Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரட்ணசிறீயின் மன்னிப்பால் கண்ணீர் விட்ட அமைச்சர் டிலான் பெரேரா. தமிழர்களை வெளியேற்றியமைக்காக சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க மன்னிப்பு கேட்டமையை தான் கண்ணீருடன் வாசித்ததாக சிறிலங்கா நீதித்துறை அமைச்சர் டிலன் பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரட்ணசிறீ விக்கிரமநாயக்கவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அண்மைய மனித உரிமை மீறல்கள், பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை, செஞ்சிலுவைச் சங்க பணியாளர்கள் படுகொலை ஆகியவற்றுக்காக தாங்கள் மன்னிப்பு கேட்டமையை கண்ணீருடன் வாசித்தேன். அத்தகைய நடவடிக்கைகள் அரசாங்கத்தைப் பாதிப்பதால் நாம் தான் முழுமையான பொறுப்பேற்க வேண்டும். இந்த நாட்டின் அனைத்து மக்களுக்காகவும்தான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை எஸ்.டபி…

  2. வடக்கு, கிழக்கே தமது தாயகமென தமிழ் மக்களை உறுதியாக நம்பவைத்த `வெளியேற்ற நடவடிக்கை' [14 - June - 2007] * சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார் -ரொஷான் நாகலிங்கம்- கொழும்பிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்படுவது முதல் தடவையல்ல. இது காலத்துக்குக் காலம் நடைபெற்று வருகின்ற ஓர் விடயமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். போருக்கு எதிரான முன்னணி கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது; கொழும்பிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் 1956 மற்றும் 19…

  3. மகிந்த இன்று ஜெனீவா பயணம் [புதன்கிழமை, 13 யூன் 2007, 13:49 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா அரச தலைவர் மகிந்த இன்று புதன்கிழமை முற்பகல் ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். 93 ஆவது அனைத்துலக தொழிலாளர் அமைப்பின் கூட்டத்தில் மகிந்த பங்கேற்க உள்ளார். அனைத்துலக தொழில் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஜுவான் செமாமியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் அந்தோனியோ குட்டரேஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை மகிந்த நடத்தவுள்ளார். இச்சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் அவையத்தின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பரையும் மகிந்த சந்திக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மகிந்தவுடன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு, ஊக்குவிப்பு மற்றும் நலநோம்புகை அமைச்சர் கேகலிய ரம்புக்வெல, டக்ளஸ் தேவானந…

  4. கொழும்பு துறைமுகத்தில் தாக்குதல் நடத்துவதற்கு புலிகள் பாரிய திட்டம் வீரகேசரி நாளேடு கொழும்பு துறைமுகத்தின்மீது தாக்குதல் நடத்த விடுதலைப்புலிகள் திட்டமிட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர். தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை கடற்பரப்பின் ஊடாக துறைமுகப் பகுதிக்குள் இரண்டு வைபர் படகுகள் மூலம் நுழைந்து தாக்குதல் நடத்துவதற்கும் அதன் பின்னர் தரை மார்க்கமாக வான்கள் மூலம் தற்கொலை தாக்குதல் மேற்கொள்வதற்கும் விடுதலைப்புலிகள் திட்டமிட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதுவே இந்த தாக்குதலின் பிரதான நோக்கமாகும். அத்துடன், இராணுவத்தினரை நிலைகுலையச் செய்து துறைமுகத்தை கைப்பற்றி அங்குள்ள பார…

  5. கல்முனை முஸ்லிம் காங்கிரஸ் மாநகரசபை உறுப்பினரைக் காணவில்லை. கல்முனை முஸ்லிம் காங்கிரஸ் மாநகரசபை உறுப்பினர் முஹமட் அப்துல் மஜீத் ( 45) நேற்றுக் காலை முதல் காணாமற் போயுள்ளார். வழமை போன்று நேற்றுக் காலை கல்முனை மாநகர சபைக்கு சென்ற இவர் வீடு திரும்பாமையால் பொலிஸில் அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளார். இவர் தொடர்பாக மாநகர சபைக்கு சென்று விசாரணை நடாத்திய வேளையில் மாநகரசபை வளாகத்தினுள் அவரது உந்துருளியும் தலைக்கவசமுமே காணப்பட்டுள்ளது. இவர் சாய்ந்த மருது 2 அல் ஹிலால் வீதியை வதிவிடமாகக் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. -Sankathi-

  6. அனைத்துலக வல்லுநர் குழு அறிக்கையை "கவனமாக ஆராய" மகிந்த உத்தரவு ஆட்கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான சிறிலங்கா அரச தலைவர் விசாரணை ஆணையத்தின் செயற்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வெளியிடப்பட்டுள்ள அனைத்துலக வல்லுநர் குழு அறிக்கையை "கவனமாக ஆராய" சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பேச்சாளர் லூசியன் ராஜ கருணாநாயக்க, அனைத்துலக வல்லுநர் குழுவினர் தெரிவித்த கருத்துகள், கவலைகள், பரிந்துரைகள் ஆகியவை குறித்து கவனமாக ஆராய மகிந்த உத்தரவிட்டுள்ளார் என்றார். 16 வழக்குகளின் விசாரணைகளுக்காக சிறிலங்கா அரச தலைவர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் செயற்பாடுகளை கண்காணிக்க இந்திய ஓய்வு பெ…

  7. கோத்தபாயவின் விமர்சனத்துக்கு ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா எதிர்ப்பு [செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2007, 20:00 ஈழம்] [செ.விசுவநாதன்] ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவைகள் குறித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்த விமர்சனங்களுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவுக்கு வருகை தந்த பிரித்தானியா இணை அமைச்சர் பயங்கரவாதத்தை எதிர்த்து ஒருவார்த்தை கூட பேசவில்லை என்று கோத்தபாய தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள கொழும்பில் உள்ள பிரித்தானியா தூதுவர், பிரித்தானிய இணை அமைச்சர் பயங்கரவாதத்தைக் கண்டனம் செய்துதான் கருத்து தெரிவித்தார். மேலும் அரசிய…

    • 6 replies
    • 2.6k views
  8. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 13.06.07 அன்று ஒளிபரப்பான காலக் கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....9a6a17bef029331

    • 1 reply
    • 1.6k views
  9. சிறீலங்காவின் நீதித்துறை ஐ-நா மனித உரிமை அமைப்பின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசின் நீதித்துறையின் சீரழியும் சுதந்திரத்தன்மை தொடர்பாக ஐ-நா மனித உரிமை அமைப்பின் ஐந்தாம் கூட்டத்தொடரில் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்துலக சட்ட நிபுணர் சபையினால் கொண்டுவரப்பட்ட கவனயீர்ப்பு செயற்பாட்டில் சிறீலங்காவின் அரசியலமைப்பு முற்றாக முடமாகியுள்ளதாகவும் இது சிறீலங்காவின் நீதித்துறையின் சுதந்திரத்தன்மையையும் நீதிச்சேவை ஆணைக்குழுவையும் பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அரசியலமைப்புச் சபையின்மையினால் நீதித்துறை தொடர்பான நியமனங்கள் 17வது அரசியலமைப்பு திருத்தத்துக்கு முரணாக சனாதிபதியினால் தெரிவுசெய்யப்படுவதை நீதித்துறைக்கான பாரிய அச்சுறுத்தல் என்று…

  10. சிங்களவாதம் கூட போர் தமிழ் மக்களுக்கு எதிரானது என்ற உண்மையை ஒளித்துக் கொண்டே போரிட வேண்டி இருக்கின்றது. எனவே இந்தியப் போக்குக்கு மட்டும் அந்த தேவை இல்லாமல் போகுமா? "புலிவேறு, மக்கள் வேறு" என்று சிங்களம் சொல்லும் போது அது காதுகுத்த விரும்புவது தமிழர்களயோ, சிங்களவர்களயோ அல்ல வெளி உலகத்தை மட்டுமே! "புலிகள்வேறு, மக்கள் வேறு" என்று ஜெயாவோ, பார்ப்பானியமோ சொல்லும் போது அவை காதுகுத்த முற்படுவது தமிழ்நாட்டு மக்களை மட்டுமே, மற்றவர்கள் உணர்வு அவர்கள் அரசியலுக்கு ஒரு மண்ணும் போடாது. தினமலர் என்ற பார்ப்பானிய நாளேடு ஈழத்தின் அழிவுக்கு தன்பங்குக்கு கனகச்சிதமாய் எண்ணை ஊற்றும் பணியில் ஒன்று தான் இதுவும். புதினத்தில் இருந்து...... இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செ…

    • 1 reply
    • 1.7k views
  11. 12.06.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவன் http://www.yarl.com/videoclips/view_video....3f142449d037028

  12. புலி சந்தேக நபர்களை கடத்துவது தொடர்பாகவே ரணில் பேசுகின்றார் வீரகேசரி நாளேடு விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் மறைந்ததையடுத்து விடுதலைப்புலிகளின் சர்வதேச பிரசாரராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செயல்படுகின்றார். சில நேரங்களில் ஸ்ரீகொத்தா புலிகளின் காரியாலயமாக மாறினாலும் புதுமையடைவதற்கில்லை என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; கொழும்பில் குண்டு வெடிப்பதை தடுப்பதற்கும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் ப…

  13. புதன் 13-06-2007 17:05 மணி தமிழீழம் [சிறீதரன்] இந்து குருமார் பற்றி இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரனை யாழ் குடாநாட்டில் இந்து குருமார்கள் பற்றி பாரிய புலனாய்வு விசாரனையை இராணுவப் புலனாய் வாளர்களும் மற்றும் அவர்களுடன் இனைந்து இயங்கும் ஒட்டுக் குழுவான ஈ.பி.டி.பியும் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். முதற் கட்டமாக இராணுவ முகாம்களுக்கு அழைக்கப்பட்ட கிராம அலுவலர்களிடம் அவர்கள் பகுதியில் வசிக்கும் இந்து குருமார்கள் பற்றிய விபரங்கள் சேரிக்கப்பட்டள்ளன. கடந்த சில மாதங்களுக்கு மன்னர் இந்து குருமார்கள் ஒன்றியம் தமக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை ஒன்றை யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் சந்திரசிறி மற்றும் ஈ.பி.டி.பி ஆகியவ…

  14. அண்மையில் கோத்தபாய சித்தம் குழம்பி ஐநா தொடங்கி அமெரிக்கா ஈறாக மேற்குலக நாடுகள் மீது பாய்ந்து விழுந்ததை பிபிசி வரிக்குவரி எழுதி சர்வதேசத்துக்கு சிறீலங்காவின் மனப்புழுங்கலை வெளிப்படுத்தியுள்ளது..! Sri Lanka accuses 'bullying' West "This is international bullying," Mr Rajapaksa, who is President Mahinda Rajapaksa's brother, told the BBC and Reuters. "We won't be isolated. We have all the Saarc [south Asia Association of Regional Co-operation] countries, the Asian countries." "Britain, or Western countries, the EU countries, they can do whatever. We don't depend on them. They think that they we get aid. No, they are not giving anything." "We have …

  15. அச்சத்தில் சிக்கியுள்ள ஆட்சியாளர்கள்; எவரது கண்டனமும் பொருட்டல்ல-வேலவன்- கொழும்பிலுள்ள தங்ககங்களில் தங்கியிருந்த 500 இற்கும் மேலான தமிழ்மக்களை ஒரேயிரவில் வெளியேற்றி அவர்களை அவல நிலைக்குள் தள்ளிவிட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதனால் ஏற்பட்ட எதிர்ப்பு அலைகளைத் தற்காலிகமாகத் தணிப்பதற்காக நாடகமாடி வருகின்றது. இந்த விடயம் சனாதிபதி உட்பட உயர்மட்டத்திற்குத் தெரியாது நடைபெற்ற ஓர் தவறு என்பது போலவும், சிறிலங்காவின் காவல்துறையின் உயர் பொறுப்பிலுள்ள காவல்துறை மா அதிபர் உட்பட சில அதிகாரிகளின் செயற்பாடு இது என்பது போலவும் காட்டிக்கொள்ள மகிந்த ராஜபக்ச அரசு முயல்கிறது. இது அதிகாரிகளின் தவறாக இருந்தாலும் அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்வது போல நாடகமாடி நிலைமையைச் சமாள…

  16. மியான்மாரில் தோல்வி கண்ட அணுகுமுறையை இலங்கையில் கடைப்பிடிக்கும் இந்தியா [13 - June - 2007] ஷ்ரீலங்காவில் புலிகள் இயக்கப் பயங்கரவாதத்தை ஆரம்பித்து வைத்தது இந்திய அரச உளவு அமைப்பாகிய `றோ'தான். இன்றும் அந்த அமைப்பின் முன்னாள் தலைவர் ராமன் ஷ்ரீலங்கா படையினருக்கு இந்தியா, ஆயுதங்கள் வழங்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இந்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன் பொருள், ஷ்ரீலங்காவில் தொடர்ந்தும் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு வழங்கி அதன் பயங்கரவாத செயற்பாடுகளை ஊக்குவிப்பதேயாகும். அண்மையில் தமிழ்ச்செல்வன் பி.எஸ். 89 ரக நவீன தொழில்நுட்பம் கொண்ட ரொக்கட் லோஞ்சர் ஏவுகணையை தோளில் வைத்துக் கொண்டு அதன் செயற்பாட்டை பரிசீலிக்கும் முறையைக் காட்டும் புகைப்படம் புலிகளின் சர்வத…

  17. தமிழக அகதிமுகாம்களில் தங்கியிருந்த 2500 இலங்கையர்களைக் காணவில்லை:. தமிழகத்திலுள்ள பல்வேறு அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகளில் 2 ஆயிரத்து 500 பேர் காணாமல்போயிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தமிழ்நாடு உளவுப் பிரிவு பொலிஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்திலுள்ள அகதிமுகாம்களில் தற்போது 19 ஆயிரத்து 200 இலங்கையர்கள் தங்கியிருப்பதாகவும் இவர்களில் 2 ஆயிரத்து 500 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. உளவுப் பிரிவு பொலிஸாரின் கவனயீனமே இவ்வாறு அகதிகள் காணாமல்போயுள்ளமைக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம், திருச்சி, கொட்டப்பட்டுஆகிய அகதிமுகாம்களிலேய…

  18. புகையிரதப் பாதையில் வைக்கப்பட்ட கிளைமோர் குண்டு ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதாக கோத்தபாய படைகள் அறிவிப்பு. இதனால் புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டு, காலிவீதியில் சனநெரிசல் அதிகரித்துள்ளது.

  19. புலிகளின் நடவடிக்கைகளை கட்டார் நாட்டில் தடைசெய்யுமாறு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. http://www.thepeninsulaqatar.com/Display_n...00706132220.xml http://www.gulf-times.com/site/topics/arti...mp;parent_id=56

    • 0 replies
    • 1.2k views
  20. இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றி அவர்களின் சொந்த ஊர்களுக்கு சிறிலங்க காவல்துறை அனுப்பி வைத்ததற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பை சிறிலங்க அரசு சந்தித்து வருகிறது! வடகிழக்கு மாகாணங்களில் வசித்து வரும் தமிழர்கள் வாழ்வதற்கு வழியின்றி, அவர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு துன்பத்திலும், துயரத்திலும் உழன்று கொண்டிருக்கும் நிலையில் அயல்நாடுகளுக்குச் சென்று வேலை தேடி பிழைப்பதற்காக கொழும்பு வந்து அங்குள்ள மிகக் குறைந்த கட்டண தங்கும் இடங்களில் தங்கியிருந்தபோதுதான் அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து சிறிலங்க காவல்துறை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வவுனியா, மட்டக்களப்பு உள்ளிட்ட அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத…

  21. மனித உரிமை மீறல் சம்பவங்கள் அரசு நடத்தும் விசாரணைகள் மீது வெளிநாட்டு நிபுணர்கள் அதிருப்தி படுகொலைகள் உட்பட பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு வின் செயற்பாடுகள் குறித்து அதனைக் கண் காணிக்கும் சர்வதேச கண்காணிப்பாளர் குழு அதிருப்தி தெரிவித்திருக்கின்றது. ஆணைக்குழுவின் செயற்பாடுகள் சர்வ தேச தரத்தில் இல்லை என்றும் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டுள்ளன என் றும் சர்வதேச நிபுணர்குழு கடுமையாக விமர்சித்திருக்கின்றது. பிரான்ஸைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பட்டினிக்கு எதிரான தொண்டர் அமைப்பின் பணியாளர்கள் 17 பேர் கடந்த ஓகஸ்டில் மூதூரில் கொல்லப் பட்டமை உட்பட பதினாறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்…

  22. கிழக்கில் விரைவில் மாகாணசபை தேர்தல் நடத்த மகிந்த தீவிர முயற்சி . கிழக்கில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்சா கடுமையான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர்களுக்கான கூட்டத்தின் போது மகிந்த இந்த தகவலை தெரிவித்துள்ளார். அக்கூட்டத்தில் பேசிய மகிந்த, கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. கிழக்கில் விடுதலைப்புலிகள் வசம் தொப்பிக்கல உட்பட சிறிய பகுதியே உள்ளது. அந்தப் பகுதியையும் மிக விரைவில் இராணுவ நடவடிக்கை மூலம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விடுவார்கள் என்றார் அவர். இதனிடையே கிழக்கில் மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் அதில் அரசுடன் இணைந்து தமது குழு போட்டியிடும்…

  23. Posted on : 2007-06-13 தமிழ்த் தலைமைகளிடம் சமூகம் எதிர்பார்க்கும் பணி கொழும்பிலிருந்து தமிழர்களைப் பலவந்தமாக வெளியேற்றியமை தொடர்பாக தனது தவறை அரசு ஒப்புக்கொண்டு விட்டது. அரசின் சார்பில் பிரதமரே நேரடியாக பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுவிட்டார். ஆனால் இந்த அராஜகத்துக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது மட்டும் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை; அம்பலப்படுத்தப்படவில்லை. "விசாரணை நடக்கின்றது. தவறுக்குப் பொறுப்பானவர்கள் கண்டுபிடிக்கப்படுவர்' என்று மட்டுமே அரசுத் தரப்பில் சமாளிப்புக் கூறப்படுகின்றது. ஆனால் "சூத்திரதாரிகள்' யார் என்பது உத்தியோகபூர்வமாகக் கண்டுபிடிக்கப்படவோ, கண்டிக்கப்படவோ, தண்டிக்கப்படவோ வாய்ப்புகள் இல்லை. விசாரணை நடக்கின்றது என்ற பெயரோ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.