ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
8 ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை வெளியிடவுள்ளார் ஜனாதிபதி !! ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்க உள்ளார். அரசமைப்புச் சட்டத்தின் படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைப்பார். ஜனவரி 27ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோப் குழு மற்றும் கோபா குழு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட குழுக்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. அத்தகைய…
-
- 0 replies
- 247 views
-
-
யாழ். மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அறிவித்தல்! யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறையாளர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண அறிவித்துள்ளார். மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய கும்பல் தொடர்பில் வெளியாகிய காணொளிகள் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டமையை சுட்டிக்காட்டிய அவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண மேலும் தெரிவித்ததாவது; மீற்றர் வட்ட…
-
- 2 replies
- 286 views
- 1 follower
-
-
யாழில் தை மாதத்தில் மாத்திரம் 300 பேர் டெங்கு நோயால் பாதிப்பு By VISHNU 29 JAN, 2023 | 10:47 AM இலங்கையில் இந்த வருடம் தை மாதம் கண்டறியப்பட்ட மொத்த டெங்கு நோயாளிகளின் தொகையானது 2021 ம் ஆண்டு இலங்கையில் ஆண்டு முழுவதும் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைக்கு சமனாக காணப்படுவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிபணிப்பாளர் வைத்தியர் சி. யமுனாநந்தா தெரிவித்தார் வடக்கில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார், இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து காணப்படுகின்றது. அதேபோல யாழ் போதனா வைத்தியசாலையிலும் 2023 ஆம் ஆண்டு தை மாதம் கண்டறி…
-
- 0 replies
- 466 views
- 1 follower
-
-
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து ஜெனிவாவில் புதனன்று மீளாய்வு - வெளிவிவகார அமைச்சர் தலைமையில் தூதுக்குழு பங்கேற்பு By DIGITAL DESK 5 28 JAN, 2023 | 04:39 PM (ஆர்.ராம்) இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வரும் எதிர்வரும் புதன்கிழமை மீளாய்வு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில், எதிர்வரும் புதன்கிழமை காலை 9.00 மணி தொடக்கம், 12.30 மணி வரை இலங்கை குறித்த மீளாய்வு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பேரவையின் உலகளாவிய பருவகால மீளாய்வின் போதே, இலங்கை மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று ஐ.நா.…
-
- 1 reply
- 134 views
- 1 follower
-
-
13 இற்கு முடிவு கட்ட இந்தியா சம்மதிக்காது ! – சம்பந்தன் நம்பிக்கை அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. அந்தச் சட்டத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும். இந்த நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். “13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் எனவும், அந்தச் சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் எனவும் இனவாதிகளான விமல் வீரவன்ச, சரத் வீரசேகர கூறும் கருத்துக்களைக் குப்பையில் தூக்கி வீச வேண்டும். அவர்களின் விசமத்தனமான கருத்துக்கள் இப…
-
- 1 reply
- 331 views
-
-
பொருளாதார நெருக்கடி வெகுவிரைவில் எரிமலை போல் வெடிக்கும் - நாலக கொடஹேவா By NANTHINI 28 JAN, 2023 | 11:31 AM (இராஜதுரை ஹஷான்) ரணில் - ராஜபக்ஷ அரசாங்கத்தினால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. கடன் பெறல், இருக்கும் வளங்களை விற்றல் ஆகியவை ஜனாதிபதியின் பொருளாதார கொள்கையாக உள்ளது. பொருளாதார நெருக்கடி வெகு விரைவில் எரிமலை போல் வெடிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார். சுதந்திர மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை வெளியிடும் நிகழ்வு நேற்று (27) வெள்ளிக்கிழமை பத்தரமுல்ல பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்…
-
- 1 reply
- 314 views
- 1 follower
-
-
மட்டு கரடியனாற்றில் 16 மாடுகள் கடத்தல் ; மாட்டுகன்று எரிந்த நிலையில் மீட்பு By T. SARANYA 28 JAN, 2023 | 12:49 PM மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காருமலை பிரதேச மாட்டுபட்டியில் இருந்த 47 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 16 எருமை மாடுகளை கால்நடையாக கடத்தி சென்று விற்பனை செய்த இளைஞன் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (27) கைது செய்ததுடன் தோல் கம்பனியில் எரிக்கப்பட்ட நிலையில் மாட்டுகன்றுகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 21ம் திகதி கன்றுதாச்சியான மாடுகள் உட்பட 16 மாடுகள் காணாமல் போனதைதொடர்ந்து அதனை தேடிய நிலையில் கரடியனாறு செங்கலடி பிரதான வீதியில் உள்ள வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த சிசிரி கமராக்கள…
-
- 3 replies
- 659 views
- 1 follower
-
-
3 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடமையாக்கப்பட்டன By T. SARANYA 28 JAN, 2023 | 11:21 AM இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட 03 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. மேலும், நான்கு படகுகளுக்கான தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் 17 படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. படகுரிமை வழக்கிற்காக இராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்கள் கொண்ட குழு நேற்று மன்றில் முன்னிலையாகியிருந்தனர். படகுகளுக்கான உரிமை கோ…
-
- 1 reply
- 634 views
- 1 follower
-
-
பான் கீ மூன் இலங்கை வருகிறார் By T. SARANYA 28 JAN, 2023 | 01:37 PM (லியோ நிரோஷ தர்ஷன்) உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் பான் கீ மூன், காலநிலை மாற்றம் மற்றும் நிலைப்பேர் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட உள்ளார். தென் கொரிய அரசின் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவரான பான் கீ மூன் கால நிலை மாற்றம் மற்றும் பசுமை அபிவிருத்தி திட்டங்களில் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படவ…
-
- 16 replies
- 1.3k views
- 1 follower
-
-
சிக்கலில் தள்ளும் சீனாவின் அவகாசம்? சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் இலங்கையின் நம்பிக்கைக்கு சீனாவின் 2 வருட அவகாசம் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாரிஸ் கிளப் மற்றும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பரிந்துரைத்த கடன் செலுத்துவதற்கான 10 வருட அவகாசத்துக்கு பதிலாக, சீனாவின் எக்ஸிம் (ஏற்றுமதி-இறக்குமதி) வங்கி இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கியுள்ளது. இலங்கையின் கடனை 15 வருட காலத்துக்கு மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் பாரிஸ் கிளப் பரிந்துரைத்துள்ளதாகவும் நிலையில் சீன எக்ஸிம் வங்கியின் அவகாசம் இலங்கையின் பொருளாதார வலிகள் மேலும் நீடிக்க வாய்ப்புக…
-
- 0 replies
- 369 views
-
-
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை: யாழ். வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலை தரம் ஐந்து புலமைப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலையைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இவ் வருடம் தரம் 5 பொதுப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் தொகை -329,668 இதில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை- 48,257ஆகும். வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் சதவீதம்-14.64%. வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வட மாகாணத்தில் பரீட்சைக்குத் தோற்றியோர் எண்ணிக்கை – 17,622 வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் தொகை – 2749 அதன் சதவீதம் – 15…
-
- 0 replies
- 317 views
-
-
யாருக்கும் தலைவணங்காத நாட்டை உருவாக்கி வருகிறோம் அனுராதபுர காலத்தைப் போன்று யாருக்கும் தலைவணங்காத, கடனற்ற வலுவான நாட்டை உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அனுராதபுரத்தில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2022 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி -11% ஆக காணப்பட்டதாகவும் இவ்வருடம் அது -3.5% அல்லது -4.0 % வரை குறைவடையலாம் என ஜனாதிபதி தெரிவித்தார். எனினும் 2024 ஆம் ஆண்டு முதல் இதனை நேர்மறையான வளர்ச்சிக்கு கொண்டு செல்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.…
-
- 2 replies
- 618 views
-
-
பெப்ரவரியில் இலங்கைக்கு விஜயம் செய்யும் விக்டோரியா நூலண்ட் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள விக்டோரியா நூலண்ட், அமெரிக்க - இலங்கை நட்புறவின் 75 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்வார். மேலும் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவை விக்டோரியா நூலண்ட் உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்டோரியா நூலண்ட் ஜனவரி 28 முதல…
-
- 0 replies
- 509 views
-
-
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு மகிழடித்தீவு சந்தியில் உள்ள படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் டெலோவின் செயலாளர் நாயகமுமான கோவிந்த கருணாகரம் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி அகவணக்கமும் செலுத்தப்பட்டது. 28-01-1987 மற்றும் 12-06-1991ஆகிய…
-
- 0 replies
- 363 views
-
-
உரிய ஆலோசனைகள் இன்றி பலாலியைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்க வேண்டாம் – சரத் வீரசேகர யாழ்ப்பாணம் பலாலியைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்க முன் ஆலோசனை பெறவேண்டும் என சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் லாநிதி சரத் வீரசேகர இந்த கோரிக்கை விடுத்துள்ளார். பலாலியைச் சூழவுள்ள காணிகளை பொது மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு முன்னர் பாதுகாப்புப் படைத் தலைவர்களிடம் ஆலோசனை பெறுமாறு கோரியுள்ளார். அவ்வாறு ஆலோசனைகளை போற்றுக்கொள்ளாமல் குறித்த பகுதிகளில் உள்ள காணிகளை பகிர்ந்தளிப்பது அபாயகரமானது எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1322138
-
- 7 replies
- 823 views
- 1 follower
-
-
உறவுகளைத் தேடி போராடி வரும் ஜெனிதாவிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கண்டிக்கிறோம்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உறவுகளைத் தேடி போராடி வரும் ஜெனிதாவிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கண்டிக்கிறோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் “வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளர் சிவானந்தம் ஜெனிதாவின் வீட்டிற்கு கடந்த 26ம் திகதி அதிகாலை 3 மணியளவில் சென்ற சிலர் கழிவு ஒயில் வீசியுள்ளனர் குறித்த சம்பவம் தொடர்பில் …
-
- 0 replies
- 297 views
-
-
தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி சுதந்திரதினத்தன்று யாழிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி By T. Saranya 28 Jan, 2023 | 11:38 AM எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனபடுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது. இந்நிலையில் அண்மையில் யாழ். மாவட்டத்தில் சிவில் அமைப்புக்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து இன்றைய தினம் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தில் உள்ள மதகுருமார், சிவில் அமைப்புக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலதரப்பினரை இன்றையதினம் சந்தித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கலந்த…
-
- 0 replies
- 597 views
-
-
சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகில் ஒரே ஜனாதிபதி கோட்டாபய - உதய கம்மன்பில By T. Saranya 28 Jan, 2023 | 10:55 AM (இராஜதுரை ஹஷான்) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமைச்சரவை தீர்மானங்கள் ராஜபக்ஷ குடும்பத்தின் இரவு விருந்து உபசாரத்தின் ஊடாக எடுக்கப்பட்டது. ராஜபக்ஷ குடும்ப ஆதிக்கத்தினால் 69 இலட்ச மக்களின் அரசியல் தீர்மானம் சூன்யமானது. சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகில் ஒரே ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இடம் பிடித்துள்ளார் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். சுதந்திர மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை வெள…
-
- 1 reply
- 526 views
-
-
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவிற்கு பிணை! பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த வழக்கில் அவரை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. https://athavannews.com/2…
-
- 0 replies
- 193 views
-
-
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளித்தால் பிரச்சினைகள் ஏற்படும் – விமல் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவும், அரச வளங்களை தனியார்மயப்படுத்தவும் ஜனாதிபதிக்கு தார்மீக உரிமை கிடையாது என விமல் வீரவன்ச தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்கள் பிரதிநிதியல்ல என்றும் மக்களாணை இல்லாத அவருக்கு அத்தகைய அதிகாரங்களை இல்லை என்றும் குறிப்பிட்டார். மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளித்தால் நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் தோற்றம் பெறும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு மிகுதியாக உள்ள வளங்களை தனியார்மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என குற்றம் சாட்டினார…
-
- 1 reply
- 630 views
-
-
மக்கள் வங்கியின் திருநெல்வேலி சேவை நிலையத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை அங்கு பணியாற்றிய அதிகாரி ஒருவர் கையாடிச் சென்றதன் காரணமாகத் தமது நகைகளை மீட்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவில் உரிய தீர்வு பெற்றுத் தரப்படும் என மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் ரி.எம்.டபிள்யூ. சூரியகுமார தெரிவித்துள்ளார். அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் வாடிக்கையாளர்களுடனான சந்திப்பின் போதே மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் ரி.எம்.டபிள்யூ. சூரியகுமார இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்கள் வங்கியின் திருநெல்வேலி சேவை நிலையத்தில் அடகு வைக்கப்பட்ட ஒரு தொகுதி நகைகளை அங்கு பணியாற்றிய அதிகாரி ஒருவர் கையாடிச் சென்று விட்டார் என்ற…
-
- 1 reply
- 1k views
-
-
யாழ். பல்கலைக்கழக பேரவைக்கு மேலும் 5 உறுப்பினர்கள் நியமனம்! By NANTHINI 27 JAN, 2023 | 04:21 PM யாழ். பல்கலைக்கழக பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக மேலும் 5 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாக பதவி வகித்தவர்களின் பதவிக்காலம் கடந்த 15ஆம் திகதியுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த 16ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்றாண்டு காலத்துக்கு 9 வெளிவாரி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர், தற்போது மேலும் 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம…
-
- 0 replies
- 368 views
- 1 follower
-
-
படையினரை பௌத்தவழிபாட்டுத்தலங்களில் இருந்து அகற்றவேண்டாம் - மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் By RAJEEBAN 27 JAN, 2023 | 02:21 PM படையினரை பௌத்தவழிபாட்டுத்தலங்களில் இருந்து அகற்றவேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வடக்குகிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பௌத்தவழிபாட்டு தலங்களின் பாதுகாப்பிற்கு என பணியில் அமர்த்தப்பட்டுள்ள படையினரை அங்கிருந்து அகற்றவேண்டாம் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பௌத்தவழிபாட்டுத்தலங்களின் பாதுகாப்பை இருப்பை உறுதிசெய்யவேண்டியது என அரசாங்கத்தின் கடமை என அவர்கள் தெரிவித…
-
- 2 replies
- 551 views
- 1 follower
-
-
மனித உரிமைகளை மதிப்பது இலங்கையின் ஸ்திரதன்மைக்கு அவசியமான விடயம் - அமெரிக்க அதிகாரி By RAJEEBAN 27 JAN, 2023 | 12:38 PM மனித உரிமைகளிற்கான மதிப்பு இலங்கையின் ஸ்திரதன்மைக்கும் பொருளாதார செழிப்பிற்கும் அவசியமான விடயம் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின்சர்வதேச குற்றம் நீதிக்கான தூதுவர் பெத்வான் சாக் தெரிவித்துள்ளார். கனடாவின்தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடனான சந்திப்பின் பின்னர் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நீதி பொறுப்புக்கூறல் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக கனடாவை சேர்ந்த தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடன் அர்த்தபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 581 views
- 1 follower
-
-
யாழில் மீற்றர் வட்டி விவகாரம் : கடனாளிகளை அடித்து துன்புறுத்திய நபர் கைது By NANTHINI 27 JAN, 2023 | 12:28 PM யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு, பணத்தை மீள வசூலிப்பதற்காக கடன் பெற்றவர்களை அடித்து துன்புறுத்தும் நபர் நேற்று (26) மாலை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்தவர் என பொலிஸார் கூறுகின்றனர். இது தொடர்பில் தெரியவருவதாவது: குறித்த நபர் மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணியொன்றுக்கு அழைத்துவந்து, கொடூரமாக தாக்கி துன்புறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. …
-
- 3 replies
- 850 views
- 1 follower
-