Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் "தனியான தமிழர் தாயகம்' ஒன்று வரலாற்றில் என்றுமே இருந்ததேயில்லையாம்! அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதர் அங்கு விளக்கம் இலங்கை பிளவுபடாத ஒரு தேசமாக விளங்குவதற்கான சக்தியை அமெரிக்கா வழங்கவேண்டுமென அந்த நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் பேர்னாட் குணதிலக வேண்டுகோள் விடுத்துள்ளார். "வாஷிங்டன் டைம்ஸ்' இதழில் ஞாயிற்றுக்கிழமை தாம் எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான தனது முயற்சிக்காக புதிய பகுதிகளை தேடிக்கொண்டிருக்கையில், இலங்கை போன்ற பிரதேசங்களில் ஜனநாயகங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஜனநாயக எதிர்ப்பு சக்திகள் குறித்து அது விழிப்புடனிருக்கவேண்டுமென பேர்னாட் குணதிலக தெரிவித்துள்ளார். இலங்கையின் மோதல்…

  2. ஆயிரத்தில் ஒருவன் ஐயா நீ! தமிழருக்காகக் குரல் கொடுக்கும் சிங்களர் (உங்களில் பலர் டாக்டா பிரயன் செனிவிரத்தின பற்றி அறிந்திருக்கக் கூடும். ஈழத்தமிழர் உரிமைக்காக உலகம் முழுவதும் சென்று பேசியும் எழுதியும் வரும் இவர் ஒரு சிங்கள மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர்களுடைய போராட்டத் தையும் அதில் இருக்கும் நியாயத்தையும், தமிழ் மக்கள் படும் அவலங்களையும் உலக அரஙகில் எடுத்துச்சொல்லி இலங்கை அரசாங்கத்தைத் தலைகுனிய வைப்பதுடன் தமிழ் மக்கள் மீது கட்ட விழ்த்துப் விடப்பட்டிருக்கும் இன ஒழிப்பு நடவடிக்கைகள் பற்றித் தன் சொந்த செலவில் குறுவட்டுக்கள், துண்டுப் பிரசுரங்கள் முதலியவற்றைப் பிரசுரித்து இதுவரை எந்த ஒரு தனிப்பட்ட தமிழ்மகனும செய்திருக்காத ஒருபெரும் விழிப்புணர்வை உல…

  3. தமிழர் தாயகப் பகுதியான திருகோணமலையில் சிறிலங்காவின் நடவடிக்கைகளால் இந்தியாவின் பிரசன்னம் அதிகரித்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.6k views
  4. பாரிய நெருக்கடிக்குள் படை நகர்வுகள் -விதுரன்- வன்னிக்கள முனையில் கடந்த சில தினங்களாக மோதல்கள் சற்றுத் தணிந்துள்ளன. எதிர்பார்த்தபடி முன்நகர்வுகளை மேற்கொள்ள முடியாத நிலையிலும் விடுதலைப் புலிகளின் கடுமையான பதில் தாக்குதல்களால் படையினர் பெரும் நெருக்கடிகளை சந்திக்கும் நிலையிலும் வன்னிக்கள முனையில் பாரிய முன்நகர்வு முயற்சிகளை மேற்கொள்ள முடியாத நிலை படையினருக்கு ஏற்பட்டுள்ளது. வன்னிக்கள முனையில் பாரிய அளவில் படைநகர்வு, சிறு சிறு குழுக்களாகச் சென்று தாக்குவதென்று படையினர் தங்கள் தந்திரோபாயங்களையும், உத்திகளையும் மாற்றி மாற்றி அமைக்கின்றபோதும் விடுதலைப் புலிகளும் அதனை மிக நுட்பமாக எதிர்கொண்டு அவர்களது தந்திரோபாயங்களுக்கும், உத்திகளுக்கும் பதிலடி கொடுக்கின்றனர். இது படை…

  5. ஞாயிறு 17-02-2008 16:05 மணி தமிழீழம் [தாயகன்] கொழும்பில் மூன்று தமிழர்கள் கடத்தல் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் மூன்று தமிழர்கள் இனம் தெரியத நபர்களால் கைது செய்யப்பட்டிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது. தெஹிவளையில் இருவரும், கிறான்பாஸ் பகுதியில் மற்றொருவருமாக நேற்றிரவு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிடுவதற்கு சிறீலங்கா காவல்துறையினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  6. விடுதலைப்புலிகளின் பலம் குறித்து முரண்பாடான பிரசாரங்கள் 2/17/2008 9:57:14 AM வீரகேசரி வாரவெளியீடு - விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் குறித்து இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜ பக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ போன்றோரும் அண்மையில் ஊடகங்களுக்கு தீவிரமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். போர்முனையில் விடுதலைப் புலிகள் பாரியவலிந்த தாக்குதல்களைத்தவிர்த்து வருவதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, புலிகளை அழிப்பது தொடர்பான காலக்கெடுக்களும் இவர்களால் விதிக்கப்படுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலக்கெடுவை விதிப்பது ஒருபுறம் நிகழ, இன்னொரு புறத்தில் முன்னுக்குப்பின் மு…

  7. சுமார் ரூ.10 கோடி பெறுமதிக்கு ஆறாயிரம் கிலோ எடையில் நடமாடும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் புலிகளுக்காக செஞ். குழுவினர் தருவிப்பாம்! "அரச படைகளினால் விடுவிக்கப்படாத பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்குவதற்கு என்ற பெயரில், நடமாடும் சத்திரசிகிச்சைக் கூடங்களுக்கான சுமார் பத்துக்கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவினால் கொண்டுவரப்பட்டுள்ளன. ""ஆனால் இவை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளன என்பதில் சந்தேகமில்லை.'' இப்படி சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்று அவரை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. சுமார் ஆறாயிரம் கிலோ எடை கொண்ட இந்த உப…

    • 1 reply
    • 1.3k views
  8. அடம்பனுக்காக உக்கிர மோதல் 2/17/2008 10:05:13 AM வீரகேசரி வாரவெளியீடு - மன்னார் களமுனையில் அடம்பன் நகரைப் படையினர் கைப்பற்றி விட்டதாகப் பலமுறை செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பின்னர் அடம்பன் சந்திக்கு தெற்கே 1.கி.மீ தொலைவில் படையினர் நிலை கொண்டிருப்பதாகவும், மேற்கே 800 மீற்றர்வரை முன்னேறியிருப்ப தாகவும் செய்திகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், அடம்பன் களமுனையின் முக்கியத்துவம், அதன் இன்றையநிலை என்பனவற்றை இந்த வாரம் எடுத்து நோக்குவது பொருத்தமானது. சிலர் கூறுவதைப் போன்று அடம்பன் ஒன்றும் பெரியநகரம் சார்ந்த பகுதியல்ல. இங்கு இருக்கின்ற ஒரேயொரு பெரியவிடயம் அடம்பன் தள வைத்தியசாலையாகும். மிக அண்மையில்தான் தொண்டர் நிறுவன உதவி யுடன் இது புனரமைக்கப்பட்டது. மன்னாரின் ம…

    • 3 replies
    • 2.8k views
  9. அனைத்துலக மன்னிப்புச் சபை பக்கசார்பாக நடந்து வருவதாக சிறீலங்கா அரச கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபையையும், அதனது பொதுச் செயலாளர் ஐறின் கானையும் வன்மையாகக் கண்டித்த சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல, மன்னிப்புச் சபையின் பக்கசார்பான நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார். சிறீலங்கா அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும், மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசு முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டுமென அனைத்துலக மன்னிப்புச் சபை அழுத்தம் கொடுத்து வருகின்றது. இதேபோன்ற கருத்தினை நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற உலகின் முன்னணி அமைப்புகள் தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதால், ஆத்திரமடைந்த …

  10. திங்கள் 18-02-2008 02:00 மணி தமிழீழம் [சிறீதரன்] வவுனியா முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் : ஒரு படையினர் பலி: இருவர் காயம் ஞாயிற்றுக்கிழமை காலை 11.10 மணியளவில் வவுனியா நாவற்குளம் சிறீலங்கா படையினரது முன்னரங்க நிலைகள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளதாகவும் இதன்போது ஒருபடையினர் கொல்லப்பட்டும் மற்றும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை பாலமோட்டை பகுதியில் இரவு முதல் ஞாயிறு காலை 10 மணிவரை கடும் எறிகணை தாக்குதல்கள் இருபகுதிகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  11. ஞாயிறு 17-02-2008 16:00 மணி தமிழீழம் [தாயகன்] கைக்குண்டு வெடித்ததில் படை உறுப்பினர் பலி யாழ் வடமராட்சி முள்ளியில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் காவலரணில்; இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்பில் சிறீலங்காப் படை உறுப்பினர் ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று அதிகாலை 2.45 அளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்டவர் 35 அகவையுடைய ஜயந்த காமினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேரில் சென்ற பருத்தித்துறை சிறீலங்கா நீதியாளர் கே. அரியநாயம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். குறிப்பிட்ட படை உறுப்பினர் பணி நேரத்தில் நித்திரை செய்தபோது கைக்குண்டு தவறுதலாக வெடித்திருப்பதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. கைக்குண்டு வெடிப்பைத் த…

  12. -----------------------------------------------------------------------------------------------------------------------------------

    • 0 replies
    • 1.2k views
  13. 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது தமிழ் மக்கள் எவரும் மாகாணசபை நிர்வாகத்தை கோரவில்லை என்கிறது ஜே.வி.பி. நிர்வாக ரீதியிலான சம உரிமை கொண்ட அதிகார பரவலாக்கமே நாட்டில் வாழும் சகல இன மக்களினதும் தேவையாகும் என்று ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினரும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 13 ஆவது திருத்த சட்டத்திற்கு அமைவான மாகாண சபை அதிகாரங்கள் மூலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது எனவும் அவர் கூறினார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்ற ஒரு சில அரசியல் தலைவர்களுக்கும் மற்றும் பாராளுமன்றத்தை எட்டிப் பிடிக்க முடியாதவர்களுக்குமே மாகாண சபை அதிகாரங்கள் தேவைப்படுவதாகவும்…

  14. தடைகளின் பின்புலங்களும் இந்தியாவிற்க்கான பொறியும் 2/17/2008 9:41:19 AM வீரகேசரி வாரவெளியீடு - விடுதலைப் புலிகளை அழிப்பேனென யுத்தப் பிரகடனம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வியக்கத்தினை தமது நாட்டில் இன்னமும் தடை செய்யாமல் இருப்பதற்குரிய காரணங்கள் என்ன? பலரால் எழுப்பப்படும் தினக் கேள்வியாகி விட்டது இவ்விடயம். புலிகளைப் பலவீனமாக்கிய பின்னர், அவர்களுடன் பேசுவதற்கு தடை ஒரு காரணியாக அமைந்து விடக் கூடாதென்பதற்காக இதனைச் செய்யாமல் ஜனாதிபதி ஒத்தி போடுகிறாரென ஒரு சாரார் கருதுகின்றனர். அதாவது பல்லாயிரக்கணக்கான போராளிகளின் ஆளணி வளத்துடன், முப்படைப் பரிமாணமும் கொண்ட தமிழர் தலைமையோடு, கூட்டாட்சி என்கிற உயர்ந்தபட்ச அரசியல் தீர்வே சாத்தியமாகுமென்பதால் அவர்களை இல்லா…

    • 2 replies
    • 1.5k views
  15. தமிழர் தாயகப் பகுதியின் வடக்கில் சிறிலங்கா அரசாங்கத்தினது இடைக்கால சபை எதிர்வரும் வாரம் அமைக்கப்பட உள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 1.3k views
  16. Posted on : Sun Feb 17 9:45:00 2008 யாழ்ப்பாணத்தை "சுனாமி' 1627 ஆம் ஆண்டிலும் தாக்கியதா? கோட்டைப் புதுமை மாதாவிடம் தஞ்சம் புகுந்து மக்கள் உயிர் தப்பினார்கள் இன்றும் நினைவில் கொள்ள..... அன்றைய ஞாபகம் .... இங்கே! தாண்டவன் 1627ஆம் ஆண்டு பெப்ரவரி 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தை சுனாமி தாக்கியதா? ""சுனாமி'' 2004ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளை உலுக்கிய கடல் பூகம் பத்தின் பின்னர் தமிழ் ஊடகங்களில் பாவனைக்கு வந்த ஒரு சொல் அங்கிலத்தில் ""கூண்தணச்ட்தூ'' என்பதன் தமிழ்க் கருத்து கடற்பேரலை என்பதாகும். ஆழிப்பேரலை என் றும் அழைக்கப்படுகின்றது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளை ஆழிப் பேரலை தாக்கிய குறிப்புக்கள் ச…

  17. சுதந்திர பிரகடனத்துக்கு தயாராகிறது கொசோவோ [16 - February - 2008] * எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- அல்பேனிய இன மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட கொசோவோ இன்னும் சில நாட்களுக்குள் சேர்பியாவிலிருந்து பிரிந்து செல்வதற்கான பிரகடனத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில் அதனை ஒருபோதும் இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்கப்போவதில்லையென திட்டவட்டமாக நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறது. இதேவேளை, கொசோவோவின் உத்தேச சுதந்திரப் பிரகடனத்தை எதிர்க்குமாறு ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையை சேர்பியாவின் வெளிவிவகார அமைச்சர் வுக்ஜெரமிக் வலியுறுத்தியுள்ளார். கொசோவோவின் அல்பேனிய இனத் தலைவர்கள் அடுத்துவரும் நாட்களில் மேற்கொ…

  18. சிறிலங்காவின் தற்போதைய நிதித்துறைச் செயலாளரான பி.பீ.ஜயசுந்தரவை புதிய நிதியமைச்சராக நியமிக்க அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 680 views
  19. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப்பிரிவினரால் கடத்தப்பட்ட தமிழ் வர்த்தகர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு இன்று காலை கண்கள் கட்டப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 645 views
  20. சிறிலங்கா தலைநகர் கொழும்பு நகரின் பாதுகாப்பினை மேலும் உறுதிப்படுத்த 47 உடனடி வீதித் தடை சோதனைச் சாவடிகளை போடுவதற்கு சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 838 views
  21. பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கப்படவில்லை மனோ கணேசன் 2/16/2008 9:50:19 PM வீரகேசரி இணையம் - நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை தமக்கு மேலதிக பாதுகாப்பு உத்தியோகத்தர்களோ, வாகனமோ வழங்கப்படவில்லை என மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றம் தமக்கு உடனடியாக எட்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் வாகனம் ஒன்றையும் வழங்குமாறு உத்தரவிட்டது. எனினும் நீதிமன்ற உத்தரவு இதுவரை நிறைவேற்றப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் அத்தியட்சகர் முனசிங்கவுடன் தான் தொடர்பு கொண்டு கேட்ட போது, பொலிஸ்மா அதிபரிடம் இருந்…

  22. சிறிலங்காவில் 3,500 புதிய ஊர்காவற் படையினரை சேர்க்க மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  23. பாலைமோட்டை மோதல்களில் 7 படையினர் பலி: 14 பேர் காயம் சனிக்கிழமை மதியம் 12.45 மணியளவில் சிறீலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான பாலைமோட்டை பகுதிநோக்கி கடும் எறிகணை சூட்டாதரவுடன் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சியின்போது 7 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டும் 14 படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. சூனியப்பிரதேசத்தில் ஆரம்பித்த இம்மோதல்கள் மதியம் 2.30 மணிவரை நீடித்ததாகவும் தெரியவருகிறது. மோதல்கள் தீவிரமானதையடுத்து மேலதிக படையினர் சிறீலங்கா படையினர் அனுப்பி வைத்ததாகவும் களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் தகவலின்படி அப்பிரதேசத்தில் நான்கு படையினரது உடலங்கள் காணப்படுவதாகவும் அவற்றினை மீட்பதற்கு படையினர் கடும்பிரயத்தனங்களில் ஈட…

  24. இலங்கை அரசும் படைத்தரப்பும் கூறுவது போல வடக்கில் தங்களுக்கு எதுவித இராணுவ அழுத்தங்கள் இல்லையெனவும் விரைவில் அவர்கள் உண்மை நிலையை உணருவார்களெனவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தினக்குரலுக்கு மேலும் கூறுகையில் : வடக்கில் பல்பேவறு முனைகளிலும் தினமும் படையினர் முன்னேறுவது போன்றதோரு தோற்றப்பாட்டை உருவாக்க அரசும் படைத்தரப்பும் முனைகின்றனர். ஆனால், உண்மையில் களநிலை அவ்வாறில்லை. களமுனையிலுள்ள படையினருக்கு இது நன்கு தெரியும். தினமும் அவர்கள் பேரிழப்புகளை சந்தித்து வருகின்றனர். கொல்லப்படும் படையினரின் உடல்கனளைக் கூட அந்தந்தப் பகுதியிலேயே புதைத்து வருவது உறுதிப்படுத்தப்பட்டள்ளது. வடக்கில…

  25. தமிழ்நாட்டின் கூடங்குளத்திலிருந்து மின்சாரத்தை வழங்குகிறோம்: சிறிலங்காவுக்கு இந்தியா யோசனை கடும் மின்சார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள சிறிலங்காவுக்கு மின்சாரத்தை தமிழ்நாட்டிலிருந்து வழங்குவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது. சிறிலங்காவின் மின்சார பிரச்சனைக்கு தீர்வாக தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுவரும் மின்விநியோக திட்டங்கள் பூர்த்தியாவதற்கு 2012 ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டும். இந்நிலையில் இந்திய அரசாங்கம் ஓராண்டினுள் சிறிலங்காவுக்குத் தேவையான முழுமையான மின்சாரத்தை வழங்க தயாராக இருப்பதாக இந்தியத் தரப்பிலிருந்து சிறிலங்காவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கூடங்குளம் அனல் மின்நிலையத்திலிருந்து தனுஷ்கோடி தலைமன்னார் ஊடாக இந்த மின்விநியோக மார…

    • 9 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.