ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142825 topics in this forum
-
ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட மக்கள் நினைவாகவும், கள்ளப்பாட்டுப் பகுதியில் சாவடைந்த விளையாட்டு வீரர்கள் நினைவாகவும் கள்ளப்பாட்டு இளைஞர் கழகத்தால் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 600 views
-
-
பாலியல் வல்லுறவுக்கு பின்இளம்பெண் படுகொலை-சுந்தரபுரம் பகுதியில் சம்பவம் வீரகேசரி நாளேடு வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இருந்து கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். சுபநாயகி சிங்கராசா என்ற இந்தப் பெண் கற்குளம் என்னுமிடத்தில் காட்டுப்பகுதியில் விறகு பொறுக்கச் சென்றவர்களினால் சடலமாக மீட்கப்பட்டதாகவும் இந்தச் சடலம் உறவினர்களினால் வவுனியா பொலிஸார் மூலமாக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அனுராதபுரம் வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பப்பட்டு சட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதைத் …
-
- 0 replies
- 1.4k views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், இலங்கை விமானத் தாக்குதலில் படுகாயமடைந்திருப்பதால், அவரை இந்தியாவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க விடுதலைப் புலிகள் முயன்று வருவதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 26ம் தேதி கிளிநொச்சியில் உள்ள ஜெயந்திநகர் பகுதியில் இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் பிரபாகரன் படுகாயமடைந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை விடுதலைப் புலிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ஆனால் தாக்குதலில் பிரபாகரன் காயமடைந்தது உண்மைதான், அவர் படுகாயமடைந்திருக்கிறார் என்று சமீபத்தில் மீண்டும் இலங்கை அரசும், பாதுகாப்புப் படையினரும் உறுதியாக தெரிவித்தனர். இந் நிலையில் பிரபாகரன் படுகாயமடைந்த நிலையில் இருப்பதாகவும், அவரது உடல் …
-
- 49 replies
- 6.4k views
-
-
கிழக்கில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தேர்தல் நடத்துவதனை எதிர்த்து வழக்குத் தொடர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 681 views
-
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி அண்மைக் காலங்களில் பொதுநிகழ்ச்சிகளில் பங்குபற்ற ஆரம்பித்துள்ளார். இவ்வாறு அண்மையில் புலிகள் இயக்கத்தால் அமைக்கப்பட்ட முதியோர் இல்லத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் மதிவதனி தலைமை தாங்கி அதனைத் திறந்து வைத்துள்ளார். இந்த முதியோர் இல்லம் கிளிநொச்சில் அன்புச்சோலை என்னும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. முதியோர் இல்லம் எனக் கூறப்பட்டாலும் அந்த நிலையம் உண்மையில் அரச படையினரின் தாக்குதல்களில் உயிரிழந்த புலிகள் இயக்க உறுப்பினர்களின் மனைவிமார், பெற்றோர் உறவினருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகவே அமைக்கப்பட்டதாகும். உயிரிழந்த புலிகள் இயக்கத்தவரின் `மாவீரர் குடும்ப'ங்களின் நலன்களை கவனிப்பதற்காக புலிகள் இயக்கத்தால்…
-
- 11 replies
- 3.3k views
-
-
கடினமான எதுவுமில்லை இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள யாழ். குடாநாட்டில் தொடர்ந்து எவ்வாறு கொலைகள் இடம் பெறுகின்றன என்பதை விளங்கிக்கொள்வது கடினமானதாகவுள்ளது என கொழும்புப் பேராயர் டுலிப் டி சிக்கேரா" குறிப்பிடப்பட்டுள்ளமையானது பேராயர் தமது உணர்வுகளை வெளியிடத் தயக்கம் காட்டுவதாகவே கொள்ளத்தக்கது. ஏனெனில் யாழ். குடாநாட்டில் இன்று இடம்பெறும் கொலைகள், ஆட்கடத்தல்கள், பணப்பறிப்புக்கள், கொள்ளைகள் யாவற்றிற்கும் பொறுப்பு சிறிலங்கா அரசாங்கமும் அதன் ஆயுதபடையினருமே ஆகும். இதனைப் புரிந்துகொள்வது என்பது ஒரு கடினமான விடயமோ காரியமோ அல்ல. யாழ். குடாநாடு 1996 ஆம் ஆண்டில் இருந்து சிறிலங்கா ஆயுதப்படையினரின் பூரண கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இதனை நாம் கூறவில்லை…
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது [Wednesday December 26 2007 12:10:51 AM GMT] [யாழ் வாணன்] கடந்த சில தினங்களாக பெய்த அடைமழை காரணமாக பெரும் பாதிப்பினை எதிர்நோக்கிய மட்டக்கள ப்பு மாவட்டம் நேற்று காலை முதல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நேற்றும் நேற்று முன்தினமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த பிரதேசங்களிலும் மழை பெய்யாததினால் வெள்ள நீர் வடிந்து காணப்பட்டதுடன் வீதிகளின் போக்குவரத்தும் வழமைக்கு திரும்பியிருந்தது. மட்டக்களப்பு பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை மற்றும் கொழும்பு போன்ற தூர இடங்களுக்கான போக்குவரத்து நேற்று வழமைபோன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடை மழை காரணமாக பாதிக்கப்பட்டு அகதி முகாம்கள் மற்…
-
- 0 replies
- 800 views
-
-
மட்டக்களப்பு தேர்தல் மக்களின் கண்களில் மண்தூவும் நடவடிக்கை - ஐ.தே.க [Wednesday December 26 2007 12:07:03 AM GMT] [யாழ் வாணன்] மட்டக்களப்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை அவசர அவசரமாக நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பது மக்களின் கண்களில் மண்ணை தூவும் நடவடிக்கையாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலை நடத்துவதற்கான சூழல் இல்லை. அங்கு மோதல்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்று வருகின்றன என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அரசாங்கம் மக்களுக்கு அளித்துள்ள நத்தார் பரிசே மாவிலை அதிகரிப்பாகும். மாவிலை அதிகரிப்பின் மூலம் மக்களின் வாழ்க்கைச் சுமை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்…
-
- 0 replies
- 616 views
-
-
வவுனியாவில் இரண்டு சடலம் மீட்பு. [Tuesday December 25 2007 10:13:29 AM GMT] [pathma] வவுனியா றாகேந்திரகுளம் பகுதியில் நேற்று இரவு 8.30 மணிக்கும் 9.00மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பொலிசாரால் இரண்டு ஆண்களின் சடலங்களை மீட்டுள்ளனர். இவ்விரு சடலங்களில் ஒருவருடைய உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றைய சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அடையாளம் காணப்பட்டவர். ஐயம்பிள்ளை சடநந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன http://tamilwin.net/article.php?artiId=589...;token=dispNews
-
- 1 reply
- 1.1k views
-
-
பாதுகாப்பு குறைக்கப்பட்டமை பிரபாகரனின் குழுவிற்கு பாதை வெட்டும் செயலாகும் வீரகேசரி நாளேடு பொலிஸ் மா அதிபருக்கு அனுர பண்டாரநாயக்க எம்.பி.கடிதம் எனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டமை என்னை கொலைச்செய்வதற்காக பிரபாகரனின் குழுவிற்கு பாதையை வெட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாகும். எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு பொலிஸ் மா அதிபரும் ஆலோசனை வழங்கியோருமே முழு மையாக பொறுப்பு கூறவேண்டும் என்று கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனுர பண்டார நாயக்க தெரிவித்துள்ளார். தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவிற்கு அனுப்பிவைத்து அவசர கடிதத்திலேயே அனுர பண்டாரநாயக்க எம்…
-
- 4 replies
- 1.9k views
-
-
சமாதானத்தின் தேவன் [ உதயன் ] - [ Dec 25, 2007 05:00 GMT ] இன்று கிறிஸ்மஸ் தினம். சமாதானத்தின் தேவன் அவதரித்த நந்நாள். உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்றைய தினத்தைக் கொண்டாடுகிறார்கள். விடுதலையின்றித் தவிக்கும் மனுக்குலத்தின் ஆத்ம விடுதலைக்காகத் தம்மையே மரணத்துக்கு ஒப்புக் கொடுக்க வந்த கிறிஸ்து பிறந்த தினம்தான் இன்று. சமாதானத்துக்காக மானுட அமைதிக்காக தன் சொல்லாலும், செயலாலும், ஜீவனாலும் நற்பணி புரிந்த எமது ஆண்டவர் அதற்காகவே தமது உயிரையும், உடலையும் கூட அர்ப்பணித்தார் என்பதே அவரது வாழ்வுகாட்டும் சிறப்பாகும். மேசியாவாகிய இயேசு பிறந்ததோ வறிய ஒரு குடும்பத்திலேயே. அதுவும் அகஸ்து அரசனிட்ட அராஜகக் கட்டளைப்படி யோசேப் தனது மனைவியான மரியாளுடன் தனது பிறப்பிடத்துக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையின் போர் சூழ்நிலை குறித்து நத்தார் செய்தியில் பாப்பரசர் கவலை வீரகேசரி நாளேடு வத்திக்கான் நகர், பாப்பரசர் 16ஆம் ஆசீர்வாதப்பர் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிய் நத்தார் தின செய்தியில் இலங்கையின் போர்ச் சூழ்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.சூடானிலிரு
-
- 5 replies
- 1.5k views
-
-
வவுனியா - மன்னார் களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 10 சிறிலங்காப் படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
''தடுமாறும் சர்வதேசமும் தப்பித்த அரசாங்கமும்'' சர்வதேச சமூகம் ஆவலோடு எதிர்பார்த்திருந்த வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பு நிகழ்ந்து விட்டது. 2008ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டினை மலையகக் கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன. யுத்தத்திற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஆறுமுகம் தொண்டமானும் சந்திரசேகரனும் ஆதரவளித்ததை உலகத் தமிழினம் மிகுந்த சோகத்துடன் பார்வையிடுகிறது. இரண்டாவது தடவையாக மறுபடியும் ரணில் குழுவினர் ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைக்குமெனக் காத்திருந்த மேற்குலகம் அது பலனளிக்காமல் இனிப் புதிய அழுத்தங்களை அரசின்மீது செலுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த கயிறு இழுத்தல் போட்டியில் ஜே.வி.பி.யினரின் பங்கு முக்கிய பாத்திரத்தினை வகுத்துள்ளதென்பதே உண்மையான விட…
-
- 1 reply
- 1.5k views
-
-
மன்னார் களமுனையில் 10 மாதங்களாக திணறும் எதிரி: நா.தமிழன்பன் மன்னார் களமுனையில் கடந்த 10 மாதங்களாக எதிரி, தான் நினைத்தபடி நிலங்களைப் பிடிக்க முடியாது தமிழீழ விடுதலைப் புலிகளால் திணறடிக்கப்படுகின்றான் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான "புலிகளின்குரல்" நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி "வண்ணமுகில்ச்சோலை" நிறுவனத்தில் சிறிலங்கா வான்படையால் அழிக்கப்பட்ட ஒளிக்கலை நிறுவன உரிமையாளருக்கு உதவும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் நா.தமிழன்பன் சிறப்புரையாற்றுகையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: நாம் போராடும் இனம். நமக்கு எதிரி அழிவுகளை ஏற்படுத்துவான். அழிவைச் சந்திப்போரை நாம் கைதூக்கிவிட வேண்டும்…
-
- 15 replies
- 3.8k views
-
-
புலிகள் போர் விமானத்தை கண்காணிக்கிறது இந்தியா உஷார் : தமிழக கடலோரங்களில் நவீன ரேடார் நிறுவ முடிவு புதுடில்லி: விடுதலைப்புலிகள் வான்வழி தாக்குதலில் கைதேர்ந்துள்ளதையடுத்து, தமிழக கடற்கரை பகுதிகளில் பாது காப்பை பலப்படுத்தவும், புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், இத்தாலி நாட்டிலிருந்து நவீன ரேடார்களை வாங்க இந்திய விமானப்படை முடிவு செய் துள்ளது. இலங்கையில் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. தரை வழியாக மட்டும் தாக்குதல் நடத்திவந்த புலிகள் சில மாதங்களுக்கு முன், திடீர் வான்வழியில் விமான தாக்குதல் நடத்தி இலங்கை ராணுவத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். வான்வழி தாக்குதலில் புலிகள் கைதேர்ந்தது சர்வதேச அளவில் குறிப்பாக இந்திய அரசுக்கு அதிர்…
-
- 14 replies
- 2.8k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினால் அத்தியாவசியப் பொருட்களான மா, சீனி மற்றும் அரிசி என்பனவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 812 views
-
-
நேற்று திங்கள்கிழமை தமிழ் இளையோர் அமைப்பின் சுவிஸ் கிளையினரால் தற்போது தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் செய்து வருகின்ற வன்முறைகள். மனித உரிமை மீறல்கள்இ படுகொலைகள்இ தமிழ் மக்களின் இடப்பெயர்வுகள்இ சிறிலங்கா அரசாங்கத்தின் இரானுவ ஆக்கிரமிப்புக்கள் போன்றவற்றை சுவிஸ் மக்களுக்கு தெரியப்படுத்தும் முகமாக சுக் மாநிலத்தில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வாசிக்க : pathivu.com/index.php?subaction=showfull&id=1198539222&archive=&start_from=&ucat=1&
-
- 2 replies
- 1k views
-
-
சுவீடன் நாட்டில் உள்ள உப்சலா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பீற்றர் சால்க் "தன்னை இல்லாதொழி எனும் தெய்வீகத்துறவறம் தொடர்பிலான விடுதலைப் புலிகளின் கற்பித்தல்" என்ற தலைப்பில் நூல் ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.5k views
-
-
http://www.tamilnation.org/hundredtamils/pararajasingham.htm பி/கு: சத்தத்தை கொஞ்சம் குறைத்துவிட்டு கேட்கவும்.
-
- 1 reply
- 1.2k views
-
-
பெரும் போர் வெடிக்கப் போகிறதா? [23 - December - 2007] -விதுரன்- நாடு பெரும் போருக்குள் தள்ளப்படப்போகிறது. வடக்கை அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் கைப்பற்றிவிடப் போவதாக இராணுவத் தளபதி சூளுரைத்துள்ளார். கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்கள் விரைவில் விடுவிக்கப்பட்டுவிடுமென ஜனாதிபதி கூறியுள்ளார். அடுத்த மாவீரர் தின உரைக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கமாட்டாரென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். இவையெல்லாம் வடக்கு நோக்கி முழு அளவில் பெரும் போருக்கு அரசு தயாராகிவிட்டதையே காட்டுகிறது. நாட்டின் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி இந்தப் போரில் அரசு இறங்கப்போகிறது. யுத்த பட்ஜெட்டின் வெற்றியும் இதனை உறுதிப்படுத்துவதால் வடக்கே பெரும் படையெடுப்புக்கான ஆயத…
-
- 15 replies
- 3.1k views
-
-
இருநாள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு கத்தோலிக்க தேவாலயங்கள் அழைப்பு சிறீலங்கா கத்தோலிக்க தேவாலயங்கள் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவையும் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும் 48 மணித்தியாலங்களுக்கு போர்நிறுத்த உடன்படிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்காவில் கிறீஸ்தவர்கள் கொண்டாடும் கிறீஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 11 replies
- 1.6k views
-
-
19.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு
-
- 1 reply
- 1.7k views
-
-
சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு ஜ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தவறிவிட்டது - அணைத்துல மனிப்புச் சபை சிறீலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தவறிவிட்டதாக அனைத்துலச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. இது குறித்து தனது அறிக்கையில் தெரிவிக்கையில்... அண்மையில் நடைபெற்ற ஜ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆறாவது கூட்டத் தொடரில் சிறீலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்குரிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்த ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தவறிய விட்டதாக அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&a…
-
- 0 replies
- 609 views
-