ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143532 topics in this forum
-
-
- 1 reply
- 1.6k views
-
-
புலிகளின் பல்குழல் எறிகணை செலுத்தியைக் கைப்பற்றிவிட்டோம்: சிறீலங்காப் படைகள். தொப்பிக்கல பகுதியில் விடுதலைப் புலிகளின் பல்குழல் எறிகணை செலுத்தியைக் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்காப் படைகள் அறிவித்துள்ளது. நாரகமுல்ல பகுதியின் மேற்காக உள்ள ஒமுனுகல எனும் பகுதியில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்ட பல்குழல் எறிகணை செலுத்தியை கைப்பற்றியுள்ளதாக சிறீலங்காப் படைகள் தெரிவித்தபோதும் இதனை சுயாதீனமாக உறுதி செய்யமுடியவில்லை. -Pathivu-
-
- 9 replies
- 4.6k views
-
-
ரயில் முன்னால் பாய்ந்து குடும்பப்பெண் தற்கொலை [18 - July - 2007] கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கி வந்த ரயிலின் முன்பாக பாய்ந்து குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கடல்கோளால் பாதிக்கப்பட்டு, திராய்மடு சுவிஸ்கிராமத்தில் குறுக்கே போடப்பட்டுள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே இடம்பெற்றுள்ளது. வேகமாக வந்த ரயிலின் முன்பாக திருமதி நாகரெத்தினம் (வயது 52) என்ற குடும்பப் பெண் பாய்ந்ததால் தலை வேறாகவும், உடல் பாகம் வேறாகவும், கால்கள் வெவ்வேறாகவும் சிதறுண்டு பலியானார். குடும்பத்தில் ஏற்பட்ட விரக்தி நிலை காரணமாகவே இப்பெண் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணைகளில் இருந்து தெரி…
-
- 0 replies
- 1.8k views
-
-
எதிரணியின் பரிதாபம் [18 - July - 2007] [Font Size - A - A - A] இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரங்களைப் பொறுத்தவரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் மிகப்பெரிய அனுகூலமாக இருப்பது எதிரணியின் பலவீனம் என்றுதான் கூற வேண்டும். சகல முனைகளிலும் பாரதூரமான நெருக்கடிகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற போதிலும் கூட, மக்களின் கவனத்தை அந்த நெருக்கடிகளிலிருந்து அரசாங்கத்தினால் எளிதாகத் திசை திருப்பக் கூடியதாக இருப்பதற்குக் காரணம் உருப்படியான அரசியல் தந்திரோபாயத்துடன் கூடிய வலுவான கொள்கைத்திட்டமொன்று எதிரணியிடம் இல்லாமல் இருப்பதேயாகும். இவ்வருட ஆரம்பத்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத் தரப்புக்கு மாறி அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டதன் பின்…
-
- 0 replies
- 1.4k views
-
-
கண்டி மாத்தளைபகுதிகளில் 5.2 ரிட்சர் அளவில் பூமியதிர்வு மேலும் செய்திகள் கிடைக்கும்போது தொடரும்
-
- 6 replies
- 2.1k views
-
-
Posted on : 2007-07-18 நீதித்துறையை வேவு பார்க்கும் அதிகாரத்தின் அரூபக் கரங்கள் இலங்கையின் நீதித்துறை உயர் அதிகாரிகள் குறித்து இலங்கையின் சட்ட வரலாற்றில் முதல் தடவையாக தேசிய உளவுப்பிரிவு மும்முரமாகப் புலனாய்வு செய்யத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. வேறு வார்த்தைகளில் இதைக் கூறுவதானால் நீதித் துறை அதிகாரிகளை அவர்களது நடவடிக்கைகளை வேவு பார்க்கும் வேலை உளவுப்பிரிவால் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது. "நீதி நிலைநாட்டப்படுவது மட்டுமன்றி நிலைநாட் டப்படுவதாகக் காட்டப்படவும் வேண்டும்' (Justice not only be done but also appear to be done) என்ற அர்த்தம் பொதிந்த வாசகம் ஒன்று உண்டு. நீதித்துறை அதிகாரிகள், நியாயம் செய்பவர்களாக விளங் குவதற்கு அவர்கள் சுதந்த…
-
- 0 replies
- 1k views
-
-
புலிகளை ஜெனிவாவுக்கு கூட்டிச் செல்லாது வடக்கை நோக்கி உடன் படையயடுங்கள்! நாடாளுமன்றில் விமல் வீரவன்ஸ வீராவேசம் கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றி அங்கிருந்து விடுதலைப்புலிகளை விரட்டியடித்து அரசு வெற்றிவாகை சூடியிருக்கின்றது. அதேபோன்று வடக்கையும் கைப்பற்றுவதற்கு உடனடியாகப் படையெடுங்கள்! விடுதலைப்புலிகளை ஜெனிவாவுக்கு அழைத்துச் செல்வதற்கு முயற்சிப்பதைத் தவிர்த்து, படையினரை வன்னி நோக்கி நகர்த்துங்கள்! இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் விராவேசமாகப் பேசினார் ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ஸ. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுப் பேசிய அவர் வன்னி நோக்கிப் படை எடுப்பதைத் தவிர்த்து, விடுதலைப் புலிகளை ஜெனிவாவுக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்குமானால் அதற்கு எதிராக எமது கட…
-
- 6 replies
- 2k views
-
-
தமிழீழ அங்குரார்ப்பண விழாவில் அதிதியாக ஜனாதிபதி மஹிந்தவை அழைப்பாராம் பிரபாகரன் தமது கனவை நாடாளுமன்றில் வெளிப்படுத்துகிறார் ஈழவேந்தன் ""மிக விரைவில் மலரப்போகும் தமி ழீழத்தின் அங்குரார்ப்பண வைபவத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தலை வர் பிரபாகரன் பிரதம அதிதியாக அழைப் பார். இந்த நிகழ்வு மிக விரைவில் நிச்ச யம் நடக்கும்'' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் ம.க. ஈழ வேந்தன் நேற்று நாடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இப்படிக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது: இலங்கையில் சீனித் தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக பிரிட்டனுக்கு காணிகளை இங்கு கொடுப்பதற்கு த…
-
- 3 replies
- 2.1k views
-
-
அமெரிக்க தலைநகரில் ஜூலை 23 இல் தமிழீழ தனியரசை ஆதரித்து அமைதிப் பேரணி அமெரிக்க தலைநகரில் தமிழீழ தனியரசை ஆதரித்தும், தேசிய தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும் அமைதிப்பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்த அமைதிப் பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை (23.07.07) முற்பகல் 11 மணிக்கு வாசிங்ரனில் உள்ள தலைநகர கட்டட முன்றலில் (In front of the US Capitol building, Washington, DC) இடம்பெறவுள்ளது. - தமிழீழ தனியரசை வெளிப்படையாக ஆதரிப்போம் - தமிழ் தேசியத் தன்னாட்சி உரிமையை உறுதியாக வலியுறுத்துவோம் - சுதந்திரமாக வாழ்வதற்காகப் பிரிந்து செல்லும் உரிமையைக் கேட்போம் - சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையையும் மனித உரிமை மீறல்களையும் தலையிட்டுத் தடுக்கு…
-
- 1 reply
- 1.2k views
-
-
வடக்கு - கிழக்கு படுகொலைகள்: ஐ.நா. கவலை வடக்கு - கிழக்கில் கடந்த ஜூன் மாதத்தில் பாரிய அளவிலான படுகொலைகள் நடந்துள்ளமை குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஜூன் மாத நிலவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜூன் மாதத்தில் 277 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மே மாதம் 141 பேரும் ஏப்ரல் மாதம் 187 பேரும் கொல்லப்பட்டனர். மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் பாரிய அளவிலான படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் திருகோணமலை கிளிநொச்சி அம்பாறை மற்றும் மன்னார் பகுதிகளில் தொடர்ச்சியான வன்முறைகள் ஏற்பட்டுள்ளன. வவுனியாவில் படுகொலைகளின் எண்ணிக்கை 11 இலிருந்து 73 ஆகவும் யாழ்ப்பாணத்தில் 28 இலிருந்து 51 ஆகவும் மட்டக்களப…
-
- 0 replies
- 863 views
-
-
சம்பூர் மற்றும் மூதூர் பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமை சரியானதே - சிறீலங்கா உச்ச நீதிமன்றம் சம்பூர் மற்றும் மூதூர் பகுதிகள் அதியுயர் வலயமாக அறிவிக்கப்பட்டமை செல்லுபடியானது என சிறீலங்கா உச்ச நீதிமன்று அறிவித்துள்ளது. மூதூர் மற்றும் சம்பூர் பகுதிகள் மக்கள் வெளியேற்றப்பட்டு அப்பகுதிகள் அதியுயர் வலயமாக சிறீலங்காப் படைகளால் அறிவிக்கப்பட்டமைக்கு எதிராக மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கிசோதி சரணவணமுத்து அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சிறீலங்கா உச்ச நீதிமன்றின் தலைமை நீதியாளர் சரத் டி சில்வா தலைமையிலான குழுவினர் சம்பூர் மற்றும் ம…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ். மருத்துவமனையில் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து யாழ்ப்பாண மருத்துவமனையில் இதயத் துடிப்பை படம் எடுக்கும் கருவி அடிக்கடி பழுதடைந்து விடுவதால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. யாழ். மருத்துவமனையில் உள்ள இதயத் துடிப்படை படமெடுக்கும் கருவி அடிக்கடி பழுதடைவதால் அதனைச் சீரமைக்கக் கோரி பலமுறை மருத்துவமனைத் தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் உரிய அதிகாரிகள் அது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் மேலதிக உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நோயாளிகளும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். -புதினம்
-
- 1 reply
- 911 views
-
-
கிழக்கு தேர்தல்கள் தொடர்பாக நாளை விவாதம் கிழக்கில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நாளை வியாழக்கிழமை விவாதம் நடத்தப்பட உள்ளது. உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகளுக்கான அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இது தொடர்பிலான சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர் பிற்பகலில் அரை நாள் விவாதம் நடைபெற உள்ளது. வழமையாக நாடாளுமன்றம் காலை 9.30 மணிக்கு கூடும். ஆனால் "கிழக்கின் உதயம்" நிகழ்வுகளையொட்டி நாளை பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள சட்ட முன்வடிவின் மூலமாக கிழக்கு மாகாணத்தின் உள்ளுராட்சி சபைகளின் தற்போதைய அனைத்து நியமனங்…
-
- 0 replies
- 838 views
-
-
கிழக்கில் மக்களுடன் புலிகள் உள்ளதால் ஆயுதங்களை கீழே போட முடியாது: கருணா குழு கிழக்குப் பிரதேசம் முழுவதையும் கைப்பற்றிவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துக் கொண்டாலும் விடுதலைப் புலிகள் இன்னமும் அங்கு உள்ளதால் எம்மால் ஆயுதங்களைக் கீழே போட முடியாது என்று சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: குடும்பிமலை பிரதேசத்தை சிறிலங்கா அரசாங்கம் கைப்பற்றியதாகக் கூறினாலும் கிழக்கில் விடுதலைப் புலிகள் உள்ளனர் என்று பெயரைத் தெரிவிக்க விரும்பாத கருணா குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார். அவர் கூறியதாவது: ஆயுதங்களை ஒப்படைப்பது தொடர்பாக அரசாங்கத்துடன் …
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்காவின் கட்டுப்பாட்டின் கீழ் 4 முறை கிழக்கு இருந்துள்ளது: த.தே.கூ. சிறிலங்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கடந்த 30 ஆண்டுகளில் 4 முறை கிழக்குப் பிரதேசம் இருந்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இது தொடர்பில் கூறியுள்ளதாவது: அரசியல் இலாபங்களுக்காக குடும்பிமலை வெற்றியை சிறிலங்கா அரசாங்கம் பெரிதாக்குகிறது. இந்தப் பிரதேசம் ஏற்கெனவே பலமுறை அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளது. அப்பிரதேசம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியும் அல்ல. கொண்டாட்டங்களை மேற்கொள்ளும் வகையில் பிரதான வெற்றியும் அல்ல. கடந்த 30 ஆண்டுகளில் 4 முறை இதே பிரதேசம் அரசாங்கத்தின் கட்டுப்பா…
-
- 0 replies
- 745 views
-
-
கிழக்கில் 48 மணி நேரத்தில் புலிகள்- சிறிலங்கா இராணுவம் இடையே 7 மோதல்கள்: சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் கிழக்குப் பிரதேசத்தை முற்றாக சிறிலங்கா கைப்பற்றி விட்டதாகக் கூறிக்கொள்ளும் நிலையில் கடந்த 48 மணி நேரத்தில் அப்பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கும் இடையே 7 மோதல்கள் நடைபெற்றுள்ளன. கல்லாறுப் பிரதேசத்துக்கு தெற்கே சித்தாறுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றுள்ளது. மாவிலாறு காட்டுப் பகுதியில் நடைபெற்ற இம்மோதலில் இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இம்மோதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒரு…
-
- 1 reply
- 1k views
-
-
மீசாலையில் ஆயுதம் தாங்கிய இளைஞர்களிற்கும் படையினருக்கும் இடையே 10 நிமிடநேரம் துப்பாக்கி மோதல் நடைபெற்றுள்ளது. இதில் ஆயுதம் தாங்கிய இளைஞர்களில் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிப்பதாக தமிழ்நெட் தெரிவிக்கிறது. SLA, armed group exchange fire in Meesaalai [TamilNet, Tuesday, 17 July 2007, 20:56 GMT] Sri Lanka Army (SLA) road patrol squad and a group of unidentified armed men exchanged fire near Arasadi junction along Dutch Road at Meesaalai in Thenmaraadchi Tuesday around 6:00 p.m., sources in Jaffna said. The fire fight lasted for more than ten minutes. Two men, including one youth from the armed group were killed, accordi…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 5 replies
- 2k views
-
-
தொப்பிகலையிலிருந்து தப்பிச்செல்லும்போது ரணிலுக்கு ரமேஷ் தொலைபேசியூடாக அறிவித்தாரா? வீரகேசரி நாளேடு அரசாங்கத்தால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற தீர்வையற்ற முறையில் வாகனங்களை இறக்குமதி செய்யக்கூடிய வாகன அனுமதிப்பத்திரங்க ளை ஜாதிக ஹெல உறுமய விற் பனை செய்துள்ளது என்ற பொய்க்குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக இரண்டரை கோடி ரூபõ நஷடஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம். இதற்கான நடவடிக்ககைள் கட்சியினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்று ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார். வாகன அனுமதி பத்திரங்களை ஜாதிக ஹெல உறுமய விற்பனை செய்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டா…
-
- 2 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பில் தொப்பிக்கல என்பதே இல்லை: சிறிலங்கா நில அளவையாளர்கள் [செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2007, 19:44 ஈழம்] [கொழும்பு நிருபர்] மட்டக்களப்பில் தொப்பிக்கல என்று ஒன்று தேச வரைபடத்தில் இல்லை என்று நில அளவையாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் தேச வரைபடம் ஓரங்குல இட விளக்கப்படம் ஆங்கிலேயராலேயே வரையப்பட்டது. இது பின்னர் சிறிலங்காவின் நில அளவை திணைக்களத்தால் மறுசீரமைக்கப்பட்டது. ஆங்கிலேயராலேயே ஓரங்குல வரைபடத்தில் இடங்களுக்கு பெயரிடப்பட்டன. அவர்களால் மட்டக்களப்பு படுவான்கரையின் வடபகுதியில் உள்ள 150 அடி உயர பாறைக்கல்லுக்கு ஆங்கிலத்தில் பரொன்ஸ் கப் என்று பெயரிடப்பட்டது. அத்துடன் அப்பகுதி மக்கள் அழைக்கும் குடும்பிமலை என்ற பெயரும் வரைபடத்தில் எழுதப்பட்ட…
-
- 3 replies
- 1.8k views
-
-
கந்தளாய் மோதலில் இராணுவத்தைச் சேர்ந்தவர் பலி [செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2007, 19:17 ஈழம்] [தாயக செய்தியாளர்] திருகோணமலை மாவட்டம் கந்தளாய் சித்தாறுப் பகுதியில் இன்று காலை இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க அப்பகுதியில் சிறப்பு தேடுதல் நடவடிக்கை நடைபெறுவதாகவும் கூறினார். குடும்பிமலையில் இருந்து வெளியேறும் புலிகளே இத்தாக்குதலை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். puthinam
-
- 0 replies
- 848 views
-
-
காதலி மறுத்தமையினாலேயே அரசாங்கம் வேறொரு பெண்ணை மணக்கும் நிலை ஏற்பட்டது வீரகேசரி நாளேடு காதலியான ஜே.வி.பி. கல்யாணம் முடிக்க மறுத்தமையினாலேயே வேறொரு பெண்ணை மணம் முடி க்க வேண்டிய நிலை அரசாங்கத்து க்கு ஏற்பட்டது என்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே சபையில் நேற்று தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த ஜே.வி.பி. யின் பாராளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச காதலி மறுத்தமைக்காக வீதியில் அலையும் விபச்சாரிகளை அரசாங்கம் திருமணம் செய்வதா? என்று கேள்வி எழுப்பினார். காதலன், காதலி, விபச்சாரி விவகாரம் காரணமாக சபையில் நேற்று பெரும் சிரிப்பொலி ஏற்பட்டது. பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணியளவில் சபாநாயகர் வி.ஜே. மு. லொக்குபண்டார தலைமையி…
-
- 1 reply
- 1.3k views
-
-
மூதூர் மற்றும் சம்பூர் பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலையமாக இலங்கை அரசு அறிவித்தது செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவை இலங்கை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. அந்தப் பகுதிகள் யாரிடமிருந்தும் யாராலும் கைப்பற்றப்பட்ட அல்லது விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் அல்ல என்று தலைமை நீதிபதி சரத் டி சில்வா அவர்கள் தலைமையிலான நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டமை சட்ட விரோதமனது அல்ல எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும் அதன் பணிப்பாளருமான பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் தாக்கல் செய்த மனுவில் மீதே நீதிபதிகள் இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளனர். http://www.bbc.co.uk/tamil/news/story/…
-
- 0 replies
- 844 views
-
-
கிழக்கை தொகுதிகளாக பிரித்து அமைச்சர்களிடம் கையளிக்க ஏற்பாடு [ வீரகேசரி ] - [ Jஉல் 17, 2007 04:00 GMT ] புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணம் துரித கதியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. கிழக்கு மாகாணம் பல தொகுதிகளாக பிரிக்கப்பட்டு அமைச்சர்களிடம் கையளிக்கப்படவுள்ளதுடன் அபிவிருத்தி செயற்றிட்டங்களும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: . 30 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணம் அரசாங்கத்தால் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. இதற்கு …
-
- 0 replies
- 902 views
-
-
ஜேர்மனி தூதுவருடனான சந்திப்பு: ரணில் விளக்கம் [செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2007, 16:01 ஈழம்] [பி.கெளரி] சிறிலங்காவுக்கான ஜேர்மனி தூதுவருடனான சந்திப்பு குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விளக்கம் அளித்துள்ளார். ரணிலுக்கும் ஜேர்மனி தூதுவருக்கும் இடையே இரகசிய சந்திப்பு நடைபெற்றதாகவும் அதனையடுத்து சிறிலங்காவுக்கான நிதி உதவியை ஜேர்மனி இரத்து செய்தது என்றும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதாவது: தற்போதைய ஜேர்மனியின் சிறிலங்காவுக்கான தூதுவர் ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களின் கூட்டமைப்புத் தலைவர். மேலும் இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில் கலந்து…
-
- 1 reply
- 1k views
-