ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
மகிந்த அரசுக்கு எதிராகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றங்களுக்கு எதிராகவும் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டு வரும் போராட்டங்களில் மேலும் ஒரு புதிய வடிவிலான 400 போராட்டங்களை நாளை நடத்த தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 730 views
-
-
யாழ். மாவட்டம் கிளாலிப் பகுதியில் இருந்து சிறிலங்காப் படையினர் இன்று பாரிய அளவில் பலமுனைத் தாக்குதல்களை நடத்தியவாறு மேற்கொண்ட பாரிய முன்நகர்வு முயற்சியினை தமிழீழ விடுதலைப் புலிகள் முடியடித்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 3 replies
- 2.7k views
-
-
புதுக்குடியிருப்பில் நேற்றுக் காலையிலும் மாலையிலும் பல தடவைகள் விமானக் குண்டுவீச்சு! பாடசாலை மாணவர்கள் அல்லோல கல்லோலம்!! முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் நேற்றுக் காலை யிலும் மாலையிலுமாக மிக் விமானங்கள் 15 இற்கு மேற்பட்ட குண்டு களை வீசித் தாக்கின. "மிக் 27' ரக விமானங்கள் நான்கு, புதுக்குடியிருப்பில் மக்கள் குடியிருப்பை அண்டிய பிரசேத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட குண்டுகளை வீசின. இதனால் பொது மக்கள் அவலங்களுக்கு ஆளா கினர். முதலில் காலை 8.25 மணியளவில் விமானத் தாக்குதல் ஆரம் பிக்கப்பட்டது தாக்குதல் நடத்தப்பட்ட வேளையில் பாடசாலைகளில் காலை ஒன்று கூடல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதனால் மாணவர்கள் பதற்றத்துடன் அங்கும் இங்கும் சிதறி பாதுகாப்புத் தேடி ஓடினர்…
-
- 2 replies
- 1.6k views
-
-
அரசியல் தீர்வுக்கான நகல் யோசனை இந்தியத் தரப்புக்கு கையளிக்கப்படும் மன்மோகன்சிங்கிடம் மஹிந்தரே நேரில் வழங்குவார் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தமது அரசு வைத்திருக்கும் யோசனைத் திட்டத்தின் நகல் பிரதி ஒன்றை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நேரடியாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நியூயோர்க்கில் வைத்துக் கையளிப்பார் என விடயமறிந்த வட்டாரங்களில் பேச்சடிபடுகின்றது. இம்மாதம் கடைசி வாரத்தில் நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கு பற்றுவதற்காக இலங்கை,இந்திய நாடுகள் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் நியூயோர்க் செல்லுகின்றனர். எதிர்வரும் 24ஆம் திகதி ஐ.நா. பொதுச் சபையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகின்றார். பொதுச் சபைக் கூட…
-
- 1 reply
- 1.3k views
-
-
EPDP member shot dead in Ea'raavoor இதை வன்முறையாக கண்டிக்கிறேன் [TamilNet, Friday, 14 September 2007, 17:39 GMT] Unidentified armed men shot dead a member of Eelam Peoples Democratic Party (EPDP) near the public market building located within Ea'raavoor police division Friday afternoon around 6:00 p.m., the Officer in Charge (OIC) of Ea'raavoor police station said. The gunmen who followed the victim into the market building fled the scene after shooting. The victim is identified as Thampipillai Kumaran, 26. The body has been transferred to the Ea'raavoor district hospital for postmortem examinations. தமிழ்நெற்.கொம்
-
- 1 reply
- 1.6k views
-
-
முல்லைத்தீவில் பௌத்த சின்னங்களை தரிசிக்கும் நிலையை உருவாக்குவது கடமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகேசரி நாளேடு வரலாற்று ரீதியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் பௌத்த புராதனச் சின்னங்களை எமது மக்கள் தரிசிக்கும் நிலைமை உருவாக்க வேண்டியது எமது கடப்பாடாகும். எந்த நிலையிலிருந்து முட்டுக்கட்டைகள் வந்தாலும் நாட்டையும் மதத்தையும் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அலரிமாளிகையில் இடம் பெற்ற பல்லன் தரசுமன தேரருக்கு தென்பகுதிக்கான சங்க நாயகர் பதவியை கையளிக்கும் நிகழ்ச்சியின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி கூறியதாவது: அண்மையில் வீடியோ ஒளிப்…
-
- 3 replies
- 1.6k views
-
-
வியாழன் 13-09-2007 18:35 மணி தமிழீழம் [தாயகன்] நாய்களைத் தருமாறு மக்களிடம் கோரும் சிறீலங்கா காவல்துறையினர் போருக்குப் பயன்படுத்தவும், குற்றங்களைத் தடுக்கவும் பொதுமக்கள் தமது நாய்களை நன்கொடையாக தம்மிடம் வழங்குமாறு, சிறீலங்கா காவல்துறையினர் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர். "பயங்கரவாதத்தை ஒழித்து, தாய்நாட்டைக் காப்பற்ற உங்கள் செல்லப் பிராணியான நாய்களை நன்கொடையாக வழங்குங்கள்" என்ற சுலோகத்துடன் இதற்கான விளம்பரங்கள் காவல்துறையினரால் அரசு ஊடகங்களில் இன்று வெளியிடப்பட்டுள்ளன. ஆறு மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள்வரை வயதுள்ள, அதுவும் குண்டுகளைக் கண்டுபிடித்தல் உட்பட போர் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கு நன்றாகப் பயிற்றுவிக்கக்கூடிய நாய்களையே தம்மிடம் வழங்குமாறு ச…
-
- 8 replies
- 2.2k views
-
-
வத்திக்கான் திருவழிபாட்டுப் பேராயத்தின் செயலாளராகிய அதிமேற்றிராணியார் மல்கம் ரஞ்சித் இலங்கை அரசாங்கத்தின் விசேட அனுமதியோடு நேற்று வியாழக்கிழமை வன்னிப்பகுதிக்குச் சென்று திரும்பியிருக்கின்றார். இவருடன் கரிட்டாஸ் சிறிலங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் டேமியன் பெர்னாண்டோ மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோரும் வன்னிப்பகுதிக்குச் சென்றதாக மன்னார் ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்தன. இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அண்மையில் மன்னார் மாவட்டத்தின் வடபகுதியில் இடம்பெற்ற எறிகணை வீச்சு மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமைகளை பார்வையிடுவதற்கும், அவர்களுக்குத் தேவையான அவசர நிவாரண உதவிகள் மற்றும் தேவைகள் குறித்து அறிந்து கொள்ளும் நோக்கிலும் கத…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஈழத்தமிழர் படும் அவலங்களை கடந்த சில தினங்களுக் முன்னா ஆதாரபூர்வமாக வெளியிட்ட தமிழகத்தின் பிரபல 'தினமணி" நாளேடு, மீண்டும் ஒரு ஆசிரியர் தலையங்கத்தை அதே ஈழத்தமிழர் பற்றித் தீட்டியுள்ளது.ஈழத்தமிழருக்க
-
- 3 replies
- 2.3k views
-
-
சனி 15-09-2007 03:36 மணி தமிழீழம் [செந்தமிழ்] பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை புனரமைப்புக்கு சுவிஸ் அரசு உதவி யாழ்பாணத்தில் அமைந்துள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை புனரமைப்பு செய்வதற்கு அண்மையில் சுவிஸ் அரசாங்கம் சிறீலங்கா அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் உடன்பட்டிருப்பதாக தெரியவருகிறது. சுவிஸ்லாந்து அபிவிருத்தி கூட்டுத்தாபனம் ரூபா 12 மில்லியன் பணம் இதற்காக வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. இதன்படி நீர்வழங்கல், கழிவுநீர் அகற்றுதல், மலசலகூடங்கள் போன்றவை இத்திட்டத்தினகீழ் புனரமைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இவ்வைத்தியசாலை யாழில் அமைந்துள்ள 2வது பெரிய வைத்தியசாலை எனவும் மூன்று பிரேதேச செயலகத்தை சேர்ந்த சுமார் 150 000 …
-
- 0 replies
- 665 views
-
-
ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க, இலங்கை அரசு மீது போர் தொடுக்க வேண்டும் எனக் கருத்துக் கூறியிருக்கிறார், விடுதலைச் சிறுத்ததைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன். இராமேஸ்வரத்தில் இடம் பெற்ற ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு திரட்டும் கூட்டமொன்றில் கலந்து கொண்டபோதே திருமாவளவன் மேற்கடண்ட கருத்தை வெளியிட்டார். அவர் அங்கு உரையாற்றுகையில்:- தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் தாக்குதலைத் தடுக்க இந்திய அரசு, இலங்கை அரசின்மீது போர் தொடக்க வேண்டும. அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை சென்ற போது சிங்கள இராணுவ வீரர் அவரைக் கொல்ல முயற்சித்த போதே சிங்களவர்கள் மீது இந்தியா படையெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். யாழில் திட்டமிட்டு ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரச…
-
- 4 replies
- 1.8k views
-
-
வெள்ளி 14-09-2007 00:59 மணி தமிழீழம் [செந்தமிழ்] பூசா தடுப்பு முகாமில் இருந்து 12 தமிழர் விடுதலை புதன்கிழமை பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருந்த 12 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 6பேர் மன்னாரை சேர்ந்தவர்கள் எனவும் 6 பேர் வத்தளை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகிறது. இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே. வடக்கு கிழக்கை சேர்ந்த பெரும்பாண்மையான தமிழர்கள் உட்பட 200 ற்கு மேற்பட்ட தமிழர்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே. நன்றி பதிவு..
-
- 2 replies
- 1.2k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை மீது இன்று காலை திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 5 replies
- 2.4k views
-
-
வாளைச்சேனையில் ஈபிடிபி உறுப்பினர் கருணா குழுவினரால் சுட்டுக்கொலைமட்டக்களப்பு வாளைச்சேனையில் துணை இராணுவக் குழுவான ஈபிடிபி ஆயுததாரி ஒருவர் கருணா துணை இராணுவக் குழுவால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 9 replies
- 1.9k views
-
-
நோர்வே நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (14.09.07) ஓஸ்லோவில் கண்டன ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற உள்ளது. மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்த நாட்டின் மீது கடுமையான தீர்மானங்களை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக் குழுவின் கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 947 views
-
-
விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தவைலர் கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்கள் பாங்கொக்கில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பாங்கொக் போஸ்ட் ஏட்டை மேற்கோள் காட்டி சிறிலங்கா அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
-
- 19 replies
- 5k views
-
-
ஈழத்தமிழருக்கு உணவு மற்றும மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக அனுப்ப அனுமதி மறுப்பதன் மூலம் இந்திய மத்திய அரசு மன்னிக்க முடியாத துரோகமிழைத்து வருகின்றன".இவ்வாறு மறுமலர்ச்சி தி.மு.க பொதுச் செயளாலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நடைபெறும் உண்ணாநிலைப் போராட்டட இடத்திலிருந்து ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்று வழங்கி நேர் காணலிலேயே இதனைத் தெரிவித்தார். இலங்கைத் தீவில் வாழும் ஈழத்தமிழர் சொல்லொணாத் துயரங்களுக்குள்ளகியுள்ளனர். உணவின்றி - நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகளின்றி வாடி வதங்கி மடியும் துயரம் மிகுந்திருக்கின்ற வேளையில், அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்…
-
- 0 replies
- 1.5k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....ff70779273e95aa
-
- 0 replies
- 1.5k views
-
-
வவுணதீவு புளொட் அலுவலகத்தில் தேடுதல் நடவடிக்கை [வியாழக்கிழமை, 13 செப்ரெம்பர் 2007, 19:37 ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு வவுணதீவில் அமைந்துள்ள புளொட் அலுவலகத்திற்குள் இன்று காலை புகுந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் கடும் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். புளொட் அலுவலகத்துக்குள் இன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு உள்நுழைந்த சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர். அங்கு கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும் சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். அதிரடிப்பைடயினருடன் சிறிலங்கா காவல்துறையினரும் இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். http://www.eelampage.com/?cn=33384
-
- 0 replies
- 3k views
-
-
பிரதேச வாதத்தின் பேரால் உரிமை கேட்டவர்களுக்கு சிங்களவன் கொடுக்கும் தண்டனையின் ஆரம்பம். ஜ வியாழக்கிழமைஇ 13 செப்ரெம்பர் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு, அம்பாறையில் நடமாடியபோது கருணா குழுவை மட்டக்களப்பு எல்லைப் புறமான வெலிக்கந்தைப் பகுதியில் செயற்பட இராணுவம் அனுமதித்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது நிலைகளை மாற்றியபோது கருணா குழுவை குறித்த பகுதிகளில் இருந்து வெளியேறும்படி இராணுவத்தினர் கூறியுள்ளனர். இதற்குக் காரணம் கருணா குழுவின் அடாவடித்தனமும், பணப்பறிப்பும், படு கொலைகளும் அப்பகுதிச் சிங்கள மக்களை மிரள வைத்தமையாகும். இதேபோன்று கொல்லப்பட்ட கருணா குழு ஆட்களை பொதுவான ஓரிடத்தில் புதைக்கும் கருணா குழுவின் நடவடிக்கைக்கும் அனுமதி மறுத்துள்ள…
-
- 0 replies
- 2k views
-
-
வியாழன் 13-09-2007 20:21 மணி தமிழீழம் [மகான்] கிழக்கில் அமெரிக்க வான்படையிரால் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு சிகிற்சைகள் வழங்கப்பட்டன சிறீலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்குப் பகுதியில் அமெரிக்க வான்படையினரால் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாம் செப்ரெம்பர் 3ம் நாள் தொடக்கம் செப்ரெம்பர் 10ம் நாள் வரையிலான ஒரு வாரகாலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாமில் 9 அமெரிக் மருத்துவர்கள் சிகிற்சைகளை வழங்கினர். இதில் 4 பேர் பல் மருத்துவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை கப்பல்துறை, ஈச்சிலப்பற்று, மட்டக்களப்பு வாகரை ஆகிய பிரதேசங்களில் மருத்துவ முகாங்கள் அமைக்கப்பட்டு சிகிற்சைகள் வழங்கப்பட்டன. அமெரிக்க வான்படை மருத்துவர…
-
- 0 replies
- 932 views
-
-
இலங்கையில் கொலை மற்றும் வன்முறைக் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. இதனை நாம் தொடரவிடுவேமானால், எதிர்கால இலங்கை காட்டு மிராண்டித்தனம் நிறைந்த நாடாக மாறிவிடும். எனவே இதனைத் தடுத்து கொலைக்கலாசாரம் இல்லாத நாடாக இலங்கையை மாற்றுவது எமது கடப்பாடாகும் என்று போருக்கெதிரான தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி குமார் ரூபசிங்க தெரிவித்தார். கொலைகள் இல்லாத நாட்டை கட்டியெழுப்பும் முகமாக எதிர்வரும் 21ஆம் திகதி நாடுதளுவிய ரீதியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை நடத்தவுள்ளோம் என்றும் அவர் மேலும் கூறினார். கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற போருக்கெதிரான தேசிய முன்னணியின் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே கலாநிதி குமார் ரூபசிங்க இதனைத்…
-
- 0 replies
- 992 views
-
-
வியாழன் 13-09-2007 19:34 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்கா கடற்படைக்கு ஆட் பற்றாக்குறை - 15 ஆயிரம் பேரைத் திரட்ட முடிவு சிறீலங்கா கடற்படைக்கு ஏற்பட்டுள்ள ஆட் பற்றாக்குறையைப் போக்குவதற்கு மேலும் பதினையாயிரம் இளஞர்களைத் திரட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்தமுறை இடம்பெற்ற ஆட்சேர்ப்பு சாதகமாக அமைந்திருந்ததாகவும், எனவே இம்முறையும் மிக இலகுவாக பதினையாயிரம் இளைஞர்களை கடற்படைக்கு திரட்ட முடியும் எனவும் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிறீலங்கா கடற்படையின் தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இம்மாதம் 17ஆம் திகதி முதல் இந்த ஆட் சேர்ப்பு நடவடிக்கை இடம்பெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கை தமது படைகள் கைப்பற்ற…
-
- 0 replies
- 826 views
-
-
அவசரச் செய்தி- இலங்கைக் கரையை சுனாமி தாக்கலாம். இந்தோனேசியாவில் நிகழ்ந்துல்ள புவி நடுக்கத்தால் இந்துமா சமுதிரத்தில் சுனாமி ஏற்படலாம் என்று அஞ்சப் படுகிறது. இதனால் கரையோரங்களில் இருக்கும் மக்கள் உட் செல்லும் படி அறிவுறுத்தப்படுள்ளது. இலங்கை, இந்தியா, இந்தோனேசிய மற்றும் ஒவுஸ்திரேலியக் கரைகளை இது தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. Powerful quake shakes Indonesia A powerful earthquake has struck off the western Indonesian island of Sumatra, triggering a tsunami alert. The tremor had a magnitude of 7.9, according to the Indonesian Meteorological Institute. It caused buildings in the capital, Jakarta, to sway, and was felt in other parts of the region.…
-
- 13 replies
- 3.7k views
-