ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
கோண்டாவிலில் மினிசூறாவளி கோண்டாவில் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் நேற்றுமாலை மினி சூறாவளி வீசியது. திடீரென வீசிய இந்தச் சூறாவளியால் வீரபத்திரர் கோயில் பகுதியில் பனைமரங்கள் உட்பட பயன்தரு மரங்கள் பல வீடுகளுக்கு மேலாகவும் மற்றும் வீதிகளிலும் ஆங்காங்கே முறிந்து வீழ்ந்துள்ளன. கோண்டாவில் இந்துக் கல்லூரிப் பகுதிகளில் வீடுகளில் இருந்த தொலைக்காட்சி உட்பட உபகரணங்கள் பலவும் தூக்கி வீசப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டது.(அ268) http://www.uthayan.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு வருடத்தில் ஏழு ஊடகர்கள் படுகொலை - அரசு மறுப்பு சிறீலங்கா அரச படைகளால் இந்த வருடம் மட்டும் ஏழு ஊடகவியளலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதாக, அனைத்துலக ஊடக அமைப்புகள் கடந்த வாரம் வெளியிட்ட கண்டனத்திற்கு சிறீலங்கா அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்துரைத்த சிறீலங்காவின் ஊடக அமைச்சர் அனுர பிரியதர்ஸன யப்பா, தமக்கு கிடைத்த தகவலின்படி இந்த வருடம் ஒரேயொரு ஊடகவியலாளர் மட்டுமே படுகொலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதே கருத்தினை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள சிறீலங்கா அமைச்சரும், நாடாளுமன்ற முதல்வருமான நிமால் சிறீபால டி சில்வா, தமது அரசில் பதிவு செய்யாத எவரையும் ஊடகவியலாளராக கருத முடியாது எனத் தெரிவித்திருக்கின்றார். http://www.pathivu.com/…
-
- 1 reply
- 864 views
-
-
கொடி கட்டிப் பறக்கிறது இலங்கையில் ஊடக சுதந்திரம் 21.12.2007 ஊடகவியலாளர்கள் பணி புரிவதற்கு உலகிலேயே மிக மோசமான நாடுகளில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது எனப் பொதுவாகக் குற்றம் சுமத்தப்பட்டு வந்தாலும் இப்போது சர்வதேசப் புள்ளிவிவரங்களும்கூட அதனை ஊர்ஜிதப்படுத்தியிருக்கின்ற
-
- 0 replies
- 718 views
-
-
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றத்திலிருந்து உள்ளூர் நீதிமன்றம் வரை தெளிவான தீர்ப்புகள் வழங்கப்பட்ட பின்னரும் அந்தத் தீர்ப்புகளை அவமதிக்கும் வகையில் ஜெயலலிதா நடந்து கொள்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்செயல் அவரது அறியாமையையே காட்டுகின்றது. இவ்வாறு பழ. நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை ஆதரிப்பதில் தவறில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியிருப்பது தண்டனைக்குரிய குற்றம் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா கூறியுள்ளார்…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிகளின் மத்தியிலும் அதன் நிதித்துறை இதுவரையில் உறுதியாகவுள்ளதாகத் தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியம், எனினும் பொருளாதாரம் கடும் சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாவதால் நிதித்துறையும் அபாயத்தை சந்திக்கலாம் என எச்சரித்துள்ளது. வட்டி வீதங்கள் அதிகரித்து வருவதால் வங்கிகளின் இலாபத்தன்மை பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கி
-
- 0 replies
- 875 views
-
-
நாட்டில் சமாதானம் மலர்வதற்கு பேச்சு நடத்தப்படவேண்டும்எதிர்க்கட
-
- 0 replies
- 810 views
-
-
அரசியல்த்துறைப் பொறுப்பாளர் - மன்னார் ஆயர் சந்திப்பு (படங்கள் இணைப்பு) மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அடிகளார், தமிழீழ அரசியல்த்துறைப் பொறுபபாளர் நடேசனை இன்று சந்தித்து மன்னார் மக்களின் நிலை தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். மதியம் ஒரு மணியளவில் ஆரம்பித்த சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலங்கள்வரை நீடித்திருந்ததாக தமிழீழ சமாதான செயலகம் அறிவித்துள்ளது. மன்னாரில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுவரும் படை நடவடிக்கைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.net/
-
- 0 replies
- 945 views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகமொன்றை நிறுவுவதற்கு இடமளிப்பது மற்றும் அமைப்புகளுக்கு ஊடகங்களும் நாட்டின் எந்தவொரு இடத்துக்கும் பிரவேசிக்கும் வசதிகளை வழங்குவது உட்பட மூன்று நிபந்தனைகளை நிறைலேவற்றும் வரை இலங்ககை;கு யுத்த உபகரணங்கள் வழங்குவதை இடைநிறுத்த அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றியுள்ள தீhமானத்துக்கு இலங்கை அரசு ஒரு போதும் இணங்கிவராது என்று அரசு உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. 'புலிப்பயங்கரவாதத்திகுக்கு எதிராக நாட்டின் பாதுகாப்புப் படையினர் யுத்தம் செய்கையில் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு அடிபணிவதற்கு ஒருபோதும் முடியாது' என அரசின் சிரேஷ்ட அதிகாரியொருவர் நேற்று முன்தினம் தெரிவித்தார். வளைகுடாயுத்தத்தின் போது குவைத்துக்குக் கொண்டு செல்வப்பட்ட அமெரி…
-
- 1 reply
- 1.2k views
-
-
இந்திய உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்க இராமாயணத்தை பயன்படுத்தும் இலங்கை [20 - December - 2007] இந்திய உல்லாசப் பயணிகளை பாரியளவில் கவர்ந்திழுப்பதற்காக இலங்கை அரசாங்கம் இந்துக்களின் இதிகாசமான இராமாயணத்தை அதிக அளவில் பயன்படுத்தவுள்ளது. இதனடிப்படையில் இராமாயணத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட இலங்கையிலுள்ள 34 இற்கும் அதிகமான இடங்களைத் தெரிவு செய்து அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை தயாரிக்க குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் எஸ்.கலைச்செல்வம் தெரிவித்ததாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை நேற்று புதன்கிழமை குறிப்பிட்டுள்ளது. `விரைவில் இத்திட்டத்தை ஆரம்பிக்க விரும்புகிறோம்' என்று கலைச்செல்வம் கூறியுள்ளார். இராமாயணத்…
-
- 2 replies
- 1.4k views
-
-
இனிப் போர்தான் என்பது எப்பவோ முடிந்த காரியம்! [ உதயன் ] - [ Dec 20, 2007 05:00 GMT ] மீண்டும் முழு அளவிலான இராணுவப் போர் வெறிப் பொறிக்குள் இலங்கைத் தீவு சிக்கப் போகின்றது. சமாதானத்திற்கான அமைதிப் பேச்சுகளுக்கான கதவுகள் இறுக இழுத்து மூடப்படப் போகின்றன. அதற்கான கட்டியத்தை முன்னறிவித்தலை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சூசகமாக வெளியிட்டிருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது உத்தியோகபூர்வ தடை விதிக்கும் உத்தேசம் அரசுக்கு இருப்பது பற்றிய தகவலை அவரே தமது கருத்து நிலைப்பாடாக வெளியிட்டிருக்கின்றார். சமாதானத்தையும் அமைதியையும் பரப்புவதையே தமது உலக வருகையின் இலக்காகக் கொண்ட சமாதானப் பிரபு இயேசுவின், அவனி வருகையை ஒட்டித் தாம் தமது அலரி மாளிகையில…
-
- 5 replies
- 2.8k views
-
-
மகிந்தவின் யுத்தம் இலங்கை பூராவிற்குமானதே!-ஜெயராஜ்- 'எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் விடுதலைப் புலிகளை இல்லாது ஒழிப்பேன்" என சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் உயர்மட்டக் கூட்டத்தில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமையானது, அரசு பெரும் போர் ஒன்றிற்குத் தயாராகிவிட்டதன் பிரகடனமாகவே கொள்ளத்தக்கதாகும். சிறிலங்கா அரசு பெரும் போருக்கெனத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் வகை யில் அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியில் பூரண ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது என்பது அண்மைய அதன் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தும் ஒன்றாகும். இதன் ஓர் அங்கமாக ஆயுதப்படைக்கென வரவு-செலவுத் திட்டத்தில் ஏனைய துறைகள் அனைத்தையும் விட அதிகளவிலான நிதி…
-
- 3 replies
- 1.7k views
-
-
வியாழன் 20-12-2007 18:07 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] இந்தியா,சிறீலங்கா கூட்டு விமானப்பயிற்சி இந்திய விமானப்படையும் சிறீலங்கா விமானப்படையும் இணைந்து கூட்டு விமானப்பயிற்சியில் இறங்கப்போவதாக ’டெய்லி மிரர்’ பத்திரிகைச் செய்தி தெரிவிக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப்படையை எதிர்கொள்வதற்கான பயிற்சியை சிறீலங்கா விமானப்படைக்கு வழங்க இந்தியா முன்வந்திருப்பதாக மேலும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றத
-
- 6 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்திப் பிரிவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரவையும் சிறீபதி சூரியாராச்சியையும் முன்னாள் படைத்தளபதிகளைக் கொண்ட குழு இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறீலங்காஅரசு தமிழீழ கடற்பகுதியில் எண்ணெய் ஆய்வு முயற்சி யாழ்ப்பாணத்தை அண்மித்த கடற்பகுதியில் எண்ணெய் ஆராய்ச்சியை மேற்கொள்ள, சிறீலங்கா அரசு திட்டமிட்டிருப்பதாக, ஊடகத்துறை அமைச்சர் அநுரா பிரியதர்சன யாப்பா இன்று தகவல் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டின் வடபகுதியில், தமீழீழ கடற்பரப்பிற்கும் இந்திய கடற்பரப்பிற்கும் இடையே தமீழீழத்திற்கு சொந்தமான கடற்பரப்பில் எண்ணெய் ஆராய்ச்சியை மேற்கொள்ள சிறீலங்கா அமைச்சரவை, பெற்றோலிய எரிபொருள் அமைச்சுக்கு அனுமதி அளித்துள்ளது. கடற்பகுதியிலும் மற்றும் தரைப்பகுதியிலும் எண்ணெய் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு, எண்ணெய் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. சர்வதேச எண்ணெய் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
போராடுவதை தவிர, தமிழ் மக்களுக்கு வேறு தெரிவுகள் கிடையாது - கருணாரட்ணம் அடிகளார் விடுதலைக்காக போராடுவதை தவிர, தமிழீழ மக்களுக்கு வேறு தெரிவுகள் இல்லை என ம.செ.கருணாரட்ணம் அடிகளார் கூறியுள்ளார். நேற்று வியாழக்கிழமை ஜ.பி.சி வானொலிக்கு செவ்வியளித்திருக்கும், வடக்குக் கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் பணிப்பாளர் ம.செ.கருணாரட்ணம் அடிகளார், படை நடவடிக்கைகளின் ஊடாக தமிழீழ தாயக நிலப்பிரதேசங்களை ஆக்கிரமித்த சிறீலங்கா அரசாங்கம், தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது, அவர்களை கொன்றழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தியுள்ளார். யாழ் குடாநாட்டில் வகை தொகையற்ற படுகொலைகளை அரங்கேற்றி, உடல், உளவியல் ரீதியிலான பலவீனப்படுத்தல்கள் ஊடாக, அரசியல் அபிலாசைகளை கைவிடச்…
-
- 0 replies
- 804 views
-
-
கொழும்பில் ரயில் மீது கண்ணிவெடி தாக்குதல்: 300 பயணிகள் தப்பினர் வியாழக்கிழமை, டிசம்பர் 20, 2007 கொழும்பு: கொழும்பில் பயணிகள் ரயில் மீது நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் 300 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திரிகோணமலையில் இருந்து கொழும்பு சென்ற ரயில் நேற்றிரவு 8.30 மணியளவில் கண்ணி வெடியில் சிக்கியது. தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி பயங்கரமாக வெடித்து சிதறியதில் ரயில் என்ஜினும், தண்டவாளமும் சேதமடைந்தன. ஆனால், இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக ரயிலில் இருந்த 300 பயணிகளும் உயிர் தப்பினர். விடுதலைப் புலிகள் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது. பிரபாகரன் காயம் உண்மை-இலங்கை: இதற்கிடையே விடுதலைப் புலிகள…
-
- 3 replies
- 1.8k views
-
-
சிறீலங்காவில் ஊடக சுதந்திரத்தின் நிலை...! கருத்துப்படம் தமிழ்நெற்.
-
- 2 replies
- 1.7k views
-
-
யாழ். மற்றும் மன்னாரில் சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதல்களில் இரு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 975 views
-
-
கிளிநொச்சியை சிறிலங்காப் படையினர் வன்பறிப்புச் செய்திருந்த காலத்தில் அமைத்திருந்த நீண்ட மண் அணைகள் இன்று வரை அழிக்கப்படாமையினால் தற்போது பெய்து வரும் மழையினால் மீளக் குடியமர்ந்துள்ள மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் பாய்ந்து வருவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 816 views
-
-
யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுத் தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர். இதில் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் சடலம் ஒன்றும், படைக்கலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 819 views
-
-
மணலாறு சிலோன் தியேட்டர்ப் பகுதியில் கிளைமோர் தாக்குதலை நடத்த ஊடுருவிய சிறிலங்காப் படையினரை தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கி விரட்டியடித்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 697 views
-
-
மன்னார் மற்றும் யாழ்ப்பாணக் களமுனைகளில் மோதல்களிலும், பொறிவெடிகளிலும் சிக்கி 8 படையினர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 727 views
-
-
கிழக்குமாகாணத்தின் பாதுகாப்பிற்காக சிவில் பாதுகாப்பு பிரிவினர் இரண்டு இலட்சத்து 50 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர
-
- 0 replies
- 775 views
-
-
கிழக்கில் பாதுகாப்பு வலயத்திற்குச் செல்ல முயன்ற ஐ.நா.விசேட ஆணையாளருக்கு அனுமதி இல்லை தொடர்பான ஐ.நாவின் விசேட ஆணையாளர் வோல்டர் கெலின் ஒருவார கால விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை திருகோணமலை, ஈச்சிலம் பற்று, வாகரை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்குச் சென்றார். அங்கு இடம்பெயர்ந்தோர் மற்றும் மீளக்குடி யமர்ந்தோரை அவர் சந்தித்துப் பேசினார். அப்போதே அவர் மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திற்கு செல்ல முயற்சி செய்தார். எனினும் அதற்கான அனுமதியை அவருக்கு படைத்தரப்பு வழங்க மறுத்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இத் தகவலை மூதூர் கிழக்கு உயர்பாது காப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் தலைவரிடம் வ…
-
- 0 replies
- 780 views
-
-
இலங்கையில் தொடரும் போர்ப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இலங்கை இராணுவத்துக்கு ஆதரவாக இந்தியப் படையினரை அங்கு அனுப்பி வைக்கும் திட்டமொன்றை புதுடில்லி திரைமறைவில் மேற்கொண்டு வருகின்றது எனத தமிழகத்திலிருந்து வெளிவரும் தினசரி நாளேடான 'தினமணி' தகவல் வெளியிட்டுள்ளது. இது விடயத்தில் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு சென்னை வருகை தந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயணன், தமிழக முதல்வரை சந்ததித்து பேச்சு நடத்திய பின் மீண்டும் புதுடில்லி விரைந்தார் என 'தினமணி' தனது செய்திக்கு மேற்கோள் காட்டியுள்ளது. கருணாநிதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை சுமார் அரைமணி நேரம் வரை நீடித்த குறித்த சந்திப்பில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சில விடயங்கள் குற…
-
- 8 replies
- 2.5k views
-