ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
மன்னார் - மதவாச்சி வீதியில் கிளைமோர்: நான்கு படையினர் படுகாயம் [Monday December 31 2007 12:49:52 PM GMT] [யாழினி] மன்னார் - மதவாச்சி வீதியில் உள்ள கலையாறு பாலத்தடியில் சிறீலங்காப் படையினரின் தொடரணியை இலக்கு வைத்து இன்று மதியம் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மூன்று சிறீலங்கா கடற்படையினரும் ஒரு தரைப்படை சிப்பாயும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அநுராதபுர மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஹோகமை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் [Monday December 31 2007 10:15:27 AM GMT] [யாழினி] ஹோகமை பொலிஸ் நிலையத்தின் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்ப…
-
- 0 replies
- 663 views
-
-
போராண்டு பிறக்கின்றதா? [30 - December - 2007] -விதுரன்- வடக்கே மோதல்கள் தீவிரமடைந்து வருகிறது. வவுனியா , மன்னார் மற்றும் யாழ்.குடாவில் முன்னரங்க நிலைகளில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. தினமும் ஒரு முனையில் நான்கிற்கும் மேற்பட்ட தடவைகள் மோதல்கள் நடைபெறுகிறது. வன்னிக்குள் எப்படியாவது புகுந்துவிட வேண்டுமென படையினர் பகீரதப் பிரயத்தனத்திலீடுபட்டு வருகின்றபோதும் அது சாத்தியப்படுவதாகத் தென்படவில்லை. கிழக்கைக் கைப்பற்றியது போல் வடக்கையும் இலகுவாகக் கைப்பற்றிவிடலாமென நினைத்து வடக்கில் அரசு பாரிய படை நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால், வடக்கே கடும் சமர் நடைபெற்று வருகையில் கிழக்கே மட்டுமல்ல தெற்கிலும் ஊடுருவியுள்ள புலிகளால் அரசும் படையினரும் பெரும் நெருக்கடிகளை எதிர…
-
- 6 replies
- 2.2k views
-
-
ஒட்டிசுட்டான், முத்தயன்கட்டுகுளம் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றை இன்று காலை 7:45 மணிக்கு தமது விமானப்டையின் ஜெட் விமானங்கள் வெற்றிகரமாக தாக்கியழித்ததாக விமானப் படை குரூப் கப்டன் தெரிவித்துள்ளதாக இங்கு ஊடகங்கள் ஓலமிடுகின்றன. மேலதிக விபரங்கள் ஏதாவது???? ஜானா
-
- 0 replies
- 1.4k views
-
-
அமைச்சர் மேர்வின் சில்வா குழுவினர் ரூபவாஹினிக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்த சமயம் அங்கு தாக்குதலுக்கு உள்ளான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பணிப்பாளருக்கு இப்போது பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கின்றது. ரூபவாஹினி முகாமைத்துவப் பணிப் பாளரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளைத் தொடர்ந்தே இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு வழங்கப்பட்டிருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் பிரிய தர்ஷன யாப்பா தெரிவித்தார். இதனடிப்படையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் செய்திப் பணிப்பாளரின் பாதுகாப்புக்காக நேற்றுமுதல் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் யாப்பா தெரிவித்தார் uthayan.com
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினரின் பாரியளவிலான முன்நகர்வு நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் படைத்தரப்பிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 20-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 3.6k views
-
-
-
நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே கடந்த வாரம் மூண்ட கடற் சமரில் காணாமல் போன படையினரின் சடலங்கைளத் தேடும் பணிக்கு தமிழக மீனவர்களின் உதவி கோரப்பட்டிருக்கின்றது. காணமற்போன கடற்படையினர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கபடும் நிலையில் அவர்களின் சடலங்களை தேடும் பணியில் உதவிட தமிழக மீனவர்களின் உதவியை நாடியுள்ளதாக தமிழக செயதித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டுச் சென்று இந்திய இலங்கை எல்லையில் நேற்று முன்தினம் மீன் பிடித்தக் கொண்டிருந்த வேளை தமிழக மீனவர்களை அணுகிய கடற்படையினர் அந்தப் பகுதியில் ஏதேனும் உடல்கள் மிதந்து கொண்டிருந்தால் அது பற்றி தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர் எனத் தெரிவிக்கப்…
-
- 0 replies
- 1.4k views
-
-
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் காயமடைந்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை பழ. நெடுமாறன் கூறுகின்றார் [sunday December 30 2007 10:15:10 PM GMT] [யாழ் வாணன்] விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் காயமடைந்ததாக கூறப்படும் தகவல்களில் உண்மையில்லை. ஏற்கனவே இதனைப்போல் நான்கு முறை வதந்திகள் வந்துள்ளன என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்களுக்கு உதவுவதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சி எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தினார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது ஈழத்தில் பட்டினியால் வாடும் மக்களுக்காக செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவு மற்றும் மருந்துப்பொருள்களை அனுப்ப இந்திய…
-
- 1 reply
- 1k views
-
-
அங்கு வாழும் மக்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். இவ்வாறு ஐ.தே.கவின் பா.உ தி. மகேஸ்வரன் நேற்றைய சக்தி டிவியில் நடந்தப்பட்ட 'மின்னல்' நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். மேலும் இதனை மிக விரைவில் நாங்கள் சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வோம். நான் யாழில் நின்ற போது பலரை அடையாளங் காணக் கூடியதாக இருந்தது. அவர்களின் பெயர் விவரங்களை நாடாளுமன்றம் கூடும் போது வெளியிடுவேன். அரசின் அங்கம் வகிக்கின்ற ஒருசில அமைச்ர்களுடைய ஆதரவாளர்கள மற்றும் அவர்களுடைய செயற்பாடுகள் சமபந்தமாகவும் நாடாளுமன்றில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கவுள்ளேன். இராணுவத்த துணைக் குழுக்களின் அச்சுறுதல்களால் குடாநாட்டில் இருந்து மக்கள், தொழில் அதிபர்கள் எனப் பலர் அங்கிருந…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்காவின் சிங்களப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுடன் ஒப்பிடும் போது தமிழ்ப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. அரசின் பொருளாதாரத் தடையும், குறைந்த நிதி ஒதுக்கீடுகளும் தான் அதற்கான காரணம் என்று மெடிக்கல் ஜேர்னல் ஒஃப் அவுஸ்திரேலியாவில் எழுதிய கட்டுரையில் சிறார் மருத்துவப் பேராசிரியர் ஜோன் வைற்கோல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 811 views
-
-
புலிகளை 6 மாதத்திற்குள் துடைத்தழிப்போம் - சிறீலங்கா இராணுவத் தளபதி சிறீலங்காவின் இராணுவத்தளபதி ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் 6 மாதத்திற்குள் விடுதலைப்புலிகளின் தலைவரை கொல்வோம் எனவும் தினமும் 10 விடுதலைப் புலிகள் என்ற அடிப்படையில் கொல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் விடுதலைப் புலிகளை பலமுனைகளில் முற்றுகைக்குள் வைத்துள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் இன்னமும் 3000 வரையான உறுப்பினர்களே இருப்பதாகவும் இவர்களை தமது இராணுவம் துடைத்தழித்துவடும் எனவும் சூளுரைத்துள்ளார். விடுதலைப்புலிகளை தாம் 50 சதவீதம் அழித்துவிட்டதாகவும் மீதம் உள்ளோரை எதிர்வரும் வருடத்திற்குள் அழித்துவிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார். http://www.pathiv…
-
- 6 replies
- 1.6k views
-
-
புலிகள் இயக்கம் தடைசெய்யப்படுமானால் பேச்சுக்கான கதவை அரசே மூடுவதாக அமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு [sunday December 30 2007 10:23:49 PM GMT] [யாழ் வாணன்] தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்படுமானால், பேச்சுவார்த்தைக்கான கதவை அரசாங்கமே இழுத்து மூடுவதாக அமையும். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல், யுத்தத்தை நிரந்தரமாக நிறுத்த முடியாது. தொடரும் யுத்தத்தின் மறுதரப்பாக புலிகள் இயக்கமே இருப்பதால், அவர்களை தடைசெய்துவிட்டு அரசாங்கம் யாருடன் பேச்சு நடத்தப்போகிறது? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான என். ஸ்ரீகாந்தா கேள்வியெழுப்பினார். போர் நிறுத்த உடன்படிக்கை ரத்துச்செய்யப்படுமானால…
-
- 0 replies
- 631 views
-
-
ஆழிப்பேரலை அனர்த்த நிதியை அள்ளிச்சென்றமை எங்ஙனம்? முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வினா கொழும்பு, டிச. 31 ஆழிப்பேரலை அனர்த்தத்தைத் தொடர்ந்து புனர்வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகளுக்காக வழங்கப்பட்ட பெருமளவு நிதி காணாமல் போனமை குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆச்சரியம் வெளியிட்டுக் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி பதவியிலிருந்து 2005 நவம்பரில் நான் பதவிவிலகிய காலத்தில் ஆழிப்பேரலை அனர்த்த நிதியை மத்திய வங்கியில் ஜனாதிபதி நிதியின் கீழ் தாம் வைப்பிலிட்டு வைத்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆழிப்பேரலைக்குப் பின்னர் பதவியிலிருந்த 11 மாத காலப் பகுதியிலும் தான் முழுமையான கணக்குகளை பேணி வந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சுமார் 250 கோடி ரூபாவு…
-
- 1 reply
- 869 views
-
-
இன முரண்பாட்டு கற்கைகளுக்கான பேர் கோப் மன்றத்தின் பணிப்பாளர் நோபேட் ரெபேர்சை நாட்டைவிட்டு வெளியேறுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. இவர் இன்று திங்கட்கிழமை நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜேர்மன் நாடுகளின் நிதி உதவியில் இந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் இயங்கி வந்தன. மன்றத்தின் பணிப்பாளர் நோபேட் மீது ஜே.வி.பி. அண்மைக்காலமாக கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தது. இந்த நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தலையிட்டார் என்ற குற்றச்சாட்டின்பேரிலேயே இவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று குடிவரவு, குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மே மாதம் பாராளுமன்ற தெரிவுக் குழு முன்ப…
-
- 0 replies
- 814 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளை ஓரம் கட்டிவிட்டு, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது திஸ்ஸ அத்தநாயக்க வீரகேசரி நாளேடு தமிழீழ விடுதலைப்புலிகளை ஓரம் கட்டிவிட்டு, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. அமைதி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதாயின் புலிகளின் பங்களிப்பு இன்றியமையாதது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார். அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுக்கும் அதேநேரம், இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண அரசியல் வழிமுறையில் முயற்சிக்க வேண்டும். யுத்தத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அமைதி பேச்சுவார்த்தைகளுக்கும் அரசாங்கம் சம அளவில் வழங்கவேண்டும் என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை அரசாங…
-
- 1 reply
- 880 views
-
-
யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு நடக்கின்றது இறுதிக் கிரியைகள் 31.12.2007 யுத்த தீவிரத்துக்கு வழிசெய்த 2007 ஆம் ஆண்டு இன்றுடன் கழிய நாளை புதுவருடம் 2008 ஆம் ஆண்டு பிறக்கின்றது. போர் மேகங்கள் சூழ்ந்து, கொõடூர வன்முறைப் புயலாக யுத்தம் வெடிக்கும் சூழலில் புத்தாண்டுக்குள் நுழைகிறோம். கடந்த சுமார் ஆறுவருடங்களாகப் பெயரளவுக்கேனும் நின்று தாக்குப்பிடித்த யுத்த நிறுத்த உடன்பாட்டுக்கு இறுதிக் கிரியை செய்யும் காலம் வந்துவிட்டது என்பதை யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருமே திட்டவட்டமாகவும், தெளிவாகவும் கோடி காட்டி விட்டதால், அது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்புடன் "ஈழ யுத்தம் 4' என்ற அவத்தைக்குள் அவலத்துக்குள் புத்தாண்டில் நாடு பிரவேசிக்கப்போகின்றது. யுத்தநிறுத்த ஒப்ப…
-
- 0 replies
- 847 views
-
-
மகிந்த ராஜபக்ஸ இந்தியாவின் நம்பிக்கையை வென்றுள்ளார் - கோத்தபாய சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலரும் சிறீலங்கா ஜனாதிபதியின் சகொதரருமாகிய கோத்தபாயராஜபக்ஸ அரசுக்கு சொந்தமான சண்டோ ஒப்சேவர் பத்திரிக்கை வழங்கிய செவ்வியில் மகிந்த ராஜபக்ஸவும் இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரது உறவு நிலை நம்பிக்கையாகவும் எல்லாவேளைகளிலும் உயர்நிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஸவால் 2006 ம் அண்டு வடக்கு கிழக்கை பிரித்து இந்தியா இலஙகை ஒப்பத்தத்தை மீறியபோது கூட உறவுநிலை உயர்நிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்காவால் பயிற்சியழிக்கப்பட்ட புலனாய்வு பிரிவின் அதிகாரி ஜம்மிக்க லியனகே மேஜர் ஜெனரலாக பதவியுயர்வு பெற்று கிழக்கு மையத்தின் இராணுவ கட்ட…
-
- 0 replies
- 750 views
-
-
இன்று நண்பகலுக்கு சற்று முன்னாதாக நெடுந்தீவிற்கு தெற்காக உள்ள கடற்பரப்பில் கடற்புலிகளிற்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையே கடுமையான சமர் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் ஒன்று கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. 16 படகுகளைக் கொண்ட கடற்புலிகளின் படகுஅணிக்கு எதிராக கடற்படையினர் தாக்குதலை நடத்திவருவதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இந்த சமர் குறித்த விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. Sea Tigers destroy SLN Dvora attack craft in the seas off Delft island [TamilNet, Wednesday, 26 December 2007, 08:07 GMT] A Sri Lanka Navy Dvora Fast Attac…
-
- 27 replies
- 5.5k views
-
-
மூலம்: http://www.sundaytimes.lk/ கடந்த 10 மாத இராணுவ முன்னெடுப்புகளின் பயனாக மன்னார் கள முனையில் கைப்பற்றப்பட்ட இடங்களில் ஒரு பகுதி. (தடித்த முறிவு உள்ள கோடு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முன்னான நிலைகளைக் குறிக்கிறது, சரிவுக்கோடுகளால் நிழற்றப்பட்ட பகுதி இராணுவத்தால் புதிதாக அல்லது மீளக் கைப்பற்றிய இடங்களைக் காட்டுகிறது.) இவற்றுக்கு மேலதிகமாக வன்னியின் மேற்குக் கரையை ஒட்டிய மன்னார் கள முனையில் பரப்பான் கண்டல் பகுதியில் நேற்றைய தினம் இராணுவம் 1 கிலோமீற்றர் தூரத்தைக் கைப்பற்றியதாக அறிவித்துள்ளது. புலிகள் இப்பகுதியில் கடும் சமர் இடம்பெறுவதாக மட்டும் சொல்லியுள்ளனர். (இச்செய்தியை சுயாதீன ஊடகங்களால் உறுதி செய்ய முடியவில்லை. இப்படம் உட்பட இச்செய்தி சிறீலங்க…
-
- 3 replies
- 3.6k views
-
-
புலிகளால் இந்தியாவிற்கு ஆபத்தா? [30 - December - 2007] -தாரகா- சமீப காலமாக விடுதலைப் புலிகளால் இந்தியாவிற்கு ஆபத்து என்னும் கருத்து மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. இந்தியா, தனது மேலாதிக்க நலன்களுக்காக ஈழத்தின் விடுதலை போராட்டத்தை பயன்படுத்திக் கொள்வதில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நீண்ட காலமாக ஒருவிதமான தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்து வருவதை நாமறிவோம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்த தலையிடாக் கொள்கை என்பது நேரடி அர்த்தத்திலேயே தவிர மறைமுக அர்த்தத்திலல்ல. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் நோக்கிலும் விடுதலைப் புலிகளை தமிழ் மக்கள் மத்தியிலிருந்து பிரித்தாளும் நோக்கிலும் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை அவ்வப்போது செய்தே வந்தி…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையின் முப்படையினருக்கு பயிற்சியளிக்க வெளிநாடுகளிலிருந்து பயிற்றுவிப்பாளர்கள் வரவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. [sunday December 30 2007 02:00:44 PM GMT] [யாழ் வாணன்] இலங்கையின் முப்படையினருக்கும் விஷேட பயிற்சிகளை வழங்குவதற்காக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரேனிலிருந்து முப்படைகளது பயிற்றுவிப்பாளர்கள் மிக விரைவில் இலங்கை வரவுள்ளனர். அமெரிக்காவிலிருந்து கடற்படை மற்றும் இராணுவப் பயிற்றுவிப்பாளர்களும் ரஷ்ய மற்றும் உக்ரேனிலிருந்து விமானப்படை பயிற்றுவிப்பாளர்களும் இலங்கை வரவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மிக விரைவில் இலங்கை வரும் அமெரிக்க பயிற்றுவிப்பாளர்கள் இராணுவ விஷேட கமாண்டோ படையணிகளுக்கும்…
-
- 2 replies
- 964 views
-
-
அழிவு இன்றி ஆக்கம் கிடைக்காது. அழிவை ஆக்கத்திற்கு மாற்றக்கூடிய மனப்பாங்கைக் கொண்டிருக்கின்ற மக்களே வெற்றி அடைவார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 988 views
-
-
ஊரெழு படைமுகாமில் மனிதப் புதைகுழிகள்: கண்காணிப்புக் குழுவுக்கு தகவல் யாழ் ஊரெழு படை முகாமில் சிறீலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படையினரால் சிறை வைக்கப்பட்டுள்ள இளைஞர் ஒருவர் படைச் சிப்பாய் ஊடாக கண்காணிப்புக் குழுவுக்கு அனுப்பி வைத்த தகவலிலேயே இத் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. இதனையடுத்து ஊரெடு படை முகாமில் அமைந்துள்ள வதைமுகாமை பார்வையிட கண்காணிப்புக் குழு கோரிக்கை விடுத்த போதும் அக்கோரிக்கை பலாலி கூட்டுப்படைத் தளத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 0 replies
- 1k views
-
-
கிழக்குப்பிராந்திய படைத்தளபதியாக தரைப்படை, புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரியை சிறிலங்கா அரசாங்கம் நியமித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 664 views
-
-
மன்னார் நகரில் சிறிலங்காப் படையினரால் 10 பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 642 views
-