ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
சிங்களவாதம் கூட போர் தமிழ் மக்களுக்கு எதிரானது என்ற உண்மையை ஒளித்துக் கொண்டே போரிட வேண்டி இருக்கின்றது. எனவே இந்தியப் போக்குக்கு மட்டும் அந்த தேவை இல்லாமல் போகுமா? "புலிவேறு, மக்கள் வேறு" என்று சிங்களம் சொல்லும் போது அது காதுகுத்த விரும்புவது தமிழர்களயோ, சிங்களவர்களயோ அல்ல வெளி உலகத்தை மட்டுமே! "புலிகள்வேறு, மக்கள் வேறு" என்று ஜெயாவோ, பார்ப்பானியமோ சொல்லும் போது அவை காதுகுத்த முற்படுவது தமிழ்நாட்டு மக்களை மட்டுமே, மற்றவர்கள் உணர்வு அவர்கள் அரசியலுக்கு ஒரு மண்ணும் போடாது. தினமலர் என்ற பார்ப்பானிய நாளேடு ஈழத்தின் அழிவுக்கு தன்பங்குக்கு கனகச்சிதமாய் எண்ணை ஊற்றும் பணியில் ஒன்று தான் இதுவும். புதினத்தில் இருந்து...... இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செ…
-
- 1 reply
- 1.7k views
-
-
புலிகளின் நடவடிக்கைகளை கட்டார் நாட்டில் தடைசெய்யுமாறு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. http://www.thepeninsulaqatar.com/Display_n...00706132220.xml http://www.gulf-times.com/site/topics/arti...mp;parent_id=56
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றி அவர்களின் சொந்த ஊர்களுக்கு சிறிலங்க காவல்துறை அனுப்பி வைத்ததற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பை சிறிலங்க அரசு சந்தித்து வருகிறது! வடகிழக்கு மாகாணங்களில் வசித்து வரும் தமிழர்கள் வாழ்வதற்கு வழியின்றி, அவர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு துன்பத்திலும், துயரத்திலும் உழன்று கொண்டிருக்கும் நிலையில் அயல்நாடுகளுக்குச் சென்று வேலை தேடி பிழைப்பதற்காக கொழும்பு வந்து அங்குள்ள மிகக் குறைந்த கட்டண தங்கும் இடங்களில் தங்கியிருந்தபோதுதான் அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து சிறிலங்க காவல்துறை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வவுனியா, மட்டக்களப்பு உள்ளிட்ட அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத…
-
- 0 replies
- 1k views
-
-
காலியில் உள்ள பாடசாலை ஒன்றில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண் தனது படிப்பை தொடர அந்த பாடசாலை அதிபர் அனுமதி மறுத்துள்ளார். அவர் தனது மறுப்புக்கு கூறிய காரணம் "அந்த பெண் இப்ப ஒரு அவமானமானவள் அத்துடன் அவள் மற்ற மாணவர்களுக்கு இழிவான / கெட்ட உதாரணமாக அமைந்து விடுவாள்" என்பதாகும். http://www.bbc.co.uk/sinhala/news/story/20...irl_raped.shtml என்னால் ஊர்புதினம் பகுதியில் எழுதமுடியாமையால் இதனை இங்கு எழுதுகிறேன்
-
- 18 replies
- 3.4k views
-
-
12.06.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவன் http://www.yarl.com/videoclips/view_video....3f142449d037028
-
- 2 replies
- 1.8k views
-
-
மனித உரிமை மீறல் சம்பவங்கள் அரசு நடத்தும் விசாரணைகள் மீது வெளிநாட்டு நிபுணர்கள் அதிருப்தி படுகொலைகள் உட்பட பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு வின் செயற்பாடுகள் குறித்து அதனைக் கண் காணிக்கும் சர்வதேச கண்காணிப்பாளர் குழு அதிருப்தி தெரிவித்திருக்கின்றது. ஆணைக்குழுவின் செயற்பாடுகள் சர்வ தேச தரத்தில் இல்லை என்றும் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டுள்ளன என் றும் சர்வதேச நிபுணர்குழு கடுமையாக விமர்சித்திருக்கின்றது. பிரான்ஸைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பட்டினிக்கு எதிரான தொண்டர் அமைப்பின் பணியாளர்கள் 17 பேர் கடந்த ஓகஸ்டில் மூதூரில் கொல்லப் பட்டமை உட்பட பதினாறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்…
-
- 0 replies
- 750 views
-
-
யாழ். குடாநாட்டில் பெருமளவான சிறுவர்கள் நிறை குறைந்தவர்கள் யாழ். மாவட்டத்தில் உள்ள ஐந்து வயதுக்கு குறைந்த சிறுவர்களில் 9,000-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் நிறை குறைந்தவர்கள் என அமைப்புக்களுக்கு இடையிலான பிராந்திய குழு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. அது மேலும் தெரிவித்துள்ளதாவது: ஐந்து வயதுக்கும் குறைவான இந்த சிறுவர்களுக்கு உயர்சக்தி கொண்ட பிஸ்ட்கட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே அவர்கள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும். எனினும் யாழ். குடாநாட்டில் தற்போதுள்ள கையிருப்பு எதிர்வரும் 4 அல்லது 6 வாரங்களுக்கே போதுமானவை. மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை மற்றும் வெல்லாவெளி பகுதிகளில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு உணவே பிரதான தேவையாக உள்ளது. தமது சத்துணவு திட்ட…
-
- 0 replies
- 766 views
-
-
சிறிலங்கா அரசின் உயர் பாதுகாப்பு ஆலோசகர் இஸ்ரேலில் காலமானார் சிறிலங்காவின் வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு ஆய்வு உயர் அதிகாரியும், பாதுகாப்புத்துறை ஆலோசகருமான கலாநிதி டி.ஏ.ஐ. முனிந்திரதாச (41) கடுமையான நுரையீரல் நோய்காரணமாக இஸ்ரேலில் மரணமடைந்துள்ளார். பாதுகாப்புத்துறை தொடர்பான உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை இஸ்ரேலுக்கு மேற்கொண்டிருந்த போது அங்கு அவர் மரணமடைந்துள்ளார். இது தொடர்பில் மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது: மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் மற்றும் தொலைதொடர்புகள் பொறியியல் துறையின் விரிவுரையாளரான அவர் இஸ்ரேலில் உள்ள ரெல் அவிவ் பகுதியில் சில முக்கிய ஆயுதங்களை பரிசோதனை செய்வதற்கும், அங்கு நடைபெறும் பயிற்சிப் பட…
-
- 5 replies
- 2k views
-
-
கிழக்கில் விரைவில் மாகாணசபை தேர்தல் நடத்த மகிந்த தீவிர முயற்சி . கிழக்கில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்சா கடுமையான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர்களுக்கான கூட்டத்தின் போது மகிந்த இந்த தகவலை தெரிவித்துள்ளார். அக்கூட்டத்தில் பேசிய மகிந்த, கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. கிழக்கில் விடுதலைப்புலிகள் வசம் தொப்பிக்கல உட்பட சிறிய பகுதியே உள்ளது. அந்தப் பகுதியையும் மிக விரைவில் இராணுவ நடவடிக்கை மூலம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விடுவார்கள் என்றார் அவர். இதனிடையே கிழக்கில் மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் அதில் அரசுடன் இணைந்து தமது குழு போட்டியிடும்…
-
- 1 reply
- 943 views
-
-
ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்: காங்கிரஸ் உறுப்பினர் வலியுறுத்து. ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான வி.நாராயணசாமி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசுகையில் அவர் இப்படிக் கூறினார். இலங்கையின் உள்விவகாரத்தில் மத்திய அரசு நேரடி யாகத்தலையிடவில்லை என்றாலும் அங்கு வாழும் மக்களின் பாதுகாப்பை அது உறுதி செய்ய வேண்டும் என்று அவர் சொன்னார். இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பேசியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். -Uthayan-
-
- 0 replies
- 881 views
-
-
Posted on : 2007-06-13 தமிழ்த் தலைமைகளிடம் சமூகம் எதிர்பார்க்கும் பணி கொழும்பிலிருந்து தமிழர்களைப் பலவந்தமாக வெளியேற்றியமை தொடர்பாக தனது தவறை அரசு ஒப்புக்கொண்டு விட்டது. அரசின் சார்பில் பிரதமரே நேரடியாக பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுவிட்டார். ஆனால் இந்த அராஜகத்துக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது மட்டும் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை; அம்பலப்படுத்தப்படவில்லை. "விசாரணை நடக்கின்றது. தவறுக்குப் பொறுப்பானவர்கள் கண்டுபிடிக்கப்படுவர்' என்று மட்டுமே அரசுத் தரப்பில் சமாளிப்புக் கூறப்படுகின்றது. ஆனால் "சூத்திரதாரிகள்' யார் என்பது உத்தியோகபூர்வமாகக் கண்டுபிடிக்கப்படவோ, கண்டிக்கப்படவோ, தண்டிக்கப்படவோ வாய்ப்புகள் இல்லை. விசாரணை நடக்கின்றது என்ற பெயரோ…
-
- 1 reply
- 847 views
-
-
தமிழக அகதிமுகாம்களில் தங்கியிருந்த 2500 இலங்கையர்களைக் காணவில்லை:. தமிழகத்திலுள்ள பல்வேறு அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகளில் 2 ஆயிரத்து 500 பேர் காணாமல்போயிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தமிழ்நாடு உளவுப் பிரிவு பொலிஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்திலுள்ள அகதிமுகாம்களில் தற்போது 19 ஆயிரத்து 200 இலங்கையர்கள் தங்கியிருப்பதாகவும் இவர்களில் 2 ஆயிரத்து 500 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. உளவுப் பிரிவு பொலிஸாரின் கவனயீனமே இவ்வாறு அகதிகள் காணாமல்போயுள்ளமைக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம், திருச்சி, கொட்டப்பட்டுஆகிய அகதிமுகாம்களிலேய…
-
- 4 replies
- 1.5k views
-
-
தலைநகரிலிருந்து தமிழரை வல்வந்தமாக வெளியேற்றிய தவறை ஏற்றுக்கொண்டமை குறித்து அரசுக்குள் பெரும் கருத்து முரண்பாடு! தலைநகர் விடுதிகளிலிருந்து பல நூறு தமிழர்களை வல்வந்தமாக பஸ்களில் ஏற்றி வடக்கு கிழக்குக்கு அனுப்பிய பாதுகாப்புத் துறையினரின் நடவடிக் கையை பெருந்தவறு என அரசு பகிரங்கமாக ஒப்புக்கொண்டமை அரசுத் தலை மைக்குள் பெரும் புகைச்சலைக் கிளப்பியிருப்பதாக அறியவருகின்றது. இது தொடர்பான உள்ளக முரண்பாடு அடுத்துவரும் நாள்களில் பகிரங்க மாகும் என உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றத்தை அரசு ஒப்புக்கொண்டு மன் னிப்புக் கேட்ட அல்லது வருத்தம் தெரி வித்த நடவடிக்கை படையினரையும் பொலி ஸாரையும் அரசே காட்டிக்கொடுத்த செய லுக்கு ஒப்பானது என, இவ்விடயத்தில் தவறை ஒப்புக்கொண்டமைக்கு எதிரா…
-
- 0 replies
- 939 views
-
-
புகையிரதப் பாதையில் வைக்கப்பட்ட கிளைமோர் குண்டு ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதாக கோத்தபாய படைகள் அறிவிப்பு. இதனால் புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டு, காலிவீதியில் சனநெரிசல் அதிகரித்துள்ளது.
-
- 5 replies
- 1.5k views
-
-
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கோத்தபாய ராஜபக்ஸவை பாதுகாக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளார் : ரணில் குற்றச்சாட்டு. இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜகத் அபேசிங்க பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவை பாதுகாக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளார். அவர் செஞ்சிலுவை சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின
-
- 1 reply
- 1.1k views
-
-
கோத்தபாயவின் விமர்சனத்துக்கு ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா எதிர்ப்பு [செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2007, 20:00 ஈழம்] [செ.விசுவநாதன்] ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவைகள் குறித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்த விமர்சனங்களுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவுக்கு வருகை தந்த பிரித்தானியா இணை அமைச்சர் பயங்கரவாதத்தை எதிர்த்து ஒருவார்த்தை கூட பேசவில்லை என்று கோத்தபாய தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள கொழும்பில் உள்ள பிரித்தானியா தூதுவர், பிரித்தானிய இணை அமைச்சர் பயங்கரவாதத்தைக் கண்டனம் செய்துதான் கருத்து தெரிவித்தார். மேலும் அரசிய…
-
- 6 replies
- 2.6k views
-
-
மட்டக்களப்பில் இருவேறு சம்பவங்களில் 5 தமிழ் இளைஞர்கள் சுட்டுப் படுகொலை [செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2007, 19:16 ஈழம்] [சி.கனகரத்தினம்] மட்டக்களப்பில் இருவேறு சம்பவங்களில் 5 தமிழ் இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏறாவூர் சிறிலங்கா காவல்துறை பிரதேசத்துக்குட்பட்ட சித்தாண்டி நாகதம்பிரான் கோவில் வீதியில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.35 மணியளவில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் அப்போது தம்மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்த முற்பட்ட 4 இளைஞர்களை சுட்டுக்கொன்றதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே வந்தாறுமூலை பௌண்டரி வீதியைச் சேர்ந்த எஸ்.மனோகரன் (வயது 22) என்ற இளைஞர் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ள…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.நா.வுக்குள்ளும் புலிகள் ஊடுருவல்- தனிமைப்படுத்துவதாக பிரித்தானியா மிரட்டல்: கோத்தபாய ராஜபக்ச புலம்பல் [செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2007, 18:55 ஈழம்] [ப.தயாளினி] கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றியது நியாயம்தான் என்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிறுவனங்களுக்குள் 30 ஆண்டுகாலமாக திட்டமிட்டு புலிகள் ஊடுருவிவிட்டனர் என்றும் பிரித்தானியா புலிகளுக்கு எதிராக பேசாமல் சிறிலங்காவை தனிமைப்படுத்தப்போவதாக மிரட்டுகிறது என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் மற்றும் பி.பி.சி. செய்தி நிறுவனங்களுக்கு அவர் அளித்த நேர்காணல்: மனித உரிமை விவகாரங்களில் வெளிநாட்டுச் சக்திகள் இர…
-
- 8 replies
- 2.1k views
-
-
தமிழர்கள் வெளியேற்றப்படுவதால் கொழும்பு பாதுகாக்கப்படுமா? http://www.yarl.com/videoclips/view_video....7adf34b1d77e88d
-
- 0 replies
- 1.7k views
-
-
விடுதலைப் புலிகளை யுத்தத்தால் வெல்ல முடியாது : பிரிட்டிஷ் பிரதமர். சிறிலங்கா அரசாங்கம் சர்வதேசரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளின்படி சகல மக்களினதும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர், விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் வெல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே பிரிட்டிஷ் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா மனித உரிமை நிலைவரம் மோசமடைந்து வருவதால் ஐக்கிய நாடுகள் தலையிட வேண்டும் என்ற சர்வதேச அழுத்தம் அதிகரித்து வரும் சூழ்நிலையிலேயே பிளயரின் இந்தக்கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிறிலங்கா இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற…
-
- 0 replies
- 2.2k views
-
-
நோர்வே சமாதான பணியில் இருந்து விலகப்போகின்றதா? நோர்வே இலங்கையில் சமாதானப்பணியில் இருந்து விலகத்தீர்மானித்துள்ளதாகவு
-
- 0 replies
- 2.1k views
-
-
செவ்வாய் 12-06-2007 15:30 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] உலக அரங்கில் எழுப்பிவரும் உரிமைக்குரல் எமக்கு தெம்பையும் திடத்தையும் கொடுத்து நிற்கிறது - சு.ப.தமிழ்ச்செல்வன் '' தேசவிடுதலைப் போராட்டங்களுக்கு உந்துசக்தியாக விளங்கும் தேசப்பற்றானது காலத்திற்கும் இடத்திற்கும் அப்பால் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் ஆட்கொண்டு நிற்கும் ஒரு அபூர்வமான சக்தி '' என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் எண்ணத்திற்கு செயல்வடிம் கொடுப்பது போல தாயயக தேசத்தின் மீதான பற்றுதலை மனதிலே தாங்கிக் கொண்டு அதனது விடிவிற்காய் அயராது உழைக்கின்ற எம் உறவுகளுக்கு வணக்கங்கள். '' வெல்க தமிழ் '' எனும் எழுச்சிப் பேரணியில் பங்குகொண்டு தாயக பாசத்துடன் தேசத்தின் விடுதலைக்காக, உலக அரங்கில் நீங்கள் எழுப்பிவரும் உ…
-
- 2 replies
- 1.5k views
-
-
பிரதமர் ரொனிபிளேயரின் கடிதம் ஜனாதிபதி மஹிந்தவிடம் கையளிப்பு [Tuesday June 12 2007 06:36:46 AM GMT] [virakesari.lk] ஒருநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வந்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி கிம்ஹொவெல்ஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பிரதமர் ரொனி பிளேயரின் கடிதம் ஒன்றை நேற்று கையளித்துள்ளார். இதுதொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நாட்டின் தற்போதைய சூழ்நிலை குறித்து பிரிட்டிஷ் அமைச்சரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் விரிவாக கலந்துரையாடினர். இதன்போது பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேயர் அனுப்பியிருந்த விசேட கடிதம் ஒன்றையும் பிரிட்டிஷ் அமைச்சர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். இதேவேளை, நாட்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
Posted on : Tue Jun 12 8:19:05 EEST 2007 ஈழப் போர்ச்சூழலை எதிர்கொள்ள இந்தியக் கடற்படையினர் தயார்! ஈழத்தில் மோதல் நிலைமைகள் தொடர் வதால் இந்தியாவின் கிழக்குப் பிராந்தியத் தின் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக் கப்பட்டிருப்பதுடன் கடற்படையினரும் தயார் நிலையிலேயே இருப்பதாகவும் அந் நாட்டுக் கடற்படைத் தளபதி தகவல் தெரி வித்திருக்கின்றார். அரக்கோணம் ராஜா கடற்படைத்தளத்தில் வருடாந்தம் இடம்பெற்றுவரும் ஹெலிக்கொப்டர் பயிற்சி நிகழ்வில் நேற்றுமுன்தினம் கலந்துகொண்ட வேளை யிலேயே கிழக்குப் பிராந்தியத் தலை மைக் கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் ராமன் பிறேம் சுதன் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினைக்கான காரணமாக அந்நாட்டு அரசுக் கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோ…
-
- 8 replies
- 3.4k views
-
-
Posted on : Tue Jun 12 8:16:30 EEST 2007 கொழும்பு விடுதிகளில் தங்கும் தமிழர்கள் எதிர்காலத்தில் வெளியேற்றப்படமாட்டார்கள் அமைச்சர் டக்ளஸுக்கு ஜனாதிபதி உறுதி மொழி கொழும்பில் வாழும் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்காலத்தில் வெளி யேற்றப்படாமல் இருப்பதற்கு கவனம் செலுத்துவதாக அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தாவுக்கு ஜனாதிபதி உறுதி அளித் துள்ளார் என ஈ.பி.டி.பி. விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது கொழும்பு விடுதிகளில் தங்கியி ருந்த வடக்கு, கிழக்கு மக்களை விடுதி களில் இருந்து வெளியேற்றி வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு அனுப்பி யிருந்த பாரதூரமான நடவடிக்கை குறித்து செயலாளர் நாயகம் ஜனாதி பதியிடம் நேரில் எடுத்து விளக…
-
- 6 replies
- 2.1k views
-