ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
மட்டக்களப்பு உள்ளூராட்சி தேர்தலை பகிஷ்கரிக்க ஐ.தே.க தீர்மானம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள 9 உள்ளூராட்சி சபை தேர்தலில் பஹிஷ்கரிக்க ஐக்கியதேசிய கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் பிரதிநிதி இன்று கூடி நீண்ட நேரம் இவ் விடயம் குறித்து ஆராய்த பின் இத்தீர்மானத்தை எடுத்ததாக ஐ.தே.க வின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் தற்போதைய நிலை குறித்து திருப்தியடைய முடியாமலுள்ள அதேவேளை வேட்பாளரின் பாதுகாப்பு,மற்றும் சில ஆயுதக்குழுக்கள் தேர்தல் நடவடிக்கைகளிற்கு இடையூறு விளைவித்து வருவதாகவும் அவர் சுட்டு காட்டினார். -வீரகேசரி இணையம் -
-
- 3 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தாக்குதல்களைத் தொடர்ந்து அரசாங்கம் அந்தப் பகுதியில் 8,000 படையினரை குவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
யதார்த்தமாகச் சிந்திக்கக்கூடாதா? 22.01.2008 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் லூயிஸ்ஆர்பர் அம்மையாருக்கு எதிராகக் கொழும்பில் நாளை ஆர்ப் பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஜாதிக விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) ஏற்பாடு செய்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இதனை முன்னின்று நடத்தவிருப்பவர் ஜே.வி.பி யின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ஸ. ஆவேச மாகப் பேசுவதிலும், தமது ""கோணங்கி'' நியாயங் களை முன்னிலைப்படுத்தி மக்கள் ஆதரவைத் திரட்டுவதிலும் ""கெட்டிக்காரர்'' என்ற பெயரும், மதிப் பீடும் அவருக்கு உண்டு. இது பரவலாகவும் பொது வாகவும் பேசப்படுவதும் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக இனவாதத்தைக் கொட்டுவதிலும் அவர் பலே பேர்வழி. இலங்கையில் தொடரும் வன்முறைகளால் பொது மக்…
-
- 2 replies
- 1.5k views
-
-
கிழக்கு உள்ளூராட்சித் தேர்தல்: தமிழ்க் கூட்டமைப்பு இன்று முடிவு [Wednesday January 23 2008 07:36:36 AM GMT] [யாழ் வாணன்] மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், உயர்நீதிமன்ற வழிகாட்டலின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் நேற்று முன்தினம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இத்தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாடு குறித்து கூட்ட மைப்பு இன்று தீர்மானம் எடுக்கவுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு இது தொடர்பில் இன்று கூடி ஆராய்ந்து இறுதி முடிவை மேற்கொள்ளும் என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான என். சிறிகாந்தா நேற்றுத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் …
-
- 0 replies
- 668 views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 14 replies
- 2.9k views
-
-
இன நெருக்கடிக்கான இறுதித் தீர்வுத்திட்டத்தை தயாரிப்பதற்காக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் உருவாக்கப்பட்ட அனைத்து கட்சிக்குழு எந்தவித தீர்வுத்திட்டத்தினை தயாரிப்பதில் தோல்வி கண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த அனைத்து கட்சிக்குழு இதுவரை 58 தடவைகள் ஒன்றுகூடி தீர்வுத்திட்டம் குறித்து ஆராய்ந்த போதும் இறுதியில் எதுவித முடிவையும் எட்ட முடியவில்லை என்று அனைத்து கட்சிக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தீர்வுத்திட்டம் அமைய வேண்டும் என்று இறுதிக்கட்டத்தில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொடுத்த அழுத்தமே அனைத்து கட்சிக்குழுவின் இதுவரையான முயற்சிகள் தோல்வியில் முடியக்காரணமாக அமைந்து…
-
- 0 replies
- 854 views
-
-
இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவ வழியில் தீர்வினைக் காணமுடியும் என்று தான் நம்பவில்லை என இலங்கை ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சரும், முப்படைகளின் தளபதியுமாகிய மஹிந்த ராஜபக்க்ஷ இன்று தெரிவித்திருக்கிறார். செவ்வாய்க் கிழமையன்று அலரி மாளிகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பத்திரிகையாசிரியர்கள் ஆகியோருடன் நடத்திய விசேட சந்திப்பொன்றின்போது கருத்துவெளியிட்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றே காணப்படவேண்டுமென்று கூறியுள்ள அதேவேளை நாட்டில் பயங்கரவாதத்தினை முற்றாக ஒழிக்க தனது அரசு தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுக்குமென்றும் தெரிவித்தார். அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவிடம் இனப்பிரச்சினைத் தீர்விற்கான ஒரு …
-
- 6 replies
- 2k views
-
-
புதன் 23-01-2008 12:55 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] 19 வயது இளம்பெண் மீது பாலியல் வலோற்காரம் வேலை தேடிச் சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பாலியல் வலோற்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மருதானை தொழில் வழங்கும் முகவர் நிறுவனத்தில் இணைந்து செயற்படும், வெளிநாடுகளில் வேலை வாய்ப்பைத் தேடித் தரும் நிறுவனப் பணியாளர்கள் இருவர் மீது பாலியல் வலோற்காரம் புரிந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்னுக்கு, பாலியல் வலோற்கார குற்றச்சாட்டுக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கும் இருவருமே மருதானை விடுதியில் அப்பெண் தங்குதவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். குறுகியகாலத்தில் கரடியனாறு திரும்பிய இளம்பெண் ந…
-
- 0 replies
- 1.5k views
-
-
கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் இளைஞரொருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக காணாமல் போன இளைஞரது உறவினர்கள் பிரதி அமைச்சர் இராதா கிருஷ்னனிடம் முறைப்பாடு செய்துள்ளனர். காணாமல் போன இளைஞர் யாழ்பாணம் நீர்வேலியை சேர்ந்த மார்கண்டு சுமன்(வயது25) ஆவார். நிர்மாண பகுதியொன்றில் பணியாற்றிவருகிறார்.கடந்த வெள்ளிக்கிழமை மதிய உணவிற்காக வேலையிலிருந்து வீடு திரும்பிய வேளை காணாமற் போயுள்ளதாக அம் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர் இராதா கிருஷ்னன் இவ் இளைஞன் காணாமல் போயுள்ளமை தொடர்பாக விபரங்களை கொழும்பிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளார். -வீரகேசரி இணையம் -
-
- 0 replies
- 844 views
-
-
புதன் 23-01-2008 12:19 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] சிறீலங்கா அரசு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்: வேண்டுகோள் விடுக்கின்றன இந்தியாவும் பிரித்தானியாவும் சிறீலங்கா அரசு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை விரைவில் முன் வைக்கும் என இந்தியாவும் பிரித்தானியாவும் எதிர்பார்க்கின்றன. இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரித்தானிய பிரதமர் கோல்டன் பிரவுண்னும், இந்திய பிரதமர் மன்மோன் சிங்கும் கூட்டாக பேச்சுவார்த்தை நடாத்திவிட்டு வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்ட எதிர்பார்ப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், சிறீலங்காவின் இனப்பிரச்சனைக்கு இராணுவ நடவடிக்கை எப்பொழுதும் தீர்வாக அமையாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கி
-
- 0 replies
- 670 views
-
-
ஞாயிறு 20-01-2008 15:18 மணி தமிழீழம் [முகிலன்] மொனராகல பகுதியில் 2000 சிங்களக் குடும்பங்கள் இடப்பெயர்வு மொனராகலக பகுதில் இருந்து இரண்டாயிரம் சிங்களக் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த சில நாட்களின் முன்னர் நடந்த தாக்குதல்களை அடுத்தே பாதுகாப்பு அச்சுறுத்தலை எழுந்துள்ள நிலையில் இவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 24 replies
- 3.8k views
-
-
அழுத்தத்துக்கு அடிபணியும் நிலையில் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழு 23.01.2008 "பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை' ஆகியிருக்கின்றது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கலந்துரையாடல். பிரதான எதிர்க்கட்சிகளான ஐ.தே.க., ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அமர்வுகளில் பங்குபற்றுவதில்லை. ஐ.தே.கட்சியும், ஜே.வி.பியும் அதன் அமர்வுகளில் இருந்து முற்றாக விலகிக் கொண்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த அமர்வுகளுக்கு அழைக்கப்படவேயில்லை. இந்த நிலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இப்போதுள்ள பெரும்பாலும் எல்லாக் கட்சிகளுமே அரசில் அங்கம் வகிப்பவைதான். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் "எடுபிடி'களாக அமைச…
-
- 0 replies
- 818 views
-
-
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்குமாறு வலியுறுத்தி நாளை புதன்கிழமை முதல் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவிருப்பதாக ஜே.வி.பி. அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 765 views
-
-
மக்களின் சுயாதிபத்தியம் பாதிக்காத வகையில் ஜனநாயக அரசியல் தீர்வே நாட்டுக்கு அவசியம் - என்கிறார் ரணில் அரசியலமைப்பின் பிரகாரம் மக்களின் சுயாதிபத்தியம் பாதுகாக்கப்படல் வேண்டும் மக்களின் சுயாதிபத்தியம் பாதிக்காத வகையிலான அரசியல் தீர்வொன்றே நாட்டிற்கு அவசியமாகவுள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதி ர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டையும் மக்களையும் பயங்கரவாதத்திலிருந்து மட்டு மல்லாது ஏகாதிபத்தியத்திலிருந்தும் பாதுகாக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார். தேசிய தொழிலாளர் சங்க கட்டிடத்தில் தொழில்தருணர்கள், பல்கலைகழக பேராசிரியர்கள், மற்றும் பேராளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு…
-
- 0 replies
- 669 views
-
-
அதிகாரப் பகிர்வுத்திட்டம் சிறீலங்கா அரசால் முன்வைக்கப்பட்டால், ஆட்சி கவிழ்க்கப்படும்: விமல் வீரவன்ச எச்சரிக்கை சிறீலங்கா அரசு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை முன்வைக்குமேயாயின், அது சிறீலங்கா படையினருக்கு இழைக்கப்படும் துரோகமாகும். வடக்கிலும் கிழக்கிலும் எமது வெற்றிக்காக இராணுவ வீரர்கள் தமது உயிர்களை அர்ப்பணித்து அளப்பரிய தியாகங்களை செய்துள்ளனர். இந்நிலையில் அதிகாரப் பகிர்வுத்திட்டத்தை முன்வைப்பது படையினருக்கு இழைக்கபடும் துரோகம் என்பதோடு, ஐக்கிய சிறீலங்காவை காப்பாற்ற முயன்ற மக்களையும் ஏமாற்றியதாக அமையும். இவ்வாறு ஜனதா விமுக்தி பெரமுனவின் பிரச்சார பேச்சாளர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சிறீலங்கா படைத்தரப்பினருக்கு அடுத்தடுத்துக் கிடைத்த வெற்றியை முறிவடை…
-
- 0 replies
- 865 views
-
-
இன்னும் 2 வாரங்களில் மடுப்பகுதியை கைப்பற்றுவதற்கு இராணுவம் கங்கணம் இனிவரப்போகும் போர் வித்தியாசமானதாக இருக்குமாம் - இக்பால் அத்தாஸ் [Tuesday January 22 2008 06:29:56 AM GMT] [யாழினி] இன்னும் இரண்டு வார காலத்தில் மடுப்பிரதேசத்தைக் கைப்பற்றி விட வேண்டும் என்ற இலக்கோடு, இராணு வத்தினர் அப்பகுதியில் நடவடிக்கை களை முடுக்கிவிட்டிருக்கின்றனர். இப்போதுள்ள நிலையில் இனிவரப் போகும் போர் வெகு வித்தியாசமான தாகவும் மிகப்பயங்கரமானதாகவும் இருக்கும். இவ்வாறு தெரிவிக்கின்றார் பிர பல இராணுவ ஆய்வாளரும் விமர்சகருமான இக்பால் அத்தாஸ்."சண்டே ரைம்ஸ்" பத்திரிகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இதழில் வெளி வந்த தமது பத்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டி ருக…
-
- 5 replies
- 2.7k views
-
-
கற்பிட்டியில் கிளேமோர் குண்டு மீட்பு 1/22/2008 12:09:25 PM வீரகேசரி இணையம் - புத்தளம் கற்பிட்டி பகுதியில் இன்று காலை பொலிஸார் கிளேமோர் குண்டொன்றினை மீட்டுள்ளனர்.இன்று காலை 7.30 மணியளவில் பொலிஸாரிர்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட தேடுதலைல் பொலிஸார் 5 Kg நிறையுடைய கிளேமோர் குண்டொன்றை மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைசகம் தெரிவித்துள்ளது .கிளேமோர் மீட்க்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு கொண்டு செயழிலக்கும் படையினர் விரைந்து குண்டினை செயலழிக்க செய்துள்ளனர்.பொலிஸார் தொடர்ந்தும் தேடுதல் மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைசகம் மேலும் தெரிவித்துள்ளது.
-
- 1 reply
- 1k views
-
-
மொனராகலையில் மேலும் 2000 பேர் ஊர்காவல் படைக்கு சேர்க்கப்படுவர் மொனராகலை மாவட்டத்தின் பாதுகாப்பினை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இரண்டாயிரம் ஊர்காவல் படையினரை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் இரண்டாயிரம் ஊர்காவல் படையினர் புத்தல, தனமல்வில பகுதிகளில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மொனராகலை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இளைஞர், யுவதிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு குறுகிய கால இராணுவப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு, நியமனங்களும் வழங்கப்படவுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேநிலையில், மொனராகலை மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், மாவட்ட வைத்திய…
-
- 3 replies
- 1.3k views
-
-
மன்னார் பாலைக்குழியில் முன்நகர்வுத் தாக்குதலை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்த்தாக்குதலால் கடும் இழப்புக்களையும் சேதங்களையும் சந்தித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
மன்னாரின் பெருநிலப்பரப்பு மற்றும் தீவு ஆகியன இணையும் நிலப்பரப்புத் துண்டுகளில் ஒன்றாக இருக்கின்ற வங்காலைப் பிரதேசம் அச்சங்குளத்தில் சிறிலங்காப் படையினர் "புதைக்கின்ற" செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2.6k views
-
-
பாகிஸ்தானின் உயர்மட்ட இராணுவக்குழு இன்று சிறிலங்காவிற்குச் சென்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 663 views
-
-
சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் உள்ள தனமன்வில காட்டுப்பகுதியில் இன்று பிற்பகல் நடைபெற்ற நேரடி மோதலில் 2 சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 904 views
-
-
மணலாறு கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 716 views
-
-
பணத்திற்காக பயங்கரவாதிகளுக்கு உதவுவதற்கு சிங்களவர்களில் சிலர் தற்போது முன்னிற்கின்றனர் [21 - January - 2008] * ஹொரணையில் பிரதமர் தெரிவிப்பு சிங்கள மக்களில் சிலர் பணத்துக்காக பயங்கரவாதிகளுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கவும் சேவைகளை செய்யவும் ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, தாய் நாட்டை காட்டிக் கொடுப்பதென்பது பெற்றோரைக் காட்டிக் கொடுப்பதற்கு சமனானதென்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஹொரணையில் வெள்ளிக்கிழமை புதிய பொலிஸ் கட்டிடத்தை திறந்துவைத்து பேசும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அவர் இங்கு மேலும் பேசியிருப்பதாவது; "தெற்கில் நிராயுதபாணிகளாகவிருக்கும் பொதுமக்கள் கொலை செய்யப்படுவதை அரசாங்கம் வன்மையா…
-
- 10 replies
- 3.1k views
-
-
வீரகேசரி இணையம் - யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக விலகியதை கண்டித்தும் ஈழத் தமிழர் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் நேற்று பட்டினிப் போராட்டம் இடம்பெற்றது. திராவிட இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பட்டினிப் போராட்டத்தில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர். இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் இந்த போராட்டத்தில் கவிஞர் மேத்தாவும் பங்குபற்றினார். இங்கு கருத்து தெரிவித்த திராவிட இயக்கத்தின் தலைவர் சுப. வீராபாண்டியன், யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒரு தலைப்பட்சமாக விலகியுள்ள இலங்கை அரசாங்கம் ஈழத் தமிழ் மக்களை கொன்று குவித்து வருகின்றது. எனவே இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு ஈழத் தமிழர்கள் அ…
-
- 1 reply
- 1.1k views
-