ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142785 topics in this forum
-
இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து மன்னிப்புச் சபை இன்று அறிக்கை வெளியிடும் லண்டன், மே 23 இலங்கையில் இடம்பெறும் மனித உரிமைகள் மீறல் சம்பவங்களைக் கண்டித்து சர்வதேச மன்னிப்புச் சபை இன்று அறிக்கை ஒன்றை வெளியிடும். அந்த அமைப்பு இன்று லண்டனில் நடத்தவுள்ள செய்தியாளர் மாநாட்டில் இந்த அறிக்கை வெளியிடப் படும். இலங்கை உட்பட உலக நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களைக் கண்டித்து இந்த அறிக்கை வெளியாகவிருக்கின்றது. குறிப்பாக இலங்கையில் மிக மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களை நிறுத்த இலங்கை அர சுக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைச் சிபார்சு செய்யும் விதத்தில் இந்த அறிக்கை அமையும் என்று அந்த அமைப்பின் பிரதிநிதி ஒருவர் லண்டனில் தெரிவித்தார். உதயன்
-
- 0 replies
- 694 views
-
-
மாணவர் பகிஷ்கரிப்பு நேற்றும் தொடர்ந்தது யாழ்ப்பாணம், மே 23 குடாநாட்டுப் பாடசாலைகளில் பதினொராவது நாளாக நேற்றும் மாணவர்கள் வகுப்புகளை பகிஷ்கரித்தனர். மூன்று மாணவர்கள் கடத்தப்பட்டமை, மாணவர்களுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை ஆகியன தொடர்பாக மாணவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவது தெரிந்ததே. கிராமப்புறப் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு சுமாராக இருந்த போதிலும் நகரத்தையும்,நகரத்தை அண்டியும் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வரவு வீழ்ச்சி கண்டிருந்தது. உயர்தர வகுப்பு மாணவர்கள் மட்டுமன்றி ஏனைய வகுப்பு மாணவர்களும் நேற்று அதிக எண்ணிக்கையில் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமது பகிஷ்கரிப்புப் போராட்டத்தை நேற் றுத் தற்கா…
-
- 0 replies
- 625 views
-
-
சிறிலங்கா தூதுவரின் குற்றச்சாட்டுக்கு நோர்வே உத்தியோகப்பூர்வ மறுப்பு [செவ்வாய்க்கிழமை, 22 மே 2007, 18:08 ஈழம்] [ப.தயாளினி] நோர்வே கடவுச்சீட்டுகள் பெருந்தொகையில் திருடப்பட்டதாகவும் அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அல்குவைதாவுக்குத் தொடர்பிருப்பதாகவும் அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பேர்னார்ட் குணதிலக்க குற்றம்சாட்டியுள்ளதை நோர்வே உத்தியோகப்பூர்வமாக மறுத்துள்ளது. நோர்வே வெளிவிவகார அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: நோர்வே கடவுச்சீட்டுகள் 1,30,000 திருடப்பட்டதாகவும் 700 நிரப்பப்படாத நோர்வே கடவுச் சீட்டுகள் தாய்லாந்தில் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சிறிலங்கா மற்றும் இதர ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. மேலும் இதில் தமி…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஜே.வி.பியின் ஆதரவுடன் அரசுக்கு எதிராக பணிப் புறக்கணிப்பு ஜே.வி.பி பிரதான அங்கம் வகிக்கும் தேசிய வர்த்தக சங்கம் சிறீலங்கா அரசைக் கண்டித்து, நாடு தழுவிய ரீதியில் பொதுப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளது. சிறீலங்கா அரசுத் தலைவர் தேர்தலில், தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றத் தவறி இருப்பதைக் கண்டித்து, இந்தப் பணிப் புறக்கணிப்பு இடம்பெறவுள்ளது. தேசிய வர்த்தக சங்கத்தின் நிறைவேற்றுக் குழு அடுத்த மாதம் 24ஆம் திகதி கூடும்போது பணிப் புறக்கணிப்பிற்கான திகதி முடிவு செய்யப்படவுள்ளது. தொழிலாளர்களின் பிரச்சினைகள் பற்றி தாம் தெரிவித்த கருத்துக்களை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸவும், பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவும் கவனத்தில்கொள்ள தவறி…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஓமந்தைச் சோதனைச் சாவடி மீண்டும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது ஓமந்தைச் சோதனைச் சாவடி மீண்டும் நேற்று மாலை முதல் மூடப்பட்டுள்ளது. இராணுவச் சோதனைச் சாவடியிலிருந்து இலக்கமில்லாத வெள்ளைச் சிற்றூர்தி ஒன்று விடுதலைப் புலிகளின் முன்னரங்கச் சோதனைச் சாவடியை நெருங்க முற்பட்ட போது விடுதலைப் புலிகளால் வெள்ளைச் சிற்றூர்தி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து சூனியப் பிரதேசத்தில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தினரது வாகனம் துப்பாகிச் சன்னம் பாய்ந்து சிறு காயம் ஏற்பட்டதையடுத்து சூனியப் பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் தமக்குப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அங்கிருந்து வ…
-
- 0 replies
- 647 views
-
-
புதன் 23-05-2007 04:15 மணி தமிழீழம் [சிறீதரன்] நாரந்தனையில் கைதாகிய 6 இளைஞர்கள் கடும் வதைகளுக்கு உள்ளாகினர் சிறீலங்கா கடற்படையினரால் ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியில் ஈ.பி.டி.பி உறுப்பினர் கொலை செய்யப்பட்டதையடுத்து ஆறு அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கடும் வதைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கடற்படையினருடன் சென்ற துணை இராணுவக்குழுவான ஈபிடிபியினரும் கடற்படையினருடன் இணைந்து குறிப்பிட்ட இளைஞர்களை தாக்கியுள்ளார்கள். நன்றி பதிவு
-
- 0 replies
- 769 views
-
-
தமிழ்செல்வன் அண்ணாவின் வாகனம் கிளைமோரில் சிக்கியதாகவும் அதில் 4 பேர் உயிரிழந்ததாகவும் தமிழ் செல்வன் அண்னா வாகனத்தில் இல்லாததால் தப்பித்ததாகவும் சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருகின்றது வழமையான பொய்களை சிங்கள பத்திரிகைகள் அவிழ்துவிடுவதால் உறுதிப்படுத்த கேட்கின்றேன் http://www.elakiri.com/forum/showthread.php?t=30732
-
- 5 replies
- 3.9k views
-
-
வான்புலிகளின் வான் தாக்குதலுக்கே இப்படியென்றால்? வான் சண்டைகளுக்குத் தாயாராகிவிட்டால்? -கேசவன்- விடுதலைப்புலிகளிடம் விமனத் தாக்குதல் நடத்துகின்ற அளவுக்குப் பலம் கிடையாது அப்படித் தாக்குதல் நடத்த வந்தால் கூட அடுத்த நொடியிலேயே சுட்டு வீழ்த்திவிடுவோம். என அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது ஆனால் இப்போது புலிகள் வான் வழியாக வந்து தாக்குதல் நடத்திவிட்டுப் பத்திரமாகச் சென்று தரையிறங்கியிருக்கின்றனர் இந்தத் தாக்குதல் புலிகளின் வான்படைப்பலம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. முன்னர் புலிகளிடம் இருக்கும் விமானங்கள் எந்த ரகத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் கட்டுநாயக்கா தாக்குதலுக்குப் பின்னர் புலிகளிடம் இருப்பது செக் நாட்…
-
- 0 replies
- 1.2k views
-
-
அநுராதபுரத்தில் பறப்பில் ஈடுபட்ட விமானங்கள் - விசாரணை ஆரம்பம் அநுராதபுரத்தில் பறப்பில் ஈடுபட்ட இரண்டு இலகுரக விமானங்கள் பற்றிய விhரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சிறீலங்கா வான் படை அறிவித்துள்ளது. இன்று காலை அநுராதபுரம் வான் பரப்பில் நுழைந்த இந்த விமானங்கள் பற்றிய தகவலை பொதுமக்களும், சிறீலங்காப் படையினரும் கொழும்புக்கு உடனடியாகத் தெரியப்படுத்தி இருந்தனர். இதனைத் தொடர்ந்து கொழும்பின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் விமான எதிர்ப்பு ஏவகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் வன்னிப் பக்கம் இருந்து சென்ற இரண்டு இலகுரக விமானங்களும், வன்னிப் பக்கமாகவே திரும்பி சென்றுவிட்டதாக நேரில் பார்த்த பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். http://www.p…
-
- 0 replies
- 1.1k views
-
-
செவ்வாய் 22-05-2007 00:58 மணி தமிழீழம் [செந்தமிழ்] கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட பௌத்த பிக்கு கைது தென்னிலங்கையில் பௌத்த பிக்கு ஒருவர் வெலிவத்தை பகுதியில் அமைந்திருக்கும் விகாரையில் தங்கியிருந்த வணிகர் ஒருவரின் கடன் அட்டையை திருடி மூன்று இலட்சம் ரூபா பணத்தை களவாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மோசடிக்கு வெலிவத்தை விகாரையின் பணியாளரான பாதாள உலகக் குழுவொன்றுடன் தொடர்புடைய நபர் ஒருவர் உடந்தையாக இருந்ததாக தெரியவருகிறது. பதிவு
-
- 3 replies
- 1.4k views
-
-
மெல்பேனில் பாராளுமன்றம் முன்பாக இன்று ஈழத் தமிழர்கள் ஒன்றுகூடி தங்கள் உரிமைப்போரின் நியாயப்பாட்டை ஆஸ்த்திரேலிய மக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செவிகளுக்கு கொண்டு சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்த்துகொண்ட இந்த நிகழ்வில் தமிழ்ழர்களின் ஒன்றுபட்ட வேண்டுகோள் ஒரு விளிப்புனர்வை ஆஸ்த்திரேலிய நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. http://www.mandaitivu.com/index.php?option...1&Itemid=50 நன்றி-மண்டைதீவு.கொம்
-
- 2 replies
- 1.1k views
-
-
4 மாதங்களில் 500 விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம்: இலங்கை ராணுவம் கொக்கரிப்பு கொழும்பு, மே. 22- இலங்கையில் 2002-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக் கும் சிங்கள ராணுவத்துக்கும் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந் தத்தை மீறி ராணுவம் தொடர்ந்து விடுதலைப்புலிகள் மீதும் தமிழர்கள் குடியிருப்பு கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் வீடுகளை இழந்து அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த 15 மாதங்களில் மட்டும் பொதுமக்கள், ராணு வத்தினர், விடுதலைப்புலிகள் உள்பட 4000 பேர் இந்த மோதல்களில் பலியாகி விட்டனர். இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறும்போது, "கடந்த 4 மாதங்களில் மட்டும் 500 விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம். புலிகளின் ஆ…
-
- 7 replies
- 2.2k views
-
-
உறுப்பினர் படுகொலையை ஈ.பி.டி.பி. கண்டிக்கிறது யாழ்ப்பாணம்,மே 22 ஊர்காவற்றுறையில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் படுகொலை செய்யப்பட் டதை அந்த அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. படுகொலை குறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது: எமது கட்சியின் மூத்த உறுப்பினர் களில் ஒருவரான தோழர் பஸ்டீன் சித் திரவேல் சாந்தகுமார் நேற்று அதிகாலை வேலணை நாரந்தனையில் புலிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். மக்கள் சேவர்களான எம்மீது புலிப் பயங்கர வாதம் நடத்தியிருக்கும் இக்கொலையை நாம் வன்மையாகக் கண்டிக்கின் றோம். புலிகள் ஊருக்குள் பதுங்கியிருந்து கொண்டு கொலை, கொள்ளைகள் போன்ற மக்கள் விரோத நடவடிக்கை களில் ஈடுபட்டுவருகின்றர் என்பதை பஸ்டீன் மீதான இப்படுகொலை உறுதிப் ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
செவ்வாய் 22-05-2007 00:52 மணி தமிழீழம் [செந்தமிழ்] போராளிகள் வீரச்சாவு அறிவித்தல்கள் வவுனியா – மணலாறு களமுனைகளில் இரு வேறு வேறுநேரடிமோதல்களில் இருபோராளிகள் வீரச்சாவு அறிவித்தல்கள் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 19ம் திகதி புளியங்குளப்பகுதியில் நிகழ்ந்தமோதலில் 2ம் லெப்ரினன் தீபன் என்றழைக்கப்படும் யாழ்மாவட்டத்தை சொந்த இடமாகவும் கிளிநொச்சி வன்னேரிக்குளத்தை பிந்திய முகவரியாகவும் கொண்டிருந்த கந்தசாமி தவரூபன் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார். மணலாறு களமுனையில் கடந்த 12ம் நாளன்று இடம்பெற்ற மோதலில் வீரவேங்கை வேந்தன் என்றழைக்கப்படும் யாழ்மாவட்டத்தை சொந்த இடமாகவும் கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியை பிந்திய முகவரியாகவும் கொண்ட பரமநாதன் எழில்வே…
-
- 5 replies
- 1.5k views
-
-
இன வேறுபாட்டை சிறிலங்கா உணரவில்லை: அமட்யா சென் [செவ்வாய்க்கிழமை, 22 மே 2007, 15:33 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்கா மக்கள் அதிகரித்துள்ள இனப்பாகுபாட்டை உணரத்தவறிவிட்டனர், அந்த நாட்டின் மக்கள் அமைதி முயற்சிகளுக்கு தமது பங்களிப்பை நல்கவேண்டும் என்று நோபல் பரிசில் பெற்ற பேராசிரியர் அமர்த்யா சென் தெரிவித்துள்ளார். நோர்வே ஒஸ்லோவில் நடைபெற்ற விரிவுரை ஒன்றின் போதான கேள்வி ஒன்றிற்கு அவர் அளித்த பதில்: சிறிலங்காவில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் போன்ற நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருந்தது. எனவே அந்த நாட்டின் மக்கள் அமைதி முயற்சிகளிலும் தமது பங்களிப்பை வழங்க வேண்டும். ஆனால் புத்தமதம், சிங்கள இனம் போன்றவற்றை முதன்மைப்படுத்துவதால் அதன் தேசிய அடையாளப்படுத்துத…
-
- 2 replies
- 1.2k views
-
-
செவ்வாய் 22-05-2007 17:16 மணி தமிழீழம் [தாயகன்] மன்னார் எண்ணை வள ஆராய்ச்சிக்கு குவைத் உதவி சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ ஜோர்தான் பயணத்தை முடித்துக்கொண்டு குவைத் சென்று, அந்த நாட்டுத் அரசுத் தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றார். இந்தப் பேச்சுக்களின்போது மன்னாரில் எண்ணை அகழ்வாராச்சிக்கு உதவி புரிவதற்கு குவைத் அரசாங்கம் முன்வந்திருப்பதாக, சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது. அத்துடன், குறைந்த விலையில் மசகு எண்ணை, மற்றும் பெற்றோல் என்பவற்றை சிறீலங்காவிற்கு வழங்குவதற்கும் குவைத் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதேவேளை, குவைத்திலுள்ள சிறீலங்கா நாட்டவரை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ குவைத் சிற்றியில் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். …
-
- 0 replies
- 1.1k views
-
-
இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள புத்தளத்தில்தான் தமிழக மீனவர்கள் தங்க வைக்கப்பட்டனர்: "டெக்கான்" ஏடு சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள புத்தளம் பகுதியில்தான் தமிழக மீனவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்று சென்னையில் வெளியாகும் "டெக்கான் குரோனிக்கல்" நாளிதழ் அம்லப்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து மீனவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பியது தொடர்பாக செய்தியைப் பதிவு செய்துள்ள டெக்கான் ஏடு, தமிழக மீனவர்களைக் கடத்தியது விடுதலைப் புலிகள்தான் என்பது இன்னமும் நம்பக்கூடியதாக இல்லை. உண்மையில் கடத்தியது யார் என்பது குறித்து குழப்பமாக உள்ளது என்று கூறியுள்ளது. மேலும் மீனவர் கூட்டமைப்பின் தலைவரான ஆண்டன் கோமஸ், டெக்கான் நாளிதழ் ஊடகத்துக்கு அளித்த கருத்தில், …
-
- 4 replies
- 1.8k views
-
-
இராணுவ, கடற்படைத் தளபதிகள் ஒருவருடன் ஒருவர் பேசாது எப்படி போரை முன்னெடுப்பது? - ஐ.தே.க சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனறல் சரத் பொன்சேகாவும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொடவும் ஒருவருக்கொருவர் பேசாது எப்படி போரை முன்னெடுக்க முடியும் என, திலக் கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். “லங்காதீப” பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திலக் கருணாரத்ன இந்தக் கருத்தினை முன்வைத்துள்ளார். முன்னாள் துணை படைத்துறை அமைச்சர் அனுருத்த ரத்வத்தை, தற்போதைய இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனறல் சரத் பொன்சேகா போன்றவர்கள் போரில் கதாநாயகர்களாக இருக்க முனைவதாகவும் திலக் கருணாரத்ன குற்றம் சாட்டியுள்ளார். …
-
- 1 reply
- 863 views
-
-
சர்வதேச சமூகத்தின் சமுகத்துக்கு! இலங்கை இனப்பிரச்சினை மிக மோசமான போராக வெடிக்கும் ஆபத்து நிலை ஏற்பட்டிருப்பது குறித்து சர்வ தேச சமூகம் கவலை வெளியிட்டு வருகின்றது. 2002இல் தொடங்கப்பட்ட அமைதி முயற்சிகள் செயலி ழந்து போனமை குறித்தும் சர்வதேச சமூகம் விசனம் தெரி வித்து வருகின்றது. ஆனால் இவ்வாறு சமாதான முயற்சிகள் குழம்பி, பெரும் போர் வெடிக்கும் ஏது நிலை உருவானமைக்கு பின்புலத் தில் பிரதான காரணியாக அமைந்ததே சர்வதேச சமூகம் தான் அதன் பொறுப்பற்ற போக்குத்தான் என்பதை இப் பத்தியில் ஏற்கனவே பல தடவைகள் நாம் சுட்டிக்காட்டி குற்றம் சுமத்தி வந்துள்ளோம். இங்கையில் ஈழத் தமிழர்களின் உரிமைக்கான வாழ்வியல் இருப்புக்கான கௌரவ வாழ்வுக்கான போராட் டம், அறுபது ஆண்டுகளைக் கடந்து செல்லும் நீண்…
-
- 1 reply
- 1.2k views
-
-
குடாநாட்டில் "சி.டி.எம்.ஏ' இணைப்புகள் அடுத்தவாரம் முதல் வழங்கப்படும் பிரதிப் பொதுமுகாமையாளர் தகவல் யாழ்ப்பாணம்,மே22 குடாநாட்டில் அடுத்தவாரம் தொடக் கம் "சி.டி.எம். ஏ.' தொலைபேசி இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக ரெலிக் கொம் நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையா ளர் (வடமாகாணம்) வி.யோகேந்திரன் உதயனுக்குத் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் இணைப்புச் செய்வதற்கான "சிற்றிலிங் சி.டி.எம்.ஏ. தொலைபேசிகள் உடனடியாக யாழ்ப்பாணம் எடுத்துவருவதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும
-
- 1 reply
- 1k views
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கல்விப் புறக்கணிப்பு தற்காலிக நிறுத்தம் நிலைமையை விளக்கி மாணவர் ஒன்றியம் அறிக்கை ] யாழ்ப்பாணம்,மே 22 இதுவரை கடத்தப்பட்ட பாடசாலை மாணவர்கள் தொடர்பாக சாதகமான பதில்கள் விரைவில் கிடைக்கும் என்று பல்வேறு தரப்புகளும் தமக்குத் தெரி யப்படுத்தியதை அடுத்து பல்கலைக் கழக மாணவர்கள் தமது கல்விப் புறக் கணிப்பைத் தற்காலிகமாக இன்று தொடக்கம் கைவிடுவதாக யாழ். பல் கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறி வித்துள்ளது. இது தொடர்பாக மாணவர் ஒன்றி யம் விடுத்துள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது: மாணவர்கள் மீதான கடத்தல்கள், கொலைகள், அச்சுறுத்தல்கள் என்பன தொடர்பாக தாம் உரிய தரப்பினருடன் தொடர்புகொண்டுள்ளதாகவும் அவை தொடர்பில் தக்க நடவடிக்கை எடுக் கப்படுமென உறுதியளிக்க…
-
- 1 reply
- 900 views
-
-
கடத்தப்பட்ட யாழ்.மாணவர் விவகாரம்; நாடாளுமன்றில் இன்று விசேட விவாதம் கூட்டமைப்பு எம்.பியின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு அனுமதி யாழ்ப்பாணம்,மே22 யாழ்ப்பாணத்தில், மாணவர்கள் மூவர், ஊரடங்கு நேரத்தில் அவர்களது வீடுகளில் வைத்துப் பெற் றோர்கள் பார்த்திருக்கக் கடத்திச் செல்லப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாத விவகாரம் குறித்து இன்று நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது. மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக சமூகத்தினருக்கு விடுக்கப்பட்ட மரணதண்டனை அச்சுறுத்தல் குறித்தும் அங்கு பிரஸ்தாபிக்கப்படும். குடாநாட்டில் மாணவர்கள், பெற்றோர் கள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கிய இவ்விகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புப் பிரேரணை …
-
- 0 replies
- 964 views
-
-
பல்கலை. மாணவர் இன்று விரிவுரைகளுக்குத் திரும்புவர் யாழ்ப்பாணம்,மே22 யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமது பகிஷ்கரிப் புப் போராட்டத்தைக் கைவிட்டு இன்று விரிவுரை களுக்குச் சமுகமளிப்பர். கடத்தப்பட்ட மூன்று பாடசாலை மாணவர்களை விடுவிக்குமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று நாள்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். எனினும் பின்னர் போராட்டத்தைக் கைவிட்டு அவர் கள் கல்விச் செயற்பாட்டில் ஈடுபட்டனர். பல்கலைக் கழக சமூகத்துக்கு மரணதண்டனை அச்சுறுத்தல் விடுத்து துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டதை அடுத்து கடந்த 14ஆம் திகதி தொடக்கம் அவர்கள் மீண்டும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர். பகிஷ்கரிப்பைக் கைவிட்டு மாணவர்கள் இன்று விரிவுரைகளுக்குத் திரும்புவர் என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றி…
-
- 0 replies
- 804 views
-
-
வவுனியா, மணலாறில் கிளைமோர் தாக்குதல்கள் நான்கு படையினர் பலி; மூவர் காயம் கொழும்பு,மே 22 வவுனியா, மணலாறு (வெலிஓயா) பகுதிகளில் நேற்று இடம்பெற்ற இரு கிளைமோர் தாக்குதல்களில் நான்கு படையினர் உயிரிழந்தனர். மூவர் காயமடைந்தனர். வவுனியா இரணை இலுப்பைக்குளம் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் இரண்டு படையினர் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று படையினர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று இரா ணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். நேற்றுக்காலை 8.15 மணியளவில் படையினர் பயணம் செய்த உழவு இயந்திரத்தை இலக்கு வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். மணலாறு பகுதியில் வீதிச்சோதனை நடவடிக்கை யில…
-
- 0 replies
- 782 views
-
-
அனலைதீவு மீனவர்கள் மூவரும் திரும்பினர் யாழ்ப்பாணம்,மே22 அனலைதீவில் இருந்து கடந்த 15ஆம் திகதி தொழிலுக்காகக் கடலுக்குச் சென்று காணாமற்போன மூன்று மீனவர்களும் வீடு திரும்பியுள்ளனர். அதே இடத்தைச் சேர்ந்த ஜெகநாதன் ஜெயந்தன், வேலாயுதம் ஸ்ரீதேவன், தவ ராசா ஜெகன் ஆகியோரே காணாமற்போயி ருந்தனர். இவர்கள் சென்ற கட்டுமரம் வேகமாக வீசிய காற்றினால் அள்ளுண்டு தொண்டை மானறு கடற்கரையில் ஒதுங்கியது. அப் பகுதியில் உள்ள படையினர் மீனவர்கள் மூவரையும் கரைநகர் கடற் படையினரிடம் கைய ளித்தனர். பின்னர் அனலைதீவு கடற்படைப் பொறுப்பதிகாரி ஊடாக மூவரும் உறவின ரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று நேற் றிரவு கிடைத்த பிந்திய தகவல்கள் தெரி வித்தன. அத்துடன் அவர்களுடன் மற்றொரு கட்டுமரத்தில் சென்ற நால்வர் கட்ட…
-
- 0 replies
- 978 views
-