ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
யாழ். மாநகர புதிய முதல்வர் தொடர்பில் மணிவண்ணன் பகிரங்க குற்றச்சாட்டு! யாழ்ப்பாணத்தில் எட்டுக்கோடி ரூபாய் செலவில் எம்மால் புனரமைக்கப்படவிருந்த குளத்தின் புனரமைப்பு பணிகளை வெற்றிகரமாக புதிய முதல்வர் நிறுத்தியுள்ளார் என யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றஞ்சாட்டினார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே வி.மணிவண்ணன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாண நகரின் மத்தியில் ஸ்ரான்லி வீதி – கஸ்தூரியார் வீதி சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ள நகரக் குளத்தை புனரமைப்புச் செய்வதற்காக தனியார் நிறுவனமொன்றின் எட்டுக் கோடி பெறுமதியான நிதிப் பங்களிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு புனரமைப்புப் பணிகளுக்காக அடிக்கல் …
-
- 2 replies
- 731 views
-
-
மானிப்பாயில் லொறியை திருடியவர் கைது By NANTHINI 01 FEB, 2023 | 12:31 PM (எம்.வை.எம்.சியாம்) மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் லொறி சாரதியை அச்சுறுத்தி, லொறியை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இச்சம்பவத்தோடு தொடர்புடைய நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். லொறி சாரதி லொறியை நிறுத்தி தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும்போது அவ்விடத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் சாரதியை பயமுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான முறைப்பாட்டின் பேரில் திருடப்பட்ட லொறியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதோடு, சந்தேக நபர் ஒருவ…
-
- 6 replies
- 950 views
- 1 follower
-
-
உடைந்தது தமிழரசுக்கட்சி?? தகப்பனை திட்டித்தீர்த்த மாவையின் மகன்!! கூட்டத்தில் பரபரப்பு இன்று காலை யாழ்பாணம் மார்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் தொகுதி கிளைச் செயலாளர்களின் மாநாட்டில், வளமைக்கு மாறாக பரபரப்பு ஏற்பட்டதாகவும், குறிப்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களின் மகன் அமுதன் ஆவேசம் கொண்டு கட்சியின் தலைமைக்கு எதிராக கொட்டித்தீர்த்துவிட்டதாகவும் மாநாட்டில் கலந்துகொண்ட பலர் தெரிவிக்கின்றார்கள். வழமையாகவே இதுபோன்ற தமிரசுக்கட்சியின் கூட்டங்களில் தலைவர் பேசுவார்.. அல்லது தன்னைப் பேச்சாளர் என்று சொல்லித்திரிகின்ற ‘முந்திரிக்கொட்டை’ பேசுவார்.. அல்லது எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் 200 வார்த்…
-
- 49 replies
- 2.8k views
- 1 follower
-
-
13 வது திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும் - ஐநா அமர்வில் இந்தியா By RAJEEBAN 01 FEB, 2023 | 03:19 PM இலங்கை 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐநாஅமர்வில் இந்தியாஇந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இந்தியவம்சாவளி தமிழர் உட்பட அனைத்து மக்களினதும் மனித உரிமைகளையும் உறுதி செய்யுமாறும் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக ஜெனிவாவில் இன்று இடம்பெற்றுவரும் 42வது அமர்வில் உலகளாவிய காலமுறை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளது 2006 ஆம் ஆண்டு ஐ.நா.சபையின் பொ…
-
- 1 reply
- 801 views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் எமக்கு எவ்வித சிக்கலும் இல்லை. எனினும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண ஆணைக்குழுக்கள் ஊடாகவே நிர்வகிக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொழும்பிலுள்ள சு.க. தலைமையகத்தில் செவ்வாய்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , நல்லாட்சி அரசாங்கத்தில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. இதன் போது அரசியலமைப்பு திருத்தங்களுக்காக சுதந்திர கட்சி பரிந்துரைகள் சிலவற்றை முன்வைத்திருந்தது. இதன் போது 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுற…
-
- 0 replies
- 727 views
-
-
(நா.தனுஜா) இவ்வாண்டு இலங்கைக்கு இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையான சுற்றுலாப்பயணிகள் வருகைதந்திருப்பதாக ஜெட்விங் ட்ரவெல்ஸின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஷிரோமல் ஹுரே தெரிவித்துள்ளார். இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அதிலிருந்து மீள்வதற்கு சுற்றுலாத்துறை உள்ளடங்கலாக நாட்டிற்கு வருமானம் ஈட்டித்தரக்கூடிய துறைகளை மேலும் வலுப்படுத்தி ஊக்குவிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை வர்த்தகப்பேரவையினால் (சிலோன் சேம்பர் ஒஃப் கொமர்ஸ்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வர்த்தகக் கலந்துரையாடல் நிகழ்வொன்றில் பங்கேற்று, கருத்து வெளியிட்டிருக்கும் ஷிரோமல் ஹுரே, 'எமது பொருளாதாரத்திற்குப் பெருமளவில் பங்களிப்புச…
-
- 5 replies
- 783 views
-
-
கிழக்கை பாதுகாப்போம் என வந்தவர்கள் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்தனர் – ஞா.ஸ்ரீநேசன் கிழக்கை பாதுகாப்போம் என ஆட்சிக்கு வந்தவர்கள் மயிலத்தனமடு, மாதவனை, கெவிலியாமடு, நெடியகல் மலை என தமிழர்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தார்கள், இறுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்த சட்ட நடவடிக்கையின் காரணமாகவே அவை பாதுகாக்கப்பட்டன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவி…
-
- 1 reply
- 704 views
-
-
ஜெனிவாவில் இன்று நடைபெறவுள்ள 42வது அமர்வில் இலங்கை நிலவரம் குறித்து பரிசீலனை ! இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக, ஜெனிவாவில் இன்று நடைபெறும் 42வது அமர்வில், உலகளாவிய காலமுறை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு பரிசீலனை செய்யவுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஐ.நா.சபையின் பொதுச் சபையால் நிறுவப்பட்ட உலகளாவிய காலமுறை தொடர்பான மதிப்பாய்வு குழுவினால், ஒவ்வொரு உறுப்பு நாடும் நான்கரை ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. 2008 ல் முதல் தடவையாகவும், 2012 ல் இரண்டாவது தடவையாகவும் 2017 ல் மூன்றாவது தடவையாகவும் இலங்கை உட்பட அனைத்து உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட்டன. இந்நிலையில் நான்காவது சுழற்சிய…
-
- 0 replies
- 592 views
-
-
ஜனாதிபதியின் 13 A திட்டத்தை முறியடிப்பதாக தேசிய சுதந்திர முன்னணி சபதம்! 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சியை எதிர்ப்பதாக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. தேசபக்தியுள்ள மக்கள், தங்கள் உயிரைக் கொடுத்தாவது இதுபோன்ற திட்டங்களைத் தோற்கடிக்கத் தயாராக உள்ளனர் என்றும் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. ஒற்றையாட்சி அந்தஸ்தை இல்லாதொழிக்கும் ஜனாதிபதியின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது. இதேவேளை 13வது திருத்தம் தொடர்பான தமது நிலைப்பாட்டை வெளியிடுமாறு, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவிடம் தேசிய சுதந்திர முன்னணி …
-
- 0 replies
- 719 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவிகள் துரிதப்படுத்தப்படும் – இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவிகள் அனைத்து நாடுகளின் ஒத்துழைப்புடன் துரிதப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உறுதியளித்துள்ளார்.நிதி ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு அரசாங்கம் மக்கள் விரும்பத்தகாத சீர்திருத்தங்களை மேற்கொண்டாலும் ஒரு நாடாக ஒன்றிணைந்து செயல்படுவதற்கு பாராட்டும் தெரிவித்துள்ளார். இதனால், சர்வதேச கடன் வழங்குநரிடமிருந்து சாதகமான முடிவுகளையும் நிலையான பொருளாதாரத்தை விரைவில் அடைய முடியும் என்றும் அதற்கு அமெரிக்கா முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் குறிப்பிட்டுள்ளார்.…
-
- 0 replies
- 577 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமனற் உறுப்பினர் எம்.எ சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரை எமது செய்திசேவை தொடர்புகொண்ட போதும் அது பயனளிக்கவில்லை. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வீட்டிற்கு இது தொடர்பில் எமது செய்திச்சேவை தொடர்பு கொண்ட போது அவரது மகன் கருத்து தெரிவித்திருந்தார். “சம்பந்தன் அவர்களை வழமையாக வீட்டிற்கு வந்து பரிசோதனை செய்யும் வைத்தியர்கள் அவரது உடல்நிலை பலவீனப்பட்டுள்ளமையால் அவரை கட்டாயம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார். எனவே ஐயா தற்போது கொழும்பில் தனியார் வைத…
-
- 11 replies
- 1.1k views
- 2 followers
-
-
புதிய ஆணைக்குழுவை அமைத்தாலும் தேர்தலை பிற்போட முடியாது - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா 31 JAN, 2023 | 08:49 PM (எம்.மனோசித்ரா) அரசியலமைப்பு பேரவையால் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டாலும் , தேர்தலை பிற்போட முடியாது. அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் அரசியலமைப்பில் எமக்கு உரித்தாக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதில் ஸ்திரமாகவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவில் செவ்வாய்கிழமை (31) ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் , …
-
- 0 replies
- 555 views
- 1 follower
-
-
மன்னாரில் இராணுவத்தினரால் நிறுத்தப்பட்ட சிறு கடற்றொழில் – சாள்ஸ் நிர்மலநாதனின் தலையிட்டால் மீண்டும் அனுமதி! மன்னார்-யாழ் பிரதான வீதி,தள்ளாடி 14 கண் பாலத்தடியில் வாழ்வாதாரத்துக்காக நீண்ட காலங்களாக சிறு கடல் தொழில் செய்யும் மீனவர்களை ராணுவம் அப் பகுதியில் தொழில் செய்ய அனுமதிக்காததன் காரணமாக அப்பகுதி மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலாதனின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்கு நேற்று (திங்கட்கிழமை) மாலை நேரடியாக சென்று மீனவர்களின் நிலைமை தொடர்பாக ஆராய்ந்ததுடன் வன்னி இராணுவ தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு இப் பிரச்சனை தொடர்பாக தெரிய…
-
- 0 replies
- 699 views
-
-
வடமராட்சி கிழக்கில் கடலில் நீராடிய சிறுவனை காணவில்லை! By T. SARANYA 30 JAN, 2023 | 03:39 PM யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நீராடச் சென்ற மூவரில் 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். காணாமல் போன சிறுவன் கிழக்கு நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. மற்றுமொரு சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில், மீட்கப்பட்டு, பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணாமல் போன சிறுவனை பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/147038
-
- 1 reply
- 384 views
- 1 follower
-
-
13வது திருத்தத்தை அமுல்படுத்த முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள் – பீரிஸ் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிவிப்பு குறித்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அனைத்து மாகாண சபைகளும் செயலிழந்துள்ள பின்னணியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் சாடியுள்ளார். இவ்வாறு அர்த்தமற்ற அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு அவர் அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளார். அதிகரித்துவரும் நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் கவனத்தை திசை திருப்ப அரசாங்கம் முயற்சிப்பதாக ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நிதிப் பற்றாக்குறை என கூறி உள்ளூராட்சித் தேர்தலை தள்…
-
- 0 replies
- 603 views
-
-
பருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணம் ஆரம்பம்! இலங்கையின் 75ஆவது ஆண்டு சுதந்திர தினத்தினை முன்னிட்டு இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளத்தினால் , துவிச்சக்கர வண்டி பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை முனை பகுதியில் இருந்து தெய்வேந்திர முனை பகுதி வரையில் பயணிக்கவுள்ள குறித்த துவிச்சக்கர வண்டி பயணம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை , பருத்தித்துறை சாக்கோட்டை பகுதியில் இருந்து ஆரம்பமானது. எதிர்வரும் நான்கு நாட்களுக்கு குறித்த துவிச்சக்கர வண்டி பயணம் இடம்பெற்று தெய்வேந்திர முனை பகுதியை சென்றடையவுள்ளது. https://athavannews.com/2023/1322510
-
- 0 replies
- 337 views
-
-
வடக்கில் புதிய முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் இந்தியாவின் பிரபல வி.ஜி.பி குழுமம் ஆராய்வு By T. SARANYA 31 JAN, 2023 | 11:26 AM வடமாகாணத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக இந்தியாவின் பிரபல வி.ஜி.பி குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முனைவர் கலைமாமணி செவாலியர் விஜி சந்தோஷம் தலைமையிலான உயர்மட்ட குழு யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்து ஆராய்ந்துள்ளது. யாழ். நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் வடமாகாணத்தில் எவ்வாறான முதலீடுகளை மேற்கொள்ளலாம்? அதற்கான சாதகங்கள் மற்றும் பாதகங்கள் குறித்து பிரதானமாக ஆராயப்பட்டுள்ளது. ஆளுநரின் செயலாளர் வாகீசன் இது…
-
- 0 replies
- 294 views
- 1 follower
-
-
26,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக உள்வாங்குவதற்கு இணையம் மூலம் விண்ணப்பங்கள் கோரல் : விபரம் உள்ளே! By T. SARANYA 31 JAN, 2023 | 11:23 AM அரச சேவையில் உள்ள 26,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது. 2018, 2019, 2020 ஆகிய காலப் பகுதிகளில் அரச சேவையில் இணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட 40 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகளிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு எதிர்வரும் மார்ச் மாதம் நாடளாவிய ரீதியில் இந்த ஆட்சேர்ப்பு பரீட்சை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மைத்திரி உள்ளிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள் - சட்டமாதிபரை வலியுறுத்தும் எதிர்க்கட்சி By VISHNU 30 JAN, 2023 | 04:38 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தகவல்களை அறிந்திருந்தும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு எதிராக விரைவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக காவிந்த ஜயவர்தன, ஹெக்டர் அப்புஹாமி மற்றும் சட்டத்தரணிகள் இந்த கோரிக்கையை திங்கட்கிழமை (30) சட்டமா அத…
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
குரைக்கும் நாய் கடிக்காது என எண்ணிக் கொண்டு செயற்படுகிறோம் - இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் By T. SARANYA 31 JAN, 2023 | 09:09 AM (இராஜதுரை ஹஷான்) அரசியல் அழுத்தங்களினால் சுயாதீனமாக செயற்பட முடியாத நிலை காணப்படுகிறது. மின்சாரத்துறை அமைச்சரின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. என்னை பதவி நீக்குவதால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அறிவார்ந்த ஒருவரை மின்சாரத்துறை அமைச்சராக நியமித்தால் இணக்கமாக செயற்பட முடியும். குரைக்கும் நாய் கடிக்காது என எண்ணிக் கொண்டு செயற்படுகிறோம் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்…
-
- 0 replies
- 332 views
- 1 follower
-
-
இருபது வருடமாக கூட இருந்தவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சியில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் நேற்று (ஜன 29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது அதற்கு போட்டியாக அரசுக்கு ஆதரவாக இன்னொரு கட்சி உருவாக்கப்பட்டது. அது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவும் செய்யப்பட்டது. அரசு கூலியாக இருந்தவர்கள் தான் அந்த கட்சியை பதிவு செய்தவர்கள். தங்களிடத்தில் எது இல்லையோ அதை தங்களுடைய பெயரிலேயே சேர்த்துக் கொண்டார்கள். ஜனநாயகமாக அவர்கள் செய்யப்படவில்ல…
-
- 5 replies
- 923 views
-
-
நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் – சுமந்திரன் ஜனநாயகம் என்ற போர்வையிலே பேரினவாத ஆட்சி காரணமாகவே சுதந்திரம் கிடைத்தும் 75 ஆண்டுகளாக தமிழர்களுக்கு சுந்தந்திரம் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சிங்கள மக்களுக்கு அரசியல் சுதந்திரம் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையை பார்க்கின்ற பொழுது சிங்கள மக்களுக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாககின்றது என்றும் குறிப்பிட்டார். சுதந்திரதினம் என்ற போர்வையில் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை நாடும் கடனாளியாக இருக்கின்றது நிலையில் 75வது சுதந்திர தினத்தை ஜனாதிபதி கொண்டாட வ…
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்து தன்னுடைய நிகழ்ச்சி நிரலை முழுமையாக நிறைவேற்றிவிட்டார் என இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும், சட்டத்தரணியுமான கே.வி தவராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில், சுமந்திரன் வீட்டுக்குள் வந்து தன்னுடைய நிகழ்ச்சி நிரலை முழுமையாக நிறைவேற்றிவிட்டார்.தற்பொழுது ரெலோ, புளொட் ஆகிய இரண்டு கட்சிகளும் வேறு மூன்று கட்சிகளுடன் இணைந்து தனியான ஒரு கூட்டணியினை அமைத்துள்ளனர். தமிழரசு கட்சி தனியாக போட்டி இலங்கை தமிழரசு கட்சி தனியாக தேர்தலில் போட்டியிட உள்ளது. இந்த கூட்டு எல்லாம் ஒரு தேர்தலை மையப்…
-
- 0 replies
- 498 views
-
-
மின்சாரசபை 6 தரப்பினருக்கு 281 பில்லியன் ரூபாவை வழங்க வேண்டியுள்ளது - காஞ்சன By VISHNU 30 JAN, 2023 | 05:11 PM (எம்.மனோசித்ரா) இலங்கை மின்சாரசபை இதுவரையில் 6 தரப்பினருக்கு 281 பில்லியன் ரூபாவினை செலுத்த வேண்டியுள்ளது. இதில் மிக அதிக தொகையான 112 பில்லியன் ரூபாவினை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு ஆரம்பத்தில் துண்டிப்பின்றி மின்சாரத்தை வ…
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
(எம்.நியூட்டன்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகையை எதிர்த்து நடத்தப்பட்ட அமைதி வழி போராட்டக்காரர்கள் மீது இலங்கை அரச படைகளின் தாக்குதல் மற்று அதன் பின்னான கைது நடவடிக்கையை அடுத்து, தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் முறைப்படு செய்யப்பட்டுள்ளது. வேலன் சுசாமிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா உள்ளிட்டோர் இன்று (30) திங்கட்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேலன் சுவாமிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Vir…
-
- 1 reply
- 406 views
-