தேவையான ஆதரவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உலக வங்கி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான உப தலைவர் மார்ட்டின் ரெய்சர் உள்ளிட்ட குழுவினர் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிப…

  3. அமெரிக்க செனட் சபையின் அறிவிப்பு இலங்கை மீதான சர்வதேச நிலைப்பாட்டை தெளிவாக பிரதிபலிக்கிறது - ஹர்ஷ டி சில்வா Published By: VISHNU 01 MAR, 2023 | 05:08 PM (எம்.மனோசித்ரா) அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டலுவல்கள் குழுவின் தலைவர் தேர்தலை மேலும் காலம் தாழ்த்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளமையின் ஊடாக , இலங்கை தொடர்பில் சர்வதேசம் கொண்டுள்ள நிலைப்பாடு என்னவென்பதை தெளிவாக அறியமுடிகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். மேலும் இலங்கையில் ஜனநாயகம் சர்வாதிகாரத்தினால் முடக்கப்பட்டுள்ளது என்பதே சர்வதேசத்தின் நிலைப்பாடாகவுள்ளது என்பது தெளிவாகிறது எனவும் கல…

  4. வருமான வரி செலுத்தாதவர்களை அடையாளம் காண துரித நடவடிக்கை வருமான வரி செலுத்த தவறிய பல்வேறு தொழில்கள் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை அடையாளம் காண துரித நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்புரை விடுத்துள்ளார். நாடு அரசாங்க வருமானம் தொடர்பில் கவனம் செலுத்தும் இவ்வேளையில், வரிகளை விதித்து வருமானம் ஈட்டுவது மற்றும் அவ்வாறு வரி செலுத்தத் தவறியவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று நிதியமைச்சு வளாகத்தில் இடம்பெற்ற உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இந்த பணிப்…

  5. IMF உடனான இறுதி ஒப்பந்தம் இம்மாதம் கைசாத்திடப்படும் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் நாட்டிற்கான பிணை எடுப்புப் பொதி தொடர்பான இறுதி ஒப்பந்தத்தில் இம்மாதம் கைச்சாத்திடவுள்ளது அதன் பின்னர் பன்னாட்டு நன்கொடையாளர்கள் மற்றும் சில நாடுகளிடமிருந்து உதவிகள் வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர்கள் நேற்று தெரிவித்தனர். IMF உடனான இறுதி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டவுடன் ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றிலிருந்து இலங்கைக்கு அதிக உதவிகள் கிடைக்கும் என ஜனாதிபதியின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான ருவன் விஜேவர்தன மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர். “நாட்டில் ஏற்…

  6. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மைத்திரியின் மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிப்பு Published By: T. SARANYA 01 MAR, 2023 | 03:50 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை 21,000 ரூபா கட்டணத்திற்கு உட்படுத்தப்பட்டு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சஞ்சீவ மொரேஸ் மற்றும் பிராங் குணவர்தன ஆகிய இருவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் புதன்கிழமை (1) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட …

  7. புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் : முடங்குகின்றன முக்கிய சேவைகள் ! பெட்ரோலியம், துறைமுகம், மின்சாரம், சுகாதாரம், நீர் வழங்கல், கல்வி, வங்கி, தபால் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள், இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன. இலங்கையில் தற்போதுள்ள அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தே தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெறவுள்ளது. இதன் காரணமாக, இன்று புதன்கிழமை பல்வேறு சேவைகள் முடங்கும் என பணிப் புறக்கணிப்பில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ந…

  8. கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா ஏற்பாடுகள் பூர்த்தி : பக்தர்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு Published By: Digital Desk 5 01 Mar, 2023 | 09:36 AM கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (28) யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஊடகங்களுக்கு விடுத்த விசேட அறிவிப்பிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது யாழ்பாண மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பில் யாழ்பாண ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு ப…

  9. வெடிபொருட்கள் அகற்றப்படாத முகமாலையில் சட்டவிரோத மண் அகழ்வு Published By: Digital Desk 5 01 Mar, 2023 | 11:18 AM முகமாலையில், நில கண்ணிவெடிகள் மற்றும் அபாயகரமான வெடிபொருட்கள் காணப்படும் பிரதேசங்களுக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யுத்த காலத்தில் சூனிய பிரதேசமாக இருந்த முகாமாலை பகுதியில் நில கண்ணிவெடிகள் மற்றும் அபாயகரமான வெடிபொருட்கள் காணப்படுகின்றன. யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் ஆகின்ற போதிலும் , அப்பகுதியில் தற்போதும் வெடிபொருட்களை அகற்றும் ப…

  10. உள்ளாட்சித் தேர்தலை தாமதமின்றி நடத்துங்கள் – அமெரிக்க செனட் குழு இலங்கையிடம் வலியுறுத்து! உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதமின்றி சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இலங்கை மக்களின்பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் எந்தவொரு முயற்சியும் மறுக்க முடியாத ஜனநாயக விரோதமானது மற்றும் இலங்கையர்களின் உரிமைகளை நேரடியாக மீறும் செயலாகும் என அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் பிற்போடப்பட்டதாக …

  11. ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் – விசாரணையினை ஆரம்பித்தது சி.ஐ.டி! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான கொலை சதி முயற்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடைய குழுவொன்று, சில தினங்களுக்கு முன்னர் வெளிநாடொன்றில் இந்த கொலைச் சதித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அரசியல் கட்சியின் செயற்பாட்டாளர்கள்…

  12. விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புதொடர்ந்தும் இயங்குகின்றது - அமெரிக்கா Published By: RAJEEBAN 28 FEB, 2023 | 10:21 AM விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தமிழீழவிடுதலைப்புலிகள்தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தி நிதிதிரட்டி தமது செயற்பாடுகளிற்கு பயன்படுத்துகின்றனர் எனவும் அமெரிக்காதெரிவித்துள்ளது. அமெரிக்கா நேற்று வெளியிட்ட பயங்கரவாதம்குறித்த 2021ம் ஆண்டிற்கான அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 இல்இலங்கை அரசாங்கத்தால்இராணுவரீதியில் தோல்வியடைந்த போதிலும் விடுதலைப்புலிகளின்சர்வதேச ஆதரவாளர்கள் வலையமைப்பும் நிதி ஆதரவும…

  13. பிரான்ஸில் கொலையுண்ட யாழ். மல்லாகத்தைச் சேர்ந்தவரின் சடலம் குப்பை மேட்டில் கண்டுபிடிப்பு : வீட்டின் உரிமையாளர் கைது! 28 FEB, 2023 | 01:41 PM யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் சபேசன் என்ற நபர் பிரான்ஸ் நாட்டிலுள்ள வீடொன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் வசிக்கும் அவரது மனைவிக்கு அவர் பணிபுரியும் வீட்டின் தொலைபேசி இலக்கம் மற்றும் முகவரி வழங்கியுள்ளார். இந்நிலையில், இவரது மனைவி கடந்த வாரம் தனது கணவரை தொலைபேசியில் அழைத்தபோது, சில நாட்களாக அவரைக் காணவில்லை என குறித்த வீட்டினர் அவரது மனைவிக்கு தெரிவ…

  14. சுழிபுரம் - காட்டுப்புலம் மீனவர்களின் சொத்துக்கள் இந்திய இழுவைப் படகுகளால் நாசம் Published By: VISHNU 28 FEB, 2023 | 10:26 PM சுழிபுரம் - காட்டுப்புலம் மீனவர்களின் ஏழரை இலட்சம் ரூபா தொழில் முதல் இந்திய இழுவைப் படகுகளால் நாசம் செய்யப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சதாசிவம் சிறிகாந்தன் என்பவருடைய வலை முதலே இவ்வாறு நாசம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர் கருத்து தெரிவிக்கையில், 27 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு கடலுக்கு சென்றோம். வலையை கடலில் விட்டுவிட்டு இருந்தவேளை சுமார் 300 இந்தியன் இழுவைப் படகுகள் எங்களது கடல் எல்லைக்குள் வெளிச்சம் பாய்ச்சாது உள்ந…

  15. வட்டி வீதங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை ; இலங்கை இணங்கவில்லை என்கிறது அரசாங்கம் Published By: T. SARANYA 28 FEB, 2023 | 04:49 PM (எம்.மனோசித்ரா) சர்வதேச நாணய நிதியத்துடனான அண்மைய பேச்சுவார்த்தைகளின் போது மீண்டும் 2.5 சதவீதத்தால் வட்டி வீதங்களை அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இலங்கை அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்கத்தினால் வட்டி வீதங்களைக் குறைக்க முடியாது எனத் தெரிவித்த அவர் , வங்கி வட்டி வீதங்களின் அடிப்படையிலேயே பண வீக்க வீதமும் உள்ளடங்கியுள்ளதால் அது நிதி ஸ்திரத்தன்மையை ஏற்பட…

  16. புற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழில் விசேட வைத்தியசாலை! புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழ்ப்பாணம், பதுளை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளையும், பொருத்தமான இடத்தில் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலையொன்றையும் ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மருத்துவ ஆராய்ச்சிக்கான நவீன ஆய்வுகூடம் அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு சுகா…

  17. இலங்கை இந்திய மீனவர்கள் விவகாரத்திற்கு இராஜதந்திரரீதியில் தீர்வுகளை காணவேண்டும் என இலங்கை;கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளதுஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளதாவது மீனவர்கள் விவகாரம் அவர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையதும் மனிதாபிமான அடிப்படையிலானதுமாகும் என்ற உள்ளுணர்வுடன் இருதரப்பு பொறிமுறைகள் மற்றும் இராஜதந்திர மார்க்கங்கள் ஊடாக தீர்க்கப்படவேண்டியதாகும் இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமெனவும், மீனவர்களுக்கு எதிராக எந்த வடிவங்களிலும் பலத்தையோ அல்லது வன்முறைகளையோ பிரயோகிக்காமல் இருப்பதனை உறுதிசெய்யுமாறும் உயர் ஸ்தானிகராலயம் இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது. இந்திய மீனவர்கள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட …

  18. கிளிநொச்சி மாவட்டத்தில் 2022/2023 இம்முறை மேற்கொள்ளப்பட்ட பெரும்போகச் செய்கையில் வரட்சி, வெள்ளம், நோய் தாக்கம் காரணமாக 2725.74 ஏக்கர் நெற்செய்கை அழிந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ப.தேவரதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும் போக செய்கையில் வெள்ளம் வரட்சி நோய்த்தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கேட்ட போதே 2725 .74 ஏக்கர் நெற்செய்கை அழிந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ப.தேவரதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் இரணை மடுக்குளம் உள்ளிட்ட பாரிய நீர்ப்பாசன குளங்கள் மற்றும் சிறிய நடுத்தர குளங்கள் மானாவாரி செய்கை நிலங்கள் …

  19. (நா.தனுஜா) பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு உதவும் நோக்கில் சர்வதேச நிதியியல் ஒத்துழைப்பானது நாட்டின் 3 முன்னணி வங்கிகளுக்கு மாற்று நாணய வசதியின் கீழ் 400 மில்லியன் டொலர்களைக் கடனாக வழங்கியுள்ளது. நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், இலங்கையில் 30 சதவீதத்துக்கும் அதிகமான வெளிநாட்டுப்பணவனுப்பல்கள் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளைக் கையாளும் கொமர்ஷல் வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகிய 3 முன்னணி வங்கிகளுக்கு இந்த கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வுதவியானது தனியார் துறையினருக்கான அவசர நிதியுதவிகளுக்கும், நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அத்தியாவசியத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்…

  20. மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம்- கால்நடைகளை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த சிங்கள மக்கள் February 28, 2023 மட்டக்களப்பில் கால்நடைகள் சேனைப் பயிர்ச்செய்கைக்குள் உட்புகுந்ததாகத் தெரிவித்து சிங்கள இனத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் கால்நடைகளை துப்பாக்கியால் சுட்டுள்ளதுடன், கூரிய ஆயுதங்களாலும் தாக்கியும் உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதியில் உள்ள மேய்ச்சல் தரைப் பகுதியில் தமிழ் மக்கள் பரப்பரையாக கால்நடைகளை வளர்த்து வரும் நிலையில் இந்த மேய்ச்சல் தரைப் பகுதியை பகுதி பகுதியாகப் பிரித்து மகாவலி அபிவிருத்தி எனக்கூறி பெரும்பான்மை சிங்கள மக்களைக் குடியேற்றி அப்பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கையி…

  21. 23 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு யுவதி கைது! Published By: T. SARANYA 28 FEB, 2023 | 03:12 PM 23 கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளுடன் இலங்கை வந்த வெளிநாட்டு யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சோதனையின்போதே இந்த யுவதி கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர், பிரதி சுங்கப் பணிப்பாளர் (சட்ட விவகாரங்கள்) சுதத்த சில்வா தெரிவித்தார். துபாயிலிருந்து எமிரேட்…

  22. கியூ.ஆர். குறியீட்டு முறை இரத்தாகும் காலம் குறித்து காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு Published By: VISHNU 21 FEB, 2023 | 05:44 PM தேசிய எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறையானது இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இரத்துச் செய்யப்படுவதாகவும், சாதாரண நிலைமைகளின் கீழ் நாட்டில் தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், சீரான எரிபொருள் விநியோகத்துக்கான தற்காலிக தீர்வாக QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார். நாட்டில் அடுத்த சில மாதங்களுக்கு மி…

  23. யாழ்.மாநகர சபை பாதீடு தோல்வி; சபை கலைந்தது? எம்.றொசாந்த், வி.நிதர்ஷன் யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்ககான வரவு - செலவுத்திட்டம், இன்றைய தினம் (28) சபையில் முன் மொழியப்பட்டதை அடுத்து, 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் வரவு - செலவு திட்டம், மேயர் ஆர்னோல்ட் தலைமையில் இன்று முன்மொழியப்பட்டது. சபையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது , வரவு - செலவு திட்டத்துக்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன், ஒருவர் நடுநிலைமை வகித்திருந்தார். அதனால் மாநகர சபையின் செயற்பாடுகள் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வந்தது. மேயர் ஆர்னோல்டினால், 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் கடந்த 13ஆம் தி…

  24. பிரதமரிடம் கையளிக்கப்படுகின்றது முக்கிய அறிக்கை! தேசிய எல்லை நிர்ணய குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை இன்று (செவ்வாய்கிழமை) பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான எல்லைகளை நிர்ணயம் செய்வதற்கான தேசிய எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்திலும் பல்வேறு தரப்பினராலும் ஆணைக்குழுவினால் பெறப்பட்ட முன்மொழிவுகள் மதிப்பீடு செய்யப்பட்டு மாவட்ட மட்டத்தில் எல்லை நிர்ணயம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை மார்ச் 31ஆம் திகதிக்குள் கையளிப்பதற்க…

  25. யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த வன்முறை கும்பல் ; காவலாளி மீது வாள் வெட்டு முயற்சி! Published By: DIGITAL DESK 5 27 FEB, 2023 | 12:31 PM யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இரவு இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, பட்டா ரக வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறை பக்கம் உள்ள நுழைவாயில் கதவால் ஏறி குதித்து வைத்தியசாலைக்குள் நுழைய முயற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.