ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
சிறிலங்காவுக்கு சீனா இராணுவப் பயிற்சி சிறிலங்கா இராணுவத்தினருக்குப் படை அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்க சீனா முன்வந்துள்ளது. அதன் முதல் கட்டமாக சிறிலங்கா அரசாங்கம் மூன்று மூத்த இராணுவ அதிகாரிகளை ஒருவருட கற்கை நெறிக்காக சீனாவின் தரம் வாய்ந்த சீனா தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப முடிவெடுத்துள்ளது. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சீனாவுக்கான அண்மைய பயணத்தைத் தொடர்ந்து இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புலமைப்பரிசில் கற்கை நெறிக்காக முன்னாள் இராணுவப் பேச்சாளரும் தற்போதைய 23 ஆவது படையணி கட்டளை தளபதியுமான மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்கா, யாழில் ஆக்கிரமித்து நிற்கும் 53 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் சிறிநாத் ராஜப…
-
- 1 reply
- 1k views
-
-
அவசிய அறிக்கை - கோத்தபாயாவும் படைநிலையும் http://www.yarl.com/videoclips/view_video....f5b5c3003946c48
-
- 5 replies
- 2.9k views
-
-
சர்வகட்சி மகாநாடு எதிர்நோக்கும் முட்டுக்கட்டைகள் சர்வதேச சமூகத்தின் அதிருப்தியை அதிகரிக்கும் காலகண்டன் * செம்மணியில் அறுநூறு பேர் வரை புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் அவல நிகழ்வு இன்று வரை விசாரணை இன்றியே இருந்து வருகின்றது. தமது பிள்ளைகளையும் கணவன்மாரையும் உறவுகளையும் இழந்தவர்கள் இன்றும் முடிவு தெரியாதவர்களாக துயரத்தில் வாழ்ந்தே வருகிறார்கள். இத்தகைய மனித உரிமை மீறல்களுக்கு சந்திரிகா அம்மையார் என்ன பதில் கூறுவார்? "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்பது அனுபவவாயிலாக வந்த ஒரு முதுமொழி. நம்நாட்டு அரசியல் அரங்கிலே அதற்கு உதாரணம் கூறுவதாயின், தேசிய இனப் பிரச்சினையின் தீர்வின்மையை எடுத்துக் கூறலாம். அன்றைய ஆரம்ப நிலையில் மிக இலகுவாகத் தீர்வு கண்டிருக்க வேண்டி…
-
- 0 replies
- 795 views
-
-
யாழ்ப்பாணம் ஊடயகவியளார்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல - ஊடக உரிமைக் குழு கண்டனம் உலகத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலான பகுதிகளில் யாழ்ப்பாணமும் முக்கிய இடத்தை வகிப்பதாகவும், யாழ் குடாநாட்டில் ஊடகர்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குரியது எனவும் “ஊடக உரிமைக் குழு” (Press rights groups ) என்ற அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் இடம்பெறும் ஊடயகவிளலாளர்கள் படுகொலை தொடர்பாக சிறீலங்கா அரசு முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் “ஊடக உரிமைக் குழு” வலியுறுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 7 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாவும், இது மிகவும் மோசமான நிலையை எடுத்து விளக்குவதாகவும் இந்த அமைப்பு கண்டனம் தெரிவித…
-
- 0 replies
- 571 views
-
-
சிறீலங்காவிற்கு செல்லும் திட்டம் தற்பொழுது இல்லை - எரிக் சொல்ஹைம் சிறீலங்காவிற்கு அண்மையில் செல்வதற்கான திட்டம் எதுவும் தன்னிடம் இல்லை என, நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சரும், சிறப்பு சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹைம் தெரிவித்துள்ளார். 2000ஆம் ஆண்டு சிறீஙலங்கா அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் பிரகடனப்படுத்தாத போர் ஒன்றை சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது திணித்து, நாளாந்தம் படுகொலைகளையும், குண்டு வீச்சுக்களையும் மேற்கொண்டு வருகின்றது. அத்துடன், சிறீலங்கா அரசு என்றுமில்லாதவாறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக, உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் கண்டித்து வருகின்றன. …
-
- 1 reply
- 1.1k views
-
-
திங்கள் முதல் வெள்ளிவரை ஓமந்தை சோதனைச்சாவடி திறக்கப்படும் ஓமந்தை தாண்டிக்குளம் சோதனைச்சாவடி திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்களும் திறக்கப்படவுள்ளது. எதிர்வரும் திங்கள் கிழமை முதல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோதனைச்சாவடி பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் டவிடி விக்னட்டி தெரிவித்தார். அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்துள்ள சூனியப் பிரதேசத்தில் வாரத்தில் ஐந்து நாட்கள் பணியாற்றுவதற்கு நாம் இணக்கம் தெரிவித்துள்ளோம் என்றும் அவர் மேலும் கூறினார். இது தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்த டவிடி விக்னட்டி, வவுனியாவிலிருந்து புலிகளின் கட்டுப்பா…
-
- 1 reply
- 1.4k views
-
-
அரசியலில் விரைவில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் ஐ.தே.கசெயலாளர் திஸ்ஸ அரசாங்கம் மக்கள் மத்தியில் பாரிய பின்னடைவை சந்தித்து வருகின்றது. நாட்டின் அரசியல் நிலைமைகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமாகவே இருக்கின்றன. நாங்கள் மேற்கொண்டு வருகின்ற மக்கள் அலை எதிர்ப்பு கூட்டங்கள் நாடளாவிய ரீதியில் தொடரும். அரசியலில் விரைவில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். மனித உரிமை மீறல்களை தடுக்க உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுப்போம் என்று ஐ.தே.க. வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது : நாட்டில் சிவில் சட்டம் சரியான…
-
- 1 reply
- 1.2k views
-
-
வன்னி மீதான பெருநடவடிக்கை: தாமதிக்கப்பட்டதா? தவிர்க்கப்பட்டதா? சேனாதி (தாயகம்) படலையின் பின்னே நின்று மண்ணை விறாண்டிக் குரைப்பது போன்ற மிக நீண்ட கட்டியங்களின் பின்னணியில், வன்னிப் படையெடுப்பிற்கான இறுதி ஆயத்தங்கள் என்று தோன்றக்கூடிய சில செயற்பாடுகளில் சிறிலங்கா படைத்துறை இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. படைத்துறையின் முதன்மை அதிகாரிகளும் பாதுகாப்புச் செயலரும் குடாநாட்டிற்கு வருகை தந்து சில ஏற்பாடுகளை நேரடியாகப் பார்வையிடுவதான செய்திகள் பரவலாக உலாவுகின்றன. மணலாறு மாவட்டத்தின் சில கிராமங்களில் அடிக்கடி எறிகணைப் பரிமாற்றம் நடந்துவருவது கூட அங்கே ஒரு முறுகல் நிலை விரிவதற்கான அடையாளமே என கொழும்பு ஆய்வாளர் சொல்கிறார்கள். கிழக்கில் படைநகர்வுகளைச் செய…
-
- 1 reply
- 1k views
-
-
யுத்த நிறுத்தக கண்காணிப்புக் குழு விளக்கம். யுத்த நிறுத்த உடன்படிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கென வரையறுக்கபட்ட பகுதிகளில், புலிகள் ஆயுதங்களைக் கொண்டு செல்ல முடியும். அப்படிக் கொண்டு செல்வது உடன்படிக்கையை மீறும் ஒரு செயலாகி விடமாட்டாது.இவ்வாறு இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு, தனது விளக்க அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. அரச கட்டுப்பாட்டுப் பகுதில் நடமாடும் கருணா குழுவினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என வற்புறுத்தகின்ற யுத்த நிறுத்தக் கண்கனாணிப்புக் குழு, புலிகளின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என ஏன் வற்புறுத்தவில்லை என்று தென்னிலங்கையில் சில அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்குப் பதிலளிக்கும் விதத்திலேயே கண்காணிப்புக் குழு குற…
-
- 1 reply
- 1.7k views
-
-
புலிகளின் திடீர் யாழ். தாக்குதலின் எதிர்விளைவுகள் என்ன? யாழ்ப்பாணத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா இராணுவத்தின் பலாலி உள்ளிட்ட 3 பிரதான தளங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியிருக்கும் திடீர் எறிகணைத் தாக்குதல்களானது களத்தில் இராணுவத்தினருக்கு பாரிய உளவியல் தாக்கத்தை உருவாக்கக்கூடும் என்பதை விவரிக்கிறது இந்த ஆய்வு. யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்திருக்கும் சிறிலங்கா இராணுவத்தினர் அனைவருக்குமான கட்டளை மையமாகப் பலாலியும் வழங்கல் மையமாக பலாலி, காங்கேசன்துறை, மயிலிட்டி ஆகியனவும் இருக்கின்றன. அண்மையில்தான் சிறிலங்கா இராணுவத்தினருடைய கடற்படைத் தளமாக மயிலிட்டி மாற்றப்பட்டு முதன்மையான வழங்கல் துறைமுகமாக உருவாக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் காங்கேசன்த…
-
- 1 reply
- 1.9k views
-
-
கிழக்கிலிருந்து வடபகுதியை நோக்கி நகர்ந்து வரும் போர் முன்னெடுப்புக்கள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அறிக்கை போர் முன்னெடுப்புக்கள் கிழக்கிலிருந்து வடபகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ள இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு, அண்மைக் காலத்தில் வடக்கின் முன்னரங்க நிலைகளில் இடம்பெறும் மோதல்களையும், கடும் ஷெல் தாக்குதல்களையும் தனது கூற்றுக்கு ஆதாரமாக காட்டியுள்ளது. இது குறித்து கண்காணிப்புக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கட
-
- 1 reply
- 883 views
-
-
20 அரசாங்க நிறுவனங்களில் 6 ஆயிரம் மில்லியன் ரூபா ஊழல் 20 அரசாங்க நிறுவனங்களில் 6 ஆயிரம் மில்லியன் ரூபா ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளது என்று அரச பொறுப்பு முயற்சிகள் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரும் எம்.பி.யுமான விஜயதாச ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார். இலங்கை மின்சார சபை போன்ற நிறுவனங்கள் தொழிலாளர்கள் போராட்டத்தை பயன்படுத்தி சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்ளப் பார்க்கின்றன. தெரிவுக்குழுவின் விசாரணைகளின் போது பல அரச நிறுவனங்களின் அதிகாரிகள் பொய்ச்சாட்சிக்கூறியுள்ளனர். இத்தகையவர்களை நீதிமன்றின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். அரச பொறுப்பு முயற்சிகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இரண்டாவது அறிக்கையை சபையில் நேற்றுக்…
-
- 0 replies
- 728 views
-
-
நுவரெலியாவின் தமிழ் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றம்! தமிழர்களின் பூர்வீகப்பிரதேசங்களான வடகிழக்கில் நடைபெற்றுவரும் சிங்களக் குடியேற்றங்களைப்போல், நுவரெலியாவின் தமிழ் பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வலப்பனை, ஹங்குராங்கத்தை ஆகிய இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட எண்ணூறுக்கு மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் இவ்வாறு குடியேற்றப்படவுள்ளதாக அறியமுடிகிறது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியா மாவட்டத்தின் ஹப்பேரஸ்ட், றெட்பானா தோட்டக்காணிகளிலேயே இந்தக் குடியேற்றங்கள் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குடியேற்றத்தினை சட்டபூர்…
-
- 0 replies
- 794 views
-
-
வெள்ளி 24-08-2007 14:02 மணி தமிழீழம் மயூரன்ஸ மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பயங்கரவாதிகள் போல் செயற்படுகின்றது என முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை மேலக முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியயோர் சந்திரிகா குமாரதுங்கவை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பயங்கரவாதிகள் போல் செயற்படுகிறது. இதனால் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச ரீதியில் மனித உரிமை மீறல்களை முன்னேடுக்கும் நாடாக சிறீலங்கா பார்க்கப்படுகின்றது. என்னுடைய ஆட்சிக் காலத்திலும் ஒரு சில மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. ஆனால் அதன…
-
- 3 replies
- 1.2k views
-
-
[வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2007, 14:40 ஈழம்] [கி.தவசீலன்] "ஈரோஸ்" இயக்கம் என்றோ கலைக்கப்பட்டுவிட்ட நிலையில் காணாமல் போனவர்களை வைத்துக்கொண்டும், காளான்களை வைத்துக்கொண்டும் காலாவதியாகி விட்ட அந்த இயக்கத்துக்கு உயிர்கொடுக்கும் வேலையில் இந்தியப் புலனாய்வு அமைப்பான "றோ" இறங்கியிருக்கிறது. இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட விரும்புவதால், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஒதுங்கிக்கொண்டார் என்று சென்னையில் இருந்து வெளிவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தைச் சேர்ந்த "தமிழன் எக்ஸ்பிரஸ்" ஏட்டில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. கடந்த 23.08.2007 ஆம் நாள் வெளிவந்த அந்த வார இதழின் முகப்புக்கட்டுரையாக, உளவுத்'துரை'யின் புலனாய்வாக, "விலகுகிறேன் - பிரபாகரன் அதிரடி முடிவு" என…
-
- 3 replies
- 1.7k views
-
-
முப்படையினரின் குழந்தைகளுக்கான சலுகை கருணா, டக்ளஸ் அணியினரின் பிள்ளைகளுக்குமா? நாடாளுமன்றில் மகேஸ்வரன் கேள்வி பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும்போது முப்படையின ரின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் விசேட சலுகை, கருணா அணியினரினதும் டக்ளஸ் அணியினரினதும் பிள்ளைகளுக்கும் வழங் கப்படுமா? ஐக்கிய தேசியக்கட்சி கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் இவ்வாறு நேற்று நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்பினார். அரச பாடசாலைகளில் முதலாம் தரத் திற்கு மாணவர்களைச் சேர்ப்பது தொடர் பாக கிளப்பப்பட்ட சர்ச்சையின் போதே மகேஸ்வரன் எம்.பி. இவ்வாறு ஒரு கேள் வியை எழுப்பினார். மாணவர்கள் சேர்க்கப்படும் போது முப் படைகளின் பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு விசேட சலுகை…
-
- 5 replies
- 1.9k views
-
-
மட்டு. தாண்டியடிப்பகுதியி விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலுமில்லலம் முற்றாக அழிக்கபட்டு அங்கு பொலிஸ் நிலையத்திற்கான கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றது மட்டு. படுவான்கரைப் பகுதியில் படையினர் மேற்கொண்ட பாரிய நடவடிக்கையில் அப்பிரதேசம் படையினரால் கைப்பற்றபட்டடன.இதையடுத்து வாகரை மற்றும் தாண்டியடி பகுதிகளிலிருந்த மாவீரர் துயிலுமில்லங்கள் இருந்த இடம் தெரியாது படையனரால் முற்றாக அழிக்கபட்டது. தாண்டியடி மாவீரர் துயிலுமில்லத்தை விடுதலைப் புலிகள் மிகச் சிறப்பாக அமைத்து அதன் சுற்றுப்புறங்களில் நினைவுத் தூபிகளும் எழுப்பப்பட்டிருந்தன.இந்தப் பகுதியைக் கைப்பற்றிய படையினர் நினைவுத் தூபிகளை இடித்துத் தரைமட்டமாக்கியதுடன் மாவீரர் சமாதிகள் அனைத்தும் புல்டோசர்களால் கிளறியெறியப்பட்டு …
-
- 2 replies
- 1.6k views
-
-
இராணுவத்தளபதியை எங்கும் குறிவைத்து தாக்க முடியும் என்பதனை நிரூபித்துக்காட்டிய புலிகள்: "டெய்லி மிரர்" [வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2007, 05:42 ஈழம்] [கொழும்பு நிருபர்] கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தளபதியே குறிவைக்கப்பட்டிருந்தார் என்பது தெளிவானது. இராணுவத் தளபதிக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன் இராணுவத் தளபதியின் ஒவ்வொரு அசைவையும் தாம் உன்னிப்பாக அவதானிப்பதாகவும், அவரை எங்கும் தம்மால் குறிவைக்க முடியும் என்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இதன் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர் என்று "டெய்லி மிரர்" நாளேடு தெரிவித்துள்ளது. சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு இன்று வெள்ளிக்கிழமை எழுதிய தனது பாதுகாப்பு ஆ…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஓக. 25 இல் பனங்காமம்பற்றில் பண்டாரவன்னியனின் 204 ஆம் ஆண்டு நினைவு நாள் [வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2007, 18:07 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மாவீரன் பண்டாரவன்னியனின் 204 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு எதிர்வரும் ஓகஸ்ட் 25 ஆம் நாள் பனங்காமம்பற்றில் நடைபெறவுள்ளது. போர்த்துகேயர் மற்றும் ஒல்லாந்தர் ஆகிய ஐரோப்பாவின் இரண்டு அந்நிய சக்திகளுக்கு அடிபணியாது அவர்களின் ஆனையிறவு மற்றும் பூநகரிக்கோட்டைகளை தாக்கியழித்து தாய் மண்ணின் வீரத்தை அன்றே நிலைநாட்டிய கைலை வன்னியனின் ஆட்சிமையம் இருந்த மண் பனங்காமம்பற்று. அந்த மண்ணில் எதிர்வரும் சனிக்கிழமை (25.08.07) பண்டாரவன்னியனின் நினைவு நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. பனங்காமம்பற்றின் பாலிநகர் பொது விளையாட்டு மைதானத்தில்…
-
- 2 replies
- 1.4k views
-
-
வடக்கு கிழக்குக் கொலைகளுக்காக ஒருவரையாவது கைது செய்தீர்களா? நேற்று நாடாளுமன்றத்தில் சிறிகாந்தா நா.உ. சீற்றம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து அன்றாடம் மோசமாக இடம்பெற்றுவரும் கொலைகள் தொடர்பாக இதுவரை எவராவது ஒருவரைப் பொலிஸார் கைது செய் துள்ளனரா? அங்கே துணைப்படை என்ற பெயரில் ஆயுதங்களுடன் நடமாடும் அரச கைக்கூலிகளுக்கு கொலை செய்வதற்கான "லைசென்ஸ்' வழங்கப்பட்டிருக்கின்றது . இப்படி நேற்று நாடாளுமன்றில் சீற்றத்துடன் கூறினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா. குற்றவியல் சட்டக் கோவைகள் திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இப்படிக் கூறினார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு: இன்று நா…
-
- 0 replies
- 885 views
-
-
ஓமந்தைச் சோதனை நிலையத்தை ஏழு நாள்களும் போக்குவரத்துக்குத் திறக்குக செஞ்சிலுவையிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை வன்னிக்கான போக்குவரத்தைச் சீராக மேற்கொள்ள வசதியாக ஓமந்தைச் சோதனை நிலையத்தை வாரத்தில் ஏழு நாள்களும் திறக்க வேண்டும் என்று விடுதலைப் புலி கள் கோரியுள்ளனர். நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற் கொண்ட செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரூன் வன்டைன்ஹோவிடம் எழுத்துமூல மாக இக்கோரிக்கையை விடுதலைப் புலி கள் சமர்ப்பித்தனர். கிளிநொச்சியில் நேற்று நடந்த சந்திப் பில் துணை அரசியல்துறைப் பொறுப்பாளர் சோ. தங்கன், பன்னாட்டு அரச சார்ப்பற்ற அமைப்புக்களின் நிர்வாகப் பொறுப்பாளர் பாவரசன் ஆகியோர் அவருடன் பேச்சு நடத் தினர். ஓமந்தைச் சோதனை நிலையம் ஊடான…
-
- 0 replies
- 1.5k views
-
-
கருணா குழுவினர் பொலிஸ் சேவையில் இணைய முடியாதென்று கூற முடியாது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறுகிறார் கருணா குழுவினர் பொலிஸ் சேவையில் இணைந்துகொள்ள முடியாது எனக் கூறமுடியாது. தரப்புக்களை கோடிட்டுக் காட்டி ஆட்சேர்ப்பு செய்வது நடைமுறையில் இல்லாததொன்றாகும். ஏனெனில், இலங்கையில் பிறந்த எவரும் பொலிஸ் சேவையில் இணைந்துகொள்வதற்காக விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு விண்ணப்பிப்பவர்களில் பொலிஸ் திணைக்களத்தால் கோரப்படும் அடிப்படைத் தகைமைகளைக் கொண்டுள்ளவர்கள் மட்டுமே பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர் என்று அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஊக்குவிப்பு நலன்புரி அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பிலுள்ள தேசிய…
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு நிலைமை இலங்கையின் சிறுபான்மையினரான தமிழர்களும் முஸ்லிம்களும் தமக்குள் முறுகலை விடுத்து, உரிமையைப் பெறுவதற்கான எழுச்சியில் ஒன்றுபட்டு நின்றாலேயே இரு தரப்புகளினதும் நியாயமான அபிலாஷைகளும், வேணவாவும், எதிர்பார்ப்பும் நிறைவேறும் என்பது திண்ணம். சிறுபான்மை இனங்கள் தமக்குள் முரண்டுபட்டு, மோதிக்கொண்டிருந்தால் அது அவர்களையே அதிகம் பாதிக்கும். சிறுபான்மையினரை அடக்கி, ஒடுக்கி அவர்களின் உரிமைகளை மறுத்து ஆளும் பேரினவாதத்துக்கு அது வாய்ப்பாகியும் விடும். இதன் காரணமாகவே சிறுபான்மை இனங்களிடையே மோதலை ஏற்படுத்துவதைத் தனது ஆட்சித் தந்திரமாகப் பேரினவாதம் பயன்படுத்தி வருகின்றது என்பதும் கண்கூடு. தமிழர் முஸ்லிம் உறவு கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சமஷ்டி தீர்வை எட்டமுனைந்தால் பாராளுமன்றில் எமக்குள்ள பலத்தினை பயன்படுத்துவோம் அரசுக்கு விமல் வீரவன்ச எச்சரிக்கை வீரகேசரி நாளேடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மக்கள் ஆணையை உதாசீனம் செய்துவிட்டு சமஷ்டி முறைமையிலான தீர்வை சர்வகட்சி மாநாடு மூலம் எட்டமுனைகிறது. அந்நிலையேற்பட்டால் பாராளுமன்றத்திற்குள் எமக்குள்ள பலத்தை நாட்டின் நன்மைக்காக பிரயோகிப்போம் என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச தெரிவித்தார். கொழும்பு தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: அரசாங்கத்தின் பிரதான கட்சி…
-
- 1 reply
- 1.1k views
-
-
நா.உ. ஜெயானந்தமூர்த்தியின் சகோதரர் சுட்டுப் படுகொலை ஜதிங்கட்கிழமைஇ 20 ஓகஸ்ட் 2007இ 22:26 ஈழம்ஸ ஜந.ரகுராம்ஸ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தியின் மூத்த சகோதரர் சேனாதிராஜா தியாகச்சந்திரன் (வயது 55) இன்று இரவு மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் விபத்தினால் கொல்லப்பட்டுள்ளதாக முதலில் வெளியான செய்திகள் தெரிவித்த போதிலும்இ வாழைச்சேனை மருத்துவமனை வட்டாரங்கள் அவரது உடலில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் இருப்பதனை உறுதிப்படுத்தியுள்ளன. வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் பணிபுரியும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர்இ இன்று திங்கட்கிழமை மாலை வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போ…
-
- 8 replies
- 2k views
-