Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [sunday August 12 2007 07:43:50 AM GMT] அரசியலில் பிரவேசிப்பதற்கு முன்னோடியாகவும் யுத்தத்தில் உயிரிழந்த படையினரை நினைவுகூர்ந்தும் களுத்துறையில் உள்ள விகாரையில் நேற்று போதிபூசை ஒன்றை அவர் நடத்தினார். அரசியலில் அவர் பிரவேசிக்கிறார் என்பது நிச்சயமாகி வருகிறது. எனினும் அவர் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவாகச் செயற்படப் போகிறார் என்ற தகவல் எதுவும் இன்னும் வெளிப்படையாகவில்லை. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கும் கோத்தபாய ராஜபக்ஷவை பதவிநீக்கம் செய்து, அந்தப் பதவிக்குத் தகுதியானவரான ஜானக பெரேராவை நியமிக்குமாறு அண்மைக் காலமாக ஐ.தே.கட்சி கோரிவருகிறது. எனினும் ஜானக பெரேரா அரசியலில் ஈடுபடுவதையே பெரிதும் விரும்புவதாக அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின…

  2. [sunday August 12 2007 07:24:20 AM GMT] குடாநாட்டில் ஒருவாரத்தில் மட்டும் 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள னர். கிழக்கில் 45 பேர் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு விடுத்துள்ள ஆகப்பிந்திய அறிக்கையில் (ஜூலை 30 ஓகஸ்ட் 5) இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு * யாழ்ப்பாணத்தில் அசாதாரண நிலை தொடர்கின்றது. அத்தியாவசியப் பொருள் களின் விலைகள் அதிகரித்து வருவதால் மக்களின் நாளாந்த வாழ்க்கையும் மற்றும் பிரதேச பொருளாதாரமும் பாதிக்கப்பட் டுள்ளன. * யாழ்ப்பாணத்தில் கடந்த டிசெம்பர் மாதத்துக்கு பின்னர் கடந்த 31ஆம் திகதி உள்ளூர் கண்காணிப்பாளர்களுடன் பிர தான கண்காணிப்பு…

  3. கடந்த திங்கட்கிழமை (06.08.2007) அன்று அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) இலங்கையின் மனித உரிமைகள் பற்றிய ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. "போருக்கு மீளலும் மனித உரிமை மீறல்களும்" என்னும் தலைப்பில் 129 பக்கங்களில் அவ் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து 2007 ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை காலநேர புள்ளி விபரங்களுடன் எடுத்துக்காட்டியுள்ளது. அந்த அறிக்கையில் அரசாங்கம், துணைப் படைகள், விடுதலைப்புலிகள் இயக்கம், கருணா குழு என்பன இழைத்து வந்த மனித உரிமை மீறல்களைக் குற்றச்சாட்டுக்களாகவும் கண்டனங்களாகவும் சு…

  4. Aug 12, 2007 at 12:12 PM யாழ்ப்பாணம் நாவாந்துறை சந்தையில் வைத்து இன்று காலை குடும்பஸ்த்தர் ஒருவர் ஆயுததாரிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். காலை 6.30 மணியளவில் சந்தையில் சனக் கூட்டம் அதிகமாக இருந்த வேளையிலேயே இவர் சுடப்பட்டதாகவும், ஸ்தலத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாவாந்துறையைச் சேர்ந்த பேதுருப்பிள்ளை ஜேசுதாஸன் என்ற 40 வயதான குடும்பஸ்த்தரே கொல்லப்பட்டவராவார். இவர் சந்தைக்குப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக சென்றவேளையே இவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்த யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தமையால் சந்தையில் வழமையைவிட சனக்கூட்டம் அதிகமாக …

  5. Aug 12, 2007 at 03:41 PM யாழ்ப்பாணக்குடாநாட்டில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் 55 வயதுக்கு மேற்பட்டவர்களும் இனிமேல் பாதுகாப்பு அனுமதி பெறவேண்டும். இந்த நடைமுறை இன்று தொடக்கம் அமுல் செய்யப்படுகின்றது. பலாலி பாதுகாப்பு நடவடிக்கைத் தலைமையகம் நேற்றிரவு இத்தகவல்களை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தலைமையகம் நேற்றிரவு விடுத்த செய்திக்குறிப்பில் தெவிக்கப்பட்டுள்ளதாவது: 55 வயதுக்கு மேற்பட்டோரும் 10 வயதுக்கு குறைந்தவர்களும் வெளிமாவட்டங்களுக்குச் செல்ல பாதுகாப்பு அனுமதி பெறத்தேவையில்லை என கடந்த மாதம் 30ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு நிலைமையைக்கருத்திற்கொண்டு மீண்டும் பாதுகாப்பு அனுமதி பெறுவதற்கான வயதெல்லையை மாற்றியமைக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது…

  6. [ஞாயிற்றுக்கிழமை, 12 ஓகஸ்ட் 2007, 15:46 ஈழம்] மூதூர் படுகொலை வழக்கு தொடர்பான அறிக்கைக்காக அனைத்துலக சட்ட வல்லுநர்கள் குழு மன்னிப்பு கோர வேண்டும் என்று சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அனைத்துலக சட்ட வல்லுநர் குழுவின் தலைவர் நீதிபதி ஆர்தர் சஸ்கல்சனுக்கு அவர் நாளை திங்கட்கிழமை டிதம் ஒன்றை அனுப்பி வைக்க உள்ளார். மூதூர் அரச சார்பற்ற பணியாளர்களின் உடல்களை பரிசோதனை செய்த போது அதில் 5.56 மி.மீ துப்பாக்கி ரவை இருந்ததாக அவுஸ்திரேலிய தடவியல் வல்லுநர் மால்கம் டொட் தெரிவித்திருந்தார். ஆனால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் 7.62 மி.மீ துப்பாக்கி ரவைகளே தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதனைச் சுட்டிக்காட்டி,…

  7. [ஞாயிற்றுக்கிழமை, 12 ஓகஸ்ட் 2007, 17:13 ஈழம்] யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டுவரப்பட்ட கீரிமலையில் ஆடி அமாவாசை நிகழ்வுகளில் கலந்து கொண்ட மக்கள் கடும் சோதனைகளுக்கும் கண்காணிப்புக்கும் உள்ளாக்கப்பட்டனர். கீரிமலை தீர்த்தக் கேணியில் இன்று ஆடி அமாவசையை முன்னிட்டு மக்கள் நீண்ட காலத்தின் பின்னர் பிதிர்க் கடன்களை மேற்கொண்டனர். கீரிமலைக்கு ஆடி அமாவாசை நிகழ்வுகளுக்காக சென்றவர்களை விடவும் சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெயர்ந்த மக்கள் தங்களது இருப்பிடங்களைப் பார்க்கச் சென்றோர் அதிகமாக இருந்தனர். பலரது இருப்பிடங்கள் மற்றும் வளங்கள் அழிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு மனம் குமுறினர். அதேபோல் மாவிட்டபுரம் கந்தசாம…

  8. [சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 20:19 ஈழம்] ஆழிப்பேரலைக்குப் பின்னர் சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ், சட்டவிரோதமாக 9,700 வாகனங்களை இறக்குமதி செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை பேசிய அவர், வாகன உதிரிப்பாகங்கள் என்று சுங்கத் திணைக்களத்தினரிடம் கூறிவிட்டு 9,700 வாகனங்களை ஜெயராஜ் இறக்குமதி செய்துள்ளார். அத்தகைய வாகனங்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்க ரூ. 2 இலட்சம் முதல் 1 மில்லியன் வரை பெறப்பட்டுள்ளது. ஜெயராஜின் இந்த நடவடிக்கையால் அரசாங்கத்துக்கு ரூ. 6 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர். -புதினம்.

  9. ஞாயிறு 12-08-2007 14:05 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழில் கிளைமோர் நான்கு இராணுவத்தினர் பலி :அறுவர் காயம் யாழ் கோவிலாக்கண்டி பகுதியில் காலை 10.20 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்ட கிளைமோர் குண்டு வெடித்ததில் நான்கு இராணுத்தினர் கொல்லப்பட்டும் மற்றும் அறுவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது காயமடைந்தவர்கள் பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதா

    • 0 replies
    • 1.2k views
  10. கப்டன் குணாளனின் வித்துடல் விதைப்பு [ த.இன்பன் ] - [ ஓகஸ்ட் 11, 2007 - 06:04 AM - GMT ] கடந்த ஏழாம் நாள் வவுனியா நகரப்பகுதியில் சிறிலங்கா படையினரால் மறிக்கப்பட்டவேளை தற்காப்பு அங்கியை வெடிக்க வைத்து வீரச்சாவைத் தழுவிய கப்டன் குணாளனின் வித்துடல் முழு படைய மதிப்புடன் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மூங்கிலாறு மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மாவீரர் மண்டபத்தில் இம் மாவீரரின் வித்துடல் வைக்கப்பட்டு வீரவணக்கக் கூட்டம் நடைபெற்றது. பொதுச்சுடரினை போராளி பிரபா ஏற்றினார். வித்துடலுக்கான ஈகைச்சுடரினை தளபதி ஜனார்த்தனன் ஏற்றினார். மலர் மாலையை போராளி பேரின்பம் சூட்டினாரர். வீரவணக்க உரைகளை போராளி சங்கீதன், வவுனியா மாவட்ட அரசியற்துறை…

  11. Posted on : 2007-08-12 பூர்வீகத் தேசிய இனத்துக்கான உரிமைகள் தமிழருக்கு உண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கக்கோரி, பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதி களுக்கும் அமெரிக்காவின் கலிபோர்ணிய மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டத்தரணியான கரன் பாக்கர் மனு ஒன்றை - அனுப்பிவைத்திருக்கின்றார். அந்த மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ள காத்திர மான விடயங்கள் கவனிக்கத்தக்கவை. அமெரிக்காவும், இலங்கை அரசும் தூண்டியதன் விளைவாகவோ புலிகள் மீது தடை விதிக்கும் செயற் பாட்டை பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும் மேற்கொண்டன என்று சுட்டிக்காட்டும் அவர், இந்த நடவடிக்கை சமாதானப் பேச்சுகள் தடைப்பட்டமைக்கும் தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒழி…

  12. சனி 11-08-2007 23:43 மணி தமிழீழம் [மயூரன்] மாற்றுத் தமிழ்க் கட்சிகளை இணைத்துத் தீர்வுத் திட்டம் குறித்துப் பேச அரசாங்கம் திட்டம் இலங்கை அரசியல் அரசங்கில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து அந்த கட்சிகளுடன் பேசுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்வு யோசனைகள் தமிழ் மக்களுக்கு ஏற்புடையவை என்றும் அவற்றை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் புறக்கணிக்கப்பட்ட தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில நபர்களை மட்டுமே கொண்டுள்ள மாற்று தமிழ் கட்சிகளான தமிழர் விடுதலை…

  13. கஞ்சிகுடிச்சாறில் ஒரு விசேட அதிரடிப்படையினர் பலி: 6 பேர் காயம் அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறுப்பகுதியில் வெள்ளி மாலை சிறீலங்கா விசேட அதிரடிப்படையினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் அமுக்க வெடியில் சிக்கி விசேட அதிரடிப்படையினர் ஒருவர் கொல்லப்பட்டும் அறுவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. சிறீலங்கா படையினர் ஊடுருவ முயலும்போது மூன்றுக்கு மேற்பட்ட அமுக்கவெடிகள் ஒரேநேரத்தில் வெடித்ததில் எழுவர் காயமடைந்ததாகவும் அவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் ஒருவர் அதீத குருதிப்பெருக்கால் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/

  14. சர்வதேச கண்காணிப்புக்குழுவின் தேவை ஐ.தே.க.புலிகளுக்கு உண்டு இலங்கையில் சர்வதேச கண்காணிப்புக்குழுவை செயற்படவைக்கும் தேவை ஐக்கிய தேசிய கட்சிக்கும் விடுதலை புலிகள் இயக்கத்துக்குமே இருக்கின்றது. அவர்களே இதனை வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் இருக்கின்ற இரு பிரதான கட்சிகளும் ஒன்றையொன்று விமர்சித்துக்கொண்டாலும் வெளிநாட்டு அமைப்பு தமது நாட்டில் தலையிடுவதை ஒருபோதும் விரும்புவதில்லை என்று அரசாங்க சமாதõன செயலகத்தின் செயலாளர் பேராசிரியர் ராஜிவ் விஜேசிங்க தெரிவித்தார். ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோல்மஸ் என்னை சந்தித்தபோது மனிதாபிமான பணியாளர்களுக்கு, உலகில் மிகவும் அபாயகரமான நாடுகளில் இலங்கையும் ஒன்று என்ற கருத்தை தெரிவிக்கவில…

    • 0 replies
    • 1k views
  15. இலங்கைக்கு இராணுவ உபகரணங்களை இந்திய ஒருபோதும் வழங்கக்கூடாது இலங்கைக்கு இராணுவ உபகரணங்களை இந்தியா ஒருபோதும் வழங்கக்கூடாது என்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் இல. கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது: இலங்கை அரசு, இனவாத அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான அரசாக இல்லை. சுனாமியில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களைக்கூட அவர்களிடம் ஒப்படைக்கவில்லை. விடுதலைப் புலிகளை காரணம் காட்டிக்கொண்டு அப்பாவித் தமிழர்களை தாக்குவதை அனுமதிக்க முடியாது. இந்த விடயத்தில் நமது நாடு நடுநிலையோடு செயல்படவேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினையில் தலையிட்ட…

    • 2 replies
    • 1.1k views
  16. மகிந்த அரசாங்கம் ஒரு கழுதை- ஐ.தே.க. ஒரு நரி: விமல் வீரவன்ச [சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 15:55 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா அரசாங்கமானது ஒரு கழுதையைப் போலவும் ஐக்கிய தேசியக் கட்சியானது ஒரு நரியைப் போலவும் செயற்பட்டு வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளரும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச சாடியுள்ளார். இது தொடர்பில் விமல் வீரவன்ச கூறியுள்ளதாவது: இலங்கைக்கு அண்மையில் வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிச் செயலாளர் ஜோன் ஹோல்ம்சின் அறிக்கையை நாம் எதிர்க்கிறோம். அன்னிய சதிகளை முன்னெடுப்பதில் "நரி"யின் பாத்திரத்தை ஐக்கிய தேசியக் கட்சி வகித்து வருகிறது. அலன் றொக் இலங்கைக்கு வருகை தந்தார். அரசாங்கத்தைத் தா…

  17. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பேச்சுகளுக்கு தயாரான போதும் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கருணாவையே தனது தந்திரோபாயத்தின் மூலம் பேச்சு மேசைக்கு வரச் செய்தது மட்டுமல்லாது, அவரை புலிகளிடமிருந்தும் பிரித்தெடுத்த பெருமையும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே சாருமென ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட எம்.பி.யான சரத் ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும்போதே ரணவக்க எம்.பி.இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; 1993 ஆம் ஆண்டிலும் படையினரால் கிழக்கு கைப்பற்றப்பட்டது. தற்போதும் படையினரால் கிழக்கு முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்காக நாம் படையினரை மத…

  18. கடந்த 02-08-07 அன்று அம்பாறை மாவட்டத்தின் காடுகளை அண்டிய கிராமங்களையும் காட்டுப் பகுதிகளையும் இலக்குவைத்து சுமார் 450 வரையான சிறப்பு அதிரடிப்படையினர் பின்புல எறிகணை ஆதரவுடன் களமிறங்கினர். ஒரு அதிரடிப்படையினன் மட்டும் காயமடைந்த நிலையில் அந்த நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி முடிவுற்றது. புலிகளின் தரப்பில் ஆறுபேர் இறந்திருப்பதாக அரச தரப்பு கூறினாலும், அங்கே புலிகளுக்கு எவ்வித இழப்புக்களும் ஏற்படவில்லை. அதன்பின்னர் கடந்த ஏழாம் திகதி மீண்டும் ஒரு பாரிய படை நடவடிக்கை அதே இடத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அதிலே கஞ்சிகுடிச்சாறு, வக்குமுட்டியா, செங்காமம் ஆகிய முனைகளில் இருந்து சிறப்பு அதிரடிப்படையினரும் மாந்தோட்டத்திலிருந்து சிறிலங்கா தரைப்படையினருமாக கிட்டத்தட்ட 7…

  19. [சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 19:05 ஈழம்] மடு தேவாலயத் திருவிழாவில் பங்கேற்பதற்காக தென்னிலங்கையிலிருந்து வரும் சிங்களவர்களை தடுக்கும் நடவடிக்கைகளை சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வருகிறது. ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மடு மாதா திருவிழாவில் இம்முறையும் பங்குகொள்வதற்காக பெருமளவான சிங்கள மக்கள் வருகை தந்தனர். வருகை தரும் சிங்கள மக்களை ஆலயத் திருவிழா நிகழ்வில் பங்கு கொள்வதற்கு அனுமதிக்காது சிறிலங்கா இராணுவத்தினர் தடுத்து வருகின்றனர். மதவாச்சியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சோதனை நிலையம் மற்றும் மன்னார் - உயிலங்குளம் இராணுவ சோதனை நிலையங்களிலிருந்து அவர்களை தேவாலயத்துக்குச் செல்ல விடாது திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் மேற்க…

  20. கிழக்கு கடத்தல் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடும் இராணுவத்தினர்- கருணா குழுவினர்: கண்காணிப்புக் குழு [சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 14:50 ஈழம்] [சி.கனகரத்தினம்] கிழக்குப் பிரதேசத்தில் கடத்தல் சம்பவங்களில் சிறிலங்கா இராணுவத்தினரும், துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் திருக்கோவிலில் 45 அப்பாவி பொதுமக்களை கருணா குழுவினர் தடுத்து வைத்ததாகவும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளது. ஜூலை 30- ஓகஸ்ட் 5 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் அறிக்கை: கிழக்குப் பிரதேசத்தில் கடத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்தும் கண்காணிப்புக் குழுவிடம் கையளி…

    • 0 replies
    • 944 views
  21. இந்தியாவின் சிறிலங்கா, தமிழீழம் சார்ந்த வெளியுறவுக் கொள்கை , இந்தியாவின் நீண்டகால தேசிய நலனை அடியொற்றியதாக இருக்கிறாதா என்பதை ஆராய்வதே இந்தப் பதிவின் நோக்கம். அண்மையில் தமிழ் செல்வன் ஒரு பேட்டியில் இந்தியா தனது நீண்டகால பொருளாதார ,பிராந்திய நலங்களைக் காக்க வேண்டுமெனக் கூறி இருந்தார்.இந்தியா தனது தமிழீழம் சார்ந்த நிலைப்பாட்டை மறுபரிசீலனக்கு உள்ளாக்குவது இன்று அவசியமான ஒரு விடயம் ஆகி விட்டது.ஏனெனில் தமிழீழம் என்பது இந்தப் பிராந்தியத்தில் இன்று நிதர்சமான ஒரு சக்தியாக இருக்கிறது.புலிகளை இராணுவ ரீதியாக அழிக்க முடியாது என்பதை சிறிலங்கா அரசைத் தவிர அனைத்துச் சர்வதேச சக்திகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.இந்த நிலையில் புலிகளையும், தமிழ் மக்களின் போராட்டத்தையும் ,தமிழீழத்தையும் எப்பட…

    • 0 replies
    • 1.1k views
  22. [Friday August 10 2007 07:03:23 AM GMT] திருகோணமலையில் தமிழ் இளைஞர்களை உடனடியாகத் திரு மணம் செய்யுமாறும், இல்லையேல் நாட்டை விட்டு ஓடிவிடுமாறும் படையினர் கட்டளையிட்டு வருகின்றனர். இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து தமிழர்கள் கடும் துன்பங் களை அனுபவித்து வருகின்றனர். தமிழர் களின் பிரச்சினையை உரிமைப் போராட் டத்தை பயங்கரவாதம் என்று இந்த அரசு சர்வதேச நாடுகளுக்குக் காட்டி வருகின்றது. புலிகள் ஏன் ஆயுதங்களை ஏந்திப் போராடு கிறார்கள் எ…

    • 5 replies
    • 2.5k views
  23. சனி 11-08-2007 00:49 மணி தமிழீழம் [மயூரன்] ஊடகவியலாளர் படுகொலைகளுக்கு காராணம் அவர்களின் தனிப்பட்ட நடவடிக்கையே - ஜனாதிபதி சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியுள்ளனர். இலங்கையின் ஊடகத்துறை எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச நாட்டில் அனைத்து தரப்பிலும் பலர் படுகொலை செய்யட்டு வருவதாகவும் எனவே ஊடகத் துறையினர் மட்டும் பாதிப்பை எதிர்கொள்வதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார் ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு இலக்காவதும் படுகொலை செய்யப்படுவதும் அவர்களுடை தனிப்பட்ட வேறு நடவடிக்கைகள் காரணமாகவே இடம்பெ…

    • 4 replies
    • 1.8k views
  24. Posted on : Sat Aug 11 8:36:48 EEST 2007 .அடுத்தவாரம் இங்கு வருகை தரவிருக்கும் மற்றொரு ஐ.நா.பிரதிநிதியைத் தடுக்கக் கோருகிறது ஜே.வி.பி. ஐ.நாவின் மற்றுமொரு பிரதிநிதி அடுத்த வாரமளவில் இலங்கை வரவுள்ளார் என் றும் அவரை வரவிடாமல் உடனடியாகத் தடுக்குமாறும் ஜே.வி.பியின் நாடாளுமன் றக்குழுத் தலைவர் விமல் வீரவன்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் அரசிற்கு வேண்டு கோள் விடுத்தார். இலங்கைக்கு ஏற்கனவே வந்து திரும் பிய ஐ.நா.உயரதிகாரி ஜோன் ஹோம்ஸ் இலங்கை தொடர்பாக வெளியிட்ட கருத் துப் பற்றி பிரதமர் அரசின் நிலைப்பாட்டை நேற்று விளக்கியதைத் தொடர்ந்து தனது கருத்தை முன் வைத்தார் விமல்வீரவன்ஸ். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு: ஐ.நா.பிரதிநிதி ஜோன்ஹோம்ஸ் வருவதை நாம் ஏற்கனவே எதிர்த்தோம். அது தொடர…

  25. Posted on : 2007-08-11 ஐ.நா.அதிகாரியின் கருத்துக்கு எதிராகச் சீறுவதில் அர்த்தமில்லை இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா.உயரதிகாரி "மனிதாபிமானத் தொண்டுப் பணியாளர்கள் தங்களது வழமையான கடமையை ஆற்றுவதற்கு உலகிலேயே மிக மோசமான இடங்களில் ஒன்று இலங்கை'' - என்ற சாரப்பட இங்கு கூறிய கருத்து அரசுத் தரப்பில் சீற்றத்தைக் கிளப்பியிருக்கின்றது. அரசின் கோபத்தை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் காட்டமாக வெளிப்படுத்தியிருக்கின்றார

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.