ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
வவுனியாவில் மூன்று படையினர் பலி வவுனியா, நாவற்குளம் களமுனையின் சூனியப் பிரதேசத்தில் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறீலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலை 10.15 அளவில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடத்திலேயே மூன்று படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். சூனியப் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதால், கொல்லப்பட்ட படையினரின் உடலங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை படையினருக்கு ஏற்பட்டுள்ளது. சூனியப் பிரதேசத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலுக்கான தயார்படுத்தலில் ஈடுபட்டபோது படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகின்றது. கடந்த 17ஆம் நாளன்றும் இதே…
-
- 0 replies
- 896 views
-
-
வெள்ளி 22-02-2008 18:02 மணி தமிழீழம் [தாயகன்] போகொல்லாகம 12 மாதங்களில் 24 நாடுகளுக்குப் பயணம் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம கடந்த வருடம் 24 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருப்பதாக, கொழும்பின் ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவற்றில் சில நாடுகளுக்கு றோஹித போகொல்லாகம பல தடவைகள் சென்றிருப்பதாகவும், சில பயணங்கள் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன. சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகமவின் இந்தப் பயணங்களுக்கு 16 இலட்சத்து, 74 ஆயிரத்து, 200 ரூபா வரையில் விமானச்சீட்டுக்கு மட்டும் செலவாகி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ்,…
-
- 6 replies
- 1.6k views
-
-
கிழக்குத் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் நாங்களே. ஆகவே எமது பங்பகளிப்பின்றி சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் பெயரில் கூட்டங்களைக் கூட்டி, தீர்வு யோசனைகளை எட்டுவது பொருதமற்றது. எனவே, அத்தகைய எத்தனங்களை உடன நிறுத்துங்கள்.' இவ்வாறு கோரும் கடிதம் ஒன்றைத் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் (பிள்ளையான் குழு) தலைவரான நேசன் சந்திரகாந்தன் மஹிந்தவுக்கு அனுப்பி வைத்துள்ளார் என நம்பகரமாக அறிய வருகின்றது. அந்தக் கடிதத்தில் பிள்ளையான் தெரிவித்துள்ள முக்கிய விடயங்களின் சாராம்சம் வருமாறு : கிழக்கு மாகாணத் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் நாங்கள் தான். இதனை நாம் தேர்தல மூலம் நிரூபிப்போம். இப்போது நடக்கும் உள்ளுராட்சித் தேர்தல்களிலும், இனி நடக்கும் மாகா…
-
- 4 replies
- 1.8k views
-
-
கிழக்கில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் உதவியுடன் இயங்கும் ஆயுதக் குழுவொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய முஸ்லிம் ஆயுதக்குழுவை அரசியல் சக்தியொன்று இயக்கி வருவதாக அந்த அமைப்பு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வன்முறைச் செயல்களில் ஈடுபடும் சிலருக்கு எதிராக மாத்திரம் பொலிஸார் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்த அரசாங்க அமைச்சர், ஆயுததாரிகளைக் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்கு பல்வேற…
-
- 1 reply
- 1.3k views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் கூட்டணி அமைத்து செயற்படுவது குறித்து ஆராய்ந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
போர் குறித்து இன்று வெளியிடப்பட்டு வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 2.3k views
-
-
ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவது செனட்டர் ஹிலாரி கிளின்டனா அல்லது பராக் ஒபாமாவா என்பது குறித்து சுவாரசியம் காரணமாக உலகம் முழுவதும் அமெரிக்க அரசியலை நோக்கி ஈர்க்கபட்டுள்ள அதே வேளை, இலங்கையிலும் இந்த பிரச்சாரம் வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெற்றறுள்ளதாக இணையத்தள ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுளது. 'அமெரிக்கத் தேர்தல் மூலம் இலங்கைக்கு என்ன நன்மை' எனத் தலைப்பிடப்பட்ட ஆய்விலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பயங்கரவாதப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள மஹிந்த அரசு, அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியில் இடம் பெறும் போட்டியில் ஆர்வம் காட்டாத போதிலும், ஜனாதிபதி தேர்தலில் ஜ…
-
- 4 replies
- 3.1k views
-
-
இறந்துபோன சமாதானத்தின் பிறந்த நாள் -ப.துஸ்யந்தன்- இறந்துபோன குழந்தை ஒன்றிற்கு இன்று (22-02-08) பிறந்த நாள். மகிழ்வோடு கொண்டாட வேண்டிய இத்தினத்தை கவலையோடு நினைத்துப் பார்க்கிறோம். 22-02-2002 அன்று சிறிலங்கா அரசுடன் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டு பிறப்பே அந்தக் குழந்தை. நீண்ட போர் முழக்கத்திற்குள் சிக்கித் தத்தளித்த இலங்கைத்தீவை சமாதான பூமியாக்குவோம் எனும் நல்ல நோக்கத்தோடு நகர்ந்த சர்வதேசத்தின் முயற்சிக்கும் சிங்கள தேசத்தின் இராணுவ வீழ்ச்சிக்கும் சாட்சியாக உதித்த அந்த சமாதான உடன்படிக்கைக்கு பிறப்பிலிருந்தே இனவாதம் எனும் கொடிய புற்றுநோய் பீடித்து இருந்தது. அந்தக் குழந்தையின் கவர்ச்சியால் அந்த நோய் குறித்துப் பலர் அறிந்திருக்காவிட்டாலும…
-
- 2 replies
- 2.5k views
-
-
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் டென்னிஸ் பெரேராஇதேசியப் பிணக்குக்குத் தீர்வு காண்பது தொடர்பாக வார மத்தி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டிருக்கின்றார். ""இந்தப் பிணக்குக்கு எவ்வாறு தீர்வு காணப்பட முடியும்?'' என்று அவரிடம் கேட்கப்பட்டது. ""போரினால் அல்ல. ஆனால் பேச்சுகள் மூலம்'' என்று பதிலளித்த முன்னாள் இராணுவத் தளபதி அதை ஒட்டிய சில பட்டறிவுப் பாடங்களையும் முன்வைத்திருக்கின்றார். ""இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் உலகில் ஏறத்தாழ இருநூற்றி நாற்பது கிளர்ச்சிகள் இடம்பெற்று வந்துள்ளன. ""அவற்றில் மூன்றே மூன்று கிளர்ச்சிகள் மட்டுமே யுத்தம் மூலம் எதிர்ப் போராட்டம் வாயிலாக வெற்றிகரமாக அடக்கப்பட்டிரு…
-
- 1 reply
- 1.4k views
-
-
மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வன்முறைச் சம்பவங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளிலிருந்து விலகிக் கொள்வதாக மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம்; தெரிவித்துள்ளது. ஆயுதந்தரித்த குழுக்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டிருப்பதன் மூலம் நியாயமானதும், சுதந்திரமானதுமான தேர்தலை நடாத்த முடியுமா என்பது குறித்து சந்தேகம் நிலவுவதாக அந்த அமைப்பின் தலைவர் பாக்கியசோதி சரணவமுத்து தெரிவித்துள்ளார். மேலும், தற்போது பகுதியில் நிலவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேர்தல் ஒன்றை நடாத்தக்கூடிய வகையில் இல்லை எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக தேர்தல் இடம்பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரும், தேர்தல் நட…
-
- 0 replies
- 906 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தில் மூன்று அமைச்சர்களுக்கான நியமனத்தை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று வெள்ளிக்கிழமை வழங்கியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 734 views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கைக்க்கு பிளாஸ்டிக் சாக்குகள் மற்றும் மருந்துப்பொருட்களை கடத்த முயற்சித்த நால்வரை தமிழக கியூ பிரிவு பொலிசாவு முன்தினம் கைதுசெய்தள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான மருந்துப்பொருட்கள் கைபற்றப்பட்டள்ளதுடன் அவர்களது வாகனங்களும் கைபற்றப்பட்டள்ளன. இராமநாதபுரம் அருகே சோகையன் தோப்பு கடற்கரைப்பகுதியில் கியூபிரிவு பொலிஸார் முன்தினம் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பொலிஸார் விசாரித்தனர். அவர்களுக்கு பின்னால் வந்த மாருதி வனை பொலிஸார் சோதனையிட்டபோது அதில் மருந்துவர்கள் பயன்படுத்தும் உடைகள்,கையுறைகள், தொப்பிகள், முக அழகுக் கிரீம்கள் என்பன காணப்பட்டன. குறித்த வேனை சோதனையிட்டுக்கொண்டிருந்த…
-
- 0 replies
- 761 views
-
-
"மிகின் எயார்" வானூர்தி சேவைக்கென வாடகைக்கு அமர்த்தப்பட்ட வானூர்தி ஒன்று அதன் உரிமையாளரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. துருக்கி நாட்டின் "பெஸ்ட் எயார்" நிறுவனத்தினம் ஏ 321 என்ற வானூர்தியை "மிகின் எயார்" நிறுவனம் கடந்த வருடம் மார்ச் மாதம் 26ம் நாள் வாடகைக்கு அமர்த்தியிருந்தது. இரு நாட்டு வானூர்தி நிறுவனங்கள் நிதி கொடுக்கல் தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டில் அடிப்படையில் "மிகின் எயார்" நடந்துகொள்ளத் தவறியதன் அடிப்படையில் துருக்கி நாட்டுக்கு வானூர்தி கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த வானூர்தி தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த மாதம் மும்பையில் அவசரமாக தரையிறங்கியதும் குறிப்பிடத்தக்கது. இதேபோன்று பல்கேரியாவிடம் வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஏ 320 வ…
-
- 0 replies
- 971 views
-
-
இனவெறியில் படையில் இணைந்து உயிர் துறந்த பிக்கு ஆர்.எம். சஞ்ஜீவ பண்டார என்ற இயற் பெயருடைய கற்றலியெத்த பன்சலையைச் சேர்ந்த 19 அகவையுடைய துணுகேவத்தை சுமண தேரர் என்ற பௌத்த துறவிஇ மன்னார் அடம்பன் மோதலில் கொல்லப்பட்டுள்ளார். பௌத்த துறவியாக இருந்த இவர் இனவெறி காரணமாக விடுதலைப் புலிகளுடன் போராடுதற்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் படையில் இணைந்திருந்தார். மூன்று மாதங்கள் பயிற்சிபெற்ற நிலையில்இ கடந்த மாதம் களமுனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இவர்இ கடந்த வியாழக்கிழமை அடம்பனில் கொல்லப்பட்டார். தனது மகன் படையில் இணைந்தமை தமக்கு விருப்பமில்லை எனவும்இ படையில் இணைந்த பின்னரே அது தொடர்பாக தமக்குத் தெரிய வந்ததாகவும் கொல்லப்பட்ட பிக்குவின் தாயாரான டபிள்யூ.ஜி. பொடி மெனிக…
-
- 4 replies
- 2.7k views
-
-
வெள்ளி 22-02-2008 16:41 மணி தமிழீழம் [தாயகன்] 13 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் 18-02-2008 அன்று சிறீலங்காப் படையினருடன் இடம்பெற்ற மோதல்களில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். 1) லெப்ஃரினன்ட் அகக்கதிர் என்றழைப்படும் பேக்காடு, ஒலுமடு வடக்கு, நெடுங்கேணி, வவுனியாவை நிலையான முகவரியாகவும், முல்லைத்தீவு. புதுக்குடியிருப்பு, கோம்பாவில், இரண்டாம் வட்டாரம், கருணன் குடியிருப்பை தற்போதைய முகவரியாகக் கொண்ட கங்கையா தியாகராசா, 2) லெப்ஃரினன்ட் கண்ணாளன் என்றழைப்படும் யாழ் மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், முல்லைத்தீவு. விசுவமடு, சுட்டிக்குளம், நாதன் குடியிருப்பை இடைக்கால முகவரியாகவும் கொண்ட தியாகராசா மயூரன், 3) கப்டன் நல்வேலன் என்றழைக்கப்படும் மட்டக்களப்பு…
-
- 4 replies
- 2.6k views
-
-
கிளிநொச்சி மாவடத்தின் பூநகரிப் பகுதி மீது இன்று காலை சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்ட கோரக்குண்டு வீச்சில் ஐந்து அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 13பேர் படுகாயமடைந்துள்ளனர். பூநகரியின் கிராஞ்சிப் பகுதியில் இருந்த மக்கள் குடியிருப்புக்கள் மீதே சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சு வானூர்திகள் தாக்குதலை நடத்தியுள்ளன. இதன்போது காயமடைந்தவர்கள் முழங்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
-
- 5 replies
- 2.5k views
-
-
சிறீலங்காவின் சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் ஆறாண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்டது. இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தனது பணியகத்தில் வைத்து 20.02.2002 அன்று கையொப்பமிட்டார். 22.02.2002 அன்று சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வவுனியா அரச செயலகத்தில் வைத்துக் கையொப்பமிட்டார். இந்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தும் இருதரப்பின் விவகாரங்களை கவனிப்பவர்களாக நடுநிலமையாளர்களாக நோர்வே நாட்டவர் இருந்தனர் என்பது பலரும் அறிந்த விடயம் தான். இன்று சிறீலங்காவின் அரசதரப்பினர் ஆறாண்டுகளை தாண்டவிடாது ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகிய நிலையில் நாம் இந்த ஒப்பந்தத்தில் எதனைப் பார்க…
-
- 0 replies
- 1.8k views
-
-
அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக சமூகத்தினரால் இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ள கொசோவோ- கடந்த காலங்களில் ஒரு பயங்கரவாதத் தரப்பாக அறிவிக்கப்பட்டிருந்ததனை சுட்டிக்காட்டி கொசோவோவின் சுதந்திரப் பிரகடனமானது ஏனைய சுதந்திரப் போராட்ட கிளர்ச்சியாளர்களுக்கு பல்வேறு வழிகாட்டல்களை எடுத்தியம்பியுள்ளது என்று லண்டனிலிருந்து வெளியாகும் "தமிழ் கார்டியன்" ஏட்டின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் மொழி உலகெங்கும் வியாபித்துள்ள போதிலும் சிங்களமொழி இலங்கைக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது - விமல் வீரவன்ச கவலை 2/22/2008 5:41:50 PM வீரகேசரி இணையம் - சிங்களமொழியில் சட்டத்துறையினை பயில்வதற்கு தடைவிதிக்கப்படுகின்றது. 20 வருடங்களுக்கு முன்னர் இந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டத்துறையினை தேர்ந்தெடுத்திருக்க மாட்டார் என்று ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க கற்கை நிலையத்தில் இடம்பெற்ற தேசிய மொழி அதிகார சபையின் அறிக்கை வெளியீட்டு விழாவிலேயே விமல் வீரவன்ச எம்.பி. இதனைத் தெரிவித்தார். நேற்று முன்தினம் சர்வதேச தாய்மொழி தினமாக உலகம் முழுதும் அனுஷ்டிக்கப்பட்டது. இ…
-
- 0 replies
- 1.4k views
-
-
வன்னிக் களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதலில் 3 படையினர் கொல்லபட்டுள்ளனர் என்றும் 20 படையினர் காயமடைந்துள்ளனர் என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 0 replies
- 911 views
-
-
யேர்மனிய அரசியற்கட்சியினருடன் தமிழ்மக்கள் சந்திப்பு. யேர்மனி டோட்முன்ட் நகரில் பல்கலைக் கழக தமிழ்மாணவர்களின் ஏற்பாட்டில் யேர்மனிய நாட்டவர்களுடனான சந்திப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. இச்சந்திப்பிலே 50 ற்கும் மேற்பட்ட யேர்மனியர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்களில் டோட்முன்ட் நகரசபை உறுப்பினர்கள்இ அரசியல் கட்சிப் பிரதிநிதிகள்( ஊனுருஇ ளுPனுஇ குனுP)இ உதவி நிறுவனப் பிரதிநிதிகள்(உயசவையளஇ ர்டைகந கüச ளுநடடிளவாடைகந) இ சிறுவர்பராமரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ( மiனெநசபயசவநn) மற்றும் வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டனர். இதன்போது சிறார்களின் இசைநிகழ்வும்இ தமிழர்களின் உணவகைகளும் வழங்கப்பட்டது. இவர்களிடம் பல்கலைக் கழக மாணவர்கள் தமிழர்களின் வாழ்வியல்இ பண்பா…
-
- 2 replies
- 1.6k views
-
-
புலிகளை ஆதரிக்கும் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுத்தால் அழகிரி மீதும் நடவடிக்கை எடுக்க நேரிடும் - ஜெயலலிதா குற்றச்சாட்டு 2/21/2008 5:20:04 PM வீரகேசரி இணையம் - விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுத்தால் தனது மகன் அழகிரியின் மீதும் நடவடிக்கை எடுக்க நேரிடு÷மா என்று முதலமைச்சர் கருணாநிதி அஞ்சுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தனது மகன் அழகிரியின் பிறந்த நாளையொட்டி மதுரையிலும் தென் மாவட்டங்களிலும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இராணுவ உடையில் அழகிரியின் தலையை ஒட்டி களப்போராளி என்ற டிஜிட்டல் பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.இக்கார…
-
- 4 replies
- 2.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை சிறிலங்கா அரசாங்கம் கைது செய்யும் என்பதனை தான் நம்பவில்லை என்று சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தொலைக்காட்சி ஒன்றின் வர்த்தக நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.2k views
-
-
அரசாங்கத்தினால் 2008 ஆம் ஆண்டிலும் போருக்கு முடிவுகட்ட முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 1.7k views
-