ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
இலங்கை முழுவதும் தற்போது பரவியுள்ள போரினால் தென்னிலங்கையில் மாணவர்களின் கல்வி பெரும் பாதிப்படைந்துள்ளதாகவும், பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு கவலை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 10 replies
- 1.3k views
-
-
ஐ.நா. பாதுகாப்புச் சபை 21ஆம் திகதி கூடுகின்றது இலங்கை நிலைபற்றி ஆராய்வு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் செயற்குழு எதிர்வரும் 21ஆம் திகதி நியூயோர்க்கில் கூடுகின்றது. இதன்போது இலங்கையின் தற்போதையை நிலைவரம் குறித்து ஆராயப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் ஆயுத மோதலில் சிக்கியுள்ள சிறுவர்கள் குறித்து மேற்கொள்ளபட்ட நடவடிக்கைகள் பற்றி இதன்போது ஆராயப்படவுள்ளது. இலங்கை நிலைவரம் குறித்த விவாதம் ஆரம்பமாகும் வேளை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் உரையாற்றவுள்ளார். சட்டமா அதிபர் மற்றும் சொலிசிஸ்டர் ஜெனரல் ஆகியோரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது ஐக்கிய நாடுகளின் இலங்கை குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களுக்க…
-
- 3 replies
- 1.5k views
-
-
வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள கிளிநொச்சிப் பகுதியை நிச்சயம் மீட்போம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 3.9k views
-
-
பாலைக்குழியில் குறிசூட்டுத் தாக்குதலில் 4 படையினர் பலி மன்னார் மாவட்டம் பாலைக்குழி பகுதியில் சனிக்கிழமை விடுதலை புலிகள் குறிசூட்டுத்தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது சிறீலங்கா படையினர் தரப்பில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/
-
- 2 replies
- 1.2k views
-
-
படைத்துறை வியூகங்களை முறியடிக்கும் உத்திகள் -அருஸ் (வேல்ஸ்)- கடந்த ஆண்டு மியான்மாரில் நடைபெற்ற அரசியல் போராட்டங்களையும், அதனை அடக்கிய இராணுவ ஆட்சியாளர்களின் வன்முறைகளையும் தொடர்ந்து அனைத்துலக சமூகம் மியான்மார் அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முயன்று வந்தன. அதன் முதற்கட்டமாக மியான்மார் நாட்டிற்கான படைத்துறை விநியோகங்களை நிறுத்திக் கொள்வது என்பது அவர்களின் தீர்மானமாக இருந்தது. மியான்மாருக்கான பிரதான ஆயுத விநியோகஸ்தராக சீனாவே இருக்கின்ற போதும் இராணுவ அரசின் மீது தமது செல்வாக்கை செலுத்தும் நோக்குடன் ஏனைய ஆசிய நாடுகளும் மியான்மாருக்கான ஆயுத மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருவதுண்டு. அவற்றில் இந்தியாவும் பிரதான பங்கு வகிக்கின்றது. எனினும் கடந்த வருடம் ம…
-
- 2 replies
- 1.9k views
-
-
இலங்கையின் மன்னார் மடுக்கோவிலைச் சூழ்ந்த பிரதேசங்களில் இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் கடும் மோதல் இலங்கையின் வடக்கில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்ற சண்டைகளில் இரு தரப்பிலும் உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாக படைவட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. எனினும் மன்னார், வவுனியா முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சிகள் தமது எதிர் தாக்குதல்களின் மூலம் முறியடிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். ஆயினும் இந்த மோதல்களில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து பக்கசார்பற்ற தரப்புக்களில் இருந்து தகவல்கள் எதனையும் பெறமுடியவில்லை. மன்னார் மடுக்கோவிலைச் சூழ்ந்த பிரதேச…
-
- 2 replies
- 1.8k views
-
-
இடம்பெயர்ந்த மக்களை அல்லைப்பிட்டிப் பகுதியில் மீளக்குடியமர்த்துவது ஆபத்தானது என தொண்டர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 855 views
-
-
ஜெனிவாவிலும், நியூயோர்க்கிலும் அரசு எதிர்கொள்ளும் நெருக்கடி கடந்த வாரம் நாட்டு மக்களுக்கு சுதந்திரதின உரையாற் றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது தலைமையிலான அரசுடன் மேற்குலக நாடுகள் சுமுகமான உறவைப் பேணு கின்றன என்றும், இலங்கை இனப்பிரச்சினை விவகாரத் தைக் கையாளும் விடயம் தொடர்பாக இலங்கை அரச நிர்வாகத்தின் மீது மேற்குலகுக்கு பெரிய அதிருப்தி ஏதும் இல்லை என்ற சாரப்படவும் கருத்து வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்தின் உண்மைத் தன்மை ஆய்வுக்கும் பரிசீல னைக்கும் உரியது. எது, எப்படியென்றாலும், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை ஒட்டி, அரசு தனது படைகளையும் அவற்றின் கீழ் ஒட்டுக்குழுக்களாகச் செயற்படும் துணைப் படைகளையும் இயக்கும் விதம் குறித்த விடயம் சர்வதேச மட்டத்தில் பெரும் சிரத்…
-
- 0 replies
- 1.3k views
-
-
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 0 replies
- 975 views
-
-
புலிகளின் தீவிரவாத நடவடிக்கைகள் அனைத்தும் ஒன்றரை மாவட்டத்துக்குள் முடக்கப்பட்டுள்ளன அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறுகிறார் 2/10/2008 10:26:45 PM வீரகேசரி நாளேடு - புலிகளின் தீவிரவாத நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது ஒன்றரை மாவட்டத்துக்குள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களின் நடவடிக்கைகள் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அதனை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். புலித்தீவிரவாதிகள் தமது தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அவை அரசின் முக்கிய பிரமுகர்களை இலக்குவைப்பதா அல்லது பொதுமக்களை இலக்குவைப்பதா? என்ற பாகுபாட்டுக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. தீவிரவாதிகள் பலவீனமடையும்போது தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தில் இவ்வாறான …
-
- 2 replies
- 1.2k views
-
-
மன்னாரில் பொறிவெடியில் சிக்கி 16 படையினருக்கு மேல் அவயங்கள் இழந்தனர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பண்டிவிரிச்சான். முள்ளிக்குளம் மற்றும் விளாத்திக்குளம் மன்னார் முன்னரங்கநிலைகளில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி முன்னகர முற்பட்ட படையினர் பொறிவெடிக்குள் சிக்கி தமது கால்களை இழந்துள்ளனர். இவ்வாறு பொறிவெடிக்குள் அகப்பட்டு 16 க்கு மேற்பட்ட படையினர் தமது அவயவங்களை இழந்துள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் அனைவரும் சிறீலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் படையணியினை சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது. http://www.pathivu.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்கா தனது பிரஜைகளிற்கு இலங்கைக்கு விஜயம் தொடர்பில் பயண அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகளை பஸ்கள் மற்றும் புகையிரதங்களில் பயணம் செய்வதை தவிக்குமாறு அமெரிக்க இராஜங்க திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. ஆதாரம்: வீரகேசரி
-
- 4 replies
- 1.7k views
-
-
கட்டுநாயக்க விமான நிலைய காப்பரணில் விமானப்படை வீரர் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் காயம் 10.02.2008 / நிருபர் எல்லாளன் கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் அதி பாதுகாப்பு வலயப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக விமானப்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வீதியில் அமைந்துள்ள நிலக்காப்பரணில் கடமையாற்றிய விமானப்படை வீரரின் எல்.எம்.ஜி. ரக துப்பாக்கிச்சூட்டில் விமான நிலையத்தில் இயங்கும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவன ஊழியர் ஒருவர் காயமடைந்தார். இவர் கடமை முடிந்து அவ்வீதியால் சென்று கொண்டிருந்த போது துப்பாக்கிச் சன்னம் காலில் பட்டதால் காயமடைந்து நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி ரவை ந…
-
- 0 replies
- 866 views
-
-
வடக்கில் போர்க்களம் அரசோ அல்லது படையினரோ எதிர்பார்த்தது போலில்லை. பாரிய தாக்குதல்கள் மூலம் வடபகுதிக்குள் நுழைந்து விடலாம் என எதிர்பார்த்த படையினரால் இன்று சிறுசிறு தாக்குதல்கள் மூலம கூட எதையும் சாதிக்க முடியாத நிலையேற்பட்டுள்ளதால், வடக்கில் போர் உத்திகளை அடிக்கடி மாற்றவேண்டிய நிலயேற்பட்டுள்ளது.கனரக ஆயுதங்களை ஒன்றுதிரட்டி புலிகளின் நிலைகள் மீது தொடர்ச்சியாகவும் மிகக் கடுமையாகவும் தாக்குதல் நடத்தி பெருமெடுப்பில் படையணிகளை புலிகளின் பகுதிகளுக்குள் முன் நகர்த்தி அவர்கள் வசமிருக்;கும் பிரதேசங்களைக் கைபற்றி விடலாமென்று அரசும் படையினரும் போடடட திட்டங்கள் பலிக்கவில்லை. இந்தத் தாக்குதல் உத்தி பலனளிக்காததால் வடக்கேள்ள கள முனைகளில் பாரிய படைநகர்வுகளைத் தவிர்த்து சிறு சிறு பட…
-
- 2 replies
- 2.1k views
-
-
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தனியாக சிறப்பு அடையாள அட்டைகளை வழங்குமாறு ஜாதிக கெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.8k views
-
-
தமிழர் விவகாரத்தில் ஜனாதிபதி சர்வதேசத்துக்கு இரட்டை வேடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 2/10/2008 10:27:22 PM வீரகேசரி நாளேடு - தமிழர் விவகாரம் தொடர்பில் சர்வதேச நாடுகள் குறிப்பிட்ட அளவுக்குமேல் அழுத்தங்களை கொடுக்காது என்ற காரணத்தினால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியில் எதிர்ப்பும் உள்ளுக்குள் உறவும் என இரட்டை வேடம் போட்டுக்கொண்டிருப்பதாக வன்னி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஏ. செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இலங்கை அரசின் மீதான சர்வதேசத்தின் அழுத்தம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பது குறித்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் குறையொன்று இருப்பதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியிருந்த செவ்…
-
- 1 reply
- 676 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாராச்சி சற்று நேரத்திற்கு முன் தம்புத்தேகம என்னும் இடத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளாதாக தெரியவருகின்றது. இவருடன் வாகனத்தில் பயணித்த இவரது மெய்ப்பாதுகாவலர் இருவரும் உயிரழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. படுகாயமடைந்த சூரியாராச்சி தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதித்த சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவரது பாதுகாவலர் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாகவும் மேலும் இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜானா சதி வேலையா???
-
- 21 replies
- 4.3k views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் வெளியேறியமை அனைத்துலக சமூகத்திற்கு விழுந்த அடி என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 10 replies
- 5.3k views
-
-
பொதுமக்கள் மீதான வன்முறைகள் தமிழருக்கு விரோதமான சக்திகளை தீவிரவாதிகளாக்கிவிடும்
-
- 6 replies
- 1.9k views
-
-
ஞாயிறு 10-02-2008 21:22 மணி தமிழீழம் [முகிலன்] வெடிகுண்டு தகவலையடுத்து கொழும்பு - பதுளை தொடருந்து சேவைகளை நிறுத்தம் கொழும்பு - பதுளைக்கான தொடருந்துப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் அமைந்துள்ள தலவாக்கலை தொடருந்து பாதையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் அநாமதேய நபர் காவல்துறைத் தலையகத்திற்கு வழங்கிய தகவயடுத்தே இப்போக்குவரத்துகள் மறு அறிவிததல் வரை நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது சிறீலங்காப் படையினரும், காவல்துறையினரும் தலவாக்கலையில் தொடருந்து பாதையில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 717 views
-
-
தேசிய நிகழ்வுகள் இடம்பெறும் பொழுதும் அவசர நிலைமைகள் ஏற்படும்போதும் மக்களிடையே தேவையற்ற பீதி உருவாக்கப்படுவதை தடுப்பதற்காக குறிப்பிட்ட காலப்பகுதியில் குறுஞ்செய்தி சேவையை (SMS) இடைநிறுத்துமாறு தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தொலைபேசிச் சேவை வாடிக்கையாளர்களை கேட்டுள்ளது. முக்கிய நேர அனாவசியமான மற்றும் தவறான எஸ்.எம்.எஸ்.களின் மூலம் மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றமும் பீதியும் உருவாக்கப்படுவதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. தமது இந்த அறிவிப்பு குறித்து தொலைபேசி சேவை வழங்குனர்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளதாகவும் இதற்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதாக அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த நான்காம் திகதி…
-
- 0 replies
- 1.2k views
-
-
அநுராதபுரம் சந்தை பகுதியில் நேரம் கணித்து வெடிக்கவைக்கும் குண்டு மீட்பு அநுராதபுரம் சந்தைப்பகுதியில் நேரம் கணித்து வெடிக்கும் குண்டு ஒன்று மீட்டுள்ளதாக தெரியவருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தையிலேயே இவ்வாறக நேரம் கணித்து வெடிக்கும் குண்டினை மீட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/
-
- 7 replies
- 1.9k views
-
-
யாழ். மாநகர சபை திடலில் கூட்டம் வைத்து புலிகளுக்கெதிராக எம்மால் பேச முடியுமா? [10 - February - 2008] *அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கேள்வி வடபகுதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பு மாநகர சபைத் திடலில் கூட்டம் நடத்த முடியும். ஆனால், எமக்கு யாழ்ப்பாணம் சென்று யாழ். மாநகரத் திடலில் கூட்டம் வைத்து புலிகளுக்கு எதிராகப் பேச முடியுமா? எங்கே ஜனநாயகம் மீறப்படுகின்றது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டுமென பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்திற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நடும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார். பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா தலைமைய…
-
- 5 replies
- 2.4k views
-
-
இலங்கையில் அதிகரித்துள்ள தாக்குதலால் பொதுமக்களுக்கு பாதிப்பு - சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இலங்கையில் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகளில் இடம்பெற்று வரும் கண்மூடித்தனமான தாக்குதல் சம்பவங்களானது பொது மக்களுக்கு அதிக இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகக் சர்வதேச செஞ்சிவைச் சங்கம் கூறுகின்றது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், வடக்கில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அதிகரித்த மோதல்களினால் இடம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிகரித்துச் செல்லும் வன்முறைகள் பொது மக்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தாம் அதிக கரி…
-
- 0 replies
- 769 views
-
-
கடந்த வாரம் கொண்டாடப்பட்ட சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர நாள் பெரும் அச்சங்கள் மற்றும் பதற்றங்களின் மத்தியில் கொண்டாடப்பட்டதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-