ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142799 topics in this forum
-
படைவலுச் சமநிலையே தீர்வுக்கான அடிப்படை -அருஸ் (வேல்ஸ்)- தமது தாயகப்பிரதேசம் வடக்கு கிழக்கை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது தமிழ்மக்களின் ஆரம்பகால கோரிக்கை என்பதற்கு மேலாக இன்று அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் அனைத்துலகத்திற்கு உண்டு. ஆனால் கிழக்கை முற்றாக இராணுவ மற்றும் அரசியல் வழிகளில் தனிமைப்படுத்துவதன் மூலம் அந்த நிலைப்பாட்டை தகர்த்துவிடலாம் என்பது இலங்கை அரசுகள் காலம் காலமாக கடைப்பிடிக்கும் கொள்கையாகும். எனினும் அனைத்துலக சமூகத்தின் நிகழ்ச்சி நிரல்களை தீர்மானிப்பவர்களில் முக்கிய புள்ளிகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் வழிகளில் தீர்வைக் காணவேண்டும் என கூறிவந்தாலும் அவர்களின் உண்ம…
-
- 0 replies
- 1k views
-
-
பிராந்திய பொருளாதார அரசியல் நலன்களின் அடிப்படையில் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்: சு.ப.தமிழ்ச்செல்வன் [ஞாயிற்றுக்கிழமை, 5 ஓகஸ்ட் 2007, 18:44 ஈழம்] [புதினம் நிருபர்] பிராந்திய பொருளாதார அரசியல் நலன்களின் அடிப்படையில் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். புதுடில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் வெளியாகும் "த சண்டே இந்தியன்" வார இதழுக்கு (ஓகஸ்ட் 5, 2007) சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்த நேர்காணல்: மகிந்த ராஜபக்சவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்று ராய்ட்டர்ஸ்க்கு அளித்த பேட்டியில்…
-
- 0 replies
- 781 views
-
-
பெரும் செலவுகளுடன் சிறிலங்கா வான்படை நவீன மயம்: ஜேன்ஸ் பாதுகாப்பு சஞ்சிகை [ஞாயிற்றுக்கிழமை, 5 ஓகஸ்ட் 2007, 09:55 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்கா வான்படையினர் 7 பில்லியன் ரூபாய்களை தமது கொள்வனவுகளுக்காக இந்த வருடத்தின் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் செலவிட உள்ளனர் என ஜேன்ஸ் பாதுகாப்பு வர சஞ்சிகை இந்த வாரம் தெரிவித்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது. அந்த சஞ்சிகையின் ஆசிய பசுபிக் பிராந்திய தலைவரான றொபேட் கர்நியோல் ஆகஸ்ட் மாத முதல் பதிப்பிற்கு எழுதியதாவது: சிறிலங்கா வான்படை ஜூலை முதல் டிசம்பர் வரையிலான தமது கொள்வனவுகளுக்கு 7,779.4 மில்லியன் ரூபாய்களை (69.6 மில்லியன் டொலர்) எதிர்பார்க்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
சனி 04-08-2007 16:25 மணி தமிழீழம் [மயூரன்] இயற்கை மரணமெய்யும் அரசாங்கத்தை நாங்கள் காப்பாற்றப் போவதில்லை - ஜேவிபி இயற்கை மரணமெய்யும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை தாங்கள் காப்பற்றப் போவதில்லை என்று ஜே.வி.பி அறிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதை அடுத்து அபரும்பான்மையi இழந்துள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் எதிர்காலத்தில் மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களை இழக்க நேரிடலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்த ஜே.வி.பி ஆதரவளிக்குமா என வினவியபோது தமது கட்சி இயற்கை மரணமடைந்து கொண்டிருக்கும் அரசாங்கத்தை காப்பாற்ற முயடிhது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள…
-
- 5 replies
- 1.6k views
-
-
இராணுவ நடவடிக்கை தொடர்ந்தால் ருவாண்டா நிலை தான் ஏற்படும் - அவுஸ்திரேலிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை [05 - August - 2007] -அ. ரஜீவன்- வடபகுதியில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இலங்கையில் கம்போடியா, ருவாண்டா, கொசோவோ போன்ற நாடுகளில் காணப்பட்டது போன்ற மோசமான நிலை உருவாகலாம் என எச்சரித்துள்ள அவுஸ்திரேலிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கரெத் இவான்ஸ் சர்வதேச சமூகம் தலையிடக் கூடிய சூழல் உருவாகலாம் என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார். கொழும்பில், தேசத்தின் இறைமையின் எல்லைகளும் 21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வும் எனும் பொருளில் `கலாநிதி நீலன் திருச்செல்வம் நினைவுப் பேருரை' யையாற்றியவேளை இதனை குறிப்பிட்ட அவர் ம…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஞாயிறு 05-08-2007 16:53 மணி தமிழீழம் [மயூரன்] சிங்கப்பூரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் காலிக் கடற்பரப்பில் மூழ்கியது காலித் துறைக கடற்பரப்பில் சிங்கப்பூர் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்று மூழ்கியுள்ளது. நேற்று சனிக்கிழமை காலித் துறைமுகத்தின் கடற் திடலில் மோதிய எண்ணெய்தாங்கி கப்பல் மோதியது. இதனையடுத்து அதில் நிரப்பப்பட்ட 76 ஆயிரம் மெற்றிக்தொன் மசகு எண்ணெயில் 75 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் 24 மணிநேரத்தில் அவசர அவசரமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கப்பலானது இன்றையதினம் கடலில் முழுமையாக நிரினுள் மூழ்கியது. pathivu.
-
- 1 reply
- 1.6k views
-
-
தென்னிலங்கையின் அரசியல் அலையடிப்புகளும் சுழியோட்டங்களும் -(பீஷ்மர்) [05 - August - 2007] கடந்த இரண்டு நாட்களாக அரசியல் முக்கியத்துவமிக்க செய்தியாக வந்திருப்பது ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலுள்ள இ.தொ.கா.வின் பதவி விலகலாகும். இதுவரை எடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் முற்றிலும் வெற்றிபெறவில்லை என்பது ஒரு புறமிருக்க மறுபுறத்தில் ஆறுமுகன் தொண்டமான் விலக வேண்டி வந்ததற்கான காரணம் அரசியல் ரீதியாக ராஜிநாமாச் செய்யாத மலையக மக்கள் முன்னணியை எந்த நிலைக்குத் தள்ளுமென்பது ஓர் உள்ளார்ந்த பிரச்சினை. உண்மையில் ஆறுமுகன் தொண்டமான் சம்பவம் உள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் அரசாங்கப் பிரச்சினைகளின் ஒரு சிறு மீறலேயாகும். கொதிக்கும் பானையை மூடியிருக்கும் சிறு தட்டுக்கூடாக ஆவி பிய…
-
- 0 replies
- 701 views
-
-
அரசை விமர்சிப்பதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை. - பெ.சந்திரசேகரன். Written by Pandaravanniyan - Aug 05, 2007 at 02:30 PM அரசாங்கத்தை வெறுமனே விமர்சித்துக் கொண்டோ அல்லது ஆர்ப்பாட்டங்கள் செய்து கொண்டோ இருப்பதால் மட்டும் எதுவுமே நடந்து விடப்போவதில்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கொத்மலை பிரதேச அமைப்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், தோட்டக் கமிட்டித் தலைவர்கள் ஆகியோருடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தச்சந்திப்பில் அவர் அங்கு மேலும் தெரிவித்திருப்பதாவது: நாட்டில் இன்றைய விலைவாசி ஏற்றம், ஆள் கடத்தல், கப்பம் அறவிடுதல், யுத்தத்தினால் ஏற்படும் சீரழிவுகள், தோட்டத் தொழிலாளர்களின் ச…
-
- 0 replies
- 754 views
-
-
மலையக தமிழ் அரசியல் தலைமைகளின் திரிசங்கு நிலை [05 - August - 2007] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்தவாரம் வெளியேறியதையடுத்து கொழும்பு அரசியலில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அமைச்சர் பதவியைத் துறந்த இ.தொ.கா.தலைவர் ஆறுமுகம் தொண்டமானையும் பிரதியமைச்சர் பதவிக்களைத் துறந்த அவரது நான்கு சகாக்களையும் மீண்டும் பதவிகளை ஏற்கச் செய்து அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்ற அதேவேளை, இ.தொ.கா.வின் அடுத்த நகர்வு எத்தகையதாக இருக்கும் என்பது குறித்து திட்டவட்டமாக எதையும் கூறமுடியாத ஒரு நிலைமையே காணப்படுகிறது. அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்…
-
- 0 replies
- 804 views
-
-
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பாரிய எரிபொருள் பற்றாக்குறை [ஞாயிற்றுக்கிழமை, 5 ஓகஸ்ட் 2007, 08:48 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பாரிய எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்ட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கிளிநொச்சி மேலதிக அரச அதிபர் வி. ஜெயராணி கூறுகையில், ஏ-9 பாதை மூடப்பட்ட பின்னர் எரிபொருட்கள், சீமெந்து உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் குறைவான அளவே விநியோகிக்கப்படுகின்றன. சீமெந்தும் இரும்பும் இப்பிரதேசங்களில் தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் அரிசி பற்றாக்குறை இல்லை. மக்கள் ஏற்கெனவே விவசாய செய்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து நெற்பொதிகளை வெளியே எடுத்துச் செல்ல …
-
- 0 replies
- 936 views
-
-
மகிந்த ராஜபக்ச- இ.தொ.கா. முறுகல் ஏன்? [ஞாயிற்றுக்கிழமை, 5 ஓகஸ்ட் 2007, 09:04 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கும் இடையே முறுகல் நிலை உருவானதற்கு இரண்டு காரணங்களை கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மலையகத் தோட்டப்பகுதிகளில் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் "பிரஜா சக்தி" திட்டத்தின் கீழான ஐம்பது கணிணி மையங்களுக்காக செய்மதித் தொலைத்தொடர்பு கருவிகளை இறக்குமதி செய்ததாக இ.தொ.கா. தரப்பு கூறுகிறது. இதற்கான அனுமதியை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவிடம் தாம் ஏற்கனவே பெற்றிருந்ததாகவும் இ.தொ.கா. தரப்பு தெரிவித்தது. எனினும் சுங்கப்பிரிவின் ஊடாக இந்த செய்மதித்தொலைத்தொடர்பு கருவிகளை வெளியேற்றுவதில் காலதா…
-
- 0 replies
- 828 views
-
-
விடுதலைப் புலிகளின் புதிய தாக்குதல் படைவலுச் சமநிலையை மாற்றலாம்: கொழும்பு ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 5 ஓகஸ்ட் 2007, 09:40 ஈழம்] [பி.கெளரி] தமிழீழ விடுதலைப் புலிகளின் வலிந்த அல்லது தற்காப்பு சமரானது தென்னிலங்கையில் அரசியல் வீழ்ச்சியை ஏற்படுத்துவதுடன், அது போரில் படைவலுச் சமநிலையையும் மாற்றலாம் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "தி நேசன்" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: வன்னிப் பகுதிக்கான சிறிலங்கா இராணுவத்தினரின் கட்டளைப்பீடத்தில் முழுமையான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது விடுதலைப் புலிகளுக்கு பல்வேறுபட்ட சமிக்ஞைகளை தெரிவித்துள்ளது. அதாவது இராணுவம் வன்னியில் தற்போதைக்கு தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிடவில்ல…
-
- 0 replies
- 927 views
-
-
தமிழர் தாயகத்தில் சிங்களத்தால் நிகழ்த்தப்படும் அவலங்களை அந்தந்த நாடுகளில் இராஜதந்திர ரீதியாக முன்னெடுத்துச் செல்லுமாறு புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் (ATBC) நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (31.07.07) ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் அளித்த நேர்காணல்: சிங்களத் தலைவர்கள் எமக்கு நீதியானதும் நியாயமானதுமான தீர்வைத் தருவார்கள் என்ற நம்பிக்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எப்போதுமே இல்லை. ஏனெனில் காலம் காலமாக சிங்களத்தரப்போடு தமிழர் தரப்பு பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டபோதும் ஒருபோதுமே தமிழ…
-
- 7 replies
- 1.9k views
-
-
புலிகளோடு மகிந்த உடன்பாடு செய்து கொண்டார்: மனோ கணேசன் [சனிக்கிழமை, 4 ஓகஸ்ட் 2007, 15:38 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உடன்பாடு செய்து கொண்டார் என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது: சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் காலத்தில் புலிகளுடன் இரகசிய தொடர்புகளை ஏற்படுத்தி தருமாறு மகிந்தவின் சகோதரர் பசில் ராஐபக்சவும் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் என்னிடம் கேட்டனர். தேர்தல் காலத்தில் விடுக்கப்பட்ட இந்த கோரிக்கையை நான் உடனேயே மறுத்துவிட்டேன். ஜெயராஜ் பெர்னாண்ட…
-
- 2 replies
- 1.8k views
-
-
தொப்பிகல காட்டுப் பகுதிக்குள் ஆயுதக் கிடங்கு கண்டுபிடிப்பு! கொழும்பு, ஜூலை 30 தொப்பிகல பகுதியிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதி ஒன்றினுள் விடுதலைப் புலிகளுக்குச்சொந்தமான ஆயுதக் கிடங்கு ஒன்றினை நேற்றுப் படையினர் கண்டுபிடித்துள்ளனர் என்று பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். நேற்றுப் பிற்பகல் 1.30 மணியளவில் குறித்த பகுதியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கிடங்கிலிருந்து 120 மில்லிமீற்றர் ரக மோட்டார் துப்பாக்கி01, அதற்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் 12, 82 மில்லிமீற்றர் ரக மோட்டார் துப்பாக்கி01, அதற்குப் பயன்படுத்தப்படும் ரவைகள்125, 82 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியைக் கட்டுப்படுத்தும் …
-
- 26 replies
- 6.1k views
-
-
வடக்கு நடவடிக்கை எளிதானது அல்ல- சிறிலங்காவுக்கு இந்தியா உதவி செய்ய வேண்டும்: கேணல் ஹரிகரன் சிறிலங்கா அரசாங்கம் கிழக்கைப் போல் வடக்கில் எளிதாக வெற்றி பெற்றுவிட முடியாது என்றும் பேச்சுவார்த்தைக்குப் போங்கள் என்று கூறுவதோடு மேலதிகமாகவும் சிறிலங்காவுக்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் என்றும் முன்னாள் இந்திய இராணுவப் புலனாய்வு அதிகாரி கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்: இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியாத அமைப்பு எதுவும் இல்லை. ஆகையால் தோற்கடிக்க முடியாது என்பது தொடர்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் அதே நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் யார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அவர்கள் …
-
- 3 replies
- 1.3k views
-
-
நாகா மற்றும் ஈழ விடுதலையில் "இந்து"வின் இரட்டை வேடம்: பெரியார் முழக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று, ஓயாது எழுதி வரும் "இந்து" பார்ப்பன நாளேடு (ஜூலை 30 ஆம் நாள்), நாகாலாந்து இயக்கத்தினருடன் பேச்சுவார்த்தையைப் பொறுப்புடன் நடத்த வேண்டும் என்று இந்திய அரசுக்கு "அறிவுரை" கூறுகிறது என்று பெரியார் திராவிடர் கழகத்தின் உத்தியோகப்பூர்வ வார ஏடான "புரட்சி பெரியார் முழக்கம்" சாடியுள்ளது. பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை க.இராசேந்திரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் பெரியார் முழக்கம் (ஓகஸ்ட் 2) இதழில் இது தொடர்பில் இடம்பெற்றுள்ள கட்டுரை விபரம்: நாகா விடுதலைக்குப் போராடும் நாகா தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலுக்கும் இந்தியாவுக்குமிடையே இன்று …
-
- 1 reply
- 2.1k views
-
-
கருணா குழுவினரின் ஆயுதக்களைவை மட்டக்களப்பு இராணுவ தளபதி விரும்புகிறார்: கண்காணிப்புக் குழு [சனிக்கிழமை, 4 ஓகஸ்ட் 2007, 15:52 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரின் ஆயுதக்களைவை மட்டக்களப்பு சிறிலங்கா இராணுவ தளபதி விரும்புவதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. கண்காணிப்புக் குழுவினருடனான அண்மைய சந்திப்பின் போது, 23 ஆம் டிவிசனைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தயா ரட்ணநாயக்க இதனைத் தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஸ்டெய்னர் செவிய்ன்சன் தெரிவித்துள்ளார். கிழக்கில் அமைதி திரும்ப வேண்டுமானால் கருணா குழுவின் ஆயுதங…
-
- 1 reply
- 1.3k views
-
-
இன்று மாலை தோட்டத் தொழிளாலர் காங்கிரசைச் சேர்ந்த ஐந்து அமைச்சர் பிரதி அமைச்சர்கள் பதவி விலகியதாக தெரியவருகின்றது. தலைவர் ஆறுமுகம் தொண்டைமான்,எஸ்.ஜெகதீஸ்வரன், சிவலிங்கம், செல்லசாமி ஆகிய ஐந்து அமைச்சர் பிரதியமைச்சர்கள் அரசுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் பதவி விலகல் கடிதங்களை ஒப்படைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஈழத்திலிருந்து ஜானா
-
- 22 replies
- 3.3k views
-
-
கோத்தபாயா – கருணா எஜமானர்கள் கூத்து. கருணாவை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பாக கோத்தபாயாவின் வாராந்த ஓன்றுகூடலில் ஒவ்வொரு தடவையும் விவாதிக்கப்படும். காட்டிக் கொடுப்பவர்களை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பாக உலக வரலாற்றுக்கும், சிறீ லங்கா வரலாற்றுக்கும் பெரிதாக வேறுபாடு இல்லை, என்ற கருத்தை அனுபவப்பட்ட பொலிஸ், இராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் நினைவூட்டினார்கள். எப்படியாயினும் கருணா நரி மூளைக்காரன். எல்.ரி.ரி. தலவைருக்கே தண்ணி காட்டியவன் என்ற கருத்து சில இராணுவப் புலனாய்வு எஜமானர்களுக்கு உள்ளது. இந்த விடயங்களைக் கையாளும் எஜமானர்கள் சொன்ன ஆலோசனைப்படியே பிள்ளையான் - கருணா பிரிவு சம்பவம் நடந்தேறியது. கருணாவின் எண்ணமெல்லாம் தான் கிழக்கின் மன்னர் என்பதேயாகும். சிங்…
-
- 1 reply
- 2.3k views
-
-
EPDP இன் முதலீடுகளைப் படடியலிடுகிறார் முன்னைநாள் ஆலோசகர் விக்னேஸ்வரன். Dr. விக்னேஸ்வரனுக்கு வயதாகிவிட்டாலும்கூட தமிழர் பிரச்சனையில் ஓரளவேனும் நிதானம் உள்ளது. இருப்பினும் துணிச்சல் இல்லாமையினால் சர்வ கட்சி ஆலோசனைக் குழுவில் இருந்துகொண்டு தனக்கு முடிந்தவரை தீர்வு யோசனையை எழுதியுள்ளார் (பாதுகாப்பு, அரசாங்கம்தானே வழங்கி வருகிறது.) ஈ.பி.டிp.பி. முன்னைநாள் தோழரும் டாக்டர் விக்னேஸ்வருனும், டக்ளசின் தகிடுதத்தங்களை தமக்குள் கதைத்து மனசாறியுள்ளனர். முன்னைநாள் தோழரும் டகளசுடன் இருக்கும்போது ஓரளவு பதவியில் இருந்தவர். டக்ளஸ் 1990 இல் இருந்து மக்களிடம் கொள்ளையடித்தவைகளையும் அரச பணத்தில் ஓதுக்கியவைகளையும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பதுக்கி வைத்துள்ளார். உள்நாட்டில் றியல…
-
- 1 reply
- 2.4k views
-
-
வத்தளையிலுள்ள தமிழர் வீடுகளில் தகவல் திரட்டும் இனந்தெரியாதநபர்கள் [04 - August - 2007] * மக்களை விழிப்புடனிருக்குமாறு மனோகணேசன் அறிவிப்பு கொழும்பு வத்தளைப் பகுதியில் தமிழர் வீடுகளில் இனந்தெரியாத நபர்கள் தகவல் திரட்டுவது குறித்து மக்கள் விழிப்புடனிருக்க வேண்டுமென மேலக மக்கள் முன்னணித் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான மனோகணேசன் கேட்டுள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்; குறிப்பாக செல்வந்த வீடுகளில் நுழையும் இவர்கள் தாம் சி.ஐ.டி. புலனாய்வு பொலிஸார் என்று கூறி அடையாள அட்டைகளை பார்க்க வேண்டுமெனக் கூறி அலுமாரிகளை திறந்து உடைகளை கலைத்து வீசி சோதனையிடுவதுடன் பணம் நகை வங்கி நிலுவைகளை எவ்வளவு இருக்கின்றன என்று கேள்விகளை எழுப்புகிறார்கள். …
-
- 0 replies
- 1k views
-
-
கோப்பாயில் பாடசாலை மாணவன் ஒருவன் நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார் எனத்தெரிவிக்கப்பட்டது. அதே இடத்தைச் சேர்ந்த ராஜேந்திரம் பவதீபன் (15) என்ற மாணவனே கடத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
-
- 1 reply
- 909 views
-
-
மணிலாவில்வைத்து போகொல்லாகம எச்சரிக்கை! தமிழீழவிடுதலைப் புலிகள் தமது தாக்குதல்களுக்குப் புதிய விய+கம் அமைத்துள்ளனர். சர்வதேச கடல் வழியாக எரிபொருட்கள் மற்றும் வலுச்சக்தி வளங்கள் என்பனவற்றை ஏற்றிச் செல்லம் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி அவற்றைக் கொள்ளையிடத் திட்டமிட்டுள்ளனர். எனவே, புலிகளின் இத்தாக்குதல் நடவடிக்கைகளில் இருந்து சர்வதேச கப்பல்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து கடற்பிரதேசப் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். மணிலாவில் இடம் பெற்ற செய்தியாளா மாநாடு ஒன்றிலே அவர் இப்படிக் கூறியுள்ளார். புலிகள் இதுவரை காலமும் தரைமார்க்கமாகவே தமது தாக்குதல்களை நடத்தி வந்துள்ளனர். எனினும் எ…
-
- 1 reply
- 1.3k views
-
-
Posted on : 2007-08-04 தமிழ்ப் பேசும் தரப்புகள் வெளியேற முழுப்பேரினவாத மயப்படும் அரசு அரசுப் பக்கமும் எதிரணிப் பக்கமும் மாறி மாறி சாய்ந்தாடும் தனது வழமையான அரசியல் தந்திரோபாயத்தின் அடுத்த அத்தியாயத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரங்கேற்றியிருக்கின்றது. புத்தாயிரமாம் ஆண்டு பிறந்த பின்னர் இந்த ஏழரை ஆண்டுகளுக்குள்ளேயே பல தடவைகள் அணி மாறிப் பாய்ந்து விட்டது சேவல் கட்சி. புத்தாயிரமாம் ஆண்டு பிறந்தபோது பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில் அங்கம் வகித்துக்கொண்டிருந்த அக்கட்சி 2001 ஒக்டோபரில் எதிரணிக்குத் தாவியது. இரண்டு மாதத்தில் வந்த பொதுத்தேர்தலை ஐ. தே. கட்சியுடன் இணைந்து எதிர்கொண்டு, அந்த அரசுடன் இரண்டு ஆண்டுகள் இயங்கியது. அந்த அரசு 2004 இல் கலைக்கப்பட்டு 2004 ஏப்ரலில்…
-
- 0 replies
- 1.1k views
-