Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கு மாகாணம் - அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமங்களில் தெலுங்கு பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றமை தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இலங்கையில் அமைந்துள்ள பல கிராமங்கள் வெளி உலகத்திற்கு தெரியாமலும், கவனிக்கப்படாத ஓர் சமூகமாகவும் காணப்படுகின்றன. அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை மாவட்டத்தின் ஆழையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அளிக்கம்பை, கஞ்சிகுடியாறு கிராமத்தை குறிப்பிடலாம்.கஞ்சிகுடியாறு கிராமம், உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட கிராமமாகும். ஆழையடிவேம்பு பகுதியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காட்டுப்பகுதியில் குறித்த கிராம மக்கள் கவனிப்பாரற்று வாழ்ந்து வருகிறார்கள். வறுமை கோட்டில் வாழும் மக்கள் …

  2. எசல பெரஹர காலத்தில் பொருளாதார நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் - ஜனாதிபதி By T. SARANYA 06 FEB, 2023 | 04:11 PM இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் எசல பெரஹர நடைபெறும் காலம் நெருங்கும் போது நாட்டுக்கு பொருளாதார நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு கங்காராமை விகாரையின் நவம் பெரஹரா நேற்று (பெப் 05) இரவு ஆரம்பமானது. இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நவம் பெரஹரா விழாவை வருடந்தோறும் நடத்துவது நாட்டுக்கு கிடைத்த பாக்கியம் என தெரிவித்த ஜனாதிபதி, இக்கட்டான காலத்தை கடந்து செல்…

  3. அரசியல் தீர்வு கிடைக்காவிடின் தமிழர் தாயகம் பறிபோய்விடும் – பிறந்தநாளில் சம்பந்தன் எச்சரிக்கை “அரசியல் தீர்வு ஏற்படாவிட்டால் எங்களுடைய தாயகம் – சரித்திர ரீதியாக எமது தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு விடும். எனவே, உடனடியாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். திடீர் சுகவீனமுற்று அண்மையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், நேற்றுமுன்தினம் (03) வீடு திரும்பிய நிலையில் இன்று 90 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளார். இந்நிலையில், அவரை இன்றிர…

    • 3 replies
    • 579 views
  4. 13 ஐ அமுல்படுத்தினால் இந்தோனேசியாவிற்கு ஏற்பட்ட நிலை உருவாகலாம் – கம்மன்பில எச்சரிக்கை பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி 90களில் இந்தோனேசியாவை பிளவுபடுத்திய மேற்கத்திய நாடுகளின் திட்டத்தில் இலங்கையும் பலியாக கூடாது என ஆளும்கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தொடரும் கொடுப்பனவு நிலுவை மற்றும் கடன் நெருக்கடிகள் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால், கிழக்கு திமோர் சுதந்திரத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளைப் போலவே அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்தோனேசிய ஜனாதிபதி சுஹார்டோவை இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கும் சூழலை மேற்கத்திய நாடுகள் எவ்வாறு பயன்படுத்திக்கொண்டது என்பதையும் கவனத்தில் க…

  5. சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்! சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளிடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த வாரம், நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அக்காலப்பகுதியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் முகங்கொடுக்கின்ற பொதுப்பிரச்சினைகள் தொட…

  6. இந்தியா தமிழ் தேசிய கட்சிகளை பிரித்து செயற்படவில்லை – மாவை இந்தியா தமிழ் தேசிய கட்சிகளை பிரித்து செயற்படவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கட்சிகள் ஒற்றுமையுடன் இருப்பதையே இந்தியா விரும்புகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அவர் இலங்கை அரசியலில் நீண்டகால அனுபவம் பெற்றவர் எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அவர் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை ஒருமித்தே சந்தித்திருந்தார் எனவும் மாவை குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய கட்சிகள் இலங்கையிலும் சர்வதேசத்திலும் சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி கட்டமைப்பில…

  7. பேரணியில் கலந்து கொள்வோருக்கு வடக்கில் இருந்து பஸ் வசதி By T. Saranya 06 Feb, 2023 | 10:30 AM வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணியின் நிறைவு நாள் நிகழ்வு எதிர்வரும் 7 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள நிலையில் பேரணியில் வடக்கு மாகாணத்தில் இருந்து கலந்து கொள்பவர்களுக்குரிய பஸ் ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் சுதந்திர நாள் - தமிழர்களுக்குக் கரிநாள்…

  8. இலங்கை பெற்ற கடனை திரும்பப் பெறுவதற்கு கால அவகாசம் வழங்கிய பங்களாதேஷ்! By T. Saranya 06 Feb, 2023 | 11:51 AM இலங்கைக்கு வழங்கிய கடன் தொகையை செலுத்துவதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கியுள்ளதாக பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல் மொமன் தெரிவித்துள்ளார். கடன் தொகையை செலுத்துவதற்கு இதுவே கடைசி கால அவகாசம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்நியச் செலாவணி வசதியின் கீழ், பங்களாதேஷ் 2021 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் தொகையை வழங்கியதுடன் அதனை திருப்பிச் செலுத்துவதற்கு மேலதிகமாக 6 மாத கால அவகாச…

  9. மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் - ஜீவன் தொண்டமான் By NANTHINI 05 FEB, 2023 | 06:01 PM மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும். கட்சி, தொழிற்சங்க பேதங்களின்றி பயனாளிகளுக்கு உரிய வகையில் வீடுகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இ.தொ.கா கட்சியின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், சவாலை எதிர்கொள்ள வேண்டுமெனில் களத்தில் இறங்கியாக வேண்டும். நெருக்கடியை கண்டு பின்வாங்கி நிற்பது ஏற்புடையதல்ல. அதனால்தான் நெருக்கடியான சூழ…

  10. தடயவியல் அறிவியல் மாநாட்டில் வட மாகாண ஆளுநர் பங்கேற்பு By NANTHINI 05 FEB, 2023 | 05:42 PM இந்தியா, குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திஜி தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் (NFSU) 25ஆவது அகில இந்திய தடயவியல் அறிவியல் மாநாட்டின் சிறப்பு அதிதியாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்துகொண்டார். குஜராத்தில் உள்ள உலகில் பிரசித்தி பெற்ற தடயவியல் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் காந்தி நகரில் அமைந்துள்ள தேசிய தடயவியல் பல்கலைக்கழகத்தின் 25ஆவது மாநாடு இடம்பெற்றது. குறித்த மாநாட்டினை தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் தலைவர் நீதிபதி அருண்குமார் மிஸ்டர் தொடங்கி வைத்தார். …

  11. பொலிஸ் பிரிவிற்கு ஜப்பான் அரசாங்கம் நன்கொடை By VISHNU 05 FEB, 2023 | 05:29 PM (எம்.வை.எம்.சியாம்) இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பயன்பாட்டிற்காக ஜப்பான் அரசாங்கம் 150 மோட்டார் சைக்கிள்கள், 74 வேன்கள், மினி பஸ் ஒன்று மற்றும் 115 கண்காணிப்பு உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த நன்கொடை கையளிக்கப்பட்டது. இந்த உபகரணங்களை வழங்குவது தொடர்பான ஆவணங்களை ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டேக்கி ஷுன்சுகே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தார். வாகனங்களை பரிசோதித்ததைத் தொடர்ந்து ஜப்பானிய ராஜாங்க வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபத…

  12. துறைமுக கிடங்குகளில் 100 கோடி சூப்பர் கார்கள்: அமைச்சர் தகவல் கொழும்பு துறைமுகத்தின் களஞ்சியசாலையில் உள்ள நானூறு கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான பொருட்கள் அடங்கிய 89 கொள்கலன்களை சுங்கத்துறை பொறுப்பேற்றுள்ளதுடன் ஒரு வாரத்திற்குள் அவற்றை அகற்றுமாறு துறைமுக அதிகாரசபைக்கு உத்தரவிட்டதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த பொருட்களில் உள்ள சொகுசு வாகனங்களின் பெறுமதி மாத்திரம் 100 கோடி ரூபாவிற்கும் அதிகம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பல வருடங்களாக சுங்கத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் கொள்கலன்கள் தடுத்து வைக்…

    • 0 replies
    • 670 views
  13. 13ஐ நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு இந்தியா பாராட்டு By NANTHINI 05 FEB, 2023 | 11:02 AM (எம்.மனோசித்ரா) அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை, இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா பாராட்டு தெரிவித்துள்ளது. நாட்டின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக விஜயம் செய்துள்ள இந்திய வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வி.முரளீதரன் நேற்று (4) சனிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போதே அவர் இவ்வாறு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ஜனாதி…

  14. நிலக்கரி கொள்வனவுக்கு நிதி வழங்குமாறு மின்சக்தி அமைச்சிடம் இலங்கை நிலக்கரி நிறுவனம் கோரிக்கை By VISHNU 05 FEB, 2023 | 12:52 PM (எம்.வை.எம்.சியாம்) நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணத்தை பெற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் எதிர்வரும் வாரத்திற்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான நிதியை மத்திய வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு உடனடியாக மின் சக்தி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர கோரியுள்ளார். இது தொடர்பில் 04 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்…

  15. யாழில் சிங்கக் கொடியுடன் இளைஞர்கள் குறளி வித்தை – கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறையினர் இலங்கையின் தேசியக் கொடியான வாளேந்திய சிங்கத்தை தமது உந்துருளி, முச்சக்கர வண்டி என்பவற்றில் கட்டியவாறு யாழ். நகரப் பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஒரு சிறுகும்பல் பயணித்துள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரால் சுதந்திரதின கொண்டாட்டம் எனும் பெயரில் அழைத்து வரப்பட்ட சிறு கும்பலே யாழ். நகரப் பகுதியில் இவ்வாறு குறளி வித்தை காட்டியுள்ளது. இலங்கையின் சுதந்திர நாள் கொண்டாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையின் தேசியக் கொடியுடன் உந்துருளிகளில் வீதி முழுவதையும் ஆக்கிரமித்து வ…

  16. உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டால் வெளியக சுயநிர்ணய தீர்வை நோக்கி பயணிப்பதற்கும் தயார் : சாணக்கியன்! kugenFebruary 5, 2023 உள்ளக சுயநிர்ணய உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டால் வெளியக சுயநிர்ணய தீர்வை நோக்கி பயணிப்பதற்கும் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். “தமிழர்களுக்கு இருள் நாள் பெப்ரவரி நான்கு“ எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பில் இடம்பெற்ற எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “பிரித்தானியர்கள் தமிழர்களின் தலையெழுத்தினை சிங்களவர்களிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றதால் தான் இன்று பாரிய நெருக்கடிகளை நாம் சந்தித்துள்ளோம். வெறுமனே பேசி…

  17. குருந்தூர் மலை காணி விவகாரம்: ஜனாதிபதி ரணிலின் பணிப்புரையை நடைமுறைப்படுத்துவதில் இழுபறி By Nanthini 05 Feb, 2023 | 12:41 PM (ஆர்.ராம்) குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்காக ஆறு ஏக்கர்கள் நிலப்பரப்பினை மட்டும் வைத்துக்கொண்டு ஏனைய பொதுமக்கள் மற்றும் வனத்துறையினருக்கு சொந்தமான காணிகளை மீளக் கையளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளபோதும், அதனை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் மட்டத்தில் இழுபறியான நிலைமைகள் நீடிப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, பாராளுமன்ற உறுப்பினர் ச…

  18. வவுனியாவில் வடக்கு கிழக்கு பேரணிக்கு ஆதரவாக ஊர்வலம்! அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் இருந்து கிழக்கு வரையான பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஊர்வலமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முல்லைத்தீவை நோக்கி இந்த ஊர்வலம் ஆரம்பமாகியுள்ளது. தமிழர்களின் அடிப்படை உரிமைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றை வென்றெடுக்கும் நோக்கில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சமூக அமைப்புகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒன்றிணைந்து வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இருந்து ஊர்வலத்தை ஆரம்பித்து புதிய பேரூந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்று அங்கிருந்து பேருந்தில் ப…

  19. 3 வருடங்களின் பின்னர் தமிழில் பாடப்பட்ட தேசிய கீதம் ! இன நல்லிணக்கம் மற்றும் அதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று காலி முகத்திடலில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் பாடப்பட்டது. 2015 முதல் 2019 வரையான நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது தேசிய நிகழ்வுகளின் தமிழ் மொழியில் தேசிய கீதம் படப்பட்டபோதும் கோட்டாபய அரசாங்கத்தில் புறக்கணிக்கப்பட்டது. தேசிய சுதந்திர தின நிகழ்வின் இறுதியில் மேல் மாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களால் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்…

  20. சமஷ்டியை உச்சரிக்கத் தமிழரசுக் கட்சிக்கே உரித்துண்டு ! – சுமந்திரன் விளாசல் சமஷ்டி என்ற வார்த்தையை உச்சரிப்பதற்குத் தமிழரசுக் கட்சியைத் தவிர வேறு எவருக்கும் எந்தத் தகுதியும் கிடையாது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை ‘இருள் சூழ்ந்த சுதந்திரம்’ எனப் பிரகடனப்படுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்கொண்ட போராட்டம் மட்டக்களப்பில் இன்று (04) நடைபெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் சமஷ்டியைப் பழித்துப் பேசியவர்கள் இன்று அதைக் கட்டிப்பிடி…

  21. மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க முயற்சி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. பிரதமர் தினேஷ் குணவர்தனவும் எந்த நேரத்திலும் பிரதமர் பதவியை மஹிந்தவிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவியை வகிப்பாரா இல்லையா என்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவியை ஏற்பதற்கு பொதுஜன பெரமுனவின் ஒரு குழு உடன்படவில்லை என்…

  22. 13வது திருத்தம் தொடர்பில் முரளிதரனிடம் கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளிதரனை இன்று ( 04) மாலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர். இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்திய இராஜாங்க அமைச்சர் இதன்போது பாராட்டினார். இலங்கையின் 75வது சுதந்திர தினத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார். இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள முரளிதரன் இன்று (04) காலை இலங்கை வந்திருந்தம…

    • 0 replies
    • 666 views
  23. சுடுகாடுகளில்தான் தமிழ்த் தேசியம் கிடைக்கும் பொருளாதாரம் இல்லாது தேசியத்திற்கு முக்கியத்துவமளித்தால், சுடுகாடுகளில்தான் தமிழ்த் தேசியம் கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது, கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளிற்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எம்மை சிங்கள கட்சி என்கின்றனர். உண்மையில் சிறிலங்கா சுதந்திர கட்சி அனைத்து இனங்கள், மதங்களையும்…

    • 3 replies
    • 698 views
  24. இலங்கையர்கள் சிலர் அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்... இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 4 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி அடுத்த ஒத்தப்பட்டி தெற்கு கடற்கரைக்கு புகலிடம் தேடி வந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த மார்ச் முதல் இலங்கையில் இருந்து 218 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர். இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் புங்குடுதீவை சேர்ந்த ஜெய பரமேஸ்வரன்; (43), அவரது மனைவி மாலினி தேவி (43) மற்றும் அவரது 12 வயது மகள், 7 வயது மகன் உட்பட ஒர…

    • 0 replies
    • 490 views
  25. தமிழ்மக்கள் பூரண அதிகாரப்பகிர்வைப் பெறுவதற்கு சிங்கள மக்கள் அனுமதிக்கும் நாளே எமக்கான விடிவுநாள் - சி.வி.விக்னேஸ்வரன் By Digital Desk 5 04 Feb, 2023 | 09:27 AM ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழும் தமிழ் மக்கள் என்று பூரண அதிகாரப் பகிர்வைப் பெற சிங்கள மக்கள் அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு நாள். அதுவரையில் வருடந்தோறும் பெப்ரவரி 4 ஆம் திகதி என்ற கரிநாள் வந்து போய்க்கொண்டிருக்கும். நாமும் அன்றைய தினம் எமது மனோநிலையை வெளிப்படுத்திக்கொண்டேயிருப்போம் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும…

    • 2 replies
    • 871 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.